Jump to content

"அப்பாவுக்கு.... தலைமயிர் வெட்ட, ஆருக்கு விருப்பம்?

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Auch Scholz schneidet Haare selbst | „Bin froh, wenn ich wieder ...

(ஜேர்மன் நிதியமைச்சர்)

என்னுடைய... தலை மயிரும், கனக்க வளர்ந்து... 
காதை  மூடும் போல இருப்பதை பார்க்க,அரியண்டமாக இருந்தது. வழக்கமாக போகும்... 
"மசூதி சலூனுக்கும்" போக பயமாக இருந்த படியால்...
சென்ற.. திங்கள் கிழமை, ஈஸ்டர் லீவு என்ற  படியால்.... 

பிள்ளைகள் குழந்தைகளாக இருந்த போது...  25 வருசத்துக்கு முதல், 
அவர்களுக்கு... தலைமயிர் வெட்ட வாங்கின  "மெசின்  ஒன்று"...  
நில அறையில்... இருந்தது நினைவுக்கு வர, அதை எடுத்துக் கொண்டு வந்து,
முயற்சி பண்ணிப் பார்த்தால்... படத்தில் உள்ளதை போல, வந்திட்டுது. :grin:

இனி... யோசிக்க, நேரமில்லை என்று விட்டு...
பிள்ளைகளும் வீட்டில் நின்ற படியால்....
"அப்பாவுக்கு.... தலைமயிர் வெட்ட, ஆருக்கு விருப்பம்?...  என்று, ஒருமுறை தான்... கேட்டேன். ❤️
ஒவ்வொரு அறையிலிருந்தும்... நான் வெட்டுகின்றேன் என்று, 
மூன்றும்.... பாய்ந்து வந்து விட்டதுகள். 💕

வந்தவர்களை... ஏமாற்றப் படாது என்று, 
இருக்கிற, பொட்டல் காணியை...  😎
இடது பக்கம், வலது பக்கம், பிடரி பக்கம் என்று.. பிரித்து கொடுத்து,
இனி வெட்டுங்கோ... என்று சொன்ன போது,
அவர்கள்... குழந்தைகளாக இருந்த நேரத்தில்...  குழறக்  குழற... 
நான், மயிர் வெட்டிய... நினைவுகள், எல்லாம் வந்திருக்கும் போலை...
பிரித்து... மேய்ந்து விட்டார்கள். 😅

ஒராள்... மயிர் வெட்ட,  சும்மா நின்ற ஒராள்... வீடியோ எடுக்குது,
மற்ற ஆள்... கணனியில், பழைய நாடகத்தை... மீண்டும் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்த,
மனைவியிடம்... "அப்பாவுக்கு... தலைமயிர் வெட்டுறம்,  நீங்களும்  வந்து பாருங்கோ... "
என்று சொல்லி முடிக்க முதல்.... 💥

மனிசி... குளியலறைக்குள், புயலென வந்து.... 🗯️ 
வருசப் பிறப்பான இன்று...தலை மயிர் வெட்டுறீங்களோ...
நேற்று, முந்தநாள்... எல்லாம்,  இந்த யோசனை வரமால்,
கொம்புயூட்டருக்குள்ளை தலையை, வைத்துக் கொண்டு இருந்து போட்டு,
இண்டைக்கென்று... இதை செய்ய வெக்காமையில்லை? 👁️‍🗨️
வி*ர்  பிடிச்ச மனிசன், ச**ன் பிடிக்கிற வேலை பாக்குது...  என்று, பேசத்  தொடங்கி விட்டது. 😢

இதென்ன.... கோதாரியாய் கிடக்கு, 
அடுத்த வீட்டுக்கு... சத்தம் கேட்கப் போகுது  என்ற பயத்திலையும்,
நான் சாரத்துடன்.... அரைவாசி தலை மயிர் வெட்டின நிலைமையில்....
கட்டி அணைத்து, முத்தம் 💋 கொடுத்து...  சமாளிக்கவும் முடியாமல்...
தேவாங்கு...👽 மாதிரி முழித்துக்  கொண்டிருந்த போது.... 💀

மனிசியின்...  ரெலிபோன்,  "கிணிங்  கிணிங்" என்று அழைத்தது. 
பொறுங்கோ... வாறன், எண்டிட்டு போன, இடை வெளியில்...
ஆர்....  எடுத்தது என்று, பிள்ளைகளிடம், கேட்ட போது...
கனடாவில் இருந்து... சின்ன மாமி கதைக்கிறா.. என்று சொன்னார்கள்.  

அப்பாடா..... தப்பினேன் பிழைத்தேன்... என்று சந்தோசப் பட்டேன். :grin:

மனிசி.... தன்ரை, தங்கச்சியுடன் கதைத்தால்,கன நேரம் எடுக்கும்.
என்ரை... மச்சாள் (தமிழ் நாட்டில்.. சகலை) என்னை, 
அந்த.. இக்கட்டில் இருந்து, காப்பாற்றி விட்டாள். 🤣

இந்த... இடைவெளியில்,  மிச்ச மயிரையும்...  
முழு மொட்டை  அடித்து விட்டு, கண்ணாடியில் பார்த்து ரசிப்பதும்... ஒரு அழகு தான். 🤪

பிற் குறிப்பு:  இந்தக் கதையை... எழுத,
குமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்கில் வந்த படம்  தான்... காரணம். 

டிஸ்கி:  நடந்த சம்பவங்கள்...  70 % உண்மையில் நடந்தது. 
மிகுதி 40 % வாசகர்கள்... கொடுப்புக்குள், சிரிக்கக் கூடியதாக.. புனையப்  பட்டது. :)

Edited by தமிழ் சிறி
  • Like 8
  • Haha 4
Link to post
Share on other sites
  • Replies 74
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

(ஜேர்மன் நிதியமைச்சர்) என்னுடைய... தலை மயிரும், கனக்க வளர்ந்து...  காதை  மூடும் போல இருப்பதை பார்க்க,அரியண்டமாக இருந்தது. வழக்கமாக போகும்...  "மசூதி சலூனுக்கும்" போக பயமாக இருந்த படியால்... ச

கொழும்பில்.... "ட்ராம்"  தண்டவாளங்களை, நானும் பார்த்திருக்கின்றேன்.  ஏறியது இல்லை. இது, அதுவாக இருக்கலாம்... என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் எல்லாம் அட்வான்ஸ் கோஸ்ட்டிகள்  நமக்கு நாமே தலைக்கு  முழுக்கு போடமுன் கொஞ்சம் கொஞ்சமே  அரிந்துவிடுவம் புதிதாய் என்போல் முயற்சிப்பவர்கள்  இந்தியன் கடையில் தண்ணி பைப்  அடைப்பு எடுப்பதை வாங்கி வைக்கவும் .😃

நமக்குவாது  பரவாயில்லை  பியூட்டி பார்லருக்கு ஒவ்வொரு கிழமையும் போய்  மீசையும் காது பக்கத்தில் வளரும் முடியையும் எடுத்த கூட்டம் இப்ப என்ன செய்கினம் என்று தெரியவில்லை ஆநேகமா இந்த லொக்டவுன்  முடிய நிறைய அசம்பாவிதம்கள்  நடக்க இருக்குது என்று உள்  மனது சொல்லுது .

