Jump to content
  • 0

சர்வதேச சாரதி அனுமதி பத்திரத்துடன் இலங்கையில் வாகனம்,மோட்டார்சைக்கள் ஓட்டி இருக்கிறீர்களா?

ஈழப்பிரியன்

Question

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கள உறவுகளே
2015  2017 களில் இலங்கை போனபோது கார் மோட்டார்சைக்கிள் ஓடுவதற்கு என்று சர்வதேச அனுமதிப்பத்திரமாக AAA க்கு 15$ கட்டி எடுத்துப் போயிருந்தேன்.

இலங்கையிலும் வீட்டில் இரண்டு மோட்டார் சைக்கிள் நிற்பதால் எனக்கு தேவையான நேரங்களில் எங்கும் போகவரக் கூடியவாறு இருந்தது.
அனேகமாக அங்கு நின்ற நாட்களில் ஒவ்வொரு நாளும் ஓடித் திரிந்திருக்கறேன்.
ஒரேஒரு நாள் கோப்பாய் மானிப்பாய் ஊடாக பண்டத்தரிப்பு போகும் போது சங்கானையில் பொலிஸ் மறித்தார்கள்.ஏற்கனவே பலரையும் மறித்து வைத்து சோதனை செய்து கொண்டிருந்தார்கள்.
என்னை மறித்ததும் ஓரமாக நிற்பாட்டி தலைக் கவசத்தை கழற்றி மனைவியிடம் கொடுத்துவிட்டு ஆவணங்களை எடுக்க தயாராகும் போது ஐயா ஐயா நீங்கள் போங்கோ என்றார்கள்.புறப்பட்டு போகும் போது தான் மனைவி கெல்மட்டைக் கழற்றியதால் தலையைப் பார்த்துட்டு போகச் சொல்லியிருக்கிறாங்கள் என்றா.எனக்கும் அப்பதான் என்நிலை விளங்கியது.அதுவும் நல்லதாகவே இருந்தது.

அண்மையில் ஒரு நண்பருடன் பேசும்போது இலங்கை போய்வந்த விடயங்கள் பற்றி பேசும்போது அங்குள்ள போக்குவரத்து பிரச்சனை பற்றியும் பேசினார்.எனக்கு சாரதிபத்திரம் மாற்றிக் கொண்டு வந்தபடியால் பிரச்சனை இல்லை என்றேன்.ஆ அது எப்படி செய்தநீ?நியூயோர்க்கில் உள்ள அலுவலகத்தில் 2 படமும் கொண்டு போக உடனேயே மாற்றித் தருகிறார்கள் என்றேன்.அட மடையா எனக்கு அது தெரியாதா?

கொழும்பில கொண்டு போய் மாற்றிநியா என்றார்.இல்லை என்றதும் நல்லகாலம் தப்பிவிட்டாய் கொழும்பில கொண்டு போய் மாற்றினால்த் தான் அங்கு வாகனமோ மோட்டார்சைக்கிளோ ஓடலாம் என்றார்.எனக்கு அடிநுனி விழங்கவில்லை.அவருக்கும் சரியான விழக்கம் இல்லை.ஆனாலும் கொழும்பில் இந்த சாரதிப்பத்திரம் காட்டி அவர்கள் தரும் சாரதிப்பத்திரத்துடன் ஓடி திரும்பவும் அதை அவர்களிடமே ஒப்படைத்துவிட்டே வரவேண்டும் என்றார்.

இதுவரை இதைப்பற்றி எதுவுமே அறிந்திருக்கவில்லை என்பதால் இங்கு யாராவது இப்படி சாரதிபத்திரம் மாற்றியிருக்கிறீர்களா?
எனது நண்பன் சொன்னது சரியான தகவல் என்றால் எப்படி எங்கு மாற்ற வேண்டும் என்பதை விளக்கமாக யாரும் எழுத முடியுமா?

