Jump to content

கொரோனா வைரஸ் மனிதர்களின் ஆழ்மனதில் உண்டாக்கியுள்ள மாற்றம் என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா வைரஸ் மனிதர்களின் ஆழ்மனதில் உண்டாக்கியுள்ள மாற்றம் என்ன?

கொரோனா வைரஸ் அச்சம் நமது உளவியலை எப்படி மாற்றியமைக்கும்?Getty Images

தொற்றும் தன்மையுடைய இந்த நோயின் அச்சம் சாதாரண உரையாடல்களில் நமது உளவியல் ரீதியிலான செயல்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தி, எதிர்பாராத வழிகளில் செயல்பட வைக்கும் என்று அறிவியல் எழுத்தாளர் டேவிட் ராப்சன் கூறியுள்ளார். இவர் மனித மூளை, உடல் மற்றும் நடத்தை போக்கு பற்றி தீவிரமாக கவனித்து வருபவர்.

ஒரு நோயைப் பற்றிய அச்சம் நமது சிந்தனையை அபூர்வமாகத்தான் இந்த அளவுக்குப் பாதிக்கும். கடந்த சில வாரங்களாக, ஒவ்வொரு செய்தித்தாள்களிலும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று குறித்து முன்பக்கத்தில் செய்திகள் வருகின்றன; வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அடுத்தடுத்து, சமீபத்திய மரண எண்ணிக்கை குறித்து செய்திகள் சொல்கிறார்கள்; சமூக ஊடக தளங்களில் பயமுறுத்தும் புள்ளி விவரங்கள், நடைமுறை ஆலோசனை அல்லது நகைப்புக்குரிய பல விஷயங்கள் பரவிக் கொண்டிருக்கின்றன.

மற்றவர்கள் ஏற்கெனவே செய்தி அளித்துள்ளபடி, தொடர்ச்சியான இந்த செய்தித் தாக்குதல்கள் பதற்றத்தை அதிகரிக்கும், அது மன ஆரோக்கியத்தை உடனடியாக பாதிக்கும். ஆனால் தொடர்ச்சியான அச்சுறுத்தல் என்பது, அதிக வஞ்சகத்தன்மை கொண்டது, நமக்கு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தும். 

நோய் மற்றும் அச்சம் குறித்த தகவல்கள் காரணமாக நாம் மரபுகளை அதிகம் நம்பத் தொடங்கி இருக்கிறோம், இயற்கைக்கு மாறுபாடான நிலை குறைந்து வருகிறது. நமது நன்னெறிப்படியான தீர்ப்புகள் கடினமாக மாறியுள்ளன. நமது சமூக மனப்போக்குகள் அதிகம் பழமைவாதமாக இருக்கின்றன. குடியேற்றம் அல்லது பாலியல் சுதந்திரம் மற்றும் சமத்துவம் பற்றிய விஷயங்களைப் பேசும்போது இது மாதிரி நடக்கிறது. தினமும் இந்த நோயைப் பற்றி நினைவுபடுத்திக் கொண்டிருப்பது, நமது அரசியல் சார்பு நிலையிலும் மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

நோய்த் தொற்று போன்ற சூழ்நிலை பற்றி சிந்திப்பது கூட, இயற்கைக்கு முரண்பாடான நிலையைவிட, மரபுவழி முறைக்கு ஆதரவான மனநிலையை ஏற்படுத்துகிறது.Getty Images

அந்நிய நாட்டவர் மீதான வெறுப்பு அல்லது இனவெறி நிகழ்வுகள் அதிகரித்து வருவதாக சமீபத்திய தகவல்கள் தெரிவித்திருப்பது, இதன் முதலாவது அறிகுறியாக இருக்கலாம். ஆனால் அறிவியல் ஆராய்ச்சியின் கணிப்புகள் உண்மையாக இருக்குமானால், அவை இன்னும் ஆழமான சமூக மற்றும் உளவியல் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

நடத்தை சார்ந்த நோய் எதிர்ப்பாற்றல்

பெரும்பாலான மனித உளவியலைப் போல, இந்த நோய்க்கான எதிர்வினைகள் வரலாற்றுக்கு முந்தைய சூழ்நிலையில் புரிந்து கொள்ளப்பட வேண்டும். நவீன மருத்துவம் தோன்றுவதற்கு முந்தைய காலத்தில், தொற்றும் தன்மையுள்ள நோய்கள் நாம் உயிர்வாழ்வதற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருந்தன. 

