Jump to content

"அப்பாவுக்கு.... தலைமயிர் வெட்ட, ஆருக்கு விருப்பம்?

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Nathamuni said:

கந்தர்மடம் சந்தில, நல்லூரில இருந்து அரசடி வீதியால் வரேக்க, பலாலி ரோட்டில ஏறும் போது, இடது மூலையில் ஒரு சலூன்....

அங்க தலையை கொடுத்து, அவர் கேக்கிற வீட்டு விடுப்புகளை டிப்ஸ் ஆக சொல்லி, வெட்டினாப்பிறகு, பலாலி ரோடினை கடந்து முன்னால இருக்கிற சேட்டு போடாம, மடிச்சு கட்டின நாலுமுளத்தோட, யாவாரம் செய்யுற சின்னாம்பி கடையில பித்தளை மூக்குப் பேணில பிளைன் டீயும் வடையும் வாங்கி அடிச்சுப்போட்டு, அப்படியே, வேலு அண்ணர் கச்சான் கடையில ஒரு கச்சான் பாக்கெட் சோளம் போடாம வாங்கி.... 

வாடகை கார்காரர் சீராளன் அண்ணைக்கும், 'எப்படி அண்ணை, இருக்கிறியள்' என்று ஒரு சொல்லி வைத்து... அப்படி கச்சானை கொறித்துக் கொண்டே வீட்டுக்கு போன சிறியருக்கு....

ஜெர்மனி போய்... பிள்ளையள், தலைமயிர் வெட்டி.... யாழில் பதிவு போடுவன் எண்டு நினைத்திருப்பாரோ? 😜

நாதமுனி.....  அந்த சலூனில் தான், நாங்கள் தலைமயிர் வெட்டுவோம்.
சிறு பிள்ளைகளாக இருக்கும் போது.... வீட்டிற்கு வந்து வெட்டி  விடுவார்கள்.

தகப்பனும், மகனும் நல்ல குணமுடையவர்கள். அவரின் மகனின் பெயர் குமார்.  
சென்றமுறை இலங்கைக்கு போனபோது... குமாரிடம் தலைமயிர் வெட்டி விட்டு, 
500 ரூபாய் கொடுத்த போது, மிகவும் சந்தோசப் பட்டார்.

சின்னாம்பி கடையில... உளுந்து வடை,கடலை வடை, சூசியம், 
பால் தேனீர்... எல்லாம் நல்ல சுவையாக இருக்கும். 
40 வருசத்துக்கு முதல்... அங்கு,  அக்கவுண்டுக்கு  சாப்பிட்ட 
எனது கணக்கு 350 ரூபாய்க்கு   கிட்ட கொடுக்க வேணும்.
சென்ற முறைமுறை போய் தேடிப் பார்த்த போது... அவர்களை காணவில்லை.
இப்ப அதை வட்டியுடன் கொடுக்க வேணும் என்றாலும்..  லட்சத்தை  தாண்டும் போல் இருக்கிறது.

சின்னாம்பி கடையில்... தகப்பனும், மூத்த சகோதரரும் வேலை செய்வார்கள்.
சின்னாம்பிக்கு தகப்பனை கண்டால்.... பயங்கர பயம்.
தகப்பன்... கடைக்கு முன்... ஒரு கிடாரத்தில், பக்கத்தில் உள்ள கிணறில் தண்ணீர் எடுத்து வந்து, 
அந்த வழியால்... போகும் பாடசாலை மாணவர்கள் அருந்த நிரப்பி வைப்பார்.
அத்துடன் கடை வாசலை... தண்ணீர் தெளித்து எப்பவும், ஈரலிப்பாக வைத்திருப்பார்.

சின்னாம்பி ஒரு நாளும் சேட்  போடுவதில்லை. அவருக்கு சினிமா பார்க்க நல்ல விருப்பம். 
தகப்பன் இல்லாத நேரம், இரவு  படக் காட்சிக்குத்தான் போவார். 
அந்த நேரம் சேட்டை   தோழில் போட்டுக் கொண்டு நடந்து போய்...
ரிக்கற் கவுண்டருக்கு முன் சேட்டை போட்டுக் கொண்டு ரிக்கற் எடுத்து, படம் பார்த்து விட்டு,
திரும்பி வரும் போது.... சேட்டை  திரும்பவும் தோழில் போட்டுக் கொண்டு வந்து விடுவார்.