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

Auch Scholz schneidet Haare selbst | „Bin froh, wenn ich wieder ...

(ஜேர்மன் நிதியமைச்சர்)

என்னுடைய... தலை மயிரும், கனக்க வளர்ந்து... 
காதை  மூடும் போல இருப்பதை பார்க்க,அரியண்டமாக இருந்தது. வழக்கமாக போகும்... 
"மசூதி சலூனுக்கும்" போக பயமாக இருந்த படியால்...
சென்ற.. திங்கள் கிழமை, ஈஸ்டர் லீவு என்ற  படியால்.... 

பிள்ளைகள் குழந்தைகளாக இருந்த போது...  25 வருசத்துக்கு முதல், 
அவர்களுக்கு... தலைமயிர் வெட்ட வாங்கின  "மெசின்  ஒன்று"...  
நில அறையில்... இருந்தது நினைவுக்கு வர, அதை எடுத்துக் கொண்டு வந்து,
முயற்சி பண்ணிப் பார்த்தால்... படத்தில் உள்ளதை போல, வந்திட்டுது. :grin:

இனி... யோசிக்க, நேரமில்லை என்று விட்டு...
பிள்ளைகளும் வீட்டில் நின்ற படியால்....
"அப்பாவுக்கு.... தலைமயிர் வெட்ட, ஆருக்கு விருப்பம்?...  என்று, ஒருமுறை தான்... கேட்டேன். ❤️
ஒவ்வொரு அறையிலிருந்தும்... நான் வெட்டுகின்றேன் என்று, 
மூன்றும்.... பாய்ந்து வந்து விட்டதுகள். 💕

வந்தவர்களை... ஏமாற்றப் படாது என்று, 
இருக்கிற, பொட்டல் காணியை...  😎
இடது பக்கம், வலது பக்கம், பிடரி பக்கம் என்று.. பிரித்து கொடுத்து,
இனி வெட்டுங்கோ... என்று சொன்ன போது,
அவர்கள்... குழந்தைகளாக இருந்த நேரத்தில்...  குழறக்  குழற... 
நான், மயிர் வெட்டிய... நினைவுகள், எல்லாம் வந்திருக்கும் போலை...
பிரித்து... மேய்ந்து விட்டார்கள். 😅

ஒராள்... மயிர் வெட்ட,  சும்மா நின்ற ஒராள்... வீடியோ எடுக்குது,
மற்ற ஆள்... கணனியில், பழைய நாடகத்தை... மீண்டும் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்த,
மனைவியிடம்... "அப்பாவுக்கு... தலைமயிர் வெட்டுறம்,  நீங்களும்  வந்து பாருங்கோ... "
என்று சொல்லி முடிக்க முதல்.... 💥

மனிசி... குளியலறைக்குள், புயலென வந்து.... 🗯️ 
வருசப் பிறப்பான இன்று...தலை மயிர் வெட்டுறீங்களோ...
நேற்று, முந்தநாள்... எல்லாம்,  இந்த யோசனை வரமால்,
கொம்புயூட்டருக்குள்ளை தலையை, வைத்துக் கொண்டு இருந்து போட்டு,
இண்டைக்கென்று... இதை செய்ய வெக்காமையில்லை? 👁️‍🗨️
வி*ர்  பிடிச்ச மனிசன், ச**ன் பிடிக்கிற வேலை பாக்குது...  என்று, பேசத்  தொடங்கி விட்டது. 😢

இதென்ன.... கோதாரியாய் கிடக்கு, 
அடுத்த வீட்டுக்கு... சத்தம் கேட்கப் போகுது  என்ற பயத்திலையும்,
நான் சாரத்துடன்.... அரைவாசி தலை மயிர் வெட்டின நிலைமையில்....
கட்டி அணைத்து, முத்தம் 💋 கொடுத்து...  சமாளிக்கவும் முடியாமல்...
தேவாங்கு...👽 மாதிரி முழித்துக்  கொண்டிருந்த போது.... 💀

மனிசியின்...  ரெலிபோன்,  "கிணிங்  கிணிங்" என்று அழைத்தது. 
பொறுங்கோ... வாறன், எண்டிட்டு போன, இடை வெளியில்...
ஆர்....  எடுத்தது என்று, பிள்ளைகளிடம், கேட்ட போது...
கனடாவில் இருந்து... சின்ன மாமி கதைக்கிறா.. என்று சொன்னார்கள்.  

அப்பாடா..... தப்பினேன் பிழைத்தேன்... என்று சந்தோசப் பட்டேன். :grin:

மனிசி.... தன்ரை, தங்கச்சியுடன் கதைத்தால்,கன நேரம் எடுக்கும்.
என்ரை... மச்சாள் (தமிழ் நாட்டில்.. சகலை) என்னை, 
அந்த.. இக்கட்டில் இருந்து, காப்பாற்றி விட்டாள். 🤣

இந்த... இடைவெளியில்,  மிச்ச மயிரையும்...  
முழு மொட்டை  அடித்து விட்டு, கண்ணாடியில் பார்த்து ரசிப்பதும்... ஒரு அழகு தான். 🤪

பிற் குறிப்பு:  இந்தக் கதையை... எழுத,
குமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்கில் வந்த படம்  தான்... காரணம். 