Link to comment
Share on other sites

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 15/4/2020 at 00:45, ஈழப்பிரியன் said:

ஒரு கோலிங்காட் வாங்கி இலங்கையில் உள்ள யயய அலுவலகத்துடன் தான் தொடர்பு கொள்ள வேண்டும்.
நியூயோர்க் என்றால் தெரிந்த கடைகளில் சுறண்டிப் போட்டு நம்பரைச் சொல்லு என்று சொல்லலாம்.
இங்கு எங்கு போவது?

https://www.g3telecom.com/

நான் இவர்களிடம் தான் ஒன்லைன் இல் பதிவு செய்து பாவிப்பது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

என்னை மறித்ததும் ஓரமாக நிற்பாட்டி தலைக் கவசத்தை கழற்றி மனைவியிடம் கொடுத்துவிட்டு ஆவணங்களை எடுக்க தயாராகும் போது ஐயா ஐயா நீங்கள் போங்கோ என்றார்கள்.புறப்பட்டு போகும் போது தான் மனைவி கெல்மட்டைக் கழற்றியதால் தலையைப் பார்த்துட்டு போகச் சொல்லியிருக்கிறாங்கள் என்றா.எனக்கும் அப்பதான் என்நிலை விளங்கியது.அதுவும் நல்லதாகவே இருந்தது.

தல! உங்க முகராசி அப்பிடி! :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, ஈழப்பிரியன் said:

நன்றி சபேஸ்.
இது இலகுவாக கதைக்கக் கூடிய மாதிரி உள்ளதா?

ஓம் அண்ணா.  நாங்கள் பல வருடங்களாக பாவிக்கிறோம் .  அத்துடன் காலிங் கார்ட்(calling card)  போல மிகுதியை தொலைக்க தேவை இல்லை.  மிகுதி அப்படியே இருக்கும்.   நிமிடத்துக்கு ஒன்று இரண்டு சதம் அதிகமாக எடுக்குமோ தெரியவில்லை.   காலிங் கார்ட் இல் அநேகம் பேலன்ஸ்(balance) காணாமல் போவதிலும் இது பரவாயில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலருக்கும் பயன்படக் கூடிய... நல்லதொரு பதிவு, ஈழப்பிரியன்.

நான்... அப்படி ஓட முயற்சிக்கவேயில்லை. ஏனென்றால்...
வாகனம் ஓடும் போது...  தற்செயலாக றோட்டில்,  
படுத்துக் கிடந்த,  நாயையோ... கோழியையோ...
அடித்தால்... முதலில், சரி பிழை பார்க்காமல்... 
சாரதிக்குத்தான்  தர்ம அடி  விழும் என்ற பயத்தில்....  :grin:
விஷப் பரீட்சை  வேண்டாம் என்று விட்டு விட்டேன்.  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சபேஸ்.ஒரு நிமிடத்துக்கு இலங்கைக்கு கதைக்க எவ்வளவு சதம் எடுக்கிறார்கள்.ஏனென்றால் கூகிள் வெய்ஸ் மூலமாக கதைக்க அமெரிக்க 14சதமே எடுக்கிறார்கள்.தற்சமயம் அதையே எடுத்து வைத்திருக்கிறேன்.10 டாலரில் இருந்து எத்தனை டாலரும் போடலாம்.

29 minutes ago, Sabesh said:

ஓம் அண்ணா.  நாங்கள் பல வருடங்களாக பாவிக்கிறோம் .  அத்துடன் காலிங் கார்ட்(calling card)  போல மிகுதியை தொலைக்க தேவை இல்லை.  மிகுதி அப்படியே இருக்கும்.   நிமிடத்துக்கு ஒன்று இரண்டு சதம் அதிகமாக எடுக்குமோ தெரியவில்லை.   காலிங் கார்ட் இல் அநேகம் பேலன்ஸ்(balance) காணாமல் போவதிலும் இது பரவாயில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sabesh said:

https://www.g3telecom.com/

நான் இவர்களிடம் தான் ஒன்லைன் இல் பதிவு செய்து பாவிப்பது

நன்றி சபேஸ்.
இது இலகுவாக கதைக்கக் கூடிய மாதிரி உள்ளதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, குமாரசாமி said:

தல! உங்க முகராசி அப்பிடி! :cool:

ஊரில ஐயா என்று விழிப்பது வயது போனவர்களையே.
அதையே தான் அவர்களும் செய்தார்கள்.

