Jump to content

கொரோனா வைரஸ் தொடர்பாளர்களை கண்டறியும் கூகுள் - ஆப்பிளின் தொழில்நுட்பம்!


Recommended Posts

கொரோனா வைரஸ் தொடர்பாளர்களை கண்டறியும் வகையில், போட்டியாளர்களான கூகுளும் - ஆப்பிளும் முதல் முறையாக இணைந்து புதிய மொபைல் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.

இது குறித்து ஆப்பிள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகெங்கிலும், அரசாங்கங்களும், சுகாதார அதிகாரிகளும் ஒன்றிணைந்து கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு தீர்வு காணவும், சமுதாயத்தை மீண்டும் இயங்கவும் பணியாற்றி வருகிறார்கள். அந்த வகையில், கூகுள் மற்றும் ஆப்பிளின் கூட்டு முயற்சியில், புளூடூத் தொழில்நுட்பத்தை இயக்கி, அதன் மூலம் வைரஸை தடுக்க அரசாங்கங்களுக்கும் சுகாதார நிறுவனங்களுக்கும், உதவுகிறோம்.

கொரோனா வைரஸ், பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அருகில் உள்ளவர்களுக்கும் பரவும் என்பதால், அதன் தடத்தை கண்டறிந்தால் வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த முடியும். இதற்கான விரிவான தீர்வாக ஆப்பிளும் கூகுளும் இணைந்து, அப்ளிகேஷன் புரோகிராமிங் இன்டெர்பேஸ் மற்றும் இயங்குதள அளவிலான தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளோம்” என்றது.

latest tamil news

இந்த வசதி ஸ்மார்ட்போன் இயங்குதளம் மூலம் நேரடியாக இயங்குகிறது. இதற்கென தனி செயலியை பதிவிறக்க தேவையில்லை. சிஸ்டம் அப்டேட் செய்தால் போதும்.

ஒரு உதாரணம் மூலம் இவற்றை விளக்கியுள்ளனர். இரண்டு பேர் ஒரு இடத்தில் சில நிமிடங்கள் சந்தித்து பேசுகிறார்கள். அப்போது, பின்னணியில் இயங்கும் ப்ளூடூத், அவர்கள் தொடர்பில் இருந்ததாக ஸ்மார்ட்போனுக்கு தகவல் அனுப்பிவிடும். அவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், அவர் அதனை ஆரோக்கிய சேது போன்ற அரசின் செயலியில் பதிவு செய்ய வேண்டும். பின்னர் நம் அனுமதி கேட்கும், நாம் அனுமதித்தால், நம்முடன் நெருக்கமான வட்டத்தில் இருந்த நபர்களின் மொபைல் போன் விவரங்களை அனுப்பி வைக்கும். இத்தகவல்கள் தற்காலிகமாக 14 நாட்களுக்கு கணிணி சர்வரில் பதிவேற்றப்பட்டிருக்கும்.

அதே சமயம், எதிர்தரப்பில் தொடர்பில் இருந்தவர்களின் ஸ்மார்ட்போன், தொடர்சியாக இந்த சர்வர் குறிப்புகளை கண்காணித்து, நாம் தொடர்பு கொண்ட யாருக்காவது கொரோனா இருந்தால் உடனே தெரியப்படுத்தும். தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தும். ஆப்பிள் மற்றும் கூகுளின் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை 300 கோடி மக்கள் உலகம் முழுவதும் பயன்படுத்துகிறார்கள் என்பதால், இது மிகுந்த பலனளிக்கும் என நம்பப்படுகிறது.

இரண்டாம் கட்ட கொரோனா பரவலில் உள்ள தமிழகம் போன்ற மாநிலங்கள் ஆரோக்கிய சேது செயலி மற்றும் கூகுள், ஆப்பிள் ஸ்மார்ட்போன்களின் இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பாதுகாப்பாக இருக்க முடியும். நோய் பரவலை பெருமளவு தடுக்க முடியும்.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2519345

Link to comment
Share on other sites

கோவிட்-19 தொற்றுள்ளவருக்கு அருகில் சென்றவர்களை எச்சரிக்கும் ஸ்மார்ட் ஃபோன்

 

கோவிட்-19 நோய்த் தொற்றுள்ளவர் எங்கெங்கெல்லாம் சென்றாரோ அவருக்கு அருகில் நின்றவர்களையெல்லாம் எச்சரிக்கும் புதிய smart phone application ஒன்றை அப்பிள், கூகிள் நிறுவனங்கள் தயாரித்து வருவதாக அறிவித்துள்ளன.

