கிருபன்

கொரோனா வைரஸ்: மூலிகை மருந்துகள் தீர்வு என இந்தியாவில் பரவும் தகவல்கள் உண்மையா? #BBCRealityCheck

Recommended Posts

கொரோனா வைரஸ்: மூலிகை மருந்துகள் தீர்வு என இந்தியாவில் பரவும் தகவல்கள் உண்மையா? #BBCRealityCheck

கொரோனா வைரஸ்: இந்திய பிரதமர் நரேந்திர மோதி பரிந்துரைத்த மருந்து தீர்வாகுமா?Getty Images

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, மக்கள் நடமாட்டத்துக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து அரசு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், இந்திய செய்தித் தொலைக்காட்சிகள் மற்றும் சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரவி வருகின்றன.

முன்னணியில் இருக்கும் சிலவற்றை நாங்கள் ஆய்வு செய்தோம்.

பாரம்பரிய மூலிகைகளும் வைரஸ் தாக்குதல்களும்

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிராக பிரதமர் திரு. நரேந்திர மோதியின் அணுகுமுறைகளில், பாரம்பரிய மூலிகைகளை எடுத்துக் கொள்ளுமாறு குடிமக்களுக்குக் கூறும் யோசனையும் அடங்கியுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதலைக் கட்டுப்படுத்த ஏழு அம்சத் திட்டத்தைத் திரு. மோதி அறிவித்தார்.

அதிகாரப்பூர்வமான வழிகாட்டுதலின்படி பரிந்துரைக்கப்பட்ட மூலிகை மருந்தை மக்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் திரு. மோதி கூறியுள்ளார். ``காதா'' என்ற பெயரிலான அந்த மருந்து ``நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும்'' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு வைரஸுக்கு எதிராக போரிடும் போது தான் நோய் எதிர்ப்பு சக்தி செயல்படுமே தவிர, இதுபோன்ற வழிகளில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

``இதுபோன்ற (சில உணவு வகைகள் நோய் எதிர்ப்பாற்றலைக் கூட்டும் என்பது போன்ற) தகவல்களுக்கு ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பது தான் பிரச்சினை'' என்று யேல் பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பாற்றல் துறையின் நிபுணர் அகிக்கோ இவசாகி கூறுகிறார்.

கொரோனா வைரஸ்: இந்திய பிரதமர் நரேந்திர மோதி பரிந்துரைத்த மருந்து தீர்வாகுமா?Getty Images

நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிப்பதற்குப் பாரம்பரிய கிச்சை முறைகளை இந்தியாவின் ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

இதில் பல சிகிச்சை முறைகள் கொரோனா வைரஸ் தாக்குதலைத் தடுப்பதற்கானது என குறிப்பாகச் சொல்லப்படுகிறது.

அவை அந்த வகையில் சிறப்பாக செயல்படும் என்பதற்கு அறிவியல்பூர்வ ஆதாரம் எதுவும் இல்லை.

இளஞ்சூடான நீரைக் குடிப்பது - அல்லது வினிகர் நீரில் அல்லது உப்பு கரைத்த நீரில் வாய் கொப்பளிப்பது தொடர்பான தகவல்கள் தவறானவை என்று இந்திய அரசின் உண்மை அறியும் பிரிவு நிரூபித்துள்ளது.

தேநீர் குடிப்பது இந்த நோயைத் தடுக்கும் என்ற பாரம்பரிய நிவாரணமாகக் கூறப்படும் விஷயத்தை நாங்கள் இங்கே ஆய்வுக்கு எடுத்துக் கொண்டோம். சீனாவில் உருவான போலியான இந்தத் தகவல் இந்தியா  உள்படப் பல பகுதிகளில் பரவியுள்ளது.

Banner image reading 'more about coronavirus' Banner

வைரஸ் தாக்கம் குறித்து இல்லாத ஓர் ஆய்வுக் கட்டுரை

இந்தியாவில் முடக்கநிலை அமல் செய்யாமல் போயிருந்தால் ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் 0.8 மில்லியன் பேருக்கு நோய்த் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்று ஆராய்ச்சிகள் காட்டுகின்றன என்று ABP News என்ற இந்தி தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது.

