Jump to content

இராவணத் தீவு – பயணத் தொடர்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

இராவணத் தீவு – பயணத் தொடர்

Raveena-theevu-01.jpg

“Travel opens your heart

Broaden your mind

And fills your life with

Stories to tell ” 

– Paula  Bendfeldt

Paula Bendfeldt இன் இந்த வரிகள் எவ்வளவு உண்மையானவை. தனக்குள்ளாகவும், வெளியேயும் பயணப்பட்டுக் கொண்டே இருக்கின்ற மனிதன் வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொண்டே இருக்கின்றான். மறுபுறம் மனதளவில் இளமையாகவே இருக்கின்றான் என தோன்றுவதுண்டு. பயணம் செய்கின்ற மனிதனின் உலகம் விரிவடைகின்றது. பயணம் செய்கின்ற மனிதனின் வானம் விசாலப்படுகின்றது. அவனது கால்கள் அவனுக்கு புதிய  நம்பிக்கைகளைத் தருகிறது. புதிய பாதைகளைக் காட்டுகின்றது. தனக்குள்ளாகவும், வெளியேயும் பயணித்துக்கொண்டே இருக்கின்ற மனிதனுக்கு வாழ்க்கை அதன் மர்ம முடிச்சுகளை ஒவ்வொன்றாய் அவிழ்க்கத்துவங்குகின்றது.

Paolo Coelho சொல்வதுப்படி “Travel is never a matter of money but courage ” . பணம் வேண்டுமானால் ஒரு குறிப்பிட்ட இடத்தை நோக்கி கொண்டுபோய் சேர்க்கலாம். ஆனால் பயணத்தை நேசிக்கின்ற மனம் இருந்தால் மட்டுமே மேற்கொண்டு பயணப்பட முடியும் என்று நினைக்கின்றேன். ஒரு பயணியால் கடைசி வரை சுற்றுலாப்பயணி  போல நடந்துகொள்ளவே முடியாது. பயணம் என்பது ஒரு தொடர்ச்சி.  ஒன்றின் முடிவிலிருந்து இன்னொன்று ஆரம்பிக்கின்றது.

தீவுகளுக்கென்று ஒரு தனித்த வனப்பு இருக்கின்றது. தீவுகளுக்கென்று ஒரு தனித்த காலநிலையிருக்கின்றது. தீவுகளுக்கென்று சில தனித்துவமான உயிரிகள் இருக்கின்றன. இலங்கை வெறுமனே 65610 சதுர கிலோமீட்டரைக் கொண்ட ஒரு தீவு.  இந்த தீவில் பார்ப்பதற்கும், கேட்பதற்கும், உங்களை மறந்து நடந்து செல்வதற்குமென்று எவ்வளவோ இடங்கள் இருக்கின்றன. கடலும், மலைகளும், நதிகளும், நீர்வீழ்ச்சிகளும், புத்தமடாலயங்களும், கோவில்களும், வரலாற்றிடங்களும் நிரம்பிய இலங்கை தீவு நிச்சயமாக உங்களைப் பிரமிப்பில் ஆழ்த்தும். கொஞ்சம் அமைதியினை தரும். இதுவரை நீங்கள் சந்தித்த மனிதர்களிடம் இருந்தும், காலநிலையிலிருந்தும் வேறுபட்ட உணர்வைத் தரக்கூடும். வழியில் உங்களைக் கொஞ்சம் நிறுத்தி, எங்கோ பார்த்த,  கேட்ட பிரம்மையை ஒவ்வொரு வரலாற்றுக் கட்டிடங்களும் ஏற்படுத்தும். ஒரு குறுகிய காலத்தில் ஒட்டுமொத்த இலங்கையைச் சுற்றிப்பார்க்கக் கூடியதாக இருக்கும். ஏனெனில் இலங்கையென்பது பரப்பளவில் சிறிய ஒரு குட்டித்தீவு.

உலகின் பல்வேறுபட்ட பகுதியில் உள்ள மனிதர்களும் இந்த சிறிய தீவைத் தேடி வருகின்ற அளவு இலங்கை தீவு வரலாறு முழுவதும் தனித்துவமாக இருந்திருக்கிறது. கிழக்கு திசையின் முத்து, கிழக்கு திசையின் தானிய சாலை என சொல்லுமளவு தன்னிறைவான நாடாக, அது இருந்திருக்கிறது. சீனர்களினால் இரத்தினங்களின் தீவு, கிரேக்கர்களினால் ரெப்ரொபோன், போர்த்துகேயர்களால் சய்லான், சியம் இனத்தவர்களினால் கிழக்கு திசையின் சுவர்க்கம், ஆங்கிலேயர்களினால் சிலோன் எனத் தனித்துவமாகப் பெயரிட்டு  அழைக்குமளவு இலங்கைத்தீவு தனித்துவமுடையதாக இருந்திருக்கின்றது.


sri-lanka-map-211x300.jpg

இந்தியப் பயணங்களில் இருந்தபோது தான் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் அதன் வரலாற்றுப் பாரம்பரியங்களுக்கும் இடையே ஒரு நீண்ட தொடர்பு இருப்பதை உணர்ந்தேன். இந்தியாவில் இருந்து வருகிறவர்கள் அதன் தொடர்ச்சியாகப் பார்ப்பதற்கென்று பல இடங்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு புராணக் கதையொன்றின் படி விஷ்வகர்மா என்கிற பிரபஞ்சத்தின் முதன்மையான கட்டிடக் கலைஞரினால் வடிவமைக்கப்பட்ட தங்க தேசமே இலங்கை எனப்படுகிறது. அஜந்தா குகைகளில் விஷ்வகர்மாவிற்கு என தனியே ஒரு குகை இருக்கிறது. கல்கத்தாவில் விஷ்வகர்மா பூஜையைச் சிறப்பாகக் கொண்டாடுவதைப் பார்த்திருக்கின்றேன்.

வெறும் நம்பிக்கை சார்ந்த கதைகள், கதாபாத்திரங்கள் என்பதைத் தாண்டி புராண இதிகாசங்களில் சொல்லப்படுகிற சில இடங்களும், நினைவுகளும் இந்தியா இலங்கை முழுவதும் நிரம்பியிருக்கின்றன. இந்த தீவைப் பொறுத்தவரை இராவணனுக்கு என்று ஒரு கதையிருக்கிறது, இயக்கர், நாகர்களுக்கு என்று ஒரு கதையிருக்கிறது, விஜயனுக்கென்றும், சோழர்களுக்கென்றும்,  போர்த்துக்கேயர்களுக்கென்றும், ஒல்லாந்தர்களுக்கென்றும், ஆங்கிலேயர்களுக்கென்றும் ஒரு நீண்ட வரலாறு இருக்கிறது. இலங்கை தீவு  எத்தனையோ, போரினையும், அழிவினையும் பார்த்திருந்தாலும் இயற்கை அதை மீண்டும் மீண்டும் மீளுருவாக்கம் செய்துகொண்டேயிருக்கின்றது. பிரமாண்டமான இந்த இயற்கைக்கு முன்னால் மனிதன் எப்போதும் எதுவுமற்று போகின்றான்.

இந்த இராவண தேசத்தில் நிச்சயமாக பார்க்கவேண்டும் என்று நினைக்கின்ற இடங்களை ஒருதொடராக எழுதலாம் என்றிருக்கின்றேன். தொடர்ந்து வாசியுங்கள். இராவண தேசம் நோக்கிவாருங்கள்.


-நர்மி

ஆசிரியர் குறிப்பு:

நர்மி: இலங்கையிலுள்ள கண்டி நகரில் வசித்து வருகின்றார். இவர் பனிப்பூ என்ற கவிதைத் தொகுப்பையும் , கல்கத்தா நாட்கள்  என்ற பயண நூலையும் எழுதியுள்ளார். இவ்விரு நூல்களும் உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

 

http://kanali.in/raveena-theevu-01/

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இராவணத் தீவு – பயணத் தொடர் 1

Raveena-theevu-001.jpg

ஆதாம் மலை

ஒரு சிறு பூவை

 நீ அசைத்தால்

 ஒரு நட்சத்திரம் 

 அணைந்து போகலாம்

  என்றான் பிரான்சிஸ் தொம்ஸன். ஒரு நாளில் ஆயிரக் கணக்கில் சிவனொளிபாதமலையைநோக்கி வருகின்ற பட்டாம்பூச்சிகளின் சிறு அசைவு, அந்த இரவு முழுவதும் பரவி இருந்தநட்சத்திரங்களை வீழ்த்திவிடுமோ என்றிருந்தது.

மலையை நோக்கி நடப்பது ஆதித்தாயின் குடிலை நோக்கிய பயணம் போல மனதிற்கு அருகில்மிக நெருக்கமாக இருக்கிறது எப்போதும். நீண்ட பயணங்களை இரவிலும், அதிகாலையிலும்கடந்து முடிப்பதையே நான் விரும்புகிறேன். இந்தப் பயணம் கூட அப்படித்தான். இரவு முழுவதும்நீண்டுக்கொண்டே போய்க்கொண்டிருந்த இரவுப்பயணம் அது.

பட்டாம்பூச்சிகள் போல வாழத்தொடங்கிவிட்டால் அல்லது வாழ்வை பார்க்கத்தொடங்கிவிட்டால்இந்த வாழ்வு எப்படியெல்லாம் நேசிக்கத்தக்கதாக மாறிவிடும் என்று நினைத்துப்பார்க்கிறேன். வாழ்வின் மீதான பார்வை பெரும் சுமையாக மாறிவிடுகிற நொடிகளில் எல்லாம், பறவைகளையும், பட்டாம்பூச்சிகளையும் பார்ப்பேன். இரவீந்ரநாத் தாகூர்  சொல்வதைப்போல 

The butterfly  counts not 

Months but moments and

Has time enough

நாங்கள் ஏன் எங்களுடைய மகிழ்ச்சிகளை எண்ணத்தொடங்குவது இல்லை…?  நான்எண்ணத்தொடங்கிவிட்டேன். இனி நீங்களும் கூட எண்ணவேண்டும் என்று விரும்புகின்றேன். என் வாழ்வில் இயற்கைக்கு அருகில் மிக மிக மகிழ்ச்சியாக இருந்த ஆதாம் மலையைப்பற்றிசொல்லப்போகின்றேன்

1-1024x682.pngநீண்டுகொண்டே போகின்ற மலைத்தொடர் ஒன்றினை நான் முதன் முதல் பார்க்கின்றேன்  மனதும், உடலும் பின்னோக்கித்தள்ள நண்பர்களின் கைகளைக் கோர்த்தப்படி அந்தமலையேற்றம் இருந்தது. நிர்மலமான இரவு வானில் பலகோடி நட்சத்திரங்கள் மின்னுகின்றவிசாலமான அந்த நட்சத்திர அடவியின் கீழ்  வரிசையாக அந்த நட்சத்திரங்கள் சிதறி விழுந்து  பாதையமைத்ததை போன்று நீண்டு செல்லும்  உச்சிமலையினை நோக்கி பல்லாயிரக் கணக்கானமக்களுடன் நாங்களும் பின்தொடர்ந்துகொண்டிருந்தோம். கூட்டம் கூட்டமாக ஒருவரை ஒருவர்உற்சாகப்படுத்தியப்படி போய்க்கொண்டிருந்தார்கள். ஆனால் பிரச்சனை என்னவென்றால்அம்மலை முன்னோக்கி நகர நகர ஒரு படி வளர்ந்துகொண்டு போவது போல எனக்குதோன்றியது

இலங்கையில் சப்பிரகமுவா, மத்திய மாகாணங்களுக்கு இடையில் கடல் மட்டத்தில் இருந்து7,359 அடி உயரமான கூம்பு வடிவிலான மலையே சிவனொளிபாதமலை என்று அழைக்கப்படுகிறஆதாம் மலையாகும். இயற்கையை கடந்து அங்கு மதம் முன்னிலைப்படுத்த காரணமாக இருப்பதுஅந்த சர்ச்சைக்குரிய 1.8 அளவான பாறை அமைப்பே. அது இலங்கையில் உள்ள நான்குமதத்தவர்களாலும் அவரவர்க்கு உரிமையுடையது என கொண்டாட காரணமாகியது

இதையெல்லாம் பார்க்கும் போது இயற்கை என்கின்ற பெரிய பிரமாண்டத்தின் முன் கூடசிறுமைகளை செய்வதை மனிதன் நிறுத்துவதேயில்லை என தோன்றியது.

இயற்கையின் பிரமாண்டத்தை அப்படியே உள்வாங்க முடியாத குறைபாடு ஒன்று அவனிடம்இருக்கின்றது. ஒப்புமையற்ற அந்த இயற்கையின் முன் சிறுமையான ஏதோவொன்றைமனமுவந்து செய்கின்றான் என்பது தான் எனக்கு விசித்திரமாக இருந்தது. இயற்கையைஇயற்கையாக கொண்டாடி தீர்க்க முடியாத ஏதோவொரு மனக்குறை அவனுக்குள்இருந்துக்கொண்டேயிருக்கிறது. அதனால் தான் உலக மனிதருக்கு எல்லாம் பொதுவானஇயற்கைக்கு முன் ஏதோ சில கட்டிடங்களை கட்டி நிரூபிக்க முயற்சிக்கின்றான். எந்தவொருஇயற்கையின் இரம்மியத்திற்குள்ளும் இலங்கை முழுவதும் வலுக்கட்டாயமாகவந்தமர்ந்துகொள்கின்ற விகாரைகள், புத்தரின் பிரதிமைகள், அரசமரம், பாத அச்சுகள் ஏதோசெயற்கையின் அபத்த குறியீடாக எனக்கு தோன்றுகின்றது மலை ஏற ஏற சிறிது சிறிதாக அதன்கீழேயுள்ள இந்திரக்கடவுளின் காடு எனப்படுகிற சமன் அடவிய இருள் சூழத்தொடங்கியது. மலையை நோக்கி உயரே செல்ல செல்ல குளிர் உடல் முழுவதும் பரவ ஆரம்பித்துவிட்டது.

