Jump to content

கமலக்கண்ணனின் இறப்பில் நடந்தது என்ன - வெளிவந்த ஆதாரம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சொல்வதற்கு என்ன இருக்கிறது....

கீழே விழுந்தவர் தான் challenge பண்ணுகிறார் உள்ளே...

ஆனாலும்... விழுந்தவர் எழும்பவில்லை என்ற கவலையே இல்லாமல் சாகவாசமாக நடந்து போறார்...

உயிர் போவது தெரியாமல்.... அவரிலும் பிழை சொல்ல முடியாது. அது அவராகவும் இருந்திருக்கலாம்.... விதி.

ம்..ம்ம்ம்... கடவுளே... RIP 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பின்பக்கத்தால் பிடரி அடிபட வீழ்ந்து வெளிநாடுகளில் பலர் இறந்துள்ளார்கள். உடுத்த சாரம் தடக்கி, மேஸ்மெண்ட் படிகளில் வழுக்கி என வெவ்வேறு நிலமைகளில் சம்பவங்கள். இது அதில் ஒரு வகை.

கடைக்காரன் பாவம். அவனுக்கு தேவையில்லாத பிரச்சனையால் வேறு சோலிகள். கடையில் வேலை செய்யும் பிள்ளைகள் தள்ளிவிட்டவரை ஆத்திரப்பட்டு வெளியில் போகவேண்டாம் என்று கைகளைகாட்டி  அறிவுறுத்துவது வீடியோவில் தெரிகின்றது. அவருக்கு என்னவோ தன்மானம் விடவில்லை. இறந்தவருக்கு சவாலாக கடையைவிட்டு வெளியேறுகின்றார்.

நாங்கள் இந்தியன் ஆமியிடமும், சிறீ லங்கா அரசிடமும் நிவாரணம் வாங்கியபோதும், கிளாலியில் படகில் ஏறும்போதும், ஓமந்தை சோதனை சாவடிக்கு பாஸ் பெற்று செல்லும்போதும், கோயிலில் பிரசாதம் வாங்க வரிசையில் நின்று கைநீட்டும்போதும், பேருந்து, புகையிரதத்துக்கு காத்து நிற்கும்போதும் எப்படியான சூழ்நிலையிலும் ஒருவர் பின் ஒருவராக அணிவகுத்து நிற்கும்போது இடையில் ஆட்கள் நுழைவதை விரும்புவது இல்லை. இந்த குணம் வெளிநாடுகளுக்கு வந்தாலும் விட்டுபோகாது. ஏன் என்றால் எங்கள் மனிதசுபாவம் அப்படி. மேற்கண்ட சம்பவத்திலும் வரிசையில்  இடையில் புகுந்தது பிரச்சனையை உண்டு பண்ணியது என்று உள்ளது.

மனுசன் ஒன்லைனுக்கால் சாப்பாட்டை ஓடர் பண்ணி, கியூவில் சண்டையும் பிடித்து கடைசியில் வாங்கிய அந்த உணவை பசிதீற ருசித்து உண்ணும்முன்பே வாழ்க்கை போய்விட்டது.

நாங்கள் வழமையாக கூடுகின்ற இடங்களில் தள்ளுப்படும், நெஞ்சை நிமிர்த்தி வாக்குவாதம் செய்யும் சம்பவங்களில் ஒன்று சாவில் முடிந்துவிட்டது. ஆனால் இதை பார்த்தும் நாங்கள்  திருந்த மாட்டோம். எங்கள் திமிரை எங்கள் ஆட்களுக்குத்தானே நாங்கள் காட்டமுடியும். அங்கேதானே நமது பெருமை, கெளரவம் உள்ளது. இப்படியான ஒரு சம்பவம் வெள்ளைக்காரன் ஒருவனது கடையில் எம்மவர் அல்லாத வேறு சமூகத்தவர் மத்தியில் நடைபெற்று இருக்க வாய்ப்பு உள்ளதா?

வேறு என்னத்தை சொல்வது? அநியாய சாவு, ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விதி வலியது என்பது இதைத் தான் ...அவர் நல்லவராய் இருக்கலாம்...சாப்பாட்டை வாங்கிட்டு பேசாமல் போகாமல் கூட விதியையும் வா என்று கூப்பிட்டு கூட்டிப் போகிறார் ...ஆத்மா சாந்தியடையட்டும் 
 
இப்படியான கால கட்டத்திலும் அங்கு உணவங்கள் திறந்து வைத்து இருக்கிறார்களா ?...இங்கு "சம்பல்" எல்லாம் பூட்டு என்று சொன்னார்கள் 

Link to comment
Share on other sites

4 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

பின்பக்கத்தால் பிடரி அடிபட வீழ்ந்து வெளிநாடுகளில் பலர் இறந்துள்ளார்கள். உடுத்த சாரம் தடக்கி, மேஸ்மெண்ட் படிகளில் வழுக்கி என வெவ்வேறு நிலமைகளில் சம்பவங்கள். இது அதில் ஒரு வகை.