அருகருகே நிற்கும் இருவரது ஸ்மார்ட் ஃபோன்கள் இரகசியமான identification key யைத் தானியக்க முறையில் Bluetooth LE பரிவர்த்தனை மூலம், பரிமாறிக்கொள்ளும் இத் தொழில்நுட்பம் Apple, Google ஆகிய ஃபோன்களில் செயற்படக்கூடியது. முக்கியமாக ஒருவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு வீட்டில் இருக்கும்படி கட்டளை இடப்பட்டிருந்து, அதை மீறி அவர் வெளியெங்கும் சென்றிருந்தால் அவரது ஸ்மார்ட் ஃபோன் இந்த ID Key யை அருகிலுள்ள எல்லாரது ஃபோன்களுக்கும் அனுப்பிவிடும். இந்த Contact Tracing App பைப் பாவிப்பதற்கு இரண்டு ஃபோன்களிலும் ஒரு API key தரவிறக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

இப்படி அருகருகே நின்ற இருவரது ஃபோன்கள் ID Key களைப் பரிமாறியிருந்து சில நாட்களின் பின்னர் அவர்களில் ஒருவருக்கு நோய்த் தொற்று அறிகுறிகள் தென்பட்டால் மற்றவருக்கு உடனடியாகத் தகவல் அனுப்பப்பட்டுவிடும். இத் தகவற் பரிமாற்றத்தின் போது சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களோ, சந்தித்த இடங்களோ அல்லது பிரத்தியேக தகவல்களோ பரிமாறப்படமாட்டாது எனக் கூறப்படுகிறது.

தமக்கு நோய்த்தொற்று இருக்கிறது என்பதை உணராமலேயே நோயைப் பரப்புபவர்கள் சுமார் 25 % இருக்கிறார்கள் என்கின்ற நிலையில் இப்படியான தொழில்நுட்பம் ஓரளவுக்கு உதவிபுரியுமென்றாலும், உண்மையான விசாரணைகளும், பரிசோதனைகளுமே சரியான எச்சரிக்கையைக் கொடுக்க வல்லது என்பது மனதில் கொள்ளப்பட வேண்டிய ஒன்று.

 
 

இந்த App இரண்டு கட்டங்களில் பாவனைக்கு வருமென இன் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. முதலில், மே மாதம் நடுப்பகுதியில் API (Application Programming Interface) பாவனைக்கு விடப்படும். இரண்டு ஃபோன்களும் இரண்டு விதமான இயக்க முறைமைத் தொழிற்பாடுகளைக் (Operating Systems) கொண்டவை. அப்பிள் iOS ஐயும், கூகிள் Android OS ஐயும் கொண்டு இயங்குபவை. நோய்த் தொற்றாளரும் அருகில் நிற்பவரும் வெவ்வேறு ஃபோன்களைப் பாவிக்க நேரிட்டால் அவை இரண்டும் ஒரு பொதுவான தளத்தில் தகவலைப் பரிமாறிக்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். எனவே தான் இந்த API. இது எந்த ஃபோனில் இருக்கிறதோ அது அதே API உள்ள இன்னுமொரு ஃபோனுடன் தொடர்பு கொள்ள முடியும். இது மருத்துவ பிரயோகம் சம்பந்தப்பட்டதால், iOS App Store மற்றும் Google Play Store களிலிருந்து மட்டுமே தரவிறக்கம் செய்ய முடியும். இந்த API மென்பொருளை யார் தயாரிக்கிறார்கள் என்று இன்னும் தெரியவில்லை. அனேகமாக ஒரு பொது நிறுவனமான பல்கலைக்கழகம் போன்ற ஒன்றிடம் இப் பொறுப்பு வழங்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாவது கட்டமாக, தகவற் பரிமாற்றத்துக்குப் பாவனையாளர் ஒப்புதல் கொடுக்கும் தேர்வை வழங்கும் (Opt-In) மென்பொருளை இரு நிறுவனங்களும் தத்தம் சட்ட வரையறைகளுக்கமையத் தயாரிக்கும். அந்தந்த ஃபோன்களிலுள்ள Settings மூலமாக இந்த அம்சம் பாவனைக்கு விடப்படும். இத் தேர்வுக்கு ஒருவர் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் அது API Key யை இணைத்து தகவற் பரிமாற்றத்தை முடுக்கி விடும்.

ஆனால் உங்கள் ஃபோனில் Bluetooth LE அம்சம் இல்லையெனில் இந்த App எதுவும் வேலை செய்யாது. iOS 2011 இலும், iPhone 4S மற்றும் Android OS ஃபோன்கள் 2012 இலும் Bluetooth LE பாவனைக்கு வழி செய்துள்ளன. புதிய ஃபோன்களை வைத்திருப்பவர்கள் கவலைப்படத் தேவையில்லை.



