Jump to content

ரோஸ் பாண்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

👍

தமிழ்நாட்டு தோசைக்கும், யாழ்ப்பாணத்து தோசைக்கும் என்ன வித்தியாசம் எண்டால்....

தமிழ் நாட்டில, எல்லாம் அரைக்க முன்னம் தான் புளிக்கும். அரைத்த பின்னர் உடனடியா சூடுபடும்.

கடலுக்கு இந்த பக்கம், அரைத்த பிறகும், எல்லாத்தையும் கலந்து மஞ்சள் தூள் போட்டு, இன்னும் ஒரு நாள் புளித்து, பிறகு அதுக்குள்ள தாளித்து கொட்டி, தான் சுடப்படும்

18 minutes ago, nilmini said:

சம்பல் நல்ல பொரிச்சு  இடிச்ச மணத்துடன் வந்துது. தோசையுடன் சாப்பிட நல்ல டேஸ்ட் .

spacer.png

Link to comment
Share on other sites

  • Replies 150
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, nilmini said:

சம்பல் நல்ல பொரிச்சு  இடிச்ச மணத்துடன் வந்துது. தோசையுடன் சாப்பிட நல்ல டேஸ்ட் .

spacer.pngspacer.png

பார்க்க சூப்பர் ஆக இருக்கு, சம்பலின் texture நல்லா வந்திருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ராசவன்னியன் said:

test.jpg

வன்னியன் சார்....  உங்களுடைய கருத்தைப் பார்க்க,
நீங்கள் கனகாலமாக, சமையல் பகுதியில்... நான் போடும் கருத்துக்களை,
மிக உன்னிப்பாக... அவதானித்து வந்து இருக்கிறியள்  போல கிடக்கு. 🤣

நான்... வாயால் வடை சுடும் ரகசியத்தை, 
"பப்ளிக்" ஆக்கிய உங்களை, மிக வன்மையாக கண்டிக்கின்றேன்😎

இதுக்கு... மேலையும் என்னால் தாங்க முடியாது,
எப்பிடியெண்டாலும்... விரைவில்,  சோறு தன்னும் சமைத்து விட்டு, படத்தை போடுகின்றேன். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nilmini said:

சம்பல் நல்ல பொரிச்சு  இடிச்ச மணத்துடன் வந்துது. தோசையுடன் சாப்பிட நல்ல டேஸ்ட் .

spacer.pngspacer.png

தோசையும்,  சம்பலும்.... அந்த மாதிரி இருக்கு, நில்மினி. :)
தோசையில்.... கனக்க  "பபிள்ஸ்" வந்து இருப்பதிலிருந்து, 
தோசை மா கணக்கான பதத்தில்.. புளித்து இருக்கின்றது என்று தெரிகிறது.  

உப்பிடியான... தோசையும், சம்பலும் என்றால், நிச்சயம்   20 தோசைக்கு மேல் சாப்பிடுவேன். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இந்த திரியைப் பாத்தப்போட்டு வந்த ரோசத்தில் இனடைக்கு விடிய ஒடிப்போய் பேக்கரியல் ரோஸ்பான் வாங்கிச் சாப்பிட்டேன் சம்பல் எனது சொந் தயாரிப்பு.சொல்லி வேலையில்லை.🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

நானும் இந்த திரியைப் பாத்தப்போட்டு வந்த ரோசத்தில் இனடைக்கு விடிய ஒடிப்போய் பேக்கரியல் ரோஸ்பான் வாங்கிச் சாப்பிட்டேன் சம்பல் எனது சொந் தயாரிப்பு.சொல்லி வேலையில்லை🤣

hqdefault.jpg

என்னாச்சு தோழர்.. ஏதாவது வில்லங்கமா..? 😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

தோசையும்,  சம்பலும்.... அந்த மாதிரி இருக்கு, நில்மினி. :)
தோசையில்.... கனக்க  "பபிள்ஸ்" வந்து இருப்பதிலிருந்து, 
தோசை மா கணக்கான பதத்தில்.. புளித்து இருக்கின்றது என்று தெரிகிறது.  

