Jump to content

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் வெற்றிகண்ட நாடுகளில் இலங்கை!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, நிழலி said:

விளக்கத்துக்கு நன்றி நுணா.

மருத்துவ / விஞ்ஞான ரீதியாக வெப்பத்தை ஒரு முக்கிய காரணியாக கொண்டு உறுதியான முடிவுகள் இன்னும் எடுக்கப்படவில்லை என்பதால் புள்ளிவிபரங்களை மட்டுமே வைத்து இப்படியான விடயங்கள் அணுகப்படுகின்றன. அத்துடன் சீனா / ரஷ்யா நாடுகளில் அதிகாரங்கள் அனைத்தும் குவிந்து இருக்கும் மத்திய அரசுகளாலேயே அனேக விடயங்கள் கையாளப்படுவதால் வெளிப்படைத் தன்மை இல்லாததாகவே அவர்களின் தகவல்களும் உள்ளன.

ஆபிரிக்க நாடுகளில் அனேகமானவை வெப்பம் மிகுந்த நாடுகள். ஆபிரிக்காவில் கொவிட் 19 கட்டுப்படுத்தப்படவில்லை எனின் 3 இலட்சத்துக்கும் அதிகமானோர் இறக்க நேரிடும் என ஆபிரிக்க நாடுகளின் கூட்டு அமைப்பு ஒன்று கவலை வெளியிட்டு உள்ளது.

இந்தியாவைப் பற்றித் தெரியாது. ஆனால் இலங்கையில் இது அரச மருத்துவமனையிலும் சரி, தரமான தனியார் மருத்துவமனையிலும் சரி குழந்தை பிறந்த ஒரு சில நாட்களுக்குள் கொடுக்கப்படும் ஒரு (கட்டாயத்) தடுப்பூசி. என் மகன் பிறந்தது கொழும்பில். அவனுக்கும் இந்த தடுப்பூசி கொடுக்கப்பட்டு இருக்கு என்பதை தடுப்பூசிகள் கொடுத்த ஏட்டில் (Log book) உள்ளதை இப்போதும் சரிபார்த்தேன்.

நிழலி உங்களுக்கு போட்டிருந்தார்களா? இப்போது எல்லோருக்கும் போடுகிறார்கள். எனக்கு போடவில்லை. எனக்கு தெரிந்து என்னுடன் படித்தவர்கள்நிறைய பேருக்கு போடவில்லை

Link to comment
Share on other sites

  • Replies 67
  • Created
  • Last Reply
9 minutes ago, வாதவூரான் said:

நிழலி உங்களுக்கு போட்டிருந்தார்களா? இப்போது எல்லோருக்கும் போடுகிறார்கள். எனக்கு போடவில்லை. எனக்கு தெரிந்து என்னுடன் படித்தவர்கள்நிறைய பேருக்கு போடவில்லை

இடது கையில் முழங்கைக்கும் மேல் (உடம்புடன் இணையும் இடத்தில்) ரவுண்டாக ஊசி போட்ட தளும்புகள் இரண்டு உள்ளன. அனேகமான இலங்கையர்களுக்கு இப்படி 2 உள்ளது. ஒன்று அம்மை நோய்க்கு போட்ட தடுப்பூசி, மற்றது இது என்று சொல்கின்றனர்.

நான் baby யாக இருக்கும் போது அழகான ஒரு நர்ஸ் தூக்கிக் கொஞ்சினது நினைவில் இருக்கு, ஆனால் அவர் ஊசி போட்டாரா என்று நினைவில் இல்லை.

Link to comment
Share on other sites

10 minutes ago, வாதவூரான் said:

நிழலி உங்களுக்கு போட்டிருந்தார்களா? இப்போது எல்லோருக்கும் போடுகிறார்கள். எனக்கு போடவில்லை. எனக்கு தெரிந்து என்னுடன் படித்தவர்கள்நிறைய பேருக்கு போடவில்லை

2007 இல் இருந்து பிரான்சில் இதனை நிறுத்தி விட்டார்கள். டிபி நோய் உள்ள நாடுகளில் இதனைக் கட்டாயம் போட வேண்டும். ஒரு தடவை தடுப்பூசி போட்டால் அது 30 - 40 வருடங்கள் வரை டிபி பக்ரீரியா எதிர்ப்பை உடலில் ஏற்படுத்திக் கொள்ளும். இதன்பின் மறுபடி தடுப்பூசி போட வேண்டுமோ தெரியவில்லை. பிரான்சில் அநேகமான தடுப்பூசிகளை 30 - 40 வயதுக்கு மேல் மறுபடி ஏற்றிக் கொள்வார்கள்.

