Jump to content

முல்லைத்தீவு விகாரையில் மற்றுமொருவர் மர்ம மரணம்! சந்தேகம் வெளியிட்ட உறவினர்கள்


Recommended Posts

முல்லைத்தீவு மாவட்டத்தின் பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட நாயாறு குருகந்த ரஜமகா விகாரை தொடர்பில் பல்வேறு சிக்கல்கள் நிலவி வந்த நிலையில் குறித்த விகாரையின் விகாராதிபதி இறந்தார். அவருடைய உடல் தகனம் செய்ய முற்பட்ட வேளையிலும் பல்வேறு முரண்பாட்டு சம்பவங்கள் இடம் பெற்றது அனைவரும் அறிந்ததே.

அந்த வகையிலே உயிரிழந்த பௌத்த மத துறவியோடு சேர்ந்து பௌத்த ஆலயத்தில் கடமையாற்றிய ஒருவர் நேற்றைய தினம் ஆலய வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

உயிரிழந்த நபர் நேற்று முன்தினம் இரவு நித்திரைக்குச் சென்ற நிலையில் நேற்று காலை அவர் எழுந்து வராதததையடுத்து அங்கு இருந்தவர்கள் சென்று பார்த்த போது அவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதன் அடிப்படையில் குறித்த இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிசார் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி உள்ளிட்டவர்கள் சென்று நபரின் உடலை பார்வையிட்டதோடு உயிரிழந்தவருடைய உறவினர்கள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்ததன் அடிப்படையில் உடலம் மருத்துவ பரிசோதனைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டுள்ளது.

மருத்துவ பரிசோதனைகள் நாளைய தினம் இடம்பெற உள்ளன சம்பவத்தில் உயிரிழந்தவர் 2016 ஆம் ஆண்டு முதல், இறந்த விகாராதிபதியுடன் விகாரையில் கடமையாற்றி வந்த ஜனகபுர பகுதியை சேர்ந்த கமகே நிமால் கருணாரத்ன என்கின்ற 47 வயதுடைய நபர் ஆவார்.

இவருடைய தங்கையார் அவருடைய மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து இருக்கின்றார். மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/140751?ref=home-imp-parsely

 
Link to comment
Share on other sites

இந்த ஆக்கிரமிப்பு முடிவுக்கு வருமா?

Link to comment
Share on other sites

கொரோனா வைரஸ் தாக்கம் இல்லை என்கிறார்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Rajesh said:

இந்த ஆக்கிரமிப்பு முடிவுக்கு வருமா?

இப்போதைக்கு இல்லை. நீதி மன்றில் தண்டனை கொடுத்தவரையே பொது மன்னிப்பில் விடும்போது இதெல்லாம் அவன்களுக்கு யுயூப்பி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண தெய்யோ விளையாட்டு காட்டிப் போட்டார் 🐘

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.