Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

விலை உயர்ந்த பொருளை சமாதியில் புதைக்கலாமா..?!


Recommended Posts

 விலை உயர்ந்த பொருளை சமாதியில் புதைக்கலாமா..?!

பிரேசிலின் மிகப்பெரும் கோடீஸ்வரர் தனக்கு சொந்தமான பத்து லட்சம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பெண்ட்லே சொகுசு காரை புதைக்க விரும்புவதாக விளாம்பரப்படுத்தினார் , அதற்கு அவர் சொன்ன காரணம் இறப்புக்கு பின்னர் இந்த கார் பயன்படும் என்று .

இதைக்கேட்ட பத்திரிக்கைகள் விமர்சனம் செய்தன , பைத்தியக்காரன் பத்துலட்சம் டாலரை வீணடிக்கிறானே முட்டாள் என்றெல்லாம் திட்டி எழுதினார்கள். 

large.A7127420-1F16-428C-B9D3-D20D57FFEB3F.jpeg.c611fc446d7c93efd90eaba7695cb4dc.jpeg

பொதுமக்கள் திட்டி தீர்த்தார்கள் . புதைப்பதாக சொன்ன தேதியும் வந்தது எல்லோரும் ஆவலாக என்னதான் நடக்குது என்று பார்க்க கூடினர் . 

பெண்ட்லே காரை புதைக்கும் அளவுக்கு பெரிய பள்ளம் வெட்டப்பட்டு புத்தம் புதிய அந்த காரும் நிறுத்தப்பட்டிருந்தது. எல்லோரும் பொறாமையாக பார்த்துகொண்டிருந்தனர்.

 பணக்காரர் வந்தார் காரை புதைக்கும் ஏற்பாடுகள் துவங்கியது.சிலர் நேரிலேயே அவரின் பைத்தியக்காரத்தனத்தை திட்டிதீர்த்தனர். 

விலை உயர்ந்த பொருளை இப்படி வீணடிக்கிறீர்களே இது எப்படி உங்கள் மரணத்திற்கு பிறகு பயன்படும் அதற்கு பதில் யாருக்காவது தானமாக கொடுத்தால் அவர்களுக்காவது பயன்படுமே என்று கோபத்துடன் கேட்டனர். 

அப்போது திடீரென அந்த பணக்காரர் சொன்னார்.நான் காரை புதைக்கவில்லை யாராவது அந்த முட்டாள் தனத்தை செய்வார்களா , உங்கள் எல்லோருக்கும் ஒரு உண்மையை உணர்த்தவே இப்படி வித்யாசமாக விளம்பரப்படுத்தினேன் என்றார் . 

large.D33D71DC-19B7-45F9-9E22-AA97186163BD.jpeg.c8e131d062eab75c626115d7c2775b82.jpeg

என்ன உண்மை என்றனர் அனைவரும். இந்த கார் பத்து லட்சம் யூஎஸ் டாலர்தான் இதை புதைக்கிறேன் என்றவுடன் கோபப்பட்டு கேள்வி கேட்கிறீர்களே நான் உங்களை ஒன்று கேட்கிறேன் இதைவிட விலை மதிப்பில்லாதது மனித உடல் உறுப்புகள் . இதயம் , கண் , நுரையீரல் , கிட்னி, தோல், என மனித குலத்துக்கு பயன்படும் மதிப்புமிக்க உடல் உறுப்புகளை புதைப்பதால் என்ன லாபம், யாருக்காவது தானமாக தரலாமே, 

லட்சக்கணக்கானவர்கள் உடல் உறுப்பு தானத்தை நம்பி வாழ்கிறார்கள் அவர்களுக்கு உங்கள் உடல் உறுப்புகள் பயன்படட்டுமே உடலுறுப்பு தானம் செய்யுங்கள் , அதை உணர்த்தவே இந்த நாடகம் என்றாராம் .

படித்ததில் பிடித்தது 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் அவனவன் சுய உரிமையும் சொந்த விருப்பமும்.மற்றவன் உரிமையில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை. 😎

Link to comment
Share on other sites

5 hours ago, குமாரசாமி said:

இதெல்லாம் அவனவன் சுய உரிமையும் சொந்த விருப்பமும்.மற்றவன் உரிமையில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை. 😎

யார் இப்ப தலையிட்டது? நீங்க தலையிட்டீங்களா?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

CZUGJoPXEAARXxs.jpg

வாத்தியார் சமாதியில் இன்றும் காதை வைத்து "ரிக் .. ரிக்" கைகடிகார ஓசை கேட்பவை ஏராளம்கள் .. இன்னும் ஒடுதாம்..👍அத்துனை விலையாமெல்லோ ...☺️..😊

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

முன்பு இதுபோல ஒரு திரி வந்தபோது சொல்லி இருந்தேன்.

