Sign in to follow this  
உடையார்

ஸ்ரீலங்காவில், கொரோனாவை பரப்பிய நபரே கொரோனாவால் உயிரிழப்பு!

Recommended Posts

கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஸ்ரீலங்காவில் உயிரிழந்த 7ஆவது நபர் தொடர்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இவர் கொழும்பு - மவுண்ட்லவனியாவைச் சேர்ந்த உம்ரித் ஹாஜியார். வயது 48 ஆகும். களுத்துறையைச் சேர்ந்த இவர் தற்போது கொழும்பில் வசித்து வருகின்றார். இவர் பிரபலமான இரத்தினக்கல் வியாபாரி ஆவார்.

கொரோனா அச்சம் ஏற்பட்டதை அடுத்து தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் குறித்த தம்பதிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த தம்பதிகளில் ஒருவரே நேற்று உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இவர் அண்மையில் ஜேர்மனிக்குச் சென்று வந்துள்ளார். இவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வீட்டுத்தனிமைப்படுத்தலில் இருக்க உத்தரவிடப்பட்டு இருந்தது.

எனினும் அவர் அதை பொருட்படுத்தவில்லை. தனியார் வைத்தியசாலையில் பரிசோதனை செய்திருந்தார்.

இந்த தகவல் தெரிந்ததும் சுகாதார அதிகாரிகளும், புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளும், இவரை அடையாளம் காண பெரும் பிரயத்தனம் செய்தனர்.

பெரும் முயற்சியின் பின்னரே தம்பதியினர் அடையாளம் காணப்பட்டனர்.

இதையடுத்து கொரோனா தொற்றுடன் பொறுப்பற்று திரிந்த இவர்கள் மீது கொரோனாவை பரப்பினர் என பொலிஸார் நீதிமன்றத்தில் வழக்கும் பதிவு செய்தனர்.

மார்ச் 2ஆம் திகதியளவில் ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர்களில் ஒருவர் நேற்று உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

 

https://www.ibctamil.com/srilanka/80/140848?ref=imp-news

 

Share this post


Link to post
Share on other sites

 அப்ப  சொறிலங்காவில் வேலைசெய்ய்யும் சைனீஸ் காரர்களால் கோரனோ  வரவில்லையாம் நம்புங்கள் மக்களே .

 

Share this post


Link to post
Share on other sites
53 minutes ago, உடையார் said:

இவர் கொழும்பு - மவுண்ட்லவனியாவைச் சேர்ந்த உம்ரித் ஹாஜியார். வயது 48 ஆகும். களுத்துறையைச் சேர்ந்த இவர் தற்போது கொழும்பில் வசித்து வருகின்றார். இவர் பிரபலமான இரத்தினக்கல் வியாபாரி ஆவார்.

கொரோனா அச்சம் ஏற்பட்டதை அடுத்து தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் குறித்த தம்பதிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த தம்பதிகளில் ஒருவரே நேற்று உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இவர் அண்மையில் ஜேர்மனிக்குச் சென்று வந்துள்ளார். இவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வீட்டுத்தனிமைப்படுத்தலில் இருக்க உத்தரவிடப்பட்டு இருந்தது.

இந்த,  உம்ரித் ஹாஜியார்..... தான், 
ஜேர்மனியிலும்...  கொரோனாவை பரப்பிய ஆள் என்று எனக்கு சந்தேகமாக இருக்கு. 😧

Share this post


Link to post
Share on other sites
6 hours ago, பெருமாள் said:

 அப்ப  சொறிலங்காவில் வேலைசெய்ய்யும் சைனீஸ் காரர்களால் கோரனோ  வரவில்லையாம் நம்புங்கள் மக்களே .

 

இத்தாலி,ஸ்பேயின்,அமேரிக்கா போன்ற நாடுகளில் இருந்து வந்தவர்களால் தான் கொரானா வந்தது....சைனீஸ்காரன் அதற்கான மருந்துகளை தந்து உதவுகிறான்....

Share this post


Link to post
Share on other sites

7 ஆவது நபரின் சடலம் தகனம்

கொரோனா தொற்றினால் நேற்று (08) உயிரிழந்த 7 ஆவது நபரின் இறுதிக் கிரியைகள் இன்று (09) கொட்டிகாவத்தை பொது மயானத்தில் நடைபெற்றன.

44 வயதுடைய குறித்த நபர், கல்கிஸ்சை பகுதியைச் சேர்ந்த மாணிக்கக்கல் வியாபாரியாவார். ஜெர்மன் சென்று நாடு திரும்பிய பின்னரே, குறித்த நபர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளாரென, சுகாதாரப்  பிரிவு தெரிவித்துள்ளது. 

http://www.tamilmirror.lk/செய்திகள்/7-ஆவது-நபரின்-சடலம்-தகனம்/175-248271

Share this post


Link to post
Share on other sites
10 hours ago, பெருமாள் said:

 அப்ப  சொறிலங்காவில் வேலைசெய்ய்யும் சைனீஸ் காரர்களால் கோரனோ  வரவில்லையாம் நம்புங்கள் மக்களே .

 

சைனீஸ்காரங்க பரப்பின வைரஸ் தொற்று கணக்கில வராது. அவங்களும் ராஜபக்ஸாக்களும் ஒன்னுக்குள்ள ஒன்னு ஆச்சே!

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this