Jump to content

தியாக தீபம் அன்னை பூபதியின் 32 வது நினைவு தினம்


Recommended Posts

In இலங்கை     April 19, 2020 7:19 am GMT     0 Comments     1076     by : Benitlas

IMG_0023.jpg

இந்திய இராணுவத்தினை இலங்கையில் இருந்து வெளியேறுமாறு கோரி உண்ணாவிரத போராட்டம் இருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் 32 வது நினைவு தினம் இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை உணர்வு பூர்வமாக வடக்கு கிழக்கு எங்கும் அனுஷ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு, நாவலடியில் உள்ள அன்னை பூபதியின் சமாதியருகில் இன்று காலை 9.30 மணி அளவில் நினைவு தின நிகழ்வு நடைபெற்றது.

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையிலும் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நிர்வாக செயலாளர் இருதயம் செல்வகுமார் உட்பட கட்சி இளைஞரணி உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.

இந்திய இராணுவ அடக்குமுறைகளுக்கு எதிராகவும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் 1988.03.19 ஆம் திகதியிருந்து 1988.04.19 வரையில் உண்ணா விரதமிருந்து அன்னை பூபதி உயிர்நீர்த்தமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/தியாக-தீபம்-அன்னை-பூபதிய/

 

வடக்கு, கிழக்கில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது அன்னை பூபதியின் 32 ஆவது நினைவு தினம்!

In இலங்கை     April 19, 2020 7:46 am GMT     0 Comments     1012     by : Benitlas

IMG_2816.jpg

இந்திய இராணுவத்தினை இலங்கையில் இருந்து வெளியேறக்கோரி உண்ணாவிரத போராட்டம் இருந்து உயிர்நீத்த ‘தியாக தீபம்’ அன்னை பூபதியின் 32 ஆவது நினைவு தினம் இன்று காலை வடக்கு, கிழக்கில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு, நாவலடியில் உள்ள அன்னை பூபதியின் சமாதியருகில் இன்று காலை 9.30 மணி அளவில் நினைவு தின நிகழ்வு இடம்பெற்றது.

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையிலும் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நிர்வாக செயலாளர் இருதயம் செல்வகுமார் உட்பட கட்சி இளைஞரணி உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.

இதேவேளை, அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்;வை அவரது சமாதியில் நினைவு கூருவதற்கு அவரது மகள் லோகேஸ்வரன் சாந்தி, பொலிசாரிடம் அனுமதி கோரிய நிலையில் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது

இதனையடுத்து இன்று காலை மாமாங்கத்திலுள்ள அன்னை பூபதியின் மகளின் வீட்டிற்கு சென்ற பொலிசார் வழங்கிய அனுமதியை நாட்டின் சூழ்நிலை காரணமாக ரத்துச் செய்துள்ளதாக தெரிவித்தனர்.

இந்த நிலையில் தனது வீட்டில் அன்னையின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து ஈகைச்சுடர் ஏற்றி மகள் நினைவு கூர்ந்துள்ளார்.

இதேபோல், வவுனியாவில் 1150 நாட்கள் கடந்தும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தை, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக் கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினர் நடத்தி வருகின்றனர்.

அவர்கள், ஏ-9 வீதிக்கு அருகே அமையப்பெற்றுள்ள தமது போராட்டப் பந்தலில் இன்று தமிழினத்தின் தாய் பூபதி அம்மா அவர்களின் உருவப்படத்தை காட்சிப்படுத்தி மெழுகுவர்த்திகள் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இந்திய இராணுவ அடக்குமுறைகளுக்கு எதிராகவும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் 1988ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19 ஆம் திகதியிருந்து ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி வரையில் உண்ணாவிரதமிருந்து அன்னை பூபதி உயிர்நீர்த்தமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/வடக்கு-கிழக்கில்-உணர்வு/

Link to comment
Share on other sites

அன்னை பூபதியை நினைவில் கொள்வோம் – யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

