குமாரசாமி

என்ரை லண்டன் மச்சானை ஒருக்கால் பேசி விடுங்கோ.

என்ரை லண்டன் மச்சானை ஒருக்கால் பேசி விடுங்கோ.  

29 members have voted

 1. 1. என்ரை லண்டன் மச்சானை ஒருக்கால் பேசி விடுங்கோ.

  • கலோ லண்டன்! என்ன சேட்டையோ?
  • குமாரசாமியை அமைதியாக இருக்க விடவும்.
  • லண்டன் மச்சானுக்கு காலம் சரியில்லை.
  • குமாரசாமி ஒரு தங்கப்பவுண். அவரை திட்டாதீர்கள்.
  • அண்ணை வீட்டு விலாசத்தை சொல்லு.வீட்டுக்கு கல்லு எறிவம்.
  • மைத்துனரே மரியாதை கொடுத்து மரியாதை வாங்க பழகவும்.


Recommended Posts

என்ரை லண்டன் மச்சானை ஒருக்கால் பேசி விடுங்கோ.

எல்லாருக்கும் வணக்கம்🙏🏿
நான் தனி திரி ஒண்டு திறக்க  முக்கிய காரணம் என்ரை லண்டன் மச்சான் 🤬.அவர் இப்பதான் வேலை வெட்டியில்லாமல் வீட்டுக்கை கிடக்கிறார். நான் முந்தியெல்லாம் மச்சானோடை அன்பாய் பண்பாய் கதைப்பம் எண்டு ரெலிபோன் எடுத்தால் அவருக்கு வெரி பிசியாம்.கிட்டத்தட்ட ரேமின் வைச்சு கதைக்கோணும் எண்டமாதிரி.நான் இப்ப அவரை கணக்கெடுக்கிறதும் இல்லை.:cool:

இப்ப அவர் வீட்டுக்கை கிடக்கிறார் எல்லோ? இரண்டு மூண்டு தரம் ரெலிபோன் எடுத்துட்டார் நான் கதைக்கேல்லை.எனக்கென்ன விசரே? அப்ப அவர் தங்கைக்காரியிட்டை உவன் அப்பிடி என்ன செய்யிறான் எண்டு விசாரிச்சிருக்கிறார். அப்ப அன்பு தங்கச்சியும் சொல்லியிருக்கு அவர் கொப்பியூட்டருக்கு முன்னாலை இருந்து எழுத்துக்கூட்டி ஏதோ எழுதிக்கொண்டிருக்கிறார் எண்டு.அப்ப அவர் சொல்லுறாராம் உந்த கண்ட பேஸ்புக்,டிவிட்டர் அதுகளுக்கை போறதுகள் எல்லாம் மண்டை பழுதானதுகள். உந்த ஒன்லைன்வளியை எழுதுறவை எல்லாம் லூசகள் எண்டு...தங்கச்சி வேறை சொல்லுது அண்ணை நல்லதுக்குத்தானே சொல்லுறாராம் 🙃

எல்லாத்தையும் விட்டுட்டு பேசாமல் ஒழுங்கான மனிசனாய் இரு எண்டு புத்திமதி வேறை எனக்கு சொல்லுறார்.😡

எனவே எனதருமை மக்களே! உங்கள் பொன்னான நேரத்தில் ஒரு நிமிடத்தை எனக்காக ஒதுக்கி எனது லண்டன் மச்சானை பேசி விட்டு அல்லது திட்டிவிட்டு செல்லவும்.

 • Like 4
 • Haha 9

Share this post


Link to post
Share on other sites

லண்டன் மச்சானுக்கு குரு மாற்றம், சனி மாற்றம் சரியில்லை.😂

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

லண்டன் மச்சானுக்கு கொரோனா ஒரு பார்சல்... விலாசம், போன் நம்பர் தந்தியல் எண்டால் டோர் டெலிவரி செய்யலாம்.

.😂

 

 அன்பு தங்கச்சியும் சொல்லியிருக்கு

You mean: பரிமளம்?

Edited by Nathamuni
 • Like 2
 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

மேலெயுள்ள தெரிவுகளில் "அண்ணை வீட்டு விலாசத்தை சொல்லு.வீட்டுக்கு கல்லு எறிவம்.." என்ற தெரிவு கு.சா வின் வீடு என எண்ணி அதை தெரிவு செய்துள்ளேன். ஆனால் கல்லெறிய அல்ல..!

ஏனெனில் இந்தாள் "பரிமளம்.. பரிமளம்" என இந்த வயதிலும் இங்கே உருகுது, கடிதங்கள் எழுதுது.. 'உண்மையிலேயே பரிமளம் அம்மணியுடன் தான் குடும்பம் நடத்துதா..?' என அறிந்து பரிசு குடுத்து, வாழ்த்த தான்..! vil-diamant.gif

அப்படி இல்லையெனில், 'ஆளோட திருகுதாளத்தை வீட்டம்மணிக்கு போட்டுக் குடுத்து, தினமும் நாலஞ்சு 'பூசை'களை assom.gifசாமிக்கு வாங்கிக் கொடுக்கோணும்' எனற நல்லெண்ணம்தான்..!! 😎

 • Like 1
 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

இது என்னங்கடாப்பா..?