புதிதாக ஊடுருவல் செய்து உள்ளே நுழையும் நோய்க் கிருமிகளைக் கண்டறிந்து, தாக்கி அழிக்கும் அற்புதமான வல்லமை நமது நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு உண்டு. துரதிருஷ்டவசமாக, அந்த செயல்பாடு நடைபெறும்போது நாம் தூக்கமாக, சோம்பலாக உணர்வோம் - அதாவது நோயுற்ற நமது முன்னோர்களால் வேட்டையாடுதல், ஒன்று கூடுதல் அல்லது குழந்தைகள் வளர்ப்பு போன்ற அத்தியாவசியப் பணிகளில் ஈடுபட முடியாமல் இருந்தார்கள்.

பல மில்லியன் ஆண்டுகளாக நமது பரிணாம வளர்ச்சியை தொற்றும் தன்மையுள்ள நோய்கள் வடிவமைத்து வருகின்றன. உடல் ரீதியாகவும் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. 

தொற்றும் தன்மையுள்ள நோய் குறித்த அச்சம் நம்மை மரபு வழி செயல்களில் அதிக நம்பிக்கை கொண்டவர்களாக, இயற்கைக்கு முரண்பட்டவற்றை அதிகம் ஏற்றுக் கொள்ளாதவர்களாக ஆக்கியுள்ளது. நமது நெறிசார்ந்த கணிப்புகள் கடுமையானதாகவும், பாலியல் செயல்பாடுகள் அதிகம் பழமைவாதத் தன்மை கொண்டதாகவும் மாறியுள்ளன.

நோயுற்றிருப்பது என்பதும் கூட உடல் ரீதியில் அதிக செலவை ஏற்படுத்தும். உதாரணத்திற்கு, காய்ச்சலின்போது நோய் எதிர்ப்பாற்றல் செம்மையாக செயல்பட உடல் வெப்பம் அதிகரிக்க வேண்டியது அவசியம். ஆனால் இது உடலின் சக்தி பயன்பாட்டில் 13 சதவீதத்தை எடுத்துக் கொள்கிறது. 

பல மில்லியன் ஆண்டுகளால நமது பரிணாம வளர்ச்சியை தொற்றும் தன்மையுள்ள நோய்கள் வடிவமைத்து வருகின்றன. உடல் ரீதியாகவும் மாற்றங்களை ஏற்படுத்துகிறது.Getty Images

போதிய உணவு கிடைக்காத நிலையில், அது பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும். ``நோயுற்ற நிலையில், இந்த அற்புதமான நோய் எதிர்ப்பு மண்டலம் உண்மையான செயல்பாட்டை எட்டுவது என்பது உண்மையில் செலவுபிடிக்கக் கூடியது'' என்று வான்கூவரில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மார்க் ஸ்ச்சல்லெர் கூறுகிறார். ``அது ஒரு வகையான மருத்துவக் காப்பீட்டைப் போன்றது. அந்த வசதி இருப்பது நல்லது. ஆனால் அதைப் பயன்படுத்தும் போது துன்புறுத்துவது போல தோன்றும்.''

முதலில் நோய்த் தொற்று ஆபத்து வாய்ப்பை குறைக்கக் கூடிய எதுவாக இருந்தாலும், உயிர்வாழ்வதற்கான தெளிவான ஒரு சாதகமான சூழ்நிலையைக் கொண்டதாக இருக்க வேண்டும்.

அதற்காக நாங்கள் ஆழ்மன உளவியல் செயல்பாடுகளை உருவாக்கியுள்ளோம். அதை ஸ்ச்சல்லெர் ``நடத்தைசார் நோய் எதிர்ப்பு முறைமை'' என்று குறிப்பிடுகிறார். பாதிப்பை ஏற்படுத்தும் நோய்க் கிருமிகளுடன் தொடர்பில் வருவதற்கான வாய்ப்பைக் குறைப்பது முதல்நிலை தற்காப்பு விஷயமாகக் கருதப்படுகிறது.