கொரோனா வைரஸ்: இந்திய பிரதமர் நரேந்திர மோதி பரிந்துரைத்த மருந்து தீர்வாகுமா?Getty Images

இந்தியாவில் மருத்துவத்தின் உயரதிகார அமைப்பான - இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலை (ஐ.சி.எம்.ஆர்.) - அது மேற்கோள் காட்டியிருந்தது.

இந்தியாவில் ஆளும் பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவர் அமித் மாளவியா இந்தச் செய்தியை ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். அதை ஆயிரக்கணக்கானவர்கள் பார்த்து மறுட்விட் செய்திருந்தனர்.

ஆனால் அதுபோல எந்த ஆய்வும் நடத்தப்படவில்லை என்று இந்தியாவின் சுகாதார அமைச்சகம் கூறிவிட்டது. ஐ.சி.எம்.ஆரும் அதே கருத்தைக் கூறியுள்ளது.

கொரோனா வைரஸ்: இந்திய பிரதமர் நரேந்திர மோதி பரிந்துரைத்த மருந்து தீர்வாகுமா?GoI

``முடக்கநிலை அமல் செய்ததால் எந்த அளவுக்கு தாக்கம் ஏற்பட்டது என்பது குறித்து ஐ.சி.எம்.ஆர். எந்த ஆய்வும் நடத்தவில்லை'' என்று அதன் ஆராய்ச்சி மேலாண்மை மற்றும் கோட்பாட்டுப் பிரிவு பிராந்தியத் தலைமை அதிகாரி டாக்டர் ரஜினிகாந்த் பிபிசியிடம் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சகமே மறுத்துவிட்ட நிலையிலும், தன் செய்தியில் இருந்து ABP News பின்வாங்கவில்லை.

கொரோனா வைரஸ்: இந்திய பிரதமர் நரேந்திர மோதி பரிந்துரைத்த மருந்து தீர்வாகுமா?ABP

இருந்தபோதிலும் நோய் பாதிப்பு எப்படி இருந்திருக்கும் என்பது குறித்து ``உள்ளுக்குள் ஆராய்ச்சி'' நடந்தது என்றும், அந்தத் தகவல் வெளியிடப்படவில்லை என்றும் அமைச்சகம் ஒப்புக்கொண்டுள்ளது.

முடக்கநிலை அமல் செய்யாதிருந்தால் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்பது தெரியாது. ஏனெனில் இந்தியாவில் மக்கள் மார்ச் 25 ஆம் தேதியில் இருந்தே வெளியில் செல்வதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டிருந்தன.

தேநீர் குடிப்பது பற்றி கட்டுக்கதை பதிவு

கொரோனா வைரஸ்: இந்திய பிரதமர் நரேந்திர மோதி பரிந்துரைத்த மருந்து தீர்வாகுமா?Getty Images

``இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஒரு கப் தேநீர் தீர்வாக இருக்கும் என்று யாருக்குத் தெரிந்திருக்கும்.'' பொய்யான இந்தத் தகவல் - சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது - சீன டாக்டர் வென்லியாங் சொன்னதாகப் பரவுகிறது. வுஹானில் இந்த வைரஸ் பரவியது பற்றி ஆரம்பத்திலேயே எச்சரித்த, பின்னர் அதே நோயால் இறந்துவிட்ட நிலையில், ஹீரோவாக மதிக்கப்படும் அவர் சொன்னதாக இந்தத் தகவல் பரவுகிறது.

தேநீரில் காணப்படும் மெதிலெக்ஸான்தைன்கள் - எனப்படும் பொருள் வைரஸ் தாக்கத்தைக் குறைக்கும் என்று தனது குறிப்புகளில் அவர் எழுதி வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

சீனாவில் கோவிட்-19 பாதித்த நோயாளிகளுக்குத் தினமும் 3 வேளை தேநீர் கொடுக்கப்பட்டது என்றும் கூறும் அந்தப் பதிவுகள் பரவலாகப் பகிரப்படுகின்றன.

தேநீரில் மெதிலெக்ஸான்தைன்கள் இருக்கிறது என்பது உண்மை.  அது காபி, சாக்லெட்டிலும் கூட இருக்கிறது.