Link to comment
Share on other sites

2 minutes ago, நிழலி said:

இடது கையில் முழங்கைக்கும் மேல் (உடம்புடன் இணையும் இடத்தில்) ரவுண்டாக ஊசி போட்ட தளும்புகள் இரண்டு உள்ளன. அனேகமான இலங்கையர்களுக்கு இப்படி 2 உள்ளது. ஒன்று அம்மை நோய்க்கு போட்ட தடுப்பூசி, மற்றது இது என்று சொல்கின்றனர்.

நான் baby யாக இருக்கும் போது அழகான ஒரு நர்ஸ் தூக்கிக் கொஞ்சினது நினைவில் இருக்கு, ஆனால் அவர் ஊசி போட்டாரா என்று நினைவில் இல்லை.

நீங்கள் கூறுவது சரி நிழலி.  அம்மை பால் என்று அதை கூறுவார்கள். அந்த தடுப்பூசி  இலங்கைஇல் பாடசாலைகளில் போடபடுவதுண்டு.  உசி போட்ட வலி  கூட தெரியாத அளவுக்கு அந்த அழகான நர்ஸ்ஸை ஞாபகம் வைத்துள்ளீர்கள். முன்பே  அது தெரிந்திருந்தால் உயர்தர வகுப்புவரை காத்திருந்து  அந்த ஊசியை போட்டிருக்கலாம் என்ன. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் போட்டிருக்கிறார்கள்.......யாரோ ஒரு தடியர் தான் குளற குளற குத்தி இருப்பார் போல.... நர்ஸ் வந்து குத்துவதற்கும்  ஒரு மச்சம் வேணும். எனக்கு வெறும் தழும்புதான் இருக்கு......!   😁

Link to comment
Share on other sites

தேர்தலுக்கு பின்னர் : கொரானாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இலங்கை மாறினாலும் ஆச்சரியம் இல்லை.  

அதன் மூலம் உலக சுகாதார அமைப்பின் பணம், சர்வதேச நாணய நிதியத்தின் பணம், ஆசிய வங்கியின் பணம், அமெரிக்காவிடம் ; ஐரோப்பிய ஒன்றியத்திடம், ஜப்பானிடம் .....  பணம் கொடையாக கடனாக கிடைக்கும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிழலி said:

BCG Vaccination எனும் tuberculosis (TB) இற்கு எதிரான தடுப்பூசி பெற்ற மக்களை அதிகம் கொண்ட நாடுகளில் கொவிட் 19 தொற்று மோசமாக ஏற்படவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் ஆராச்சிகளின் மூலம் இது உண்மையானதா என இன்னமும் உறுதியாகக் கண்டறியப்படவில்லை. இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் இந்த தடுப்பூசி கண்டிப்பாக போடப் பட வேண்டிய ஒன்று என்பதால் எம்மில் அனேகம் பேருக்கும் இது ஏற்றப்பட்டு இருக்கு,

ஸ்பெயினில் இந்த தடுப்பூசி போடப்படவில்லை. அதே நேரம் அதன் எல்லையில் அமைந்திருக்கும் போர்த்துக்கல்லில் இது கட்டாயமாக்கப்பட்டு இருக்கும் ஒரு தடுப்பூசி. ஸ்பெயினில் பல்லாயிரக்கணக்கானோர் கொவிட் 19 இனால் பலியாகிக் கொண்டிருக்கையில் போர்த்துக்கல்லில் 1000 இற்கும் குறைவானவர்களே இதுவரைக்கும் பலியாகியுள்ளனர் என அறிய முடிகின்றது.

இது தொடர்பாக வந்த தகவல்கள் / செய்திகள்:

https://www.statnews.com/2020/04/14/decades-old-tb-vaccine-attracts-attention-and-skepticism-as-a-potential-weapon-against-covid-19/

https://www.nytimes.com/2020/04/03/health/coronavirus-bcg-vaccine.html

https://www.latintimes.com/calmette-vaccine-coronavirus-covid-19-death-rates-lower-countries-use-bcg-vaccine-457794

https://www.france24.com/en/20200403-could-tb-vaccine-protect-medics-from-covid-19

போலியோவுக்கு போடும் ஊசியா அல்லது இது வேறையா 
 
Link to comment
Share on other sites

5 minutes ago, ரதி said:

போலியோவுக்கு போடும் ஊசியா அல்லது இது வேறையா 
 
BCG Vaccination எனும் tuberculosis (TB) இற்கு எதிரான தடுப்பூசி

கச நோய் அல்லது காச நோய் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, nunavilan said:

BCG Vaccination எனும் tuberculosis (TB) இற்கு எதிரான தடுப்பூசி

கச நோய் அல்லது காச நோய் 

எனக்கு இந்த ஊசி போட்ட நினைவு இல்லை ...போலியோ ஊசி போட்ட நினைவு இருக்கு 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ரை இடக்கையிலை நாலு பூரண சந்திர வட்டம் இருக்கு.....😎

என்னவாயிருக்கும்?
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியை பொறுத்தவரையில் மேற்கு ஜேர்மனியை விட கிழக்கு ஜேர்மனியில் கொரோனா இழப்புகள் மிக குறைவு.
கிழக்கு ஜேர்மனியில்  மேற்குடன் இணைவதற்கு முன் ஏதோ ஒரு நோய்க்கு தடுப்பூசிகள் போட்டதாக கூறுகின்றார்கள்.
கூடுதலாக சிவப்பு நிறமுடையது மரணங்கள் அதிகமாக சம்பவித்த இடங்கள்.

Download.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

எனக்கு இந்த ஊசி போட்ட நினைவு இல்லை ...போலியோ ஊசி போட்ட நினைவு இருக்கு 
 
போலியோவுக்கு சொட்டுமருந்துதான் எடுத்த, குடுக்கிற ஞாபகம்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, நிழலி said:

விளக்கத்துக்கு நன்றி நுணா.

மருத்துவ / விஞ்ஞான ரீதியாக வெப்பத்தை ஒரு முக்கிய காரணியாக கொண்டு உறுதியான முடிவுகள் இன்னும் எடுக்கப்படவில்லை என்பதால் புள்ளிவிபரங்களை மட்டுமே வைத்து இப்படியான விடயங்கள் அணுகப்படுகின்றன. அத்துடன் சீனா / ரஷ்யா நாடுகளில் அதிகாரங்கள் அனைத்தும் குவிந்து இருக்கும் மத்திய அரசுகளாலேயே அனேக விடயங்கள் கையாளப்படுவதால் வெளிப்படைத் தன்மை இல்லாததாகவே அவர்களின் தகவல்களும் உள்ளன.

ஆபிரிக்க நாடுகளில் அனேகமானவை வெப்பம் மிகுந்த நாடுகள். ஆபிரிக்காவில் கொவிட் 19 கட்டுப்படுத்தப்படவில்லை எனின் 3 இலட்சத்துக்கும் அதிகமானோர் இறக்க நேரிடும் என ஆபிரிக்க நாடுகளின் கூட்டு அமைப்பு ஒன்று கவலை வெளியிட்டு உள்ளது.

இந்தியாவைப் பற்றித் தெரியாது. ஆனால் இலங்கையில் இது அரச மருத்துவமனையிலும் சரி, தரமான தனியார் மருத்துவமனையிலும் சரி குழந்தை பிறந்த ஒரு சில நாட்களுக்குள் கொடுக்கப்படும் ஒரு (கட்டாயத்) தடுப்பூசி. என் மகன் பிறந்தது கொழும்பில். அவனுக்கும் இந்த தடுப்பூசி கொடுக்கப்பட்டு இருக்கு என்பதை தடுப்பூசிகள் கொடுத்த ஏட்டில் (Log book) உள்ளதை இப்போதும் சரிபார்த்தேன்.