சாரதி அனுமதிப்பத்திரம் கேட்டிருந்தால் தல என்ன மாதிரி ஆகியிருப்பாரோ?
அந்த நேரம் குற்றமில்லை என்றே எண்ணினேன்.இப்போ ஒரு கேள்விக் குறியே.
யாராவது தெளிவுபடுத்தினால்த் தான் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

பலருக்கும் பயன்படக் கூடிய... நல்லதொரு பதிவு, ஈழப்பிரியன்.

நான்... அப்படி ஓட முயற்சிக்கவேயில்லை. ஏனென்றால்...
வாகனம் ஓடும் போது...  தற்செயலாக றோட்டில்,  
படுத்துக் கிடந்த,  நாயையோ... கோழியையோ...
அடித்தால்... முதலில், சரி பிழை பார்க்காமல்... 
சாரதிக்குத்தான்  தர்ம அடி  விழும் என்ற பயத்தில்....  :grin:
விஷப் பரீட்சை  வேண்டாம் என்று விட்டு விட்டேன்.  :)

சிறி ஊரிலும் சரி இங்கும் சரி நான் தனியே எங்கும் போவது கிடையாது.
ஊரில் போய் நிற்கும் காலங்களில் இருவரும் எங்காவது போவதென்றால் ஆட்டே பிடிக்க வேண்டும்.அல்லது இரண்டு பேரின் உதவியுடன் இரண்டு மோட்டார்சைக்கிள் தேவை.இதனாலேயே அங்கு மோட்டார்சைக்கிள் ஓடுவதற்காக இங்கு சாரதி அனுமதிப்பத்திரம் எடுத்து வைத்திருக்கிறேன்.

மற்றும்படி நீங்கள் சொல்வதும் சரியே.நாய் கோழியை விடவும் ஆக்களை அடித்தால் எப்படி இருக்கும்.துவைத்து எடுத்துவிடுவார்கள்.அந்தப் பயமும் இருக்கும்.

இப்போது கூடப் பேர் இரட்டைப் பிரஜாஉரிமை எடுத்து வைத்திருப்பதால் இந்தப் பிரச்சனைகள் தெரியாமல் இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஈழப்பிரியன் said:

தனி ஜீவன் இரட்டை பிரஜாஉரிமையாக இருக்கலாம்.
சுற்றுலாவில் வாறவர்கள் பற்றியே எனது கேள்வி.
உங்களுக்கு தெரிந்த போக்குவரத்து பொலிஸ் யாரும் இருந்தா விசாரித்து பாருங்களேன்.

ம்ம் கேட்டுப்பார்க்கிறேன் எனக்கு தெரிந்த பொலிஸ்காரர்கள் அனைவருக்கும் வேலை விசி எனது சித்தி மகன் 4 பேர் பொலிசில் இருக்கிறார்கள் ஒருவர் விலகி விட்டார்  கேட்டு தகவல் சொல்கிறேன். அண்ண

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது ஒன்றும் பிரச்சினையில்லை பிரியன்.....நீங்கள் வாகனப் பாத்திரங்களை சரியாகக் கவனித்துப் பார்த்து ஓரமாய் கொண்டுபோய் (ரோட்டில் நின்றால் வார வாகனங்கள் அடித்து விடும்) குடுத்தால் அவர்களும் அதை சரிபார்த்து உங்களை மரியாதையுடன் அனுப்பி வைப்பார்கள்.வான் சாரதிகள் செய்வதையெல்லாம் நீங்கள் பார்க்கவில்லையா......!   😐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

நான் இப்படி ஒன்றுதான் தபாற்கந்தோரில் £ 5.50 கட்டி சிறீலாங்காவிற்கு என்று  எடுப்பது. மலையகத்தை தவிர மற்ற இடங்களில் எல்லாம் காட்டியிருக்கிறேன் ஒரு பிரச்சனையும் இருக்கவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ராசவன்னியன் said:

எவ்வளவு 'நாசூக்காக' சொல்கிறார் சுவி ஐயா..! :innocent:

சூதனமாக அடுத்தமுறை 'கவனித்து' நடவுங்கள் திரு.ஈழப்பிரியன்.. :)

2015இல் போகும் போது பொலிஸ் கெடுபிடி குறைவு.இதுவே 2017இல் வெளிநாட்டுக்காரரே கோட்டில் இழுபட்டதாக சொன்னார்கள்
அதைவிட நான் சரியான ஆவணங்கள் கொண்டு போனேன்.