வாடகைக் கார்க்காரர் சீராளன் சைக்கிள்களும் வாடகைக்கு விடுகிறவர்.
அவரிடம் நிறைய சிறியவர்களுக்கான சைக்கிள்கள் இருந்தன.
அங்கு தான்... நான், தம்பி, தங்கச்சி எல்லோரும் வாடகைக்கு சைக்கிள் எடுத்து...
பின் வளவுக்குள் ஓடப் பழகினோம். பின் நன்றாக ஓடப் பழகிய பின்... 
றோட்டில் தனியே  ஓடி.. பக்கத்தில் உள்ள மாமா, சித்தப்பா வீட்டிற்கு போகும் போது,
இருந்த சந்தோஷத்துக்கும், பெருமைக்கும்... அளவே இல்லாமல் இருக்கும்.

சீராளன் கடைக்குப் பக்கத்தில்... கிளி என்று ஒருவரும், 
வாடகைக்கு ஓட...  ஐந்து கார்  வைத்திருந்தவர்.
ஆரம்பத்தில் யாழ்.மத்திய கல்லூரியில் படிக்கும் போது....  
அவரின் காரில் தான்... பள்ளிக் கூடம் போனேன். 

நாதமுனிக்கு... எல்லாம் வடிவாக தெரிகிற படியால்... 
கந்தர்மட சந்திக்கு கிட்டத்தான் இருக்கிறார் போலுள்ளது.
உங்களை கண்டு பிடிக்க.. புலனாய்வு  செய்து கொண்டு இருக்கிறம் விரைவில்.. பிடி படுவீர்கள்.  :grin:

Edited by தமிழ் சிறி
Link to post
Share on other sites
 • Replies 74
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

(ஜேர்மன் நிதியமைச்சர்) என்னுடைய... தலை மயிரும், கனக்க வளர்ந்து...  காதை  மூடும் போல இருப்பதை பார்க்க,அரியண்டமாக இருந்தது. வழக்கமாக போகும்...  "மசூதி சலூனுக்கும்" போக பயமாக இருந்த படியால்... ச

கொழும்பில்.... "ட்ராம்"  தண்டவாளங்களை, நானும் பார்த்திருக்கின்றேன்.  ஏறியது இல்லை. இது, அதுவாக இருக்கலாம்... என நினைக்கின்றேன்.

 • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, nedukkalapoovan said:

  கதை என்னவோ சிரிப்பா இருக்கு... ஆனால் கணக்குத் தான் இடிக்குதே.. 70+40 = 110%

நெடுக்ஸ்....  நீங்கள் அடியில் எழுதியதை.. நன்றாக அவதானித்தமைக்கு நன்றி.
முதலில் 70 + 30 என்று தான்.... எழுதினேன்.
பிறகு குசும்புக்காக... இதை யாரும் அவதானிக்கிறார்களா.. என்பதற்காக,
70 + 40  என்று மாற்றி எழுதினேன். சத்தியமாக அதுதான் உண்மை. நம்புங்கள். :)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, suvy said:

உங்களுக்கு சீராளனை நன்றாகத் தெரிந்திருக்குது போல..... அப்ப, பக்கத்தில் துரைசிங்கத்தின் கார் கராஜ் மற்றும் அருகில் ஒரு இரும்பு வேலை லொறி செசி வேலை செய்யும்  பட்டறையும் தெரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன்.அவர் எனது ஒரு முறையில் அண்ணர். அதுதான் கஞ்சா விற்கும் காஞ்சனா கதையில் அந்த இடத்தை மையப்படுத்தி எழுதி இருக்கின்றேன்......!  😇

19 hours ago, suvy said:

பழனியும் எனது உறவினர்.....துரையண்ணர் நண்பர்......பட்டறை  வைத்திருந்தவர் அண்ணர் .....!