ஆனால் இதன் தாக்கம் பற்றி டாக்டர் லீ வென்லியாங் ஆராய்ச்சி செய்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை. அவர் வைரஸ் நிபுணர் என்பதைக் காட்டிலும் கண் சிறப்பு மருத்துவர். - சீனாவில் கோவிட்-19 நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்த மருத்துவமனைகளிலும் தேநீர் தரப்படவில்லை.
 
https://www.bbc.com/tamil/india-52350644

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

இந்த உலகெங்கினும் உள்ள லொக்  டவுனில் தேவையில்லாத வருத்தங்களுக்கு  என்று சூப்பர் மார்க்கெட்டில் பொருள் வாங்க போவது போல் வைத்தியரை பார்க்க  வரிசையில் நிக்கும் நோயாளிகள் எங்கு போனார்கள் ?

அப்ப  இவ்வளவு காலமும் வைத்தியர்கள் முக்கியமாய் பல்லு  வைத்தியர்கள் தேவையில்லாமல் அதை புடுங்கி இதை புடுங்கி பணம் பார்த்து இருக்கினம் என்பது உண்மை .

கொரனோ  மூலம் பல உண்மைகள் உலகிற்கு சொல்லப்படுது .

தீர்வுகள் அருகில் இருந்தாலும் எவனாவது பட்டமெடுத்த அறிவாளி எனப்படுகின்றவர் அதை பிழை என்பதும் ஆனால் வைரஸ் எப்படி பரவுது எவ்வளவு நாள் உயிர்ப்புடன் இன்ன இடங்களில் இருக்கும் என்பதெல்லாம் தெரியாது அவருக்கு .

பல நூற்றாண்டு களாக ஸ்கெர்வி நோய்க்கு தீர்வை தேடி அலைந்து மனித குலம்   கடைசியில் கொள்ளை புறம் நிக்கும் தேசிக்காய் தான் தீர்வாகியது.

https://www.linkedin.com/posts/queen's-university-belfast_coronavirus-covid19-covid19uk-activity-6650458234136199168-1rYq?utm-source=twitter&utm-medium=organicsocial&utm-content=ba6cb70a-79ed-4cb1-a541-1262fcb67b92 

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, பெருமாள் said:

இதற்கு எனது தாயாரே சிறந்த உதாரணம். ஆரம்பத்தில் அருக்கு எந்த நோயும் இருந்ததில்லை. நாளடைவில் எனக்கு அப்பிடி இருக்கு இப்பிடி இருக்கு அங்க குத்துது இஞ்ச குத்துது, தல ஒரு மாதிரி இருக்கு என்றெல்லாம் சொல்லுவார். ஆனால் மருத்துவர்களால் எந்த நோயையும் கண்டுபிடிக்க முடியவில்லை. ☹️

ஆனாலும் மாதமொரு தடவையாகினும் தவறாது வைத்தியரிடம் செல்வார். அது சிறிது சிறிதாக அதிகரித்து கிழமைக்கு ஒருதடவை என்றாகியது. 😏

தற்போது கொறானாக் காலம். அவருக்கு மிகச் சாதாரண வியாதிகளைத் தவிர(காச்சல், தடிமன்) எந்த வருத்தமும் இல்லை. வைத்தியரிடமும் செல்வதில்லை. அவருடைய  வயது 72. 😉

நாங்களோ கொறோனாவுக்கு நன்றி சொல்ல வேண்டிய நிலையில் 😂.

  • Like 2
  • Haha 1

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, Kapithan said:

அது மட்டும்தானா மேல் உள்ள லிங்க் பற்றி சொல்லணும் உலகமெல்லாம் மாஸ்க் அடிபட  3d  பிரிண்டர் மூலமாக மாஸ்க் தயாரிப்பு மட்டுமல்ல nhs சப்பிளை நடக்குது .

Share this post

Link to post
Share on other sites
2 minutes ago, பெருமாள் said:

அது மட்டும்தானா மேல் உள்ள லிங்க் பற்றி சொல்லணும் உலகமெல்லாம் மாஸ்க் அடிபட  3d  பிரிண்டர் மூலமாக மாஸ்க் தயாரிப்பு மட்டுமல்ல nhs சப்பிளை நடக்குது .

அது மாஸ்க் அல்ல முகத்தைச் சுற்றிய பிளாஸ்டிக் கண்ணாடிக் கவசம். என்னுடன் வேலை செய்பவர்களும் எமது நிறுவனத்திலுள்ள 3d  பிரிண்டரினைப் பயன்படுத்தி இவற்றைச் செய்து கொடுத்தனர்.