கடைக்காரன் பாவம். அவனுக்கு தேவையில்லாத பிரச்சனையால் வேறு சோலிகள். கடையில் வேலை செய்யும் பிள்ளைகள் தள்ளிவிட்டவரை ஆத்திரப்பட்டு வெளியில் போகவேண்டாம் என்று கைகளைகாட்டி  அறிவுறுத்துவது வீடியோவில் தெரிகின்றது. அவருக்கு என்னவோ தன்மானம் விடவில்லை. இறந்தவருக்கு சவாலாக கடையைவிட்டு வெளியேறுகின்றார்.

நாங்கள் இந்தியன் ஆமியிடமும், சிறீ லங்கா அரசிடமும் நிவாரணம் வாங்கியபோதும், கிளாலியில் படகில் ஏறும்போதும், ஓமந்தை சோதனை சாவடிக்கு பாஸ் பெற்று செல்லும்போதும், கோயிலில் பிரசாதம் வாங்க வரிசையில் நின்று கைநீட்டும்போதும், பேருந்து, புகையிரதத்துக்கு காத்து நிற்கும்போதும் எப்படியான சூழ்நிலையிலும் ஒருவர் பின் ஒருவராக அணிவகுத்து நிற்கும்போது இடையில் ஆட்கள் நுழைவதை விரும்புவது இல்லை. இந்த குணம் வெளிநாடுகளுக்கு வந்தாலும் விட்டுபோகாது. ஏன் என்றால் எங்கள் மனிதசுபாவம் அப்படி. மேற்கண்ட சம்பவத்திலும் வரிசையில்  இடையில் புகுந்தது பிரச்சனையை உண்டு பண்ணியது என்று உள்ளது.

மனுசன் ஒன்லைனுக்கால் சாப்பாட்டை ஓடர் பண்ணி, கியூவில் சண்டையும் பிடித்து கடைசியில் வாங்கிய அந்த உணவை பசிதீற ருசித்து உண்ணும்முன்பே வாழ்க்கை போய்விட்டது.

நாங்கள் வழமையாக கூடுகின்ற இடங்களில் தள்ளுப்படும், நெஞ்சை நிமிர்த்தி வாக்குவாதம் செய்யும் சம்பவங்களில் ஒன்று சாவில் முடிந்துவிட்டது. ஆனால் இதை பார்த்தும் நாங்கள்  திருந்த மாட்டோம். எங்கள் திமிரை எங்கள் ஆட்களுக்குத்தானே நாங்கள் காட்டமுடியும். அங்கேதானே நமது பெருமை, கெளரவம் உள்ளது. இப்படியான ஒரு சம்பவம் வெள்ளைக்காரன் ஒருவனது கடையில் எம்மவர் அல்லாத வேறு சமூகத்தவர் மத்தியில் நடைபெற்று இருக்க வாய்ப்பு உள்ளதா?

வேறு என்னத்தை சொல்வது? அநியாய சாவு, ஆழ்ந்த அனுதாபங்கள்.

இந்த சம்பவத்தில் வேறு இரு இனததவர் அல்லது ஒருவர் வேறு இனத்தவராக இருந்திருந்தால் இந்த மரணம் நிகழாமல் கூட இருந்திருக்கலாம். ஒருவர் மீது கைவைப்பது அல்லது கை ஓங்குவது உடல்ரீதியாக தாக்க எத்தனிப்பது குற்றம். என்பதை புரிந்திருப்பார்கள். இறந்தவர் தள்ளிவிட்டவரை நோக்கி தாக்கும் நோக்கிலேயே நடக்கின்றார் மற்றவர் தள்ளிவிட்டு செல்கின்றார்.  

எம்மவர்களுக்குள் தனகும் குணம் , பிரத்தியோகமான ஒரு ஈகோ ஒருவர் செயலை ஒருவர் ஏற்றுகொள்ள முடியாத நிலை இயல்பாக இருக்கின்றது. எம்மவர் இருவருக்குமிடையிலான பிரச்சனைக்கும் எம்மவர் ஒருவருக்கும் பிற இனத்தவருக்குமான பிரச்சனை இரண்டுக்கும் இடையில் ஏற்படும் அணுகுமுறை வேறுபடுகின்றது. எம்மவருக்குள் உணர்சிக் கொந்தளிப்பு அதிகம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.