12 hours ago, தனிக்காட்டு ராஜா said:

சிலநேரம் உங்கள் அதிஸ்ரம் விடுவார்கள் சில நேரம் பிழை பிடிப்பவனாக இருந்தால் மாற்றி எடுக்க வேண்டும் என நினைக்கிறன் ஜீவன் அண்ணனுக்கு லைசன்ஸ் இருந்தாலும் கார் ஓட்ட அனுமதி கிடைக்கவில்லை மோட்டார் சைக்கிள் மாத்திரம் தான் ஓட்டலாம் 

தற்போது அவர் மாற்றி எடுத்துள்ளார்  என நினைக்கிறன் 

தனி ஜீவன் இரட்டை பிரஜாஉரிமையாக இருக்கலாம்.
சுற்றுலாவில் வாறவர்கள் பற்றியே எனது கேள்வி.
உங்களுக்கு தெரிந்த போக்குவரத்து பொலிஸ் யாரும் இருந்தா விசாரித்து பாருங்களேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ம்ம் கேட்டுப்பார்க்கிறேன் எனக்கு தெரிந்த பொலிஸ்காரர்கள் அனைவருக்கும் வேலை விசி எனது சித்தி மகன் 4 பேர் பொலிசில் இருக்கிறார்கள் ஒருவர் விலகி விட்டார்  கேட்டு தகவல் சொல்கிறேன். அண்ண

நன்றி தனி
அவசரம் ஏதுமில்லை.
சிலவேளை அடுத்த வருடம் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

...அதைவிட நான் சரியான ஆவணங்கள் கொண்டு போனேன்.

சரியான ஆவணங்கள் மட்டும் போதாது ஐயா, "விட்டமின் "ப" வையும் சேர்த்து காட்டுங்கள், ராஜ மரியாதை கிடைக்கும்" என்றுதான் சொல்கிறோம்.. :)

இலங்கை காவலர்கள், அந்தளவிற்கு உத்தமர்களா..? அவங்களும் பாவமில்லையா..? இந்த மாதிரி நாலு 'வெளிநாட்டு ஆட்களிடம்' பார்த்தால் தானே உண்டு..! 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Maruthankerny said:

சர்வதேச ஓட்டுனர் பத்திரம் இருந்தால் உலகில் எங்கும் ஓடலாம் 
சவூதியில் சில மத சமூக பிரச்சனைகள் இருப்பதால் சில சர்வதேச பத்திரங்கள் 
செல்லாது ..உள்ளூரிலும் ஒன்றை பெற வேண்டும். உதாரணத்துக்கு பெண்கள் ஓட முடியாது
(இப்போது ஓடலாம் என்று கொஞ்சம் தளர்வு வருகிறது) 
குழப்புறவன் தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பிக்கொண்டுதான் இருப்பர்கள் 

நான் இங்கு இருக்கும் ஸ்டேட் ஐடி உடன்தான் பல நாடுகளில் கார் வாடகைக்கு எடுத்து ஓடியிருக்கிறேன் 
கடந்த ஆண்டு இத்தாலி சென்றபோது தர மாட்டொம் என்று சொல்லிவிட்டார்கள். பின்பு ஒரே ஒரு வாடகை 
கொம்பனி மட்டும் தந்தார்கள் ........ நானும் ஒரு சர்வதேச ஐடி எடுக்க வேண்டும்தான் ... கொரோனவுக்கால் 
உயிர் தப்பி பிழைத்தால் யோசிப்பம் 

அமெரிக்காவில் எந்த மாநிலத்தில் லைசென்ஸ் எடுத்தாலும் சகல மாநிலங்கள் மட்டுமல்லாது கனடா மெக்சிக்கோவிலும் வாடகை கார் எடுக்கலாம்.