In இலங்கை     April 19, 2020 4:46 am GMT     0 Comments     1183     by : Benitlas

01333.jpg

அன்னை பூபதியை நினைவில் கொள்வோம் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குறித்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “அன்னை பூபதியின் 32வது நினைவு தினம் இன்றாகும். தமிழ் மக்களின் விடுதலை யாகம் ஒரு இக்கட்டான காலகட்டத்தை அடைந்தபோது அதனை முன்னகர்த்த அந்த வேள்வித்தீயில் தன்னையும் ஆகுதியாக்கிக் கொண்டவர் அன்னை பூபதியாவார்.

நட்பு முகத்தோடு வந்த இந்திய அரசின் உண்மையான துரோக முகத்தை வெளிப்படுத்திய தியாக தீபம் திலீபனின் வழியில் தன் இன்னுயிரை ஈந்த அன்னை பூபதியை வாஞ்சையோடும் அர்ப்பணிப்போடும் நினைவுகூருவது தமிழ் மக்களின் தார்மீக கடமையாகும்.

காந்தீயமும் அகிம்சையும் பேசும் இந்திய அரசின் உண்மையான கோரமுகம் இவர்களின் தியாகத்தால் கிழித்தெறியப்பட்டது. இந்தியா தமிழ் மக்கள் சார்பாக செயற்படும் என்ற தமிழ் மக்களின் நீடிய எதிர்பார்ப்பின் போலித்தன்மையை தமிழ்மக்கள் உணர்ந்து கொள்ள கிட்டிய ஒரு சந்தர்ப்பமாகவும் இது அமைந்திருந்தது.

இந்திய இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த 1988ஆம் ஆண்டு காலப்பகுதியில் போரை நிறுத்துங்கள் விடுதலைப்புலிகளோடு பேச்சுவார்த்தை நடத்துங்கள் என்ற எளிமையான கோரிக்கைகளோடுதான் அன்னை பூபதியும் அவர் சார்ந்த அன்னையர் முன்னணி அமைப்பும் சாத்வீக போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்திய தரப்பினருடனான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படாத சூழ்நிலையிலேயே அன்னை பூபதி சாகும் வரையான உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்.

இந்திய அரசு அவரை சாகவிட்டது ஆனால் தமிழ் மக்கள் அவரை தமது இதயங்களில் தாங்கிக் கொண்டனர். தமிழ் மக்களின் வீரத்தினதும் தியாகத்தினதும் குறியீடாக என்றும் அன்னை உயர்ந்து நிற்கிறார்.

பல்கலைக் கழகங்கள் மூடப்பட்டுள்ள சூழலில் வழமைபோல எமது நினைவுகூரலை செய்ய முடியாத இக்கட்டான நிலையில் நாம் இருந்தாலும் இவ்வறிக்கை மூலம் தமிழ் மக்கள் அனைவருக்கும் அன்னையின் நினைவுகூரலின் அவசியத்தை வலியுறுத்தி நிற்கிறோம்.“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

jaffna.jpg

Link to comment
Share on other sites

இந்திய அரசின் உண்மை முகத்தை கிழித்தெறிந்த அன்னை பூபதியின் 32வது நினைவு தினம்

நாட்டில் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலில் அன்னை பூபதியின் 32வது நினைவு தினமான இன்று யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நினைவுகூர்ந்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தமிழ் மக்களின் விடுதலை யாகம் ஒரு இக்கட்டான காலகட்டத்தை அடைந்தபோது அதனை முன்னகர்த்த அந்த வேள்வித்தீயில் தன்னையும் ஆகுதியாக்கிக் கொண்டவர் அன்னை பூபதியாவார்.

நட்பு முகத்தோடு வந்த இந்திய அரசின் உண்மையான துரோக முகத்தை வெளிப்படுத்திய தியாக தீபம் திலீபனின் வழியில் தன் இன்னுயிரை ஈந்த அன்னை பூபதியை வாஞ்சையோடும் அர்ப்பணிப்போடும் நினைவுகூருவது தமிழ் மக்களின் தார்மீக கடமையாகும்.

