Jump to content

கொரோனா நோயாளிகளை குப்புறப்படுக்கவைப்பதால் அவர்களின் உயிர்களை காப்பாற்ற முடிகின்றது- சிஎன்என்


Recommended Posts

வெள்ளிக்கிழமை மருத்துவர் மங்களா நரசிம்மனிற்கு அவசர அழைப்பொன்று வந்தது.

40 வயது , கொரோனாவைரஸ் நோயாளியொருவர் ஆபத்தான நிலையிலிருந்தார். லோங்ஐலண்ட் யூவிஸ் மருத்துவமனையிலிருந்த அவரது சகாக்கள் அந்த நோயாளிக்கு செயற்கை சுவாசக்கருவியை வழங்கவேண்டுமா என வந்து பார்க்குமாறு அவரை கேட்டுக்கொண்டனர்.

நான் அங்கு வருவதற்கு முன்னர் அந்த நோயாளியை குப்புறபடுக்கவையுங்கள் ஏதாவது முன்னேற்றம் ஏற்படுகின்றதா என பார்ப்போம் என நரசிம்மன் தனது சக மருத்துவரிடம் தெரிவித்தார்.

நரசிம்மன் ஐசியூவிற்கு செல்லவில்லை ஆனால் அவரது முயற்சி வெற்றியளித்தது.

நோயாளிகளை குப்புறப்படுக்கவைப்பது,அவர்கள் தங்களிற்கு தேவையாக உள்ள அதிகளவான ஒக்சிசனை பெற்றுக்கொள்ள உதவுகின்றது என்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

நாங்கள் இதன் மூலம் நூறுவீதம் உயிர்களை காப்பாற்றுகின்றோம் என நரசிம்மன் தெரிவித்தார் என சிஎன்என் குறிப்பிட்டுள்ளது.

நரசிம்மன் நியுயோர்க்கில் 23 மருத்துவமனைகளை கொண்டுள்ள நோர்த்வெல்ஸ் கெயரின் அவசரசேவை பிரிவின் பிராந்திய இயக்குநராக பணியாற்றுகின்றார்.

இது மிகவும் இலகுவாக செய்யக்கூடிய விடயம்,நாங்கள் மிகச்சிறந்த முன்னேற்றத்தை கண்டுள்ளோம்,ஒவ்வொரு நோயாளியிலும் இதனை நாங்கள் செய்து பார்க்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

download.jpg

 

இது பலனளிப்பதை பார்த்ததும் நீங்கள் இதனை அதிகம் பயன்படுத்த விரும்புவீர்கள் என குறிப்பிட்டுள்ள கதிரேன் கிப்பேர்ட் என்ற மருத்துவர் இது உடனடியாக பலனளிக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் நோயளிகள் - கடுமையான சுவாச நோய் பாதிப்பின் காரணமாக உயிரிழக்கின்றனர்,காய்ச்சல் நிமோனியா போன்றவற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளிற்கும் இது பொருந்தும்.

ஏழு வருடத்திற்கு முன்னர் பிரான்சின் மருத்துவர்கள் வென்டிலேட்டரில் உள்ள நோயாளிகளை குப்புறபடுக்கவைத்தால் அவர்கள் மரணிப்பதற்கான வாய்ப்பு குறைவு என தெரிவித்திருந்தனர்.

அதன் பின்னர் அமெரிக்க மருத்துவர்கள் நோயாளிகளிற்கு இந்த முறையை பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது கொரோனவைரஸ் நோயாளிகள் மத்தியில் அவர்கள் இதனை அதிகம் பயன்படுத்துகின்றனர்.அது பலனளிக்க ஆரம்பித்துள்ளது.

patients_in_stomach1.jpg


ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட நோயாளி குப்புறப்படுக்கவைக்கப்பட்டவேளை அவரது குருதியில் ஒக்சிசன் 85 வீதத்திலிருந்து 98 வீதமாக அதிகரித்தது.

