Jump to content

பெரியார் படமும்.. முரண்பாடுகளும்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் வெளியான...பெரியார்.. படம்.. பெரியார் போலவே...முரண்பாடுகளுடன்....

1. ராமசாமியாகி நாயக்கர் ஆகிய பெரியாரின் பூர்வீகம் மறைக்கப்பட்டு ஈரோட்டுக்கே சொந்தமாக்கிக் காட்டி உள்ளார்கள்.

2. நாயக்கர் என்ற சாதியக் கூறை தூக்கி எறிவதாகச் சொல்லும் பெரியார்.. ராமர் + சாமி என்பதை தூக்கி எறியாமலே கட்டிக்காத்திட்டத்தை சுயமரியாதைக்க அடக்கிட்டாங்க.

3. நாகம்மையின் தாலியைக் கழற்றியவர்.. தான் மட்டும் புலிப்பல்லுப் போட்ட சங்கிலி சகிதம்..நாகம்மைக்கு இடஞ்சல் இல்லாம இருக்க விரும்பாம.. சுயநலத்தோட இருக்கிறார்.

4.பெண்களை சுயசிந்தனையின் வழி அறிவுபூர்வமா வழிநடத்தாம.. அவங்களை ஏமாளியாக் காட்டி ஏமாற்றுக் கதை சொல்லி.. ஏமாற்றி அவர்களில் மாற்றங்களை காட்டிறது பெண்களை ராமசாமி எந்தளவுக்கு அளவிட்டுள்ளார் என்பதை தெளிவாகக் காட்டியுள்ளனர். அவர் பெண்களை ஏமாளிக்கூட்டமாக கருதி கருத்துக்களை விளங்க முடியாத முட்டாள்களாக எண்ணி நடந்துள்ளதை படம் முழுவதும் அவதானிக்க முடிகிறது. பெண்களின் உணர்வுகளுக்கு பெண்கள் தேட வேண்டிய தீர்வை ராமசாமி பெண்களின் உணர்வுகளை தான் உணர்ந்து அவர்களுக்கு தீர்வு தேடித் தரும் தொண்டனாக தன்னைக் காட்டிக்க முயல்கிறார். இதில் எங்கு சுயசிந்தனைக்கும் சுயமுடிவெடுத்தலுக்கு சுய அறிவூட்டலுக்கும் பெண்கள் ஆண்களை ஒத்து இடம் பெற வழிகாட்டப்படுகிறது..??!

5.ரஷ்சியா போன இடத்தில கண்டதை தமிழகத்துக்குள்ளும் புகுத்த முனைந்தமை..முற்போக்கல்ல.. கொப்பி அடித்தல் என்பதை தெளிவாகக் காட்டி இருக்கிறது.

6.காங்கிரஸில் தனது கருத்தியல் ஆதிக்கத்துக்கு படித்த பிராமணர்கள் எதிர்ப்பு என்ற காரணத்திற்காக பிராமணர்களின் கல்வி மற்றும் இதர தொழில்துறைகளில் அவர்களின் சுயமுயற்சியை பாராட்டாமல்.. அவற்றை உதாரணமாக்கி மற்றைய சமூகங்களை விழிப்புணர்வு படுத்தாமல்... பிராமண சமூகத்தை குற்றவாளியாக்கி இட ஒதுக்கீடு என்று முயற்சிகள் இல்லாமலே ஏனைய சமூகத்தவர்களுக்கு சமத்துவமும்.. சமூக ஏற்றத்தாழ்வுகளைப் போக்க முடியும் என்று ஒரு தவறான கருத்தைக் காட்டுகிறார்கள்..இதில் எப்படி பகுத்தறிவும் கல்வி அறிவும் பெருகும்.. இட ஒதுக்கீடு மட்டும் தானே பெருகும். இது தரப்படுத்தலுக்கு நிகரானது. பிராமணன், தாழ்த்தப்பட்டவன் என்பதை தொடர்ந்து கட்டிக்காக்கத்தான் உதவுமே தவிர.. அனைவருக்கும்.. அனைத்தும் என்ற நிலையை ஏற்படுத்த ஏதுவாகுமா..??!

7. இந்துமத அடையாளங்களை எதிர்க்கும் பெரியார்.. மலேசியா போன இடத்தில் முஸ்லீம்களின் உடையலங்காரம் வசதி என்று சொல்லி அதை நாகம்மையிடம் திணிக்க முற்படுவதுடன்.. கூந்தலைக் கத்தரிப்பதுவும்.. குறுகிய ஆடை போடுவதும்.. பெண்களுக்கு இலகுவானது என்று சொல்ல முனைகின்றார். அப்ப ஏனாம் அவர் மட்டும் வேட்டையை சுத்திட்டு திரியுறார்..! கதரில.. சிறிய துணியை சுத்திட்டு திரிஞ்சிருக்கலாமே..??!

8. சுயமரியாதை பகுத்தறிவு வேண்டும் என்ற பெரியார்.. தாலியைக் கழற்றவும் சேலையைக் கழற்றவும் வழி சொல்பவர்..பொன்னாடைக்கும் பூமாலைக்கும் கழுத்தை நீட்டுவது ஏன். அதில் அவர் என்ன சுயமரியாதைப்.. பகுத்தறிவைப் பெற்றார். பொன்னாடையும் பூமாலையும் வெட்டிதானே...வேஸ்டுதானே. அதை ஏழைகளுக்கு உடை தைக்கவும்.. பூக்களைக் கொண்டு நறுமண திரவியங்களை தயாரித்து விற்கவும் வழிகாட்டி இருக்கலாமே..??! இதில பகுத்தறிவு..??!

9. இந்துமதக் கடவுள்களை சிலையாகக் காண்பவர்.. புத்தனின் சிலையைக் காண மட்டும்.. மாநாட்டைச் சாட்டு வைச்சு பர்மா வரைக்கும் ஏன் போக வேண்டும். புத்தனின் கொள்கைகளை இந்தியாவில் வைச்சே பரப்பிக்கலாம் தானே.

10. இந்துமதம் மிகவும் நெகிழ்வானது என்பதை பெரியார் தன் வாயாலேயே ஒத்துக் கொண்டார். புத்தத்துக்கு மாற விரும்பம் இருந்தும்.. இந்துமதத்துக்குள் இருந்தால் தான் அதற்குள் இருந்தே அதை ஏய்கலாம்.. மற்றைய மதங்களைத் தழுவி விட்டால் தன் ஏய்தலுக்கு அவை இடமளிக்காது என்பதை அறிந்து நசூக்காக புத்தத்துக்கு மாற மறுக்கும் பெரியார்.. பகுத்தறிவில் புத்த மதத்துக்கு தாவுதலை முன்னிறுத்துகிறார். சோக்கிரட்டிசை கடவுளாக வரிந்து ஒரு மதத்தைப் படைச்சிருக்கலாமே.. புத்தனை வைச்சு உருவாக்கிய மதத்தை ஆதரித்த பெரியார்..??! அவரை ஒருவர் ஏன் நீங்கள் புதிய மதத்தை ஸ்தாபிக்கக் கூடாது என்று கேட்க.. அதற்கு அசிங்கத்தை காரணம் காட்டுபவர்.. பெளத்த மத அசிங்கத்தை தழுவச் சொன்னதில் என்னையா நியாயம்..??!

11.பெண்களின் பாலுணர்வுகளுக்கு மதிப்பளிச்சு மறுமணம் செய்து வைத்தவர்.. நாகம்மையை கைவிட்டு காசிக்குப் போகும் போதும்.. மணியம்மையை மணம் முடிச்சு.. தனக்கு சேவகம் செய்ய அடிமையாக வைச்சிருக்கும் போதும்.. அந்த உணர்வுகளை ஏன் மதிக்கல்ல..??! அவர்களை தன் மனைவியாக்கிய பின் அவங்க பாலுணர்வுகளைக் கருத்தில் கொண்டு ஏன் வேறு ஆண்களோட அவங்க உடலுணர்வுகளை தீர்க்க அனுமதிக்கல்ல.. குழந்தைக்கு ஏங்கும் நாகம்மையை ஏன்.. இன்னொரு ஆண் கூட சேர்ந்து குழந்தை பெற்றுக்கச் சொல்லேல்ல.. சா.. ஏன் மறுமணம் முடிச்சு வைக்கேல்ல..! கண்றாவியா இருக்கப்பா.. உதுகளில எழுதிற.. என்ன பெரியார் சமாச்சாரமாச்சே எழுதித்தானே ஆக வேண்டி இருக்குது..!

12.உடலுறவுக்கு கல்யாணம் ஏன் விலங்குகள் போல அதைக் கண்டபடி செய்யலாம் என்பவர்.. தேவதாசிகள் விடயத்தில்... ஒருவனுக்கு ஒருத்தி என்பதை வலியுறுத்தி கருத்துச் சொல்வது முன்னுக்குப் பின் முரணா இருக்கே..!

13. கொள்கை அளவில் காங்கிரஸ் தனது கொள்கைகளை ஏற்காது என்று தெரிந்தும் இவரின் கொள்கைகளைப் பின்பற்றுவதாகச் சொன்ன திமுகவை எதிர்க்கவும்..காங்கிரசோடு தொடர்புகளைப் பேணவும்.. தனது திராவிடக் கட்சியை முழுமூச்சோடு முன்னெடுக்கவும் முடியாமல்.. திணறியது ஏன்..??! காங்கிரஸின் மத சாதி எதிர்ப்பற்ற ஒருவரை தனது நண்பனாகவே கடைசிவரைக் காத்தவர்.. ஏன் அண்ணா போன்ற தன் கொள்கைவாதிகளை அந்தளவுக்கு முதன்மைப்படுத்தல்ல..??!

14.நாகம்மையிடம் மலே உடையைத் திணித்தவர்.. மணியம்மையிடம் ஏன் கூந்தலைக் கத்தரிக்கவும்.. மலே உடை போடவும் பரிந்துரைக்கல்ல.

15. பெண்களின் கல்வி அறிவில அக்கறைகாட்டுபவராகச் சொல்பவர்.. ஏன் நாகம்மையையும் மணியம்மையையும் அரசியலுக்க கொண்டு வரல்ல. ஏன் அவங்களுக்கு அரசியல் கல்வி ஊட்டல்ல..! அவங்களை ஏன் அரசியலில ஆண்களுக்கு நிகரா நிறுத்தல்ல..??! அவங்களை தன் ஏவலுக்கு பணி செய்பவங்களாகத்தானே பாவிச்சிருக்கிறார்...!

