Jump to content

ரோஸ் பாண்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நானும் செய்து பார்த்தேன். ஓரளவு பரவாயில்லாமல் வந்ததுspacer.png

On 7/4/2020 at 23:27, தமிழ் சிறி said:

ஆகா.... நீர்வேலியான்,  உண்மையில் நன்றாக வந்துள்ளது என்று படத்தைப் பார்க்கவே தெரிகிறது.
அப்படியே... சம்பல் செய்த,  ரெக்னிக்கையும்... எங்களுக்கு காட்டித் தாருங்கள்.  :)

தேங்காப்பூக்குள் வெங்காயத்தையும், கறிவேப்பிலையும், உப்பையும் மசித்து. நல்லெண்ணெயில் முதலி chilli pieces ஐ போட்டு , பிறகு தனி மிளகாய் தூளை போட்டு  சொட்டு பொரித்து விட்டு அதை தேங்காப்பூக்குள் போட்டு தேசிக்காய் புளியும் விட்டு குழைக்கவும். நல்ல ருசி சிறி spacer.png

Link to comment
Share on other sites

  • Replies 150
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

ஈஸ்ட் இங்கேயும் தட்டுப்பாடாம் ...எல்லோரும் வீட்டில் பாண் செய்யினம் போல இருக்கு 

நான் ஒன்லைன் இல வாங்கினான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

உங்களை படத்துக்கு கூட்டிப்போன அந்த ரஸ்ய வீட்டு ஓனர் மகளுக்கு கடுதாசி போட்டு பார்தியளே மருதர்? 😎

அது ஒரு சோகமான முடிவு முனி அண்ணர் 
எங்களுடைய பயணம் இன்ன திகதியில் இந நேரம் ஏறி 
இந்த நாட்டில் இன்ன நேரம் இறங்குவது என்ற மாதிரி இருக்கவில்லை
நாடு நாடக அலைந்து  இரண்டு வருடம் கழிந்துதான் ஜெர்மனி வந்து சேர்ந்தேன் 
உக்ரைன் ... ருமேனியா ... ஹங்கேரி ..... செக்க்கோ ஊடாக ஜெர்மனி 

ஜெர்மனியில் இருந்து இன்னொரு நாட்டுக்கு சென்றேன் 
அங்கிருந்து கூட்டி சென்றவன் ஒரு நாள் மதியம் இன்னொரு வீட்டில் 
சாப்பாடு என்று காரில் வந்து சாப்பிட என்று கூட்டி போனான் 
அங்கு இன்னும் மூன்று பேர் என்னுடன் வருவத்துக்கு இருந்தார்கள் 
மாலை அங்கிருந்து புறப்படுவது என்று அப்போதுதான் சொன்னான் 
நான் என்னுடைய பாக் நான் நின்ற வீட்டில் இருக்கிறது என்று சொல்லும்போது 
போகும்போது அவ்விடத்தல் சென்று எடுத்துக்கொண்டு போகலாம் என்றான் 
பின்பு போகும்போதும் எடுக்க வில்லை.
 பின்பு தான் நாம் போகும் நாட்டுக்கு கொண்டு வந்து தருவதாக சொன்னான் இவ்வளவு 
பொய்யையும் சொன்னவன் கதையை நான் அப்போதே நம்பவில்லை 
எவ்ளவோ முயன்றேன் ... வருவத்துக்கு கூட இருந்த மிகுதி மூன்று பேர்களும் 
என்னில் கொஞ்சம் கடுப்பாக தொடங்கி  இருந்தார்கள் 
அதுதான் அவர் கொண்டுவந்து தருவதாக சொல்கிறார்தானே இப்போ ஏன் பாக்கு பாக்கு என்று 
எதோ பவுன் இருக்கிற மாதிரி கத்துறாய் என்று கடுப்பாக்கினார்கள் 
நான் பவுன் இருந்தால் கூட விட்டு விட்டு போய்விடுவேன் எனக்கு தேவையான 
முகவரி தொலைபேசி எண் என்னுடைய 2 வருட வாழ்வின் நினைவுகள் 
போட்டோ என்று எவ்வளவோ இருக்கிறது என்று சொன்னால் 
புரிய கூடியவர்கள் மாதிரி அந்த கறுப்பன்களை பார்த்தால் எனக்கு தெரியவில்லை 
பேசாமல் இருந்துவிட்டேன்.

