Sign in to follow this  
போல்

பொறுப்பற்ற அதிகாரிகளால் யாழில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்! பரிதவிக்கும் பெற்றோர்

Recommended Posts

யாழ்ப்பாணம் - அராலி பிரதேசத்தில் திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்ட இளைஞனை உரிய நேரத்தில் வைத்தியசாலையில் சேர்ப்பதற்கு பொதுச் சுகாதார பரிசோதகர் ஒத்துழைக்காமையினால் குறித்த இளைஞன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று முன்தினம் கொட்டைக்காடு பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன், அராலி மத்தி வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 30 வயதான நாகேந்திரன் புஸ்பராசா என்பவரே உயிரிழந்தவராவார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த இளைஞன் 1 1/2 வருடங்களுக்கு முன்பு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த நிலையில், தேக ஆரோக்கியத்துடன் இருந்துள்ளார். எனினும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கிளினிக் சென்று வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவசர அம்பியுலன்ஸ் வண்டிக்கு அழைப்பை எடுத்த போது பொதுச் சுகாதார பரிசோதகர் வந்து உறுதிப்படுத்தினால் தான் வண்டியில் ஏற்ற முடியும் என தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொதுச் சுதாதார பரிசோதகர் மற்றும் சுகாதார சேவைகள் ஊழியர்கள் இவருக்கு சாதாரண நோய்தான் வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்று மருந்து வழங்குமாறு தெரிவித்துச் சென்றுள்ளனர்.

அதைத் தொடர்ந்து இளைஞர்கள் இருவர் அவரை அராலி கொட்டைக்காடு பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போது அவருடை நிலை மோசமடைந்துள்ளது. இதையடுத்து பிரதேச வைத்தியசாலையில் நின்ற அம்பியுலன்ஸ் வண்டியின் உதவியை கேட்டபோதும் நீண்ட நேரத்தின் பின்பே அவ்விளைஞன் அம்பியுலன்ஸில் ஏற்றப்பட்டுள்ளார்.

எனினும் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது.

காலை 8 மணிக்கு ஆரம்பித்த இந்த போராட்டம் மதியம் 2.45 மணிக்கு இளைஞனின் மரணத்தில் முடிந்துள்ளது.

உயிரிழந்த இளைஞனுக்கு கொரோனா உள்ளதா என்ற பரிசோதனை முடிவு வரும் வரையில் குறித்த இளைஞனுடன் வந்த இருவரும் யாழ். போதனா வைத்திசாலையில் தனிமைப்படுத்தலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் யாழ் வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவிக்கையில்,

குறித்த இளைஞனுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் உயிரிழப்புக்கான காரணம் பிரேத பரிசோதனையில் தான் அறிய முடியும்.

பிரதேச ரீதியிலான நடவடிக்கைகள் அனைத்தும் பிரதேச சுகாதார சேவைகள் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் தான் ஒழுங்கமைக்கப்படுகின்றது என்றார்.

வடக்கு மாகாண பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பானர் வைத்திய கலாநிதி ஆர். கேதீஸ்வரன் தெரிவிக்கையில்,

குறித்த சம்பவம் தொடர்பாக நேற்று முன்தினம் மதியம் 1 மணியளவில் தகவல் கிடைத்தது. நான் நடவடிக்கை எடுப்பதற்குள் நோயாளி இறந்து விட்டார்.

தற்போதைய இடர் நேரத்தில் நோயாளர்களை வைத்தியசாலையில் சேர்ப்பதற்கு இந்த நடைமுறை செயற்படுத்தப்படுகின்றது.

ஏற்கனவே சாதாரண நோய் என தம்மை அடையாளப்படுத்தி வைத்தியசாலையில் சேர்த்த சம்பவங்கள் பதிவாகியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

இவ்வாறான அம்பியூலன்ஸ் பிரச்சினையின் போது அவசர அழைப்பான 0212226666, 0212217982 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

குறித்த இளைஞன் நோய் வாய்ப்பட்டு அவதிப்பட்டுக் கொண்டிருந்த போது, உரிய நேரத்தில் நோயாளர் காவு வண்டி வந்திருக்குமாயின் அவனின் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும் என்று கலங்கி நிற்கிறார்கள் பெற்றோர்கள்.