16.பெண்கள் மீது அதிகாரம் கூடாது என்பவர்.. அவர்களின் உணர்வுகளுக்கு கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பவர்.. ஏன் மாட்டுத் தொழுவத்தில் அந்த துர்நாற்றம் மத்தியில் தன்னால் உணவருந்த முடியல்ல என்ற மணியம்மையை சாப்பாட்டுக்கையால் முகத்தில் தாக்கி.. அவரை உணவுன்ன வலியுறுத்த வேண்டும். பதிலாக.. உனக்கு உண்ணப் பிடிக்கல்லை என்றால் பறுவாயில்லை.. அவர்களின் விருப்பத்துக்காக நான் உண்கிறேன் மணியம்மை என்று அவரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் அதேவேளை அவரை சிந்திக்க தூண்டவும்.. சுயமுடிவெடுக்கவும் விட்டிருக்கலாமே. அங்கு ஆணாதிக்கத்தை பெரியார் பிரயோகிச்சத்தை அப்பட்டமா காணக் கூடியதா இருக்கிறது..!

17.சிலைகளின் கடவுளைக் காண்பவங்களை மதிக்க மறுப்பவர்.. கதர் நெய்த்தறிக்குரிய கருவியை மட்டும் சுமந்து கொண்டு காந்தி போல தன்னைப் பாவனை செய்வது மட்டும் ஏன்..??! இதில எங்க சுயமரியாதையும் பகுத்தறிவும் வெளிப்படுகிறது..???! காந்தி மரியாதையும் கதர் பற்றும் தானே வெளிப்படுகிறது..??!

18.தாலி இல்லாத பொண்ணை காலிப்பசங்க.. தாசின்னு நினைச்சு நாகம்மையை தப்பாப் பார்கேக்க.. கடவுளைக் குற்றம் சொல்பவர்.. தான் தாலியைக் கழற்றி எறிஞ்சதாலதான் அது நிகழ்ந்ததென்ற உண்மையை உணராமல் போனாரே..இதில எங்க பகுத்தறிவு இருக்குது. சமூகத்தில் பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை அவங்களா தங்களுக்கு என்று உருவாக்காத வரைக்கும்... இப்படிச் சின்னங்கள் பாதுகாக்க உதவும்.. என்ற நிலையை ஏன் அவரால புரிஞ்சுக்க முடியல்ல..??! தாலிக்கு மதிப்பளிக்கும் வழமை.. சமூகத்தில் தாலி அணியும் பெண்களுக்கு ஒரு தற்காப்பு அவங்க தங்க பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தும் வரை வழங்கும் என்றதை ஏன் உணரல்ல..!

19.பிராமண அடையாளங்களை பிராமண சாதியை அழிக்கப் பாடுபடுபவர்.. ஏன் தாழ்ந்த சாதி மக்களை தன்னைப் போல உடை உடுத்தவும்.. வசதியோட வாழவும்.. வழிகாட்டல்ல..! அவங்க தொழிலை நிறுத்த முயல்பவர்... அதற்கு ஈடா எதை செய்யச் சொன்னார்..??!

20. பெரியார் கேரளா போய் வாங்கிக் கட்டிய பின் அங்காலப் பக்கமே போனதில்ல. கர்நாடகா.. ஆந்திரா பக்கம் போனதும் இல்ல..! திராவிடம் என்பதை தமிழ்நாட்டுக்க மட்டும் ஏன் வரையறுத்த வேண்டும்.... தன் காங்கிரஸ் விசுவாச அரசியலில் தன் எதிர்பார்ப்பு நிறைவேறாத ஏமாற்றத்தில்..தமிழகளின் பலவீனங்கள அரசியலாக்கி செல்வாக்குத் தேடினார் பெரியார். இதுதான் பகுத்தறிவா..??! சுயமரியாதையா.. திராவிட விசுவசமா...?! இல்ல தமிழர்களைக் காட்டுமிராண்டிகளாகக் காட்டும் செயலா..??!

21. கோயிலை வெறுத்தவர்.. கோயில் தர்மகர்த்தாவா மட்டும் இருக்க சம்மதித்தது மட்டுமன்றி.. கோயில் ஒரு பொதுஸ்தாபனம் என்றும் பிரகடனம் செய்கிறார். அதைத்தானே மதங்களும் சொல்கின்றன. கடவுள் எல்லோருக்கும் உரித்தானவர்.. கோயில் எல்லோருக்கும் பொதுவானது..எவரும் வரலாம் வணங்கலாம் என்று. நந்தனார் விடயம் வந்த போது அதை நக்கலடித்தவர்..காந்திஜி ஒரு நல்ல பிராமணரை அடையாளம் காட்டிய போது அதை ஏற்றுக் கொள்கிறார்..! அப்புறம் காந்திஜியையே அரசியலுக்காக தனது கருத்தை காங்கிரஸ் ஏற்கல்ல என்றதுக்காக எதிர்கிறார்..! எல்லாம் முன்னுக்குப் பின் சுத்த சாக்கடை அரசியலாவே நடந்து முடிஞ்சிருக்கு. அப்படி இருக்க அந்த போலி மனிதர் எப்படிப் பெரியாரா இருக்க முடியும்..??! ஒருவேளை தமிழக சாக்கடை திராவிட (திமுக, அதிமுக) அரசியலுக்கு அவர் பெரியாரோ இருக்கலாம்...! ஆனால் அவர் மனித சமூகத்துக்கு பெரியாரா இருக்க தகுதியுடையவரா என்பதை நீங்களே தீர்மானியுங்க...!

22. பெண்களின் சுதந்திரத்தை திருமணம் பறிக்கிறது என்றவர் தானே முன்வந்து சுயமரியாதைத் திருமணமும் செய்து வைக்கிறார்.

23. உதவி செய்ய வந்த மணியம்மையை தள்ளாடும் வயதில் திருமணத்துக்கு சம்மதிக்க வைத்துத் தானே திருமணமும் செய்கிறார்..!

24. பெண்களுக்கு குழந்தைகள் அவர்களின் வளர்ச்சிக்குத் தடை என்றவர்.. குழந்தைகளோடு சேர்ந்து புகைப்படமும் எடுத்துக் கொள்கிறார்..!

25. நாகம்மைக்கு சாமி சிலையிடம் பாதுகாப்பை எதிர்பார்த்து நக்கலடித்தவர்.. சோக்கிரட்டிஸின் சிலைக்கு முன்னால் தானே புலம்பி.. தானே தனக்கு தனது நிலைப்பாட்டுக்கு அங்கீகாரம் தேடுவது..இதைத்தான்.. சாமி சிலையின் முன் மற்றவர்களூம் செய்கின்றனர் என்பதை உணராத நிலையில் பெரியார்.. என்பவர்..! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஆய்வு.

21 காரணங்கள் தான் இருக்கின்றனவா. நான் கூடுதலாய் வரும் எண்டு எதிர்பாத்தன்.

இந்த படத்தை இணையத்தில் பார்க்கலாம் எண்டு இரண்டு முறை முயன்றேன். கொஞ்சம் போறதுக்குள்ளாக எனது கணனி யே ஓவ் ஆகி விட்டது.

நமக்கும் பெரியார் படத்துக்கும் ஆகாதோ எண்டு விட்டு விட்டேனே.

Link to comment
Share on other sites

பெரியார் வாழ்க்கை வரலாறு படமாகிறது என்றதும், தமிழன் என்ற படம் முறையில் எப்பொழுது வரும் ? என்று ஆவலுடன் இருந்தேன். இன்று (05-மே-2007) நிறைவேறியது. படத்தின் ஆரம்பமே பெரியார் எதிர்பாளர்கள் முன்வைக்கும் 'பெரியார் குளிக்காதவர்' என்பதைச் சொல்லவரும் காட்சியுடன் நேர்மையாக எடுக்கப்பட்டு இருந்தது. தாழ்த்தப்பட்டவன்,படிக்காதவன

Link to comment
Share on other sites

நல்ல ஆழமான கருத்தாளம் மிக்க கருத்துக்கள். வாழ்த்துகள் நெடுங்களபூவன் நண்பரே!

கன்னட நாட்டான் ஈ.வே.ரா பற்றி ஒரு செய்தி

காசியில போய் எங்கோ ஒரு மடத்துக்குள்ள விட வில்லை என்று சொல்லி விட்டு அந்த மடத்தில் இருந்து விழுந்த எச்சி இலையைத் தின்றார் ஈ.வே.ரா. அட சாப்பாட்டுக்கு துட்டு இல்லையாம் சரி. ஆனால் அவர் கையில் தங்க மோதிரம் இருந்தது அதை விற்கு சுயமரியாதையோடு தின்று இருக்கலாம் இல்லையா?

அப்போது எது தடுத்ததோ கறுப்பு சட்டைகளுக்கே வெளிச்சம்!!!

Link to comment
Share on other sites

திங்கள், மே 07, 2007

பெரியார் படம் எனது பார்வையில்....

நேற்று பெரியார் படத்தினைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. யாரையும் துணைக்கு அழைக்காமல் நான் மட்டுமே படத்தினைப் பார்த்தேன்.

பெரியாரின் பத்தொன்பது வயது முதல் அவர் இறக்கும்வரை ஏறக்குறைய எழுபது வருட வாழ்க்கையை சித்தரிக்கிறது இந்த படம். இரண்டரை மணிநேரத்தில் எழுபது வருட வாழ்க்கையை விளக்குவது என்பது ரொம்ப கஷ்டமான விஷயம்... இருந்தாலும் செம்மையாகச் செய்து இருக்கிறார்கள்.

இயக்குனர் ஞான.ராஜசேகரன் இந்த குறுகிய மணித்துளியில் பெரியாரின் அனைத்து ஆளுமையையும் திரையில் கொண்டு வர கஷ்டப்பட்டு பாடுபட்டிருப்பது நன்றாகத் தெரிகிறது. கடவுள் மறுப்பு, சாதி எதிர்ப்பு, பெண்ணடிமை ஒழிப்பு என பெரியாரின் அத்தனை குணாம்சங்களையும் சின்னச் சின்ன நிகழ்வுகள் மூலம் கோர்த்திருப்பது அழகோ அழகு.