காந்தீயமும் அகிம்சையும் பேசும் இந்திய அரசின் உண்மையான கோரமுகம் இவர்களின் தியாகத்தால் கிழித்தெறியப்பட்டது.

இந்தியா தமிழ் மக்கள் சார்பாக செயற்படும் என்ற தமிழ் மக்களின் நீடிய எதிர்பார்ப்பின் போலித்தன்மையை தமிழ்மக்கள் உணர்ந்து கொள்ள கிட்டிய ஒரு சந்தர்ப்பமாகவும் இது அமைந்திருந்தது.

இந்திய இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த 1988ஆம் ஆண்டு காலப்பகுதியில் போரை நிறுத்துங்கள் விடுதலைப்புலிகளோடு பேச்சுவார்த்தை நடத்துங்கள் என்ற எளிமையான கோரிக்கைகளோடுதான் அன்னை பூபதியும் அவர் சார்ந்த அன்னையர் முன்னணி அமைப்பும் சாத்வீக போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்திய தரப்பினருடனான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படாத சூழ்நிலையிலேயே அன்னை பூபதி சாகும் வரையான உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்.

இந்திய அரசு அவரை சாகவிட்டது ஆனால் தமிழ் மக்கள் அவரை தமது இதயங்களில் தாங்கிக் கொண்டனர். தமிழ் மக்களின் வீரத்தினதும் தியாகத்தினதும் குறியீடாக என்றும் அன்னை உயர்ந்து நிற்கிறார்.

பல்கலைக் கழகங்கள் மூடப்பட்டுள்ள சூழலில் வழமைபோல எமது நினைவுகூரலை செய்ய முடியாத இக்கட்டான நிலையில் நாம் இருந்தாலும் இவ்வறிக்கை மூலம் தமிழ் மக்கள் அனைவருக்கும் அன்னையின் நினைவுகூரலின் அவசியத்தை வலியுறுத்தி நிற்கிறோம் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/141516

Link to comment
Share on other sites

5 hours ago, Rajesh said:

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையிலும் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

தியாக தீபம் அன்னை பூபதி அவர்களுக்கு வீர அஞ்சலிகள் !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தியாக அஞ்சலிகள்..

Link to comment
Share on other sites

மெய்நிகர் தொழில்நுட்பத்தில் நினைவுகூரப்பட்ட முதன்நிகழ்வாக  அன்னை பூபதி !!

தமிழீழ விடுதலைப் போராட்டம் தனது மூலோபாயங்களை அடைய, காலத்தின் நிலைமைகளுக்கு அமைய தனது தந்திரோபாயங்களை வகுத்துக் கொள்வது போல், தற்போதைய உலக நிலைமைகளுக்கு அமைய, நினைவேந்தல் நிகழ்வுகளையும், மக்கள் சந்திப்புக்களையும் மெய்நிகர் தகவல்தொழில்நுட்ப பரிமாணத்தில் மாற்றியுள்ளதன் முதன்நிகழ்வாக தமிழீழத் தாய்மார்களது தியாகத்தின் குறியீடாக இருக்கின்ற நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் 32வது ஆண்டு தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் நினைவுகூரப்பட்டது. 

1988ம் ஆண்டுகளில் தமிழர் தாயகத்தில் நிலைகொண்டு தமிழர் தரப்புக்கு எதிரான யுத்தத்தில் ஈடுபட்டிருந்த இந்திய இராணுவம் யுத்தநிறுத்தத்தினை மேற்கொண்டு, தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்தைகளில் ஈடுபடவேண்டும் என கோரிக்கையுடன் 1988ம் ஆண்டு மார்ச் மாதம் 19ம் திகதி தனது சாகும்வரையான உண்ணாவிரதப்போராட்டத்தை தொடங்கிய அன்னை பூபதி, 31 நாட்களின் பின்னர், ஏப்ரல் 19ம் நாள் தனதுயிரை தமிழீழ தேசத்துக்கு காணிக்கையாக்கியிருந்தார்.