இந்த முறை காரணமாக நுரையீரலிற்கு ஒக்சிசன் செல்வது இலகுவாகின்றது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வென்டிலேட்டரில் உள்ள நோயாளிளை குப்புறப்படுக்கவைப்பதால் சில பிரச்சினைகளும் உள்ளன.அவ்வேளை அவர்களிற்கு அதிக மயக்கமருந்துகள் அவசியம் அதனால் அவர்கள் அதிக நேரம் ஐசியூவில் இருக்கவேண்டிய நிலையேற்படுகின்றது எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/79961

Link to comment
Share on other sites

'Such a simple thing to do': Why positioning Covid-19 patients on their stomachs can save lives

On Friday, Dr. Mangala Narasimhan received an urgent call. A man in his 40s with Covid-19 was in a dire situation, and her colleague wanted her to come the intensive care unit at Long Island Jewish Hospital to see if he needed to be put on life support.

Before I come over there, Narasimhan told the other doctor, try turning the patient over onto his stomach and see if that helps.
Narasimhan didn't need to go the ICU. The flip worked.

Doctors are finding that placing the sickest coronavirus patients on their stomachs -- called prone positioning - helps increase the amount of oxygen that's getting to their lungs.

"We're saving lives with this, one hundred percent," said Narasimhan, the regional director for critical care at Northwell Health, which owns 23 hospitals in New York. "It's such a simple thing to do, and we've seen remarkable improvement. We can see it for every single patient."

"Once you see it work, you want to do it more, and you see it work almost immediately," added Dr. Kathryn Hibbert, director of the medical ICU at Massachusetts General Hospital.

https://www.cnn.com/2020/04/14/health/coronavirus-prone-positioning/index.html

 

 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தியை யாழ்கள மருத்துவர்கள் உறுதிப்படுத்த முடியுமா?

நம்ப கஷ்டமாக இருக்கு. குப்புற படுக்கும் போது மூச்செடுப்பது சிரமமே

Link to comment
Share on other sites

இது புதிய கண்டுபிடிப்பு அல்ல. இத்தாலியிலும் இவ்வாறு படுக்க வைத்துள்ளனர். கொரோனா வைரஸ் நுரையீரலைத் தாக்கி அதன் சிலபகுதிகளை அழிப்பதால் மூச்சித் திணறல் உண்டாவதால் செயற்கை முறையில் ஒட்சிசன் வழங்கப்படுகிறது. நுரையீரலின் பாதிக்கப்பட்ட பாகங்களிலிருந்து நீர் சுரப்பதால் அந்த நீர் சுவாசக் கலங்களை அடைத்து ஒட்சிசன் கிரகிக்கப்படுவது தடை படுகிறது. முப்புறப் படுக்க வைப்பதால் அந்த நீர் சுவாசக் கலங்களை அடைப்பது தடுக்கப்பட்டு ஒட்சிசன் உடலில் செல்ல வழி ஏற்படும்.

சாதாரண நோயாளியைக் குப்புறப் படுக்க வைப்பதால் மூச்சு விடுவது கடினம். ஆகவே குப்புறப் படுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

 

https://www.rtbf.be/info/dossier/epidemie-de-coronavirus/detail_coronavirus-pourquoi-les-patients-des-soins-intensifs-sont-ils-allonges-sur-le-ventre?id=10463249 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, இணையவன் said:

இது புதிய கண்டுபிடிப்பு அல்ல. இத்தாலியிலும் இவ்வாறு படுக்க வைத்துள்ளனர். கொரோனா வைரஸ் நுரையீரலைத் தாக்கி அதன் சிலபகுதிகளை அழிப்பதால் மூச்சித் திணறல் உண்டாவதால் செயற்கை முறையில் ஒட்சிசன் வழங்கப்படுகிறது. நுரையீரலின் பாதிக்கப்பட்ட பாகங்களிலிருந்து நீர் சுரப்பதால் அந்த நீர் சுவாசக் கலங்களை அடைத்து ஒட்சிசன் கிரகிக்கப்படுவது தடை படுகிறது. முப்புறப் படுக்க வைப்பதால் அந்த நீர் சுவாசக் கலங்களை அடைப்பது தடுக்கப்பட்டு ஒட்சிசன் உடலில் செல்ல வழி ஏற்படும்.

