Jump to content

3 வருடம் வீட்டிற்கே போக மாட்டேன் - சுழற்பந்து வீச்சாளர்!


Recommended Posts

 3 வருடம் வீட்டிற்கே போக மாட்டேன் - சுழற்பந்து வீச்சாளர்!

3 வருடம் வீட்டிற்கே போக மாட்டேன் - சுழற்பந்து வீச்சாளர்!

 

 

 
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வரும் 14 ஆம் திகதியுடன் 21 நாட்கள் முடிவடைகிறது.

ஆனால் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வரவில்லை என்பதால் மேலும் இரண்டு வாரங்கள் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவை திரும்ப பெற்றபின் மூன்று வருடங்கள் வெளியே தங்க முடியும் என்று சுழற்பந்து வீச்சாளர் சாஹல் தெரிவித்துள்ளார்.

சாஹல் இதுகுறித்து கூறுகையில் ‘‘லாக்டவுன் முடிந்து நான் விட்டை விட்டு வெளியே சென்றபின், என்னுடைய விட்டுக்கு திரும்பமாட்டேன். இனிமேல் என்னால் வீட்டுக்குள் இதுபோன்று நீண்ட நாட்கள் இருக்க முடியாது. தற்போது வீட்டிற்குள் இருந்த நாட்கள் மூன்று வருடத்திற்கு இணையானது. பக்கத்தில் உள்ள ஓட்டலில் வசிக்க முடியும். ஆனால் வீட்டில் தங்க முடியாது. இதுதான் தற்போது என்னுடைய நிலை. லாக்டவுன் நாட்களை இனிமேலும் தாங்க முடியாது’’ என்றார்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் காரணம்  😁😀 பாடாய் படுத்திப்போட்டா

கொரோனா பரவும் நேரத்துல இந்த விளையாட்டு தேவையா சாஹல்..? அதுவும் கன்னத்தை கிள்ளி...

கொரோனா பரவும் நேரத்துல இந்த விளையாட்டு தேவையா சாஹல்..? அதுவும் கன்னத்தை கிள்ளி...

கொரோனா பரவும் இந்த நேரத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் சாஹலுடன் இளம்பெண் செய்த டிக்-டாக் வீடியோ சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச அளவிலான கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் ஐ.பி.எல் தொடர் ஒத்திவைக்கப்பட்டு வீரர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி பிசிசிஐ அறிவுறுத்தி உள்ளது. கிரிக்கெட் வீரர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்டோர் கொரோனா பரவாமல் இருக்க கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது எப்படி என்ற விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் இளம் பெண்ணுடன் சேர்ந்து வெளியிட்டுள்ள டிக்-டாக் வீடியோ சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில், இளம்பெண் ஒருவர் சாஹலை சிரித்தப்படியே நடந்து வருகிறார். அப்போது தனது ஷூ லேஸை சரி செய்ய சாஹல் குனியும் போது சட்டென்று அந்த பெண் அவருக்கு பின் மறைந்து கொள்கிறார்.


அந்த பெண்ணை தேடுவது போல் சாஹல் போக்கு செய்ய அந்த பெண் அவருக்கு முன் வருகிறார். அந்த பெண்ணை செல்லமாக சலித்து கொள்ளும் சஹாலின் கன்னத்தை அவர் பிடித்து கிள்ளி விளையாடுகிறார்.

https://tamil.news18.com/news/coronavirus-latest-news/yuzvendra-chahal-gets-his-cheeks-pulled-in-tiktok-video-vjr-270039.html

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.