Jump to content

உலகெங்கும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் தண்ணீர்: எச்சரிக்கிறார் சுவீடன் பேராசிரியர்


Recommended Posts

இரத்த மாற்று மூஉலகெங்கும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் த

ண்ணீர்: எச்சரிக்கிறார் சுவீடன் பேராசிரியர்லம்உலகெங்கும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் தண்ணீர்: எச்சரிக்கிறார் சுவீடன் பேராசிரிட்-19 நோய்க்குச் சிகிச்சை?
நமது உடல் - அத்தியாயம் 2 - பாகம் 1

 

 

அவர் முக்கியமாக தெரிவித்த விடயங்கள் வருமாறு,   நீரை பொறுத்தவரை நான் 12 ஆண்டுகளாக நீர் தொடர்பான சிந்தனைகளை நீரை ஒருங்கிணைந்த வகையில் மேலாண்மை செய்வதற்கான அணுகுமுறைகளை கற்றுக் கொண்டுள்ளேன்.   அவற்றை பல்கலைக்கழக மட்டத்தில் ஒரு கற்றல் துறையாக  MSC Level பட்டப்படிப்பொன்றை  சுவீடன் விவசாயப் பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்து பெற்ற அனுபவங்களோடு இன்றைக்கு  இயற்கையின் முக்கியமான கூறுகளில் ஒன்றான நீரைப்பற்றிய ஒரு சிந்தனையை எமக்கும் எம்முடைய மக்கள் தொகுதிக்கும் உகந்த வகையில் நல்ல சிந்தனைகளை தேடி இங்கே கொண்டு வந்து சேர்ப்பதில் உற்சாகமாக இருக்கிறேன்.  நீரானது இன்று உலகம் முழுவதும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு இயற்கையின் வளமாகும். நாம் விரும்பியோ விரும்பாமலோ நீர் மொத்தமாக மழைவீழ்ச்சியின் மூலம் கிடைக்கின்ற நீரின் அளவு குறையத்தான் போகின்றது என்கிற சிந்தனையும் அதனை நாங்கள் உலகம் முழுவதும் பெருமளவுக்கு விவசாயத்துக்கு தான் பயன்படுத்துகிறோம் என்பது உண்மை.   நீர் எல்லைகளைத் தாண்டி ஓடுகின்ற இயற்கையின் அம்சம் என்கிற வகையில் அது ஒரு நாட்டின் அல்லது ஒரு மாகாணத்தின் அல்லது ஒரு மாநிலத்தின் எல்லையைக் கடந்து இன்னொரு மாநிலத்துக்கு செல்லும் போது அங்கே எல்லைகளைக் கடந்த ஒரு போட்டி நிலை ஏற்படுவதனால் தேசங்களுக்கு இடையே நாடுகளுக்கு இடையே ஒரு சிக்கலை உருவாக்குகிற ஒரு பொருளாக இருக்கின்றது.  எல்லாம் எங்களின் விரைவான வளர்ச்சி, மேம்பாடு, அபிவிருத்தி என்பவற்றின் குறியாக ஒரு பக்கம் நாங்கள் எடுக்கின்ற நீரின் அளவின் அதிகரிப்பு மறுபக்கத்தில் எங்களுக்கு மொத்தமாக கிடைக்கும் மழைவீழ்ச்சியின் மூலம் அல்லது குளிர் வலய பிரதேசங்களில் பனி கரைவதனால் கிடைக்கின்ற நீரின் அளவும் அளவில் குறைந்து கொண்டு போகின்ற இந்த நிலையில் அதனை சரியான கணிப்புக்களின் அடிப்படையில்  பயன்படுத்துவது அவசியமாகின்றது. இதனை விட வீணாக்குவதும், மாசுபடுத்துவதும் தொடர்கின்றது.  இயல்பாகவே நிலப்பரப்பின் தன்மை காரணமாக இலங்கையின் வடமாகாணம் நீர் தொடர்பில் பாரிய அச்சுறுத்தலை எதிர்கொண்டு நிற்கின்றது. வடக்கின் யாழ்ப்பாணத்தின் நீர் தொடர்பில் எங்களுக்கு நீண்டகால அறிவு உள்ளது. ஆகவே இருக்கின்ற நீர்வளங்களை இன்னும் சிதைவடையாமல் பேணுவதற்கான முயற்சிகளை தான் நாங்கள் உடனடியாக செய்ய வேண்டியுள்ளது.  யாழ் பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள், நீர் தொடர்பிலான திணைக்களங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரச அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து நீர் தொடர்பில் பேச வந்திருப்பது வரவேற்கத்தக்கது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.