உடலை நடுங்கச்செய்கின்ற குளிர் அது. நீங்கள் முற்று முழுவதும் சமயவாதியென்றால் இங்குஉங்களுக்கு செய்ய நிறைய ஐதீகங்கள் இருக்கின்றன கோயில்  விகாரை  ஊசி மலை , அருவி காணிக்கை என சில மதம் சார்ந்த நம்பிக்கைகள் இருக்கின்றன. இல்லை நீங்கள்வாழ்வின் நொடியை கொண்டாடுகிற, இயற்கையை கொண்டாடுகிற மனிதர் எனில் இந்தஆதாம் மலை உங்களை வசியப்படுத்திவிடும். ஆதாம் மலையில் இருந்து ஊற்றெடுக்கின்றமகாவலி கங்கை, களுகங்கை , களனி கங்கை, பச்சை பசேலென சிறியதும், பெரியதுமாகஇருக்கின்ற மலைக்குன்றுகள், இயற்கையான காடுகள் என அது இயற்கையின் சாம்பிராஜ்யம்போல இருந்தது.

உயரமான மலையுச்சியை நோக்கி போகின்ற ஒவ்வொரு தடவையும் வாழ்வை முன்பை விடநேசிக்க தொடங்குகிறேன். மலையுச்சிகளின் காட்சிகள் வசீகரிக்கக்கூடியவை . அங்குஇயற்கையின் வர்ணகோலங்களை பார்க்க முடியும். பச்சை நிறத்தில் மட்டும் எத்தனை விதமானபச்சை நிறங்கள் …? வெண்மையான முகில்களில் மட்டும் எத்தனை அழகான உருவகோலங்கள் பனிமூட்டம் நிரம்பிய மலைத்தொடர்கள் சூரியன் உதித்துவிட்ட பிறகு பரவுகின்றபொன்னிறம், இந்த நிறங்களில் ஒன்றை  அதே சாயலில் மனிதனால் உருவாக்க முடியுமாஎன்றிருந்தது. அத்தோடு  அந்த மலைதேசம் முழுவதும் பறந்து திரிகின்ற காட்டுப்பறவைகள், நீண்ட நாளைக்கு பிறகு கூட்டம் கூட்டமாக பார்த்த மின்மினிப்பூச்சிகள், பட்டாம்பூச்சிகள், ஏதோசொல்லமுடியாத அமைதிக்கு இட்டுச்சென்றன. நடப்பதைப்போல பறப்பதுவும் இந்த உடலைசோர்வடையச்செய்யாதா…? என்றிருந்தது

மண்ணில் வெறும் சொற்ப நாட்கள் மட்டும் வாழ்கிற பட்டாம்பூச்சியின் வசீகரமான வாழ்வைபார்க்கிறேன். தான் வாழ்கிற குறுகிய காலத்தில் வழிநெடுக அழகிய மலர்களைதேடிப்போகின்றது. தேனை தேடித்தேடி ஆசை தீர பருகுகிறது. காற்றின் அசைவில் வானுக்கும்பூமிக்கும் அழகிய படபடப்புடன் பறந்துகொண்டே இருக்கின்றன. வாழ்வின் இரகசியத்தையும்வாழ்வதற்கான இரகசியத்தையும் எவ்வளவு எளிமையாக காட்டுகின்ற வாழ்க்கை அவற்றுக்கு.

இதற்காக மட்டும்தான் இந்த மலையினை கொண்டாடி தீர்க்கின்றேன் என தோன்றக்கூடும். அதுஅப்படியில்லை. எனக்கு இந்த மலையில்  கிடைத்த அனுபவத்தை என் பயணங்கள் எதிலும் நான்உணர்ந்ததில்லை. இயற்கையோடு இயற்கையாக மிக மிக அருகில் நான் என்னை உணர்ந்ததருணம் அது.

இந்த உயரமான மழையுச்சி ஆதித்தாயின் தனித்த முலையின் நுனிக்காம்பு போல எனக்குதோன்றியது. இனியெழுதப்போகிற பயணக்குறிப்புகளில் மேலும் கூட இதனைப்பற்றி நான்எழுதக்கூடும். மறைகிற சூரியனை கங்கையிலும், ஹவுராவிலும் கண்கொட்டாதுபார்த்துக்கொண்டே இருந்திருக்கின்றேன். எல்லோராவில் கைலாசநாதர் கோவில் கோபுரத்தின்மேலே அந்த பாறையுச்சியில் அமர்ந்தபடி பார்த்துக்கொண்டு இருந்திருக்கின்றேன் ஒரிசாவில்சூரியக்கோவிலில் இருந்தபடி வங்க கடலோரம் சூரியன் மறைவதை பார்த்திருக்கின்றேன் மறைகிற அந்த கதிர்கள் உடல் முழுவதும் பரவுகிற பொழுதுகளில் வசப்படுத்தக்கூடியஏதோவொன்று எனக்குள் நிகழ்ந்தது. இத்தனை அழகிய அஸ்த்தமனங்களை நான் பார்த்திருந்தேன். ஆனால் ஆதாம் மலையில் பார்த்த அந்த பிரமாண்ட சூரிய உதயத்தின் பின்னர் எந்தவொரு சூரியஉதயத்தையும் பார்க்க முயற்சித்ததில்லை. அப்படியொரு பரிபூரண தரிசனம் அது. அதைப்பற்றி சற்றுகூட விபரிக்க நினைக்கின்றேன். வாழ்வின் உன்னத தருணங்களைஎல்லாம் மொழிபெயர்க்க முடியாத குறை எனக்குள் இருக்கிறது.

2.jpgமுதன் முதலில் பிரம்மாண்ட சூரியனின் முன் நின்றபோது மனிதர்கள் பிரமாண்டமானவானக்கூரையின் கீழ் கொஞ்சம் கூட பொருத்தமில்லாது கட்டிக்கொள்கின்ற வீட்டுக்கூரைகள்எவ்வளவு பெரிய அபத்தத்தின் குறியீடு என என் மனம் சிந்தித்து கொண்டிருந்தது. யாருக்காகவும்எந்தவித மாறுதலுமற்று இந்த பூமியின் வசீகரத்தை கூட்டுகிற இந்த நட்சத்திரங்கள், சூரியன், நிலவு, வானவில் என்பவற்றை உண்மையில் நாம் இரசிக்கின்றோமா என்று இருந்தது

உலகில் முதன் முறை இயற்கைக்கு மிக அருகில் இருந்தேன். என்னுலகில் இருந்தவர்கள்எல்லோரும் பொன்னிறமான அழகினை கொண்டிருந்தார்கள். திடீரென அந்த மாயம் நிகழ்ந்தது. நிர்மலமான அந்த பரந்த ஆகாயத்தில் திடீரென ஒரு பொன்னிற புள்ளி, பின்னர் சிறிது சிறிதாகஅது மாபெரும் பெரிய பொன்னிறமான துவாரமாக மாறி, அந்த பொன்னிறமான உலகுக்குஅழைத்து செல்வது போன்று எனக்கு தோன்றியது. ஏற்கனவே குறிப்பிட்டுருக்கின்றேன், இதுவரை என் வாழ்வில் உன்னதமான சூரிய அஸ்த்தமனங்களை பார்த்துக்கொண்டேஇருக்கிறேன். ஆனால் சூரிய உதயம் என்றால் இன்று வரை இந்த ஆதாம் மலையில் இருந்துபார்த்த சூரிய உதயம்தான்.

எவ்வளவு வருந்தி உங்கள் பாதங்களை அந்த ஆதித்தாயின் நிலத்தில் பதித்து சென்றீர்களோஅந்தத் துயர் கணப்பொழுதில் காணாமல் போயிருக்கும். அங்கிருந்து பார்க்கும் போது எனக்குபுரிந்தது  மனிதர்கள் ஏன் ஆதியில் இந்த சூரியனை கடவுளாக கொண்டாடித் தீர்த்தார்கள்என்று. அந்த ஒளிக்கதிர்கள் தீண்டுகின்ற இடம் எல்லாம் தேஜஸ்மயமாக மாறிவிட்டது. சூரியன்ஒளி பட்டு வருகிற அழகுக்கு பெயர் தேஜஸ் என்று சொல்வது தான் சரியாக இருக்கும் என்றுநினைக்கின்றேன்.

3.jpgஅந்த மாபெரும் சூரியனை நோக்கி அந்த கதிர்கள் என்னை உள்நோக்கி அழைத்து சென்றபோது, எப்போதோ என் மனதில் ஆழமாக வேரூன்றிப்போயிருந்த உபநிஷத மந்திரம் ஒன்று என்ஆழ்மனதில் இருந்து என்னையறியாமலே நினைவுக்கு வந்தது. இயற்கைக்கு மிக மிக அருகில்இருக்கிறேன். அதன் உன்னதங்களை உணரும் தருணம் தோறும் மனம் உருகி கரைந்தொழுகசிறு பிரார்த்தனையை தவிர பதிலீடாக என்ன கொடுத்துவிட முடியும் என்று தோன்றியது.

அந்த ப்ருஹதாரண்ய உபநிஷத மந்திரம் இப்படி ஆரம்பிக்கும்.

அஸதோ மா ஸத்கமய
தமஸோ மா ஜ்யோதிர் கமய
ம்ருத்யோர் மா அமிர்தம் கமய
ஓம் சாந்தி : சாந்தி ; சாந்தி

-ஓ பகவானே எங்களை அசத்தியத்தில் இருந்து சத்தியத்திற்கும்
இருளில் இருந்து ஒளிக்கும்
இறப்பில் இருந்து அழிவற்ற நிலைக்கும் அழைத்து செல்வாயாக…….  

ஆம் அந்த சூரியனிடம் நான் மனமுருகி கேட்டது இதை தான்…..

தொடரும்..


-நர்மி

 

http://kanali.in/raveena-theevu-02/

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அழகான தொடர்......தொடருங்கள்.....நர்மியின் எழுத்து மனசை நெகிழ வைக்கின்றது....!   🌹

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இராவணத் தீவு – பயணத் தொடர் 2

Raveena-theevu-3.jpg

புத்தன் கோவில் 

இந்த தீவுக்கு வருகின்ற யாரும் கண்டி நகரிற்கு வராமல், அவர்கள் பயணங்கள் முடிவடைவதில்லை. அந்த நகரத்தின் வசீகரிக்கக்கூடிய அழகு அத்தகையது. கண்டியில் அமைந்துள்ள புனித தந்ததாது கோவிலைப்பற்றி சொல்வதற்கு முன்னர், இந்த அழகிய நகர் பற்றி சிறிது சொல்லியாக வேண்டும். கண்டியென்பது இலங்கையின் மாபெரும் பழமைவாய்ந்த இராச்சியத்தின் தலைநகர். எந்தவொரு இயற்கை சார்ந்த இடங்களையும், பழமையான இடங்களையும் பார்வையிட காலையும் மாலையும் சிறந்த பொழுதாக இருக்கும்.  கண்டி நகர்கூட அப்படித்தான்.

மாலை ஐந்து மணியளவில் எல்லாம்  வெறும் ஆயிரக் கணக்கான பறவைகளின் ஒலியின் கீச்சிடலுடன் அந்த நகர் இயங்கத்தொடங்கும்.  பருவ காலத்திற்கு வருகின்ற அயல்தேச பறவைகள் தெப்பக் குளத்து வளாகத்தில் சுற்றிக்கொண்டிருக்கும். புத்தன் கோவிலை நோக்கி காவி உடை தரித்த  துறவிகளும், வெண்ணிற உடையணிந்த பௌத்த மத யாத்ரீகர்களும் விரைந்து கொண்டிருப்பார்கள். எப்போதும் ஆர்ப்பாட்டமில்லாத வெளிநாட்டு பயணிகள் இந்த நகர் முழுவதும் நடமாடிக்கொண்டு இருப்பார்கள். இப்படித்தான் அந்த நகர் இருக்கும். ஒவ்வொரு நகருக்கும் ஒவ்வொரு சாயல் கண்டிக்கு பசுமை நிறைந்த சாயல்.

1.jpgஒரு நகரத்திற்கு உயிர் இருக்கின்றது என்று சொன்னால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? ஏனோ எனக்கு அப்படியெல்லாம் சொல்ல தோன்றுகிறது. உயிர்ப்பான ஒரு நகரம் நீங்கள் நடக்கும்போது ஒரு பயணத்தோழன் போல கூடவே வரும். நின்று இளைப்பாறுகின்ற இடங்களில் எல்லாம் உள்ள கட்டிடங்கள் உங்களுடன் பேசக்கூடும். பிறந்ததும் ஓடியலைந்ததும் எங்கெங்கோ என்று இருந்தாலும் , கிட்டத்தட்ட பதினெட்டு வருடங்கள் நான் கண்டி நகரத்தில் வாழ்கிறேன் என்பது இனம்புரியாத ஒரு மகிழ்ச்சியை தருகிறது. ஒரு நகரத்தை நேசிக்க தொடங்கிவிட்டால், அங்கு உங்களுக்கு தெரிந்த தெரியாத என்ற எந்த மனிதரும் தேவையில்லை. உங்களுக்கென யாருமே இல்லாத போதுக்கூட அந்த நகரம் எப்போதும் உங்களை வரவேற்க காத்திருக்கும்.

இனம்புரியாத அமைதியும், அழகும் நிறைந்த புனித தந்ததாது கோவிலுக்கு நீங்கள் ஒரு தடவையேனும் வரவேண்டும் என விரும்புகின்றேன். பௌத்தம் ஒரு மதம் என்பதை தாண்டி அது உண்மையில் ஒரு மெய்யியல். வாழ்வின் நிலையாமையை ஏற்று எஞ்சியிருக்கிற நாட்களை எப்படி வாழ்வது என்பது பற்றியதாக நான் நினைத்துக்கொள்கிறேன். தலதா மாளிகையின் வாயில் பாதைகள் நெடுக அல்லி,  தாமரை,  நீலோற்பவர் , பவளமல்லிகை, மல்லிகை, நித்திய கல்யாணி, அரலி மலர் என புத்தபகவானுக்கு பௌத்தர்கள் விரும்பி எடுத்து செல்கிற பூக்கடைகள் நிறைந்த தெருக்கள் அது. புதிதாக பூக்கடைகளிற்கு கொண்டுவரப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள பூக்களில் தேன்களை குடிக்க சுற்றிகொண்டிருக்கும் தேனீக்கள், விளக்கு ஊதுவத்தி கடைகள், என அந்த பகுதி நிறைந்திருக்கும்.