சுவியர்... அந்தப் பட்டறையில், எனது சித்தப்பா பழைய கார்களின் வில்லுத் தகடுகளை கொடுத்து..
மரக்கறி வெட்டுகிற கத்தி, மீன், இறைச்சி  வெட்டுகிற கத்தி என்று அடிக்கடி செய்து கொண்டு வந்து,
சொந்தக் காரர்களுக்கு கொடுப்பார். கத்திகள் நல்ல கூர்மையாகவும், வித்தியாசமான முறையில்...
வடிவமைக்கப் பட்டு, அழகான மரப்  பிடியுடன் இருக்கும்.

நாங்கள் பள்ளிக்கூடம் போகின்ற காலங்களில், அப்பாவும் வேலைக்குப் போயிருக்கும் வேளையில்...
காலை பத்து மணியளவில்...   சைக்கிளில்..   பின் பக்கம் பெட்டியில்  வைத்து மீன் வியாபாரிகள்,
வீடுகளுக்கு,  கொண்டு வந்து வியாபாரம் செய்வார்கள்.

எங்களுக்கு.... வாடிக்கையாக ஒருவர் கொண்டு வந்து தருவார்.
மிகப் பெரிய மீன் என்றால், துண்டுகளாக வெட்டித் தரும் படி...
அம்மா.. அவருக்கு.. அப்படி பட்டறையில் செய்த அந்த அழகிய  கத்தியை கொடுப்பார்.
அவரும்  வெட்டிக் கொடுத்து விட்டு, போய்  விடுவார்.

ஒரு நாள்....  அவர்,  அம்மா என்னிடம் இன்று, எல்லாம்.. பெரிய மீனாக உள்ளது,
இந்தக் கத்தியை தாங்கோ... நான் இவற்றை, வெட்டி வியாபாரம் செய்து விட்டு,
நாளைக்கு திருப்பிக் கொண்டு வந்து தருகிறேன் என்று சொல்லிய போது...
அம்மாவும் அந்தக் கத்தியை கொடுத்து விட்டார்.
அதோடை போன மீன்காரன், திருப்பி அந்தப் பக்கமே வரவில்லை.

பண்ணையில் மீன் வாங்கி... பலாலி வீதியால் வந்து தான்,
அந்த இடங்களில் வியாபாரம் செய்பவர் என்பதால்,
கந்தர்மட சந்தியில் வைத்து... ஆளை அமத்தலாம் என்று....
மாசக் கணக்காக கந்தர்மட சந்தியில்... காவல் நின்ற போதும்,
ஆளை.....  கண்டு பிடிக்க முடியவில்லை.

இப்பவும்.. அந்தக்  கத்தியை நினைத்தால்... கவலையாக இருக்கும்.

Edited by தமிழ் சிறி
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Nathamuni said:

சிறியர்,

தெய்வீக திருக்குறள் மன்ற ரோடினுள், பொக்சர் வீட்டுக்கு பக்கத்தில், முருகவேள் என்று ஒருவர் இருந்தார்.... ஜெர்மனி போனார்.... உங்களுக்கு அவரை தெரியுமா?

ஓம்... நாதமுனி, முருகவேளை எனக்கு நன்கு தெரியும். நல்ல பெடியன்.
என்னை விட 6,7 வயது இளமையானவர்.  
1979, 1980 களில்... ஒரு விபத்தில் கால் முறிந்து... காலுக்கு, மாவு கட்டு போட்டிருந்தவர்.

உங்களுக்கு... முருகவேளை  எப்படி தெரியும்?
அவர் ஜேர்மனிக்கு வந்தது எனக்குத் தெரியாது.
இங்கு...  எங்கு, இருக்கின்றார் என்றும் தெரியவில்லை.  
நீங்கள் முருகவேளுடன் தொடர்பிலிருந்தால்... விசாரித்ததாக சொல்லவும். :)

உங்களுக்கு... செல்லத்துரை மாஸ்டர்  வீட்டிற்கு முன் உள்ள... கண்மணி அம்மாள் ஒழுங்கைக்கு..
அடுத்த ஒழுங்கையில்... வசித்த சுரேந்திரனை தெரியுமா? யாழ் இந்துவில் படித்தவர்.

ஐங்கர நேசன், ரியூசன் சென்ரர்   நடத்திய..  
வீட்டில் வசித்த... ரவிராஜ், மோகன் ராஜ் ஆகியோரையும் அறிந்து இருப்பீர்கள் என நினைக்கின்றேன்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

சொன்னமாதிரியே.... கண்டு...பிடிக்கிற, துப்பறியும் வேலையில இறங்கி விட்டீர்கள் போல இருக்குது... 