டிஸ்கி:  நடந்த சம்பவங்கள்...  70 % உண்மையில் நடந்தது. 
மிகுதி 40 % வாசகர்கள்... கொடுப்புக்குள், சிரிக்கக் கூடியதாக.. புனையப்  பட்டது. :)

படத்தை போடுங்கோ பார்ப்போம். எனக்கு வெட்டினது பெற்றறா அல்லது உங்களுக்கு அடிச்சது பெற்றறா எண்டு சொல்லுறன்.  😜

(மாணவர் விடுதியில் கன காலம் இருந்தபடியால் நான் நன்றாகவே புகுந்து விளையாடுவேன் 😂)

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, பெருமாள் said:

நாங்கள் எல்லாம் அட்வான்ஸ் கோஸ்ட்டிகள்  நமக்கு நாமே தலைக்கு  முழுக்கு போடமுன் கொஞ்சம் கொஞ்சமே  அரிந்துவிடுவம் புதிதாய் என்போல் முயற்சிப்பவர்கள்  இந்தியன் கடையில் தண்ணி பைப்  அடைப்பு எடுப்பதை வாங்கி வைக்கவும் .😃

நமக்குவாது  பரவாயில்லை  பியூட்டி பார்லருக்கு ஒவ்வொரு கிழமையும் போய்  மீசையும் காது பக்கத்தில் வளரும் முடியையும் எடுத்த கூட்டம் இப்ப என்ன செய்கினம் என்று தெரியவில்லை ஆநேகமா இந்த லொக்டவுன்  முடிய நிறைய அசம்பாவிதம்கள்  நடக்க இருக்குது என்று உள்  மனது சொல்லுது .

பெருமாள்... எனது,  "மொட்டை  மண்டையை"   பார்த்து...
வேலை இடத்தில்... எல்லாரும் வியந்தார்கள்.

எங்கு...  வெட்டிநீர்கள்?
என்று கேட்ட போது....
அது, குடும்ப ரகசியம்... என்று, பதிலளித்த போது...
பயங்கரமாய்... சிரித்தார்கள். அது, போதும் எனக்கு.

அடுத்த முறையும்... மயிர் வளர்ந்தால்,  வீட்டில் வைத்துத்தான்.. மயிர் வெட்டுவேன்.    :)

  • Haha 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் தைரியத்தை பாரட்டனும் 😃, வெளியில் போனீர்களா? 

நான் கடந்த 5 வருடங்களுக்கு மேல் வீட்டில் தான் வெட்டுவது, பின் மண்டையை மட்டும் பிள்ளைகளிடம் கெடுப்பது சரி செய்ய. மொட்டைதான் 😄😄

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

படத்தை போடுங்கோ பார்ப்போம். எனக்கு வெட்டினது பெற்றறா அல்லது உங்களுக்கு அடிச்சது பெற்றறா எண்டு சொல்லுறன்.  😜

(மாணவர் விடுதியில் கன காலம் இருந்தபடியால் நான் நன்றாகவே புகுந்து விளையாடுவேன் 😂)

கபிதன்.... நான், யாழ். களத்தில்  இணையும் போதே......
தனிப்பட்ட படங்களை, இணைப்பது இல்லை.... 
என்ற,  வைராக்கியத்துடன் தான், உள்ளே வந்தேன்.
அப்படி... ஒரு  படம் வந்தால்,  அது.... துயர் பகுதியில் வரலாம். :)

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நான் ஜேர்மனிக்கு வந்த புதிசிலை காம்பிலை இருக்கேக்கை இரண்டு பொடியள் என்னிலை பழகினவங்கள்.அதுக்குப்பிறகு தனி வீட்டிலை இருக்கேக்கை சலூனுக்கு போய் கைப்பாசையாலை கதைச்சு வெட்டுவிச்சனான்.அப்பிடியே காலம் போகப்போக ஒரு லேடியை அணைவு பிடிச்சிட்டன். அதுக்குப்பிறகு அவிங்களே  வீட்டை வந்து வெட்டி விடுவாங்க......பிறகு கலியாணம் முடிச்சாப்பிறகு சலூனுக்கு போய்த்தான் வெட்டுறது....
இப்ப உந்த கொரோனாவாலை சலூன் எல்லாம் பூட்டெல்லோ....தன் கையே தனக்கு உதவியெண்டுட்டு  கண்ணாடியிலை பாத்து சயிற் இரண்டு பக்கத்தையும் மிசினாலை கோதி விட்டன்.பிடரி பக்கத்துக்கு பாரியார் கைவண்ணம்.என்ரை ரெலிபோனாலை பின்பக்கத்தை செல்பி எடுத்துப்பாத்தன் .இடைக்கிடை கறையான் அரிச்சமாதிரி இருந்தாலும் பரவாயில்லாமல் கிடந்துது.

அது சரி சிறித்தம்பி நீங்கள் என்ன சம்போ பாவிக்கிறனீங்கள்?😎

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, உடையார் said:

உங்கள் தைரியத்தை பாரட்டனும் 😃, வெளியில் போனீர்களா? 

நான் கடந்த 5 வருடங்களுக்கு மேல் வீட்டில் தான் வெட்டுவது, பின் மண்டையை மட்டும் பிள்ளைகளிடம் கெடுப்பது சரி செய்ய. மொட்டைதான் 😄😄

உடையார்... எனக்கு,  வாரத்தில்... ஐந்து நாளும்... வெளியே போக வேண்டிய வேலை.
முதல் இரண்டு நாள்..  வெட்கத்தில்  தொப்பி போட்டுக் கொண்டு போனேன்.

பிறகு...  என்ரை, மொட்டை  மண்டையை... தடவுறதில இருக்கிற சந்தோசம்.... 
பெரிதாக இருக்குது என்ற... படியால்,  இப்ப தொப்பி போடுவதில்லை.

