Jump to content

எங்க அம்மா சமைச்சு போட்டா-பா.உதயன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

என் அம்மா சமைச்சு போட்டா 
எங்க ஊர் முழுக்க வாசம் வரும் 
கருவாட்டு குழம்புக்கு 
கத்தரிக்காய் போட்டு வைப்பாள் 
எட்டு திக்கும் ஓடி வந்து 
எனக்கு ஒரு கை தா என்பர்.

காலையிலே தோசை சுட்டால் 
காக்கைக்கும் மணம் தெரியும் 
முருங்கை இலை முசுட்டை இலை 
அகத்தி இலை சுண்டி வைப்பாள் 
அடுத்த வீட்டு ஆன்டி வந்து 
அகத்தி இலை சுண்டல் கேப்பாள்.

ஐயோ இவள் அரைச்சு வைச்ச 
குழம்பு தின்ன அருகில் பூனை போல 
அடுப்படியில் பார்த்திருபோம் 
அப்பா கூட மூச்சு காட்டார் 
அம்மாவோட சமையலோட 

அருகில் ஒரு திண்ணயில 
அப்புவும் ஆச்சியும் குடிருப்பு 
ஆளுக்கு ஒரு கிண்ணத்தில 
அம்மா போட்டு குடுத்திடுவா 

பொக்கு வாயும் சிரித்து கேக்கும் 
அப்பு போடும் சத்தத்தில 
அம்மா அரைச்சு வைச்ச 
குழம்பு ருசியில்.

உப்பு புளி குறைவு என்று 
ஒருக்காலும் கண்டதில்லை 
சும்மா பச்சடியும் சோறும் காணும் 
பசி முழுக்க பறந்து போகும் 
என் அம்மா சமைச்சு போட்டா 
எங்க ஊர் முழுக்க வாசம் வரும்.

பா.உதயன்/Oslo/17-02-2020
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாசமுடன் அக்கறயுடன் அன்புகலந்து அம்மா சமைப்பதால் சுவை அதிகம், நல்ல கவிதை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாவின் சமையல் ஒரு ருசி என்றால் அம்மம்மாவின் சமையல் ஒரே ருசிதான். நான் அம்மம்மாவின்  சமையல் சாப்பிட்டு வளர்ந்தவன்.....!  நல்ல கவிதை உதயன்.....!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, உடையார் said:

பாசமுடன் அக்கறயுடன் அன்புகலந்து அம்மா சமைப்பதால் சுவை அதிகம், நல்ல கவிதை 

அம்மா அம்மம்மாவின் அன்பு கலந்த சமையல் யாருக்கு தான் சுவை இல்லை.அழகிய உங்கள் கருத்துக்கு நன்றிகள் சுவிகும் உடையாருக்கும் .

10 hours ago, suvy said:

அம்மாவின் சமையல் ஒரு ருசி என்றால் அம்மம்மாவின் சமையல் ஒரே ருசிதான். நான் அம்மம்மாவின்  சமையல் சாப்பிட்டு வளர்ந்தவன்.....!  நல்ல கவிதை உதயன்.....!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாவின் கைப்பக்குவம் அருமையோ அருமை . அது  அன்போடு பாசத்தோடு கலந்த உணவு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நிலாமதி said:

அம்மாவின் கைப்பக்குவம் அருமையோ அருமை . அது  அன்போடு பாசத்தோடு கலந்த உணவு

நன்றி நிலாமதி அக்கா அத்தோடு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் 💐

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.