புத்தமத மடாலயங்களில் கேளிக்கைகள், களியாட்டங்களில்லை.  ஊதுபத்தி, மண்சிட்டியில் ஊற்றப்பட்டு எரிந்துகொண்டிருக்கின்ற விளக்கினதும், புத்தபகவானின் பிரதிமைகளுக்கு முன் பரப்பிவைக்கப்பட்டு இருந்த மலர்களின் மென்மையான ஆரோமா காற்றில் கலந்து  நாசியை வந்தடைகிறபோது ஏதோவொரு சொல்லமுடியாத ஒரு அமைதி, நிம்மதி கிடைத்துவிடுவதான உணர்வு . எல்லாமே நம் நினைத்துக்கொள்கிற மனநிலைதானே, அதை கடந்து வேறென்ன? பௌத்த மடாலயத்தில் வழிப்பாடு, பூஜை என்பவற்றை தாண்டி கொஞ்சம் அமைதியாக அமர்ந்து நமக்குள் மூழ்குவதற்கான ஒரு வெளியிருக்கும்.

2.jpgஉண்மையில் நமது மனம் உயர்ந்தோ, தாழ்ந்தோ இருக்கின்ற நேரத்தில் நம்மை வைத்துக்கொள்கிற வெளிதான் நமக்கு தேவையானதாக இருக்கின்றது. தலதாமாளிகை வளாகம் என்பது மனதிற்கு நிம்மதியை தரக்கூடிய ஒரு வெளி. பூரணை தினத்தில் வானில் நிறைந்திருக்கின்ற முழுநிலவின் ஒளியுடன், கூட்டம் கூட்டமாக அமர்ந்து பிரார்த்தனை,  தியானம் அல்லது மதபோதனை கேட்டுக்கொண்டு இருக்கின்ற  பௌத்தர்கள் நிறைந்த மடாலய வளாகங்கள் அழகாக இருக்கும். யாரும் யாரையும் அங்கு பார்த்துக்கொண்டு இருக்கமாட்டார்கள். விலையுயர்ந்த ஆடையாபரணங்களிற்கோ, பூஜைகளிற்கோ பௌத்தர்கள் முக்கியத்துவம் கொடுப்பதாக தெரிவதில்லை.

ஆனால் பழமையான பௌத்த மடாலயங்களில் நீங்கள் கவனிப்பதற்கு, பார்ப்பதற்கு என்று பழமையான குகை ஓவியங்கள், புத்தபகவானின் பழமையான சிலைகள், சில புராதன மடாலயங்கள், அருங்காட்சியகங்கள், என்று இருக்கும். தலதா மாளிகையின் வளாகமும் அப்படியானதே. அதனால் கூட்டம் நிறைந்த பூரணை தினங்களில் உங்களால் அமைதியாக அவற்றையெல்லாம் பார்வையிட முடியாது.

எனவே பௌத்தர்களின் விசேட தினங்களான பூரணை, புத்த பூர்ணிமா போன்ற நாட்களை தவிர்த்துவிட்டு சனநெரிசலற்ற ஏனைய நாட்களில் செல்வது பார்வையிட சிறந்ததாக இருக்கும். நான் முன்னமே சொன்னதுபோல இது களியாட்டத்திற்கான இடம் இல்லை. ஒரே நாளில் முழுவதும் அவசர அவசரமாக பார்த்து முடிக்க முடியாது. பழமைவாய்ந்த மடாலய கட்டிடங்கள் முதல் மாளிகைப்பகுதி, கண்டி காலத்து ஓவியங்கள், அருங்காட்சியக பகுதிகள், நவீன அருங்காட்சியகம், தலதா மாளிகையின் ராஜா யானையை பதப்படுத்தி வைத்திருக்கும் அருங்காட்சியகம், இந்து கோவில்கள், இளவரசி மாளிகை என பார்ப்பதற்கு எவ்வளவோ இடங்கள் இருக்கின்றன. மடாலய உள்பகுதி மண்டபங்கள் , வளாகம் குளிர்மையாகவே இருப்பதனால் , இவற்றையெல்லாம் பார்ப்பதற்கு வெயில் ஒரு இடைஞ்சலாக இருப்பதில்லை. வெடிஹிட்டி மாளிகை, அலுத்மாளிகை போன்றவற்றில் கண்டி கால ஓவியங்கள் நிறைந்து காணப்படுகின்றன. புத்தபெருமானின் வாழ்க்கை வரலாறு அடங்கிய ஜாதக கதைகள், தாமரை, மலர் அலங்காரங்கள், லியவெல , அன்னம், ஜீவன விருட்சம், நவநாரி குஞ்சரய ( யானை வடிவில் ஒன்பது பெண்கள்) போன்ற கண்டி காலத்துக்கு என்றே தனித்துவமான கலையலங்கார ஓவியங்கள் நிறைந்ததாக மாளிகை வளாகம் இருக்கிறது.

3.jpgதலதாமாளிகையின் ராஜா யானையைப்பற்றி சுவாரஸ்யமான தகவல்களை சர்மிளா செய்யத்தின்  பனிக்கர் பேத்தி நாவலை வாசித்திருப்பீர்களானால் உங்களால் அறிய முடியும். அதில் உள்ள சில சுவாரஸ்யமான தகவல்களை உங்களுக்கு தரலாம் என்று நினைக்கின்றேன்.

” நான்கு அடி ஐந்து அங்குலம் உயரமான கொம்பன் யானைக்கு தலதா மாளிகையிலிருந்து வந்த அதிஷ்டம் இவரை கொஞ்சம் கலங்கடிக்கவே செய்தது. தலதாமாளிகைக்கு கொண்டு போகப்பட்ட அந்த யானை ஒரு வருடம், ரெண்டு வருடமில்லை. ஐம்பது வருசம் சேவை செஞ்சிதாம். அதுக்கு ராஜா என்று பெயர் வச்சிருந்தாங்கலாம். 1984 இல் அப்ப ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர்.ஜயவர்தன ராஜாவை தேசிய பொக்கிசமாக பிரகடனப்படுத்தியதாக சொல்றாங்க…………கண்டி தலதா மாளிகையை 1950 இல் நடந்த எசெல பெரஹரவில் பௌத்த புனிதப்பொருட்களை சுமந்ததில் இருந்து இறக்குகிற வரைக்கும் எந்தவொரு தொந்தரவுமே ராஜா செஞ்சதில்லையாம். மிகுந்த கட்டுப்பாடும் கண்ணியமுமாக கடமையைச் செய்து , எல்லா யானைகளுக்கும் முன்மாதிரியாக இருந்திச்சு.”

இப்படி ராஜா யானை தலதாமாளிகை வரலாற்றில் மறக்க முடியாதவொன்றாக மாறிவிட்டது.

யானைகளும் , யானைப்பாகன்களும் , தலதாமாளிகை மற்றும் அதனை சுற்றியுள்ள இராஜா காலத்து கட்டிடங்கள், தெப்பக்குளம் , சுற்றிவர இயற்கை சூழ்ந்த மலைகள் எல்லாம் பார்க்கும்போது கேரளாவைப்போன்ற பிரம்மையை உங்களுக்கு ஏற்படுத்தலாம்.

நான் இங்குள்ள வெடிஹிட்டி மாளிகைக்கு விரும்பி செல்வேன். வெடிஹிட்டி மாளிகையின் வாயிலில் இருக்கின்ற சயனநிலை புத்தரின் சிலை, அது அமைந்துள்ள பகுதி அனேக நாட்கள் ஆளரவமற்று அமைதியாக இருக்கும். அருகில் விஷ்ணு , துர்கைக்கு கோவில்கள் காணப்படுகின்றன. இலங்கையில் கதிர்காமத்தில் பூஜை செய்வது போல பிரமணர் அல்லாத சிங்களவர்களே இங்கு பூஜகர்களாக இருக்கின்றனர். ஒவ்வொரு மடாலயங்களும், கோவில்களும் அருகருகே இல்லாமல் சிறுதொலைவில் ஒவ்வொன்றும் அமைந்திருக்கின்றன. அந்த மணல் பரப்பில் நடந்து செல்வது என்பது இயல்பாகவே ஏதோவொரு மனதிற்கு இலகுவான மனநிலையை அந்த சூழல் ஏற்படுத்தித்தரும். வெடிஹிட்டிய மாளிகையில் சிறுதொலைவின் உச்சியில் இருந்த விஷ்ணு கோவில் வளாகம் , கூடவே அதன் அருகில் அமைந்திருந்த அரசமரம் அமைந்திருக்கிற பகுதி தனித்த அழகை அதற்கு தந்திருந்தது. புதிய மாளிகையின் சிறுதொலைவில் இருந்ததாலோ என்னவோ அனேகமாக ஆள்நடமாட்டம் இல்லாத பகுதி அது. சிறு நீர்ப்பாத்திரத்தில் நிரப்புகின்ற நீரை கொண்டு அரச மரத்திற்கு சில பௌத்தமத ஸ்லோகங்களை சொல்லியவாறு சுற்றிவந்து ஊற்றுவார்கள். புறாக்களும், சிறுபறவைகளும் , மலைகளும், அரலி, தாமரை பூக்களின் மணம் நிறைந்த அந்த இடத்தில் கொஞ்சம் அமர்ந்து இருக்கலாம்.

4.jpgஇதைத்தாண்டி தலதாவில் அலுத்மாளிகை வளாகத்தில் புத்தரின் புனிதப்பல் வழிப்படப்படுகின்ற இடம் இருக்கின்றது. அதற்கு மேலே தலதா நூதனசாலை ஒன்று இருக்கின்றது. தலதாவிற்கு போகின்ற அனைவரும் விலைமதிப்பற்ற அந்த நூதனசாலையை நிட்சயம் பார்வையிட வேண்டும் என்று விரும்புகிறேன்.  பழம்பெரும் புராதனமான பொருட்களை தாங்கிய நூதனசாலைகள் உண்மையில் காலத்தை கடந்துகாட்டும் டைம் ட்ராவலர் மெசின்போன்று தொழிற்படுகிறது. இங்கு கண்டிய மன்னர்களான கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கனினால் வழங்கப்பட்ட வெள்ளி நீர்க்குடம், ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கன் வழங்கிய வெள்ளை தொங்கும் விளக்கு , தாய்லாந்து மன்னன் வழங்கிய புத்தரின் பாதசுவடுகள், கண்டியரசர்கள், மகாநாயக்க தேரர்களின் உருவப்படங்கள், கலைப்பொருட்கள், நகைகள், நாணயங்கள், சிலைகள், அழகு சாதன பொருட்கள், கண்டி இராச்சிய பாவனைப்பொருட்கள் என்பவற்றை பார்வையிட முடியும். முக்கியமாக இங்கு கண்டிய மன்னன் கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கன் பயன்படுத்திய தலைப்பாகை, பருத்தி மேலாடை, மார்பு பகுதியில் அணிகிற ஆடை, சாவாலே எனும் காற்சட்டை, கரவனிய எனும் காற்சட்டை, பருத்தி ஆடை, கைக்குட்டை, இராஜாவின்  ஆசனம், என்பன காணப்படுகின்றன.

45-203x300.jpg44-199x300.jpg

 

கண்டியை ஆண்ட நாயக்கர் வம்ச கடைசி மன்னனான ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கன் பௌத்தமத பிரதானிகளின் சூழ்ச்சிக்கும் கபடத்திற்கும் இலக்காகி இருந்தார். இலங்கையின் அரசியல் பௌத்தமதவாதிகளால் எப்படியெல்லாம் சீரழிக்கபட்டது என்பதை தலதாவின் கட்டிடங்கள் சொல்லும். பௌத்தம் என்பது கௌதம புத்தர் போதித்த அழகிய ஒரு மெய்யியல். அதிலிருந்த சமத்துவமும் , பகுத்தறிவும் , மானிடநேசமுமே , அது அனைவரையும் வேகமாக சென்றடைய காரணமாக இருந்தது. ஆனால், இன்று இலங்கை போன்ற நாட்டில் பௌத்த மத பயங்கரவாதிகள் நாட்டின் இனக்குழுக்களுக்கு இடையே வன்மத்தையும் , உள்நாட்டு கலவரங்களையும் தூண்டிவிடும் குழுவாக செயற்படுகிறார்கள்.

கௌத்தம புத்தர் போதித்த மதம்  எல்லோருக்குமானது. சாதி, சமயம், பால்நிலை, இன ரீதியான வேற்றுமைகளை கடந்தது. அதனாலேயே டாக்டர் அம்பேத்கர் ” நான் ஒரு இந்துவாக சாகமாட்டேன் என சொல்லி சமத்துவ சமயமான பௌத்தத்தை தழுவினார். மேலும் 15. 8. 1936 இல் அவர் இப்படி கூறியிருந்ததாக அவருடைய ” நான் இந்துவாக சாகமாட்டேன்”  எனும் நூல் குறிப்பிடுகின்றது.

“இந்து மதத்தை விட்டு வெளியேறவில்லையெனில் பறையராக பிறந்த நீங்கள் பறையராகவே இறப்பீர்கள் என குறிப்பிட்டு இருந்தார். ஆனால் தற்போதைய இலங்கையின் இன நல்லிணக்கத்தின் முட்டுக்கட்டையாக இருப்பதே பெரும்பாலான பௌத்த துறவிகள்தான். அவர்கள் தமிழர்களை, சிறுபான்மை இனங்களை பறதெமழோ, நீங்கள் இந்த நாட்டுக்கு உரித்துடைவர்கள் இல்லை என்று எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். இப்படியான கருத்துக்கள் கௌத்தம புத்தர் சொன்ன பௌத்த சமயத்திற்கு எதிரானவை. கடவுள் அவதாரக்கொள்கையை கௌதம புத்தர் ஏற்கவும் இல்லை. போதிக்கவும் இல்லை. ஆனால் இலங்கை முழுவதும் அவர் விஷ்ணுவின் அவதாரம் எனச்சொல்லி பௌத்த மடாலயங்களுடன்  கோவில்களும் அமைத்து வழிப்பாடு நிகழ்த்தப்படுகிறது. உண்மையான பௌத்தம் சொல்கிற மெய்யியலை பின்பற்றுவோர் மிகவும் சொற்பமாகவே தோன்றுகிறது. சமாதானத்தை கையிலேந்த பௌத்த மதத்தைவிட ஒரு சிறந்த மதம் இல்லை. ஆனால் இலங்கையின் எல்லா அரசியல் துயர்களிலும் பௌத்த அடிப்படைவாதிகளது பங்கு நீக்கமுடியாத குறையாக வரலாற்றுடன் கலந்துவிட்டது.