சுரேந்திரன்.... அண்ணன் நரேந்திரன்?

ரவிராஜ் இறந்து விட்டார்.... மோகன்ராஜ் சென்னையில.. ஜெயராஜ், அவரது தம்பி சத்யராஜ் கனடாவில்...

முருகவேள் ஜெர்மன் போனவர். அவரது அக்கா கணவர் ஒரு கிறுக்கர்.... ஒரு விவாதத்தின் போது....அத்தானால்  கத்தியால் குத்தப்பட்டு இறந்ததாக அண்மையில் கேள்விப்பட்டேன். அத்தான்... மனநல மருத்துவமனையில் என்று கேள்வி..

ஜெர்மனியில் நியூஸில் வந்திருக்குமே... 

Edited by Nathamuni
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

சுரேந்திரனின்... தம்பிதான் நரேந்திரன். ஒரு வகையில்... அவர்கள் எங்களுக்கு உறவினர்.
போரின் போது.... அவர்கள் இருந்த வீட்டையும்  காணியையும், 
50´000 ரூபாய்க்கு  விற்று விட்டு கொழும்புக்கு  போய் விட்டார்கள். 
சுரேந்திரன்... வடக்கு  ஜேர்மனியில் வசிக்கின்றார்.
பல வருடங்களுக்கு முன்பு, அவருடன்... தொலை பேசியில் உரையாடினேன். 

ரவிராஜ் இறந்தது தெரியாது... 
பெரதெனியாவில் மருத்துவ பீடம் கிடைத்து படித்துக் கொண்டிருந்தவர்,
இடையில் அதனை முடிக்காமல்... வந்து விட்டதாக  அறிந்தேன்.
மோகன்ராஜ் 1981 களில் ஜேர்மனியில் இருந்த போது....நேரில் சந்தித்தோம். 
பின் சென்னைக்கு போய் விட்டார். 
மோகன்ராஜ்...   ஊரில், எனது நெருங்கிய நண்பர்களில் ஒருவர். :)

முருகவேளின்... அக்கா இறந்த செய்தியை, இப்போதான் கேள்விப் படுகின்றேன். 
நாதமுனி... நீங்கள்,  தெய்வீக திருக்குறள் மன்ற ரோட்டில் தான் வசிக்கின்றீர்கள்  என்று ஒரு சந்தேகம். :grin:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, தமிழ் சிறி said:

தெய்வீக திருக்குறள் மன்ற ரோட்டில்.... இல்லை.... 😄

இறந்தது முருகவேளின் அக்கா இல்லை . முருகவேள் தான்.... அத்தான் காரர் அங்கயே ஒரு கிறுக்கு பார்ட்டி...

முருகவேள் இரண்டொரு வயது சீனியர்...

அப்ப உங்களுக்கு ஆனந்தியை தெரியவேணுமே... மோகன்ராஜின் நண்பர்...

இப்ப பாருங்கோ சுவியர் நெருங்கி வந்துட்டார்... 

நில்மினி வருவா.... அட... நீங்கள் அந்த ரோட்டொ எண்டு சொல்லிக்கொண்டு...

முருகவேள்...  இறந்த செய்தியை கேட்க, சோகமாக உள்ளது.

ஆனந்தி என்று நீங்கள் சொல்வது.... குமாரசாமி றோட்டில் வசித்த நொத்தாரிசின் மகனா?

நாதமுனி... நீங்கள்தான், தைரியமான ஆளாச்சே....   
அப்படி என்றால், நீங்கள் வசிக்கும் வீதியின்... முதல் எழுத்தை, கூறுங்கள் பார்ப்போம். :grin:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சாமிகளே,

PMல பேசவேண்டியதை இப்படி இழுத்தடிக்கிறீங்களே..? 🤣

முடி வெட்டுற கதையை சீக்கிரம் தொடருங்கோ சாமி..! :)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

