Jump to content

கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க பருத்தித்துறை வைத்தியசாலை அத்தியட்சகர் மறுப்பு


Recommended Posts

எஸ்.நிதர்ஷன்

கொரோனொ வைரஸ் தொற்று நோய் சிகிச்சையளிக்க பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் ஒத்துழைக்க மறுப்பதால், கொரோனோ அபாயம் நீங்கும் வரையில், குறித்த அத்தியட்சகரைப் பணியில் இருந்த நீக்கி, அவருக்குப் பதிலாக வேறு ஒருவரை புதிதாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வட மாகாண இணைப்பாளர் வைத்தியர் காண்டீபன் தெரிவித்தார்.

இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் உள்ள வைத்தியர்கள், குறித்த வைத்திய அத்தியட்சகர், தங்களுடன் சேர்ந்துச் செயலாற்றுவதற்கு ஒத்துழைக்க மறுப்பதாக, தமக்குக் கடிதம் அனுப்பியுள்ளதாகத் தெரிவித்தார்.

அதாவது, குறித்த வைத்திய அத்தியட்சகர், நோயாளிகள் உள்ளே வருகின்ற போது, அவர்களைப் பகுத்தாய்ந்து, பிரித்தறிந்து நோயாளிகளை ஏற்று நடைமுறைப்படுத்த தனக்கு கஷ்டம் என்று கூறுவதாகத் தெரிவித்த காண்டீபன், அதனால் அங்கு வருகின்ற நோயாளிகளைச் சரியான முறையில் பராமரிப்பதற்கு வைத்தியர்கள் மிகவும் கஷ்டப்படுவதாகவும் கூறினார்.

குறிப்பாக, அங்குள்ள வைத்தியர்கள், குழுவொன்றை அமைத்து அதனூடாகச் செயற்படுவதற்கும், அவ்வைத்தியர் மறுப்பு தெரிவிப்பதோடு, பல நிபந்தனைகளை விதிப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த அத்தியட்சகர், இதற்கு முன்பும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றிய போதும், அவருக்கு எதிராக பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டனவெச் சுட்டிக்காட்டிய அவர், பல்வேறுபட்ட பிரச்சினைகளை வைத்திய அதிகாரிகள் சங்கத்துக்கும் வைத்தியசாலைகளுக்கும் ஏற்படுத்தியிருந்தாரெனவும் சாடினார்.

ஆனாலும், அவருக்கு எதிராக இதுவரையில் எந்தவித ஒழுக்காற்று நடவடிக்கைகயும் எடுக்கப்படவில்லையெனத் தெரிவித்த அவர், இப்படியான அத்தியட்சகருடன் தொடர்ந்து வேலை செய்ய முடியாது என அங்குள்ள வைத்தியர்கள் தெரியப்படுத்தியதையடுத்து, அவரை தற்காலிகமாக பணியில் இருந்து நீக்கி, கொரோனொ நீங்கும் வரையில் வேறொரு சிறந்த வைத்திய அத்தியட்சகரை பருத்திதுறை ஆதார வைத்தியசாலைக்கு நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதெனவும் கூறினார்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/கொரோனாவுக்கு-சிகிச்சையளிக்க-பருத்தித்துறை-வைத்தியசாலை-அத்தியட்சகர்-மறுப்பு/71-248229

Link to comment
Share on other sites

48 minutes ago, ampanai said:

அங்குள்ள வைத்தியர்கள், குழுவொன்றை அமைத்து அதனூடாகச் செயற்படுவதற்கும், அவ்வைத்தியர் மறுப்பு தெரிவிப்பதோடு, பல நிபந்தனைகளை விதிப்பதாகவும் அவர் கூறினார்.

மனுஷனுக்கு என்ன மன உளைச்சலோ தெரியல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியானவர்கள் புனிதமான வைத்தியத்  தொழிலுக்கு வரக் கூடாது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ampanai said:

இந்த அத்தியட்சகர், இதற்கு முன்பும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றிய போதும், அவருக்கு எதிராக பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டனவெச் சுட்டிக்காட்டிய அவர், பல்வேறுபட்ட பிரச்சினைகளை வைத்திய அதிகாரிகள் சங்கத்துக்கும் வைத்தியசாலைகளுக்கும் ஏற்படுத்தியிருந்தாரெனவும் சாடினார்.

வைத்தியம் தெரியாத வைத்தியர் .