உப்பிடியான... தோசையும், சம்பலும் என்றால், நிச்சயம்   20 தோசைக்கு மேல் சாப்பிடுவேன். :grin:

சிறித்தம்பியர்! நல்லவடிவாய் யோசிச்சு சொல்லுங்கோ 20 தோசையோ இல்லாட்டி 20 பியரோ எண்டு? 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

தோசையும்,  சம்பலும்.... அந்த மாதிரி இருக்கு, நில்மினி. :)
தோசையில்.... கனக்க  "பபிள்ஸ்" வந்து இருப்பதிலிருந்து, 
தோசை மா கணக்கான பதத்தில்.. புளித்து இருக்கின்றது என்று தெரிகிறது.  

உப்பிடியான... தோசையும், சம்பலும் என்றால், நிச்சயம்   20 தோசைக்கு மேல் சாப்பிடுவேன். :grin:

நல்ல அரைச்ச  மஞ்சளும் போட்டு , தாளிச்சு நல்லா வந்துது சிறி . 20 தோசையா?  மெல்லிசா வார்த்து நல்லெண்ணெயும் விட்டு சுட்டால் சாப்பிடலாம் தான். 

17 hours ago, Nathamuni said:

👍

தமிழ்நாட்டு தோசைக்கும், யாழ்ப்பாணத்து தோசைக்கும் என்ன வித்தியாசம் எண்டால்....

தமிழ் நாட்டில, எல்லாம் அரைக்க முன்னம் தான் புளிக்கும். அரைத்த பின்னர் உடனடியா சூடுபடும்.

கடலுக்கு இந்த பக்கம், அரைத்த பிறகும், எல்லாத்தையும் கலந்து மஞ்சள் தூள் போட்டு, இன்னும் ஒரு நாள் புளித்து, பிறகு அதுக்குள்ள தாளித்து கொட்டி, தான் சுடப்படும்

உண்மைதான் மஞ்சளும் போட்டு தாளிச்ச தோசைக்கு இணையே இல்லை. முருகண்டி தோசை மாதிரியும் செய்து பாத்தேன் நல்லா  வந்துது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

சிறித்தம்பியர்! நல்லவடிவாய் யோசிச்சு சொல்லுங்கோ 20 தோசையோ இல்லாட்டி 20 பியரோ எண்டு? 😎

குமாரசாமி அண்ணை.....  பியர் என்றால்,  தோசையை விட கூட அடிப்பன். :grin:
அதுகும்.... ஜேர்மன் பியர் என்றால்,  ஒரு 25  போத்தில் தாண்டும்.  😎
தயவு செய்து.... இதைப்  பார்த்து, நாவூறு படுத்திப் போடாதேங்கோ அண்ணை. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, nilmini said:

நல்ல அரைச்ச  மஞ்சளும் போட்டு , தாளிச்சு நல்லா வந்துது சிறி . 20 தோசையா?  மெல்லிசா வார்த்து நல்லெண்ணெயும் விட்டு சுட்டால் சாப்பிடலாம் தான். 

உண்மைதான் மஞ்சளும் போட்டு தாளிச்ச தோசைக்கு இணையே இல்லை. முருகண்டி தோசை மாதிரியும் செய்து பாத்தேன் நல்லா  வந்துது 

நில்மினி.... நீங்கள், fresh மஞ்சள் போட்ட படியால் தான், நல்ல வடிவான நிறத்தில் தோசை வந்துள்ளது.

முருகண்டி தோசையைப் பற்றி நான் இதுவரை கேள்விப்  படவில்லை.
அதில்.. அப்பிடி என்ன விசேசம்  உள்ளது. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணை.....  பியர் என்றால்,  தோசையை விட கூட அடிப்பன். :grin:
அதுகும்.... ஜேர்மன் பியர் என்றால்,  ஒரு 25  போத்தில் தாண்டும்.  😎
தயவு செய்து.... இதைப்  பார்த்து, நாவூறு படுத்திப் போடாதேங்கோ அண்ணை. 🤣

அய்க்.....20 பியர் என்ன கனக்கவே?
 நாக்கை நனைக்கவே காணாது......:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/4/2020 at 22:41, தமிழ் சிறி said:

நில்மினி.... நீங்கள், fresh மஞ்சள் போட்ட படியால் தான், நல்ல வடிவான நிறத்தில் தோசை வந்துள்ளது.