என்ன ஒற்றுமை ஈஸ்டர் ஞாயிறு அன்று எனக்கும் மனைவிதான் வெட்டி விட்டார். பிள்ளைகள் வீடியோ பிடித்தார்கள்.மந்தி ஒருதடவை வெட்டி அலங்கோலப்பட்டபடியால் ஒரு அளவோடு நிறுத்தி விட்டேன். திங்கள் வேலைக்கு போன பொழுது நல்லா இருக்கு எங்கே வெட்டினீர்கள் என்று கேட்டேன். தயங்காமல் மனைவி என்று கூறிவிட்டேன்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இப்படி தான் சிறியருக்கு நடந்திருக்குமோ? 😂

விஜயகாந்த்

டையிங்

சிரிப்பு

குழந்தை சிரிப்பு

 புலவர் மந்தி யை முந்தி ஆக்கி விடுங்கள் . கருத்து மா றுபடப்போகுது 😀 தங்கள் மனைவிக்கு பாராட்டுக்கள்

 • Haha 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, நிலாமதி said:

புலவர் மந்தி யை முந்தி ஆக்கி விடுங்கள் . கருத்து மா றுபடப்போகுது 😀 தங்கள் மனைவிக்கு பாராட்டுக்கள்

முந்தியை விட மந்தி நல்லாயிருக்கு.

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

இப்படி தான் சிறியருக்கு நடந்திருக்குமோ? 😂

விஜயகாந்த்

93493820_863053277545824_66496796800581632_n.jpg?_nc_cat=109&_nc_sid=8bfeb9&_nc_ohc=XfmAuyZpCNUAX-qEz4K&_nc_ht=scontent-frt3-1.xx&oh=c8e67f54b0281a80325a9f9a5b76be79&oe=5EC35999

மனிசியிடம் மட்டும்... மயிர் வெட்ட தலையை கொடுக்க மாட்டேன்.  நாதமுனி.
காதோடை... சேர்த்து, வெட்டி விடுவார் என்ற பயம், எனக்கு எப்பவும் இருக்கு.  :grin:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

முன்பு ஒருநாள் உங்களுக்கு ஞாபகம் இருக்கா....... சீராளன் கடைக்கு முன்னால் கோண்டாவில் டிப்போவில் இருந்து வந்த டபுள்டெக்கர் பஸ் ஒன்று அப்படியே மல்லாக்க நடு றோட்டில் பிரண்டுபோய் கிடந்தது......அந்த விபத்தில் இருபக்கத்து வேலிகளிலோ சீராளனின் கடைக்கோ சேதமில்லை.அவ்வளவு பெரிய பஸ் ரோட்டுக்கு குறுக்க வீதியை அடைத்துக் கொண்டு கிடந்தது.......!   😇

4 hours ago, தமிழ் சிறி said:

மனிசியிடம் மட்டும்... மயிர் வெட்ட தலையை கொடுக்க மாட்டேன்.  நாதமுனி.
காதோடை... சேர்த்து, வெட்டி விடுவார் என்ற பயம், எனக்கு எப்பவும் இருக்கு.  :grin:

உங்கள் வீட்டில் நாய் இல்லையா இருந்தால் காது அறுந்து விழுவது பற்றி கவலைப்படத் தேவையில்லையே.....!  😁

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, suvy said:

முன்பு ஒருநாள் உங்களுக்கு ஞாபகம் இருக்கா....... சீராளன் கடைக்கு முன்னால் கோண்டாவில் டிப்போவில் இருந்து வந்த டபுள்டெக்கர் பஸ் ஒன்று அப்படியே மல்லாக்க நடு றோட்டில் பிரண்டுபோய் கிடந்தது......அந்த விபத்தில் இருபக்கத்து வேலிகளிலோ சீராளனின் கடைக்கோ சேதமில்லை.அவ்வளவு பெரிய பஸ் ரோட்டுக்கு குறுக்க வீதியை அடைத்துக் கொண்டு கிடந்தது.......!   😇

நம்ம காலத்தில டபுள் டெக்கர் இல்லாமல் போட்டுது....

நான் நினைக்கிறேன்.... லண்டனுக்கு வெளியில டபுள் டெக்கர் ஓடின 3 இடங்கள்: பம்பாய், இலங்கை தீவு, ஹாங்காங்.... முதல் இரண்டும் சுதந்திரத்திரத்துக்கு பிறகு, கடைசி காலனியாக இருக்கும் போதே..