ஐந்து நாளில், வெட்டிய..மயிர் எல்லாம், புசு.. புசேண்டு..  வெள்ளையாக வளருது.:grin:

  • Haha 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

வீடியோ எடுக்குது,

அந்த வீடியோவை போட்டால் நாங்களும் பார்த்து சிரிப்போமல்ல😀

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, தமிழ் சிறி said:

கபிதன்.... நான், யாழ். களத்தில்  இணையும் போதே......
தனிப்பட்ட படங்களை, இணைப்பது இல்லை.... 
என்ற,  வைராக்கியத்துடன் தான், உள்ளே வந்தேன்.
அப்படி... ஒரு  படம் வந்தால்,  அது.... துயர் பகுதியில் வரலாம். :)

சிறி,

பகடியாக கேட்டதை சீரியஸாக எடுதுவிட்டீர்கள். வெறு யாரினதும் படத்தை இணைப்பீர்கள் என எதிர்பார்த்தேன். 😀

33 minutes ago, குமாரசாமி said:

நான் ஜேர்மனிக்கு வந்த புதிசிலை காம்பிலை இருக்கேக்கை இரண்டு பொடியள் என்னிலை பழகினவங்கள்.அதுக்குப்பிறகு தனி வீட்டிலை இருக்கேக்கை சலூனுக்கு போய் கைப்பாசையாலை கதைச்சு வெட்டுவிச்சனான்.அப்பிடியே காலம் போகப்போக ஒரு லேடியை அணைவு பிடிச்சிட்டன். அதுக்குப்பிறகு அவிங்களே  வீட்டை வந்து வெட்டி விடுவாங்க......பிறகு கலியாணம் முடிச்சாப்பிறகு சலூனுக்கு போய்த்தான் வெட்டுறது....
இப்ப உந்த கொரோனாவாலை சலூன் எல்லாம் பூட்டெல்லோ....தன் கையே தனக்கு உதவியெண்டுட்டு  கண்ணாடியிலை பாத்து சயிற் இரண்டு பக்கத்தையும் மிசினாலை கோதி விட்டன்.பிடரி பக்கத்துக்கு பாரியார் கைவண்ணம்.என்ரை ரெலிபோனாலை பின்பக்கத்தை செல்பி எடுத்துப்பாத்தன் .இடைக்கிடை கறையான் அரிச்சமாதிரி இருந்தாலும் பரவாயில்லாமல் கிடந்துது.

அது சரி சிறித்தம்பி நீங்கள் என்ன சம்போ பாவிக்கிறனீங்கள்?😎

லேடியை அணைவு பிடிச்ச கேடி 😂😂😂😂

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, குமாரசாமி said:

குமாரசாமி அண்ணா.... நாங்கள் குளிக்கிறதே....மாசத்துக்கு ஒரு தரம் தான்,
நாங்கள்... இலங்கையிருந்து...வரும்.... போதே...
மில்க் வைற், சண்  லைற், ரெக்சோனா, லைவ்  போய்....
போன்ற சவர்க்காரங்களை கொண்டு வந்தானங்கள். 

எனக்கு,  குளிக்கிற தண்ணியில கண்டம் என்று.... சிலோன் சாத்திரி சொன்னவர். 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, குமாரசாமி said:

....அது சரி சிறித்தம்பி நீங்கள் என்ன சம்போ பாவிக்கிறனீங்கள்?😎

கொடுப்புக்குள் சிரிக்கக் கூடிய பதிவு..!  😋

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

பிள்ளைகள் குழந்தைகளாக இருந்த போது...  25 வருசத்துக்கு முதல், 
அவர்களுக்கு... தலைமயிர் வெட்ட வாங்கின  "மெசின்  ஒன்று"...  
நில அறையில்... இருந்தது நினைவுக்கு வர, அதை எடுத்துக் கொண்டு வந்து,

வணக்கம் சிறி
1992ம் ஆண்டு மனைவி பிள்ளைகள் நியூயோர்க் வந்த பின் இன்றுவரை சலூன் பக்கம் போனதில்லை.
பலருக்கும் இதை நம்ப கஸ்டமாக இருக்கும்.ஆனாலும் இது தான் உண்மை.
அவர்கள் வந்த புதிதிலேயே மெசினும் ஒன்று வாங்கினேன்.மனைவி பிள்ளைகள் மாறிமாறி வெட்டிப் பழகினார்கள்.சரிபிழையைப் பற்றி எதுவுமே அலட்டிக் கொள்வதில்லை.5-6 வருடத்துக்கொரு தடவை புதிதாக மெசின் வாங்குவேன்.
     அதுக்காக இவனுக்கு மயிரே இல்லை என்று முடிவு பண்ணாதீர்கள்.இப்போது குறைவு தான்.ஆனால் அந்தக் காலங்களில் மிகவும் அடர்த்தியாக இருக்கும்.

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சிறி 
படத்தை போடாடததால் , அந்த அழகை நாங்கள்  பார்க்க கொடுத்து வைக்கவில்லை. எனக்கு கனகாலமாக மனிசிதான் வெட்டிவிடுகிறார். இந்த கொஞ்ச முடிக்கு 10 டாலர் கொடுக்க வேண்டுமா என்று பேசிபோட்டு வெட்டத்  தொடங்கியது. 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

உடையார்... எனக்கு,  வாரத்தில்... ஐந்து நாளும்... வெளியே போக வேண்டிய வேலை.
முதல் இரண்டு நாள்..  வெட்கத்தில்  தொப்பி போட்டுக் கொண்டு போனேன்.

பிறகு...  என்ரை, மொட்டை  மண்டையை... தடவுறதில இருக்கிற சந்தோசம்.... 
பெரிதாக இருக்குது என்ற... படியால்,  இப்ப தொப்பி போடுவதில்லை.

ஐந்து நாளில், வெட்டிய..மயிர் எல்லாம், புசு.. புசேண்டு..  வெள்ளையாக வளருது.:grin:

மொட்டை அடிச்சுப்போட்டு தடவுற சுகமே தனி 😃

  • Haha 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு நினைவு மீட்டல் சிறியர்.....!

நாங்கள் சிறுவர்களாய் இருந்தபோது  ஒருவர் வருவார் நான் மற்றும் அயலட்டை  பிள்ளைகள் என்று ஒரு 8/10 பேர் பின் வளவில் பூவரசுக்கு கீழ்  ஸ்டூலில் இருக்க வெட்டியது நல்ல ஞாபகம். பின்பு நான் இளந்தாரியாய் வந்தபின் எப்போதும் வசந்தா சலூனில்தான் வெட்டுவது வழக்கம்.( கே.கே. எஸ். வீதியில்  மனோகரா தியேட்டருக்கும்  கன்னாதிட்டி சிவன் கோவிலுக்கும் இடையில் இருந்தது).அங்கு வெட்டுவதற்கு இன்னுமொரு காரணம் அவர்கள் "மல்லிகை" என்ற புத்தகம் வைத்திருப்பார்கள். இலக்கியத்தரமான புத்தகம்.மாதம் ஒருமுறை வரும்.அதை வாசிப்பது வழக்கம்.....!