12 hours ago, நீர்வேலியான் said:

நீங்கள் இங்கு எடுக்கும் இன்டர்நேஷனல் லைசென்ஸ் ஐ , அங்கு Galleface இல் இருக்கும் Automobile Association of Ceylon என்ற ஒரு நிறுவனத்திடம் கொடுத்து attest பண்ண வேண்டும், அதன் பிறகே நீங்கள் இலங்கையில் வாகனம் ஓட்ட முடியும், அதற்கு அவர்கள் $100 (என்று நினைக்கிறன் ) எடுப்பார்கள். பிரச்னை என்னவென்றால், நீங்கள் ஓரிரு நாட்கள் காத்திருக்க வேண்டும் என்று ஞாபகம் இருக்கிறது. நான் முன்பு ஒருமுறை (2011) இலங்கை போனபோது, இங்கு AAA  இல் எடுத்த இன்டர்நேஷனல் பெர்மிட் ஐ கொண்டு போய் அவர்களுடன் பேசினேன்,  நேரமின்மையால் அதற்கு வெயிட் பண்ணவில்லை, அத்துடன் எங்கள் கலிபோர்னியா லைசென்ஸ் இன் படி நாம் Motorbike ஓட முடியாது (உங்கள் நியூயார்க் லைசென்ஸ் எப்பிடி என்று தெரியாது), அதற்கு இங்கு motorbike ஓடிக்காட்டி லைசென்ஸ் அப்டேட் பண்ண வேண்டும், நான் அப்போது செய்திருக்கவில்லை, எமது இன்டர்நேஷனல் லைசென்ஸ் இலும் AAA அதை போட்டுவிட்டார்கள். இலங்கையில் அவர்களும் அதை சுட்டிக்காட்டினார்கள், எனவே நான் அந்த முறைச்சியை கை விட்டு விட்டேன். AAA போன்று அவர்களும் ஒரு தனியார் club, அவர்களுடன் நீங்கள் இங்கிருந்தே பேசலாம், விளக்கமாக சொல்லுவார்கள்.     

நீர்வேலியான் நீங்க கிட்ட வந்துட்டீங்க.ஆனாலும் 100$ என்பது தவறாக இருக்கலாம்.

12 hours ago, நீர்வேலியான் said:

அத்துடன் எங்கள் கலிபோர்னியா லைசென்ஸ் இன் படி நாம் Motorbike ஓட முடியாது (உங்கள் நியூயார்க் லைசென்ஸ் எப்பிடி என்று தெரியாது), அதற்கு இங்கு motorbike ஓடிக்காட்டி லைசென்ஸ் அப்டேட் பண்ண வேண்டும்,

எல்லா மாநிலங்களிலும் அப்படித் தான்.
இலங்கை போய் ஓடித்திரியவென்றே இங்கே மோட்டார்சைக்கிள் லைசன்சும் எடுத்தேன்.
இப்ப எல்லாம் வேஸ்ட் போல இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, நீர்வேலியான் said:

AAA போன்று அவர்களும் ஒரு தனியார் club, அவர்களுடன் நீங்கள் இங்கிருந்தே பேசலாம், விளக்கமாக சொல்லுவார்கள்.     

வட்சப் வைபருகளை நம்பி வீட்டு தொலைபேசியை கைவிட்டாச்சு.
இப்படியான தருணங்களில் ஓடி முழிக்க வேண்டி இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, சுவைப்பிரியன் said:

எனக்கு இங்கு எழுதியிருப்பது பெரிதாக விழங்கவில்லை.நான் எனது சுவிஸ் சாரதிப்பத்திரத்தை வைத்து இலங்கை சாரதிப்பத்திரம் எடுத்துள்ளேன் .அதற்க்கு மெடிக்கல் எடுக்க வேணும்.8 வருடம் இலகு ரக வாகணங்களுக்கு மட்டும் தருவார்கள்.8 வருடம் முடிய மீண்டும் மெடிக்கல் எடுத்தால் அடுத்த 8வருடம்.இதெல்லாம் இலங்கை குடியுரிமை உள்ளவரகளுக்கு என்று நினைக்கிறேன்.