இந்த App எப்படி வேலை செய்கிறது?

ஒருவருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று வந்துவிட்டது எனபது உறுதிப்படுத்தப்பட்டு விட்டால், கடைசி 14 நாட்களிலும் அவரது ஃபோனில் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் ‘அடையாளம் தெரியாதவர்களின்’ ‘key’ அவரது ஃபோன் ஒரு server இற்கு தரவேற்றம் செய்யும். அதே போல அந்தந்த ‘key’ களுக்குரிய ஃபோன்களின் சொந்தக்காரர்களுக்கு அவர்களின் அருகே நின்ற ஒருவர் நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளார் (exposure notification) என்ற தகவல்கள் பரிமாறப்படும். அவரவர்கள் உரிய நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதில் அறியப்படாத விடயம் என்னவென்றால், நோய்த் தொற்றுக்காளானவர் பற்றிய விடயம் எப்படி அவருடைய ஃபோனில் பதிவாகும்? தற்போதுள்ள நடைமுறையில் நோய்த் தொற்றைப் பரிசோதிக்கும் நிறுவனங்களும், சம்பந்தப்பட்ட மருத்துவ நிறுவனங்களும் மட்டுமே இத் தகவலை அதிகாரபூர்வமாகப் பதிவு செய்கின்றன. அத் தரவுகளை Apple மற்றும் Google நிறுவனங்கள் எப்படிப் பெறப்போகின்றன? இதற்கான விடைகள் எதுவும் இப்போதைக்குத் தெரியவில்லை. ஒருவருடைய பிரத்தியேக தகவல்கள் எவ்வளவு தூரம் பொது வெளியில் பகிரப்படலாம்? அதில் தேசிய பாதுகாப்பு, பொது நலம் போன்ற தேவைகள் சம்பந்தப்படும் என்பன பற்றியெல்லாம் இன்னும் சட்டவல்லுனர்கள் கருத்துத் தெரிவிக்கவில்லை. இது ஒரு அவசரகால சூழல். அரசியல்வாதிகள் அதிகாரங்களைக் கையிலெடுத்து பல காரியங்களைச் செய்யலாம்.

https://marumoli.com/கோவிட்-19-தொற்றுள்ளவருக்க/?fbclid=IwAR2_eidbyFybgiGXnBeaHeFVzmR4JAp0b-Z2iiAl6nuHsOEsAWHRZZjTKdo

Link to comment
Share on other sites

கோவிட் 19 இனை, தடுப்பூசி வரும்வரை, கட்டுப்படுத்த தொழில்நுட்பம் முக்கிய பங்காற்ற முடியும். 

சீனாவில், சில இடங்களில், கூகிள் வரைபடத்தை காட்டி ஒருவர் எங்கு சென்றார் என  உறுதிப்படுத்தவேண்டும். ஆம், உங்கள் தொலைபேசியை வீட்டில் வைத்து விட்டு வெளியே செல்லலாம், ஏமாற்றலாம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா வைரஸ் நோயாளிகளை எளிதில் அடையாளம் காண புதிய தொழிநுட்பம்.!

IMG_3692.jpg

கொரோனா வைரஸ் பரவியுள்ளவர்களின் நடமாட்டம் மற்றும் வழித் தடங்களை எளிதில் அடையாளம் கண்டு, மக்களை உஷார் படுத்தும் புதிய தொழில் நுட்பத்தை அப்பிள் நிறுவனமும், கூகுள் நிறுவனமும் இணைந்து, உருவாக்கி வருகின்றன.

இதற்காக பிரத்யோகமாக வடிவமைக்கப்படும் புதிய செயலி, பொது சுகாதாரத்துறையின் அனுமதிக்குப் பின் எதிர்வருகிற மே மாதத்தில் உலகுக்கு அறிமுகம் செய்ய முடிவு செய்யப்படவுள்ளது.

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டுமென்ற உயரிய நோக்கத்திற்காக மிகப்பெரிய இவ்விரு நிறுவனங்களும் இணைந்து இப்பணியில் களமிறங்கியுள்ளன.

ஐ-போன் மற்றும் ஆண்ட்ரோய்ட் கையடக்க தொலைப்பேசிகளில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டால், அருகே கொரோனா வைரஸ் பரவியுள்ளவர்கள் யாராவது இருந்தால், நம்மை விலகி செல்லுமாறு அறிவுறுத்தும்.

http://www.vanakkamlondon.com/கொரோனா-வைரஸ்-நோயாளிகளை-எ/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.