படத்தின் பிரதான அம்சம் சத்யராஜ். இதுவரை நாம் அனைவரும் பார்க்காத புதுநடிப்பு. ஒவ்வொரு அசைவிலும் பெரியாராக ஒன்றி விட அவர் காட்டும் எத்தனிப்புக்கு ஒரு சபாஷ்! நாகம்மையாக வரும் ஜோதிர்மயி, மணியம்மையாக வரும் குஷ்பு, அண்ணாவாக வரும் எஸ்.எஸ்.ஸ்டான்லி ஆகியோர் கேரக்டருடன் கச்சிதமாக பொருந்துகிறார்கள்.

படத்தின் மிகப்பெரிய பலம் ஜே.கேயின் கலை. பழைய காலகட்டத்தை கண்முன் கொண்டுவரும் வீடுகளும், சில தெருக்களும், பின்னணியில் வரும் பழங்கால பொருட்களும் படத்துடன் ஒன்ற துணைபுரிகிறது. படத்தில் வரும் வசனங்களுக்கு தியேட்டரில் விசில் பறக்கிறது.

நம்மோடு வாழ்ந்த நம்மை எல்லாம் செம்மைப்படுத்திய மிகப் பெரிய தலைவரின் வாழ்க்கையை ஆவணப்படுத்தியது என்ற வகையில் 'பெரியார்' படம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.

சில குறைகளும் படத்தில் உண்டு. பெரியாரின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சியை தொகுத்திருக்கிறார்களே தவிர, அவரது ஆளுமையை இன்னும் முழுமையாக வெளிப்படுத்த தவறியிருக்கிறார்கள். உதாரணமாக, இளம் வயதில் சைவமான தனது குடும்பத்தினரின் சாப்பாட்டில் அசைவ உணவை வேண்டுமென்றே பெரியார் வைப்பதாக படத்தில் காட்சியொன்று இடம் பெறுகிறது. அதே பெரியார், வயது கனிந்த பிறகு, ஆன்மிகவாதிகளான தனது நண்பர்களை மதித்து அவர்கள் தனது வீட்டிற்குவரும் தினங்களில் அசைவத்தை தவிர்த்து வந்தார். இதுதான் உண்மை நிகழ்வு. இளமையில் காட்டாறாக இருந்து பின் அமைதியான நதியாக பரிணமித்த இதுபோன்ற தன்மைகளோ, அந்த மாற்றமோ படத்தில் வெளிப்படவில்லை.

வாழ்ந்து மறைந்த நமக்கு பரிட்சயமான வரலாற்று நாயகர்களை குறித்து படம் எடுக்கையில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க அறிமுகமில்லாதவர்களை தேர்ந்தெடுப்பதே சரியானது. உதாரணமாக பாரதியார் படத்தில் வந்த சாயாஜி ஷிண்டே. சத்யராஜ், ஜோதிர்மயி, குஷ்பு ஆகியோர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும் அவர்களை சத்யராஜாகவும், குஷ்புவாகவுமே உணர முடிவது படத்தின் பெரும் குறை.

ரகசியாவின் நடனமும், காசி செல்லும்போது வரும் கதாகலாட்சேப பாணி பாடலும் படத்திற்கு தேவையில்லாதது. பாடல்கள் அனைத்தும் அருமை. பகுத்தறிவுக் கருத்துக்களை பாடலிலும் திணித்து வெற்றி கண்டு இருக்கிறார்கள்.

பீரியட் படங்களை இயக்கும்போது அந்த காலகட்டத்தை பிரதிபலிக்கும் பில்டர்களை பயன்படுத்துவது அவசியம். பளிச்சென்ற ஒளிப்பதிவை விட, மஞ்சள் நிறத்தில் அமைந்த ஒளிச்சேர்க்கை பழைய காலத்து உணர்வை கொடுக்கும். தங்கர்பச்சான் ஒளிப்பதிவு நிகழ்கால கதைபோன்ற உணர்வையே கொடுக்கிறது.

இவையெல்லாம் குறைகள் எனினும், பெரியார் போன்ற ஆளுமைகளைக் குறித்து இன்னும் இருபத்தைந்து படங்கள் எடுக்கலாம் என்ற வகையில், ஞானராஜசேகரன் 'பெரியார்' படத்தை அதன் தொடக்கப் புள்ளியாக கருதி முழுமனத்துடன் வரவேற்கலாம்!

ப்ளஸ்..

பெரியாரின் கதை, அனைவரின் நடிப்பு

சத்யராஜ்

மைனஸ்..

ராஜாஜி போன்ற பாப்பாரப் பன்னாடைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கும் அதிகபடியான காட்சிகள்.

மொத்தத்தில் நாம் அனைவரும் கண்டுகளிக்க வேண்டிய சூப்பர் படம் இது!

Posted by விடாதுகருப்பு at at

http://karuppupaiyan.blogspot.com/2007/05/blog-post_07.html

Link to comment
Share on other sites

மிதக்கும் வெளி

Tuesday, May 08, 2007

பெரியார் திரைப்படம் - கள்ளுக்கடையோடு நின்றுபோன மறியல்

நான் வாழ்க்கையில் காதலிக்கும் மிகச்சிலரில் பெரியார் ஈ.வெ.ராமசாமியும் ஒருவன். பெரியாரை அவன், இவன் என்று விளிப்பதால் சில பெரியார் பக்தர்கள் கோபப்படலாம். மேலும் நான் பிரதியில் அவன் என்று எழுதும்போது நீங்களும் அவன் என்று வாசிக்கும் சாத்தியம் என்னையும் கோபப்படுத்தும். ஏனெனில் என் பொசிசிவ்னெஸ் அப்படி.

கள்ளுக்கடை மறியல் செய்தவர், அதற்காக அய்ந்நூறு தென்னைமரங்களை வெட்டிப்போட்டவர், கதர்சுமந்துவிற்றவர் என்று இப்படியாகத்தான் பெரியார் தமிழ்மாணவர்களுக்கு அறிமுகமாயிருக்கிறார். ஆனால் இத்தகைய சட்டகங்கள் பெரியாரின் தாடிமயிரை அளப்பதற்குகூடப் போதுமான அளவுகோல்கள் அல்ல. தனக்கு விதிக்கப்பட்ட கரைகளை உடைத்துப் பாய்ந்த மகாநதி பெரியார்.

கள்ளுக்கடை மறியல் செய்த பெரியார்தான் மதுவிலக்கிற்கெதிராக, "ஒருவனைக் குடிக்கக்கூடாது என்றுசொல்வதற்கும் உன் மனைவியைக் கலவிசெய்யக்கூடாது என்று சொல்வதற்கும் என்ன வேறுபாடு?" என்று வினவினார். ஒழுக்கம் என்பது பாமரர்களை ஏமாற்றும் சூழ்ச்சி என்றார். 'திருமணம் என்பது கிரிமினல் குற்றமாக்கப்படவேண்டும்' என்றார். மணவிலக்குச்சட்டத்தைக் கொண்டுவராவிட்டால் திருமணங்களில் திருமண மறுப்புப்பிரச்சாரமும், பலதாரமணப்பிரச்சாரமும் செய்வேன் என்று அரசை மிரட்டினார். பெண்களின் கருப்பைகளை அடைக்கச்சொன்னார்.

தேசப்படம், காந்திசிலை, பிள்ளையார்சிலை, ராமர்படம் என அனைத்துப் புனிதப்பிம்பங்களையும் தெருவில் போட்டுடைத்தார் அல்லது கொளுத்தினார். 'தமிழ்ப்புலவர்கள் அனைவருக்கும் மரணதண்டனை முதல் ஆயுள்தண்டனை வரை கொடுக்கவேண்டும் என்றார். இப்படி அவர் செய்த கலகங்கள் சொல்லிமாளாதவை. சாதி, மதம், கடவுள், தேசம், மொழி, கற்பு, காதல், திருமணம், குழந்தைப்'பேறு' என அனைத்து ஒளிவட்டங்களின்மீதும் அவரது மூத்திரச்சட்டியில் ஒழுகிய சிறுநீர் வெள்ளமாய்ப்பாய்ந்தது.

கலகத்தின் குரலாய் ஒலித்த அதே பெரியார்தான் அறம்பேணும் துறவியாய் வாழ்ந்தார். காந்தியார் படுகொலையின்போது பார்ப்பனர்களைத் தாக்குதலினின்று காத்தார். 'ஒரு பார்ப்பான் பேச்சைக் கேட்டாக் கலியாணம் பண்ணினாய்?' என்கிற வன்மமும் வெறுப்பும் நிறைந்த கேள்வியை வரலாற்றுப்பழியாய்த் தன் தோள்மேல் சுமந்து ராஜாஜியைக் காட்டிக்கொடுக்காமல் செத்துப்போனார். தமிழ்ச்சூழலில் எந்த முஸ்லிமும் பரப்புரை செய்வதற்கு முன்பே 'இன இழிவு நீங்க இஸ்லாமியராகுங்கள்' என்றார். அம்பேத்கரைத் தன் தலைவர் என்றார். குன்றக்குடி அடிகளாரையும் மதித்தார். தமிழ் காட்டுமிராண்டிமொழி என்று சொன்ன அவர்தான் தமிழுக்கான எழுத்துச்சீர்திருத்தங்களைய

Link to comment
Share on other sites

ஒரு சகாப்தத்தின் வரலாறு" - பெரியார் திரைப்பட விமர்சனம்

Pathivu Toolbar ©2005thamizmanam.com

நடிப்பு: சத்யராஜ், குஷ்பு, ஜோதிர்மயி

தயாரிப்பு: லிபர்டி கிரியேஷன்ஸ்

இயக்கம்: ஞான ராஜசேகரன்

இசை: வித்யாசாகர்

சினிமாவை,‘இந்த நாட்டை பிடித்த நோய்’ என்றவர் பெரியார். சினிமாக்காரர்களை வெறும் கூத்தாடிகள் என்று கண்டித்தவர் அவர். நாடு உருப்பட இந்த சக்திகள் ஒழிக்கப்பட வேண்டும் என்று பேசி வந்தவர். இப்போது அவரைப் பற்றியே ஒரு சினிமா. அவர் இருந்து பார்த்திருந்தால் தனது தடியால் தட்டி மகிழ்ச்சி அடைந்திருப்பார். பெரியாரின் நோக்கம் சிதையாமல், எண்ணம் திரிக்கப்படாமல் இப்படியரு படம் தயாரிக்கப்பட்டிருப்பதே பாராட்டப்பட வேண்டியது.

