Sign in to follow this  
nunavilan

யாழ்மாவட்டத்தில் மக்களை பழிவாங்கிய சமுர்த்தி உத்தியோகத்தர்கள்...?

Recommended Posts

 

 

யாழ்மாவட்டத்தில் மக்களை பழிவாங்கிய சமுர்த்தி உத்தியோகத்தர்கள்...?  

உனக்கு சமுர்த்தி கொடுப்பனவு தரமுடியாது செய்கிறதை செய்...!அசிங்கமான முறையில் நடந்து கொள்ளும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் .

தொடர்ந்து உரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட நிலையில், யாழ்மாவட்டத்தில் அன்றாடம் கூலி வேலை செய்யும் சமுர்த்தி பயனாளிகள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

அனைத்து சமுர்த்தி பயனாளிகளும் நன்மை தரக்கூடிய வகையில் உதவித்திட்டங்கள் கிடைக்கின்றனவா? என்பதையும்,சமுர்த்தி அதிகாரிகள் என்ன செய்கின்றனர் என்பதையும் சமுர்த்தி பயனாளிகள் என்ன கூறுகிறார்கள் ...?

Share this post


Link to post
Share on other sites

கடவுள் வரம் கொடுத்தாலும் பூசாரி கொடுக்க மாட்டான் என்பதுபோல இப்படி நெருக்கடியான நிலமையில் வறுமைப்பட்ட மக்களின் வயித்தில் அடிக்கும்  இந்த கேவலம் கெட்ட ஈனப்பிறவி உத்தியோகத்தர்களை தட்டிக்கேட்கக் கூட கூத்தமைப்பு மாணவர் ஒன்றியங்களுக்கு துப்பில்லையா ?.. 

  • Like 2

Share this post


Link to post
Share on other sites
14 minutes ago, சண்டமாருதன் said:

நெருக்கடியான நிலமையில் வறுமைப்பட்ட மக்களின் வயித்தில் அடிக்கும் 

நமது அதிகாரிகள்,  வறுமைப்பட்டவர்களின்   வயித்தில் அடிக்கவும், தமக்கு பிடிக்காதவை, தங்கட வாலுகளுக்கு பிடிக்காதவையை  பழிவாங்கவும் இதுதான் சரியான நேரம். இப்பிடியான நேரத்தை பாத்துக்கொண்டு இருந்தவை. இன்றைய தேவை அறிந்து சேவை செய்யும் இளைஞர் எங்கே . இதுகள் கூலியில் சுரண்டும் கொள்ளைக் கூட்டம்.

  • Like 2

Share this post


Link to post
Share on other sites

 

பொறுப்புள்ள பதவியில் உள்ள சிலர் தங்கள் வீரத்தை இந்த வறுமைப்பட்ட மக்களிடம்தான் காட்டுகின்றார்கள்

 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

படிச்சுட்டு வேலை இல்லாமல் காஞ்சுபோய் இருக்குதுபள் எண்டு பாவம் பாத்து குடுத்த வேலைதான் சமூர்த்தி உத்தியோகத்தர் பதவி.. நியாயமா கிடைக்கவேண்டிய பலர் இருக்க டகளசுக்கு தமிழ் எம்பிமாருக்கும் காசக்குடுத்து கொல்லேக்கால வேலைக்கு வந்ததுகள்தான் முக்கால்வசி உதில. கொய்யால படிச்சுட்டு சொந்தமா தொழில் செய்ய வல்லமை இல்ல 40,50 வயசாகி முத்தின கத்தரிக்கா ஆனாலும் அரசாங்க உத்தியோகம்தான் வேணும் எண்டு அப்பன் ஆத்தாண்ட காசுல துன்னுகொண்டு இருக்கிறது பிறகு டக்ளஸ் ஒபிஸ் வாசல்லபோய் உண்ணாவிரதம் இருக்கிறது அப்புறம் அப்பன் ஆத்தா காசும் கட்டி வேலை எடுத்தும் குடுக்கோணும். வந்திட்டு திமிரபாரு அப்பாவி ஏழைச்சனங்கள் மேல. அற்பனுக்கு பவுசு வந்தா அர்த்ததாத்திரியில் குடைபுடிப்பானம். கலெக்டர் உத்தியோகம் பாக்குற நினைப்பு உவைக்கு

Edited by பாலபத்ர ஓணாண்டி
  • Like 3

Share this post


Link to post
Share on other sites

ஐயாயிரம் ரூபாயில் மோசடி; சமுர்த்தி உத்தியோகத்தர் பணிநீக்கம்!