ஆனால் மிகவும் நல்ல உள்ளம்படைத்த பௌத்தமத துறவிகள் இல்லாமல் இல்லை. அப்படிப்பட்ட அற்புதமான மனிதர்களை நான் கண்டிருக்கின்றேன். சிதம்பரபுர அகதி முகாமில் இருந்த நாட்களில் உணவுக்குகூட கஷ்டப்பட்ட நாட்கள் இருந்தது. முகாமிற்கு அருகில் உள்ள ஒரு சிங்கள ஊரில் உள்ள பன்சலைக்கு அம்மா எங்களை அழைத்துபோவார். அதற்கு அருகில் உள்ள ஒரு இடத்தில் அம்மா வேலை செய்துகொண்டிருந்தார். அந்த நாட்களில் அருகில் இருந்த மடாலயத்திற்கு நான் அடிக்கடி செல்வேன். அங்குள்ள சாது ஒருவர் எனக்கு மடாலயத்திற்கு வருகிற உணவுகளை தந்திருக்கின்றார். எப்போதும் ஏதாவது பழங்கள், இனிப்புகள் என வைத்திருந்து தருகிற  தோற்சுருங்கிய, உடல் தளர்ந்த காவியுடை தரித்த அந்த துறவியின் அந்த சாந்தமான முகம் இன்றும் எனக்கு ஞாபகம் இருக்கின்றது.

கல்கத்தாவில் இருந்தபோது ஒரு தடவை டார்ஜலிங்கில் உள்ள Dali Monastery க்கு சென்றிருந்தேன். சுற்றிவர உயரமான மலைகளுக்கு நடுவே கடும் குளிரில், திபெத்திய பாணியிலமைந்த மடாலயத்தில் நான் பார்த்திருந்த துறவிகள் போல இதுவரை நான் பார்த்ததே இல்லை. வழிப்பாட்டு முறையில் இருந்து அவர்கள் நடந்துகொள்ளும் விதம் எல்லாமே வேறுப்பட்டு இருந்தது. ” ohm mani peme hum” என்று சொல்லியப்படி முன்னால் இருந்த பெரிய மணிபோன்ற ஒன்றை கயிற்றால் இழுத்து ஒரு மணி சத்தம் போல ஓசையேற்படுத்திய வகையில் அந்த மந்திரங்களை சொன்னார்கள். அந்த மடாலயத்தில் அதிகளவான வயதுமுதிர்ந்த  பௌத்ததுறவிகளும், சிறிய குழந்தை லாமாக்களையும்,  நிறைய  நாய்களையும் , புறாக்களையும்  அங்கு கண்டேன். அவர்கள் அந்த குழந்தை லாமாக்களை அன்புடன் நடத்துவதோடு முன்பின் அறிமுகமற்ற எங்களிடமும் அன்புடன் நடந்தார்கள். இப்படியும் அன்பான பிக்குகள் இருக்கிறார்கள்.

அடுத்ததாக நீங்கள் முக்கியமாக பார்வையிடவேண்டியது தலதாவில் அமைந்திருக்கின்ற சர்வதேச பௌத்த நூதனசாலை. 2600 வது வருட புத்த ஜெயந்தியை முன்னிட்டு சர்வதேச பௌத்த நூதனசாலை திறந்துவைக்கப்பட்டிருந்தது. இங்கு நுழைவாயிலில் உள்ள 16 அடி உயரம் வாய்ந்த புத்தர்சிலையானது தனித்துவமானது.  இந்தியாவினால் பரிசளிக்கப்பட்ட இந்த புத்தர்சிலை 5 ஆம் நூற்றாண்டில் குப்தர் ஆட்சியில் சாரணாத்தில் அமைக்கப்பட்ட புத்தர் சிலையை ஒத்தது. இங்கு இந்தியா, கம்போடியா , தாய்லாந்து, ஜப்பான், வியட்நாம் ,சீனா, மியன்மார், நாடுகளில் உள்ள பௌத்த சின்னங்கள், கபிலவஸ்த்துவை சேர்ந்த புத்தபகவானின் நினைவுச்சின்னங்கள் என்பன காட்சிபடுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு இலங்கையின் தனித்துவமான கலாச்சார அடையாளமான தலதாமாளிகை , இலங்கை வருகிற ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய முக்கியத்துவமான இடம் என்று நான் நினைக்கின்றேன்.

தொடரும்…


-நர்மி

 

http://kanali.in/raveena-theevu-03/

Link to post
Share on other sites
 • 2 months later...
 • கருத்துக்கள உறவுகள்

இராவணத் தீவு – பயணத் தொடர் 3

raveena-theevu-3.jpg

பின்னவலை : யானைகள் சரணாலயம்

” Man only likes to count his troubles , but he does not count his joys ” 

-fyodor Dostoevsky

நான் என் இன்பங்களை எண்ணுவதற்கு விரும்புகிறேன். வாழ்க்கை முழுக்க முழுக்க கொண்டாட்டங்களுக்கானவை. அந்த கொண்டாட்டங்களை கண்டடைய பயணங்கள் தேவையென்பதை நான் உண்மையாகவே நம்புகிறேன். தேவையாய் இருப்பதெல்லாம் எந்த இக்கட்டான சூழலைவிட்டும் முன்னோக்கி சிறிதுதூரம் செல்ல முடியுமாக இருக்கின்ற மனம்.

இந்தமுறை என் பயணங்கள் முழுவதும் ஜெ.மோவின் யானை டாக்டரை வாசித்துக்கொண்டிருந்தேன். ஒரே மூச்சில் படித்து முடித்துவிட முடியாமல் இல்லை. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக யானைகளின் உலகத்தில் நுழைந்துக்கொண்டிருந்தேன். எதை எழுதினாலும் வாசகனை அதன் பின் சுற்றவைக்கிற மாந்திரீகம் அவர் எழுத்துக்கு உண்டு. யானைகளை விரும்புகிறவர்கள் நிட்சயமாக அதை படிக்கவேண்டும்  . John Donne சொல்வதைப்போல  யானைகள் என்பது,

” Nature’s great masterpiece, an elephant; the only harmless great thing “

உலகின் அதியுன்னத படைப்பான யானைகள் பற்றி சில விசயங்களை தெரிந்துக்கொள்வது , இந்த பயணத்தில் மேலும் பல சுவாரஸ்யங்களை உங்களுக்கு ஏற்படுத்தக்கூடும் . அதில் முக்கியமாக இதை கருதுகிறேன்,

சுமார் பதினைந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன் 17 வகையான யானைகள் காடுகளில் திரிந்தன. கங்கை நதி உருவாகியபோது கூடவே பல்லாயிரக்கணக்கான நீர் யானைகள் இருந்தன. இப்போது இந்தியா , ஆபிரிக்கா யானைகள் மட்டுமே இருக்கின்றன. இப்படிப்பட்ட நிலையில் யானைகளை பாதுகாக்கவேண்டிய சரணாலயங்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று இருந்தது. இந்த இடத்தில் இருந்துதான்  பின்னவலை யானைகள் சரணாலயம் நோக்கிய பயணம் தொடங்கியது.

அது மெல்லிய  சாரலும் , மழையுமான ஒரு நாள்.  இன்று நெருக்கமான சாலைகளாக மாறிவிட்ட கண்டியின் இந்த நெடும்பாதைகள் , மலைகளையும் , நெடிய காடுகளிற்கும் ஊடாக போடப்பட்டது என்பதால் கண்டியை ஊடறுத்து செல்கின்ற எந்தப்பயணமும் வழிநெடுக பச்சை மலைகளினதும் , நதிகளினதும் , சிங்கள குடியிருப்புகளினதும் , பௌத்த மடாலயங்களினதும் காட்சியை கொண்டிருக்கும். இரயிலில் கண்டியை ஊடறுத்து செல்கின்ற பயணங்களில் ஜன்னல் வழி விரிகின்ற காட்சியினை பார்ப்பதற்கு அவ்வளவு பசுமையாக இருக்கும். கண்டி என்றால் எனக்கு காட்டின் வாசனை , மலைகளின்  வாசனை, பூக்களின் வாசனை, எல்லா பக்கமும் ஓடுகின்ற நதிகள், தேயிலைக்காடுகள், இவைதான்.

WhatsApp-Image-2020-06-06-at-6.28.21-PM-WhatsApp-Image-2020-06-06-at-6.28.17-PM-மலைகளையும் , காடுகளையும் வெட்டி குடியிருப்புகள் அமைக்க முன்னர், பாதைகள் அமைக்க முன்னர் , இவை யானைக்காடுகளாகத்தானே இருந்திருக்ககூடும் , இப்படியெல்லாம் மனம் சிந்தித்துக்கொண்டே இருந்தது. முடிவற்ற அந்த பசுமையான காட்சிகளை கடந்து கேகாலை மாவட்டத்தில் இரம்புக்கனையில் இருக்கின்றது பின்னவலை யானைகள் சரணாலயம். சுமார் இருபைத்தைந்து ஏக்கர் தென்னம்தோப்பில் மகாநதிக்கரையில் இந்த பின்னவலை யானைகள் சரணாலயம் அமைந்திருக்கின்றது .  1975 இல் கொண்டுவரப்பட்ட நீலா, குமாரி, விஜயா, கதிரா, மத்தாலி என்ற அனாதரவாக்கப்பட்ட யானைக்குட்டிகளை பாதுகாக்கவே  உருவாக்கப்பட்டிருந்தது. இன்று 88 யானைகள் வரை அவ்வாறு இங்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது. காட்டின் ராஜாவென்று சிங்கத்தை சொல்வார்கள். நான் யானையை சொல்வேன். ஏனோ உருவத்திலும் உடல் வலிமையிலும் பெரிய அந்த யானைகள் நடமாடும் காடு போல தோன்றுவதுண்டு.

மகிழ்ச்சியையும் துயரையும் வெளி தீர்மானிக்கும். சில இடங்கள் மகிழ்வுக்கானவை, சில இடங்கள் அமைதிக்கானவை , சில இடங்கள் கொண்டாட்டங்களுக்கானவை என்பதை தீர்மானிக்கும் அல்லது தீர்மானித்து கொள்கிறோம். அதனால்தான் மகிழ்வான, துக்கமான நினைகளை மீட்டுபவையாக இடங்கள் காணப்படுகின்றன. இந்த  பின்னவலை யானைகள் சரணாலயம் மகிழ்ச்சிக்கான இடம் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

நுழைவுவாயிலில் இருந்து யானைகள் தங்கியிருக்கிற இடத்திற்கு சிறிதுதூரம் நடந்து செல்ல வேண்டும். இயற்கையான ஒரு சூழலில் மழைத்தூரலோடு நடந்து செல்கிற அந்த வழி நன்றாகத்தான் இருந்தது.

ஒரு மகிழ்ச்சியான யானைக்குட்டியை வழியில் பார்க்க கிடைத்தது. அந்த நிமிடத்தில் உலகின் அதிகூடிய மகிழ்ச்சியான யானைக்குட்டியாக அது எனக்கு தோன்றியது. அதன் வாழ்வில் முக்கியமான இழப்புகள் நடந்திருந்தன. அது தனது தாயையும் , கூட்டத்தையும் , வாழ்விடத்தையும் இழந்திருந்தது.

ஆனாலும் அது எல்லாவற்றையும் மறந்து விளையாடிக்கொண்டிருந்தது.  அந்த விளையாட்டைதான் வந்திருந்த எல்லோரும் பார்த்துக்கொண்டிருந்தார்கள். இந்த மனநிலையை எடுத்துக்கொண்டு நகரமுடியுமாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் .

 பின்னவலையை நோக்கி வருகிற பயணிகள் முக்கியமாக இரண்டு காரணங்களுக்காக வருவார்கள். ஒன்று இங்கு இருக்கும் இந்த யானைக்கூடாரங்களை பார்ப்பதற்கு , அடுத்தது மகநதியில் யானைக்குளியலை பார்ப்பதற்கு. இந்த யானைக்குட்டியிடம் இருந்து யானைக்கூடாரத்தை அடைய சிறிது தூரம் நடக்கவேண்டியிருந்தது.

. இங்கும் நிறைய யானைக்குட்டிகள்.   விளையாட்டுத்தனமும் குரும்பும் என்றிருந்தன . சாப்பிட்டுக்கொண்டே இருக்கவும் மகிழ்ச்சியாக இருக்கவும் அவை விரும்பின. பிறகு பார்வையாளர்களின் கைகளையோ ஆடையையோ பிடித்திழுத்து இங்கே வா வந்து என்னுடன் விளையாடு என்பது போல இருந்தது அவற்றின் சேட்டைகள். இந்த இரண்டு இடத்திற்கும் நடுவில்  பாதையின் இருமருங்கிலும் நீண்டிருக்கிறது கடைகள். இலங்கைக்கு என விசேடமான கைவினைப்பொருட்கள். ஆடைகள், சிறிய சிறிய நினைவுப்பொருட்கள் என நிறைய பொருட்கள் இங்கு கிடைக்கின்றன. ஆனால் சிறியவொன்றுக்கும் இந்தமாதிரி சுற்றுலாத் தலங்களில் அதிக விலையை கொடுக்கவேண்டியிருக்கிறது. நியாயமான விலைகளாக அது எனக்கு தோன்றுவதில்லை. இலங்கையில் எல்லாமே அப்படித்தான் இலங்கை ரூபாவில் அது அதிகமான விலைக்கு வைத்தே விற்கப்படுகிறது. இங்கு விற்கப்படுகிற யானை உருவ அலங்காரம் பதித்த உடைகள் பயணிகளிடம் பிரசித்தமாக இருக்கிறது.  இலங்கை முழுவதும் பயணம் செய்கிற பாதி வெளிநாட்டு பயணிகள் இந்த யானைப்படம் தாங்கிய உடைகளை விரும்பி அணிந்துகொள்வார்கள். இந்த கடைத்தெருக்களை கடந்து மகாநதிக்கரையை அடைந்தாயிற்று. அங்கே மேற்தளத்தில் ஒதுக்கப்பட்ட இடத்தில் இருந்தவாறு யானைகள் கூட்டம் கூட்டமாக குளிப்பதையும் விளையாடுவதையும் பார்ப்பது மனதிற்கு ஒரு இலகுவான உணர்வையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது. 