நான் வரும்போது 
நீ அங்கு போய் சேர்ந்ததும் எனக்கு ஒரு வால்க்மான் (Walkman) வாங்கி அனுப்பும் படி
அவர் என்னிடம் சொன்னார் ..... உனக்கு வேறு என்ன வேண்டும் நீ எனக்கு நிறைய உதவிகள் 
செய்து இருக்கிறாய் பதிலாக ஏதாவது நான் செய்ய வேண்டும் என்று கேட்டேன் 
எதுவும் வேண்டாம் அது மட்டும் போதும் அதில் பாட்டு கேட்க்கும்போது 
உன் நினைவு எனக்கு இருக்கும் அதுவே போதும் என்று சொன்னாள் 

அவளை பொறுத்தவரை நடந்தது ஏதும் அவளுக்கு தெரியாது 
இருக்கும்வரை உதவிகள் பெற்றுவிட்டு ஏமாற்றி சென்றவன் 
பட்டியலில் நான் இருப்பேன் என்ற குற்ற உணர்வு மட்டும் எனக்கு 
சாகும் வரை தொடருகிறது.

நான் சென்று அடைந்த நாட்டில் நல்ல வேலையில் சேர்ந்து 
நான் வாழ்க்கையில் எதிர்பார்த்திருக்க முடியாத அளவு சம்பளம் 
இலங்கை ரூபாய் கணக்கில் பெற்றுக்கொண்டு இருந்தேன் 
அப்போதான் 1993-1995இல் ரஸ்சியாவில் பாரிய பஞ்சம் நடந்துகொண்டு 
இருந்தது டிவி செய்திகளில் எல்லாம் மொஸ்கோவில்  மக்கள் உணவுக்கு வீதியில் நிற்பதை 
காட்டி கொண்டு இருப்பார்கள் ருசியா பணம் ரூபிள் அமெரிக்க டாலருக்கு ஆயிரத்தி நூறு 
ரூபிள் வரை வீழ்ச்சி கண்டது ஜி டி பி 50% மேலாக வீழ்ச்சி கண்டது 
புடின் ஆட்ச்சிக்கு வந்த பின்புதான் கொஞ்சம் நிலைமை மாறியது  

அப்போது ஒரு $100 எனக்கு பெரிய பணமாக இருக்கவில்லை 
ஆனால் அதை நான் அங்கு மொஸ்கோவிக்கு அனுப்பியிருப்பின் 
பாரிய ஒரு உதவியாக இருந்து இருக்கலாம் 
தொலைபேசி எண்ணோ முகவரியோ இப்போ போன்று வேறு ஏதும் 
வசதியோ அப்போது இருக்கவில்லை 
வாழ்க்கையில் தொலைந்துபோனவைகளில் .......அதுவும் ஒன்று .............

Refurbished Sony Walkman TPS-L2 - Guardians of the Galaxy Cassette ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பயணித்த இந்த காலம் மிகவும் சுவாரிஸ்யமானது 
உலக வரலாற்று நிகழ்வுகள் பலதும் என்னோடு பயணித்துக்கொண்டு 
இருந்தது என்பது எனக்கு புரிய கூடிய அரசியல் அறிவு அப்போது இருக்கவில்லை 
நான் மொஸ்கோவில் இருந்த போதுதான் கோர்ப்பேச்சோவை பிடித்து சிறையில் அடைத்தார்கள் 
சோவியட் யூனியன் பிளவு கண்டிருந்தது ...
ஒரு நாள் காலை நாம் எழுந்து ஜன்னலால் பார்க்கும்போது வீதி எல்லாம் 
ஒரே இராணுவம் நாம் நினைத்தோம் எம்மை பிடிக்கத்தான் வந்து இருக்கிறது என்று 
பின்பு இவள்தான் வந்து இதுதான் நடக்கிறது என்று சொன்னதும் ஒரே சிரிப்பு 