உயிரிழந்த இளைஞன் தாயின் அரவணைப்பில் வளர்ந்தவர் என்றும் கூறுப்படுகிறது. அதிகாரிகள் பொறுப்பற்ற செயல்பாடுகளினாலும் அசட்டையீனங்களினாலும் இந்த மரணங்கள் சம்பவிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடியான நேரங்களின் போது பொது மக்களின் தொலைபேசி அழைப்புக்களுக்கு உரிய முறையில் பதில் வழங்கி அவர்களுக்கான சேவையினை அதிகாரிகளும் ஊழியர்களும் வழங்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, தாமதமாக சென்ற நோயாளர் காவு வண்டியில் எந்தவிதமான அடிப்படை வசதிகள் கூட இல்லை என உயிரிழந்த இளைஞனை அழைத்துச் சென்ற மற்றொரு இளைஞன் கருத்து வெளியிட்டுள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/140748?ref=home-imp-flag

Share this post


Link to post
Share on other sites

யாழில் மாதாந்த சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்கள்

யாழ். மாவட்டத்தில் கடந்த 13 நாட்களாக தொடர்ச்சியாக நீடித்துவரும் ஊரடங்கு சட்டம் காரணமாக வைத்தியசாலையில் மாதாந்த சிகிச்சை பெறும் நோயாளிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

குறிப்பாக யாழ் மாவட்டத்தின் தீவகப் பகுதி, தென்மராட்சி, வடமராட்சி மற்றும் ஏனைய மாவட்டங்களில் இருந்து சிகிச்சை பெறும் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாத நிலை காணப்படுகின்றது.

இதய சிகிச்சை, நீரிழிவு, உயர் குருதி அழுத்தம், மனநோய், கண் நோய், போன்ற நோய்களுக்கு உரிய சிகிச்சைகளை பெறுவதிலேயே நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இது தொடர்பில் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ரீ. சத்தியமூர்த்தி கருத்து தெரிவிக்கையில்,

கொரோனா தொற்றுக்குப் பின்னர் மாதாந்த சிகிச்சைகள் நிறுத்தப்பட்டதால் அவர்களுக்கான மருந்துகள் தொலைபேசி மூலமாக வழங்குவதற்கு உரிய ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

இருப்பினும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

சில பேருக்கு மருந்துகள் கிடைப்பதில்லை எனவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்தந்த மருத்துவர்கள் அவர்களுக்கு மருந்து வழங்குமாறும் நாங்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றோம் என்றார்.

https://www.ibctamil.com/srilanka/80/140757

Share this post


Link to post
Share on other sites

1 மாதம் போயும் அம்பியூலன்ஸ் ஊழியர்களுக்கு தேவையான பாதுகாப்பு அங்கிகளை பொறுப்பிலுள்ள மருத்துவ அதிகாரிகள் செய்து குடுக்க தவறியுள்ளனர்.

தலைவலி என்டால் தலையை வெட்டு என்டு முடிவெடுக்கிற முட்டாள்கள் தான் நோயாளர்களுக்கு உதவாத நடைமுறைகளை முடிவு செய்றாங்கள் என்டு தெரியுது.

இந்த அநியாய உயிர்ப்பலியாவது இந்த முட்டாள்களின் கண்களை திறக்குமா?

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

கொரோனாவாலும், பட்டினியாலும், அலட்சியத்தாலும் போகிறவர்கள் போக. மிஞ்சி இருக்கிறதை இருக்கிறவர்கள் காணவேண்டியதுதான். அறிவியலும் கைவிட்டது, கண்டுபிடிப்புகளும் முடியவில்லை.  யாரை நோவது?   

Share this post


Link to post
Share on other sites

யாழ்ப்பாணம் - அராலியில், திடீரென உடல் நலம் பாதித்த இளைஞனை உரிய நேரத்தில் வைத்தியசாலையில் சேர்ப்பதற்கு பொதுச் சுகாதார பரிசோதகர் ஒத்துழைக்காமையினால் குறித்த இளைஞன் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அராலி மத்தி வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 30 வயதான நாகேந்திரன் புஸ்பராசா என்பவரே உயிரிழந்தவராவார்.

குறித்த இளைஞன் 1 1/2 வருடங்களுக்கு முன்பு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த நிலையில், குறித்த இளைஞன் தேக ஆரோக்கியத்துடன் இருந்துள்ளார். எனினும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கிளினிக் சென்று வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவசர அம்பியூலன்ஸ் வண்டிக்கு அழைப்பை எடுத்த போது பொதுச் சுகாதார பரிசோதகர் வந்து உறுதிப்படுத்தினால் தான் வண்டியில் ஏற்ற முடியும் என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொதுச் சுதாதார பரிசோதகர் மற்றும் சுகாதார சேவைகள் ஊழியர்கள் இவருக்கு சாதாரண நோய்தான் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று மருந்து வழங்குமாறு தெரிவித்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து இளைஞர்கள் இருவர் அவரை அராலி கொட்டைக்காடு பிரதேச வைத்தியசாலைக்கு சென்ற போது அவரது நிலை மோசமடைந்துள்ளது. இதையடுத்து பிரதேச வைத்தியசாலையில் நின்ற அம்பியூலன்ஸ் வண்டியின் உதவியை கேட்டபோதும் நீண்ட நேரத்தின் பின்பே அவ்விளைஞன் அம்பியூலன்ஸில் ஏற்றப்பட்டுள்ளார். எனினும் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது.