     பின்பு என் அப்பம்மாவின் இறுதிச்சடங்கு செய்ய வந்தவர் (சிறுவயதில் வெட்டியவரின் மகன் ) நான் கொள்ளி வைக்க முன் எனக்கு மொட்டை அடித்து விட்டவர் தான் நாச்சிமார் கோயிலடியில் சலூன் வைத்திருப்பதாக சொன்னார்.அதன்பின் அங்குதான் போவது....!

     பிரான்ஸ் வந்தபின் gare de l 'est ல் ஒரு பாகிஸ்தான் சலூனில் வெட்டுவது. அங்குதான் 5 ஈரோ. மற்றைய இடங்களில் 8 / 10 ஈரோ.....! பின்பு மனைவி பிள்ளைகள் வந்தபின் நான் ஒரு மிசின் வாங்கி மகனுக்கு நான் வெட்டி விடுவது, மனைவி எனக்கு வெட்டி விடுவது. ஆரம்பத்தில் தடக்குப் பட்டாலும் பின் கச்சிதமாக வெட்டப் பழகி விட்டாள்.பின்பு அவள் இல்லாத சமயங்களில் நானே பின் பக்கம் ஒரு கண்ணாடியை பிடித்துக் கொண்டு வெட்டிக்கொள்வேன்.இப்பவெல்லாம் பொடியள் அநியாய காசு குடுத்து சலூனில் வெட்டிக்கொள்கிறார்கள்......!  🤔

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

கந்தர்மடம் சந்தில, நல்லூரில இருந்து அரசடி வீதியால் வரேக்க, பலாலி ரோட்டில ஏறும் போது, இடது மூலையில் ஒரு சலூன்....

அங்க தலையை கொடுத்து, அவர் கேக்கிற வீட்டு விடுப்புகளை டிப்ஸ் ஆக சொல்லி, வெட்டினாப்பிறகு, பலாலி ரோடினை கடந்து முன்னால இருக்கிற சேட்டு போடாம, மடிச்சு கட்டின நாலுமுளத்தோட, யாவாரம் செய்யுற சின்னாம்பி கடையில பித்தளை மூக்குப் பேணில பிளைன் டீயும் வடையும் வாங்கி அடிச்சுப்போட்டு, அப்படியே, வேலு அண்ணர் கச்சான் கடையில ஒரு கச்சான் பாக்கெட் சோளம் போடாம வாங்கி.... 

வாடகை கார்காரர் சீராளன் அண்ணைக்கும், 'எப்படி அண்ணை, இருக்கிறியள்' என்று ஒரு சொல்லி வைத்து... அப்படி கச்சானை கொறித்துக் கொண்டே வீட்டுக்கு போன சிறியருக்கு....

ஜெர்மனி போய்... பிள்ளையள், தலைமயிர் வெட்டி.... யாழில் பதிவு போடுவன் எண்டு நினைத்திருப்பாரோ? 😜

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

என்க்கும் இப.படித்தான் மனைவி பின் மகள் என்று வெட்டிவிடுவது.இப்ப நாலு மயிர் கையால அப்பப்ப பிடுங்கி எறிஞ்சுப்போட்டு போறது.😄

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

 அதுக்காக இவனுக்கு மயிரே இல்லை என்று முடிவு பண்ணாதீர்கள்.இப்போது குறைவு தான்.ஆனால் அந்தக் காலங்களில் மிகவும் அடர்த்தியாக இருக்கும்.

எல்லாருக்கும் அந்தக்காலத்திலை அடர்த்தியாகத்தான் இருக்கும்.பிரச்சனை இப்பவெல்லோ 😎

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

13 hours ago, தமிழ் சிறி said:

டிஸ்கி:  நடந்த சம்பவங்கள்...  70 % உண்மையில் நடந்தது. 
மிகுதி 40 % வாசகர்கள்... கொடுப்புக்குள், சிரிக்கக் கூடியதாக.. புனையப்  பட்டது. 

கதை என்னவோ சிரிப்பா இருக்கு... ஆனால் கணக்குத் தான் இடிக்குதே.. 70+40 = 110%

  • Haha 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

கந்தர்மடம் சந்தில, நல்லூரில இருந்து அரசடி வீதியால் வரேக்க, பலாலி ரோட்டில ஏறும் போது, இடது மூலையில் ஒரு சலூன்....

அங்க தலையை கொடுத்து, அவர் கேக்கிற வீட்டு விடுப்புகளை டிப்ஸ் ஆக சொல்லி, வெட்டினாப்பிறகு, பலாலி ரோடினை கடந்து முன்னால இருக்கிற சேட்டு போடாம, மடிச்சு கட்டின நாலுமுளத்தோட, யாவாரம் செய்யுற சின்னாம்பி கடையில பித்தளை மூக்குப் பேணில பிளைன் டீயும் வடையும் வாங்கி அடிச்சுப்போட்டு, அப்படியே, வேலு அண்ணர் கச்சான் கடையில ஒரு கச்சான் பாக்கெட் சோளம் போடாம வாங்கி.... 

வாடகை கார்காரர் சீராளன் அண்ணைக்கும், 'எப்படி அண்ணை, இருக்கிறியள்' என்று ஒரு சொல்லி வைத்து... அப்படி கச்சானை கொறித்துக் கொண்டே வீட்டுக்கு போன சிறியருக்கு....

ஜெர்மனி போய்... பிள்ளையள், தலைமயிர் வெட்டி.... யாழில் பதிவு போடுவன் எண்டு நினைத்திருப்பாரோ? 😜

உங்களுக்கு சீராளனை நன்றாகத் தெரிந்திருக்குது போல..... அப்ப, பக்கத்தில் துரைசிங்கத்தின் கார் கராஜ் மற்றும் அருகில் ஒரு இரும்பு வேலை லொறி செசி வேலை செய்யும்  பட்டறையும் தெரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன்.அவர் எனது ஒரு முறையில் அண்ணர். அதுதான் கஞ்சா விற்கும் காஞ்சனா கதையில் அந்த இடத்தை மையப்படுத்தி எழுதி இருக்கின்றேன்......!  😇

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

ஒமோம்...துரையண்ண கராஜ்... தெய்வீக திருக்குறள் மன்ற ரோட்டுக்கு முன்னால இருந்தது.... அங்க பழனி என்று டிங்கேர் வேலை செய்யுற ஒருத்தர் இருந்தவர். அவரை சிலோன் ஜெமினி எண்டு சொல்லுவினம்.. 