WhatsApp-Image-2020-06-06-at-6.28.21-PM-

 

மகிழ்ச்சியை ஒரு மன இலகுவை ஏற்படுத்துகின்ற மிருகமாக யானைகளை அன்று கண்டேன்.

ஆனால் அவற்றால் அதை உணர முடியுமா என்று எனக்கு தோன்றவில்லை. அது அதன் இயல்பில், அதன் மகிழ்வில், அதன் பொழுதுகளில் கவனம் செலுத்திக்கொண்டிருந்தது. ” Be a rainbow someone clouds ” என மாய ஏஞ்சலோ சொல்லியிருப்பார். அதுபோல அன்று எங்கள் வானத்தில் சிறு மகிழ்ச்சியின் வண்ணக்கோடுகளாக இந்த யானைகள் இருந்தன. மிருகங்களின் உலகில் மனிதர்கள் இல்லை. அவை அப்படித்தான் படைக்கப்பட்டிருக்கின்றன. எங்கள் உலகில் மிருகங்கள் இருக்கின்றன. மிகவும் உணர்வுபூர்வமாக அதை நாங்கள் நேசிக்கிறோம். பாதுகாப்பு, வேலையை இலகுபடுத்த, வியாபாரம் , போர், உணவு , செல்லப்பிராணி என ஏதேதோ காரணத்திற்காக நாங்கள் மிருகங்களின் தயவில்லாமல் எப்பொழுதுமே நகரமுடியாது இருக்கிறோம். எல்லாவற்றையும் இயந்திரத்தனத்தால் செய்து முடித்துக்கொள்ள முடியும் என்று ஆகிவிட்டபோதும் எங்கள்  உலகில் சிறிய பூனைக்குட்டியாவது தேவைப்படுகிறது. நிட்சயம் இந்த யானை சரணாலயத்திற்கு வாருங்கள். நிட்சயம் மகிழ்ச்சியடைவீர்கள். ஆனால் இயற்கையின் அற்புதமான மிருகம் எப்படியெல்லாம் அழித்துக்கொண்டிருக்கிறோம் என்றும் தோன்றும். யானைகளிடம் இருந்து மனிதன் நிறைய கற்றுக்கொள்ள இருக்கிறது. இதோ இந்த மாதிரியான பண்புகளை ,

“ Elephants love reunions. They recognize one another after years and years of separation and greet each other with wild, boisterous joy. There’s bellowing and trumpeting, ear flapping and rubbing “

-Trunks entwine.


 • நர்மி
Link to post
Share on other sites
 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

இராவணத் தீவு – பயணத் தொடர் 4 | கனலி

 
Raveenaththeevu-4-copy.jpg

லைக்கோவில் நோக்கி

( மாத்தளை அலுவிகாரை)

 

” உனக்கென விடுக்கும் சமிக்ஞைகளைத் தொடர்ந்து கொண்டே இரு ”

– ரூமி

விடுதலைக்கும் , அமைதிக்குமான சமிக்ஞை எதுவாக இருக்கக்கூடும். விடுதலை உணர்வென்பது எடையற்ற பறக்கும் தன்மையானதாக நிச்சயம் இருக்க வேண்டும். அப்படி எடையற்றதாக்க எதையெல்லாம் வாழ்வில் எடுத்துவைக்கப்போகிறீர்கள் என்பதில் இருக்கிறது சுவாரஸ்யம். ஏனெனில் வாழ்விலிருந்து ஒன்றை அவ்வளவு இலகுவில் இறக்கிவைக்க முடியாது என்று நினைக்கின்றேன். ஒரு விடுதலையுணர்விற்காகவும் , அமைதிக்காகவும், சில கேளிக்கைகளுக்காகவும் வாழ்வில் நீண்டதூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. உண்மையில் பயணங்கள்கூட அதற்கானவை தான்.

Matale0-300x200.jpg

 

இலங்கையில் சில பௌத்த மடாலயங்கள் நிச்சயம் உங்களுக்கு ஒரு அமைதியான மனநிலையை ஏற்படுத்துவதாக இருக்கக்கூடும். அதை நான் நம்புகின்றேன். மாத்தளை அலுவிகாரைக்கு முதன் முதல் கடந்த வருடம்தான் சென்றிருந்தேன். அலுவிகாரை பயணத்திற்கான சில காரணங்கள் என்னிடம் இருந்தன. கண்டியை ஆண்ட கடைசி மன்னன் பற்றி விசித்திரமான பல தகவல்கள் இலங்கையில் உண்டு. பின்னர் மரணத்திற்குப் பின்னரான ஒரு வாழ்வு பற்றிய சில ஓவியங்கள் இந்த விகாரையில் இருப்பதாகச் சொல்கிறார்கள். வாய்வழிக்கதைகளாக இவைபற்றி எங்களுக்குச் சொல்லப்பட்டதுண்டு. இவ்வாறான காரணங்களுக்காகத்தான் அலுவிகாரை நோக்கி நாங்கள் சென்றுகொண்டிருந்தோம். அந்தக்கதைகள் பற்றிச் சொல்வதற்கு முன்னர் சில விசயங்களைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். முக்கியமாக அந்த நாள் பற்றியும் அந்த மலைப்பிரதேசம் பற்றியும் சொல்லியாக வேண்டும்.

கார்காலத்தில் மழை ஓய்ந்த நாளொன்றில் , பாறைகளை ஊடுருவிப் பட்டுத்தெறிக்கும் மிருதுவான வெயிலில் குகைக்கோவில்களைக் காணச்செல்வது, ஒரு அடர் மழைநாளில் கைகளின் இடுக்கில் ஒரு கதகதப்பான தேநீர் கோப்பையைத் தாங்கிக்கொள்வதுபோல அத்தனை சுவையானது. புத்தன் கோவில்களுக்கென்று ஒரு குகையமைதி எங்கிருந்து வருகின்றது என்று புரிவதேயில்லை. இலங்கை முழுவதும் புத்தமடாலயங்கள் தான் ஆனால் அதில் கட்டிடக்கலைக்கும் ஓவியங்களுக்கும் தனித்துவமான பாரம்பரிய புத்த கோவில்கள் குறிப்பிட்ட சிலவே இருக்கின்றன.  அதில் முக்கியமானது மாத்தளை அலுவிகாரை. மலையடிவாரத்தின் உச்சியில் அமைந்துள்ள அலுவிகாரை இயற்கையின் அழகு சேர்ந்த வசீகரமுடையது.

Matale7-300x195.jpg

 

முதலில் கண்டியில் மாத்தளை நகரைப்பற்றி தெரிகிறபோது அந்த மலைதேசத்தின் வனப்பில் இயற்கையான பாறைகளைக் கொண்டு கட்டியமைக்கப்பட்ட அலுவிகாரைப்பற்றி புரிந்துகொள்வீர்கள். மாத்தளை எங்கு திரும்பினாலும் மலைகள், தென்னை, இறப்பர், மிளகு , ஆறுகள் என இந்தியாவின் கேரளாவைப் போன்றவொரு இடம். கண்டி நகரிலிருந்து அலுவிகாரை முப்பது கிலோமீட்டர் தூரம் இருக்கும்.  அலுவிகாரை மூன்றாம் நூற்றாண்டு அளவு பழமையானது.  மலையடிவாரத்திலிருந்து அதன் உச்சி வரை மடாலயங்கள், தாகபைகள், வழிபாட்டிடங்கள், குகைகள் எனப் பரவி இருந்தது.  இங்கு பௌத்தர்களிடையே விசேடமான சில நம்பிக்கைகள் இருந்தன. அதில் பிரதானமாக அரசமர வழிபாடு இருக்கிறது. மலையின் உச்சியில் உள்ள விகாரையில் இருந்த அரசமரத்திற்கு சிறிய குடத்தில் நீர் எடுத்துக்கொண்டு மேல்நோக்கிச் செல்வதைக் கீழிருந்து பார்க்கும்போது  கரும் பாறைகளுக்கு இடையில் வெள்ளைநிற உடையில் சிறு பூக்களின் கொடி காற்றில் அசைவதைப்போல இருந்தது. இந்த சிங்கள பௌத்தர்களின் அமைதியான பிரார்த்தனையைப் போல ஏன் இந்த நாட்டில் ஒரு வெண்மையான சமாதானப்பூக்கள் பூக்கவே இல்லை என்றிருந்தது.

Matale3-300x200.jpg

இயற்கையான ஒரு மலையுச்சியில் சேர்ந்திருந்த கருமையான பாறைகளை குடைந்து இங்குள்ள குகைகளும் , விகாரைகளும் செய்யப்பட்டுள்ளன. ஒரு சமதரையில் ஒரேயிடத்தில் இல்லாமல் மலையின், கரும்பாறைகளின் உச்சிவரை நீண்டு செல்வதுதான் அலுவிகாரையின் சிறப்பாகப் பார்க்கிறேன். கீழே இருக்கிற வெண்ணிற தாகபையை வணங்கிவிட்டு , மேலே அந்த மலைக்கு ஏறத்தொடங்கும்போது இரண்டாவதாக இருக்கிறது சில குகைக்கோவில்கள். அமைதியும் வளாகத்தில் உள்ள பவளமல்லிகையின் மணமும், கரும்பாறையில் ஊதுவத்தி விளக்கீடு செய்ய முக்கோண வடிவில் ஏற்படுத்திவைத்த வேலைப்பாடுகள் தனித்த அழகுடையதாக இருந்தது. இங்குள்ள குகைச்சுவரில்தான் நாங்கள் தேடிவந்த ஓவியங்கள் இருந்தது. இந்த மலையில் ஒதுக்குப்புறமாக இந்த குகைக்கோவிலை சில முக்கியமான வேலைகளுக்காகத்தான் அமைத்திருந்தார்கள்.

கௌதம புத்தர் தான் வாழ்கிற காலத்தில் ஞானநிலையடைந்தபின் பல போதனைகளைச் செய்து வந்தார். உங்களுக்குக்கூட தெரிந்ததே. ஆனால் அவை செவிவழியாக மட்டுமே பரப்பப்பட்டும் பாதுகாக்கப்பட்டும் வந்தது. புத்தர் இறந்து மூன்று மாதங்களின் பின் அவை எழுத்து வடிவில் எழுதப்பட்டுப் பாதுகாக்கப்படுவதன் முக்கியத்துவம் உணரப்பட்டது. அவரின் சீடர்கள் அதைச் சூத்திர பிடகய , வினய பிடகய , அபிதர்ம பிடகய என்று மூன்றாகப் பிரித்து எழுத்தில் எழுதி வைத்தார்கள். கலிங்கத்தில் அசோகனின் ஆட்சியில் பௌத்தமதம் சார்ந்த நெருங்கிய தொடர்பு இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் இருந்தது.

இலங்கையை ஆண்ட தேவநம்பியதீஸ மன்னனின் ஆட்சியில் அசோகனின் ஆதரவில் இந்த குகையில் வைத்துத்தான் மகாவிகாரை வம்சத்தைச் சேர்ந்த பிக்குகளால் திரிபிடக நூல்கள் எழுதப்பட்டன. அதை இங்குள்ள குகையில் அரசனின் பாதுகாப்புடன் அந்த பிக்குகள் எழுதினார்கள். இதை எழுதிய காலத்தில் பலதரப்பட்ட அரசியல் நெருக்கடி, பஞ்சம், வறுமை, உயிராபத்து எனப் பல இருந்தது. இப்படிப்பட்ட இடம்தான் அலு விகாரை. இங்குள்ள இந்த குகையில் நீண்ட புத்தரின் சயன நிலை சிலையொன்று இருக்கிறது. அமைதியான முகபாவனையுடன் அது இருக்கிறது. அதைத்தாண்டி புத்தரின் சிஷ்யர்களின் சிலைகள், ஓவியங்கள் என்பன உண்டு. குகை முழுவதும் ஓவியம்தான். தாமரை அலங்காரமும், ஒருவித மஞ்சள் நிறமும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டிருந்தது.

Matale11-300x200.jpg

Matale6-300x200.jpg

இலங்கையின் ஓவியங்களைப் பற்றித் தேடுகிறவர்களால் இந்த அலுவிகாரையை  தவிர்க்க முடியாது, குகைக்கு நுழைவதற்கு முன் நுழைவாயிலின் மேலே வரையப்பட்ட  மலர்க்கொடி போன்ற ஒரு மஞ்சள்நிறப் பெண் ஓவியத்தை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இக்குகையின் சுவர்களில்தான் மரணம் பற்றிய சிறுகுறிப்புகள் அடங்கிய ஓவியங்களும் அதன் கீழே அதுபற்றிய விவரங்கள் சிங்கள மொழியில் எழுதப்பட்டிருந்தன.  இந்து சமயத்தில் கருடபுராணம் மரணத்திற்கு அப்பால் ஒரு வாழ்வை விவரிப்பதைப் போன்ற ஓவியங்கள். பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப வழங்கப்படுகிற தண்டனைகளாக அவை இருந்தன. கோவில்களில் பொதுவாக இப்படிப்பட்ட ஓவியங்களைக் காண்பதில்லை. இங்கு அனேகமான மடாலயங்களில் புத்தரின் வாழ்க்கை வரலாறு, அவர் செய்த அற்புதங்களை மட்டுமே ஓவியங்களாக வரைந்தார்கள். இங்கு இப்படிப்பட்ட திகிலூட்டும் ஓவியங்கள் குறிப்பாக இந்த இடத்தில் வரையப்பட்டதற்கு சில முக்கிய காரணிகள் இருக்கின்றன. அதைத் தேடி இன்னும் பயணிக்கவேண்டும் என்று நினைக்கின்றேன். இந்த குகையிலிருந்து மேலே சிறிது தூரம் சென்றால் பாறை இடுக்கில் ஒரு இடத்தில், அப்போது இலங்கை இராச்சியத்தில், குறிப்பாக கண்டி காலத்தில் நடைமுறையில் இருந்த கடுமையான தண்டனைகளை விவரிக்கிற சிலைகள் அமைக்கப்பட்டிருக்கிறது

Matale1-300x200.jpg

 

பௌத்தத்தில் மரணத்திற்கு அப்பால் உள்ள வாழ்வு ஒரு தனிப்பட்ட ஆய்வாக இருக்கும். அதை உங்களின் பக்கம் விட்டுவிடுகிறேன். இந்த விகாரைகள் பற்றிய, ஓவியங்கள் பற்றிய கதையை எனக்கு அம்மம்மா சொல்லியிருந்தார். முழுக்க முழுக்க இந்த பயணம் தேடல் அவரால் நிகழ்ந்தது என்பதையும் சொல்லியாக வேண்டும். இலங்கைக்கு பௌத்த மடாலயங்களுக்கு வருகிற பயணிகளுக்கு சிலதை நான் சொல்லியாக வேண்டும். அதில் முக்கியமானது புத்தரின் உருவங்களை உடலில் டேட்டு இடுவதை, நவநாகரீக உடைகள், எதற்கும் இங்கு அனுமதியில்லை.  புத்தரின் பிரதிமைக்கு முன்னால் படங்கள் கூட எடுக்கவிடமாட்டார்கள்.  இப்படி நிறைய விசயங்கள் இருக்கின்றன.

