• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
கிருபன்

கொரோனா வைரஸும், இலுமினாட்டிகளும் - காணொளிகளை தடை செய்யும் யூடியூப்

Recommended Posts

கொரோனா வைரஸும், இலுமினாட்டிகளும் - காணொளிகளை தடை செய்யும் யூடியூப்

Coronavirus: YouTubeFuture Publishing / getty images

கொரோனா வைரஸ் 5ஜி நெட்வொர்க் காரணமாகவே பரவியது என போலிச் செய்திகளை பரப்பும் அனைத்து காணொளிகளையும் தடை செய்துள்ளது யூடியூப் நிறுவனம். 

அதுமட்டுமல்ல, கொரோனாவுக்கு காரணம் இலுமினாட்டிகள் என்பது போல செய்திகளை பரப்பும் அனைத்து 'கான்ஸ்பிரஸி தியரி' (சதித்திட்ட கோட்பாடு) காணொளிகளையும் யூடியூப் தடை செய்துள்ளது.

கொரோனாவுக்கு காரணம் 5ஜி தொழில்நுட்பம்தான் என பிரபல சதித்திட்ட கோட்பாட்டாளர் மற்றும் முன்னாள் கால்பந்தாட்ட வீரர் டேவிட் ஈக் பேசியது சர்ச்சையானது.

இதன் காரணமாக சில தொலைத்தொடர்பு நிறுவனங்களின் ஊழியர்கள் தாக்கப்பட்டனர். செல்பேசி கோபுரங்களுக்கும் தீயிடப்பட்டது. 

இதனை அடுத்து சமூக ஊடகங்கள் இவ்வாறு போலிச் செய்திகளை பரப்பும் பதிவுகளையும், காணொளிகளையும் நீக்கி வருகின்றன. யூடியூப் இந்த காணொளியை நீக்கியது மட்டுமல்லாமல் தங்கள் கொள்கைகளை மீறிய அனைத்து காணொளிகளையும் நீக்குகிறது.
 