சீராளனின் மாமனார், கால் ஏலாத ஒருவர், அவரும் கந்தர்மடம் சந்தில கார் வைத்திருந்தவர்... முரட்டு மீசை..நல்ல தடிமன்... ஆள் கொஞ்சம் கட்டை... தமிழ் படங்களில் வரும் வில்லன் மாதிரி பயம் காட்டும் உருவம்.

10 hours ago, ஈழப்பிரியன் said:

     அதுக்காக இவனுக்கு மயிரே இல்லை என்று முடிவு பண்ணாதீர்கள்.இப்போது குறைவு தான்.

நாங்கள் நுவரஎலியாவில் எடுத்த உங்கண்ட படத்தை, பார்த்திருப்பதால், எந்தளவுக்கு இருக்குது எண்டு தெரியும்...🤗

Edited by Nathamuni
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Nathamuni said:

ஒமோம்...துரையண்ண கராஜ்... தெய்வீக திருக்குறள் மன்ற ரோட்டுக்கு முன்னால இருந்தது.... அங்க பழனி என்று டிங்கேர் வேலை செய்யுற ஒருத்தர் இருந்தவர். அவரை சிலோன் ஜெமினி எண்டு சொல்லுவினம்.. 

சீராளனின் மாமனார், கால் ஏலாத ஒருவர், அவரும் கந்தர்மடம் சந்தில கார் வைத்திருந்தவர்... முரட்டு மீசை..நல்ல தடிமன்... ஆள் கொஞ்சம் கட்டை... தமிழ் படங்களில் வரும் வில்லன் மாதிரி பயம் காட்டும் உருவம்.

நாங்கள் நுவரஎலியாவில் எடுத்த உங்கண்ட படத்தை, பார்த்திருப்பதால், எந்தளவுக்கு இருக்குது எண்டு தெரியும்...🤗

பழனியும் எனது உறவினர்.....துரையண்ணர் நண்பர்......பட்டறை  வைத்திருந்தவர் அண்ணர் .....!

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சிறியர்,

தெய்வீக திருக்குறள் மன்ற ரோடினுள், பொக்சர் வீட்டுக்கு பக்கத்தில், முருகவேள் என்று ஒருவர் இருந்தார்.... ஜெர்மனி போனார்.... உங்களுக்கு அவரை தெரியுமா?
 