Share this post

Link to post
Share on other sites
3 minutes ago, இணையவன் said:

அது மாஸ்க் அல்ல முகத்தைச் சுற்றிய பிளாஸ்டிக் கண்ணாடிக் கவசம். என்னுடன் வேலை செய்பவர்களும் எமது நிறுவனத்திலுள்ள 3d  பிரிண்டரினைப் பயன்படுத்தி இவற்றைச் செய்து கொடுத்தனர்.

ஆமாம் பிழை என்னில்தான்  face shields  என்பதை கவனிக்காமல் விட்டேன் .நன்றி திருத்தியமைக்கு .

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, பெருமாள் said:

இந்த உலகெங்கினும் உள்ள லொக்  டவுனில் தேவையில்லாத வருத்தங்களுக்கு  என்று சூப்பர் மார்க்கெட்டில் பொருள் வாங்க போவது போல் வைத்தியரை பார்க்க  வரிசையில் நிக்கும் நோயாளிகள் எங்கு போனார்கள் ?

தனிமைப்படுத்தல் முடிவடைந்ததும் அத்தனை வியாதிகளையும் திரட்டிக் கொண்டு வரிசையில் வருவார்கள். 😀. இது தவிர வீட்டில் சும்மா இருந்து சாப்பிட்டு, கொலஸ்ரரோனையும் சீனியையும் நன்றாக ஏற்றிக் கொண்டு புதிய வியாதிகளோடு படையெடுக்கப் போகிறார்கள் என்று மருத்துவர்கள் அஞ்சுகின்றனர்.

தனிமைப் படுத்தலில் சாதாரண காய்சல் போன்ற தொற்றுக் கிருமிகளால் ஏற்படும் நோய்கள் வரச் சந்தர்ப்பம் குறைவாகையால் தற்போது பிரச்சனைகள் குறைவு. 

 தினமும் அரை மணிநேரம் சாதாரண உடற்பயிற்சி செய்ய வேண்டும். இது முடியாதவர்கள் இடம் சிறியதாக இருந்தாலும் வீட்டுக்குள்ளேயே அரை மணி நேரம் நடக்கலாம். 

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
5 hours ago, Kapithan said:

இதற்கு எனது தாயாரே சிறந்த உதாரணம். ஆரம்பத்தில் அருக்கு எந்த நோயும் இருந்ததில்லை. நாளடைவில் எனக்கு அப்பிடி இருக்கு இப்பிடி இருக்கு அங்க குத்துது இஞ்ச குத்துது, தல ஒரு மாதிரி இருக்கு என்றெல்லாம் சொல்லுவார். ஆனால் மருத்துவர்களால் எந்த நோயையும் கண்டுபிடிக்க முடியவில்லை. ☹️

ஆனாலும் மாதமொரு தடவையாகினும் தவறாது வைத்தியரிடம் செல்வார். அது சிறிது சிறிதாக அதிகரித்து கிழமைக்கு ஒருதடவை என்றாகியது. 😏

தற்போது கொறானாக் காலம். அவருக்கு மிகச் சாதாரண வியாதிகளைத் தவிர(காச்சல், தடிமன்) எந்த வருத்தமும் இல்லை. வைத்தியரிடமும் செல்வதில்லை. அவருடைய  வயது 72. 😉

நாங்களோ கொறோனாவுக்கு நன்றி சொல்ல வேண்டிய நிலையில் 😂.

என்ட அம்மாவும் தான் ...பிள்ளைகள் ஊரில் இருக்கும் மட்டும் அரச ஆஸ்பத்திரிக்கு தான் ஏதாவது அவசரம் என்றால் போறது....பிள்ளைகள் வெளியில் வந்தவுடன் சும்மா ஒரு சின்ன வருத்தத்திற்கு பிரைவேட் கொஸ்பிட்டல் போறது...கிளீனிக் என்று ஒரு டொக்டரிடம் போய் தேவையில்லாமல் கண்ட பாட்டுக்கு மருந்தெடுத்து, மேலே போய் சேர்ந்திட்டா 😌...மருந்துக்களை கண்ட பாட்டுக்கு எடுக்க கூடாது ...கொஞ்ச காலத்தின் பின் வேலை செய்யாது 

3 hours ago, இணையவன் said:

தனிமைப்படுத்தல் முடிவடைந்ததும் அத்தனை வியாதிகளையும் திரட்டிக் கொண்டு வரிசையில் வருவார்கள். 😀. இது தவிர வீட்டில் சும்மா இருந்து சாப்பிட்டு, கொலஸ்ரரோனையும் சீனியையும் நன்றாக ஏற்றிக் கொண்டு புதிய வியாதிகளோடு படையெடுக்கப் போகிறார்கள் என்று மருத்துவர்கள் அஞ்சுகின்றனர்.