சாதி பாகுபாடு, பால் வேறுபாடு, பொருளாதார ஏற்றத்தாழ்வு& இதுவே அவரின் மையப்புள்ளி. மற்றவை கிளைக் கதைகள். இதை முழுமையாக உள்வாங்கிக் கொண்ட இயக்குனராக ஞான ராஜசேகரன் இருந்தது பெரியாரின் அதிர்ஷ்டம்!

பண வசதி படைத்த ஈரோடு வெங்கடப்ப நாயக்கர் என்ற வைணவ குடும்பத்தில் பிறந்த பெரியாரின் 19&வது வயதில் தொடங்குகிறது படம். மூப்பு, கிழப்பருவம் தாண்டிய முதிர் கிழப்பருவத்தில் கூட அமைதியாக இல்லாமல் சிறுநீரக பிரச்னையால் பாதிக்கப்பட்டு, நான் உங்களை சூத்திரனா விட்டுவிட்டு போகிறேனே என்று துக்கம் தொண்டையிலடைக்க மேடையில் சரிவதில் முடிகிறது படம். சரியாகச் சொன்னால் அவர் இறப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன் நடந்த காட்சி இது.

ஈரோடு வட்டாரத்தில் மட்டுமே அறிமுகமாகியிருந்த வியாபாரி பெரியார், காந்தியின் நிர்மாணத் திட்டங்களால் காங்கிரஸ் இயக்கத்தில் நுழைந்து, வகுப்புவாரி இடஓதுக்கீடுக் கொள்கையை அவரின் நண்பர்களே ஏற்காமல் துரோகம் செய்ததால் வெகுண்டெழுந்து, காஞ்சிபுரம் மாநாட்டில் வெளியேறியது வரை படத்தின் முதல்பாதி. காங்கிரசை ஒழிப்பதே முதல் வேலை என வெளியேறி, தமிழ்நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் பயணமாகி, எது தனக்கு சரியெனப்பட்டதோ அதை மட்டுமே பேசி, சுயமரியாதைத் தலைவராக வலம் வந்து தமிழ்நாட்டு முதலமைச்சர்கள் அனைவருக்கும் கட்டளையிடும் தந்தையாக பரிணாமம் பெறுவது இரண்டாவது மீதி.

முதல்பாதியில் இருக்கும் காட்சிப்படுத்தல், இடைவேளைக்குப் பிறகு துணுக்குகளின் கோர்வையாகி விடுகிறது. எந்த பிரபலத்தையும் புறக்கணித்துவிடக் கூடாது, எந்த தகவலையும் விட்டுவிடக்கூடாது என்ற பதற்றத்தில் சில காட்சிகள் வலுக்கட்டாயமாகச் சேர்க்கப்பட்டுள்ளன. உடல் நலமில்லாத பெரியாரை, ராஜாஜி பார்க்க வருவது, பிரசவத்துக்குத் துடித்த பிராமணப் பெண்ணுக்கு தனது வாகனத்தை கொடுத்து உதவுவது போன்ற காட்சிகள் தவிர்க்கப்பட்டிருந்தால் இன்னும் சில முக்கியமான காட்சிகளைச் சேர்த்திருக்கலாம். உதாரணத்துக்கு,பெரியாரிடம் சண்டை போட்டுவிட்டு அண்ணா விலகிய ஓராண்டுக்குப் பின் இருவரும் திருச்சி சிறையில் சந்திப்பது, சேர்க்கப்பட்டிருக்க வேண்டிய காட்சி.

இதுபெரியார் படம் என்பது போலவே சத்யராஜ் படம். நக்கல், நையாண்டியால் மட்டுமே பேர் வாங்கிய சத்யராஜுக்குள் இப்படியரு தனித்தன்மை ஒளிந்திருந்தது ஆச்சர்யம்தான். பட்டுத் துணிகள், அங்கவஸ்திரத்துடன் வலம் வந்த பெரியார், அதை தூக்கியெறிந்து விட்டு கதர் துணி அணியும்போது சத்யராஜ் அச்சு அசலாகவே பெரியாராகிவிடுகிறார்.

நெஞ்சுக்கும் மேலே லுங்கியை கட்டிக்கொண்டு, கருப்பு சட்டைப் பட்டனை திறந்துவிட்டபடியே மேடையிலிருந்து எழுந்து நிற்கும்போது பெரியாராகவே வாழ்கிறார் சத்யராஜ். பெரியாரின் குரலையும் அதனதன் தன்மைக்கு ஏற்ப மாற்றி உச்சரிப்பது சிறப்பு. 18 ஆண்டு பிரிவுக்கு பிறகு, சந்திக்க வந்த அண்ணாவைப் பார்த்து பெரியார் வெட்கப்படும் காட்சிக்கு கூடுதல் சபாஷ் போடலாம்.

முதல் மனைவி நாகம்மையாக ஜோதிர்மயியும், இரண்டாவது மனைவி மணியம்மையாக குஷ்புவும் வாழ்ந்திருக்கிறார்கள். எந்த சாயமும் இல்லாத அழகு சாயல் கொண்டவர் நாகம்மை. சாதாரண ராமசாமியை பெரியார் ஆக்கியவர் அவர். நாகம்மை போன்றே இயல்பான முகம் ஜோதிர்மயிக்கு. அதேபோல் மாட்டுத் தொழுவ விருந்தில், சாணி மணம் பாராமல் பெரியார் சாப்பிட மணியம்மை திணறும் காட்சியில் அசத்துகிறார் குஷ்பு.

தங்கர்பச்சான், ராஜ்குமாரின் ஒளிப்பதிவு அந்தக் காலத்தை கண்முன் நிறுத்துகிறது. வைரமுத்துவின் பாடல் வரிகள் பெரியார் கொள்கையை பேசுகிறது.

‘ராமர் தொட்டதால் அணில் முதுகில் மூன்று கோடு வந்ததென்றால், சீதை முதுகில் எத்தனை கோடு உண்டு, அல்லது சீதையை ராமன் தொடவே இல்லையா?’ என்ற வரிக்கு தியேட்டரில் பறக்கிறது கைதட்டல்.

பெரியாரை பற்றி தெரியாத, உணராத தலைமுறைக்கு அவரை அறிமுகம் செய்து வைத்தாலே அது பெரிய வெற்றி. இந்தப் படம் அதை செய்திருக்கிறது.

நன்றி: தினகரன்.

http://sivabalanblog.blogspot.com/2007/05/blog-post.html

பெரியார்

பெரியாரின் பத்தொன்பது வயது முதல் அவர் இறக்கும்வரை ஏறக்குறைய எழுபது வருட வாழ்க்கையை சித்தரிக்கிறது படம். இரண்டரை மணிநேரத்தில் எழுபது வருட வாழ்க்கை... ஈ தலையில் இமயமலை மாதிரி!

இயக்குனர் ஞானராஜசேகரன் இந்த குறுகிய மணித்துளியில் பெரியாரின் அனைத்து ஆளுமையையும் திரையில் கொண்டு வர பாடுபட்டிருப்பது தெரிகிறது. கடவுள் மறுப்பு, சாதி எதிர்ப்பு , பெண்ணடிமை ஒழிப்பு என பெரியாரின் அத்தனை குணாம்சங்களையும் சின்னச் சின்ன நிகழ்வுகள் மூலம் கோர்த்திருப்பது ஒருபுறம் அழகு என்றாலும் அதுவே துணுக்கு தோரணமாக சலிப்பூட்டுகிறது. திரைக்கதையை ஒரே லீனியராக அமைத்ததால் வந்த பிரச்சனை இது.

படத்தின் பிரதான அம்சம் சத்யராஜ். இதுவரை பார்க்காத புதுநடிப்பு. ஒவ்வொரு அசைவிலும் பெரியாராக ஒன்றி விட அவர் காட்டும் எத்தனிப்புக்கு ஒரு சபாஷ்! நாகம்மையாக வரும் ஜோதிர்மயி, மணியம்மையாக வரும் குஷ்பு, அண்ணாவாக வரும் எஸ்.எஸ். ஸ்டேன்லி ஆகியோர் கேரக்டருடன் கச்சிதமாக பொருந்துகிறார்கள்.

படத்தின் மிகப்பெரிய பலம் ஜே.கே யின் கலை. பழைய காலகட்டத்தை கண்முன் கொண்டுவரும் வீடுகளும், சில தெருக்களும், பின்னணியில் வரும் பழங்கால பொருட்களும் படத்துடன் ஒன்ற துணைபுரிகிறது. படத்தில் வரும் வசனங்களுக்கு தியேட்டரில் விசில் பறக்கிறது. நம்மோடு வாழ்ந்த மிகப் பெரிய தலைவரின் வாழ்க்கையை ஆவணப்படுத்தியது என்ற வகையில் 'பெரியார்' படம் வரவேற்கப்படவேண்டிய ஒன்று. அதேநேரம் படத்தில் சில குறைகளும் உண்டு.

பெரியாரின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சியை தொகுத்திருக்கிறார்களே தவிர, அவரது ஆளுமையை முழுமையாக வெளிப்படுத்த தவறியிருக்கிறார்கள். உதாரணமாக, இளம் வயதில் சைவமான தனது குடும்பத்தினரின் சாப்பாட்டில் அசைவ உணவை வேண்டுமென்றே பெரியார் வைப்பதாக படத்தில் காட்சியொன்று இடம் பெறுகிறது. அதே பெரியார், வயது கனிந்த பிறகு, ஆன்மிகவாதிகளான தனது நண்பர்களை மதித்து அவர்கள் தனது வீட்டிற்குவரும் தினங்களில் அசைவத்தை தவிர்த்து வந்தார். இளமையில் காட்டாறாக இருந்து பின் அமைதியான நதியாக பரிணமித்த இதுபோன்ற தன்மைகளோ, அந்த மாற்றமோ படத்தில் வெளிப்படவில்லை.

http://www.virakesari.lk/cinema/vimarsanam...view.asp?key=86

பெரியார் ஒரு உணர்ச்சி காவியப் பதிவு..