இப்படி கொஞ்சம் நடப்பதற்கும், ஒரு மலையேற்றம் செய்யவும், ஓவியங்கள், வரலாறு, பௌத்தம் பற்றி அறிய விருப்பமுள்ளவர்கள் நிச்சயம் பார்க்கவேண்டிய இடம் மாத்தளை அலுவிகாரை. மலையின் உச்சிக்கு ஏறுவதை நிராகரித்துவிடாதீர்கள். மலைநாட்டின் அழகு மலையுச்சிகளில் மிகவும் மனதிற்கு நெருக்கமான காட்சிகளைத் தரும். இந்த அலுவிகாரையின் மலையுச்சியில் பச்சை மலைகளுக்கு இடையில் ஒரு பொன்புத்தனின் சிலை தெரியும். இயற்கையான பறவைகள், சூரியன் , மாத்தளை நகரின் எழில் என எல்லாமே ஒரு மறக்கமுடியாத உணர்வை நிச்சயம் தரும்.

தொடரும்..


 • நர்மி

 

http://kanali.in/raveena-theevu-05/

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் கிருபன் பகிர்வுக்கு நன்றி.....!  🐘

Link to post
Share on other sites
 • 2 months later...
 • கருத்துக்கள உறவுகள்

இராவணத் தீவு – பயணத் தொடர் 5


spacer.png

சீகிரியா – சிங்கத்தின் நுழைவாயில்.

லைகளுக்கு உயிரில்லையென யார் சொன்னது? அவை மட்டுமே இந்த உலகின் நெடுநாள் சாட்சியாக வாழ்ந்துகொண்டிருக்கின்றன என்பதை நான் நம்புகின்றேன். மலைகளைக் கடக்கின்ற சுவை பிடிபட வேண்டும். அது இந்த வாழ்க்கைக்கு புதிய புதிய நம்பிக்கைகளையும் , கனவுகளையும் கொண்டு வந்து சேர்க்கக் கூடும். புதிய புதிய வானங்களையும் , வானவில்களையும் காட்டக்கூடும், கூடடைகின்ற பறவைகளையும் , தூரதேசம் நோக்கிப் பறக்கின்ற பறவைகளையும் வழியில் நீங்கள் சந்திக்கக் கூடும். மலைகளையும் , நதிகளையும், கடல்களையும், நம்பலாம். அவை ஒருபோதும் நம்மைக் கைவிடுவதில்லை. அமெரிக்க எழுத்தாளர் ஜான் முயிர் இப்படிச்சொல்வார்,

மலைகளில் ஏறிப்பார் அவை

உனக்குக் கதைகள் சொல்லும்

மரக்கிளைகள் வழியே

கதிரவனின் கதிர்கள்

பாய்கையில் இயற்கையின்

அமைதி உன் உள்ளத்தை

ஊடுருவிச் செல்லும். தென்றல் உன்னைத் தாலாட்டும்

பெருங்காற்று தன் சக்தியைக்காட்டும்

இலையுதிர்காலத்தில் உதிரும் சருகுகளைப்போல்

உன் கவலைகள் எல்லாம் மறைந்துவிடும்….

இந்த வரிகள் எந்தளவு உண்மையென்பதை சீகிரியாக் குன்றை ஏறிக்கடக்கின்ற போது உணரமுடிகிறது. இன்றிலிருந்து ஏழு வருடங்களுக்கு முன் நான் அந்த குன்றைப் பார்ப்பதற்குப் போயிருந்தேன். அது காசியப்பன் என்கின்ற மன்னனின் கோட்டையென்பதைத் தாண்டி அன்று எனக்கு வேறு எதுவும் பெரிதாகத் தோன்றவில்லை. மற்றபடி சுற்றியுள்ள அந்த இயற்கையை மனமுவந்து இரசித்தேன்.

2017-2020 வரையான இந்தியப் பயணங்களில் சில சுவாரஸ்யமான ஆதாரங்கள் எனக்குக் கிடைத்திருந்தன.   அஜந்தா பயணம் குறித்தும் அவற்றின் கலையம்சம் குறித்தும் எனது இரண்டாவது இந்தியப் பயணப் புத்தகத்தில் விரிவாக எழுதுவேன் அதற்காக மட்டுமே 2020 இல் ஜனவரி மாதம் 20 வது திகதியன்று மீண்டும் சீகிரியா குன்றை நோக்கிச் சென்றிருந்தேன்.l
 

spacer.png

சீகிரியா குன்று தொடர்பில் எழுதுவதற்கு முன்னர் கல்கியின் எழுத்துக்களின் மூலமாக சில இரகசியங்களை உங்களுக்குச் சொல்லவேண்டும் என்று நினைக்கின்றேன். சிவகாமி சபதம் என்ற நூலில் வருகிற இந்த வரிகளைக் கவனியுங்கள்,

” வடக்கே வெகுதூரத்தில் கோதாவரி நதிக்கும் அப்பால் அஜந்தா என்ற மலை இருக்கிறது. வெகு காலத்துக்கு முன்னால் அந்த மலையை குடைந்து புத்த சைத்தியங்களை அமைத்திருக்கிறார்கள். அந்த சைத்தியங்களில் புத்த பகவானுடைய வாழ்க்கையையும் ,அவருடைய பூர்வ அவதாரங்களின் மகிமையையும் விளக்கும் அற்புதமான சித்திரங்கள் வரையப்பட்டிருக்கின்றன. ஐநூறு வருடத்திற்கு முன்னால் வரைந்த அந்த ஓவியங்கள் இன்றைக்கும் வர்ணம் அழியாமல் புதிதாக எழுதியதைப்போலவே இருக்கின்றன. அந்த அற்புதச் சித்திரங்களை எழுதிய சித்திரக்கலை மேதாவிகளின் சந்ததிகள் இன்னமும் அங்கே இருக்கிறார்கள்.

அவர்கள் அஜந்தா குகையில் பழைய சித்திரங்களுக்குப் பக்கத்தில் புதிய சித்திரங்களை வரைந்து வருகிறார்கள். ஆயிரம் வருடம் ஆனாலும் அழியாமல் இருக்கக்கூடிய வர்ணச் சேர்க்கையின் இரகசியம் அவர்களுக்குத் தெரியும்..”

என்று அஜந்தா வர்ண சேர்க்கையின் இரகசியம் குறித்த ஒரு உரையாடல் ஆயனர் சிற்பிக்கும் , நாகநந்தி அடிக்கும் , பரஞ்சோதிக்கும் இடையில் நடந்துகொண்டிருக்கும். அஜந்தா ஓவியங்களின் வர்ணச்சேர்க்கையும் நுணுக்கமும், நேர்த்தியும் அத்தகையவை. ஆயிரம் இரகசியங்கள், ஆச்சரியங்கள், குழப்பங்கள் நிறைந்தவை.

இந்தியாவின் Archaeological survey  இன் Director General , R.C.Misra சொல்வதன்படி அஜந்தா குகையானது கி.மு. 2 மற்றும் கி.பி. 7 ஆம் நூற்றாண்டினையும் சேர்ந்தவை. இந்த காலங்களில் வரையப்பட்ட அஜந்தாவின் ஓவியங்கள் போல அச்சு அசல் அதே சாயலில் எப்படி இலங்கையில் மாத்தளை மாவட்டத்தில் தம்புள்ளை நகரத்திற்கு அண்மையில் 1144 அடி உயரமான மர்மமான ஒரு தனித்த குன்றின் மீது கி.பி. 6 ம் நூற்றாண்டில் வரையப்பட்டது? அப்படியென்றால் கி.பி 6 ஆம் நூற்றாண்டில் அஜந்தா குகைகளிலிருந்து பௌத்த துறவிகள் சீகிரியாவிற்கு வந்திருக்கிறார்கள். நெடுங்காலமாக வசித்திருக்கின்றார்கள். இந்த குன்று தொடர்பாகப் பல மர்மமான கதைகள் உண்டு. பச்சை பசேல் என்று  மலைகள் நிரம்பிய மலைநாட்டில் மலைகள் தொடர்ச்சியாக இருக்கும். ஆனால் இந்த சீகிரியா  குன்று மலைநாட்டின் ஏனைய மலைகளுடன் எந்தவிதத்திலும் தொடர்பற்று தனித்து நிற்கிறது. சில புவியியல் ஆய்வாளர்களின் கருத்தின்படி சீகிரியா   குன்றானது இரண்டு மில்லியன் காலத்துக்கு முன்னர் எரிமலை ஒன்று வெடித்திருந்ததாகவும் அந்த எரிமலை குழம்பே காலப்போக்கில் உறைந்து சீகிரியா   குன்று உருவானது என்கின்றார்கள். சீகிரியா   குன்றுடன் சேர்த்து இங்கு இருக்கை குகை,  நாகபடக்குகை, சித்திரகூடக்குகை என்று முக்கியமான மூன்று குகைகள் காணப்படுகிறது. ஆனால் இவை கி.பி. 1ம் நூற்றாண்டுக்கு உரியவை. இதைச்சுற்றி காணப்படுகின்ற பூங்கா, அரசமாளிகை, கால்வாய்கள், அகழிகள் போன்றவற்றின் இடிபாடுகள் அங்கு அழகும், பாதுகாப்பும் நிறைந்த இராச்சியம் இருந்ததைக்காட்டுகிறது. காசியப்ப   மன்னனின் வாழ்வும், அவனது ஓவியங்களும் அஜந்தா, சித்தன்னவாசல் ஓவியங்களில் இருக்கிற மர்மமான கலையுணர்ச்சி பற்றிப் பேசுவதற்கு முன்னர் இந்த சீகிரியாகுன்று காசியப்ப   மன்னனுக்கு முன்னரே அது ஒரு பெரும் சாம்ராச்சியத்தின் மாநகராக இருந்திருக்கிறது. இன்று சீகிரியாகுன்று என்று அழைக்கப்படுகிற இந்தக் குன்று சிவகிரி என்று அழைக்கப்பட்டிருக்கின்றது. இராமாயணக் காலத்தில் இந்தக் குன்று இராவணனின் உபநகராக இருந்திருக்கின்றது. ஆய்வுகளின்படி அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட நீர்த்தோட்டத்தின் கீழ் இராவணனின் புராதன நகரத்தின் இடிபாடுகள் உள்ளதாகச் சொல்கிறார்கள்.l

spacer.png

அதைத்தாண்டி விண்வெளி மனிதர்களுடன் தொடர்புபடுத்திய பல கதைகள்கூட சீகிரியா குன்று தொடர்பில் உள்ளூர் மக்கள் மத்தியில் காணப்படுகிறது. இது தொடர்பான ஆய்வுக்கென்றே சில வெளிநாட்டவர்கள் இங்கே வருகிறார்கள். இப்படிப்பட்ட அமானுஷ்யக் கதைகள் நிறைந்த குன்றைத்தான் கி.பி. 5ம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் சிம்மவர்மனின் தங்கையின் மகனான காசியப்பன் தனது கோட்டையாகத் தெரிவு செய்திருந்தான்.

இலங்கையின் மத்திய மலைநாடு என்பது மிகப்பெரிய ஒரு சாம்ராஜ்யம். மலைநாடு முழுவதும் இயற்கை பாதுகாப்புடன் அழகுடன் கூடிய பல இடங்கள் இருக்க, குறிப்பிட்ட சீகிரியா  குன்றினை அவன் ஏன் தெரிவு செய்தான். அச்சு அசல் அஜந்தா குகையோவியங்களின் சாயலில் அவனால் எப்படி சீகிரியா குன்றில் ஓவியங்களை வரைய முடிந்தது? இதன் பின்னணியில் உள்ள உளவியல் என்ன, எனப் பல கேள்விகளைக் கொண்டதுதான் இந்தப்பயணம். 1ம் காசியப்பன் இலங்கை மௌரிய மன்னர்களின் வம்சத்தில் பிறந்தவன். காசியப்பனின் தந்தை தாதுசேனனுக்கு இருமகன்கள். 1ம் காசியப்பன் மூத்தவன், 1ம் மொகாலயன் இரண்டாவது மகன். இதில் நியாயப்படி ஆட்சியதிகாரம் தந்தைக்குப் பின் 1ம் காசியப்பனுக்கே வந்திருக்கவேண்டும். ஆனால் பட்டத்து இராணியின் மகன் 1ம் மொகாலயனுக்கு  ஆட்சியதிகாரத்தை தாதுசேனன் கொடுத்துவிடுகிறான். நியாயமாகத் தனக்கு கிடைக்கவேண்டிய அதிகாரம் கிடைக்காத வெறுப்பிலும் , விரக்தியிலும் அவன் தனது தந்தை தாதுசேனனை மிகக்கொடூரமாகக் கொலை செய்து சிறைச்சாலை சுவருடன் புதைத்து பூசிமெழுகியிருக்கிறான். சில வரலாற்று ஆய்வாளர்கள் இப்படிச் சொல்லியிருக்கின்றார்கள், மன்னனான காசியப்பனை கொலைகாரனாகக் காட்டவிரும்பாத அந்த கால வரலாற்று ஆசிரியர்கள் 1ம் காசியப்பனின் மாமா மிகாரா தாதுசேனனை கலாவெல குளத்தில் வைத்துக் கொலைசெய்து அந்த அணைக்கட்டிலேயே புதைத்தான் என்று சொல்பவர்களும் உண்டு. இப்படி கொலையும் சூழ்ச்சியும் நிறைந்த காசியப்பன் தனது சகோதரனால் எப்போதும் கொல்லப்படுவான் என்ற அச்சம் இருந்தபோதே,   யாராலும் அப்படி எளிதில் ஆக்கிரமிக்க முடியாத சிம்மகிரி குன்றை அடைந்து அதில் அவனது சாம்ராஜ்யத்தைக் கட்டியமைத்தான். இவ்வளவு கொடூரமான மனநிலையுடன் சித்தரிக்கப்பட்ட 1ம் காசியப்பன் ஒரு சிறந்த கலைஞன் என்பதை நிரூபிக்கும் வகையில் இருப்பதே சீகிரியாவின் ஓவியங்கள்.