செக்க்கோஸ்லோவாக்கிய...... ஸ்லோவாக்கியா செக்கோ என்று இரண்டாக பிரிந்தது 
இப்படி பல அரசியல் வரலாறுகளும் என்னுடன் பயணித்துக்கொண்டு இருந்தது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீர்வேலியார் பார்க்க வாயூருது....சம்பலும் ரோஸ்பாணும்...பிளேன் டியும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உப்பு போட மறந்தாலும் அந்தமாதிரி வந்திருக்கு......:cool:

pa-1.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
paan

20 minutes ago, குமாரசாமி said:

உப்பு போட மறந்தாலும் அந்தமாதிரி வந்திருக்கு......:cool:

pa-1.jpg

நீங்கள் முட்டையும் பாலும் விட்டீர்களா?
எனக்கு இப்போதும் மென்மையாக வரவில்லை 
எனது ஈஸ்ட்டில்தான் ஏதும் பிரச்சனை இருக்குமோ தெரியவில்லை 
வேறு ஒரு ஈஸ்ட் வாங்கித்தான் முயற்சி செய்யவேண்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nilmini said:

நான் ஒன்லைன் இல வாங்கினான் 

நானும் தேடினேன், இனி ஒன்லைன் இல தான் வாங்கனும் ; சம்பல் செய்முறையும் நன்றாக இருக்கு 

மருதர் & குமாரசாமி நீங்கள் செய்த தை பார்க்க வாய் ஊறுகின்றது இந்த ஈஸ்ட்  கிடைக்கமாட்டேன்கிது

4 minutes ago, Maruthankerny said:

paan

23 minutes ago, குமாரசாமி said:

உப்பு போட மறந்தாலும் அந்தமாதிரி வந்திருக்கு......:cool:

pa-1.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, குமாரசாமி said:

உப்பு போட மறந்தாலும் அந்தமாதிரி வந்திருக்கு......:cool:

pa-1.jpg

பிறகென்ன . கடையிற் பாண் மாதிரியே இருக்கு . ஏன்ட அரைகுறை பாணும் மொனிட்டரில தெரியுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, குமாரசாமி said:

உப்பு போட மறந்தாலும் அந்தமாதிரி வந்திருக்கு......:cool:

pa-1.jpg

பார்க்க சூப்பர் ஆக இருக்கு 

35 minutes ago, Maruthankerny said:

paan

நீங்கள் முட்டையும் பாலும் விட்டீர்களா?
எனக்கு இப்போதும் மென்மையாக வரவில்லை 
எனது ஈஸ்ட்டில்தான் ஏதும் பிரச்சனை இருக்குமோ தெரியவில்லை 
வேறு ஒரு ஈஸ்ட் வாங்கித்தான் முயற்சி செய்யவேண்டும் 

வேறு ஈஸ்ட் வாங்கி முயற்சி செய்து பார்க்கவும், பாலும் முட்டையும் உண்மையிலேயே தேவையில்லை. படத்தில் உள்ளபடியே, இப்பிடி open ஆக oven இற்குள் வைத்திருக்க மாட்டீர்கள் எண்டு நினைக்கிறன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி பேக்கரி ஐட்டங்களுக்கு யாழில் ஓடர் கொடுக்கலாம் போல இருக்கே முழுப்பேரும் செய்யுறாங்கள் 

பாவம் அங்கால ராஜவன்னியர் மட்டும் இப்பதான் சுடுதண்ணி பழகுறார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

paan

நீங்கள் முட்டையும் பாலும் விட்டீர்களா?
எனக்கு இப்போதும் மென்மையாக வரவில்லை 
எனது ஈஸ்ட்டில்தான் ஏதும் பிரச்சனை இருக்குமோ தெரியவில்லை 
வேறு ஒரு ஈஸ்ட் வாங்கித்தான் முயற்சி செய்யவேண்டும் 