வெப்பம் மாத்திரம் அல்ல, வெப்பத்துடன் humidityயும்  அதிகமாக இருக்கும்போது இந்த வைரஸ் பரவாது என்று ஒரு கருத்து உள்ளது. இது இதைப்போன்ற respiratory ஃப்ளு வைரஸ்களின் (வேறு குடும்பத்தை சேர்ந்த வைரஸ்கள்) பரவல் வெப்ப காலங்களில் இருப்பதில்லை என்பதை வைத்து எதிர்வு கூறப்பட்டது, அத்துடன் இந்த புள்ளிவிபரங்களும் சேரும்பொழுது இப்படியான  கருத்துக்கு வலு அதிகரிக்கிறது. இப்போது உள்ள lock down நிலையில், இந்த புள்ளிவிபரங்களை எப்பிடி நம்புவது என்று புரியவில்லை. எவ்வளவு test kits உள்ளது, எவ்வளவு பேரை  test பண்ணுகிறார்கள், எல்லா test உம் முறைப்படி அறிவிக்கப்படுகிறதா என்பது குழப்பமே, இத்துடன் இலங்கை போன்ற அரச கட்டுப்பாடு மிகுந்த இடங்களில் எப்படி இவை கையாளப்படுவது என்பது வெளிப்படையாக தெரியவராது. இங்கு லாஸ் ஏஞ்சல்ஸ் (Southern California) பகுதியில்,  test kits தேவைக்கு அதிகமாக வந்தவுடன், என்ணிக்கையில் சடுதியாக ஒரு அதிகரிப்பு வந்தது. அதாவது நிறைய பேருக்கு இருந்திருக்கிறது ஆனால் அறிவிக்கப்படவில்லை அல்லது தெரியவில்லை. இங்கு கலிபோர்னியாவில் எல்லா இடங்களும் சரியாக கணக்கெடுப்புகளை செய்வதில்லை என்றும் ஒரு குற்றச்சாட்டு இருந்தது, இப்பொழுது நிலைமை பரவாயில்லை.  நான் இருக்கும் Riverside County யில் இரண்டு நாட்களுக்கு முன்பிருந்து, ஒரு symptomமும் இல்லாமலே நாங்கள் போய் test பண்ண முடியும் என்று கொண்டுவந்து விட்டார்கள்.

அமெரிக்காவில் ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு நிலையில் இருக்கு, சில கணக்கெடுப்புகளும் குழப்பமாக உள்ளது, நியூயார்க் நிலை மிகவும் மோசம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனப் புது வருடப்பிறப்பை முன்னிட்டு வெளிநாடுகளில் கல்வி கற்ற 
 சீன மாணவர்கள், தொழிலாளர் சீனாவுக்கு சென்றிருந்தனர். அதேபோல் வெளிநாட்டினர் பலர் சீனாவுக்கு உல்லாசப்பயணம் மேற்கொண்டிருந்தனர்.  அவ்வாறே சீனாவில் கல்வி கற்ற வெளிநாட்டு மாணவர்கள் மூலமும் ஐரோப்பிய நாடுகளில் இந்த நோய் பரவுவதற்கு காரணமாய் அமைந்திருக்கலாம். இலங்கையில் அப்படியான வாய்ப்புகள் குறைவு. வர இருக்கும் தேர்தலை முன்னிட்டு நோயாளரின் எண்ணிக்கையை குறைத்து காட்டவும் வாய்ப்பு இருக்கு. 

Link to comment
Share on other sites

13 minutes ago, satan said:

இதனை சீனாவில் மிக நீண்ட காலமாக  வைத்திய தொழிலில் இருக்கும் (சார்ஸ் வைரஸ் காலம் தொடக்கம்)  உள்ள ஒரு தமிழ் வைத்தியர் கூறுகையில் மேற்படி கோவிட் வைரஸ் பரவ தொடங்கிய  காலத்தில் தான் சீன புது வருடம் தொடங்கியதாகவும்  அப்போது 300 மில்லியன் மக்கள்   விடுமுறைக்காக உலகம் எங்கும் செல்வதாவும் இதனால் தான் இப்பரம்பல் இவ்வளவு பெரிதாக இருப்பதாகவும் கூறினார்,

Link to comment
Share on other sites

எனக்கு ஊசிபோட்ட ஞாபகம் இல்லை. ஆனால் பள்ளிக்கூடத்தில் எனது இடதுகைத் தோள்மூட்டுக்குக் சற்றுக் கீழே, சிறு வட்டத்திற்குள் கோடிட்டதுபோல் கத்தியால் மூன்று கீறல்கள் போட்டார்கள், வீட்டிற்கு வந்ததும் எனது கண்ணீரையும், கீறல்போட்ட இடத்தில் இரத்தத்தையும், சிறிது வீக்கத்தையும் கண்ட அம்மா... கீறுபோட்டவர்களைத் திட்டியபடி என்னை அணைத்துத் தேசிக்காய் தேய்த்துவிட்டது ஞாபகம் உள்ளது. சாமியார் குறிப்பிட்டதுபோல் அல்லாமல் ஒரே ஒரு பூரணச் சந்திரன், அதற்கு தேய்வுமில்லை வளர்ச்சியுமில்லை. 

Link to comment
Share on other sites

4 hours ago, Paanch said:

ஆனால் பள்ளிக்கூடத்தில் எனது இடதுகைத் தோள்மூட்டுக்குக் சற்றுக் கீழே, சிறு வட்டத்திற்குள் கோடிட்டதுபோல் கத்தியால் மூன்று கீறல்கள் போட்டார்கள்,

அது தான் BCG முக்கூட்டு தடுப்பு என்டு நினைக்கிறன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/4/2020 at 05:53, ampanai said:

9ஆவது இடத்தில்  ஆட்டம் முடியவில்லை.