உலகிலேயே அஜந்தா குகையோவியங்கள் அதன் வர்ண இரகசியங்கள் அங்கு வாழ்ந்த பிக்குகளுக்கு மட்டுமே தெரிந்திருந்தது என நினைக்கின்றபோது அதே சாயல் ஓவியங்கள் அஜந்தாவைத்தாண்டி இரண்டு இடங்களில் வரையப்பட்டிருக்கின்றன. அதில் ஒன்று சித்தன்னவாசல், இரண்டாவது சீகிரியா குன்றோவியங்கள். அதில் சித்தன்னவாசல் ஓவியங்கள் கி.பி. 7 ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. அஜந்தா , சித்தன்னவாசல், சீகிரியா  இந்த மூன்று குகைகளுக்கும் மீண்டும் மீண்டும் பயணம் செய்த பின்னரே நான் இதை ஊர்ஜிதமாக சொல்கிறேன். அச்சு அசல் அதே சாயல் ஓவியங்கள் தமிழ்நாட்டில் சித்தன்னவாசலிற்கு எப்படி வந்தது எனப்பார்க்கின்றபோது , அஜந்தா குகையில் வாழ்ந்த பௌத்த துறவிகளுக்கு உதவிகள் செய்துவந்த மன்னனின் சாம்ராஜ்யம் சரிந்தபோது அஜந்தா குகைகளில் வாழ்ந்த துறவிகளுக்கான நன்கொடை தடைபட்டது. அப்போது அந்த குகைகளில் வாழ்ந்து ஓவியங்களையும்,சிற்பங்களையும் படைத்துக்கொண்டும், புதிய குகைகளை உருவாக்கிக்கொண்டும், பௌத்தமத போதனை சாதனைகளை நிகழ்த்திவந்த துறவிகள் ஆதரிக்க யாருமற்ற நிலையில் தமது ஓவியப்பணிகளை, குகைகளை புதிதாக அமைப்பதை நிறுத்திவிட்டு , அங்கிருந்து புறப்படவேண்டியதாயிற்று. அந்தநேரத்தில் நாடோடியாக அலைந்த அவர்கள் தமிழகத்தில் சித்தன்னவாசலை அடைந்திருக்கலாம். ஆனால் சித்தன்னவாசலின் ஓவியங்கள் பல்லவ மன்னன் மகேந்திர வர்மனினால் வரையப்பட்டது எனச் சொல்பவர்களும் உண்டு. ஆனால் கி.பி. 6 ம் நூற்றாண்டில் அது காசியப்பனின் சீகிரியா   குன்றிற்கு எப்படி வந்தது எனும் போதுதான் சில சுவாரஸ்யமான ஊகங்கள் பற்றிக்கொள்கின்றன.

spacer.png

spacer.png

spacer.png

சீகிரியாவின்  ஓவியங்களை 1ம் காசியப்பன் வரைந்தான் என்கின்றார்கள். அரசியல் அச்சுறுத்தலும் , உயிராபத்தும் வரும் என்று சீகிரிய குன்றில் அடைந்துகொண்ட காசியப்பன் நிச்சயமாக மத்தியப் பிரதேசம் சென்று அஜந்தா குகையோவியங்களை , வர்ண பாரம்பரியங்களை கற்றிருக்க வாய்ப்பில்லை. எனவே அங்கிருந்து கி.பி. 6 ம் நூற்றாண்டில் புத்தபிக்கு ஒருவரோ , அல்லது பிக்குகள் குழுவாகவோ வந்திருக்கவேண்டும். இங்கு மொத்தமாக 500  ஓவியங்கள் வரை இருந்திருக்கிறது. அவை தனியே பெண்களின் ஓவியங்கள் மட்டுமே . அஜந்தா குகையோவியங்களும் ,சித்தன்னவாசல் ஓவியங்களும் , கௌதம புத்தரின் ஜாதகக் கதைகள், இயற்கைக் காட்சிகள், பறவைகள்,மலர்கள், புத்தரின் ஓவியங்கள் என வரையப்பட்டிருக்க, சீகிரியா  குன்றின் ஓவியங்கள் தனியாக 500 பெண்களின் ஓவியங்கள்  மட்டும் அரைநிர்வாணமாக வரையப்பட்டிருக்கின்றன. சில கதைகளின் படி பௌத்த மக்கள் காசியப்பன் மீது வெறுப்பு கொண்டிருந்தனர், காசியப்பனும் வெறுத்திருந்தான் எனவேதான் பழிவாங்கும் முகமாக அவன் இப்படி நிர்வாணமாகப் பெண்களை வரைந்தான் என்கின்றார்கள். அதையெல்லாம் தாண்டி காசியப்பனிடம் கலையைக் கொண்டாடுகிற மனது இருந்தது என்பதுதான் உண்மையென நினைக்கின்றேன். அத்தோடு அவனுக்கு ஒரு கனவு இருந்திருக்கிறது.மனநிம்மதியைத் தருகிற ஒரு  சாம்ராஜ்யத்தை கலைப்பூர்வமாக இந்த குன்றில் உருவாக்க நினைத்திருக்கிறான். இந்த அழகிய குன்றின் மேல் குபேரனின் அழகாபுரி நகர் போல ஒன்றை உருவாக்க நினைத்திருக்கின்றான். இந்த 500 பெண்களின் ஓவியங்களை அவன் அரைநிர்வாணமாக வரைந்திருக்கிறான். ஆனால் அவர்கள் வானத்திலிருந்து தோன்றுகிற தேவதைகளாகவும், தாரா என்கின்ற பெண் தெய்வம் போலவுமே இருக்கின்றார்கள். காமத்தை வெளிப்படுத்த மன்னனுக்குப் பூரண சுதந்திரம் உண்டு. அவன் காமத்தை வெளிப்படுத்த பகிரங்கமாகக் காமசாஸ்த்திர ஓவியங்களை வரைந்திருக்கலாம். அஜந்தாவில்கூட அவ்வாறான சிற்பங்கள் உண்டு. ஆனால் இந்த பெண்களை அவன் அப்படி வரையவில்லை. இந்த பெண்கள் எல்லாம் காசியப்பனின் மனைவி என்று சொல்பவரும் உண்டு. அப்படி அவர்கள் எல்லாம் மனைவிகள் என்றால் அப்படி ஒரு இடத்தில்கூடவா மன்னனின் ஓவியம் வரையாது விட்டிருப்பான். அடுத்தது ஒரு முக்கியமான குறிப்பு இங்கு சீகிரியா  குன்றின் மீது உள்ள ஓவியங்களும் சரி , அஜந்தா, சித்தன்னவாசல் ஓவியங்களும் சரி  அதில் உள்ள பெண்களைப்போன்ற பெண்கள் அந்த நிலத்திற்கு உரியவர்கள் இல்லை. ஒரு மராத்தியப் பெண்ணின், தமிழ்ப் பெண்ணின், இலங்கைப்பெண்ணின் ஆடையாபரணம், உடல்வாகு போல இல்லை அந்த ஓவியங்களில் உள்ள பெண்களின் உருவம். அந்த நிலத்திற்குரிய பெண்கள் இல்லை அதுவென்றால் இப்படி அழியாத வர்ணங்களில் ஆயிரக்கணக்கில் வரையப்பட்ட இந்த பெண்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள் என்ற சந்தேகம் எழுகிறது. காசியப்பன் அரண்மனையில் எப்படி இவர்கள் இடம்பிடித்தார்கள் என்று தோன்றுகிறது. எல்லாவற்றிற்கும் அப்பால் புவியியல் ரீதியாக முற்றிலும் வேறுபட்ட இலங்கையின் சீகிரியா குன்றிற்கு எப்படி ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அழியாத அஜந்தா ஓவியங்களின் வர்ணசேர்க்கை எப்படி வந்தது? இப்படி நிறைய சர்ச்சைகள், அதிசயம் நிறைந்த குன்று இது.

1ம் காசியப்பன் இயற்கைக்கு அருகில் தனது அழுத்தங்களை எல்லாம் விட்டுவிட்டு விண்ணுலக இராச்சியம் போல ஒன்றை இந்த சீகிரியா குன்றில் அமைத்து வாழ நினைத்தான். அதன் வெளிப்பாடுதான் முகிழ்கள் மேகங்களுடன் கூடிய இந்தப் பெண்தேவதைகளின் ஓவியங்கள். ஆனால் முடிவில் அவன் மனதினுள் எது செய்தாலும் மாறாமல் இருந்த அச்சமே அவனைக் கொன்றுவிடுகிறது.

கி.பி. 495 இல் 1ம் காசியப்பனின்  சகோதரன் மொகாலயனுக்கு இடையில் போர் நடக்கிறது. தென்னிந்தியாவிலிருந்து படை திரட்டி வந்து காசியப்பனுடன் போருக்கு வருகிறான் .சிறைக்கைதியாக பிடிபட விரும்பாத காசியப்பன்  தன் கழுத்தை வெட்டித் தற்கொலை செய்துகொண்டான். காசியப்பனின் உடல் சீகிரியாவுக்கு அருகே பிதுரங்கல மலையில் புதைக்கப்பட்டது. இப்படி ஏகப்பட்ட வரலாற்றுச் சர்ச்சைகளும் , கலையின் உன்னதமும் ஒரு உன்னத கலைஞனின் ஆத்மாவும் நிரம்பிய இயற்கையாக அமைந்த அழகிய கோட்டை நிச்சயம் உங்கள் பயணக்குறிப்பில் எழுதப்படட்டும்.


 நர்மி

 

http://kanali.in/raveena-theevu-06/

 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இன்று தான் இந்தத் திரியைக் கண்டேன்.
இணைப்புக்கு நன்றி கிருபன்.
அனேகமான பயணக் கட்டுரைகளை விரும்பி வாசிப்பேன்.இதை இன்னமும் தொடவில்லை.
என்றாலும் இந்தப் பொண்ணு ஏன் இராவணத் தீவு என்று யாருமே அழைக்காத பெயரை சூட்டி இருக்கிறா?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

ஏன் இராவணத் தீவு என்று யாருமே அழைக்காத பெயரை சூட்டி இருக்கிறா?

இலங்கையில் இருக்கும் தமிழர்களும் சிங்களவர்களும் தாம் இராவணனின் வம்சம் என்பதால் பொருத்தமான பெயர்தானே!

Link to post
Share on other sites
 • 1 month later...
 • கருத்துக்கள உறவுகள்

சிகிரியா ஓவியங்கள் , அஜந்தா ஓவியங்கள் மற்றும் சித்தன்ன வாசல் ஓவியங்கள்  பற்றிய தகவல்களும் அவற்றின் ஒற்றுமைகளும் வியக்க வைக்கின்றன.......!   💐

On 26/9/2020 at 02:50, ஈழப்பிரியன் said:

இன்று தான் இந்தத் திரியைக் கண்டேன்.
இணைப்புக்கு நன்றி கிருபன்.
அனேகமான பயணக் கட்டுரைகளை விரும்பி வாசிப்பேன்.இதை இன்னமும் தொடவில்லை.
என்றாலும் இந்தப் பொண்ணு ஏன் இராவணத் தீவு என்று யாருமே அழைக்காத பெயரை சூட்டி இருக்கிறா?

இப்ப தொட்டுவிட்டீர்களா சார்........!   😁

Link to post
Share on other sites
 • 2 months later...
 • கருத்துக்கள உறவுகள்

உலக முடிவு (World End)- நர்மி.

spacer.png

அந்த காலையில் என் கால்களுக்கு நான் மிகுந்த நன்றியுடையவளாக இருந்தேன். ஏனெனில் பூமியின் சுவர்க்க நிலத்தை நோக்கி அது அன்று என்னை நடத்திச் சென்றது. நடக்க நடக்க கால்கள் கற்றுத்தருகின்றன , நீண்டு நடக்கவும் , நிலைத்து நிற்கவும். இயற்கையின் பிரமிக்கிற அடைவுகளின் முன்,  பாதைகளின் முன் நான் மௌனித்து நிற்கின்றேன். ஒரே சுழல்வட்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் பாதங்கள் எவ்வளவு துயரம் நிறைந்தவை. ஓர்டன் சமவெளியெங்கும் நிற்கின்ற இந்த சாம்பர் மான்களைப் பார்த்ததன் பின்னர் ஹங்கேரிய கவிஞன் பெரன்க் யுஹாஸ் ( Ferenc  juhasz) இன் கவிதையொன்று எனக்கு ஞாபகத்திற்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. ஒர்டன் சமவெளியினை பார்த்ததன் பின்னர் இந்த சாம்பர் மான்களில் ஒன்றாக மாறி இந்தப் புல்வெளிகளில் திரியக்கூடாதா என்றிருந்தது. நகரத்தின் இறுக்கத்திலிருந்து ஒவ்வொரு மனிதனுமே இப்படிப்பட்ட வெளியில் தொலைந்து போகவே விரும்புவான். ” மானாக மாறிய சிறுவன் மர்மங்களின் வாசலில் கூக்குரலிடுகிறான் ” என்ற கவிதையது. மானாக மாறிய அவனை தாய் மீண்டும் வீட்டிற்கு அழைப்பாள் . அதற்குப் பதிலாக மானாக மாறிய நான் திரும்பிப் போக முடியாது என்பதை  பெரன்க் இப்படி எழுதியிருப்பார்.