தெரிவுகளை உருவாக்கி பதிந்த கு.சா, எல்லாவற்றுக்கும் புள்ளி குத்தியிருக்கிறார்..? :shocked::)

Share this post


Link to post
Share on other sites
36 minutes ago, ஈழப்பிரியன் said:

இப்ப பிளேன் ஓடினால் லண்டனில நிற்பேன்.

என்ன நண்பனுக்காக சண்டித்தனம் காட்டவோ 

Share this post


Link to post
Share on other sites

அண்ணை, நான் தெரிவு செய்ததைத்தான் நிறையபேர் தெரிவு செய்திருக்கினம் "மச்சானுக்கு நேரம் சரியில்லை". தெரிவுகள்  போதாது. "London மச்சான் நல்லதுக்குத்தான் சொல்லுகிறார்" போன்ற தெரிவுகளும் இருக்க வேண்டும். ஆனாலும், நீங்களே எல்லாவற்றையும் தெரிவு செய்திருப்பது, முடியவில்லை😃

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, ராசவன்னியன் said:

இது என்னங்கடாப்பா..?

தெரிவுகளை உருவாக்கி பதிந்த கு.சா, எல்லாவற்றுக்கும் புள்ளி குத்தியிருக்கிறார்..? :shocked::)

4 minutes ago, நீர்வேலியான் said:

அண்ணை, நான் தெரிவு செய்ததைத்தான் நிறையபேர் தெரிவு செய்திருக்கினம் "மச்சானுக்கு நேரம் சரியில்லை". தெரிவுகள்  போதாது. "London மச்சான் நல்லதுக்குத்தான் சொல்லுகிறார்" போன்ற தெரிவுகளும் இருக்க வேண்டும். ஆனாலும், நீங்களே எல்லாவற்றையும் தெரிவு செய்திருப்பது, முடியவில்லை😃

அது வேறை ஒண்டுமில்லை....எல்லாம் வேலை செய்யுதோ எண்டு பார்த்தனான்.
மைக் ரெஸ்ரிங் மாதிரி...😎

 

Share this post


Link to post
Share on other sites

இன்றைய காலகட்டத்தில் நாம் வன்முறையில் இறங்க கூடாது...அமைதிப்பேச்சுவார்த்தை மூலம் தான் தீர்வு காணவேண்டும்...அவரை வட்டமேசை மாநாட்டுக்கு வரச்சொல்லுங்கள் நான் பேச்சுவார்த்தைக்கு தலமை தாங்குகிறேன்...அண்ணனும், தங்கச்சியும்   கத்தி.,கரண்டி ,கல்லு ,பொல்லு போன்ற ஆயுதங்களை பேச்சுவார்த்தை முடியும் வரை தொடக்கூடாது

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, nilmini said:

என்ன நண்பனுக்காக சண்டித்தனம் காட்டவோ 

சும்மா சவுண்டு மட்டும் தான்.
பிரச்சனை என்றால் கடைசி விளையாட்டுத் தான்.(ஓட்டம்)

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites
34 minutes ago, putthan said:

..அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் தான் தீர்வு காணவேண்டும்...அவரை வட்டமேசை மாநாட்டுக்கு வரச்சொல்லுங்கள்...

 

Untitled.jpg

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

தோழர் , எதுவாக இருந்தாலும் கோரோனோ சீசன் முடிந்ததும் பார்த்து கொள்ளுவம்..👍

PEfwLz.gif

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Share this post


Link to post
Share on other sites

திருஷ்டி கழிக்க பின்பற்றப்படும் ...

குமாரசாமி அண்ணை  உங்கடை மச்சான்  வீட்டு வாசலில்....
பூசணிக்காயும், தேசிக்காயும்.... போட்டுட்டு வந்திட்டன்.
ஆரோ... செய்வினை செய்திட்டாங்கள் என்ற பயத்திலையே ஆளுக்கு காய்ச்சல்  வரப்போகுது.   :grin:

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, குமாரசாமி said:

அது வேறை ஒண்டுமில்லை....எல்லாம் வேலை செய்யுதோ எண்டு பார்த்தனான்.
மைக் ரெஸ்ரிங் மாதிரி...😎

 

இருந்தாலும் நீங்களே உங்களை தங்கப்பவுன்  என்று தெரிவுசெய்வதை  ஏற்றுக்கொள்ளமுடியவில்லை 

 • Haha 2

Share this post


Link to post
Share on other sites

எனக்கு நீதி நியாயம் முக்கியம் அதால யார் பெரிசா தருகினமோ அவைக்குத்தான் நான் சப்போட்.