கொழும்பில் கஞ்சா செல்லையா என்று பெரிய தாதா இருந்தார். கொச்சிக்கடை பக்கத்தில் இவர் வைத்ததுதான் சட்டம்.

பிரேமதாச காலத்தில், jvp காரர்களை தூக்கியது போலவே, கையோட இவரையும் தூக்க சொல்லி, பெரிய இடத்து ஆர்டர்.

பெரும் யாவாரிகளாக இருந்த சுப்பையா, சண்முகம் போலவே இவரும் போடப்பட்டார்.

இவர் கிறிஸ்தவராக இருந்ததால், கணத்தையில் பட்டு வேட்டி, பட்டு சட்டை கையில் அவர் ஆசையாக வாங்கி போட்டிருந்த பெரிய மோதிரம், சங்கிலி என்று புதைக்கப்பட்டார்.

அன்று இரவே, கைவரிசை காட்டிய திருட்டு கும்பலின் வேலையினால், அடுத்தநாள் காலை, உடல் எதுவுமே இன்றி பக்கத்து மரத்தடியில் கிடந்தது.

குடுப்பதினார் ஓடி வந்து.... ஒன்றுமே இல்லாமல், அப்படியே குழிக்குள் தள்ளி புதைத்து விட்டு போனார்கள்.

On 19/4/2020 at 11:01, tulpen said:

லட்சக்கணக்கானவர்கள் உடல் உறுப்பு தானத்தை நம்பி வாழ்கிறார்கள் அவர்களுக்கு உங்கள் உடல் உறுப்புகள் பயன்படட்டுமே உடலுறுப்பு தானம் செய்யுங்கள் , அதை உணர்த்தவே இந்த நாடகம் என்றாராம் .

பிரிட்டனில் இந்த வருடத்தில் இருந்து புதிய சட்டம் அமுலாகி உள்ளது.

உடலுறுப்பு இனி தானம் செய்ய வேண்டியதில்லை. மாறாக உடலுறுப்பு தானம் செய்ய விருப்பம் இல்லை என்று தான் எழுதி வைக்கவேண்டும்.