நடத்தைப் போக்கு நோய் எதிர்ப்பு முறைமையில் மிகவும் வெளிப்படையான அம்சங்களில் ஒன்றாக இருப்பது வெறுப்பான எதிர்வினை செயல்பாடு. கெட்ட அல்லது சுத்தமற்றதாக நாம் கருதும் உணவை நாம் புறக்கணிக்கும்போது, ஆழ்மன செயல்பாட்டின் மூலம், நோய் ஏற்படுத்தும் கிருமிகளை நாம் புறந்தள்ள முயற்சிக்கிறோம் என்று அர்த்தம். 

கெட்டுப் போனதில் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டோம் என்ற உணர்வே நமக்கு வாந்தியை ஏற்படுத்தி, கிருமி பாதிப்பு தொற்றி, வேரூன்றுவதற்கு முன்னதாக வெளியில் தள்ளிவிடுகிறது என வெறுப்பை ஏற்படுத்தும் பொருட்கள் குறித்து ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன. நமக்கு பின்னாளில் நோய்த் தொற்றை ஏற்படுத்தும் ஆபத்து வாய்ப்பு உள்ள சூழ்நிலைகளை நினைவில் கொள்வது போன்றவை நடைபெறும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

பெரிய கூட்டங்களாக சேர்ந்து வாழ்வதற்கு ஏற்ப பரிணாம வளர்ச்சி பெற்ற சமூக உயிரினங்களாக மனிதர்கள் இருப்பதால், நடத்தை சார்ந்த நோய் எதிர்ப்பு முறைமையும் மக்களுடனான பங்கேற்பில் மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது. நோய்த் தொற்று பரவுதலை குறைந்தபட்சமாக பார்த்துக் கொள்ளும் வகையிலும், ஆழ்மன அறிவுறுத்தலின்படியே சமூக இடைவெளி போன்ற விஷயத்தை கடைபிடிக்கும் வகையிலும் அது அமைந்துள்ளது.

இந்த எதிர்வினைகள் கடுமையானதாக இருக்கலாம். நமது முன்னோர்களுக்கு ஒவ்வொரு நோய்க்குமான குறிப்பிட்ட காரணங்கள் அல்லது அந்த நோய் பரவும் வழிமுறைகள் பற்றிய புரிதல் இல்லாமல் இருந்திருக்கலாம். ``நடத்தை சார்ந்த நோய் எதிர்ப்பு ஆற்றல் என்பது `நிகழ்ந்த பின் வருந்துவதைவிட பாதுகாப்பாக இருப்பது நல்லது' என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது'' என்று டென்மார்க்கில் உள்ள ஆர்ஹஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த லெனெ ஆரோயி கூறியுள்ளார். 

அதாவது எதிர்வினைகள் தவறுதலாக, பார்க்கப்பட்டு, பொருத்தமற்ற தகவல்களால் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம். அது இப்போதைய அச்சுறுத்தலுடன் எந்தவிதமான தொடர்பும் இல்லாத விஷயங்கள் போன்றவற்றில் நமது நெறிசார்ந்த முடிவு எடுத்தல் மற்றும் அரசியல் கருத்துகளை தீர்மானிப்பதில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

வெறுப்பு உணர்வு என்பது நமக்கு நோயை ஏற்படுத்தும் விஷயத்தை தவிர்க்கும் ஒரு வழிமுறையாக நம்மிடம் பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது. கெட்டுப் போன உணவு அல்லது பானத்தை தவிர்ப்பதாக அது இருக்கலாம்.Getty Images

அனுசரித்துக் கொள் அல்லது விலகிச் செல்

கலாசார நடைமுறைகளுக்கு நமது பொதுவான நடத்தை போக்குகள் எப்படி இருக்கின்றன - அதை மதிக்காத மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை நாம் முதலில் பார்ப்போம்.

ஒரு நோய் குறித்த அச்சம் வரும்போது நமது மரபுகளுக்கு அனுசரித்து நடந்து கொள்ளும், மரியாதை கொடுத்து நடந்து கொள்ளும் போக்கு அதிகரித்து வருவதை பல்வேறு சோதனைகள் காட்டியுள்ளன. ஸ்ச்சல்லெர் முதலில் பங்கேற்பாளர்களை நோய்த் தொற்று அச்சுறுத்தல் நிலைக்கு பழக்கப்படுத்தினார். 