Link to comment
Share on other sites

13 hours ago, ampanai said:

வைத்திய அதிகாரிகள் சங்கத்துக்கும் வைத்தியசாலைகளுக்கும் ஏற்படுத்தியிருந்தாரெனவும் சாடினார்.

வைத்திய அதிகாரிகள் சங்கத்துக்கும் அவருக்கும் இடையிலான பிரச்சினைகள் கூட இந்த நிலைமைகளுக்கு காரணமாக இருக்கலாம்.

சில வைத்தியர்கள் நெல்லியடி போன்ற இடங்களிலுள்ள தனியார் வைத்தியசாலையிகளில் பணத்துக்கு வைத்தியம் பார்த்துக்கொண்டு தங்கள் நோயாளர்களுக்கு முன்னுரிமை கொடுத்து சில பரிசோதனைகளை அரச வைத்தியசாலைகளில் இலவசமாக செய்வதாக தெரிகிறது. அதற்கும் அந்த வைத்தியர்கள் பணம் அறவிடுகிறார்களா என்று தெரியவில்லை. சில வைத்தியர்களால் நோயாளர்கள் குறித்த தனியார் வைத்தியசாலைகளில் மட்டுமே மருந்துகளை (கூடிய விலை கொடுத்து வாங்க) வேண்டும் என நிர்பந்திப்பதாகவும் கூறுகிறார்கள். வெளியே உள்ள மருந்தகங்களில் குறித்த மருந்துகளின் விலை குறைவு எனவும் கூறுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ampanai said:

அவரை தற்காலிகமாக பணியில் இருந்து நீக்கி, கொரோனொ நீங்கும் வரையில் வேறொரு சிறந்த வைத்திய அத்தியட்சகரை பருத்திதுறை ஆதார வைத்தியசாலைக்கு நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதெனவும் கூறினார்.

சிறந்த முடிவு.

Link to comment
Share on other sites

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதி மற்றும் பிரதமரை ஏமாற்றியுள்ளது

 

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரை ஏமாற்றியுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சாதாரண மருத்துவர்களின் தொழிற்சங்கமே அன்றி தொற்று நோய்கள் தொடர்பான விசேட மருத்துவ நிபுணர்களின் சங்கம் அல்ல என ஒன்றின் தலைவர் மருத்துவர் ருக்ஷான் பெல்லன தெரிவித்துள்ளார்.

அரச மருத்துவ அதிகாரிகள் சஙகத்தினர், கொழும்பு தேசிய காய்ச்சல் மருத்துவமனை மற்றும் தொற்று நோய் தொடர்பான விசேட மருத்துவ நிபுணர்களின் தகவல்களை திருடிச் சென்று, ஜனாதிபதி மற்றும் பிரதமரை ஏமாற்றியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று நோயை ஒழிக்கும் பணிகளை தொற்று நோய் தொடர்பான விசேட மருத்துவ நிபுணர்களிடம் கையளித்து விட்டு, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் தமக்குரிய பணிகளை செய்ய வேண்டும் எனவும் ருக்ஷான் பெல்லன குறிப்பிட்டுள்ளார்.

https://www.tamilwin.com/politics/01/243122?ref=home-latest

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா சிகிச்சைக்கு மறுத்த வைத்தியர் குகதாசன் இடமாற்றம்!

கொரோனோ வைரஸ் தொற்று சிகிச்சை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க மறுத்த பருத்தித்துறை ஆதரார வைத்தியசாலை அத்தியட்சகருக்கு இன்று (13) சற்றுமுன் உடனடி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதுடன் அவர் மீதான விசாரணைக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

பருத்திதுறை ஆதார வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகராகக் கடமையாற்றி வந்த வைத்தியர் குகதாசன் வைத்திய சாலையின் ஏனைய வைத்தியர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என அங்கு கடமையாற்றும் வைத்தியர்களால் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்மைய குறித்த வைத்திய அத்தியட்சகரை உடனடியாக இடமாற்றி அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையிலையே குறித்த வைத்திய அத்தியட்சகர் சுகாதார சேவைகள் திணைக்களத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

இதன்காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் கடமையாற்றிய வைத்தியர் கமலநாதன் தற்காலிக அத்தியட்சகராக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கைகளையடுத்து நாளை (14) முன்னெடுக்கப்பட இருந்த போராட்டமும் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வட மாகாண இணைப்பாளர் வைத்தியர் காண்டீபன் தெரிவித்துள்ளார்.