1 hour ago, உடையார் said:

நானும் தேடினேன், இனி ஒன்லைன் இல தான் வாங்கனும் ; சம்பல் செய்முறையும் நன்றாக இருக்கு 

மருதர் & குமாரசாமி நீங்கள் செய்த தை பார்க்க வாய் ஊறுகின்றது இந்த ஈஸ்ட்  கிடைக்கமாட்டேன்கிது

தற்போது  இங்கே கடைகளில் ஈஸ்ட் இல்லாத படியால் நட்ரோன் எனும் பேக்கிங் சோடா போட்டேன். அதுமட்டுமில்லாமல் தேங்காய் எண்ணையும் கூடுதலாக விட்டு அதிக நேரம் குழைக்க விட்டேன்.பாணில் தேங்காய் எண்ணை வாசம் மூக்கை துளைத்தது.

Kokosöl nativ Produktbild77 Natron-Anwendungen: Haushalt, Schönheit, Gesundheit & mehr ...

அதிக எண்ணை உடல்நலத்திற்கு கேடு என்றாலும் மா சம்பந்தப்பட்ட உணவுகளுக்கு அளவுக்கு மிஞ்சிய எண்ணை விட்டு நன்றாக மிக்ஸ் பண்ணி செய்து பாருங்கள். சும்மா பூ போல் மெதுவாக வரும். இது தொழில் ரகசியங்கள்.

77 Natron-Anwendungen: Haushalt, Schönheit, Gesundheit & mehr

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

நன்றி குமரசாமி தவிற்க்கும் தொழில் ரகசியத்திற்கும், தேடி பார்ப்போம் இந்த சனி கடைக்கு போகும் போது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இனி பேக்கரி ஐட்டங்களுக்கு யாழில் ஓடர் கொடுக்கலாம் போல இருக்கே முழுப்பேரும் செய்யுறாங்கள் 

பாவம் அங்கால ராஜவன்னியர் மட்டும் இப்பதான் சுடுதண்ணி பழகுறார்

கொஞ்சம் கொஞ்சமா முன்னேறலாம் முனிவர்ஜீ, என்ன அவசரம்..? அக்கால பெருசுகளுக்கு திடீரென ஸ்மார்ட் போனை குடுத்து 'பப்ஜி' விளையாடுங்கோ..? ஐ.ஓ.எஸ் என்ன வெர்சன்' ந்னு கேட்டால் எப்படி..?

எனக்கு பாணும் வேணாம், தேனும் வேணாம்.. அவசரகாலத்துக்கு சோறும், ரசமும் சமைக்க தெரிந்தால் போதும்.

இந்த கொரானா புண்ணியத்தில் அதை 'தட்டுத்தடுமாறி கற்றுக்கொள்வேன்' என்ற நம்பிக்கை உள்ளது. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nilmini said:

தேங்காப்பூக்குள் வெங்காயத்தையும், கறிவேப்பிலையும், உப்பையும் மசித்து. நல்லெண்ணெயில் முதலி chilli pieces ஐ போட்டு , பிறகு தனி மிளகாய் தூளை போட்டு  சொட்டு பொரித்து விட்டு அதை தேங்காப்பூக்குள் போட்டு தேசிக்காய் புளியும் விட்டு குழைக்கவும். நல்ல ருசி சிறி spacer.png

உந்த சம்பலில் நான் சின்ன வயசில் இருந்து ஒரு அலாதி பிரியம்.

இதில ஒரு ஆர்வம் எனக்கு. 

நீங்கள் சொல்வது சிங்களவர்கள் செய்யும் முறையினை சிலைட்டாக உல்டா பண்ணினது. கைசம்பல் எண்டு சொல்லுறது.

இடிச்ச சம்பல் தான் ரோஸ்ட் பாணுக்கு அம்சம்....