இதற்கு முன்பு எப்போது நோயுற்றிருந்தீர்கள் என்று விவரிக்கச் சொல்லி, பல்வேறு பரிசோதனைகள் நடத்தி அவர்கள் எந்த அளவுக்கு அனுசரணையாக இருக்கிறார்கள் என்பதை மதிப்பீடு செய்தார். அதில் ஒரு பரிசோதனையில், பல்கலைக்கழக தரமதிப்பீட்டு முறையில் ஒரு மாற்றத்தை முன் மொழிந்தார். அந்த முன்மொழிவை அவர்கள் ஏற்கிறார்களா அல்லது மறுக்கிறார்களா என்று கேட்கப்பட்டது. ``ஏற்கிறேன்'' மற்றும் ``மறுக்கிறேன்'' என்று குறிக்கப்பட்ட குடுவைகளில் ஒன்றில் அவர்கள் ஒரு நாணயத்தைப் போட வேண்டும். நோயின் அச்சுறுத்தலுக்கு அதிகமாக ஆளாகியுள்ள நிலையில் எல்லோருமே மந்தைகள் போல செயல்பட்டனர். 

கொரோனா வைரஸ் எந்த அளவுக்கு நமது மன நிலைகளைப் பாதிக்கிறது என்பதற்கான ஆதாரப்பூர்வமான தகவல் எதுவும் நம்மிடம் இல்லைGetty Images

அதிக நாணயங்கள் இருந்த குடுவையிலேயே மற்றவர்களும் போட்டனர். தங்களுடைய சொந்த எண்ணத்தின் அடிப்படையில் முடிவு செய்வதைக் காட்டிலும், பெரும்பாலானவர்கள் எடுத்த முடிவின் பக்கம் சாய்பவர்களாக அவர்கள் இருந்தார்கள்.

அவர்களுக்குப் பிடித்தமானவர்கள் என்பது போன்ற கேள்விகள் கேட்டபோது, நோயுறுதல் பற்றிய கவலையில் இருப்பவர்களும் ``பழங்கால'' அல்லது ``பாரம்பரிய'' நபர்களைத்தான் குறிப்பிட்டார்கள். ``படைப்பாற்றல் மிகுந்த'' அல்லது ``கலைஞானம் மிகுந்த' என்பனவற்றில் குறைவான பற்றுதலே கொண்டிருந்தனர். ஒரு தொற்றும் தன்மையான நோய் ஆபத்து இருக்கும்போது புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் புதுமை சிந்தனைக்கான தாராள சிந்தனைக்கான அறிகுறிகளும்கூட குறைத்தே மதிப்பிடப்படுகின்றன. 

வெளிப்படையான கேள்விகள் பட்டியல்களில், ``சமூக நடைமுறைகளை மீறுவது துன்பகரமான, எண்ணிப் பார்த்திராத பின்விளைவுகளை ஏற்படுத்தும்'' என்பது போன்ற கேள்விகளுக்கு பெரும்பாலும் ஒப்புக்கொள்கிறேன் என்ற பதிலை அளித்தார்கள்.

இப்போது நாம் எதிர்கொள்ளும் தொலைக்காட்சி அல்லது ஆன்லைன் கவரேஜ்களில் இருந்து மாறுபட்டதாக இவர்கள் இருந்தார்கள். ஆனால் Outbreak என்ற திரைப்படத்தின் காட்சிகளைக் கொண்டு ஆய்வுக்குரியவர்களின் மனநிலையை ஹாங்காங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தங்களுக்கு உகந்தவாறு பக்குவப்படுத்தினர். 

இன்றைய காலக்கட்டத்தின் செய்திகளைப் போன்றவையாக அந்த காட்சி அமைப்புகள் இருந்தன; நோய்த் தொற்று குறித்து உணர்வைத் தூண்டும் வகையிலான படங்கள், இயற்கைக்கு முரணாக செயல்படுதல் அல்லது எதிர்த்து செயல்படுதல் என்பதைக் காட்டிலும், அனுசரணையாக செல்லுதல் மற்றும் பணிந்து செல்வது ஆகியவற்றுக்கு அவர்கள் அதிக மதிப்பு அளிப்பது அதில் தெரிய வந்தது.

அறம்சார் விழிப்புநிலை

நடத்தை சார்ந்த நோய் எதிர்ப்பு முறைமை நமது சிந்தனைகளில் இதுபோன்ற மாற்றத்தை ஏன் ஏற்படுத்த வேண்டும்? நம்மால் உணவு தயாரிக்க முடியக் கூடிய வாய்ப்பு, சமூக தொடர்புகளை ஏற்றுக் கொள்ளும் சூழ்நிலை, மனிதக் கழிவுகளை அகற்றும் முறைகள் போன்ற உள்ளார்ந்த சமூக விதிமுறைகள், நோய்த் தொற்று ஆபத்தைக் குறைக்க உதவும் என்று ஸ்ச்சல்லெர் கூறுகிறார். 