குழலி

சிங்கையில் யீஷூன் திரையரங்கில் பெரியார் திரைப்படம் வெளியாகியுள்ளது, நண்பர்கள், நான் முன்னாள் சென்றுவிட கோவி.கண்ணன் திரையரங்கில் வந்து இணைந்து கொண்டார், பெரியார் திரைப்படம் பார்க்கப்போகும் முன் இந்த படத்தில் சத்யராஜ் நடிக்காமல் வேறு புது முகம் யாரேனும் நடித்திருக்கலாம், பெரியார் தெரிவதற்கு பதில் சத்யராஜ் தான் நம் முன் வந்து நிற்பார் என்றேன், அதற்கு என் நண்பன் கூறினான், படத்தில் சத்யராஜ் தெரியமாட்டார், ஏனெனில் பெரியார் சத்யராஜை விட பவர்ஃபுல், சத்யராஜை விஞ்சி பெரியார் தான் படத்தில் தெரிவார் பார் என்றான், படம் பார்க்கும் போதே என் நண்பன் சொன்ன உண்மை புரிந்தது.

தொண்ணூற்று ஐந்து ஆண்டுகால வாழ்க்கை, ஐம்பதாண்டுகளுக்கும் மேலான சமூகப்பணி கொண்டவரின் வாழ்க்கையை இரண்டரை மணி நேரத்தில் அடக்குவது இயலாத காரியம், அதனால் பெரும்பாலுமான காட்சிகள் நீளமாகவும் ஆழமாகவும் இல்லாமல் மேலோட்டமாகவே இருந்தன, இடைவேளை வரை படம் வேகமாகவே நகர்ந்தது, இடைவேளைக்கு முன் அதிகமாக நமக்கு அறிமுகப்படாத காட்சிகள் இருந்ததால் படம் சுவாரசியமாகவும் இருந்தது, இடைவேளைக்கு பின் வந்த காட்சிகள் பலவும் நாம் அறிந்த விடயங்கள்.

தமிழ் மொழி, தமிழ் இலக்கியங்கள் பற்றிய பெரியாரின் விமர்சனங்கள், மணியம்மையை திருமணம் செய்து கொண்ட விடயம், ஆகஸ்ட்டு 15ஐ கருப்பு தினம் என கூறியது என பெரியார் மீது வைக்கப்படும் பல

விமர்சனங்களுக்கு இந்த படத்தில் பதில் கிடைத்துள்ளது, அறிஞர் அண்ணா, கலைஞர், தி.க. தலைவர் வீரமணி, எம்.ஆர். ராதா, எம்.ஜி.ஆர் போன்றோர் இடம் பெறும் காட்சிகள் வெகு சிலவே.

தொடக்க காட்சிகளில் சத்யராஜே தெரிந்தார், வசன உச்சரிப்பும் அப்படியே, கோட்டை கழற்றி போட்டுவிட்டு கதராடை உடுத்தி வரும் அந்த காட்சி நிச்சயம் என்னை பரவசப்படுத்தியது, அதிலிருந்து சத்யராஜ் ஆளையே காணவில்லை, படம் முழுக்க பெரியார் தான்... ஓரிரு இடங்களில் வசன உச்சரிப்பு சத்யாராஜை நினைவுக்கு கொண்டுவந்தாலும் பெரியாரே ஆதிக்கம் செய்தார்.

இடஒதுக்கீடு

இடஒதுக்கீட்டின் தந்தையாக இருந்திருக்கிறார் பெரியார், அன்று அவர் ஆரம்பித்த போராட்டம் இதோ இன்று வரை நடந்து கொண்டிருக்கின்றது, ராஜாஜி அவர்களிடம் சிறையில் பெரியார் உரையாடும் காட்சியில் இடஒதுக்கீட்டிற்கு காந்திஜி ஒத்துக்கொள்வது இருக்கட்டும், நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்களா என்று முகத்தை ஆழமாக பார்த்து கேட்கும்போது அதற்கு ராஜாஜியின் தாழ்ந்த பார்வையே இராஜாஜியின் எண்ண ஓட்டத்தை வசனங்கள் ஏதுமின்றி தெரிவித்து விடுகின்றது, இடஒதுக்கீடு ஏதோ சும்மா வந்தது என்று நினைத்துக்கொண்டிருக்கும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட இன்றைய தலைமுறைகளுக்கு அதன் நெடிய போராட்ட வரலாறு இதனால் தெரியவரும்.

பெரியாரின் சமரசம்

சமூக, அரசியலில் சமரசமற்று இருப்பது அதனால் எந்த இழப்பையும் ஏற்பது என்பது என்னால் ஏற்றுக்கொள்ள இயலாத ஒரு விடயம், ஆனால் எதை சமரசம் செய்வது என்பதில் ஒரு தெளிவு வேண்டும், பெரியார் சமரசமே செய்து கொள்ளாதவர் என்ற எண்ணம் எனக்கு ஏற்கனவே இருந்தது, ஆனால் திரைப்படத்தில் கம்யூனிசம் பற்றிய எழுத்துகளால் பெரியார் கட்சியும் பத்திரிக்கையும் பிரிட்டிஷ் காரர்களால் முடக்கப்படும் என்ற நிலை வந்தபோது கம்யூனிச பொருளாதார கொள்கை முக்கியம், ஆனால் அதை விட முக்கியம் சாதி ஒழிப்பு, அதனால் கொஞ்ச காலம் கம்யூனிசத்தை தள்ளி வைப்போம் என்று தன் முதற் குறிக்கோளை எதற்காகவும் இழக்காமல் இருக்க சமரசம் செய்து கொண்டார் என்ற காட்சியமைப்பு பெரியார் பற்றிய சமரசம் தொடர்பான என் எண்ணத்தை மாற்றியது.

பெரியாரின் கணிப்புகள்

காந்திஜியிடம் மேல்சாதி மக்களின் வாழ்வாதார மனுதர்ம கொள்கைகளை மாற்ற முயன்றால் உங்களையே உயிரோடு விட்டு வைக்க மாட்டார்கள் என்று எச்சரிப்பதும், அனைவரும் அர்ச்சகர் சட்டம் 25 ஆண்டுகளுக்கு முன் முதல்வர் கருணாநிதியினால் கொண்டு வரப்பட்டபோது கோர்ட் குறுக்கே வரும் பார்த்துக்கொள் என்று எச்சரிப்பதும் பெரியார் எந்த அளவிற்கு இந்த சமூகத்தின் அவலத்தை புரிந்து கொண்டுள்ளார் என்று நன்றாக தெரிகின்றது.

படத்தில் சாதியம் மற்றும் கடவுள் மீதான விமர்சனங்கள் நகைச்சுவையாக நக்கலாக சொல்லப்பட்டு சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பதால் படம் ஒரு ஆர்ட் பிலிம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தாமல் கொண்டு செல்கிறது.

வியாபார மண்டிக்கு பெரியாரின் தந்தை வரும் போது அனைவரும் "நமஸ்காரம்" சொல்லி மிகுந்த மரியாதை கொடுப்பதும், அதன் பின் மண்டிக்கு வந்து முனிசிபல் கவுன்சிலராகவும் மரியாதைக்குறியவராகவும் இருக்கும்

பெரியாரின் தந்தையை பெயர் சொல்லி அழைத்து அடா புடா என்று மரியாதையில்லாமல் பேசும் ஒரு உயர்சாதி முனிசிபல் கிளார்க்கை பற்றி பெரியார் கணக்கரிடம் அய்யா முனிசிபல் கவுன்சிலர் ஆனாலும் ஏனிந்த கிளார்க் இப்படி மரியாதை இல்லாமல் பேசுகிறார் என்று கேட்க அதற்கு கணக்கர் அவர்கள் சாதியில் உசந்தவர்கள் நம்மிடம் எத்தனை பணம் பதவி இருந்தாலும் நம்மால் அவர்களைப்போல ஆக முடியாது என்று சொல்வதும் படக்காட்சிக்காக அமைக்கப்பட்டதாகவே தோன்றுகிறது, இவைகளை சிறு வயதிலிருந்தே பெரியார் பார்த்திருப்பார் , அதன் காரணங்களையும் அப்போதிருந்தே அறிந்திருப்பார் அப்படியிருந்தும் திடீரென பெரியார் இந்த கேள்வியை கேட்பதும் அதற்கு பதில் சொல்வதும் திரைப்படங்களை பார்ப்பவர்களுக்கு அப்போதிருந்த சூழ்நிலை புரிய வேண்டுமென்ற காரணமே இருந்திருக்கலாம்.

சட சடவென்று காலங்கள் மாறுவது பெரியாரின் தாடி வளர்வதை வைத்து புரிந்து கொள்ள முயன்றாலும் மின்னல் வேகத்தில் காலங்கள் மாறுவது படம் பார்த்துக்கொண்டிருப்பவர்கள

Link to comment
Share on other sites

உலகில் முதன் முதலில் விண்வெளியில் பறந்த ரஷிய வீரர் யூரிககாரின் கூறியது...

வானில் உயரப் பறந்தபோது பூமியில் இருந்த -மனிதனால் உருவாக்கப்பட்ட -சீனப் பெருஞ்சுவர் மட்டுமே ஒரு சிறு கோடு போல கண்களுக்குத் தெரிந்தது

என்பதுதான். ஆதிக்க நாடுகளின் அழகு மிளிர் வானுயர் கட்டடங்களோ, கோபுரங்களோ, அடிமை தேசங்களின் அவலக் குடிசைகளோ அவர் கண்களுக்குத் தெரியவில்லை. பூமியில் இருந்தபோது புரியாத இந்த உண்மை வானில் உயரப் பறந்தபோதுதான் அவருக்குப் புலப்பட்டது. அது போல தன்னுடைய சமநோக்குப் பார்வையாலும், சீரிய சிந்தனையாலும் உயரப் பறந்த பெரியாரின் பார்வைக்கு ஏழை, பணக்காரன், கீழ் சாதி, மேல் சாதி, பால் பாகுபாடு போன்ற எவையும் தெரியவில்லை. அவருக்குத் தெரிந்ததெல்லாம் "மனிதன்' என்பது மட்டும்தான். அப்படிப்பட்ட ஒரு மாமனிதருக்கு மரியாதை செலுத்த விரும்பிய நல்ல மனிதர்களின் முயற்சியே "பெரியார்'.