மட்டக்களப்பில் சமுர்த்தி பெறுபவர்களின் 5000 ரூபா கொடுப்பனவில் மோசடி செய்த சமுர்த்தி அபிவிருத்தி அலுவலரொருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சமுர்த்தி கொடுப்பனவில் மோசடி செய்ததாக சமுர்த்தி அபிவிருத்தி அலுவலரொருவர் கடந்த 24.04.2020 முதல் மாவட்ட அரசாங்க அதிபரின் பரிந்துரைக்கமைய சமுர்த்தி பணிப்பாளர் நாயகத்தினால் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் கடமையாற்றிய மேற்படி சமுர்த்தி அபிவிருத்தி அலுவலர் கொரோனா வைரஸ் சூழலில் 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கலில் 13 பேருக்கு தலா 4000 ரூபா மட்டுமே வழங்கியிருப்பதா கவும் 5 பேருக்கு 5000ரூபாய் கொடுப்பனவு வழங்கவில்லை என்றும் காத்திருப்புபட்டியலிலுள்ள 50 குடும்பங்களுக்கு சமுர்த்தி உணவு முத்திரை பெற்றுத் தருவதாக தலா ஆயிரம்ரூபாய் கப்பம் பெற்றுள்ளதாகவும், ஏற்கனவேயும் காணிமோசடி தொடர்பிலும் குற்றச்சாட்டுக்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் கிரான் பிரதேச செயலாளரால் விசாரணை குழு அமைக்கப்பட்டு அவ்விசாரணையில் குற்றம் இழைக்கப் பட்டதாகக் கருதி சமுர்த்தி மேலதிக பணிப்பாளர் நாயகமான மாவட்ட அரசாங்க அதிபருக்கு அறிக்கை சமர்பித்ததையடுத்து அரசாங்க அதிபரின் பரிந்துரைக்கமைய சமுர்த்தி பணிப்பாளர் நாயகத்தினால் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். (150)

 

Share this post


Link to post
Share on other sites

பனையால விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாகத்தான் இருக்குது।  இது இவர்களுடைய சொந்தப்பணமில்லாய்। மக்களின் பணம்। இருந்தாலும் தங்கள் அதிகாரத்தை காட்டுகிறார்கள்। ஏழைக்கு இரங்குகிறவன் கடவுளுக்கு கடன் கொடுக்கிறான்। 

Share this post


Link to post
Share on other sites

இந்தக் கொரோனா வந்து சில மக்களின் கௌரவ வாழ்வை பாதித்ததுடன், பல இழப்புகள், நட்டங்கள், காயங்கள் ஏற்படுத்தி இருந்தாலும், வளர்ந்துவிட்ட தொழில் நுட்பமும், சில ஊடகங்களும் சமூக விரோத அதிகாரிகளை அடையாள படுத்தியும் விட்டது. இன்னும் சிலர் நல்ல பிள்ளை வேடம் போட்டு கொள்ளை அடிப்பவர்கள் முகமூடியும் கிழிய வேணும். நிஞாயத்தை கேட்டால் குழப்பவாதி என்கிறார்கள். தவறை சுட்டிக்காட்டினால் சண்டைக்காரர்  என்கிறார்கள். இப்போ ஏழைகள் எவ்வளவு அவமானப் படுத்தினாலும் வாயே திறப்பதில்லை. திறந்தால் இதுதான் நடக்கிறது. பழி வாங்கல், அலைச்சல். ஆனால் உள்ளுக்குள் நொருங்கிப் போகிறார்கள். அவர்களும் மனிதர்கள், அவர்களுக்கும் தன்மானம் உண்டு என்பதை யாரும் எண்ணிப்பார்ப்பதில்லை. இப்படி கொள்ளை அடிப்பதிலும் பார்க்க, ஏழையாய் இருப்பது உயர்வே. என்னையும், உன்னையும் படைத்த இறைவன். உனக்கு வசதியை தந்து, எனக்கு வறுமையை தந்தார் என்றால், அவர் உனக்கு தந்த பெருமையை முன்னிட்டு என்னை இகழாதே.  இதெல்லாம் உன்னால் நிகழ்ந்தவை அல்ல. என் இடத்தில் உன்னை வைத்துப் பார். அவர் உனக்குத் தந்ததை, மற்றவர்களோடு பகிர முடியாவிட்டால் ஒருநாள் அதை இழந்து நீ  தவிக்கலாம்.

Share this post


Link to post
Share on other sites
On 7/4/2020 at 07:31, சண்டமாருதன் said:

கூத்தமைப்பு மாணவர் ஒன்றியங்களுக்கு துப்பில்லையா ?.

கூத்தமைப்புக்கு எங்க மாணவர் ஒன்றியங்கள் இருக்கு?

கூத்தமைப்புடன் இப்ப சில சுயநலம் நிறைஞ்ச இளைஞர்கள் மட்டுமே ஒட்டிக்கொண்டுள்ளனர்?

Share this post


Link to post
Share on other sites
On 6/4/2020 at 21:14, nunavilan said:

உனக்கு சமுர்த்தி கொடுப்பனவு தரமுடியாது செய்கிறதை செய்...!அசிங்கமான முறையில் நடந்து கொள்ளும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் .

அரச வேலை என்பது சேவை மனப்பான்மை உள்ளவர்களை உள்வாங்வில்லையே !

அடுத்து, அரசியல் தலைமைகள் ஊழல், மற்றும் இனவாதம் / மதவாதம் என்று பார்த்து உதவிகளை வழங்கும் பொழுது, சாதாரண ஊழியர்களிடமும் அதுவே இருக்கும் வாய்ப்புக்கள் இருக்கும். 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this