``மனிதகுல வரலாறு முழுக்க, நோய்களை விலக்கி வைக்கும் வகையிலான இதுபோன்ற நடைமுறைகள் மற்றும் சம்பிரதாயங்கள் நிறையவே இருந்துள்ளன'' என்று ஸ்ச்சல்லெர் கூறுகிறார். ``அந்தஅந்த நடைமுறைகளை அனுசரித்து நடந்து கொண்டவர்கள் பொது சுகாதாரத்திற்கு சேவையாளர்களாகவும், விதிகளை மீறியவர்கள் தங்களை ஆபத்து வாய்ப்புக்கு உள்ளாக்கிக் கொள்வதுடன், மற்றவர்களையும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளனர்.'' அதனால், தொற்றும் தன்மையுள்ள நோய் பரவும் சூழ்நிலையில் மரபுசார் விஷயங்களுக்கு அதிக மதிப்பு கொடுப்பது நல்லது என்றாகிறது.

தீவிர நோய்த் தாக்குதல் பரவும்போது நாம் ஏன் தார்மிக ரீதியில் விழிப்படைகிறோம் என்பதற்கான காரணத்தை விளக்குவதாகவும் அது இருக்கிறது. தொற்றும் தன்மையுள்ள ஒரு நோயைப் பார்த்து நாம் அஞ்சும்போது, விசுவாசத்தை மீறுவது தொடர்பாக (ஒரு நிறுவனத்தைப் பற்றி ஓர் அலுவலர் தவறாகப் பேசுவது போன்ற) முடிவு எடுப்பதில் நாம் கடுமையாக இருக்கிறோம் அல்லது அதிகாரவர்க்கத்தில் உள்ள (ஒரு நீதிபதி போன்றவர்) ஒருவர் மதிக்கத் தவறியதை நாம் பார்க்கும்போது அப்படி கடுமையாக இருக்கிறோம். 

 

நோயின் பரவல் தன்மைக்கும் அந்தக் குறிப்பிட்ட சம்பவங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால், மரபுகளை மீறுவதால், நோய்த் தடுப்புக்கான விதிகளையும் அவர் மீறக் கூடும் என்ற அறிகுறியை அவர் உருவாக்கிவிடுகிறார் என்று ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.

நோயுறுதல் என்பது குறித்து லேசாக நினைவூட்டினாலும் நமது மனப்போக்கில் மாற்றம் ஏற்படுகிறது. கிருமி நாசினிக்கு அருகில் நில்லுங்கள் என்று கேட்டுக் கொண்டாலும்கூட, பாரம்பரியம் மற்றும் மரபுகளுக்கு அதிக மதிப்பைக் காட்டும் வகையிலேயே அவர்கள் நடந்து கொள்கிறார்கள்.

அதே ஆய்வில், கைகளைக் கழுவுங்கள் என்று நினைவூட்டல் செய்தபோது, மரபுவழியல்லாத பாலியல் நடத்தை போக்குகள் குறித்து அதிகமாக கருத்து தெரிவித்தது தெரிய வந்தது. குழந்தைப் பருவத்தில் பிடித்தமானதாக இருந்த கரடி பொம்மையை வைத்துக் கொண்டு சுயஇன்பம் காணும் பெண்களை மன்னிக்க முடியாது என்பது போல அல்லது தங்களுடைய பாட்டிமார்களில் ஒருவரின் படுக்கையில் ஒரு தம்பதியினர் உறவு கொள்வதை மன்னிக்க முடியாத விஷயம் போல கருதுகிறார்கள்.