காலை 8 மணிக்கு ஆரம்பித்த இந்த போராட்டம் மதியம் 2.45 மணிக்கு இளைஞனின் மரணத்தில் முடிந்துள்ளது.

உயிரிழந்த இளைஞனுக்கு கொரோனா உள்ளதா என்ற பரிசோதனை முடிவு வரும் வரையில் குறித்த இளைஞனுடன் வந்த இருவரும் யாழ். போதனா வைத்திசாலையில் தனிமைப்படுத்தலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் யாழ் வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவிக்கையில்,

குறித்த இளைஞனுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் உயிரிழப்புக்கான காரணம் பிரேத பரிசோதனையில் தான் அறிய முடியும். பிரதேச ரீதியிலான நடவடிக்கைகள் அனைத்தும் பிரதேச சுகாதார சேவைகள் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் தான் ஒழுங்கமைக்கப்படுகின்றது என்றார்.

வடக்கு மாகாண பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பானர் வைத்திய கலாநிதி ஆர். கேதீஸ்வரன் தெரிவிக்கையில்,

குறித்த சம்பவம் தொடர்பாக நேற்று முன்தினம் மதியம் 1 மணியளவில் தகவல் கிடைத்தது. நான் நடவடிக்கை எடுப்பதற்குள் நோயாளி இறந்து விட்டார். தற்போதைய இடர் நேரத்தில் நோயாளர்களை வைத்தியசாலையில் சேர்ப்பதற்கு இந்த நடைமுறை செயற்படுத்தப்படுகின்றது.

ஏற்கனவே சாதாரண நோய் என தம்மை அடையாளப்படுத்தி வைத்தியசாலையில் சேர்த்த சம்பவங்கள் பதிவாகியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

இவ்வாறான அம்பியூலன்ஸ் பிரச்சினையின் போது அவசர அழைப்பான 0212226666, 0212217982 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

