• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
கிருபன்

முஸ்லிம் வியாபாரிகள் புறக்கணிக்கப்படுகிறார்கள்! -கண்ணீர் கடிதம்!

Recommended Posts

முஸ்லிம் வியாபாரிகள் புறக்கணிக்கப்படுகிறார்கள்! -கண்ணீர் கடிதம்!

36.jpg

 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குக் காரணம் இஸ்லாமியர்களே என்ற வதந்தி சில ஊடகங்களாலும், சமூக தளங்களில் கணிசமானோராலும் முன்னெடுக்கப்பட்டதால், சமுதாயத்தின் கீழ் நிலையில் இருக்கும் முஸ்லிம் வியாபாரிகளின் நிலை சொல்லொணா துயரத்துக்கு உள்ளாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாகவே கொரோனா தொற்றுக்கும் தப்லீக் மாநாட்டுக்கும் தொடர்புபடுத்தி செய்திகள் பரப்பப்படுகின்றன. ஒட்டுமொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 33% மட்டுமே பேர் தப்லிக் மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் என்று மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளார் லவ் அகர்வால் குறிப்பிட்ட பிறகும்.. ஒட்டுமொத்த கொரோனா தொற்றும் முஸ்லிம்களால் ஏற்பட்டது போல ஒரு தோற்றம் கட்டமைக்கப்படுகிறது. அரசுத் துறைகளுக்கும் இஸ்லாமிய தலைவர்களுக்கும் இடையே கலந்துரையாடல்கள் நடந்தும் இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டது போல தெரியவில்லை.

இந்த நிலையில்தான் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இருந்து மனித நேய மக்கள் கட்சி தலைமைக்கு ஓர் முஸ்லிம் வியாபாரி வாட்ஸ் அப்பில் அனுப்பியிருக்கும் கடிதம், அக்கட்சிப் பிரமுகர்கள் மூலமாக நமக்குக் கிடைத்தது. ‘இதை வெளியிட்டு தமிழ் சமூக இணக்கத்தைக் காப்பாற்றுங்கள்’ என்று அவர்கள் வேண்டுகோள் வைத்தனர்.

அந்தக் கடிதம் இதோ...

“அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்!

இன்று நிலவிவரும் அசாதாரண சூழலில் நம் சமுதாய மக்களை தனிமைப்படுத்தும் வேலைகள் அதிகமாகி வருகிறது. இதனால் மேல்தட்டு மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு தற்போது மிகப்பெரிய பாதிப்புகள் இல்லையென்றாலும், அடித்தட்டு முஸ்லிம் மக்களுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுகின்றன. முஸ்லிம் சிறு வியாபாரிகளிடம் காய்கறி, பால், மாவு போன்ற அத்யாவசிய பொருட்களை கூட மக்கள் வாங்குவதை தவிர்த்து வருகின்றனர். சில பகுதிகளில் முஸ்லிம்கள் சென்று வருவதே தடைசெய்யப் படுகிறது. குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்கள் பகுதியான- காலனி பகுதிகள்.

எனவே, நம் தலைமை மற்ற அரசியல் கட்சி தலைவர்களை தொடர்பு கொண்டு, சமுதாய மக்கள் படும் சிரமங்களை எடுத்துக்கூறி, அந்த அந்த பகுதிகளில் சமூக ஒற்றுமை ஏற்பட வழிவகை செய்ய அவர்களின் மாவட்ட நகர நிர்வாகிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் - என கோரிக்கை வைத்தால் இங்கு மாற்றங்கள் வர வாய்ப்புள்ளது. மேலும், இதை வலியுறுத்தி மாற்று மத தலைவர்களிடம் நேர்காணல் எடுத்து அதை சமூக வலைதளங்களில் பகிரலாம்.

 

இதற்காக ஆலோசனைகளை தலைமை வழங்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கின்றேன்” என்று விருத்தாசலத்தில் இருந்து முஸ்லிம் வியாபாரி ஒருவர் அக்கடிதத்தை அனுப்பியிருக்கிறார்.

சமூக இடைவெளியே கொரோனாவுக்கு தடுப்பு மருந்து என்று மருத்துவர்கள் சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில்... முஸ்லிம் இன ஒதுக்கல் நடைபெறுவதற்கான வெளிப்படையான ஆரம்ப அறிகுறி இது. அந்த வியாபாரி குறிப்பிட்டது போல மாற்று மதத் தலைவர்களிடம் இஸ்லாமிய மதப் பிரமுகர்கள் பேசி இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும். இல்லையேல் கொரோனா முடிந்தும் இந்த சமூக இடைவெளி நீடிக்கும் அபாயம் உண்டு.
 

https://minnambalam.com/public/2020/04/07/36/muslim-small-sellers-rejected-by-people-letter-corona-effect

Share this post


Link to post
Share on other sites

ஐயோ பாவம்! 

Share this post


Link to post
Share on other sites

அவர்கள் தப்பு மிக அதிகம் யூரியூப் இல் tic tok இப்படி பல வலைத்தளங்களில் அவர்கள் கக்கும் மத இன குரோதங்கள் உண்மைகளை ஏற்றுக்கொள்ளாமை மிக பெரிய துவேசங்கள் இந்திய ஒருமைப்பாட்டுக்கு கோஷங்கள் அவர்கள் மேல் அவநம்பிக்கையை உருவாக்கி விட்டது

Share this post


Link to post
Share on other sites

தமிழ் நாட்டில் உள்ள முஸ்லிலிம்கள் முதலில் தாங்கள்  தமிழர் அதன்பின் முஸ்லிலிம் என்பார்கள் . இலங்கையில் இருக்கும் முஸ்லிம்கள் அதட்க்கு நேர் எதிர் .