https://www.bbc.com/tamil/global-52210180

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • உண்மைதான் வெள்ளவத்தைக்கு ஒரு தனித்தன்மை இருந்தது. மங்கள ரெக்கோர்டிங் பார் என்றுதான் 1980 களில் திறந்தார்கள். Zellers ice-cream மற்றும் biscuits மறக்கமுடியாது. Elephant  house இல் தான் நெக்டோ , ஒரேஞ் பார்லி , லெமனேட் , கிரீம் சோடா , இஞ்சி சோடா வேண்டுறது.ஆரம்பித்தில்  Fussles லேனில் இருந்து St .Lawrence இல் படித்தேன். அப்போதிருந்த தமிழ் பலசரக்கு கடைகள் பெயர் ஒன்றும் நினைவுக்கு வருகுதில்லை . Milk board , Maaning place உடன் இருந்த நிறையக்கடைகள் ஒன்றுமே இப்ப இல்லை . பின்னர் 1980 இல் இருந்து Arethusa லைனில் Sapphire ஹொட்டேலுக்கு அடுத்த வீடு. அவர்களுக்குத்தான் வீடு வித்தது . இப்ப வீடெல்லாம் உடைத்து வேறு  என்னவோ கட்டி இருக்கிறார்கள். 
    • கல்லில் ஒரு ‘ஸ்மார்ட் கிளாக்’!” தமிழனின் பழைமையான கேட்ஜெட் வேலூர் மாவட்டத்திலிருந்து 13 கி.மீ தொலைவில் உள்ள விரிஞ்சிபுரம் என்னும் ஊரில் இந்தக் கல் இருக்கிறது . பல்லவ மன்னர் ஆட்சி செய்த நேரத்தில், மார்கபந்தீஸ்வர் ஆலயத்தை கட்டியுள்ளனர். அப்போது ஆலயத்தின் வடக்குப் பகுதியில் காலம் கட்டும் கல்லையும் கட்டியிருக்கிறார்கள். (கீழே வலது பக்கப் படம்) பல்லாயிரக்கணக்கான ஆண்டு வரலாறு உண்டு என்பதால் தமிழர்களின் கண்டுபிடிப்புகள் மனிதனின் நாகரிக வளர்ச்சியில் நம் பங்கு முக்கியமானது. அதில் குறிப்பிடத்தக்க ஒன்றுதான் நம் முன்னோர்கள் கண்டுபிடித்த காலம் காட்டும் கல். இதை மணிகாட்டிக் கல் என அழைப்பதும் உண்டு. அறிவியல் அதிகமாக வளராத ஆதிக்காலத்திலையே சூரியனை எப்படிப் பயன்படுத்தலாம் என்று யோசித்தவர்கள், தமிழர்கள்.  ஆதிகாலத்தில் மேலை நாட்டினர், 'கிளாசிக்கல் க்ளாக்' எனும் மணல் கடிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டிருந்தனர். மேலை நாட்டினர் மண்ணைப் பார்த்து சிந்தித்தபோது, விண்ணைப் பார்த்து சிந்தித்தவன் தமிழன். தமிழர்கள் சூரியனைப் பயன்படுத்தி கடிகாரம் கண்டுபிடித்து பயன்படுத்திக்கொண்டிருந்தனர். அதற்கு முன்னர், சூரியனையும், கோயில் கோபுரத்தையும் வைத்து நேரம் அறிந்துகொண்டிருந்தனர், தமிழர்கள். அதன் பின்னர் சிறிய கருங்கல்லை வைத்து தன்னுடைய தொழில்நுட்பத்தை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தினார்கள். சிறியதாக ஒரு கருங்கல்லை வைத்து பன்னிரண்டு மணிநேரத்தை பார்க்கும்படி வடிவமைத்துள்ளார்கள். இன்றும் வேலூர் மாவட்டத்திலிருந்து 13 கி.மீ தொலைவில் உள்ள விரிஞ்சிபுரம் என்னும் ஊரில் இந்தக் கல் இருக்கிறது. பல்லவ மன்னர் ஆட்சி செய்த நேரத்தில், மார்கபந்தீஸ்வர் ஆலயத்தைக் கட்டியுள்ளனர். அப்போது ஆலயத்தின் வடக்குப் பகுதியில் காலம் கட்டும் கல்லையும் கட்டியிருக்கிறார்கள். மணிகாட்டும் கல்லின் மேற்பகுதியில் சிறிய பள்ளமான பகுதி ஒன்று இருக்கும். அதன் மேல் சிறு குச்சியை வைத்தால், சூரிய ஒளியின் திசைக்கு ஏற்றவாறு, குச்சியின் நிழல் மணிக்காக குறிக்கப்பட்டுள்ள கோட்டின் மீது விழும். அதைப் பார்த்து மணியைத் தெரிந்துகொள்ளலாம்.  காலம் காட்டும் கல்லின் ஒருபுறம் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. முதல் பகுதியில் ஒன்று முதல் ஆறு வரை எண்கள் எழுதப்பட்டிருக்கின்றன. மற்றொரு புறமும் ஆறு முதல் 12 என்ற வரிசையில் எண்கள் எழுதப்பட்டுள்ளன. ஒரு பாகம் முற்பகலையும், ஒரு பாகம் பிற்பகலையும் காட்டும்.  அறிவியல் வளர்ச்சி அதிகம் இல்லாத ஆதிகாலத்தில், வானியல் மாற்றங்களைத் தெரிந்துகொள்ள தொழில்நுட்பங்கள் இல்லை. பருவநிலையையும் மற்றும் பருவகால மாற்றங்களையும் அறிந்துகொள்ள மணிகாட்டும் கல்லைத் தவிர இன்னும் பல கற்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அந்தக் கற்களைக்கொண்டு ஆதிகால மக்கள் நாள்கள், நேரம், பருவம் ஆகியவற்றை அப்போது வாழ்ந்த மக்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பது ஆராய்ச்சியாளர்களின் கூற்று.  பருவகாலங்களை ஆராய்ந்ததற்கான சான்று, ஆந்திராவின் மெஹபூப் நகர் மாவட்டத்தில் உள்ள முடுமால் எனும் கிராமத்தில் இருக்கிறது. அக்கிராமத்தில் 80 ஏக்கர் பரப்பளவில் 80 பெரிய கற்களும், 3,500-க்கும் மேற்பட்ட சிறிய கற்களும் காணப்படுகின்றன. அந்த இடத்தை வானிலை முக்கியத்துவம் வாய்ந்த இடமாக கருதுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். மொத்தமாக அமைக்கப்பட்டுள்ள 80 கற்களுக்கும் மையமாக சிறிய படுக்கை வசம் கொண்ட கல் அமைந்துள்ளது. அக்கல்லில் விண்மீன்களைக் குறிக்கும் வகையில் வரைபடம் ஒன்றும் வரையப்பட்டுள்ளது.  அக்கற்களின் நிறத்தை வைத்துப் பார்க்கும்போது கிருஷ்ணா நதியிலிருந்து எடுத்து வரப்பட்டு நடப்பட்டிருக்கலாம் என்கிறார்கள், வரலாற்று ஆய்வாளர்கள். ஆனாலும், அவை நடப்பட்டிருக்கும் விதத்துக்கான காரணத்தை ஆராய்ச்சியாளர்களால் கண்டறிய முடியவில்லை. அக்கற்களுக்கு அடியில் புதையல் இருப்பதாக நினைத்து தோண்டி, ஏமாந்தவர்களும் உண்டு. இதுபோல வானிலை தொழில்நுட்பங்களையும், நேரத்தையும் அறிய கற்களை வைத்து காலத்தைக் கணித்திருக்கிறார்கள், நம் முன்னோர்கள். அந்த கல்லுக்கான காரணம்கூட இன்று பெரும்பாலும் யாருக்கும் தெரிவதில்லை என்பதுதான் இங்கே வருத்தப்படக் கூடிய விஷயம். இப்படி பல சிறப்புவாய்ந்த மண்ணில்தான், இன்று சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பம் இருந்தும், அணுஉலையை எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கிறோம். https://www.vikatan.com/oddities/miscellaneous/130208-a-stone-located-in-vellore-that-helped-our-ancestors-to-check-time