Edited by Nathamuni
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Nathamuni said:

நம்ம காலத்தில டபுள் டெக்கர் இல்லாமல் போட்டுது....

நான் நினைக்கிறேன்.... லண்டனுக்கு வெளியில டபுள் டெக்கர் ஓடின 3 இடங்கள்: பம்பாய், இலங்கை தீவு, ஹாங்காங்.... முதல் இரண்டும் சுதந்திரத்திரத்துக்கு பிறகு, கடைசி காலனியாக இருக்கும் போதே..

அடப்பாவமே! 🤣
நான் முதன் முதல் நல்லூர்க் கந்தனிட்டை போனது டபுள் டெக்கர் பஸ்லைதான். அதெல்லாம் ஒரு காலம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, suvy said:

முன்பு ஒருநாள் உங்களுக்கு ஞாபகம் இருக்கா....... சீராளன் கடைக்கு முன்னால் கோண்டாவில் டிப்போவில் இருந்து வந்த டபுள்டெக்கர் பஸ் ஒன்று அப்படியே மல்லாக்க நடு றோட்டில் பிரண்டுபோய் கிடந்தது......அந்த விபத்தில் இருபக்கத்து வேலிகளிலோ சீராளனின் கடைக்கோ சேதமில்லை.அவ்வளவு பெரிய பஸ் ரோட்டுக்கு குறுக்க வீதியை அடைத்துக் கொண்டு கிடந்தது.......!   😇

உங்கள் வீட்டில் நாய் இல்லையா இருந்தால் காது அறுந்து விழுவது பற்றி கவலைப்படத் தேவையில்லையே.....!  😁

ஆம் சுவி.... அந்த  விபத்தை, நேரில் போய் பார்த்தேன்.
சீராளன் கடைக்கு முன்னால் உள்ள... அந்த  மொத்த பூவரசம் மரம் இல்லாட்டி, 
கடைக்குள் பஸ் புகுந்து... உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும்.

சுவி... உலகத்தை பார்த்தீர்களா,   கிட்டத் தட்ட 45 வருடங்களுக்கு முன்பு...
நாம் இருவரும், ஒரே இடத்தில் நின்றிருக்கின்றோம். :)

Link to post
Share on other sites
On 18/4/2020 at 00:46, தமிழ் சிறி said:

இந்த... இடைவெளியில்,  மிச்ச மயிரையும்...  
முழு மொட்டை  அடித்து விட்டு, கண்ணாடியில் பார்த்து ரசிப்பதும்... ஒரு அழகு தான்.

882-F5182-0-AC6-466-E-94-F6-1-FAF77-DCA7

 • Haha 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
மொட்டை போட்ட சிறியரின் பதிவு.... கந்தர்மடத்துச் சொந்தங்களைத் தேடுமளவிற்கு வளர்ந்துவிட்டது. சொந்தங்களை மீண்டும் கண்டு பந்தங்கள் வளர்ந்தாலும் இனிவளராது சிறியரின் மொட்டையில் மயிர்.
 
நாங்கள் செக்கண்ட்சோ படம்பார்க்கச் செல்லும்போதெல்லாம், கந்தர்மடச் சந்தியிலிருந்து சிலவீடுகள் தள்ளி ஒரு வீட்டில் இறால் பொரியல் மணம், ஆகா.... நின்று மூச்சுமுட்ட இழுத்துவிட்டுச் செல்வோம். 
 
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:
நாங்கள் செக்கண்ட்சோ படம்பார்க்கச் செல்லும்போதெல்லாம், கந்தர்மடச் சந்தியிலிருந்து சிலவீடுகள் தள்ளி ஒரு வீட்டில் இறால் பொரியல் மணம், ஆகா.... நின்று மூச்சுமுட்ட இழுத்துவிட்டுச் செல்வோம். 
 
அது நம்ம சிறியர் வீட்ட இருந்து வந்த மணம் தான்.

தாயாரின் கைப்பக்குவம் எண்டு விளப்பம் இல்லாமல், கத்தியில தான் ஏதோ இருக்குது எண்டு ஆட்டையைப் போட்ட மீன்காரர், அதை வித்த காசுக்கு சவூதிக்கு ஏறிட்டார்...

இவர் ஒரு மாசமா கந்தர்மடம் சந்தில நிண்டு ஆளைத்தேடி இருக்கிறார்.