இந்த சட்டத்தினால், இறக்கும் ஒருவரின் உடல் உறுப்பு, தேசிய சொத்தாக கருதப்பட்டு, இறந்த நபரின் உறவினர்களின் அனுமதி இல்லாமலே, டாக்டர்களினால் பயன்படுத்தப்படலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • 20 அடி உயரத்தில் கேமரூன் வீரர் அடித்த நம்ப முடியாத கோல்   பட மூலாதாரம்,GETTY IMAGES 34 நிமிடங்களுக்கு முன்னர் மிக அருகிலேயே எதிரணியின் கோல் கீப்பர் நிற்கிறார். சில மீட்டர் தொலைவில் கோல்வலை இருக்கிறது. அப்போது கேமரூன் வீரர் வின்சென்ட் அபூபக்கர் செய்தது என்ன தெரியுமா? தலைக்கு மேலே சுமார் 20 அடி உயரத்துக்கு பந்தை காலால் தூக்கி வீட்டு ஒரு பரவளையப் பாதையில் அதை கோலுக்குள் அடித்தார். இந்த உலகக் கோப்பையில் பிரேசில் வீரர் ரிச்சார்லிசன், அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி ஆகியோர் அடித்த வியக்கத்தகுந்த கோல்களுடன் அபூபக்கரின் கோலும் வியந்து பேசப்படுகிறது.  செர்பிய அணியுடனான போட்டியில் தோற்றுப்போகும் என்று கருதப்பட்ட கேமரூன் அணி அதைத் தவிர்ப்பதற்கும் இந்த கோல் அடித்தளமானது. இதை நம்பமுடியாத கோல் என்று கூறுவதற்கும் காரணமுண்டு. ஏனென்றால் கோல் அடித்தபோது அது ஆப்சைட் என்று முதலில் கருதப்பட்டது. கேமரூன் வீரர்கள் யாரும் கொண்டாடவில்லை. தொலைக்காட்சியில் வர்ணனை செய்து கொண்டிருந்தவர்களும் அது ஆப்சைட் என்றே கூறிக் கொண்டிருந்தார்கள். அந்த அளவுக்கு கோல் கீப்பரைத் தவிர வேறு எந்த வீரரும் இல்லாத இடத்தில் இருந்து அபூபக்கர் ஓடிக் கொண்டிருந்தார்.    கள நடுவரும் முதலில் ஆப்சைட் என்றே அறிவித்தார்.  காணொளி உதவியுடன் சரிபார்த்தபிறகு அதே கோல் என்பது உறுதியானது. அர்ஜென்டினாவை வீழ்த்திய சௌதி அரேபியா போலாந்துடன் செய்த இருபெரும் தவறுகள்26 நவம்பர் 2022 தரையோடு தரையாக மெஸ்ஸி அடித்த ‘நிம்மதி’ கோல்27 நவம்பர் 2022 தலைகீழாகச் சுழன்று பிரேசில் வீரர் அடித்த ‘மந்திரக்’ கோலை பார்த்தீர்களா?25 நவம்பர் 2022 கோல் மழையில் நனைந்த போட்டி செர்பியாவுடன் கேமரூன் அணி மோதிய ஜி பிரிவு ஆட்டம் இரு தோல்வியடைந்த அணிகளுக்கு இடையேயான ஆட்டம் என்பதில் பெரிதாகக் கண்டுகொள்ளப்படவில்லை என்றுதான் கூற வேண்டும். கேமரூன் அணி ஏற்கெனவே சுவிட்சர்லாந்துடனும், செர்பியா அணி பிரேசிலுடனும் மோதி தோல்வியடைந்திருந்தன.  ஆனால் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான போட்டியே உலகக் கோப்பையின் 9-ஆவது நாளில் மிகவும் சுவாரஸ்யமான போட்டியாக இருந்தது. நீயா, நானா என்பது போல் இரு அணிகளும் மாறி மாறி கோல்களை அடித்து கடைசி நிமிடம் வரைக்கும் போட்டியை விறுவிப்பாகக் கொண்டு சென்றன. கேமரூன் அணி சிறிது நேரம் ஆதிக்கம் செலுத்தியது என்றால், அடுத்து சிறிது நேரத்துக்கு செர்பிய அணி ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தது. போட்டியின் 29-ஆவது நிமிடத்தில் கேமரூன் அணியின் காஸ்ட்டலெட்டோ முதல் கோலை அடிக்க அந்த அணி முன்னிலை பெற்றது. ஆனால் பாதி ஆட்டத்தின் முடிவில் தாமதங்களுக்காக வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்து செர்பிய அணி கேமரூனை திணறடித்தது.  இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் செர்பியாவின் அலெக்ஸாண்டர் மித்ரோவிச் மற்றொரு கோலை அடித்தார். இதனால் 3க்கு 1 என்ற கோல் கணக்கில் செர்பிய அணி முன்னிலை பெற்றிருந்தது.      