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எளிதில் நோய் தொற்றக்கூடிய ஆபத்தில் உள்ள எமக்கு உதவுங்கள் – வன்னி விழிப்புலனற்றோர் சங்கம்    91 Views வன்னி விழிப்புலனற்றோர் சங்கம் கொரோனாப் பெருந் தொற்று தொடர்பான ஒரு பொது வேண்டுகோளை புலம்பெயர் மக்களிடம் வைத்திருந்தார்கள். அது தொடர்பாக அதன் செயலாளர் மகிந்தகுமார் அவர்கள் ‘இலக்கு’ ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலை இங்கு தருகிறோம்.    வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் தோற்றம். அதன் அங்கத்தவர்கள், செயற்பாடுகள் தொடர்பாக, எமது வாசகர்களுக்கு சுருக்கமாக அறியத் தருவீர்களா? பதில் – எமது வன்னி விழிப்புலனற்றோர் சங்கமானது 22.07.2013ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அன்றைய கால கட்டத்தில் எமது மக்களின் அரசியல் உரிமைகளுக்காகப் போராடி, விலை மதிக்க முடியாத பார்வையினை விலையாகக் கொடுத்து, நிர்க்கதியானவர்களை இலங்கையில் நிலவிய அச்சுறுத்தல் காரணமாக உள்ளூர் நிறுவனங்கள் பொறுப்பேற்க மறுத்து விட்டன. இதனால் அவர்களை பாதுகாக்கும், பராமரிக்கும் நோக்கோடு ஏனைய காரணிகளால் பார்வை இழந்தவர்களையும் இணைத்து, இச்சங்கமானது உருவாக்கப்பட்டது. வடக்கு, கிழக்கு மாகாணங்களை பணிப்பரப்பு எல்லையாகக் கொண்டு, இப்பொழுது 278 பயனாளிகள் அங்கம் வகிக்கின்றார்கள். இச்சங்கமானது யாப்பு விதிகளுக்கு அமைவாக நான்கு சபைகளால் நிர்வகிக்கப்படுகின்றது. தொண்டு அடிப்படையில் ஒன்பது பார்வையற்ற அங்கத்தவர்களைக் கொண்ட இயக்குநர் சபையினால் சங்கமானது நிர்வகிக்கப்படும். நிரந்தர வைப்புகள், நிதியங்கள், உறுப்பினர்களுக்கான ஒழுக்காற்று நடவடிக்கைகள் போன்றவற்றிற்கான தீர்மானங்களை காப்பாளர் சபை இணைந்தே தீர்மானம் நிறைவேற்றும். பயனாளிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகள், பாகுபாடுகள் போன்றவற்றை மூன்று மாதத்திற்கு ஒரு தடவை இடம்பெறும் முச்சபையின் கவனத்திற்கு கொண்டு வந்து நியாயத் தீர்வை பெற்றுக் கொடுப்பது மூவர் கொண்ட எதிர்ச் சபையின் கடமையாகும். ஆண்டுக்கு ஒரு முறை கூடி கணக்கு அறிக்கை மற்றும் முன்னேற்ற அறிக்கை என்பனவற்றை ஆய்விற்கு உட்படுத்தி  ஏற்பதும், சிக்கல்களுக்குத் தீர்வு காணுதல், இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை கூடி இயக்குநர் சபை உறுப்பினர்களைத் தெரிவு செய்வதும் பொதுச் சபையின் கடமையாகும். ஆரம்ப கால கட்டங்களில் நிவாரண, வாழ்வாதார உதவிகளை கொடையாளிகளின் உதவியுடன் முன்னெடுத்ததோடு, படிப்படியாக கண் சிகிச்சைகளுக்கான மருத்துவ உதவி, கண்ணாடி, துணைக் கருவிகள் வழங்கல், கிணறு, மலசலகூடம் போன்ற அடிப்படைத் தேவைகளுக்கான உதவிகள், போக்குவரத்திற்கான உதவிகள், பயிற்சி வகுப்புகளுக்கான உதவிகள் என முன்னேற்றமடைந்து முற்றாக பார்வையிழந்தவர்கள், பார்வை இழப்புடன் ஏனைய அவயங்களை இழந்தவர்களுக்கான மாதாந்த உதவிக் கொடுப்பனவுகள் வழங்கல் போன்ற திட்டங்களுடன் பார்வையற்ற குடும்பங்களில் கல்வி கற்கும் பிள்ளைகளுக்கான கல்வி அபிவிருத்தித் திட்டத்தினை முன்னெடுப்பதற்கான வளர்ச்சிப் படியில் கால் பதித்தது. அனர்த்தங்களின் பொழுதும், இயலுமான போதும் ஏனைய சாதாரண மக்களுக்கான உதவும் செயற்திட்டங்களையும் முன்னெடுத்தது. இருப்பினும் அனைத்துத் திட்டங்களுமே தற்காலிகமாகவே இடம்பெறுகின்றன. திட்டங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு அவ்வப்பொழுது கொடையாளிகளைக் கண்டறிய வேண்டியிருக்கின்றது. சிறப்புத் தேவை உள்ளவர்களை அங்கத்தவர்களாகக் கொண்டுள்ள உங்களது சங்கம், எதிர் நோக்குகின்ற சவால்கள் எவை? அதனை எப்படிக் கையாள்கின்றீர்கள்? முதலில் இயல்பான மனித செயற்றிறனில் இருந்து மாறுபட்ட சிறப்புத் திறனைக் கொண்டு விளங்கும் இவர்கள், கல்வி ரீதியாக எதிர் கொள்ளும் சவால்களைப் பொறுத்தமட்டில் பார்வை அற்றோருக்கான கற்றல் செயல் நூல்கள், கணினிசார் பயிற்சி, சிறப்புத் தேவையுள்ள ஆசிரியர்கள் போன்ற தேவைகள் கிடைப்பதில்லை. இவ்வாறே சிக்கல்களை எதிர்கொண்டு, கற்றுப் பட்டதாரியாகும் இவர்கள், வேலை வாய்ப்பு என்ற விடயத்தில்  வயது, மாற்றுத் திறன் போன்ற காரணிகளைக் காரணம் காட்டி புறக்கணிக்கப் படுகின்றார்கள். மருத்துவ சவால்களைப் பொறுத்த மட்டில் கண்மருத்துவ சிகிச்சை முறைகளுக்கான போதிய நிதி மற்றும் தொழில் நுட்ப வளமின்மை. வாழ்வாதார சவால்களைப் பொறுத்த மட்டில் முழுமையற்ற வாழ்வாதாரத் திட்டங்கள், குடும்ப உறுப்பினர்கள் ஒத்துழையாமை, இயலாமை, பொருத்தமற்ற வாழ்வாதார மூலம் சமூகச் சீர்கேடுகள் போன்ற காரணிகள் வாழ்வாதாரத் திட்டங்களில் பின்னடைவை ஏற்படுத்துகின்றன. திட்டங்களை நன்கு ஆராய்ந்து முன்னோக்கிச் செல்லும் வழிமுறைகளைக் கண்டறிந்து செயற்படுத்தி வருகின்றோம். அடிப்படைத் தேவைகளுக்கான சவால்களைப் பொறுத்த மட்டில் கிணறு, கழிப்பறை, வீட்டுத் திருத்தங்கள் போன்ற செயற்பாடுகளைப் போதுமான அளவு முன்னெடுக்க முடியாமல் உள்ளது. இத்திட்டங்களைப் பூர்த்தி செய்வதற்கான கொடையாளி அன்பர்களைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றோம். போக்குவரத்து சவால்களைப் பொறுத்த மட்டில்  பொதுப் போக்குவரத்து ஊர்திகளில் பயணிக்க முடியாமை, அனைத்து இடங்களுக்கும் செல்வதற்கான வசதிகள் இன்மை, தனித்து நடமாடுவதற்கான தொழில் நுட்பக் கருவிகள் இன்மை போன்ற சிக்கல்களை எதிர்நோக்கி வரும் நாம், இன்னொருவருடைய உதவியுடன் இச்சவால்களை சமாளித்து வருகின்றோம். தொடர்பாடல் சவால்களைப் பொறுத்த மட்டில் பார்வையற்றோர் பயன்படுத்தக் கூடிய திறன் கைபேசிகளை பெற்றுக் கொள்வதற்கான வளமின்மை போன்றன நாம் எதிர் நோக்கும் சவால்களாகும். எமது மக்களின் அரசியல் உரிமைகளுக்காகப் போராடி, அதன் நிமித்தம் இரண்டு கண்கள் உட்பட பார்வை இழந்த உங்களின் அங்கத்தவர்களின் வாழ்வியலை மேம்படுத்தும் பணியில் புலம்பெயர்ந்த எங்களது மக்களின் மனநிலையும் பங்கெடுப்பும் எவ்வாறு உள்ளது? பதில் – தாயக மக்களின் அபிவிருத்தியில் புலம்பெயர் உறவுகள் மிகவும் கரிசனை உள்ளவர்களாக இருக்கின்றார்கள். ஆனால் ஒருங்கிணைந்து செயற்படும் மனநிலை குறைந்து காணப்படுகின்றது. இதனால் அனேகமான செயற் திட்டங்கள்  தற்காலிக தீர்வையே தருகின்றன. வெளித் தோற்றங்களைப் பார்த்தும், ஏற்படுகின்ற அனுதாபத்தின் அடிப்படையிலுமே உதவுகின்ற மனநிலையினை  அனேகர் கொண்டுள்ளார்கள். சிந்தித்துத் திடமான அபிவிருத்தித் திட்டங்களுக்கு சிறு சிறு திட்டங்களையும் ஒருங்கிணைத்து செயற்படுத்தும் மனநிலையினை வளர்த்துக் கொள்ளுகின்ற பொழுது தாயகத்தில் கையேந்தும் நிலையைக் குறைக்க முடியும் கோவிட் 19 பெருந்தொற்று உலகையே புரட்டிப் போட்டு வரும் இன்றைய சூழலில் உங்களது அங்கத்தவர்கள் எதிர்கொள்கின்ற சிரமங்களும் தேவைகளும் எவை? பதில் – இன்று ஒரு கிலோ அரிசி- 130ரூபா, ஒரு கிலோ மீன்- 400 முதல் 1000 