சுவை நீங்க இரட்டை பிரஜையாக இருக்கலாம்.எனது கேள்வி சுற்றுலா விசாவில் போகும் போது என்ன விதமான நடவடிக்கை என்பதே.

மேலே மீரா எழுதியது போலவே எனது லைசன்சும்.
இருந்தும் கொழும்பில் வேறெரு லைசன்ஸ் எடுக்க வேண்டுமென்கிறார்கள்.

களஉறவுகள் யாருக்காவது போக்குவரத்து பொலிஸ் யாரும் தொடர்புகள் இருந்தால் சரியான தகவல் எடுக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

சுவை நீங்க இரட்டை பிரஜையாக இருக்கலாம்.எனது கேள்வி சுற்றுலா விசாவில் போகும் போது என்ன விதமான நடவடிக்கை என்பதே.

மேலே மீரா எழுதியது போலவே எனது லைசன்சும்.
இருந்தும் கொழும்பில் வேறெரு லைசன்ஸ் எடுக்க வேண்டுமென்கிறார்கள்.

களஉறவுகள் யாருக்காவது போக்குவரத்து பொலிஸ் யாரும் தொடர்புகள் இருந்தால் சரியான தகவல் எடுக்கலாம்.

உங்களிடம் சர்வதேச அனுமதி பாத்திரம் இருந்தால் 
உலகில் எல்லா நாட்டிலும் ஓடலாம்.

சும்மா புரளி கிளப்புகிறவர்கள்தான் புரளி கிளப்பிக்கொண்டு இருப்பார்கள் 
சர்வதேச அனுமதி பாத்திரம் என்பதன் பொருளே 
சர்வதேசமும் ஓடலாம் என்பதுதான்.

நான் மேலே கூறியது வெறும் ஸ்டேட் ஐடியுடேனே பல நாடுகளில் 
நான் வாடகைக்கு கார் எடுத்த்து ஓடி இருக்கிறேன் என்று 
பல ஐரோப்பிய நாடுகள் துபாய் எல்லாம் ஓடி இருக்கிறேன் 

கடந்த வருடம் முதன் முதலாக இத்தாலியில் தர முடியாது என்று மறுத்துவிட்டார்கள் 
இனி நானும் ட்ரிபிள் ஏ யில் ஒரு சர்வதேச அனுமதி பாத்திரம் வாங்க வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Maruthankerny said:

அந்த சர்வதேச அனுமதிப் பத்திரத்தில் பாவிக்கக் கூடிய நாடுகள் என்று இலங்கையின் பெயரும் போட்டிருக்கிறார்கள்.அதனாலேயே அதை 2015 இல் 15 கூ க்கும் 2017 இல் 20கூ உம் கொடுத்து எடுத்தேன்.
இதில் ஏதோவொரு பிரச்சனை உள்ளது. என்னவென்று தான் புரியவில்லை.
ஒரு கோலிங்காட் வாங்கி இலங்கையில் உள்ள யயய அலுவலகத்துடன் தான் தொடர்பு கொள்ள வேண்டும்.
நியூயோர்க் என்றால் தெரிந்த கடைகளில் சுறண்டிப் போட்டு நம்பரைச் சொல்லு என்று சொல்லலாம்.
இங்கு எங்கு போவது?

12 minutes ago, Maruthankerny said:

இனி நானும் ட்ரிபிள் ஏ யில் ஒரு சர்வதேச அனுமதி பாத்திரம் வாங்க வேண்டும். 

இது ஒருவருடத்துக்கே செல்லுபடியாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, MEERA said:

spacer.png

நான் இப்படி ஒன்றுதான் தபாற்கந்தோரில் £ 5.50 கட்டி சிறீலாங்காவிற்கு என்று  எடுப்பது. மலையகத்தை தவிர மற்ற இடங்களில் எல்லாம் காட்டியிருக்கிறேன் ஒரு பிரச்சனையும் இருக்கவில்லை. 