நீங்கள் சொன்ன சில்லி பிளேக்சை அல்லது காஞ்ச மிளகாயை கொஞ்ச எண்ணெய்ல கொஞ்சம் செக்கனுக்கு  பொரித்து அப்படியே கிரைண்டர்ல dry blade பாவித்து பவுடர் ஆக்கலாம்.  

அதனை எடுத்து வைச்சுப்போட்டு, கிரைண்டர்ல wet blade போட்டு, வெங்காயம், உள்ளியை (பாவிக்கிறதெண்டால்) உப்பை, மாசியை  (பாவிக்கிறதெண்டால்) போட்டு 10 - 20 செக்கனுக்கு அடித்து எடுத்து இப்ப எல்லாத்தையும் போட்டு, தேங்காய்ப்பூ சேர்த்து கரண்டியால் / கையால் மசித்து கலக்குங்கோ.

பொரித்து இடிச்ச சம்பல் ரெடி. இடிச்ச சம்பலுக்கு புளி போடுவதில்லை. போடுவதனால் வெங்காயம் அரைக்கும்போது, தேசிக்காய் புளியை, பழப்புளி கரைசலை விடுங்கோ.

அரைத்த சம்பல் செய்வதற்கு நான் பாவிக்கும் முறை.

கிரைண்டர்ல wet blade போட்டு  தேங்காய் பூ தவிர்ந்த, தேவையான காஞ்ச மிளகாய்,மற்றும் சகல பொருட்களையும் போட்டு தேங்காய்ப்பூவின் அளவுக்கு அமைய பழ புளி தண்ணி சேர்த்து அரைத்து, கலவைக்குள் கடைசியாக தேங்காய் பூவை போட்டு ஒரு 5 second சுத்து சுத்தினால் அரைத்த சம்பல் ரெடி. கலவையினை தேங்காய் பூ மேல ஊத்தி கரண்டியால் / கையால் மசித்து கலக்கினாலும் சரி தான்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

உப்பு போட மறந்தாலும் அந்தமாதிரி வந்திருக்கு......:cool:

pa-1.jpg

சிங்கன் எள் என்று சொன்னா காணும் உடனே எண்ணெய் உடன் வந்து நிற்பார்.

ஈஸ்ட் ஆரும் தந்தா நானும் விளையாட்டுக் காட்டுவன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nilmini said:

தேங்காப்பூக்குள் வெங்காயத்தையும், கறிவேப்பிலையும், உப்பையும் மசித்து. நல்லெண்ணெயில் முதலி chilli pieces ஐ போட்டு , பிறகு தனி மிளகாய் தூளை போட்டு  சொட்டு பொரித்து விட்டு அதை தேங்காப்பூக்குள் போட்டு தேசிக்காய் புளியும் விட்டு குழைக்கவும். நல்ல ருசி சிறி spacer.png

நில்மினி... நீங்கள் செய்த சம்பல் நல்ல நிறத்துடனும், பார்க்க வடிவாகவும் இருக்கின்றது.
நிச்சயம், இதே முறையில் அடுத்தமுறை செய்து பார்ப்போம்.   :)

4 hours ago, குமாரசாமி said:

உப்பு போட மறந்தாலும் அந்தமாதிரி வந்திருக்கு......:cool:

pa-1.jpg

குருவை மிஞ்சிய சிஷ்யன்மாதிரி...
நீர்வேலியான் செய்த.. ரோஸ்பாணை விட, 
குமாரசாமி அண்ணை செய்த றோஸ் பாண் கலக்குது. :grin:

4 hours ago, Maruthankerny said:

paan

நீங்கள் முட்டையும் பாலும் விட்டீர்களா?
எனக்கு இப்போதும் மென்மையாக வரவில்லை 
எனது ஈஸ்ட்டில்தான் ஏதும் பிரச்சனை இருக்குமோ தெரியவில்லை 
வேறு ஒரு ஈஸ்ட் வாங்கித்தான் முயற்சி செய்யவேண்டும் 

மருது.  என்னப்பா..... எல்லாரும் ரோஸ்பாண்  செய்கிறதை பார்க்க,
வாற கிழமை கட்டாயம் செய்து பார்க்க வேண்டும் போல் உள்ளது. :)