பெரியாரின் வாலிபம் முதல் வயோதிகம் வரையிலான கால கட்டங்களின் பல அம்சங்களை எளிமையாகவும், தெளிவாகவும் காட்டியிருக்கிறார்கள். பெரியாரைப் பற்றி படித்தும், கேட்டும் அறிந்த இளைய தலைமுறையினருக்கும், அவரைப் பார்த்து, அவர் காலத்தில் வாழ்ந்த பலருக்கும் இந்தப் படத்தில் பல சுவாரஸ்யமான விஷயங்களும், சம்பவங்களும் இருக்கின்றன.

பூஜைக்குத் தடை ஏற்படுத்தி தந்தையிடம் செருப்படி வாங்குவது, காசியில் எச்சில் இலை உண்பது, தாழ்த்தப்பட்டவர் என ஒதுக்கப்பட்டவரின் வீட்டில் சுற்றுப்புறச் சூழ்நிலையைக் கருத்தில் கொள்ளாமல் அன்போடு உணவு உண்ணுவது, பிழைப்புக்காக பக்தர் வேஷமிடுவது, பெண்களுக்கு சிரமம் ஏற்படுத்தாத உடையை மலேசியாவிலிருந்து மனைவிக்கு வாங்கி வந்து அதை அணிந்து வரச் சொல்வது, கருத்து வேறுபாடு இருந்தபோதும் ராஜாஜியுடன் நண்பராக அன்பு பாராட்டுவது உள்ளிட்ட பல காட்சிகள் பெரியாரின் மேன்மையைப் பறைசாற்றுகின்றன.

"அளவுக்கு அதிகமான கட்டுப்பாடுகளைத் தளர்த்தாவிட்டால் ரஷியா சிதறிவிடும்' என்று கூறுவதும், "மதவாதிகளால் உங்கள் உயிருக்கே ஆபத்து நேரலாம் என்று காந்தியடிகளிடம் கூறும்போதும், விதவை மறுமணக் காட்சிகளும் பெரியாரின் தொலைநோக்குப் பார்வையைத் தெளிவுபடுத்துகின்றன.

படத்துக்குப் பெரிய பலம் கதாபாத்திரத் தேர்வு. பெரியாராக நடித்துள்ள சத்யராஜின் நடிப்பைப் பாராட்ட வார்த்தைகளைத் தேட வேண்டியுள்ளது. பெரியாரின் குரலை ஏற்ற இறக்கத்துடன் உச்சரித்திருப்பதிலும், நடை உடை பாவனையிலும், பல ஆண்டு பிரிவுக்குப் பிறகு அண்ணாவைச் சந்திக்கும் காட்சியிலும் அவருக்குள் உறங்கிக்கொண்டிருந்த பெரியாரை நடமாடவிட்டிருக்கிறார். இந்தப் படத்துக்காக சத்யராஜ் எந்த விருதையும் இனி எதிர்பார்க்கத் தேவையில்லை; பெரியார் பாத்திரத்தில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பே அவருக்கு உண்மையான, உரிய, உயரிய விருது.

அதே போல் முதல் மனைவி நாகம்மையாக வரும் ஜோதிர்மயி, பிற்காலத் துணைவி மணியம்மையாக வரும் குஷ்பு ஆகியோர் யதார்த்தத்தின் முழு வடிவையும் தங்களுடைய நடிப்பில் வெளிப்படுத்தியிருக்கிறார்க

Link to comment
Share on other sites

அருமையாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது நானும் சில பெரியார் புத்தகங்களை

வாசித்தேன் பெண்ணிற்கான விடுதலைபற்றிஅவர்கூறிய கருத்துக்கள்

எனக்குள்ளும் முரண்பட்டது வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

மஞ்சள் கண்ணாடி அணிந்தவனுக்கு கண்டதெல்லாம் மஞ்சளாகத்தான் தெரியும்...............

நாயக்கர் என்பது சாதிப்பெயர் அதை துறக்கலாம்... ராமசாமி என்பது பெற்றோர் இட்ட பெயர் அதை எப்படி ராம+ சாமி என்று பிரித்து சாமியை மட்டும் துறப்பது நெடுக்கர் வாழ்க.

ஈரோட்டுக்காரரை ஈரோட்டுக்காரராகத்தான் காட்டமுடியும்...... அவர் பூர்வீகம் கர்னாடகத்தில் எது என்றெல்லாம் தெரியாது.... ஈழத்தமிழர்க்க்கு தெரியுமா உங்கள் பூர்வீகம் தமிழகத்தில் எந்த ஊர் என்று..... அல்லது தற்காலம் சுமார் 100 ஆண்டுகள் முன் இலங்கையில் குடியேறிய மலையக மக்களுக்காவது தெரியுமா தங்கள் தமிழக பூர்வீக ஊர்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10. இந்துமதம் மிகவும் நெகிழ்வானது என்பதை பெரியார் தன் வாயாலேயே ஒத்துக் கொண்டார். புத்தத்துக்கு மாற விரும்பம் இருந்தும்.. இந்துமதத்துக்குள் இருந்தால் தான் அதற்குள் இருந்தே அதை ஏய்கலாம்.. மற்றைய மதங்களைத் தழுவி விட்டால் தன் ஏய்தலுக்கு அவை இடமளிக்காது என்பதை அறிந்து நசூக்காக புத்தத்துக்கு மாற மறுக்கும் பெரியார்.. பகுத்தறிவில் புத்த மதத்துக்கு தாவுதலை முன்னிறுத்துகிறார். சோக்கிரட்டிசை கடவுளாக வரிந்து ஒரு மதத்தைப் படைச்சிருக்கலாமே.. புத்தனை வைச்சு உருவாக்கிய மதத்தை ஆதரித்த பெரியார்..??! அவரை ஒருவர் ஏன் நீங்கள் புதிய மதத்தை ஸ்தாபிக்கக் கூடாது என்று கேட்க.. அதற்கு அசிங்கத்தை காரணம் காட்டுபவர்.. பெளத்த மத அசிங்கத்தை தழுவச் சொன்னதில் என்னையா நியாயம்..??!

ம். கடவுளை நம்பாதவன் என்று மார்தட்டிக் கொண்டாலும், அம்பேத்கார் கூப்பிடும்போது தான் இந்து மதத்தைச் சேர்ந்தவன் என்பதை ஒத்துக் கொள்கின்றார்.

இவ்விடயத்தில் இவரின் கடவுள்மறுப்புக் கொள்கை தோற்றுப் போகின்றது. ஊருக்கு உபதேசம் என்று ஊர் முழுக்கா நாயாப் போயாகக் கத்திப் புலம்பினாலும், கடவுளை நம்புறவன் முட்டாள், மூதேவி என்று தன் தமிழ் மொழி ஆழத்த வெளிப்படுத்தினாலும், இந்து மதத்தில் பற்றுக் கொண்டிருப்பதை ஒத்துக் கொள்கின்றார்.

இப்படிப்பட்ட தெளிவற்ற கொள்கை கொண்டவர் தமிழனுக்குத் தலைவாகிட முடியுமா?

நெடுங்காலபோவானின் விமர்சனத்துக்கு மிக்க நன்றிகள். தொடர்ந்து தரவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராமசாமியார் காறித்துப்பினாலும் அதற்கும் ஒரு அர்த்தமும், ஆராய்வும் செய்கின்றவர்களுக்கு எங்கே அவர் பூர்வீகம் என்று தெரியாமல் போய்விட்டதோ? அல்லது மறைக்கின்றார்களோ?

ராம+சாமி என்பதில் ராம(ன்) என்பது வாய் நிறைய இவர் கத்திய ஆரியப்பெயர் தான், சாமி என்பதும் வாய்நிறையக் கத்திய கடவுள்மறுப்புப் பொருள் தான்.

பெற்றோர் வைத்த பெயரை மாற்ற இயலாது எனபது சுத்த ஏமாற்றுத் தான். எல்லாம் செய்தவர்களுக்கு இது செய்ய முடியாமல போய்விட்டதா? உலகத்தில் எந்த ஒரு மனிதனுக்கும் தன் பெயரை மாற்றம் செய்து கொள்ள உரிமையுண்டு. அதைச் சட்டப்படி செய்து கொள்ளலாம். பெற்றோர் விருப்பத்தை மீறக் கூடாது என்றால் சமூகம் காவிய அடக்குமுறைகள் எல்லாம் முந்திய தலைமுறை கொண்டிருந்த விடயங்கள் தானே? அதை மீறலாம். பெயரை மாற்ற முடியாதோ? நல்ல நொண்டிச்சாட்டு.

Link to comment
Share on other sites

கடவுளை நிந்தித்தன் காரணம் சமத்துவம் இல்லாமையே............... பின் ஏன் சிவனடியார் ஓதுவாருக்கு தி.க வினர் ஆதரவளிக்கின்றனர்.......

பெரியார் தெளிவற்ற கொள்கை உடையவர் என்பதால் தலைவராக தகுதியில்லை என்பது ..... உலகில் உள்ள தலைவர்கள் எல்லாம் தெளிவான கொள்கை உடையவர்கள் என்றாகிறதே???? அது மெய்யா???

பெரியார் கொள்கைகளில் முக்கியமானது கடவுள் மறுப்பல்ல.............