 

https://newuthayan.com/கொரோனா-சிகிச்சைக்கு-மறுத/

 

Link to comment
Share on other sites

இவர் ஒரு கிறிஸ்தவராக இருக்க வேண்டும். அள்ளி வீசுங்கள் உங்கள் கருத்துக்களை.கொஞ்ச நாளைக்கு சுவாரஸ்யமாக இருக்கும்.

Link to comment
Share on other sites

பிரச்சினைகளை கிளப்புறத்துக்கு என்டே ஒரு கோஷ்டி கண்ணுக்க எண்ணையை விட்டு பாத்துக்கொண்டு இருக்கிறாங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, உடையார் said:

கொரோனா சிகிச்சைக்கு மறுத்த வைத்தியர் குகதாசன் இடமாற்றம்!

இந்நிலையிலையே குறித்த வைத்திய அத்தியட்சகர் சுகாதார சேவைகள் திணைக்களத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

இதன்காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் கடமையாற்றிய வைத்தியர் கமலநாதன் தற்காலிக அத்தியட்சகராக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.

இது... அவருக்கு கிடைத்த, பதவி உயர்வு போல் தெரிகிறதே.... :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முரண்டுபிடிக்கும் வைத்திய அத்தியட்சகர்

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் மருத்துவர் த.குகதாசன் மீது நிர்வாக முறைகேடுகள் தாெடர்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இவர் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மத்திய அரசாங்க உத்தரவுக்கமைய ஒழுக்காற்று விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு வசதியாக, விசாரணைகளில் அவரது தலையீடுகளை தவிர்ப்பதற்காகவும் உடனடியாக பொறுப்புக்களை பதில் வைத்திய அத்தியட்சகரிடம் கையளிக்குமாறு யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரால் இன்று (14) பணிக்கப்பட்டார்.

“எனினும் அவர் இன்று மாலை வரை பொறுப்புக்களை கையளிக்கவில்லை. இதனால் அவர் ஆவணங்களையும் சாட்சிகளையும் திரிபுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளாரோ என எமக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதனால் பொறுப்புக்களை பதில் பணிப்பாளர்  மருத்துவர் கமலநாதன் நாளை (15) காலை 8.30 மணிக்கு முன்பாக பொறுப்பேற்க வேண்டும்.

தவறும் பட்சத்தில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை மருத்துவ அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றில் ஈடுபடுவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும்”

இவ்வாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பருத்தித்துறை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 
 

https://newuthayan.com/பொறுப்புகளை-ஒப்படைக்க-தவ/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Vankalayan said:

இவர் ஒரு கிறிஸ்தவராக இருக்க வேண்டும். அள்ளி வீசுங்கள் உங்கள் கருத்துக்களை.கொஞ்ச நாளைக்கு சுவாரஸ்யமாக இருக்கும்.

உங்களுக்கு பொழுது போகலை என்றால் இப்படியா கருத்து எழுதுவது ?

 

Link to comment
Share on other sites

On 15/4/2020 at 05:40, பெருமாள் said:

உங்களுக்கு பொழுது போகலை என்றால் இப்படியா கருத்து எழுதுவது ?

 

பொழுது போக்கத்தானே இணைய தளம் இருக்குது। 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Vankalayan said:

பொழுது போக்கத்தானே இணைய தளம் இருக்குது। 

அட யாழ் இருக்கெண்டு சொல்லாமல் விட்டு விட்டீர்கள் ?😋

Link to comment
Share on other sites

16 minutes ago, பெருமாள் said:

அட யாழ் இருக்கெண்டு சொல்லாமல் விட்டு விட்டீர்கள் ?😋

நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்।

Link to comment
Share on other sites

’மக்களுக்கு உதவும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது’
க. அகரன்   / 2020 ஏப்ரல் 15 , பி.ப. 09:09 - 0      - 7


பேரிடர்க் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் சமூகக்கடமை, அனைவருக்கும் உள்ளதென்று தெரிவித்துள்ள வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம், இதனை அரசியல்வாதிகள் மட்டுமே செய்ய வேண்டியதில்லை என்றும் சமூகத்தின் மீது அக்கறையுள்ள ஒவ்வாரு பிரஜைக்கும் இந்த கடமையுள்ளதென்றும் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நாட்டு நிலைமை தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்த உலகையே ஆட்டம் காண வைத்துள்ள கொரணா வைரஸ் தாக்கத்தினால் உலகமே தனது சுழற்சியை இழந்ததுபோல நிற்கிறது. உலக வல்லரசுகளையே ஆட்டம்காண வைத்துள்ள இந்த நோயின் தாக்கத்தினால் எமது நாடும் பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் எமது நாட்டின் உன்னதமான சுகாதார சேவையுடன் இணைந்து ஏனைய அத்தியாவசிய சேவைகள் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவதால் பாதிப்புக்கள் கட்டுப்பாட்டிற்குள் இருப்பது ஓரளவு ஆறுதல் தருகின்றது.