ஈஸ்டிற்கு.... ஏன் உலகம் முழுக்க தட்டுப்பாடாக இருக்கும் காரணம் என்னவாக இருக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

நில்மினி... நீங்கள் செய்த சம்பல் நல்ல நிறத்துடனும், பார்க்க வடிவாகவும் இருக்கின்றது.
நிச்சயம், இதே முறையில் அடுத்தமுறை செய்து பார்ப்போம்.   :)

குருவை மிஞ்சிய சிஷ்யன்மாதிரி...
நீர்வேலியான் செய்த.. ரோஸ்பாணை விட, 
குமாரசாமி அண்ணை செய்த றோஸ் பாண் கலக்குது. :grin:

மருது.  என்னப்பா..... எல்லாரும் ரோஸ்பாண்  செய்கிறதை பார்க்க,
வாற கிழமை கட்டாயம் செய்து பார்க்க வேண்டும் போல் உள்ளது. :)

ஈஸ்டிற்கு.... ஏன் உலகம் முழுக்க தட்டுப்பாடாக இருக்கும் காரணம் என்னவாக இருக்கும்

வெள்ளைக்காரரின் உணவு முறைகள் அனேகமானவை 
வெதுப்புவதுதானே .... அதுதான் வீட்டில் அடைபட்டு இருக்கும் நேரம் 
எல்லோரும் வேண்டி சென்று விட்டார்கள் என்று எண்ணுகிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

நில்மினி... நீங்கள் செய்த சம்பல் நல்ல நிறத்துடனும், பார்க்க வடிவாகவும் இருக்கின்றது.
நிச்சயம், இதே முறையில் அடுத்தமுறை செய்து பார்ப்போம்.   :)

...

மருது.  என்னப்பா..... எல்லாரும் ரோஸ்பாண்  செய்கிறதை பார்க்க,

வாற கிழமை கட்டாயம் செய்து பார்க்க வேண்டும் போல் உள்ளது. :)

...

test.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ராசவன்னியன் said:

test.jpg

அதுதானே புது ஐபோன் வேறை கிடக்கு...  😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, தனிக்காட்டு ராஜா said:

குறிப்பு :  மாசி துண்டுகளை நறுக்கிப்போட்டு சம்பல்  இடியுங்கள்.. 

உண்மைதான். மாசி கருவாட்டை சேர்த்து சம்பல் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.. மாசியை கொஞ்சம் எண்ணெயில் மிதமாக வறுத்துப்போட்டு சம்பல் செய்தால் தனிருசி..

ரோஸ் பாண், மாசி சம்பல், பழைய மீன்குழம்பு.இவைதான் எனக்கு மிகவும் பிடித்த காலை உணவு..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

ரோஸ் பாண், மாசி சம்பல், பழைய மீன்குழம்பு.இவைதான் எனக்கு மிகவும் பிடித்த காலை உணவு..

மீன்குழம்பு உடனே செய்ததை விட அடுத்த அடுத்த நாட்களுக்கே தனி சுவை.
ஊரில குளிர்சாதன பெட்டியும் இல்லை.கொஞ்சம் புளிக்கிறதாலோ என்னவோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Nathamuni said:

உந்த சம்பலில் நான் சின்ன வயசில் இருந்து ஒரு அலாதி பிரியம்.

இதில ஒரு ஆர்வம் எனக்கு. 

நீங்கள் சொல்வது சிங்களவர்கள் செய்யும் முறையினை சிலைட்டாக உல்டா பண்ணினது. கைசம்பல் எண்டு சொல்லுறது.

இடிச்ச சம்பல் தான் ரோஸ்ட் பாணுக்கு அம்சம்....

நீங்கள் சொன்ன சில்லி பிளேக்சை அல்லது காஞ்ச மிளகாயை கொஞ்ச எண்ணெய்ல கொஞ்சம் செக்கனுக்கு  பொரித்து அப்படியே கிரைண்டர்ல dry blade பாவித்து பவுடர் ஆக்கலாம்.  