முருகண்டி தோசையைப் பற்றி நான் இதுவரை கேள்விப்  படவில்லை.
அதில்.. அப்பிடி என்ன விசேசம்  உள்ளது. :rolleyes:

மஞ்சள் கட்டிகள் கொஞ்சம் கனடாவில் இருந்து வாங்கி வந்தனான் சிறி. இப்ப இருக்கும் வைரஸ் பிரச்சனைக்கு நல்லம் என்று எல்லாத்துக்குள்ளேயும் மஞ்சள் தான் 1 சுண்டு அவிச்ச கோதுமை மா, 1/2 சுண்டு பச்சை கோதுமை மா, 1/2 சுண்டு உளுந்து, கொஞ்ச வெந்தயம், தேங்காய் பூ 1/2 கப் அல்லது 1 கப் தேங்காய் பால், மஞ்சள், 1 பெரிய வெள்ளை வெங்காயம்.எல்லாத்தயும் அரைத்து புளிக்க வைத்து சுடவும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/4/2020 at 03:20, nilmini said:

நில்மினி.... 1/2 சுண்டு உளுந்து மா போடா வேணுமா?
அல்லது உளுந்தை... ஊற வைத்து அரைத்து... மற்றையவற்றுடன் கலக்க வேண்டுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

நில்மினி.... 1/2 சுண்டு உளுந்து மா போடா வேணுமா?
அல்லது உளுந்தை... ஊற வைத்து அரைத்து... மற்றையவற்றுடன் கலக்க வேண்டுமா?

ஊற வைத்து அரைத்த உளுந்து தான் நல்லம் சிறி. தனியா கோதுமை மா, வெங்காயம், தேங்காய் பால் அல்லது தேங்காய் பூ எல்லாம் ஒன்றாக அரைத்து 3 மணித்தியாலம் வரை  வைத்து விட்டு தாளித்து போட்டு சுடும் ஒரு விதமான தோசையும்  இருக்கு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

நில்மினி.... 1/2 சுண்டு உளுந்து மா போடா வேணுமா?
அல்லது உளுந்தை... ஊற வைத்து அரைத்து... மற்றையவற்றுடன் கலக்க வேண்டுமா?

கேள்வி கேட்கிற விதத்தை பார்த்தால் சிறித்தம்பியர் தோசைக்கடை போடப்போறார் போல கிடக்கு......🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/4/2020 at 03:20, nilmini said:

மஞ்சள் கட்டிகள் கொஞ்சம் கனடாவில் இருந்து வாங்கி வந்தனான் சிறி. இப்ப இருக்கும் வைரஸ் பிரச்சனைக்கு நல்லம் என்று எல்லாத்துக்குள்ளேயும் மஞ்சள் தான் 1 சுண்டு அவிச்ச கோதுமை மா, 1/2 சுண்டு பச்சை கோதுமை மா, 1/2 சுண்டு உளுந்து, கொஞ்ச வெந்தயம், தேங்காய் பூ 1/2 கப் அல்லது 1 கப் தேங்காய் பால், மஞ்சள், 1 பெரிய வெள்ளை வெங்காயம்.எல்லாத்தயும் அரைத்து புளிக்க வைத்து சுடவும். 

நீங்கள் தோசை மாவுக்கு தேங்காய் பூ/ தேங்காய் பால் சேர்ப்பதுண்டா......இங்கு சேர்ப்பதில்லை.அப்பத்துக்கு  மாவுக்கு சேர்ப்பதுண்டு.பருத்தித்துறையில் ஒரு அக்கா இருக்கிறா அவ தோசைமாவுக்கு மஞ்சள் சேர்க்க மாட்டா வெள்ளைத் தோசையாய் இருக்கும்.ஆனால் ருசியில் குறைவில்லை.  ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு வழக்கம் போல ......!  😁 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, suvy said:

தொடக்கத்தில் அம்மம்மா செய்வதுபோல, சிவதப்பச்சை அரிசி, புக்கை கஞ்சி , வெந்தயம், அத்துடன் உளுந்து அரைக்கரைவாசி சேர்த்து, பிறகு தாளிச்சுப்போட்டு தான் சுட்டது. பிறகு ஒவ்வொருமுறையும் வித்தியாசமாக  செய்து பார்ப்போம். மஞ்சளும் எப்பயும் போடுவதில்லை. இப்ப கடலை  பருப்பு, இட்லி அரிசி, ரவை என்று எல்லாமே போடுகிறார்கள். கடலை பருப்பு கொஞ்சம் சேர்த்தால் தோசை நல்ல பொன்னிறமாக மொறு மொறு என்று வரும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

41 minutes ago, nilmini said:

தொடக்கத்தில் அம்மம்மா செய்வதுபோல, சிவதப்பச்சை அரிசி, புக்கை கஞ்சி , வெந்தயம், அத்துடன் உளுந்து அரைக்கரைவாசி சேர்த்து, பிறகு தாளிச்சுப்போட்டு தான் சுட்டது. பிறகு ஒவ்வொருமுறையும் வித்தியாசமாக  செய்து பார்ப்போம். மஞ்சளும் எப்பயும் போடுவதில்லை. இப்ப கடலை  பருப்பு, இட்லி அரிசி, ரவை என்று எல்லாமே போடுகிறார்கள். கடலை பருப்பு கொஞ்சம் சேர்த்தால் தோசை நல்ல பொன்னிறமாக மொறு மொறு என்று வரும். 

தோசைமாவுக்கு ஒருத்தரும் கள்ளு சேர்ப்பதில்லையா? :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

தோசைமாவுக்கு ஒருத்தரும் கள்ளு சேர்ப்பதில்லையா? :cool:

கள்ளையும் கழட்டி விடக்கூடாது என்றுதான் அதை அப்பத்துக்கு விட்டிருக்கிறம்.....! 😁

கள்ளின்றி அப்பம் சுட்டதில்லை அது அந்தக் காலம்.இப்போ எல்லாம் ஈஸ்ட்  & பேக்கிங்சோடாதான்.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎19‎-‎04‎-‎2020 at 02:20, nilmini said:

மஞ்சள் கட்டிகள் கொஞ்சம் கனடாவில் இருந்து வாங்கி வந்தனான் சிறி. இப்ப இருக்கும் வைரஸ் பிரச்சனைக்கு நல்லம் என்று எல்லாத்துக்குள்ளேயும் மஞ்சள் தான் 1 சுண்டு அவிச்ச கோதுமை மா, 1/2 சுண்டு பச்சை கோதுமை மா, 1/2 சுண்டு உளுந்து, கொஞ்ச வெந்தயம், தேங்காய் பூ 1/2 கப் அல்லது 1 கப் தேங்காய் பால், மஞ்சள், 1 பெரிய வெள்ளை வெங்காயம்.எல்லாத்தயும் அரைத்து புளிக்க வைத்து சுடவும். 

தேங்காய்ப்பூ/பால் எல்லாம் தோசைக்கு போடுறதை இங்கு தான் கேள்விப்படுறன் :shocked:
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

தேங்காய்ப்பூ/பால் எல்லாம் தோசைக்கு போடுறதை இங்கு தான் கேள்விப்படுறன் :shocked:
 
ஊருக்கு ஊர் வித்தியாசம். எங்கடை ஊரிலை கூப்பன்மா ரொட்டிக்குத்தான் தேங்காய்ப்பூ போடுறது.மஞ்சள் தோசை வெள்ளைத்தோசை இரண்டும் இருக்கு. சில பேர் தோசைமாவுக்கு தாளிச்சு போட்டு சுடுவினம்.அதிலையும் தென்னோலையாலை அடுப்பு எரிச்சு தோசை சுட்டால் இன்னும் விசேசம்.:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: food

நான் இன்று ரோஸ்பாண் செய்து பார்த்தேன். கொஞ்சம்  soft ஆக வரவில்லை. ஆனால் சம்பலுடன் சாப்பிட்டது. ஒரு சொட்டும் மிஞ்சவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

Image may contain: food

நான் இன்று ரோஸ்பாண் செய்து பார்த்தேன். கொஞ்சம்  soft ஆக வரவில்லை. ஆனால் சம்பலுடன் சாப்பிட்டது. ஒரு சொட்டும் மிஞ்சவில்லை.

பாக்க கடை பாண் மாதிரி இருக்கு 

1 hour ago, ஈழப்பிரியன் said:

CE6963-F7-6-CB3-442-D-84-E6-9-C620-E14-B
ஆகா நாங்களும் செய்வோமில்ல.

பாணும்  சம்பலும் அந்தமாதிரி வந்திருக்கு 

Link to comment
Share on other sites

பாண்  அருமையாக  பார்க்க இருக்கிறது . இதுக்கு  ஒரு சம்பல் நான் செய்திருக்கிறேன்  .எப்படி இருக்கும் என்பதை இங்கு பாருங்கள் .

JAFFNA STYLE COCONUT SAMBOL/யாழ்ப்பாண தேங்காய் சம்பல்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.