” அன்னையே ! நான்

திரும்பிவர முடியாது

என்னை அழைக்காதே

நான் திரும்பி வந்தால்

என் கொம்புகள் உன்னைக்

குத்திக் கிழித்துவிடும்

என் கொம்பின்

ஒவ்வொரு கூரிய கிளையும் கல்லறை மெழுகு திரிகள்

நான் வந்தால்

எரிந்து போவாய் நீ

நம் வீடும் பாழாகிவிடும்

என் தந்தையின் எலும்புகளையும்

நான் தோண்டி எரிப்பேன்….

என்று மானின் குரலில் அவன் கதறுவதுபோல அந்தக் கவிதை நீண்டுசெல்லும். இயற்கையின் அமானுஷ்யங்களில் ஈர்க்கப்பட்ட, வசீகரிக்கப்பட்ட ஒரு ஆன்மாவின் நிலைகூட இறுதியில் அத்தகையது தான். அன்று என் மனநிலைகூட அத்தகையது தான்.

spacer.png

மனதிற்கினிய ஒரு இடத்தில் இயற்கைக்கு வெகு அருகாமையில் சிறிய ஒரு குடிசையொன்றைக் கட்டிக்கொண்டு வாழ்நாள் எல்லாம் இயற்கைக்கு அருகில் ஒரு எளிய வாழ்க்கை வாழ்ந்துவிட முடியுமானதாக இருந்தால் எப்படியிருக்கும்..? உண்மையில் அப்படிப்பட்ட இரசனையான மனிதர்கள் இந்த ஒர்டன் சமவெளியில் வாழ்ந்திருக்கிறார்கள். தன் அன்றைய எளிய வாழ்வின் மிகச்சிறிய வட்டத்திற்குள் அன்றைய தேவையைப் பூர்த்தி செய்தபடி , மரங்களின் பூக்கும் பருவத்தையும், உதிரும் பருவத்தையும் வைத்து காலத்தைக் கணித்தபடி , வசந்தத்தையும் , மழையையும், பனிக்காலத்தையும் கணித்தபடி ஓட்சையும், பார்லியினையும் பயிரிட்டபடி, இந்த குளிருக்குச் சுவைமிகுந்த போதையான பானங்களைத் தயாரிக்கத் தெரிந்தபடி ஆடுகளையும், மாடுகளையும் இந்த மலைமுகட்டிலும் , சமதரையிலும் மேய்த்தபடி  மனிதர்கள் இங்கு வாழ்ந்திருக்கின்றார்கள். இயற்கையோடு இயைபான ஒரு வாழ்க்கை.

spacer.png

அத்தகைய நிலத்தின் ஒர்டன் சமவெளியை ஊடறுத்து இருக்கிற உலக முடிவினை ( World End) நோக்கித்தான் அந்த காலை நடந்துகொண்டிருந்தோம்.  ” உலக முடிவு” அமானுஷ்யமும் , கவித்துவமும் நிரம்பிய இடம். கண்டி நகரத்திலிருந்து சில மணி தூரங்கள் நாங்கள் செல்ல வேண்டியிருந்தது. 3159.8 எக்டேர் பரப்பளவைக் கொண்ட ஒர்டன் சமவெளியின் உள்ளேதான் உலகத்தின் முடிவு இருக்கிறது. 4000 அடி (1200 m) ஆழமுள்ள ஒரு செங்குத்து பாறையைத் தொடர்ச்சியாகக் கொண்டு மொத்தம் இதனுடன் சேர்ந்து மூன்று செங்குத்து பாறைகளை உலகத்தின் முடிவு நிலம் என்கின்றார்கள்.

spacer.png

3159.8 எக்டேர் பரப்பளவையும்  2130 மீட்டர் (7000) அடி உயரத்தையும் கொண்ட இந்த இயற்கையின் சுவர்க்க வெளியில் வாழ்ந்த மகா எளிய மனிதர்கள் நிச்சயமாக உலகின் தலைசிறந்த இரசிகனாக இருந்திருக்கக்கூடும். வெறும் வாய் வார்த்தைகளுக்காக நான் அப்படிச் சொல்லவில்லை. இந்த இடம் அத்தகையது. இயற்கையின் சுவர்க்கபூமி போல, உலகின் முதல் ஆணும் , முதல் பெண்ணும் வாழ்ந்திருந்த இடம்போல ஒரு வெளி இது. இங்குள்ள புல்லில் இருந்து ,மரங்கள், பூக்கள், பறவைகள், நீர்வீழ்ச்சி, நதிகள் என ஒவ்வொன்றும் இலங்கைக்கே உரிய தனித்துவமானவை. இங்குள்ள 98 வகையான பறவைகளில் 21 மட்டும்தான் இலங்கைக்குரியது.  பெரும்பாலான பறவைகள் அயல்நாடுகளில் இருந்து இங்கு வருகின்றன.  இந்த பூமி அவர்களின் குளிர்கால வாசஸ்தலம் போன்றது.  உலகின் அழகும் , கவித்துவமும் சேர்ந்த இயற்கையின் பிரமாண்டம் எல்லாம் பறவைகளுக்கு எப்போதும் தெரிந்திருக்கின்றது.

spacer.png

ஒர்டன் சமவெளியில் வாழ்ந்த மகா எளிய மனிதர்களுக்கு முன் பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன் ஒருவனின் ஒரு நாள் எப்படியிருந்திருக்கும் என்று நினைத்துப் பார்க்கின்றேன். சாம்பர் மான்கள் நிரம்பி வழிகின்ற அந்த சமவெளியிலும் , மலைமுகட்டிலும் , மண்ணையும் , மரத்தையும் கொண்ட சிறு குடில்கள் இருந்திருக்கும். சில வேளைகளில் காட்டுயானைகள் நிறைந்த இந்தப்பகுதியில் மனிதன் பாதுகாப்பிற்காக மரங்களின் மேல் மரவீட்டை அமைத்திருக்கக்கூடும். மரப்பொந்துகளின் உள்ளே வசித்திருக்கக்கூடும். பெலிவுல் , பொகவந்தலா, அக்ரா ஆறுகளில் யானைகள் கூட்டம் கூட்டமாக நீர் அருந்திக்கொண்டும் , சேற்றில் விளையாடிக்கொண்டும்  இருந்திருக்கலாம்.

புல்லின் பனித்துளியைப் போர்வையாக்கி கோடிக்கணக்கான நட்சத்திரங்களையும் , நிலவினையும் சாட்சியாக வைத்து அந்த மலைவாசிகள் அவர்கள் காதலிகளைப் புணர்ந்திருக்கக்கூடும். இந்த ஒர்டன் சமவெளியில் கிடைக்கின்ற  நெலு (Strobilanthes sp) , போவிட்டியா ( Osbeckia sp) , பினர ( Exacum trioervium)  போன்ற இலங்கை தேசத்துக்கு மட்டுமே உரித்தான மலர்களை அவர்கள் அவர்களின் காதலிக்கு காதல் பரிசுகளாகக் கொடுத்திருக்கலாம். பலவர்ண ஓர்கிட் மலர்களில் மலர்கிரீடம் செய்து அவர்களது காதலிகளுக்குச் சூட்டி இயற்கையைச் சாட்சியாக வைத்து மணம் முடித்திருக்கலாம். அவர்களின் குழந்தைகள் இந்த புல்வெளியில் பிறந்திருக்கலாம். பாலுக்கும் , இறைச்சிக்கும் மந்தைகளை அவர்கள் கூடாரத்தில் வளர்த்திருப்பார்கள்.

ஒவ்வொரு அதிகாலையிலும் அவர்கள் அந்த மந்தைகளை ஒர்டன் சமவெளியிலிருந்து மலைமுகட்டின் உச்சிக்கு மேய்ச்சலுக்காகக் கொண்டு சென்றிருப்பார்கள். மலைமுகட்டின் முடிவில் உலக முடிவில் அமர்ந்தபடி இந்த வாழ்வை வெறித்துப்பார்த்துக் கொண்டிருந்திருக்கலாம், இல்லை வாழ்வைக் கொண்டாடிக்கொண்டு இருந்திருக்கலாம். நிச்சயம் அவர்கள் இசைப்பிரியர்களாக இருந்திருப்பார்கள். காட்டு மூங்கில்களில் புல்லாங்குழல்கள் செய்து  யாரோ ஒருவன் இந்த உலகமுடிவின் பாறையுச்சியில் அமர்ந்தபடி இசைத்துக்கொண்டிருந்திருப்பான். அது மலைகள் தோறும் எதிரொலித்திருக்கும். சூரிய அஸ்தமனத்திற்குப் பின் தன் மந்தைகளை அழைத்துக்கொண்டு அவன் கூடாரத்திற்குத் திரும்பியிருப்பான். குடிலின் முன்பாக நெருப்பு மூட்டியபடி சாம்பர் மான்களின் இறைச்சிகளை அவன் நெருப்பில் வாட்டியிருப்பான். பார்லியைக்கொண்டு அவர்கள் மதுபானத்தைத் தயாரித்திருப்பார்கள். அதை சுவைத்தபடி காதலுடன் வாழ்ந்திருப்பார்கள்.

இங்குள்ள கலோபியம் வகை , சிஸ்ஜியம் வகை, இராட்சச மரப்பன்னம் போன்ற மரங்களில் கோடிக்கணக்கான பறவைகள் கூடுகட்டி குஞ்சுகள் பொறித்து வாழ்ந்திருக்கும். நிச்சயம் இயற்கையோடு இணைந்த அழகும் , காமமும், காதலும் நிறைந்த வாழ்வொன்று அந்த மனிதர்களுக்கு இருந்திருக்கும்.

அதிசயம் என்னவென்றால் இன்றும்கூட அந்த நிலம் அப்படித்தான் இருக்கின்றது. இயற்கையின் ஆசீர்வாதம் நிரம்பிய பூமியாக. இங்குள்ள தொடுபலை மலைபற்றி சுவாரஸ்யமான கதையொன்று உள்ளது. சீதையை இந்தியாவிலிருந்து கடத்திய இராவணனின் புட்பக விமானம் இந்த மலையில்தான் தரையிறங்கியது என்று சொல்கிறார்கள். இப்படிப்பட்ட இடம் சீதையை எப்படி கவராது போனது. நிச்சயம் கவர்ந்திருக்கும். இப்படி இங்கிருக்கின்ற புல்லிலிருந்து மலை வரை ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு சுவாரஸ்யமான கதைகள். இப்படியெல்லாம் நினைத்தபடியே புல்வெளிகளையும், மலை முகடுகளையும் கடந்தபடி உலக முடிவினை அடைந்தோம். உலகத்தின் முடிவு நிலத்தையடைவது என்பது ஒரு பயணியின் மிகப்பெரிய கனவாக இருக்கக்கூடும். பயணங்களை நேசிக்கின்ற , கவித்துவமான நிலங்களில் எல்லாம் தன் கால் பதிக்கவேண்டும் என்று நினைக்கின்ற மனிதர்கள் நிச்சயம் பயணம் செய்யவேண்டிய இடமாக உலக முடிவைச் சொல்வேன்.

உலகத்தின் முடிவின் நிலம் இப்படித்தான் இருந்தது, உலகத்தின் முடிவு இவ்வளவு அழகானதா எனப் பிரமிக்கின்ற அளவு. எதுவுமற்ற ஒரு வெளி.

பறவையின் உதிர்ந்த இறகின் அசைகின்ற லாவகம் இருந்தால் எதுவுமற்ற இந்த மலைமுகட்டின் ஆழத்திற்குச் சென்று உலாவ முடியும். ஆனால் பாருங்கள் எடையற்ற இறகு ஒன்று எப்போதும் எதுவுமற்ற வெளியில் காற்றிற்கு ஏற்ப  மிகவும் உயர்ந்து பறக்கும். லாவகமாக அசைந்து கொடுக்கும்.

எதுவுமில்லாத  ஒன்றைப் பார்ப்பதற்கு உங்களுக்கு நீண்ட பொறுமை வேண்டும், நிறைய சக்தி வேண்டும்,  துணிவு வேண்டும். மனிதன் குழம்புவது எதுவுமற்ற ஒரு வெளியில்தான். உருவமற்ற ஒன்றை ஆகர்சிப்பது எப்படியென அவனுக்குத்  தெரியாது .  அதன் முன் மண்டியிடுவது எப்படியெனத் தெரியாது. அதனிடத்தில் எதுவும் இல்லாது மௌனியாகுதல் எப்படியெனத் தெரியாது. உருவமற்ற ஒன்றை அவன் மறக்க முனைகிறான். உருவமற்ற ஒன்றை நிறைத்துக்கொள்கிற அளவு அவன் வாழ்வோ மனதோ போதுமானதாக இல்லை. இந்த உலகிற்கு  அப்பாற்பட்ட எதற்கும் உருவமில்லை. இருப்பதெல்லாம் எதுவுமற்ற ஒரு வெற்று வெளி .மாயையான ஒரு வெளி தான் எல்லாம்.

spacer.png

வெற்றுத்தாள்கள் போலவும் பஞ்சுக்குழம்புகள் போலவும் இருக்கிற இந்த மாயை நிறைந்த சூனிய வெளியில் நீங்கள் உங்கள் வானவில்லை வரையுங்கள். உங்கள் நம்பிக்கையின், காதலின், வெறுப்பின், இருப்பின் ,இன்மையின், ஒரு துளியை தெளியுங்கள் உங்களுக்கான ஒரு மாய நம்பிக்கையைப் பிடித்துக்கொண்டு வெளியே வாருங்கள்.

எதுவுமற்ற ஒன்றுதான் மனிதனை குழப்பமடையச்செய்கிறது. கற்றதும் அறிந்ததும் சூனியவெளியில் எதுவுமற்றதாகின்றது. இந்த உலக முடிவின் நிலம் இதுவரை நீங்கள் உங்கள் பயணங்களில் கண்டடையாத முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தை உங்களுக்குத் தரக்கூடும்.


 • நர்மி
   

http://kanali.in/உலக-முடிவு-world-end-நர்மி/

Edited by கிருபன்
 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மிக அழகான தொடர்......பகிர்வுக்கு நன்றி கிருபன்.....!   👍

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.