தமிழர் சாதிய சமத்துவமும் .... பெண்ணடிமை ஒழிப்புமே முக்கியம்... அது நிறைவடையாத்தன் காரணம் மாற்றங்கள் மெதுவாகத்தான் நிகழும்.... விரைவாக நடந்தால் அது புரட்சி ...பெரியார் புரட்சித்தலைவரல்ல... மக்கள் தலைவர்

பெரியார் பெயரை மாற்றவில்லை அதற்கென்ன இப்போது...... அவர் ஏன் இப்படி செய்யவில்லை அப்படி செய்யவில்லை என்று அவர் மறைந்த பிறகு கூறித்திரிவதே சிலர் பிழப்பாக போய் விட்டது யாழில் கூட பெரியாரை பற்றி நாங்கள் வலிய புகழ் பாடவில்லை.... தேவையின்றி அவரை நீங்கள் வம்பிழுத்து வசை பாடுவதால் தான் பதில் கூறினோம்

பெரியார் தமிழக மக்கள் ஏற்றுக்கொண்ட ஒரு தலைவர்.... அவர் கன்னட வம்சாவழி தான் தான் ஆனால் அவர் பூர்வீகம் நூற்றாண்டுகள் முந்தையது............. உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் விட்டு விடுங்கள் ஏன் தேவையின்றி அவதூறு பாடி அவரை விரும்புவோர் மனதை புண்படுத்துகிறீர்

பெற்றோர் விருப்பத்தை மீறக் கூடாது என்றால் சமூகம் காவிய அடக்குமுறைகள் எல்லாம் முந்திய தலைமுறை கொண்டிருந்த விடயங்கள் தானே? அதை மீறலாம். பெயரை மாற்ற முடியாதோ? நல்ல நொண்டிச்சாட்டு.

அப்போ மக்கள் அடங்கியே தான் கிடந்திருக்க வேண்டும் இல்லையா ......... என்ன ஒரு ஆதிக்க சாதி வெறி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணடிமைதத்னத்தில் கொண்டிருந்த முரண்பாடுகள் பற்றி நெடுங்காலபோவனின் விளக்கமே போதுமானது. சாதியம் பற்றிய இவரது கொள்கை தீர்க்கதரிசனமானதோ, உண்மையான பற்றாக கிடையாது. அப்படியிருந்தால் இன்றைக்கும் சாதி முரண்பாடுகள் தீர்க்கமுடியாதவையாக மாறியிருக்காது.

எப்படி உயர் சாதிகள் என்று கருதப்பட்டவர்கள் சாதி தொடர்பாக அனுகூலங்களை அனுபவித்தாரோ, அதைத் தட்டிப் பறித்து மற்றவர்களுக்குக் கொடுப்பது என்பது இன்னுமொரு சாதியமைப்பின் முகமே தவிர சாதியொழிப்பல்ல. ( அதில் இவர் தன் சாதியாக மார்தட்டுகின்ற நாயக்கர்களில் குற்றம் குறை ஏதும் காணாமல் பார்ப்பானி என்று ஒரு சமூகத்தை மட்டும் இனம் கண்டு அவர்களை மட்டும் குற்றவாளியாக்கினார் என்பது வேறு கதை) இப்படிப் பட்டவரைச் சாதியொழிப்பாளன் என்று எப்படிக் கூறமுடியும். இன்று அவர் வகுத்த தாழ்த்தப்பட்டவர்களுக்கான ஒதுக்கீடு என்பதால் பலர் தங்களின் சாதிகளைக் காட்டி அனுகூலம் பெறுகின்றார்களே தவிர, அதை ஒழிக்க வேண்டும் என்பதையோ அதனால் ஏற்படும் முரண்பாடுகளைத் தீர்க்க வேண்டும் என்று விருப்பபடுகின்றார்கள் இல்லை.

வன்னியர் கூடத் தங்களைத் தாழ்த்தப்பட்டவர்கள் என்று போராட்டமாக்கியது, இந்த அனுகூலத்தால் இருக்கலாம். இப்படிப்பட்டதொரு நிலை தொடருமானால் சாதி வர்க்கத்தை வைத்துத் தொடர்ந்து மக்கள் தங்களை வளப்படுத்துவார்களே தவிர, எப்படி அதில் இருந்து விடுபட முடியும். எனவே இது பற்றிப் பகுத்தறிவுப்பகலோனுக்குப் பகுத்தறிவு வேலை செய்யவில்லை.

தங்களைப் புரட்சியாளனாகக் காட்டி பெயர் எடுக்க விரும்புபவர்களும், விபச்சாரிகளின் மஞ்சணையில் கணக்குவழக்குப் பார்க்கப் போகின்றவனுக்கும், வேலைவெட்டியில்லாமல் மற்றவர்களில் குறைபிடிப்பவர்களுக்கும் தான் திராவிடச் சிங்கம் தலைமையாகத் தகுதி கொண்டவரே தவிர, தமிழனுக்கல்ல.

திராவிடச் சிங்கத்தை அசிங்கப்படுத்தாதீர்கள் என்று ஒப்பாரி வைப்பவர்கள் அவரின் முட்டாள்தனமான கருத்துக்களைக் கேட்டு, ஒட்டுமொத்த சமூகத்தையும் எள்ளி நகையாடியபோ சிந்தித்திருக்க வேண்டும்.

அப்போ மக்கள் அடங்கியே தான் கிடந்திருக்க வேண்டும் இல்லையா ......... என்ன ஒரு ஆதிக்க சாதி வெறி

எல்லாத் தடைகளையும் தகர்க்கத் தெரிந்்த விண்ணாதி விண்ணர்களுக்கு பெற்றோர் வைத்த பெயரைத் தகர்த்து திராவிடத்துவத்தைக் காப்பாற்றத் தெரியவில்லையே என்பது தான் என் கேள்வியே தவிர, அடக்குமுறைகளை நான் வலியுறுத்தவில்லையே?

Link to comment
Share on other sites

அவரின் முட்டள்த்தனமான கருத்துக்கள் என்ன அய்யா???

யாழில் ஏன் தேவையில்லாமல் பெரியாரை வம்பிழுக்கிறீர்கள் ......... அவரை தலைவராக ஏற்றுக்கொண்ட தமிழர்கள் முட்டாள்கள் தான் இத்தோடாவது பெரியாரை வசை பாடுவது நிற்கட்டும்

Link to comment
Share on other sites

தூயவன் "பெரியார்" படத்தை பார்த்து விட்டார் என்று தெரிகிறது. நல்ல விடயம்.

ஆனால் அந்தப் படம் பெரியார் குறித்து ஒரு அறிமுகம்தான். "பெரியார்" திரைப்படம் பெரியாரை முழுமையாக அறிவதற்கு போதாது.

பெரியார் ஒரு போதும் "தூயதமிழ்" என்றெல்லாம் பேசியதில்லை. அவரைப் பொறுத்தவரை மொழி என்பது ஒரு மனிதனும் இன்னொரு மனிதனும் தொடர்பு கொள்வதற்கான ஒரு ஊடகம்.

அப்படி பேசுகின்ற மொழி எல்லோருக்கும் புரிய வேண்டும். இலகுவானதாக இருக்க வேண்டும். காலத்தோடு சேர்த்து தன்னை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இதுதான் அவருடைய மொழிக் கொள்கை. அவருடைய எழுத்துக்களிலும் பேச்சுக்களிலும் அன்றைக்கு புழுக்கத்தில் இருந்து வடமொழிச் சொற்களும் இருந்தன.

தான் பேசுவது கேட்பவருக்கு புரிய வேண்டும் என்பதே அவருடைய நோக்கமாக இருந்தது.

அவர் மதவெறியோடு மொழிவெறியையும் கண்டித்தவர்.

அவருடைய சிந்தனைகளை சரியாக புரிந்து கொண்டவர்கள் "ராமசாமி" என்ற பெயர் பற்றி கேள்விகளை எழுப்ப மாட்டார்கள்.

Link to comment
Share on other sites

உண்மையில் "பெரியார்" திரைப்படம் எனக்கு ஏமாற்றத்தையே கொடுத்தது.

"பெரியார்" என்கின்ற பெரு நெருப்பை அணைத்து விட்டது போன்ற உணர்வு. பல பெரியார் தொண்டர்களுடன் பேசினேனN. அவர்களுக்கும் உள்ளுக்குள் "பெரியார்" திரைப்படம் பிடிக்கவில்லை.

படத்தில் "பெரியார்" பாத்திரத்தில் நடித்த சத்தியராஜுக்கும் படம் பிடிக்கவில்லை போல் தெரிகிறது. "பெரியார்" 2ஆம் பாகம் நடிப்பது பற்றி பேசியதில் இருந்து அது புரிகிறது.

ஆனால் பெரியார் பற்றித் தெரியாதவர்களுக்கு இந்தப் படம் ஒரு அறிமுகத்தை கொடுக்கும்.

பெரியாருடைய கருத்துக்களை தேடி முழுவதுமாக கற்றுக் கொண்டால் பெரியார் பற்றி அறிய முடியும்.

பார்ப்பனர்கள் அங்குமு; இங்கும் வெட்டி வெட்டி ஒட்டியவற்றை மட்டும் படித்தால் என்றைக்கும் பெரியாரை உங்களால் புரிந்து கொள்ள முடியாது

Link to comment
Share on other sites

நெடுக்காலபோவானின் பெரும்பாலான கேள்விகளுக்கு இங்கு இணைக்கப்பட்ட கருத்துக்களில் பதில் இருக்கிறது.

நான்காவது கேள்விக்கு என்னுடைய கருத்தை சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

பெரியார் இந்து மதப் புராணங்கள் நிறையப் படித்தவர் அல்லவா? இந்தப் புராணங்கள் பற்றியும் இந்துக் கடவுள்கள் பற்றியும் அவர் இந்துக்களிடம் கேள்வி கேட்ட போது அவர்கள் என்ன விளக்கம் சொன்னார்கள் தெரியுமா?

"கடவுள் ஒன்றுதான், இந்து மதம் உயர்வானது, பசு பதி பாசம் என்று நிறைய விசயம் இருக்கு. ஆனால் இது முட்டாள் சனங்களுக்கு விளங்காது, அதனால் புராணங்களையும் இவ்வளவு கடவுள்களையும் உருவாக்கி இந்த அறிவில்லாத சனங்களுக்கு இந்து மதத்தை சொல்லிக் கொடுக்கிறோம். காரியம் நடந்தால் சரிதானே"

இப்படி அவர்கள் சொன்னார்களாம்.

"அட, ஒரு மதமே கோடான கோடி மக்களை காரியம் நடக்க வேண்டும் என்பதற்காக பொய்களை சொல்லி ஏமாற்றுகின்ற போது, நான் காரியம் நடக்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய அம்மாவிடம் பொய் சொல்வதில் என்ன தவறு" என்று பெரியார் நினைத்தாராம்.