சாதாரண நோயாளியைக் குப்புறப் படுக்க வைப்பதால் மூச்சு விடுவது கடினம். ஆகவே குப்புறப் படுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

 

https://www.rtbf.be/info/dossier/epidemie-de-coronavirus/detail_coronavirus-pourquoi-les-patients-des-soins-intensifs-sont-ils-allonges-sur-le-ventre?id=10463249 

 

கிட்டத்தட்ட 20வருடங்களுக்கு முன் இங்கே ஜேர்மனியில் எனக்கு தெரிந்த வயது வந்த தமிழ் பெண்மணி ஒருவருக்கு கடுமையான சளி பிடித்து மூச்சு எடுக்கமுடியாமல் போய் விட்டது. நாங்கள் அம்புலன்ஸ்சுக்கு ரெலிபோன் அடித்து வைத்தியசாலைக்கு கொண்டு போனோம்.நிலமை மோசமானதை அடுத்து அவசர சிகிச்சைப்பிரிவுக்கு மாறப்பட்டு செயற்கையாக கோமா நிலைக்கு கொண்டுவந்தார்கள். அதற்கு பின் நோயாளியை குப்பிற படுக்கை வைத்துத்தான் செயற்கை சுவாசம் கொடுத்தனர்.

 

Edited by குமாரசாமி
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • உலகில் புற்றுநோய் இல்லாத ஒரே நாடு பிஜி. எனும் திரி இணைத்தவரின் வேண்டுகோளின்படி நீக்கப்பட்டுள்ளது.  
  • LAST VISITED March 14, 2019 March 14, 2019 அருமையானதொரு கருத்தாளர் 2019 மார்ச் 14 க்கு பிறகு ஆள் இந்தப்பக்கம் இல்லையாமே பெயரை மாத்தி போட்டாரோ ?
  • இத்தால் குமாரசாமி ஆகிய நான் அஞ்சாம் வகுப்பு பெயில் என்பதை  சகல பெரும் குடிமக்களுக்கும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். 
  • (எம்.மனோசித்ரா) இறக்குமதி செய்யப்படவுள்ள சீன அரிசி , சேதன பசளையில் உற்பத்தி செய்யப்பட்டதா என எழுப்பப்பட்ட கேள்விக்கு , 'உண்மையாகவே அது குறித்து தெரியாது' என்று அமைச்சரவை பேச்சாளர்கள் மூவரும் குறிப்பிட்டனர்.  மேலும் இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் வினவுவதாகவும் அவர்கள் உறுதியளித்தனர். வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு 19 ஆம் திகதி புதன்கிழமை அன்று இடம்பெற்ற போது , 'சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள அரிசி சேதன பசளையால் உற்பத்தி செய்யப்பட்டதா?' என்று ஊடகவியலாளர் ஒருவரால் கேள்வியெழுப்பப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் போதே அமைச்சரவை பேச்சாளர் டலஸ் அழகப் பெரும மேற்கண்டவாறு தெரிவித்தார். வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் இது தொடர்பில் கேட்டறிந்து அது குறித்து தெரியப்படுத்துவோம்.  இறக்குமதி செய்யப்படும் அரிசி சேதன பசளையால் உற்பத்தி செய்யப்பட்டதாக இருக்க வேண்டும் என்று நாமும் எதிர்பார்க்கின்றோம் என்று அமைச்சர் டலஸ் அழகப்பெரும மேலும் தெரிவித்தார். சேதனப் பசளையில் சீன அரிசி உற்பத்தி செய்யப்பட்டதா ? என்ற கேள்விக்கு தடுமாறிய 3 அமைச்சரவை பேச்சாளர்கள் ! | Virakesari.lk
  • (நா.தனுஜா)   இலங்கையில் இனப்படுகொலைகள் இடம்பெற்றுள்ளன என்பதுடன் அங்கு மனித உரிமைகளை நிலைநிறுத்துவதற்காக நாம் போராடவேண்டியது அவசியமாகும்.    இவ்விடயத்தில் இலங்கை அதிகாரிகளைப் பொறுப்புக்கூறச்செய்வதற்கு மெக்னிற்ஸ்கி சட்டத்தின்கீழ் தடைகளை விதித்தல் உள்ளடங்கலாகப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டியிருப்பதுடன் இலங்கை தொடர்பில் கடினமான தீர்மானங்களை எடுக்கவேண்டிய தருணம் இதுவாகும் என்று பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாகத் தெரிவித்துள்ளனர். தைப்பொங்கல் பண்டிகையுடன் இணைந்ததாக பிரித்தானியப் பாராளுமன்றத்தினால் ஜனவரிமாதம் 'தமிழ் மரபுரிமை மாதமாக' பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமையினையும் கொண்டாடும் வகையிலேயே