அதனை எடுத்து வைச்சுப்போட்டு, கிரைண்டர்ல wet blade போட்டு, வெங்காயம், உள்ளியை (பாவிக்கிறதெண்டால்) உப்பை, மாசியை  (பாவிக்கிறதெண்டால்) போட்டு 10 - 20 செக்கனுக்கு அடித்து எடுத்து இப்ப எல்லாத்தையும் போட்டு, தேங்காய்ப்பூ சேர்த்து கரண்டியால் / கையால் மசித்து கலக்குங்கோ.

பொரித்து இடிச்ச சம்பல் ரெடி. இடிச்ச சம்பலுக்கு புளி போடுவதில்லை. போடுவதனால் வெங்காயம் அரைக்கும்போது, தேசிக்காய் புளியை, பழப்புளி கரைசலை விடுங்கோ.

அரைத்த சம்பல் செய்வதற்கு நான் பாவிக்கும் முறை.

கிரைண்டர்ல wet blade போட்டு  தேங்காய் பூ தவிர்ந்த, தேவையான காஞ்ச மிளகாய்,மற்றும் சகல பொருட்களையும் போட்டு தேங்காய்ப்பூவின் அளவுக்கு அமைய பழ புளி தண்ணி சேர்த்து அரைத்து, கலவைக்குள் கடைசியாக தேங்காய் பூவை போட்டு ஒரு 5 second சுத்து சுத்தினால் அரைத்த சம்பல் ரெடி. கலவையினை தேங்காய் பூ மேல ஊத்தி கரண்டியால் / கையால் மசித்து கலக்கினாலும் சரி தான்.   

செய்முறைக்கு நன்றி . இன்றைக்கு தோசைக்கு இந்த சம்பல் செய்யப்போறேன். ஒரே மாதிரி செய்யாமல் ஒவ்வொருமுறையும் வித்தியாசகமாக செய்து பார்ப்போம் 

11 hours ago, தமிழ் சிறி said:

நில்மினி... நீங்கள் செய்த சம்பல் நல்ல நிறத்துடனும், பார்க்க வடிவாகவும் இருக்கின்றது.
நிச்சயம், இதே முறையில் அடுத்தமுறை செய்து பார்ப்போம்.   :)

குருவை மிஞ்சிய சிஷ்யன்மாதிரி...
நீர்வேலியான் செய்த.. ரோஸ்பாணை விட, 
குமாரசாமி அண்ணை செய்த றோஸ் பாண் கலக்குது. :grin:

மருது.  என்னப்பா..... எல்லாரும் ரோஸ்பாண்  செய்கிறதை பார்க்க,
வாற கிழமை கட்டாயம் செய்து பார்க்க வேண்டும் போல் உள்ளது. :)

ஈஸ்டிற்கு.... ஏன் உலகம் முழுக்க தட்டுப்பாடாக இருக்கும் காரணம் என்னவாக இருக்கும்

நிச்சயம் செய்து பாருங்கள் சிறி. செய்வதும் சுகம். சின்ன வெங்காயம் அல்லது Shallots நல்லம். இல்லாட்டி சிவப்பு பெரிய வெங்காயம். கருப்பிலையையும் kitchen scissors ஆல் மெல்லிசாக வெட்டி போட்டால் ருசி கூட. சீன கடைகளில் விக்கும் செத்தல் மிளகாய் நல்ல நிறம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

உண்மைதான். மாசி கருவாட்டை சேர்த்து சம்பல் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.. மாசியை கொஞ்சம் எண்ணெயில் மிதமாக வறுத்துப்போட்டு சம்பல் செய்தால் தனிருசி..

ரோஸ் பாண், மாசி சம்பல், பழைய மீன்குழம்பு.இவைதான் எனக்கு மிகவும் பிடித்த காலை உணவு..