இந்து மதத்தைப் பார்த்து பெரியாரும் தெரியாமல் பெண்களிடம் பொய் சொல்லி விட்டார். தவறாக நினைக்க வேண்டாம் நெடுக்காலபோவாரே!

(இது சும்மா லொள்ளுத்தான். உண்மை என்று நினைத்து வாதம் செய்ய வேண்டாம். கேட்பவர்களின் கருத்துக்களில் உள்ள முரண்பாடுகளை சுட்டிக் காட்டினேன்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஒத்துக் கொள்கைக்கு மிக்க நன்றிகள்.

பெரியாரும், தமிழ் தேசியமும், பெரியார் தமிழ் தேசியத்தின் தலைவர் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கும் இதைப் பற்றிச் சொல்லுங்கள்.

அவர்கள் தான் தெரியாமலோ, அல்லது மற்றவர்களுக்குக் கதையோ விடலாம் எனச் சிந்தித்துக் கட்டுரை எழுதிக் கொண்டு அலைகின்றார்கள்

Link to comment
Share on other sites

தூயவன் "பெரியார்" படத்தை பார்த்து விட்டார் என்று தெரிகிறது. நல்ல விடயம்.

ஆனால் அந்தப் படம் பெரியார் குறித்து ஒரு அறிமுகம்தான். "பெரியார்" திரைப்படம் பெரியாரை முழுமையாக அறிவதற்கு போதாது.

பெரியார் ஒரு போதும் "தூயதமிழ்" என்றெல்லாம் பேசியதில்லை. அவரைப் பொறுத்தவரை மொழி என்பது ஒரு மனிதனும் இன்னொரு மனிதனும் தொடர்பு கொள்வதற்கான ஒரு ஊடகம்.

அப்படி பேசுகின்ற மொழி எல்லோருக்கும் புரிய வேண்டும். இலகுவானதாக இருக்க வேண்டும். காலத்தோடு சேர்த்து தன்னை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இதுதான் அவருடைய மொழிக் கொள்கை. அவருடைய எழுத்துக்களிலும் பேச்சுக்களிலும் அன்றைக்கு புழுக்கத்தில் இருந்து வடமொழிச் சொற்களும் இருந்தன.

தான் பேசுவது கேட்பவருக்கு புரிய வேண்டும் என்பதே அவருடைய நோக்கமாக இருந்தது.

அவர் மதவெறியோடு மொழிவெறியையும் கண்டித்தவர்.

அவருடைய சிந்தனைகளை சரியாக புரிந்து கொண்டவர்கள் "ராமசாமி" என்ற பெயர் பற்றி கேள்விகளை எழுப்ப மாட்டார்கள்.

நீங்கள் சொல்வது விசித்திரமான விடயம்...... நீங்கள் தெளிவாக புரிந்து கொண்டீர்கள், ஆனால் பெரியாய் காலத்தில் வாழ்ந்த அவரின் தொண்டர்கள் முக்கியமாக அறிஞர் அண்ணா அப்படி புரிந்து் கொண்டதாக தெரியவில்லையே....!!

பிறகு ஏன் இந்தி எதிர்பு போராட்டங்கள் எல்லாம்...??

இந்த ஒத்துக் கொள்கைக்கு மிக்க நன்றிகள்.

பெரியாரும், தமிழ் தேசியமும், பெரியார் தமிழ் தேசியத்தின் தலைவர் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கும் இதைப் பற்றிச் சொல்லுங்கள்.

அவர்கள் தான் தெரியாமலோ, அல்லது மற்றவர்களுக்குக் கதையோ விடலாம் எனச் சிந்தித்துக் கட்டுரை எழுதிக் கொண்டு அலைகின்றார்கள்

பெரியார் தமிழை போற்ற வில்லை... மக்கள் தங்களின் அடையாளங்களை இழக்க வேணும் எண்று பெரியார் விரும்பினார் என்பதை ஒத்துக்கொண்டால்போதும்....

Link to comment
Share on other sites

பெரியார் எந்த ஒரு மொழியும் ஒரு இனத்தின் மீது திணிக்கப்படுவதை எதிர்த்தார்.

தமிழர்கள் மீது ஹிந்தி திணிக்கப்பட்ட போது அதை எதிர்த்தார்.

ஹிந்தி மீது பெரியாருக்கு எந்த ஒரு வெறுப்பும் இல்லை.

பெரியார் முக்கியமாக கற்றுக் கொடுத்தது "சுயமரியாதை". அவர் தன்னுடைய இயக்கத்தை சுயமரியாதை இயக்கம் என்றுதான் சொன்னார். "சுயமரியாதை" என்ற சொல்லே வடமொழிச் சொல்தான்.

ஆனால் மக்களுக்கு என்ன புரிகிறதோ, அதில் பேசினால் போதும் என்றுதான் அவர் நினைத்தார். தூய தமிழைக் கற்றுக் கொடுப்பதை விட, தமிழர்களை சிந்திக்க தூண்டினால் போதும் என்று அவர் நினைத்தார்.

அவர் முன்னிறுத்திய சுயமரியாதையின் அடிப்படையில்தான் மற்றைய சிந்தனைகள் தோன்றின.

உதாரணமாக ஒன்றைப் பார்ப்போம்

பெரியார் தமிழர்களை தூயதமிழில் பெயர் வையுங்கள் என்று சொன்னதாக நான் படித்ததில்லை. அவர் சொல்லியிருக்க மாட்டார் என்றே நினைக்கின்றேன்.

ஆனால் அவர் கொடுத்த சிந்தனைகள் எங்களை தூயதமிழில் பெயர் வைக்க தூண்டுகின்றன.

தமிழர்கள் சிந்திக்கின்ற அறிவையும், ஏன் என்று கேட்கின்ற அறிவையும் பெரியார் கொடுத்திருக்கிறார்.

மிகுதியை நாம் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான்.

Link to comment
Share on other sites

சபேசன் கூறியவையே நான் விளங்கிக் கொள்வதுவும்.

பெரியார் எங்கே மக்கள் அடக்கப்டுகிறார்களோ எங்கே மனிதர்கள் மேல் நிர்ப்பந்தங்கள் கொடுக்கப்படுகிறாதோ அங்கெல்லாம் அவற்றிற்கு எதிராக் குரல் கொடுக்கிறார்.

அவர் இன வெறியரோ அல்லது மொழி வெறியரோ அல்ல.

அவர் பார்ப்பனீயம் என்னும் அடக்குமுறைச் சித்தாந்திற்க்கு எதிராகாவே திராவிடம் என்னும் அரசியற் கோட்பாட்டை முன் வைக்கிறார்.அதே போல் கிந்தி திணிப்பு என்பதை எதிர்ப்பதுவும் அது இந்திய மேலாதிக்கம் என்பதாலையே.அவரின் திராவிட நாடு என்பதுவும் தமிழ் நாடு என்பதுவும் இந்திய தேசியம் என்பதைக் கொண்டு ஊடுருவும் பார்பனீயம் என்னும் அடக்கு முறையை எதிர்க்கவே முன் வைக்கப்படுகின்றன.

இங்கே தமிழ்த் தேசியம் என்பதுவும் ஒரு இன வெறிக் கோட்பாடு கிடையாது.அதனை இங்கே இருக்கும் சிலர் ஒரு குறுகிய இன வெறிக் கோட்பாடாகா கிட்லரின் நாசியக் கோட்பாட்டைப் போல் பார்க்கின்றனர்.பெரியாரின் திரவிட நாடோ, அன்றி ஈழத் தமிழரின் போராட்டமோ இன வெறியின் அடிப்படியில் அமையவில்லை.ஈழத்தில் தமிழத் தேசிய விடுதலைப் போராட்டம் சிஙள இனவாதாம் என்னும் இனவெறி அடக்குமுறையின் எதிர் நிலையாக இருக்கிறது.தமிழ் நாட்டில் அது இந்திய இந்து பார்ப்பனீய மேலாதிக்கத்திற்க்கு எதிராகக் கட்டி எழுப்பப்படுள்ளது.

எத்தினை முறை சொன்னாலும் தனி நபர்கள் மேல் கருத்துத் திருப்புக்களை மேற் கொள்ளுவதுவும் தனி நபர் தாக்குதல்களை அதன் மூலம் செய்வதுவுமே சிலரின் வேலையாக இருக்கிறது அதனால் மீண்டும் மீண்டும் இதனைச் சொல்ல வேண்டி இருக்கிறது.வெறி கொள்பவர்கள் என்றுமே சுயமாகச் சிந்திப்பது கிடையாது.மதியை வெறி மறைக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்தலைப்பு பெரியார் படம் காட்டுகின்ற மெய்யில் இருந்தான முரண்பாடுகளைச் சொல்ல உருவாக்கப்பட்டதே அன்றி தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தமிழ் தேசிய விடுதலைப் போராட்டமாக திரிக்க இங்கு இடவில்லை.

தமிழீழ விடுதலைப் போராட்டம் ஏற்கனவே உள்ள தமிழ் தேசிய தளத்தைக் கொண்டுதான் இயங்கிக் கொண்டிருக்கின்றது என்பதை உணரும் மக்கள் மத்தியில் இத்தலைப்புக்குள் தவறான பிரச்சார நோக்கிலான கருத்துக்களை பதிய அனுமதிப்பது குறித்து நிர்வாகம் சிந்திக்க வேண்டும்.

பல விடயங்கள் நிர்வாகத்துக்கு சுட்டிக்காட்டுகின்ற போதும் சில நடவடிக்கைகள் மிகத் தாமதமாக எடுக்கப்படுகின்றமை வருத்தமளிக்கின்றன..! :icon_idea:

Link to comment
Share on other sites

நிர்வாகத்தின் கவனத்திற்க்கு,

இந்த ஒத்துக் கொள்கைக்கு மிக்க நன்றிகள்.

பெரியாரும், தமிழ் தேசியமும், பெரியார் தமிழ் தேசியத்தின் தலைவர் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கும் இதைப் பற்றிச் சொல்லுங்கள்.

அவர்கள் தான் தெரியாமலோ, அல்லது மற்றவர்களுக்குக் கதையோ விடலாம் எனச் சிந்தித்துக் கட்டுரை எழுதிக் கொண்டு அலைகின்றார்கள்

இதற்கான பதிலே மேலே கொடுக்கப்படுள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.