மீரா உங்கள் தகவல்களுக்கு நன்றி.
உங்களது AA என்று இருக்கு இங்கு AAA என்ற பெயரில் உள்ள இடத்தில்த் தான் எடுத்தேன்AAA.COM.அந்த விண்ணப்பத்திலேயே எந்தெந்த நாடுகளில் பாவிக்கலாம் என்றதில் இலங்கையின் பெயரும் இருக்கிறது.அது தான் எனக்கும் புரியவில்லை.
நேற்று கொழும்பிலுள்ள ஒருவரைக் கேட்டபோது ஆமா அங்கையிருந்து கொண்டு வருவதை இங்கு கொடுத்து இவர்கள் தரும் லைசன்ஸ் உடன் ஓடி திரும்ப அதைக் கொடுத்திட்டு உங்கள் லைசன்சை வாங்கிக் கொண்டு போகலாம் என்றார்.
நல்லகாலம் இந்த தடவை போகவில்லை.அடுத்த தடவை போவதற்கிடையில் இதற்கு ஒரு முடிவு கண்டாகணும்.

6 hours ago, suvy said:

அது ஒன்றும் பிரச்சினையில்லை பிரியன்.....நீங்கள் வாகனப் பாத்திரங்களை சரியாகக் கவனித்துப் பார்த்து ஓரமாய் கொண்டுபோய் (ரோட்டில் நின்றால் வார வாகனங்கள் அடித்து விடும்) குடுத்தால் அவர்களும் அதை சரிபார்த்து உங்களை மரியாதையுடன் அனுப்பி வைப்பார்கள்.வான் சாரதிகள் செய்வதையெல்லாம் நீங்கள் பார்க்கவில்லையா......!   😐

சுவி நீங்கள் சொல்வது மாதிரி என்றால் லைசன்சே இல்லாமல் போகலாமே.
மறிக்கும் போது கவனிக்கலாமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, suvy said:

.....நீங்கள் வாகனப் பாத்திரங்களை சரியாகக் கவனித்துப் பார்த்து ஓரமாய் கொண்டுபோய் (ரோட்டில் நின்றால் வார வாகனங்கள் அடித்து விடும்) குடுத்தால் அவர்களும் அதை சரிபார்த்து உங்களை மரியாதையுடன் அனுப்பி வைப்பார்கள்...

எவ்வளவு 'நாசூக்காக' சொல்கிறார் சுவி ஐயா..! :innocent:

சூதனமாக அடுத்தமுறை 'கவனித்து' நடவுங்கள் திரு.ஈழப்பிரியன்.. :)

536043-policeman-010617.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிலநேரம் உங்கள் அதிஸ்ரம் விடுவார்கள் சில நேரம் பிழை பிடிப்பவனாக இருந்தால் மாற்றி எடுக்க வேண்டும் என நினைக்கிறன் ஜீவன் அண்ணனுக்கு லைசன்ஸ் இருந்தாலும் கார் ஓட்ட அனுமதி கிடைக்கவில்லை மோட்டார் சைக்கிள் மாத்திரம் தான் ஓட்டலாம் 

தற்போது அவர் மாற்றி எடுத்துள்ளார்  என நினைக்கிறன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச ஓட்டுனர் பத்திரம் இருந்தால் உலகில் எங்கும் ஓடலாம் 
சவூதியில் சில மத சமூக பிரச்சனைகள் இருப்பதால் சில சர்வதேச பத்திரங்கள் 
செல்லாது ..உள்ளூரிலும் ஒன்றை பெற வேண்டும். உதாரணத்துக்கு பெண்கள் ஓட முடியாது
(இப்போது ஓடலாம் என்று கொஞ்சம் தளர்வு வருகிறது) 
குழப்புறவன் தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பிக்கொண்டுதான் இருப்பர்கள் 