வெளியாட்கள் குறித்த அச்சம்

நமது சமூக குழுவுக்குள்ளேயே நம்மை கடினமாக முடிவு எடுப்பவராக்கியதுடன், இந்த நோயின் அச்சுறுத்தல் நம்பிக்கையில்லாத புதியவர்களையும் நமக்கு அறிமுகம் செய்யும். நீங்கள் காதலருடன் வெளியில் செல்வதாக இருந்தால் அது ஒரு கெட்ட செய்தி. நமக்கு நோய் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் இருந்தால், புதியவர்கள் பற்றி எங்களுக்கு மோசமான எண்ணங்கள்தான் ஏற்படுகின்றன என்று,ஆன்லைன் குறிப்புகள் மற்றும் நேரடி சந்திப்புகள் பற்றி ஆய்வு செய்த கனடாவைச் சேர்ந்த மெக்கில் பல்கலைக்கழகத்தின் நட்சுமி சவடா நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஈர்ப்பு குறைவாக இருப்பவர்கள் கடினமானவர்கள் என்று தவறாக கணிக்கப்படுவது வழக்கமாகிவிட்டது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. அநேகமாக வீட்டில் இருப்பவரின் தோற்றத்தில் இருக்கும் அந்த உருவம், நோயுற்ற தோற்றத்தைத் தருவதாக இருக்கலாம்.

கோப்புப்படம்Getty Images

நமது அவநம்பிக்கை மற்றும் சந்தேகம் அதிகரித்தால், வெவ்வேறு கலாச்சார பின்னணிகளைச் சேர்ந்த மக்களுக்கு நாம் அளிக்கும் பதில்களையும் மாற்றி அமைக்கும். ஒத்திசைவு இல்லாத நிலையின் காரணமாக இந்த அச்சம் ஏற்பட்டிருக்கலாம் என்று ஸ்ச்சல்லெர் கூறுகிறார். 

கடந்த காலத்தில், நமது குழுவுக்கு வெளியில் இருக்கும் மக்கள், அவர்களை நோய்த் தாக்குதலில் இருந்து பாதுகாப்பதற்குத் தேவையான குறிப்பிட்ட நடைமுறைகளைப் பின்பற்றாதவர்களாக இருக்கலாம். எனவே அவை காரணம் இல்லாமலோ அல்லது வேண்டுமென்றோ நோய் பரப்புவதாக இருக்கலாம் என்று நாம் அச்சப்பட்டோம். ஆனால் இன்றைய காலகட்டத்தில், அது பாரபட்சம் காட்டுவதாக, இன ஒதுக்கல் செய்வதாக குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக்கிவிடும்.

உதாரணமாக, நோய் குறித்த அச்சம் குடிபெயர்வு குறித்து மக்கள் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்று ஆரோயி கண்டறிந்துள்ளார். நடத்தைசார் நோய் எதிர்ப்பு முறையின் `` நிகழ்ந்த பின் வருந்துவதைவிட பாதுகாப்பாக இருப்பது நல்லது '' என்ற தத்துவத்தின் அங்கமாக இது உள்ளது என்று அந்தப் பெண்மணி குறிப்பிடுகிறார். ``அது தவறான கருத்து விளக்கம்.'' பரிணாம வளர்ச்சி அடைந்த மனம் நவீன காலத்தைய பன்முக கலாச்சாரம் மற்றும் பன்முக இனத்தவர் வாழும் சூழ்நிலையை சந்திக்கும் போது அது நிகழும். நமது பரிணாம வரலாற்றில் இது அடிக்கடி நிகழும் நிகழ்வு அல்ல'' என்று அவர் கூறுகிறார்.

கோவிட்-19-ஐ வெற்றி கொள்வது

நடத்தைசார் நோய் எதிர்ப்பு முறைமையின் தாக்கம் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடுகிறது; எல்லோருக்கும் ஒரே மாதிரியான அளவில் தாக்கம் இருக்காது. ``நோய் தாக்க அதிக வாய்ப்புள்ளதாக தாங்கள் கருதும் விஷயங்களில் சிலர் பலமான கடினமான முடிவுகளை எடுக்கலாம்'' என்று ஆரோயி கூறுகிறார். ஏற்கெனவே சமூக நடைமுறைகளை அதிகம் மதித்து நடப்பவர்கள் மற்றும் சாதாரணமானவர்களைவிட வெளியாட்கள் வருகையை அதிகம் நம்பாதவர்கள், நோய் தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பவர்கள் வருகையை நம்பாதவர்கள், தங்களுடைய நிலைப்பாட்டை இன்னும் கடினமாக்கிக் கொள்வார்கள்.