பட மூலாதாரம்,GETTY IMAGES அபூபக்கரின் சாகசம் அந்த நேரத்தில்தான் அதிசயம் ஒன்றை நிகழ்த்தினார் கேமரூன் வீரர் வின்சென்ட் அபூபக்கர். அது ஆட்டத்தின் 64-ஆவது நிமிடம். மாற்று வீரராகக் களமிறங்கிய அபூபக்கர், மைதானத்தின் கோலுக்கு வெகுதொலைவில் இருந்து பந்தைப் பெற்று செர்பிய கோலை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். தொலைக்காட்சியில் பார்த்தவர்களுக்கு சில விநாடிகளுக்கு பரந்து விரிந்த புல்வெளியில் அபூபக்கர் பந்தைக் கொண்டு செல்வது மட்டும் தேரிந்திருந்திருக்கும். அந்த அளவுக்கு யாருமே இல்லாத வெளியில் அவர் ஓடிக்கொண்டிருந்தார்.  பின்னர் செர்பிய வீரர் மேக்சிமோவிக் அபூபக்கரிடம் இருந்து பந்தைப் பறிப்பதற்கு முயன்றார். ஆனால் அதைச் தடுத்து மிகவும் அமைதியாக பந்தை தரையோடு தரையாக வைக்கும் வகையில் அதை மேல்புறமிருந்து தட்டினார்  அபூபக்கர். செர்பிய வீரர் பந்து கிடைக்காமல் தரையில் சரிந்து வீழ்ந்தார். பெனால்டி பாக்ஸுக்குள் பந்து வந்ததும் செர்பிய கோல் கீப்பர் கோல்வலையில் இருந்து ஓடிவந்து அபூபக்கரை இடைமறித்து நின்றார். உடனே பந்தை நேராக உதைத்து கோலுக்குள் தள்ளுவதற்கு அபூபக்கர் முயற்சிக்கவில்லை. மாறாக சுமார் 7 அடி உயரம் கொண்ட கோல்கீப்பரின் தலைக்கு மேலே கிட்டத்தட்ட செங்குத்தாகச் செல்லும் வகையில் பந்தைத் தூக்கிவிட்டார். அது சுமார் 20 அடி உயரம் வரைப் பறந்து, பரவளையப் பாதையில் பயணித்தது. கோல் கம்பத்துக்கு சற்று முன்பாக தரையில் விழுந்தது. பின்னர் கோல்வலையின் உள்புற மேல் பகுதியில் மோதி கோலுக்குள் அடக்கமானது.    பட மூலாதாரம்,GETTY IMAGES அபூபக்கர் அடித்த பந்து இன்னும் சற்று உயரமாகச் சென்றிருந்தாலும் இரண்டாவது முறையில் அது கோலுக்குள் சென்றிருக்க வாய்ப்பில்லை. அந்த அளவுக்குத் துல்லியமான ஷாட்டாக அது அமைந்துவிட்டது. இத்தகைய சாகசம் புரிந்திருந்தாலும் அது கோலாக இருக்கும் என்று பெரும்பாலானவர்கள் முதலில் நம்பவில்லை. செர்பிய கோல்கீப்பர் எந்தக் கவலையும்படாமல் பந்தை சாதாரணமாக எடுத்துவந்தார். அபூபக்கரும் கோல் அடித்துவிட்டதாக நினைத்துக் கொண்டாடவில்லை. கள நடுவரும் ஆப்சைட் என அறிவித்துவிட்டார்.  காணொளி மூலம் சரிபார்த்த பிறகுதான் அது கோல் என அறிவிக்கப்பட்டது. அந்த சமயத்தில் செர்பிய அணிக்கு அந்த கோல் மிகவும் முக்கியமானதாக இருந்தது. கடைசியில் 3-3 என்ற கோல் கணக்கில் ஆட்டம் சமனில் முடிந்தது. https://www.bbc.com/tamil/articles/cx7q9pzej66o
  • ஓநாய்-மனித நோயால் பாதிக்கப்பட்ட 17 வயது மாணவர் - இந்த நோய் ஏற்பட என்ன காரணம்?   3 மணி நேரங்களுக்கு முன்னர் “சின்ன வயதிலிருந்தே எனக்கு இப்படித்தான் முடி இருக்கிறது. கண்ணில் முடி விழும், சாப்பிடும் போதெல்லாம் மிகவும் கஷ்டமாக இருக்கும். மருத்துவரிடம் காட்டியபோது, இப்போதைக்கு இதற்கு சிகிச்சை எதுவும் இல்லையென்று கூறிவிட்டார். ஆனால், எனக்கு 21 வயதாகும்போது பிளாஸ்டிக் சர்ஜரி செய்யலாம் எனக் கூறியுள்ளார். முதலில் முகத்திலுள்ள முடியைப் பார்த்து என்னை அனுமன் என்றார்கள். நான் சிறுவனாக இருந்தபோது அனைவரும் அஞ்சினார்கள். பிறகு கூடவே இருப்பதால் பழகிக் கொண்டார்கள். எனக்கு இந்த நோய் சரியாவதற்கு அரசாங்கம் உதவ முடிந்தால் நன்றாக இருக்கும்,” என்று கூறுகிறார் 17 வயதான மாணவர் லலித். லலித் ஓர் அரிய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். அந்த நோயின் பெயர் ஓநாய்-மனித நோய். அதாவது வேர்வுல்ஃப் சிண்ட்ரோம். அவருடைய முகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் நீளமாக முடி வளர்கிறது. இதுவோர் அரிய வகை நோய். இதன் காரணமாக லலித்தால் தன் வயதை ஒத்த இளைஞர்களைப் போல் இயல்பு வாழ்க்கை வாழ முடியவில்லை. இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் மாணவர் லலித்தின் தாத்தா தன் பேரன் பிறந்ததிலிருந்தே இப்படித்தான் இருப்பதாகவும், அதைக் கண்டு ஆரம்பக்காலத்தில் கிராமத்திலுள்ள அனைவரும் அஞ்சினார்கள் என்றும் கூறுகிறார்.   