சம்பல் என்றால் உரலில் இடித்ததாக இருக்கணுன் எனக்கு மிற்சியில் அரைத்தது என்றால் தட்டுக்குள்ளும் வைக்க மாட்டன் நீங்கள் சொல்வது போல கொஞ்சம் எண்ணெய்யில் விட்டு எடுத்தால் இன்னும் ருசி சிலருக்கு எண்ணெய் பிடிக்காது என்பதற்க்காக எழுதவில்லை

14 hours ago, ராசவன்னியன் said:

கொஞ்சம் கொஞ்சமா முன்னேறலாம் முனிவர்ஜீ, என்ன அவசரம்..? அக்கால பெருசுகளுக்கு திடீரென ஸ்மார்ட் போனை குடுத்து 'பப்ஜி' விளையாடுங்கோ..? ஐ.ஓ.எஸ் என்ன வெர்சன்' ந்னு கேட்டால் எப்படி..?

எனக்கு பாணும் வேணாம், தேனும் வேணாம்.. அவசரகாலத்துக்கு சோறும், ரசமும் சமைக்க தெரிந்தால் போதும்.

இந்த கொரானா புண்ணியத்தில் அதை 'தட்டுத்தடுமாறி கற்றுக்கொள்வேன்' என்ற நம்பிக்கை உள்ளது. :)

எப்படி அமிரக நிலமை வரணும் அங்கே பார்க்கலாம் எதிர்காலத்தில்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Nathamuni said:

உந்த சம்பலில் நான் சின்ன வயசில் இருந்து ஒரு அலாதி பிரியம்.

இதில ஒரு ஆர்வம் எனக்கு. 

நீங்கள் சொல்வது சிங்களவர்கள் செய்யும் முறையினை சிலைட்டாக உல்டா பண்ணினது. கைசம்பல் எண்டு சொல்லுறது.

இடிச்ச சம்பல் தான் ரோஸ்ட் பாணுக்கு அம்சம்....

நீங்கள் சொன்ன சில்லி பிளேக்சை அல்லது காஞ்ச மிளகாயை கொஞ்ச எண்ணெய்ல கொஞ்சம் செக்கனுக்கு  பொரித்து அப்படியே கிரைண்டர்ல dry blade பாவித்து பவுடர் ஆக்கலாம்.  

அதனை எடுத்து வைச்சுப்போட்டு, கிரைண்டர்ல wet blade போட்டு, வெங்காயம், உள்ளியை (பாவிக்கிறதெண்டால்) உப்பை, மாசியை  (பாவிக்கிறதெண்டால்) போட்டு 10 - 20 செக்கனுக்கு அடித்து எடுத்து இப்ப எல்லாத்தையும் போட்டு, தேங்காய்ப்பூ சேர்த்து கரண்டியால் / கையால் மசித்து கலக்குங்கோ.

பொரித்து இடிச்ச சம்பல் ரெடி. இடிச்ச சம்பலுக்கு புளி போடுவதில்லை. போடுவதனால் வெங்காயம் அரைக்கும்போது, தேசிக்காய் புளியை, பழப்புளி கரைசலை விடுங்கோ.

அரைத்த சம்பல் செய்வதற்கு நான் பாவிக்கும் முறை.

கிரைண்டர்ல wet blade போட்டு  தேங்காய் பூ தவிர்ந்த, தேவையான காஞ்ச மிளகாய்,மற்றும் சகல பொருட்களையும் போட்டு தேங்காய்ப்பூவின் அளவுக்கு அமைய பழ புளி தண்ணி சேர்த்து அரைத்து, கலவைக்குள் கடைசியாக தேங்காய் பூவை போட்டு ஒரு 5 second சுத்து சுத்தினால் அரைத்த சம்பல் ரெடி. கலவையினை தேங்காய் பூ மேல ஊத்தி கரண்டியால் / கையால் மசித்து கலக்கினாலும் சரி தான்.   

சம்பல் நல்ல பொரிச்சு  இடிச்ச மணத்துடன் வந்துது. தோசையுடன் சாப்பிட நல்ல டேஸ்ட் .

spacer.pngspacer.png

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.