கொறோனா வைரஸ் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள நோய்நிலை (கொவிட்-19) காரணமாக எல்லோரும் பலவகையிலும் பாதிக்கப்பட்டிருந்தாலும் அன்றாட உழைப்பில் குடும்பத்தை வழிநடத்திய பல குடும்பங்கள்இ மாற்றுத்திறனாளிகள்இ பெண் தலைமைத்துவக் குடும்பங்கள்இ ஆதரவற்ற முதியோர்கள், தொற்றா மற்றும் தொற்று நோய்களிற்காக நீண்டகால சிகிச்சை பெறுபவர்கள் என பலர் அன்றாட உணவு மற்றும் மருத்துவ தேவைகளிற்காக பல சிரமங்களை எதிர்கொள்கிறார்கள்.

அவர்களுடைய பிரச்சனைகளை இனம்கண்டு நடவடிக்கை எடுக்கவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருந்தாலும் எங்கள் அனைவருக்கும் அப்பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கான சமூகக்கடமை உள்ளதை யாரும் மறுக்கமுடியாது.

 அந்தவகையில் சமூகப்பங்காளி என்றவகையில் நான்  முடிந்தவரை என்னாலான  பங்களிப்பை விசேட  வேலைத்திட்டத்தினூடாக முன்னெடுத்துள்ளேன். குறிப்பாக இந்நோய்நிலையால் பாதிப்புற்று உணவுத்தேவை உடையவர்களிற்கு சமைக்காத உணவுப்பண்டங்களை (உலர்உணவு) விநியோகம் செய்யும் செயற்பாட்டில் கடந்த இருவாரங்களிற்கு மேலாக ஈடுபட்டுள்ளேன். வீட்டில் ஓய்வெடுத்துக்கொண்டு சமூக வலைத்தளங்களில் தங்கள் நேரத்தை செலவழிப்பதற்காக மற்றவர்களை வீணாக விமர்சிப்பவர்கள் ஒருபுறம் தங்களது கடமையை சிறப்புடன் செய்துகொண்டு இருந்தாலும் அவர்களை பொருட்படுத்தாது நாம் எமது பணியை சிறப்புற செய்வோம் என உறுதிகூறுகின்றோம். இதுவரை வவுனியா மாவட்டத்தில் வவுனியா பிரதேச செயலக பிரிவில் 1815 குடும்பங்களுக்கும்செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் 741 குடும்பங்களுக்கும், வவுனியா வடக்கில் 179 குடும்பங்களுமாக மொத்தமாக 2735  குடும்பங்களுக்கு எனது உதவித்திட்டங்கள் சென்றடைந்துள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இம் மனிதநேயப்பணிக்கு என்னுடைய தனிப்பட்ட பங்களிப்பிற்கு மேலாக பலர் உதவியிருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவிப்பதோடு உரிய பயனாளிகளை இனம்கண்டுகொள்வதற்கு உதவிய பிரதேச செயலாளர்கள்இ கிராமசேவை உத்தியோகத்தர்கள்இ சமூகமட்ட அமைப்புகள்இ தனிநபர்கள் இவை எல்லாவற்றிற்கும் மேலாக தமக்கு நோய்த்தொற்று அபாயம் உள்ளது என்பதை அறிந்தும் என்னுடன் களப்பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் இலங்கை தமிழரசுக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர்இ இளைஞர் அணித்தலைவர்இ உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள்இ தொண்டர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். இதேபோன்று எமது மாவட்டத்தில் இவ்வாறான சமூகப்பணிகளை முன்னெடுத்துவரும் அனைத்து தன்னார்வ தொண்டர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுதல்களை தெரிவித்துக்கொள்கின்றேன்

அதேவேளை நாம் உதவிக்கரம் நீட்டும்போது தவறவிடப்பட்டவர்களிடம் மன்னிப்பு கோருவதோடு உங்களிற்கான எனது பணி தொடரும் என தெரிவித்துக்கொள்கிறேன்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/மககளகக-உதவம-பறபப-அனவரககம-உளளத/71-248643

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.