மரணத்துக்கு முன் மனதில் தோன்றும் கடைசி சிந்தனை என்ன?28 நவம்பர் 2022 தாயின் பிறப்புறுப்பு திரவம் குழந்தையின் நோயெதிர்ப்பு திறனை மேம்படுத்த உதவுமா?28 நவம்பர் 2022 குழந்தை பிறந்த உடனேயே உடல் எடையைக் குறைக்க நினைத்தால் ஆபத்து28 நவம்பர் 2022 ஓநாய்-மனித நோய் என்றால் என்ன? ஓநாய்-மனித நோய் (Werewolf Syndrome) என்பது ஹைபர்டிரைகோசிஸ் என்ற மிகவும் அரிதான ஒரு பாதிப்பின் பொதுப் பெயர். ஒரு நபரின் உடலில் எங்காவது அளவுக்கு அதிகமான முடி வளர்ந்திருந்தால் அதை இதன் கீழ் மருத்துவர்கள் வகைப்படுத்துகின்றனர். இது பாலின வேறுபாடின்றி யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். அசாதாரண முடி வளர்ச்சி முகத்தையோ அல்லது உடல் பகுதியையோ மூடிவிடும் அளவுக்கு அல்லது ஒரு குறிப்பிட்ட பகுதியில் திட்டு திட்டாக இருக்கும் அளவுக்கு ஏற்படலாம். ஹைபர்டிரைகோசிஸ் பிறக்கும்போதே இருக்கலாம் அல்லது காலப்போக்கில் உட்கொள்ளும் மருந்துகளின் பக்கவிளைவுகள் காரணமாக இது உருவாகக்கூடும். இதில் பல வகைகள் உள்ளன. பிறவியிலேயே தோன்றக்கூடியது அதில் ஒன்று. முதலில் குழந்தை பிறக்கும்போது உடலில் மெல்லிய முடிகள் இருக்கும். ஆனால், வழக்கமாக நடப்பதைப் போல் அடுத்தடுத்த வாரங்களில் உதிர்ந்துவிடுவதற்குப் பதிலாக, அந்த மெல்லிய மயிர்கள் குழந்தையின் உடலில் தொடர்ந்து அதிகமாக வளர்கின்றன. பிறவியிலேயே அசாதாரணமான முடி வளர்ச்சி தொடங்குவதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பிறக்கும்போது தொடங்கி வாழ்நாள் முழுவதுமே அசாதாரண முடி வளர்ச்சி இருந்து கொண்டிருக்கும். முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் இதனால் பாதிக்கப்பட்ட நபரின் முகத்தையும் உடலையும் மறைக்கும் அளவுக்கு வளரும்.   இது இரண்டு வகையான அதீத முடி வளர்ச்சியை உருவாக்குகிறது. ஏதேனும் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் அதீதமாக முடி வளர்வது அதில் ஒன்று. மற்றொன்று, முடி வளரக்கூடிய அனைத்து பகுதிகளிலுமே அளவுக்கு அதிகமான முடி வளர்ச்சி நிகழ்வது. இதுபோக, ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் அதிகப்படியான முடி வளர்ச்சி நிகழ்வது, பெண்களுக்கு மட்டுமே நிகழக்கூடிய பொதுவாக முடி இல்லாத முகம், மார்பு, முதுகு போன்ற இடங்களில் அடர்த்தியான முடி வளர்வது போன்றவையும் இந்த ஓநாய்-மனித நோயின் கீழ் வருகின்றன. கனவுகளைச் சுமந்து வாழும் லலித் 2013ஆம் ஆண்டில், நேபாளில் இதனால் பாதிக்கப்பட்டிருந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் அவருடைய மூன்று குழந்தைகளைப் பற்றி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது. தேவி புத்ததோகி என்பவரும் அவருடைய மூன்று குழந்தைகளும் ஓநாய்-மனித நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். தேவிக்கு, கன்ஜெனிட்டல் ஹைபர் டிரைகோசிஸ் லானுகினோசா என்றழைக்கப்படும் பிறவியிலேயே மெல்லிய முடியாகத் தோன்றி பிறகு நாளடைவில் அடர்த்தியாக அவர்களுடைய முகம் முழுக்க முடி வளர்ந்துவிடக்கூடிய பிரச்னை இருந்தது. அவருடைய நிலைக்குத் தீர்வு எதுவும் இல்லை. ஆனால், லேசர் முடி அகற்றும் சிகிச்சை மூலம் அதன் அறிகுறிகளைக் குறைக்கலாம் என்று அந்த செய்தி கூறியது.   