• 0
ஈழப்பிரியன்

சர்வதேச சாரதி அனுமதி பத்திரத்துடன் இலங்கையில் வாகனம்,மோட்டார்சைக்கள் ஓட்டி இருக்கிறீர்களா?

Question

வணக்கம் கள உறவுகளே
2015  2017 களில் இலங்கை போனபோது கார் மோட்டார்சைக்கிள் ஓடுவதற்கு என்று சர்வதேச அனுமதிப்பத்திரமாக AAA க்கு 15$ கட்டி எடுத்துப் போயிருந்தேன்.

இலங்கையிலும் வீட்டில் இரண்டு மோட்டார் சைக்கிள் நிற்பதால் எனக்கு தேவையான நேரங்களில் எங்கும் போகவரக் கூடியவாறு இருந்தது.
அனேகமாக அங்கு நின்ற நாட்களில் ஒவ்வொரு நாளும் ஓடித் திரிந்திருக்கறேன்.
ஒரேஒரு நாள் கோப்பாய் மானிப்பாய் ஊடாக பண்டத்தரிப்பு போகும் போது சங்கானையில் பொலிஸ் மறித்தார்கள்.ஏற்கனவே பலரையும் மறித்து வைத்து சோதனை செய்து கொண்டிருந்தார்கள்.
என்னை மறித்ததும் ஓரமாக நிற்பாட்டி தலைக் கவசத்தை கழற்றி மனைவியிடம் கொடுத்துவிட்டு ஆவணங்களை எடுக்க தயாராகும் போது ஐயா ஐயா நீங்கள் போங்கோ என்றார்கள்.புறப்பட்டு போகும் போது தான் மனைவி கெல்மட்டைக் கழற்றியதால் தலையைப் பார்த்துட்டு போகச் சொல்லியிருக்கிறாங்கள் என்றா.எனக்கும் அப்பதான் என்நிலை விளங்கியது.அதுவும் நல்லதாகவே இருந்தது.


அண்மையில் ஒரு நண்பருடன் பேசும்போது இலங்கை போய்வந்த விடயங்கள் பற்றி பேசும்போது அங்குள்ள போக்குவரத்து பிரச்சனை பற்றியும் பேசினார்.எனக்கு சாரதிபத்திரம் மாற்றிக் கொண்டு வந்தபடியால் பிரச்சனை இல்லை என்றேன்.ஆ அது எப்படி செய்தநீ?நியூயோர்க்கில் உள்ள அலுவலகத்தில் 2 படமும் கொண்டு போக உடனேயே மாற்றித் தருகிறார்கள் என்றேன்.அட மடையா எனக்கு அது தெரியாதா?

கொழும்பில கொண்டு போய் மாற்றிநியா என்றார்.இல்லை என்றதும் நல்லகாலம் தப்பிவிட்டாய் கொழும்பில கொண்டு போய் மாற்றினால்த் தான் அங்கு வாகனமோ மோட்டார்சைக்கிளோ ஓடலாம் என்றார்.எனக்கு அடிநுனி விழங்கவில்லை.அவருக்கும் சரியான விழக்கம் இல்லை.ஆனாலும் கொழும்பில் இந்த சாரதிப்பத்திரம் காட்டி அவர்கள் தரும் சாரதிப்பத்திரத்துடன் ஓடி திரும்பவும் அதை அவர்களிடமே ஒப்படைத்துவிட்டே வரவேண்டும் என்றார்.

இதுவரை இதைப்பற்றி எதுவுமே அறிந்திருக்கவில்லை என்பதால் இங்கு யாராவது இப்படி சாரதிபத்திரம் மாற்றியிருக்கிறீர்களா?
எனது நண்பன் சொன்னது சரியான தகவல் என்றால் எப்படி எங்கு மாற்ற வேண்டும் என்பதை விளக்கமாக யாரும் எழுத முடியுமா?

Share this post


Link to post
Share on other sites

Recommended Posts

  • 0

நன்றி சபேஸ்.ஒரு நிமிடத்துக்கு இலங்கைக்கு கதைக்க எவ்வளவு சதம் எடுக்கிறார்கள்.ஏனென்றால் கூகிள் வெய்ஸ் மூலமாக கதைக்க அமெரிக்க 14சதமே எடுக்கிறார்கள்.தற்சமயம் அதையே எடுத்து வைத்திருக்கிறேன்.10 டாலரில் இருந்து எத்தனை டாலரும் போடலாம்.

29 minutes ago, Sabesh said:

ஓம் அண்ணா.  நாங்கள் பல வருடங்களாக பாவிக்கிறோம் .  அத்துடன் காலிங் கார்ட்(calling card)  போல மிகுதியை தொலைக்க தேவை இல்லை.  மிகுதி அப்படியே இருக்கும்.   நிமிடத்துக்கு ஒன்று இரண்டு சதம் அதிகமாக எடுக்குமோ தெரியவில்லை.   காலிங் கார்ட் இல் அநேகம் பேலன்ஸ்(balance) காணாமல் போவதிலும் இது பரவாயில்லை.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Answer this question...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.