கொரோனா வைரஸ் எந்த அளவுக்கு நம்மில் மன பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதற்கான தகவல் எதுவும் இதுவரையில் நம்மிடம் இல்லை. ஆனால் நடத்தைசார் நோய் எதிர்ப்பு முறைமையின் எழுத்துபூர்வமான கருத்துகளின்படி பார்த்தால், அப்படி நடக்க வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது. சமூக போக்குகளில் பெருமளவு மாற்றம் ஏற்படுவதைக் காட்டிலும், மக்கள் மத்தியில் ஒட்டுமொத்த கருத்தாக்கத்தில் கணிசமான மாற்றம் இருக்கலாம் என்று டோரண்டோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த யோயெல் இன்பார் கூறுகிறார்.

 

2014 இபோலா நோய்த் தொற்று காலத்தில் சமூக மாற்றத்துக்கான சில ஆதாரங்களை தாம் கண்டதாக அவர் குறிப்பிடுகிறார். அது சர்வதேச செய்தியை உருவாக்குவதாக இருந்தது: 200,000க்கும் மேற்பட்டவர்களிடம் நடத்திய ஆய்வில், ஆண் ஒருபாலுறவினர் பற்றிய வெளிப்படையான கருத்துகள் கொஞ்சம் குறைந்திருந்தது. ``நோய் அச்சுறுத்தல்கள் பற்றி மக்கள் நிறைய படிக்கும் சூழ்நிலையில், அது இயல்பான ஒரு பரிசோதனை. அது மனப்போக்குகளை சிறிது மாற்றி இருப்பது போல தோன்றுகிறது'' என்று அவர் குறிப்பிடுகிறார்.

அமெரிக்காவில் தேர்தல்கள் வரவுள்ள நிலையில், இவற்றில் ஏதாவது ஒரு விஷயம் வெவ்வேறு வேட்பாளர்கள் அல்லது சில கொள்கைகள் பற்றி அவர்களின் கருத்துகளில் ஏதும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது இயல்பான கேள்வியாக இருக்கிறது. அது முக்கியமானதாக இருக்குமா என்பது சந்தேகமே என்றாலும், அந்த அம்சங்களுக்கு சிறிதளவே முக்கியத்துவம் இருக்கும் என்று ஸ்ச்சல்லெர் கூறுகிறார். ``அதிக ஆழமான தாக்கங்கள் நடத்தைசார் நோய் எதிர்ப்பு முறைமையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால் சூழ்நிலையை சமாளிக்க அரசு அதிகாரிகள் எந்த அளவுக்கு ஒத்துழைக்கிறார்கள் அல்லது ஒத்துழைக்கவில்லை என்பதில் நேரடியாக அதிக பாதிப்பை ஏற்படுத்தும்'' என்று அவர் கூறுகிறார்.

தேசிய அளவிலான தேர்தல் முடிவுகளில் இந்த உளவியல் மாற்றங்கள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் போனாலும், கொரோனா வைரஸ் குறித்து நமது தனிப்பட்ட எதிர்வினைகளில் எந்த அளவுக்கு அது தாக்கத்தை ஏற்படுத்தும் என பார்ப்பது நல்லது. அனுசரனையான கருத்தை தெரிவிக்கிறோமா, மற்றவரின் நடத்தை குறித்து நாம் கருத்து உருவாக்குகிறோமா அல்லது பல்வேறு நோய்த் தடுப்புக் கொள்கைகளைப் புரிந்து கொள்ள முயற்சிக்கிறோமா என கவனிக்கலாம். 

நியாயமான வாதங்களின் அடிப்படையில் தான் நமது எண்ணங்கள் இருக்கின்றனவா என்று நமக்கு நாமே கேள்வி கேட்கலாம். அல்லது கிருமி கோட்பாடு உருவாதலுக்கு பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே பரிணாம வளர்ச்சியில் உருவாகி புதைந்திருந்த எண்ணங்களால் உருவாக்கப்பட்டதா என கேட்டுக் கொள்ளலாம்.

டேவிட் ராப்சன் The Intelligence Trap-ன் ஆசிரியர். நமது மிகவும் பொதுவான பகுத்தறிவுப் பிழைகளின் உளவியல் காரணங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் நமது முடிவெடுத்தல் திறனை மேம்படுத்துதல் குறித்து அந்தப் புத்தகத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. அவருடைய ட்விட்டர் தொடர்புக்கு @d_a_robson
 

https://www.bbc.com/tamil/science-52220081

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.