தோல் மருத்துவர் தர்மேந்திர கர்ன், 38 வயதான தேவி, அவருடைய 12 வயது மகன் நீரஜ், 14 வயது மகள் மஞ்சுரா, 7 வயது மகள் மந்திரா ஆகியோருக்கு சிகிச்சையளித்தார். அந்த சிகிச்சை அவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்க, அவர்கள் பல அமர்வுகள் செல்ல வேண்டும். ஒரு முடி அகற்றும் சிகிச்சை அமர்வை முடித்துவிட்டு வந்த பிறகு, திரும்பவும் முடி வளர்ந்துவிடும். அதை அகற்றுவதற்கு அவர்கள் மீண்டும் சிகிச்சைக்குச் செல்ல வேண்டும். இதுமாதிரியான சம்பவங்கள் மிகவும் அரிதிலும் அரிது என்கிறார் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மருத்துவர் சிவகுமார். “உடலின் ஏதாவதொரு பகுதியில் பெரிய மச்சமும் அதன்மீது மிக அதிகளவிலான முடியும் இருப்பது ஒரு வகை. இந்த வகையைப் பொறுத்தவரை, நமக்கு வழக்கமாக ஒன்றிரண்டு மிமீ பரப்பளவில் மச்சம் இருக்குமல்லவா! ஆனால், கை, கால், அல்லது முகத்தில் பல செ.மீட்டர்களுக்குப் பெரிய மச்சமாக இருந்து, அந்த மச்சத்தைச் சுற்றி அதிகளவிலான முடி முளைத்திருக்கும். இதில், முடியில் இருக்கக்கூடிய மெலனின் மிக ஆழமாக ஊடுருவிச் செல்வதால், சில நேரங்களில் புற்றுநோயால் பாதிக்கப்படும் அபாயமும் இருக்கும். இந்த பாதிப்பை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும்.   அறுவை சிகிச்சையின்போது, அதீத முடியும் மச்சமும் இருக்கக்கூடிய பகுதியை அகற்றிவிட்டு, அதைச் சுற்றி அருகில் இருக்கும் திசுக்களை இழுத்து சிகிச்சை செய்து, உடலின் வேறு பகுதியிலிருந்து தோலை எடுத்து வைத்து சிகிச்சை செய்து அல்லது செயற்கை தோலை பயன்படுத்தி அறுவை சிகிச்சை மேற்கொண்டு சரிசெய்ய முடியும்,” என்கிறார். இந்த நோய் ஒரு பரம்பரைக் குறைபாடு எனக் கூறும் மருத்துவர் சிவகுமார், “குழந்தை பிறக்கும்போது, எக்ஸ் எக்ஸ் குரோமோசோம்கள் அம்மாவிடமிருந்தும் எக்ஸ் ஒய் குரோமோசோம்கள் அப்பாவிடமிருந்தும் வருகின்றன. குழந்தையின் மரபணுக் கட்டமைப்பை உருவாக்கும் இவற்றில் குறைபாடு இருந்தால் இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது. இது மரபணுப் பிறழ்வால் ஏற்படுகிறது,” எனக் கூறுகிறார். மேலும், மச்சம் போன்று எதுவுமின்றி பிறவியிலேயே அதிகளவு முடி வளர்ச்சியோடு பிறப்பவர்களுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்ய முடியாது, அதற்கு லேசர் சிகிச்சை தான் செய்ய வேண்டும் என்கிறார் சிவகுமார். நேபாளின் தேவி குடும்பத்தைப் போல, அதீத முடி வளர்ச்சியால் பாதிக்கப்பட்டிருக்கும் கன்ஜெனிட்டல் வகை குறைபாட்டிற்கு, பல அமர்வுகள் லேசர் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். “அந்த சிகிச்சையின்போது, ஓர் அமர்வில் மிகவும் இடைப்பட்ட வயதைக் கொண்ட முடி முதல் முதிர்ச்சியடைந்த முடி வரை அனைத்தும் விழுந்தாலும், புதிதாக வளர்ந்து கொண்டிருக்கும் முடி விழாது. அதை அடுத்த அமர்வில் வளர்ச்சியடையும்போது தான் அகற்ற முடியும்.   இப்படியாக சிறுகச் சிறுக முடிகளைப் பல அமர்வுகளில் அகற்றி சரி செய்ய வேண்டும். இருப்பினும், இதில் முழு முற்றாக அகற்ற முடியாது. ஓரளவுக்கு காலத்திற்கும் முடி முளைத்துக் கொண்டுதான் இருக்கும். அதைச் சவரம் செய்வதன் மூலம் தான் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கும்,” என்று கூறுகிறார். மாணவர் லலித் நிலைமையைப் பொறுத்தவரை, தற்போது ரத்லாம் மருத்துவக் கல்லூரி சார்பாக இலவச சிகிச்சையளிக்க முன்வந்துள்ளனர். ரத்லாம் மருத்துவக் கல்லூரியின் டீன் ஜிதேந்திர குப்தா, “அவர்களுடைய குடும்பம் விரும்பினால், இலவச சிகிச்சையளிக்க நாங்கள் தயார்,” எனத் தெரிவித்துள்ளார். மேலும், “எங்களிடம் அனைத்து