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
7 hours ago, பெருமாள் said:

தமிழ் நாட்டில் உள்ள முஸ்லிலிம்கள் முதலில் தாங்கள்  தமிழர் அதன்பின் முஸ்லிலிம் என்பார்கள் . இலங்கையில் இருக்கும் முஸ்லிம்கள் அதட்க்கு நேர் எதிர் .

அது அவர்கள் பிழை இல்லை.
  
சிங்களவனினின்  பிரித்தாளும் சூழ்ச்சியினால், றிசாட், ஹிஸ்புல்லா, அதாவுல்லா வகையறாக்கள் ஆடிய ஆட்டம்.

இன்றய நிலையில் அனைவரும் பல்லு பிடுங்கப்பட்டு இருப்பதால், ஆகாயத்தில் இருந்து நிலத்துக்கு வருவார்கள். 

Share this post


Link to post
Share on other sites
19 hours ago, Nathamuni said:

அது அவர்கள் பிழை இல்லை.
  
சிங்களவனினின்  பிரித்தாளும் சூழ்ச்சியினால், றிசாட், ஹிஸ்புல்லா, அதாவுல்லா வகையறாக்கள் ஆடிய ஆட்டம்.

இன்றய நிலையில் அனைவரும் பல்லு பிடுங்கப்பட்டு இருப்பதால், ஆகாயத்தில் இருந்து நிலத்துக்கு வருவார்கள். 

நிலத்துக்கு வந்தால் நல்லது. ஆனால் ஈழத்தீவில்  முஸ்லிம் சகோதரர்கள் மாறுவார்களா? புலிகளின் காலத்தில் தமிழர்களின் அரசியலில் முன்னேற்றகராமான நகர்வுகள் ஏற்படும்போதெல்லாம்  ஆதரிப்பதுபோல் காட்டியவாறு; பெரும்பான்மைக் கட்சிகளோடு பேரம் பேசியவர்களல்லவா? இப்போது திருந்திவிடுவார்களா? ஏனென்றால்; மிகப்பலவீனமான தமிழ் அரசியல் தலைமைகள்  மற்றும் கட்சிகள்.  கிழக்கு மாகாணசபையில் கிடைத்த வாய்ப்பைக்கூடச் சரியான அரசியல் நுண்ணாளுமையோடு கையாளத் தெரியாத தமிழர் தலைமைகளால் எப்படி முரண்களுள் சிக்குண்டிருக்கும் தமிழ் - முஸ்லிம் உறவுநிலையைச் சீராக்கும் நிலைக்கு  நகர்த்த முடியும்?   மிகுந்த அடிப்படைவாதிகளாகத் தற்போதைய முஸ்லிம் குமுகாயம் பரிணாமம் பெற்றுள்ள சூழல் மத்திய கிழக்குநாடுகளின் ஆதரவு என்று பல்வேறு அகப் புறக் கரணியங்களையும் தமிழினம் ஆய்வுக்குட்படுத்துதல் அவசியமானது. 

தமிழகம் மதத்தால் வேறானாலும் மொழியால் இணைந்து செல்லும் சூழல் இதுவரை பாதிப்புக்குள்ளாகவில்லை. ஆனால், மத முரண்பாட்டை நோக்கித் தள்ளுவதற்கான பல்வேறு சிண்டுமுடியும் வேலைகளை பீயேபீ வகையறாக்கள் மற்றும் அவர்களது முகவர்கள் தொடர்ச்சியாகச் செய்துவருகிறார்கள். இதனை இதயசுத்தியோடு  தமிழகத் தலைமைகள் எதிர்கொள்வதே வலிமையான தமிழகத்தை நிலைக்கச் செய்யும் வழியாகும். 

ஈழத்தீவில் சோனகராயிருந்து- முஸ்லிமாகித் -தற்போது அரபுமுஸ்லிமாகத் துடிக்கும் நிலையையும் இணைத்துப் பார்க்க வேண்டும்.

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, nochchi said:

 

ஈழத்தீவில் சோனகராயிருந்து- முஸ்லிமாகித் -தற்போது அரபுமுஸ்லிமாகத் துடிக்கும் நிலையையும் இணைத்துப் பார்க்க வேண்டும்.

முஸ்லிம் ஆட்களைதான் சோனகர் என அழைப்து நினைந்திருந்தேன்.  சோனகர் முஸ்லிம் மாதமாக மறியதை இன்றுதான் தெரியும்

http://www.jaffnamuslim.com/2010/12/blog-post_5385.html

 

 

 

Share this post


Link to post
Share on other sites
2 minutes ago, உடையார் said:

முஸ்லிம் ஆட்களைதான் சோனகர் என அழைப்து நினைந்திருந்தேன். 

http://www.jaffnamuslim.com/2010/12/blog-post_5385.html

 

 

 

நீங்கள் சுட்டுவது சரியானதே.  நான் குறிப்பிட்டிருப்பது பெரும்பாலும் நானறிந்தவகையில்(வன்னியில்) சோனகர் என்ற பதமே புழக்கத்தில் இருந்தது. ஆனால் இப்போது அவர்கள் தங்களை இஸ்லாமியர்கள் என்று அழைக்கப்படுவதையே முன்னிறுத்தகிறார்கள்.

http://www.jaffnamuslim.comஇணையத்தின் இணைப்புக்கும் நன்றி.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this