Jump to content

இயல்பு நிலைக்கு திரும்பியது சீனாவின் வூகான் நகரம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ssss-3.jpg

இயல்பு நிலைக்கு திரும்பியது சீனாவின் வூகான் நகரம்

கொரோனா வைரஸ் முதலில் பரவ ஆரம்பித்த சீனாவின் வூகான் நகரில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.

வீடுகளில் அடைபட்டு கிடந்த மக்கள் இரண்டரை மாதங்களுக்குப் பின்னர் ஊரை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவில் கொரோனா உயிரிழப்புகள் குறைவடைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கும் சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் மெல்ல மெல்ல அப்பகுதி கொரோனாவில் இருந்து விடுபடுகிறது.

இதன் பலனாக வூகானில் இருந்து ஹூபேய் மாகாணத்திற்குள்ளாக ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. முதல் ரயில் இன்று(புதன்கிழமை) காலை புறப்பட்டுச் சென்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதில் 276 பயணிகள் பயணித்தனர். இதே போன்று நெடுஞ்சாலைகளும் திறக்கப்பட்டு மக்கள் கார்களில் அணி அணியாக செல்கின்றனர். விமான சேவைகளும் அப்பகுதியில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

http://athavannews.com/இயல்பு-நிலைக்கு-திரும்பி/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

76 நாட்களின் பின்னர் முடிவிற்கு வந்தது வுகானின் தனிமைப்படுத்தல்

வுகான் நகரத்தின் மீதான முடக்கலை 76 நாட்களிற்கு பின்னர் சீனா முடிவிற்கு கொண்டு வந்துள்ளது.

கொரோனா வைரஸ் முதலில் பரவத்தொடங்கிய வுகான் நகரத்தின் மீதான முடக்கலை இன்று முடிவிற்கு கொண்டுவந்துள்ள சீனா அதிகாரிகள் போக்குவரத்திற்கான அனுமதியை வழங்கியுள்ளனர்.

கொரோனா வைரஸ் வேகமாக பரவத்தொடங்கியதை தொடர்ந்து ஜனவரி 23 ம் திகதி வுகானை கடுமையான முடக்கலிற்கு உட்படுத்தும் உத்தரவை சீனா அதிகாரிகள் அறிவித்தனர்.

whuhan_11.jpg

இன்று வுகான் மீதான முடக்கல் முடிவிற்கு வந்ததை தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் அந்த நகரிலிருந்து சீன தலைநகரிற்கு பயணத்தினை மேற்கொண்டுள்ளனர்.

வுகானின் வுச்சாங் புகையிரத நிலையத்தில் முதலாவது புகையிரதத்திற்காக பெருமளவு மக்கள் காத்திருந்தனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

whuhan13.jpg

வுகான் தொற்றுநோய் காரணமாக பெரும் இழப்பை சந்தித்துள்ளது,வுகான் மக்கள் பெரும் விலையை செலுத்தியுள்ளனர் என 21 வயது இளைஞன் ஒருவன் தெரிவித்தான் என சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

தற்போது முடக்கல் முடிவிற்கு வந்துள்ளதால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.
 

https://www.virakesari.lk/article/79501

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாம்பு , பூரான் என அடுத்த ரவுண்டு ஆரம்பிக்குக..👌 ; என்ன இனி சீனர்களை உலகம் ஒரு மார்க்கமாதான் பார்க்கும்.👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பாம்பு , பூரான் என அடுத்த ரவுண்டு ஆரம்பிக்குக..👌 ; என்ன இனி சீனர்களை உலகம் ஒரு மார்க்கமாதான் பார்க்கும்.👍

ஹொலிவூட்டிலும்  கோலிவூட்டிலும் படங்கள் வந்ததும் எல்லாம் மறந்துவிடும் தோழர்........!   😁

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.