வகை மருத்துவ வசதிகளும் உள்ளன. அனுபவம் வாய்ந்த சரும நோய்த்துறை, அறுவை சிகிச்சை நிபுணர்கள், குழந்தைகள் மருத்துவத் துறை என்று அனைத்தும் உள்ளன. இந்த சிகிச்சையை முடிந்தளவுக்கு 15 நாட்களுக்குள் முடிப்பதற்கு முயற்சி செய்வோம்,” என்று கூறியுள்ளார். இந்த அரிய நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் லலித்தை உள்ளூர் மக்கள் பார்த்துப் பழகியிருந்தாலும், வெளியாட்கள் அவரைக் கண்டதும் அதிர்ச்சியடைவதாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். இத்தனை சவால்களுக்கு இடையிலும் லலித் தனது கனவுகளைக் கைவிடவில்லை. அவருக்கு எலக்ட்ரானிக்ஸ், கணினி ஆகியவை மிகவும் பிடிக்கும். தான் ஒரு யூட்யூபர் ஆக வேண்டும் என்று அவர் கனவு காண்கிறார். https://www.bbc.com/tamil/articles/cp0d912l88qo
  • "வலுவிழக்கும் உலக ஒற்றை அதிகார அரசியல் சூழலும் " இங்கே(யாழ் களத்தில் ) பலருடைய வாதங்களை இந்த வரிகள் வலுவிழக்கச் செய்துவிட்டன.  அவர்கள் உருத்திரகுமாரனை தனிப்பட்ட ரீதியில்  திட்டித் தீர்த்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.  உருத்திரா சுயமாகச் செயற்படும் நிலையில் இல்லை. அவரைச் சுற்றியுள்ள ஓசிலரின் கட்டுப்பாட்டில் அவர் இயங்குகிறார். அவர்களோ வேறு நலன்களின் அடிப்படையில் இயங்குகிறார்கள். 
  • யுத்தத்தில் உயிரிழந்தவர்களை தமிழர்கள் வீடுகளுக்குள் இருந்தவாறு நினைவு கூரலாம் - சரத் வீரசேகர By VISHNU 29 NOV, 2022 | 04:36 PM (இராஜதுரை ஹஷான், எம்.ஆர்.எம்.வசீம்) நாட்டில் சிங்கள இனம் பாதுகாக்கப்பட்டால் மாத்திரமே புத்த சாசனம் பாதுகாக்கப்படும். புத்தசாசனம் பாதுகாக்கப்பட்டால் மாத்திரமே தேரவாத பௌத்த நாடான இலங்கை பாதுகாக்கப்படும். யுத்தத்தில் உயிரிழந்தவர்களை தமிழர்கள் தமது வீடுகளுக்குள் இருந்தவாறு நினைவு கூர்ந்துக் கொள்ளலாம் என பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.  பாராளுமன்றத்தில் இன்று (29) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுகாதாரத்துறை மற்றும் புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள், கலாசார அலுவல்கள் அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, நாட்டில் பௌத்த மத உரிமைகள் மற்றும் பௌத்த மரபுரிமைகள் அச்சுறுத்தலுக்குள்ளான நிலையில் உள்ளன. இலங்கையில் 72 சதவீதம் பௌத்தர்களும், 12 சதவீதம் இந்துக்களும், 9.7 சதவீதம் இஸ்லாமியர்களும், 6.3 சதவீதம் கத்தோலிக்கர்களும் வாழ்கிறார்கள். இலங்கை தேரவாத பௌத்த நாடு அரசியலமைப்பின் 9ஆவது உறுப்புரையின் பிரகாரம் பௌத்த மதம் பாதுகாக்கப்பட்டு, போசிக்கப்படவேண்டும் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையை பாதுகாக்கும் வகையில் பௌத்த சாசனம் அமுல்படுத்தப்பட்டது, ஆகவே பௌத்த சாசனம் பாதுகாக்கப்பட் டால் தான் நாடு பாதுகாப்பாக இருக்கும் பௌத்த விகாரைகள், தேரர்கள் மற்றும் பௌத்த மரபுரிமைகள் தான் பௌத்த சாசனம். சிங்கள இனத்தவர்கள் தான் பௌத்த சாசனத்தை தோற்றுவித்தார்கள், ஆகவே புத்தசாசனத்தை பாதுகாக்க வேண்டும் என்றால் சிங்கள இனம் பாதுகாக்கப்பட வேண்டும். ஆரம்ப காலத்தில் சிங்களே என அழைக்கப்பட்ட இலங்கை காலப்போக்கில் ஸ்ரீ லங்கா என எவ்வாறு அழைக்கப்பட்டது என்பதை அறியவில்லை. இலங்கையை வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்களில் இருந்துபாதுகாக்க சிங்களவர்கள் தான் முன்னின்று போராடினார்கள். புத்தசாசனம் பாதுகாக்கப்பட வேண்டுமானால் நாட்டின் ஒருமைப்பாடு உறுதியாக பேணப்பட வேண்டும். சமஷ்டியாட்சி முறைமையின் கீழ் நாட்டை பிளவுப்படுத்தினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் புத்தசாசனம் பற்றி குறிப்பிட வேண்டிய தேவையில்லை. தற்போதும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் புத்தசாசனத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது. வடக்கு மாகாணத்தில் இருந்து சிங்களவர்களும்,முஸ்லிம்களையும் பிரபாகரன் மாத்திரம் வெளியேற்றவில்லை. பிரிவினைவாத தமிழ் அரசியல்வாதிகளும் அவ்வாறே செயற்பட்டார்கள்.பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஷ்வரன் கொழும்பில் சிங்களவர்களுடன் ஒன்றாக வாழ்ந்து விட்டு வடக்கு மாகாணத்திற்கு சென்று குறிப்பிடுகிறார். வடக்கில் சிங்களவர்களுக்கு இடமில்லை என்று,இதுவெறுக்கத்தக்கதாகும்.வடக்கில் புத்த சிலையை நிர்மாணிக்கும் போது அதற்கு எதிராக இவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டார்கள்,இவ்வாறானவர்களிடம் நல்லிணக்கத்தை எவ்வாறு எதிர்பார்ப்பது. வடக்கில் யுத்தம் தீவிரமடைந்த சந்தர்ப்பத்தில்  கொழும்பில் உள்ள கோயில்களில் தேர் வீதி வலம் வந்தது. சிங்களவர்களும் அதில் கலந்துக் கொண்டார்கள். அதுவே சிங்கள இனத்தின் பொறுமையாகும். ஆனால் வடக்கு மாகாணத்தில் புத்தசாசனத்திற்கு எதிராக தமிழ் அரசியல்வாதிகள் செயற்படுகிறார்கள். குருந்தூர் மலையில் பௌத்த விகாரைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தொடர்ந்து தடையேற்படுத்தவதையிட்டு ஒட்டுமொத்ததமிழர்களும் வெட்கப்பட வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் நிகழ்வு இடம்பெற்றது. போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை அவர்களின் உறவுகள் வீடுகளுக்குள் வைத்து நினைவு கூர்ந்துக் கொள்ளலாம். விடுதலை புலிகள் 3 இலட்சம் தமிழர்களை பகடை காயாக வைத்து போர் செய்தார்கள். இராணுவத்திதை நோக்கி தமிழர்கள் வரும் போது அவர்களை சுட்டு வீழ்த்தினார்கள். இராணுவத்தை நோக்கி 12 வயது சிறுவனன் வரும் போது அந்த சிறுவனை பிடித்து கால்களை வெட்டினார்கள். விடுதலை புலிகள் அமைப்பினர் மனித உரிமைகளுக்கு எதிராகவே செயற்பட்டார்கள். இவ்வாறானவர்களையா தாம் நினைவு கூறுகிறோம் என்பதை தமிழர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். விடுதலை புலிகள் அமைப்பினர் நெருக்கடி செய்தார்களா அல்லது இராணுவத்தினர் நெருக்கடி செய்தார்களா என்பதை தமிழ் இளைஞர்கள் தமது பெற்றோரிடம் உண்மைகளை கேட்டறிந்துக் கொள்ள வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/141654
  • இணையம் ஊடாக பணம் மோசடி : 8 பேர் கைது ! By DIGITAL DESK 5 29 NOV, 2022 | 04:19 PM இணையம் ஊடாக பணம் மோசடி செய்தமை தொடர்பில் 8  பேர் நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  13,765,000 ரூபாவை  மோசடி செய்தமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்படி கடந்த  26ஆம் திகதி நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாதுவ, பிலியந்தலை, பண்டாரவளை மற்றும் காலி ஆகிய இடங்களில் இடம்பெற்ற பண மோசடி  சம்பவங்களுடன்  தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் காலி, வெலிகம, ரத்கம, வாதுவ மற்றும் பட்டியகெதர ஆகிய பிரதேசங்களை வசிப்பிடமாகக் கொண்ட 22 மற்றும் 36 வயதுக்கு இடைப்பட்டவர்கள். சந்தேகநபர்கள் கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது நாளை (30) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/141644
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.