ரூபாய், கோழி இறைச்சி- 800 ரூபாய், வெங்காயம்-300 ரூபாய் என மரக்கறிகள் உள்ளடங்கலாக அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் விலை அதிகரித்துக் காணப்படுகின்றன. நாளாந்தம் நாட்கூலி செய்யும் ஒருவரின் உழைப்பு ஒருநாள் செலவிற்கே போதுமானது. இதிலும் பார்வையற்ற குடும்பங்கள் மிகவும் நலிவடைந்து, அடுத்தவர் தயவையே அதிகம் நம்பியிருப்பவர்கள். இந்த நிலையில் அடிக்கடி முடக்க நிலை ஏற்படுத்தப் படுகின்றது. தற்சமயம்கூட இருபது நாட்களாக போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப் பட்டுள்ளது. தனியார் போக்குவரத்துகள் யாவும் முடக்கப்பட்டுள்ளன. மருத்துவமனைக்குச் செல்ல முடியாது எமது பார்வையற்ற குடும்பங்கள் திண்டாடுகின்றார்கள். உணவு நெருக்கடியால் அவதிப்படுகின்றார்கள். இந்தச் சூழ்நிலையைச் சமாளிப்பதற்கு உலர் உணவுத் திட்டங்களையும், மருந்துப் பொருட்கள் வழங்கும் திட்டங்களையும், போக்குவரத்து உதவிகளையும் செய்ய வேண்டியுள்ளது     https://www.ilakku.org/?p=53103   என்னால் இயன்ற உதவியை செய்துவிட்டேன்🙏  
    • அந்தப் பதவிக்கு வேறு யாரையும் இருத்தலாமெண்டு யோசிக்கிறேன். யாரை என்று தெரியவில்லை 🤔 விடாமல் பண்ணினால் தானே பலருக்கு அரசியல் ஓடலாம். 
    • இந்த விடயத்தில் ஒரு பகுதி விட்டால் மறுபகுதி அதை அரசியலாக்க கூடும். ஆகவே இதை அரசியாலாக்குவதில்லை என இரு பகுதியும் முடிவுக்கு வந்துள்ளதாகவே படுகிறது. ஏன் இந்த திடீர்மனமாற்றம் என்பது புரியவில்லை.
    • இது இங்கே மெல்பேர்னில் நடந்த சம்பவம், இப்பொழுது இந்த கணவனும் மனைவியும் பிணையில் வெளியே வந்துள்ளார்கள் ஏனெனில், அவர்களுடைய 3 பிள்ளைகளும் உடல்உளரீதியாக பாதிக்கப்பட்ட பிள்ளைகள் என்பதுடன், அவர்களை பாராமரிப்பதற்கான ஏற்பாடுகளை செய்யாதபடியால் பிணையில் வெளியே வந்திருக்கிறார்கள்..  ஏற்கனவே பாதிக்கப்பட்ட குழந்தைகள், அப்படியிருந்து கொண்டு எப்படி இந்தமாதிரி இவர்களால் நடக்கமுடிந்தது?    Melbourne couple found guilty of keeping Tamil woman as a slave for eight years   Posted  FriFriday 23 AprApril 2021 at 5:51am, updated FriFriday 23 AprApril2021 at 10:09am Kumuthini Kannan sent an abusive email to the victim's family when they asked she be returned to India, the court heard.(AAP: Mal Fairclough) A couple convicted of keeping a woman as a slave for eight years has been accused of putting a gun to Victoria's Supreme Court to get bail.  Key points: The victim, a Tamil woman now in her 60s, told police she was physically abused with boiling water and food Prosecutors said the couple paid the woman what amounted to $3.36 a day over the eight years Both the husband and wife were found guilty of intentionally possessing a slave and exercising ownership over a person for use as a slave The husband and wife, who can now be identified as Kandasamy and Kumuthini Kannan, held the Tamil woman in their Mount Waverley home between 2007 and 2015. They were each convicted by a Supreme Court jury on Friday of two charges of keeping and using the woman as a slave, forcing her to cook, clean and look after their children. The maximum penalty is 25 years' prison. But they have been released on bail ahead of a pre-sentence hearing after neither they nor their lawyers made arrangements for the care of their three vulnerable children. Justice John Champion said the Kannans had created an impossible situation that meant he had to release them on bail for the welfare of the children. Two of the children have high-functioning autism while the third was described as severely psychologically disabled. Justice Champion said it was reprehensible that they had not thought of the needs of their children and that there had been a denial of reality that this day might come. "It does Mr and Mrs Kannan no credit whatsoever that we've reached this point and they have effectively placed a gun at the court's head," Justice Champion said. "They are to be condemned for that." He added it was incredible neither the couple nor long-time psychologist Jeffrey Cummins had notified authorities about the prospect of the children being left alone. The Kannans will face a pre-sentence hearing on June 29 in relation to their treatment of the victim, who is now in her 60s. Slave was hit about the head with frozen food, court heard She came to Melbourne twice to work for the family before returning in 2007 for what was meant to be a one-month trip. But she was kept by the couple, working up to 23 hours a day for eight years, until she collapsed in July 2015. She was taken to hospital in a serious condition, weighing 40kg and suffering sepsis. Kandasamy Kannan and his wife will face a pre-sentence hearing in late June.(ABC News) In recorded evidence, she said she had been forced to cook, clean and care for the Kannans' children and had been subjected to abuse by Kumuthini Kannan. "She will take a chicken, frozen chicken, and hit (it) on my head," she said through a Tamil interpreter. The victim said the wife also threw food and boiling water over her head and leg. "She'll be drinking and then she will throw it on my face. When it's bubbling she will put it on my leg," she said. Prosecutor Richard Maidment QC said the couple paid the woman what amounted to $3.36 per day over the eight years. "She was known to be a person who worked hard and would tolerate being at their beck and call 24/7 during the period she was with them," he said. "It doesn't take much to compare that with what one might expect … to have to pay for a live-in housekeeper and childminder." The jury heard the woman's son-in-law in Tamil Nadu, in southern India, had written to the Kannans asking for the woman to be sent home. But in an email chain found on the couple's computer the wife had replied “xxxxxxxxxxx”. https://www.google.com.au/amp/s/amp.abc.net.au/article/100091328
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.