ஆயிரம் ஆயிரம் மாவீரர்களை தந்த தமிழீழத் தாய்மார்களது குறியீடாக அன்னை பூபதி ஆண்தோறும் நினைவுகூரப்பட்டு வரும் நிலையில், தற்போது கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலகத்தை முடக்கியுள்ள நிலையிலும் அன்னை நினைகூரப்பட்டுள்ளார்.

வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடும் தாய்மார்கள், தமிழர் தாயகத்தில் நினைவேந்தியிருக்க, மெய்நிகர் தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தின் ஊடாக புலம்பெயர் தேசங்களையும், தமிழ்நாட்டையும் ஒருங்கிணைத்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்திருந்தது.

கவிதை, அன்னையின் நினைவுப் பகிர்வுகள், சிறப்புரை என அமைந்திருந்த இவ்மெய்நிகர் கூட்டத்தில் அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, பிரித்தானியா உட்பட தமிழ்நாட்டில் இருந்து தமிழ்உறவுகள் பங்கெடுத்து நினைவேந்திக் கொண்டனர்.

தமிழீழ தாய்மார்களின் குறியீடாக அன்னை பூபதி இருப்பதற்கு சான்றாக இன்று தமிழர் தாயகத்தில் தொடர்சியாக நீதிக்கான போராடிக் கொண்டிருக்கும் தாய்மார்களது ஓயாத போராட்டத்தினை தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மூத்த உறுப்பினர் பாலா அண்ணா அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.

தமிழீழ தேசத்துக்கான விடுதலைப் போராட்டத்தில் நாம் அனைவரும் நாட்டுப்பற்றாளர்களாக பங்காற்ற வேண்டுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் குறிப்பிட்டிருந்தார். 

--
Murugiah Suginthan
The Secretariat,TGTE 

 join us : 
Website: http://tgte.org/tamil
Facebook: https://www.facebook.com/TGTE.Secretariat/
Twitter: @suginthan
Twitter: @TGTE_SEC 
G+: https://plus.google.com/u/0/+TGTESecretariat

Link to comment
Share on other sites

விடுதலைக்கான பயணத்தில் கொரோனாவின் தாக்கம் சிறிய தாமதமேயன்றி தடை அல்ல- ஸ்ரீதரன்

In இலங்கை     April 20, 2020 5:41 am GMT     0 Comments     1148     by : Litharsan

விடுதலைக்கான பயணத்தில் கொரோனாவின் தாக்கம் சிறிய தாமதமேயன்றி தடை அல்லவென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

தேசத்தின் விடுதலைக்காக உண்ணா நோன்பிருந்து உயிர்தந்த தியாகதீபம் அன்னைபூபதியின் 32ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகமான அறிவகத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

இந்நிகழ்வில, ஈகைச் சுடரினை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஏற்றிவைத்து அன்னைபூபதி திருவுருவப் படத்திற்கான மலர் மாலையினையும் அணிவித்தார்.

இந்நிகழ்வில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன், உப தவிசாளர் தவபாலன், கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் செயலாளர் விஜயன் உள்ளிட்ட செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது அவர் நினைவுரையாற்றுகையில், “1988ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் சிங்கள ஆட்சியாளர்களினதும் அதனோடு இணைந்த உதவிப் படைகளின் ஆக்கிரமிப்பின் கீழ் எங்கள் தேசம் சிக்கித் தவித்தது. மரணஓலமே எம் மண்ணை நிறைத்திருந்தது.

