எனக்கென்னவோ ......இவங்களால் எங்களை என்ன செய்ய முடியும் .......பொறுங்கடா இரண்டு மாதத்தில் மீண்டும் முதலாவது பெஞ்சுக்கு வந்து உங்களை கவனிக்கிறோம் என்பதுபோல் தெரிகின்றது.......! 🤔
மூன்று நாட்களாக... யட்டியுடன் இருந்து, சாப்பாடு இல்லாமல்...
பிரேத வண்டியில் ஏறி, ஊருக்குப் போய் இருக்கிறார்கள். 😂
மற்றவர்களின்... சோகக் கதையையும் கேட்க ஆசையாக இருக்கின்றது. 🤣
போராட்டத்துக்குப் போன ஆட்கள், பிரேதமாக வருகிறார்கள் என குடும்பத்தினர்... அச்சமடைந்து இருக்கலாம். 🤣
யாழில்... முஸ்லிம் மக்களினால், முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு!
யாழ்ப்பாண முஸ்லிம் மக்களினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் இடம்பெற்றது.
ஐக்கியத்திற்கான யாழ் முஸ்லிம் சமூகத்தினரின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு நேற்று (செவ்வாய்க்கிழமை) யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் இடம்பெற்றது
முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வில் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் கலந்து கொண்டு வீதியால் பயணித்தோருக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சியினை வழங்கி வைத்தார்கள்.
https://athavannews.com/2022/1282580
யாழ். பல்கலைக்கழகத்தில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!
யாழ்.பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உணர்வுப்பூர்வமாக இன்று (புதன்கிழமை) இடம்பெற்றுள்ளது.
இதன்போது மாணவர்களால் யாழ். பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு ஈகைச்சுடரேற்றி ஒருநிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டது.
இதன்போது பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் இனபேதமின்றி கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
https://athavannews.com/2022/1282640
Recommended Posts