நாளை முதலாம் இடத்திற்கு முன்னேத்தி விடலாம், கொஞ்சம் அதிகம்  செலவாகும் 😃

பலர் பாதிக்க்ப்பட்டாலும் இறப்பை குறைத்துள்ளது இலங்கை 

Link to comment
Share on other sites

22 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

பலர் பாதிக்க்ப்பட்டாலும் இறப்பை குறைத்துள்ளது இலங்கை 

அப்படி திட்டவட்டமாக கூற முடியாது, காரணம், முதலில் யார் யார் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என தெளிவாக வரையறுக்க முடியாது, பரிசோதிக்கும் வசதிகள் இல்லை. அடுத்து நாளும் இறக்கும் மக்களில் யார் கோவிட்19 னால் இருந்துள்ளார்கள் என பரிசோதனை செய்யும் வசதிகளும் இல்லை. 

இது சிறிலங்காவிற்கு மட்டுமானது அல்ல. உலக நாடுகள் அனைத்திற்க்கும் பொதுவானது.    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ampanai said:

இருந்தாலும் உலக நாடுகளில் இறப்பு விகிதத்திற்கும் இலங்கையில் இறப்பு விகிதத்திற்கும் வித்தியாசம் உள்ளதுவே

Link to comment
Share on other sites

5 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இருந்தாலும் உலக நாடுகளில் இறப்பு விகிதத்திற்கும் இலங்கையில் இறப்பு விகிதத்திற்கும் வித்தியாசம் உள்ளதுவே

நம்பலாம், ஆனால் நம்பாதே 🙂 

இவர்களே முள்ளிவாய்க்காலிலும்  ஒரு சரணடையவில்லை என்றவர்கள். ஒருவரும் கொல்லப்படவும் இல்லை என்கிறார்கள். நாம் நம்பவில்லை.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ampanai said:

நம்பலாம், ஆனால் நம்பாதே 🙂 

இவர்களே முள்ளிவாய்க்காலிலும்  ஒரு சரணடையவில்லை என்றவர்கள். ஒருவரும் கொல்லப்படவும் இல்லை என்கிறார்கள். நாம் நம்பவில்லை.  

அன்றிருந்த ஊடக அடக்கு முறைக்கும் இன்று இருக்கும் அடக்குமுறைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு 

Link to comment
Share on other sites

2 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அன்றிருந்த ஊடக அடக்கு முறைக்கும் இன்று இருக்கும் அடக்குமுறைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு 

இன்றை கோவிட் 19 இனையும் இராணுவமே கையாள்கின்றது. சில்வா தலைமையில் 

அப்படி இருக்கும்பொழுது முழுமையான நம்பிக்கை வரவே வராது. வரவும் கூடாது, ஊடகம் உட்பட. 

Link to comment
Share on other sites

அமெரிக்காவின் பயணத்தடையின் பின்னர் சில்வாவை கோவிட்19 இனை ஒருங்கிணைக்க நியமித்தது ஒரு பக்கம் உளவியல் சார்ந்தது. மக்களுக்கு நம்பிக்கை தரும் என்ற போர்வையில் மக்களும் அமைதியாக உள்ளார்கள். ஆனால், உண்மையான மக்களாட்சி நாடுகளில் அரசியல் தலைவர்களே முன்னின்று நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக உள்ளார்கள். இராணுவம், சில மேட்டுப்படுத்தப்பட்ட உதவிகளை வேண்டுதலின் பேரில் செய்கின்றனர். 

இலங்கையில் கோவிட் 19 இனை இராணுவம் மற்றும் கோத்தா ஒரு வரப்பிரசாதமாக பார்க்க கூடும். அதிகரித்த கண்காணிப்புக்கள், இராணுவ கட்டமைப்புக்களை பபலப்படுத்தல், இராணுவ செலவீனங்களை நியாப்படுத்தல் என பல காரணங்களை கூறலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ampanai said:

இன்றை கோவிட் 19 இனையும் இராணுவமே கையாள்கின்றது. சில்வா தலைமையில் 

அப்படி இருக்கும்பொழுது முழுமையான நம்பிக்கை வரவே வராது. வரவும் கூடாது, ஊடகம் உட்பட. 

வருகிறது செய்திகள்  தாதிகளாலும் வைத்தியர்களாலும் சிங்களத்திலும் , தமிழிலும் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.