https://seithy.com/breifNews.php?newsID=243810&category=TamilNews&language=tamil

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • Tholar Balan 12 ம ·    •கரூர் நீதிமன்றத்தில் புலிப் போராளி சிவா வழங்கிய வாக்குமூலம்! தமிழ்நாட்டில் சிறையைவிடக் கொடிய சித்திரவதை முகாமாகிய சிறப்புமுகாம் இருப்பது பலர் மறந்துவிட்டனர். அதுவும் இச் சிறப்புமுகாம் கலைஞர் கருணாநிதியால் ஆரம்பிக்கப்பட்டது என்பதுகூட இப்போதைய திமுக உடன் பிறப்புகளுக்கு தெரிவதில்லை. துறையூர் சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த புலிப் போராளி சிவா அவர்கள் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து கரூர் நீதிமன்றத்தில் 17.10.1994 யன்று நீதிபதி முன்னிலையில் வாக்குமூலம் அளித்திருக்கிறார். ஆனால் அந்த நீதிபதி போராளி சிவாவுக்கு நீதி வழங்கவில்லை. மாறாக அவரை வேலுர் சிறப்புமுகாமில் கொண்டுபோய் அடைத்தார்கள். அதன்பின் அவருக்கு என்ன நடந்தது என்பது குறித்து இதுவரை நான் அறியாமல் இருந்தேன். கடந்த வாரம் முகநூலில் தொடர்பு கொண்ட நண்பர் ஒருவர், போராளி சிவா வேலூர் சிறப்புமுகாமில் இருந்து தப்பி வந்து வன்னியில் இயங்கிக்கொண்டிருந்தபோது இலங்கை ராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணியால் கொல்லப்பட்டுவிட்டதாக கூறினார். லெப்.கேணல் மகேந்தியுடன் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது சிவா உட்பட வாகனத்த்pல் பயணித்த நால்வரும் இறந்துவிட்டதாக அந்த நண்பர் கூறியதுடன் அவர்களின் புகைப்படத்தையும் தந்து உதவினார். போராளி சிவா தங்களின் கொடுமைகளை நீதிமனத்தில் கூறிவிட்டார் என்பதற்காக சிவாவைவிட என்மீது அதிக கோபம் கொண்டனர் தமிழக கியூ பிரிவு உளவுப் பொலிசார். ஏனெனில் சிவா வாக்குமூலம் கொடுப்பதற்கு நான் உதவியதுடன் இவ் வாக்குமூலத்தை எமது தோழர் தமிழ் முகிலன் அவர்களுக்கும் இரகசியமாக வழங்கிவிட்டேன். தோழர் தமிழ்முகிலன் உடனே அவ் வாக்குமூலத்தை “குற்றப் பரம்பரையாக கருதப்படும் ஈழத் தமிழர்கள்” என்னும் தலைப்புடன் சிறு பிரசுரமாக அச்சிட்டு வெளியிட்டுவிட்டார். அந்த நேரத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு வழங்குவோரை இரும்புக்கரம் கொண்டு அடக்கினார் ஜெயா அம்மையார். ஆனாலும் அதையும் மீறி ஈழத் தமிழருக்கான ஆதரவை வழங்கியவர்களில் தமிழ் முகிலனும் ஒருவர். ஈழத் தமிழர்களின் போராட்ட வரலாற்றில் நீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்கிய போராளி சிவாவின் பெயர் உச்சரிக்கப்படும்போதெல்லாம் அதனை வெளியிட்டு ஆதரவு தந்த தோழர் தமிழ் முகிலன் பெயரும் உச்சரிக்கப்படும். குறிப்பு- கீழ்வரும் இணைப்பில் போராளி சிவாவின் வாக்குமூலத்தை படிக்கலாம். http://tholarbalan.blogspot.com/2020/06/blog-post_83.html              
    • நல்லா சொன்னீர்கள், மாறிவரும் கலாச்சாரம்
    • Tholar Balan 2 மணி நேரம் ·    அவர் தன்னை உலகத் தமிழினத் தலைவர் என்றார் ஆனால் ஈழத்தில் தமிழினம் அழிக்கப்பட்டபோது அது இன்னொரு நாட்டு விடயம் என்றார். அவர் தன்னை கடலில் வீசி எறிந்தால் கட்டுமரமாகி வந்து தமிழனுக்கு உதவுவேன் என்றார். ஆனால் ஈழத்தில் தமிழன் தத்தளித்தபோது கட்டு மரமாகி வந்து உதவுவார் என நம்பினோம். கடைசிவரை அவர் வரவேவில்லை. 3 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து போர் நிறுத்தப்பட்டுவிட்டது என்றார். ஆனால் அதன் பின்பும் தமிழர் கொல்லப்படுகிறார்களே என்று கேட்டபோது “மழை விட்டும் தூவானம் விடவில்லை” என்றார். பொதுவாக பதவி கொடுக்காதவர்களுக்கு தன் இதயத்தில் இடம் கொடுப்பதாக கூறுவார். ஆனால் தத்தெடுத்த அகதிச் சிறுவன் மணிக்கு அந்த இதயத்திலும் இடங்கொடுக்காமல் கொன்று விட்டார். பக்கத்தில் மனைவி, துணைவி என்று இரண்டு பேரை வைத்துக் கொண்டு கொஞ்சம்கூட கூச்சமில்லாமல் ஒருவனுக்கு ஒருத்தி என்பதே தமிழன் பண்பாடு என்று பேசுவார். ஈழத்தில் பல்லாயிரம் தமிழர் மாண்டிருக்க உங்கள் பிள்ளைகளின் பதவி எற்பு விழா தேவையா என்று கேட்டால் சங்க இலக்கியத்தில் ஒரு வீட்டில் செத்தவீடு நடக்கும்போது பக்கத்து வீட்டில் கலியாணம் நடந்தது என்பார். வரலாறு அவரை பகுத்தறிவு பகலவன் என்று கூட எழுதிச் செல்லலாம். ஆனால் ஈழத்தமிழர் அவரது துரோகத்தை ஒருபோதும் மறக்கவும் மாட்டார்கள். மன்னிக்கவும் மாட்டார்கள். என்ன அவர் இறந்த பின்பும் திட்டுகிறீர்களே என யாராவது கேட்கக்கூடும். என்னசெய்வது மழை விட்டும் தூவானம் விடவில்லையே. குறிப்பு - கலைஞர் பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம் என ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். அதனால் நாமும் அதிகமாக எழுதமால் சுருக்கமாக திட்டியுள்ளோம்.