இந்த நிகழ்வு வெஸ்ட்மினிஸ்டர் நகரிலுள்ள மத்திய மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனைத்தொடர்ந்து கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டனர். நிகழ்வை ஆரம்பித்துவைத்த பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழர்களுக்கான அனைத்துக்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவருமான எலியற் கொல்பர், கடந்தகால மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தைப் பொறுப்புக்கூறச்செய்வதற்கான தனது உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்தினார். அதேவேளை அங்கு கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் எட்வர்ட் டாவே, ஜனவரி மாதத்தை தமிழ் மரபுரிமை மாதமாகப் பிரகடனப்படுத்துவதற்கான முன்மொழிவை பிரித்தானிய பாராளுமன்றத்தில் தான் சமர்ப்பித்தமை குறித்து சுட்டிக்காட்டினார். இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலை என்பதுடன் மனித உரிமைகளை நிலைநிறுத்துவதற்காக நாம் போராடவேண்டும்.  இலங்கை தொடர்பில் கடினமான தீர்மானங்களை எடுக்கவேண்டிய தருணம் இதுவாகும் என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார். இந்தத் தைப்பொங்கல் நிகழ்வில் கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினரும் சிறுவணிகங்கள் தொடர்பான அமைச்சருமான போல் ஸ்கல்லி பிரிட்டனின் ஒவ்வொரு துறையிலும் தமிழர்கள் மிகையான பங்களிப்பை வழங்கிவருகின்றார்கள். அனைத்து மக்களையும் ஒன்றிணைப்பதே தைப்பொங்கல் பண்டிகையின் தாற்பரியமாகும்.  இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதிநிலைநாட்டப்படுவதுடன் பொறுப்புக்கூறல் உறுதிசெய்யப்படுவதற்கான அழுத்தத்தைத் தொடர்ந்து வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளேன் என்று குறிப்பிட்டார். அதேவேளை இலங்கைத் தமிழர்களுக்கான மனித உரிமைகள், ஜனநாயகம் மற்றும் சுயநிர்ணய உரிமை என்பவை நிலைநாட்டப்படுவதை முன்னிறுத்திய பிரசாரம் மேலும் வலுவான முறையில் நடைபெறுவதைக் காணவிரும்புவதாக பாராளுமன்ற உறுப்பினர் சாம் டெரி தெரிவித்தார்.  அத்தோடு 'இதுவிடயத்தில் தெளிவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக மெக்னிற்ஸ்கி சட்டத்தின்கீழ் தடைவிதிக்கப்படவேண்டும்.  எமது அரசாங்கத்தின்கீழ் மனித உரிமைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்கமுடியாது' என்று சுட்டிக்காட்டிய அவர், என்றேனும் ஒருநாள் இராணுவமயமற்ற சுயநிர்ணய உரிமையுடனான தமிழர் தாயகத்தைக் காண்போம் என்றும் கூறினார். இலங்கையில் ராஜபக்ஷாக்களின் மீள்வருகை அனைவருக்குமான தீவின் எதிர்காலத்திற்குப் பாதகமானதாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் வெஸ் ஸ்ரீட்டிங் சுட்டிக்காட்டிய அதேவேளை, தென்னாபிரிக்காவின் நிறவெறி கொள்கைக்கு எதிராகப் பொருளாதாரத்தடைகளை விதிக்குமாறுகோரி நான் போராடினேன்.  இப்போது இலங்கையின் போர்க்குற்றவாளிகளுக்கு எதிராகத் தடைவிதிக்கப்படவேண்டுமென வலியுறுத்துகின்றேன் என்று பாராளுமன்ற உறுப்பினர் டேவிட் லெமி குறிப்பிட்டார். அதன்படி அப்பாவிப்பொதுமக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் தொடர்பில் நீங்கள் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவேண்டும் என்றும் டேவிட் லெமி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கை தொடர்பில் கடினமான தீர்மானங்களை எடுக்க வேண்டிய தருணம் இதுவாகும் - பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தல் | Virakesari.lk
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.