இப்படிதான், இந்து, சென்றல் கிரிக்கெட் நடக்கேக்க, ஜஸ்பழம் ஆசைப்பட்டு, சில்லறை இல்லாமல், ஜயாத்துறை கடையிலும் இல்லை எண்ட, சைக்கிள்ள வித்துக் கொண்டிருந்த ஆளிடம், ரியூசனுக்கு கொடுக்க வைத்திருந்த அம்பது ரூபா மிச்சகாசு தர ஏலுமோ எண்ட, அந்தாளும் ஓ... எண்டு... சொக்ஸ் ஜசை தந்து போட்டு... குடி தம்பி... தாறன்... எண்டு..... நான் மச் பிலாதில நிண்டு போட்டு திரும்பி பார்த்தால் ஆள் எஸ்கேப்...

ரியூசன் காசை குடுத்தன், ஆனா வாத்தியார் சர்யில்ல, வேற ரியூசன் போறன் எண்டு வீட்டில் பொய் சொல்லி..... ஜஸ்கிறீம் காரரை தேடிக் கண்டு பிடிக்க... அவரும் தான்  அங்கால போட்டு, திரும்பி வந்து பார்த்தால் என்னைக் காணவில்லை.... ஆனாலும் இப்ப காசு இல்லை...

அன்று முதல் ஏண்டா இவனோட சகவாசம் வைத்தேன் எண்டு நிணைக்கிற அளவுக்கு நண்பர்களுக்கும் ஜஸ்பழம்  கணக்கில போடண்ண எண்டு வாங்கி, வாங்கி, தம்பி... நூறு ருபாவுக்கு மேல வாங்கி போட்டியள்....கணக்கு சரி... எண்ட

ஆ....நல்ல கத.... கணக்கு பிழை... இப்பதான், இருபது தாண்டி இருக்குது...எண்டு....மூடியை திறந்து எடுத்து அடித்து..... பிறகு.... தூரத்தில் என்னையும் நண்பர்களையும் பார்த்தாலே.... துளைஞ்சுது இண்டைக்கு யாவாரம் எண்டு தலை தெறிக்க சைக்கிள திருப்பிக் கொண்டோடுறதும், திரத்திப்பிடித்து ஜஸ்பழம் சாப்பிட்டதும் ஒரு காலம்.

அவற்ற பிழை.... ஆட்டையைப் போட்டது....

Edited by Nathamuni
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Paanch said:
மொட்டை போட்ட சிறியரின் பதிவு.... கந்தர்மடத்துச் சொந்தங்களைத் தேடுமளவிற்கு வளர்ந்துவிட்டது. சொந்தங்களை மீண்டும் கண்டு பந்தங்கள் வளர்ந்தாலும் இனிவளராது சிறியரின் மொட்டையில் மயிர்.
 
நாங்கள் செக்கண்ட்சோ படம்பார்க்கச் செல்லும்போதெல்லாம், கந்தர்மடச் சந்தியிலிருந்து சிலவீடுகள் தள்ளி ஒரு வீட்டில் இறால் பொரியல் மணம், ஆகா.... நின்று மூச்சுமுட்ட இழுத்துவிட்டுச் செல்வோம். 
 
நடுவிலே  பெரிய இடைவெளி/வெட்டவெளி விட்டுள்ளீர்கள். ஏனென்று நாங்களும் தெரிந்து கொள்ளலாமா?Tatsch

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

நடுவிலே  பெரிய இடைவெளி/வெட்டவெளி விட்டுள்ளீர்கள். ஏனென்று நாங்களும் தெரிந்து கொள்ளலாமா?Tatsch

கண்னை மூடி, அந்த றால் மணத்தினை அனுபவித்தில் இடைவெளி விழுந்து விட்டது....

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

கண்னை மூடி, அந்த றால் மணத்தினை அனுபவித்தில் இடைவெளி விழுந்து விட்டது....

என்னாமா கண்டுபிடிக்கிறாங்கப்பா தமிழன்டா. Bildergebnis für %e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be

Link to post
Share on other sites

உண்மையாகவே அந்த காலத்தில இலங்கையில் டபுள் டெக்கர் பஸ் இருந்ததா 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.