நான் இங்கு இருக்கும் ஸ்டேட் ஐடி உடன்தான் பல நாடுகளில் கார் வாடகைக்கு எடுத்து ஓடியிருக்கிறேன் 
கடந்த ஆண்டு இத்தாலி சென்றபோது தர மாட்டொம் என்று சொல்லிவிட்டார்கள். பின்பு ஒரே ஒரு வாடகை 
கொம்பனி மட்டும் தந்தார்கள் ........ நானும் ஒரு சர்வதேச ஐடி எடுக்க வேண்டும்தான் ... கொரோனவுக்கால் 
உயிர் தப்பி பிழைத்தால் யோசிப்பம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ஈழப்பிரியன் said:

மீரா உங்கள் தகவல்களுக்கு நன்றி.
உங்களது AA என்று இருக்கு இங்கு AAA என்ற பெயரில் உள்ள இடத்தில்த் தான் எடுத்தேன்AAA.COM.அந்த விண்ணப்பத்திலேயே எந்தெந்த நாடுகளில் பாவிக்கலாம் என்றதில் இலங்கையின் பெயரும் இருக்கிறது.அது தான் எனக்கும் புரியவில்லை.
நேற்று கொழும்பிலுள்ள ஒருவரைக் கேட்டபோது ஆமா அங்கையிருந்து கொண்டு வருவதை இங்கு கொடுத்து இவர்கள் தரும் லைசன்ஸ் உடன் ஓடி திரும்ப அதைக் கொடுத்திட்டு உங்கள் லைசன்சை வாங்கிக் கொண்டு போகலாம் என்றார்.
நல்லகாலம் இந்த தடவை போகவில்லை.அடுத்த தடவை போவதற்கிடையில் இதற்கு ஒரு முடிவு கண்டாகணும்.

சுவி நீங்கள் சொல்வது மாதிரி என்றால் லைசன்சே இல்லாமல் போகலாமே.
மறிக்கும் போது கவனிக்கலாமே.

நீங்கள் இங்கு எடுக்கும் இன்டர்நேஷனல் லைசென்ஸ் ஐ , அங்கு Galleface இல் இருக்கும் Automobile Association of Ceylon என்ற ஒரு நிறுவனத்திடம் கொடுத்து attest பண்ண வேண்டும், அதன் பிறகே நீங்கள் இலங்கையில் வாகனம் ஓட்ட முடியும், அதற்கு அவர்கள் $100 (என்று நினைக்கிறன் ) எடுப்பார்கள். பிரச்னை என்னவென்றால், நீங்கள் ஓரிரு நாட்கள் காத்திருக்க வேண்டும் என்று ஞாபகம் இருக்கிறது. நான் முன்பு ஒருமுறை (2011) இலங்கை போனபோது, இங்கு AAA  இல் எடுத்த இன்டர்நேஷனல் பெர்மிட் ஐ கொண்டு போய் அவர்களுடன் பேசினேன்,  நேரமின்மையால் அதற்கு வெயிட் பண்ணவில்லை, அத்துடன் எங்கள் கலிபோர்னியா லைசென்ஸ் இன் படி நாம் Motorbike ஓட முடியாது (உங்கள் நியூயார்க் லைசென்ஸ் எப்பிடி என்று தெரியாது), அதற்கு இங்கு motorbike ஓடிக்காட்டி லைசென்ஸ் அப்டேட் பண்ண வேண்டும், நான் அப்போது செய்திருக்கவில்லை, எமது இன்டர்நேஷனல் லைசென்ஸ் இலும் AAA அதை போட்டுவிட்டார்கள். இலங்கையில் அவர்களும் அதை சுட்டிக்காட்டினார்கள், எனவே நான் அந்த முறைச்சியை கை விட்டு விட்டேன். AAA போன்று அவர்களும் ஒரு தனியார் club, அவர்களுடன் நீங்கள் இங்கிருந்தே பேசலாம், விளக்கமாக சொல்லுவார்கள்.     

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அமெரிக்க ஐடியில் ஒரு தவறு நீங்கள் எப்போது சாரதி பத்திரம் 
எடுத்தீர்கள் என்பது இருக்காது. புதுப்பிக்கும் திகதிதான் இருக்கும் 
அப்போ நீங்கள் எவ்வ்ளவு காலம் அனுபவம் வாய்ந்தவர் என்பது தெரியாது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.