Share this post


Link to post
Share on other sites

Nayagan Tamil Full Movie | Kamal Haasan | Karthika | Mani Ratnam ...

தங்கச்சி கொண்ணரிட்ட  சொல்லு அண்ணனை அமைதியாய் இருக்க விடும்படி....அண்ணன் பொங்கினால் அரிசி வேகாது, அவுஸ்காடு அனலாய் பற்றி எரியும், ஜப்பானில் எரிமலை வெடிக்கும்,கைலாஸாவில் கன்னிகள் கர்ப்பமாவர்.....!  👹

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, ஈழப்பிரியன் said:

இப்ப பிளேன் ஓடினால் லண்டனில நிற்பேன்.

ஓடாது என்ற தைரியம்தானே😂🤣

Share this post


Link to post
Share on other sites

நீங்கள் வேற லெவல் அண்ணை

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

கலோ.. பரிமளம் மச்சானா..? இங்காரும் உம்மட மச்சான் இஞ்ச கள்ளுக்கொட்டில்ல எங்களையும் குடிக்கவிடாமல் அட்டகாசம் பண்ணி போதையில உம்மள அசிங்க அசிங்கமா திட்டுரார்ய்யா..  

தான் இன்னும் யெங்கா இருக்கிறன் எண்டு உம்மளுக்கு பொறாமையாம்..

இப்ப லீவெண்டு மச்சான் கோப்பிறேசன் வாசல்லையே  பாய  போட்டு படுத்திருக்கிறார்..

குடிக்காமல் எத்தின நாளைக்கு இருக்கிறது..? மச்சாளிட்ட சொல்லி என்னெண்டு கேப்பியும்.. நாங்களும் ஓரளவிற்குதான் பொறுமை காக்க முடியும்..

டொக்!!

spacer.png

Edited by பாலபத்ர ஓணாண்டி

Share this post


Link to post
Share on other sites

அண்ணா ,இந்த கொரோனா பிரச்சனை எல்லாம் முடிந்த பின் லண்டனுக்கு வரோணும்...அதை மனதில் வைச்சிட்டு நடவுங்கோ 

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

தம்பி குமாரசாமி! இந்தக் கொரோனா காலத்திலை கள்ளு எங்கதம்பி கிடைக்குது ஒளிக்காமல் சொல்லடா…. நானும் அடிச்சுப்போட்டு யாழை ஒருக்காக் கலக்கணும்.

தம்பியுள்ள அண்ணன் சண்டைக்கு அஞ்சான். Bildergebnis für %e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d

இப்படிக்கு!

உன் அன்புள்ள, பாசமுள்ள, நேசமுள்ள அண்ணன், பாஞ்.  

Edited by Paanch

Share this post


Link to post
Share on other sites

என்னப்பா இது எல்லாரும் தமிழ் பண்டிதர்களாய் கிடக்கு? லண்டன்காரரை எப்பிடி திட்ட வேணும் எண்டு ஒருத்தருக்கும் தெரியாதோ?
தயவு செய்து ஆராவது ஒராளாவது வந்து என்ரை லண்டன் மச்சானை இங்கிலிசிலை திட்டிவிடுங்கோப்பா.அப்பதான் மச்சானுக்கு கொஞ்சமாவது உறைக்கும்.😎

Share this post


Link to post
Share on other sites
33 minutes ago, குமாரசாமி said:

என்னப்பா இது எல்லாரும் தமிழ் பண்டிதர்களாய் கிடக்கு? லண்டன்காரரை எப்பிடி திட்ட வேணும் எண்டு ஒருத்தருக்கும் தெரியாதோ?
தயவு செய்து ஆராவது ஒராளாவது வந்து என்ரை லண்டன் மச்சானை இங்கிலிசிலை திட்டிவிடுங்கோப்பா.அப்பதான் மச்சானுக்கு கொஞ்சமாவது உறைக்கும்.😎

திட்டினால் வெட்டுவாங்கோ 

Share this post


Link to post
Share on other sites
57 minutes ago, குமாரசாமி said:

என்னப்பா இது எல்லாரும் தமிழ் பண்டிதர்களாய் கிடக்கு? லண்டன்காரரை எப்பிடி திட்ட வேணும் எண்டு ஒருத்தருக்கும் தெரியாதோ?
தயவு செய்து ஆராவது ஒராளாவது வந்து என்ரை லண்டன் மச்சானை இங்கிலிசிலை திட்டிவிடுங்கோப்பா.அப்பதான் மச்சானுக்கு கொஞ்சமாவது உறைக்கும்.😎

இங்கிலீசிலேயே தான்  திட்ட வேணுமா........!  🤔

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.