மரணங்கள் மலிந்த பூமியாக நாம் வதைபட்டபோது அன்னைபூபதி அகிம்சைக் களத்திலே தன்னை அர்ப்பணித்தார். தர்மம் மிகுந்த வாழ்வை தமிழர்கள் பெற வேண்டும் என்பதற்காக தன் உயிர் தேசத்தின் தாயாக அவர் பரிணமித்தார். கடந்த 32 ஆண்டுகளாக அந்த தாய் தாங்கிய கனவுகளோடு பயணிக்கிறோம். போராட்ட வழிமுறைகள் மாறினாலும் இலட்சியம் மாறாது பயணிக்கின்ற இவ்வேளையிலே மரணங்கள் மலிந்துபோயுள்ளன. வல்லரசுகள் நிலைகுலைந்து போயிருக்கின்றன.

ஒவ்வொரு அரசுகளும் தேசிய இனங்களும் தர்மத்தை நேசிக்கின்ற, தேடுகின்ற காலம் உருவாக்கியிருக்கிறது. 89 ஆம் ஆண்டுகளின் பின்னர் 23 நாடுகள் சுதந்திரம் அடைந்திருக்கின்றன. உலகம் இன்று இருளில் சூழ்ந்திருக்கின்றது. புதிய சிந்தனைகளை, புதிய பாதைகளை, புதிய பொருளாதாரத் தேர்வுகளை புதிய உலக ஒழுங்கினைப் பற்றி சிந்திப்பதற்கு கொரோனா வைரஸ் அடிகோலியிருக்கிறது.

ஆகவே, தமிழ் தேசிய இனமாகிய நாங்கள் போரை, சுனாமியை, பொருளாதாரத் தடையை, பன்னாட்டு அரசுகளின் அழுத்தங்களை எதிர்கொண்ட வண்ணம் சுயநிர்ணய பாதையில் பயணித்துக்கொண்டிருக்கும் போது கொரோனா வந்திருக்கிறது.

இதனை எதிர்கொள்வோம், வெற்றி கொள்வோம் என்கின்ற திடசங்கற்பத்தோடு அன்னை பூபதி காட்டிய அறப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம். ஒரு தேசிய இனத்தின் விடுதலைப் பாதையில் கொரோனா வைரஸின் தாக்கம் தாமதமே அன்றி தடையல்ல என்பதை ஒன்றுபட்ட சக்தியாக நின்று வெற்றி கொள்வதே அன்னை பூபதியின் இலட்சியச் தாகத்தை வென்றெடுப்பதற்கான திடசங்கற்பம் ஆகும்” என்றார்.

Annai-Poopathy-Rememrance-2020-in-Kilino

Annai-Poopathy-Rememrance-2020-in-Kilino

Annai-Poopathy-Rememrance-2020-in-Kilino

Annai-Poopathy-Rememrance-2020-in-Kilino

Annai-Poopathy-Rememrance-2020-in-Kilino

Annai-Poopathy-Rememrance-2020-in-Kilino

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
    • நூறாவ‌து சுத‌ந்திர‌ தின‌த்தின் போது இந்தியா என்ற‌ நாடு இருக்காது என்று ப‌ல‌ர் சொல்லி கேள்வி ப‌ட்டு இருக்கிறேன்.............மோடியே போதும் இந்தியாவை உடைக்க‌............இந்தியாவில் வ‌சிக்கும் முஸ்லிம்க‌ளும் இந்திய‌ர்க‌ள் ஆனால் மோடி முற்றிலும் முஸ்லிம்க‌ளுக்கு எதிராக‌ இருக்கிறார் ......................நீங்க‌ள் சொன்ன‌து போல் சோவியத் யூனியன் ம‌ற்றும் முன்னால் யூகேசுலோவியா உடைந்த‌து போல் இந்தியாவும் உடையும்.......................இன்னும் 10வ‌ருட‌ம் மோடி என்ற‌ கேடி ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்து ஆட்சியை பிடித்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் ஆயுத‌ம் தூக்கி ச‌ண்டை பிடிப்பின‌ம் பிற‌க்கு ஜ‌ம்மு க‌ஸ்மீர் போல் எல்லா மானில‌மும் வ‌ந்து விடும்.......................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.