தனிமைப் படுத்தலில் சாதாரண காய்சல் போன்ற தொற்றுக் கிருமிகளால் ஏற்படும் நோய்கள் வரச் சந்தர்ப்பம் குறைவாகையால் தற்போது பிரச்சனைகள் குறைவு. 

 தினமும் அரை மணிநேரம் சாதாரண உடற்பயிற்சி செய்ய வேண்டும். இது முடியாதவர்கள் இடம் சிறியதாக இருந்தாலும் வீட்டுக்குள்ளேயே அரை மணி நேரம் நடக்கலாம். 

நானும் ஒரு உதாரணம்...இன்னும் கொஞ்ச நாள் வீட்ல இருந்தால் வெடித்திடுவேன்😂 ...என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று வேலைக்கு போறன் 

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, ரதி said:

என்ட அம்மாவும் தான் ...பிள்ளைகள் ஊரில் இருக்கும் மட்டும் அரச ஆஸ்பத்திரிக்கு தான் ஏதாவது அவசரம் என்றால் போறது....பிள்ளைகள் வெளியில் வந்தவுடன் சும்மா ஒரு சின்ன வருத்தத்திற்கு பிரைவேட் கொஸ்பிட்டல் போறது...கிளீனிக் என்று ஒரு டொக்டரிடம் போய் தேவையில்லாமல் கண்ட பாட்டுக்கு மருந்தெடுத்து, மேலே போய் சேர்ந்திட்டா 😌...மருந்துக்களை கண்ட பாட்டுக்கு எடுக்க கூடாது ...கொஞ்ச காலத்தின் பின் வேலை செய்யாது 

எனது தந்தயாருக்கு கர்றாக் (கண் புரை) பிரச்சனை. கண்டியிலுள்ள தனியார் கண் வைத்தியசாலைக்குத்தான் போவேன் என்று விடாப் பிடியாய் நின்றார். தனியார் வைத்தியசாலைக்குப் போனால் செலவுதான் மிஞ்சும். செய்யப் போகும் வைத்தியத்தில் நிச்சயம்  பெரிய வேறுபாடு இராது என்று எவ்வளவோ அடுத்துச்  சொல்லியும் கேட்ட்கவில்லை.

சரி போங்கோ என்று சொல்லியாயிற்று. 

ஒரு நாள் தற்செயலாய் எனக்கு நன்கு பரிச்சயமான வைத்தியர் ஒருவரைக் கண்டேன். பரஸ்பரம் குடும்பங்களை சுகம் விசாரிக்கும்போது என்னுடைய தகப்பனாரின் கண் புரை சத்திர சிகிச்சை பற்றி கூறினேன். அவர் கொழும்பிலுள்ள அரசினர் பொது வைத்தியசாலைதான் சிறந்தது. அங்கேதான் மிக நவீன வசதிகளெல்லாம் இருக்கென்று கூறி அங்கேதான் அனுப்புங்கோ என்றார். இதை எனது அப்பாவிடம் கூறினேன். சரி தம்பி நான் அங்கே போகிறேன் என்று கூறினார்.

கண் சத்திர சிகிச்சை முடிந்து வீடு வந்த பின்னர் கேட்டேன் " எப்படியப்பா ஒப்பறேசன். கண் எப்பிடி ஒருக்குதெண்டு. 

அப்பா கூறினார்

" தம்பி நல்லகாலம்.ரெண்டரை லட்சம்  ரூபாய் மிச்சம்"
 
😜😜😜😜

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, ரதி said:

நானும் ஒரு உதாரணம்...இன்னும் கொஞ்ச நாள் வீட்ல இருந்தால் வெடித்திடுவேன்😂 ...என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று வேலைக்கு போறன் 

அட நாங்கள் என்னவோ ரதி எண்டால்  கொடி இடையாள் !  அன்ன நடை !! என்றெல்லாம் எல்லவோ கற்பனை பண்ணி வச்சிருக்கிறம்??

  • Haha 1

Share this post

Link to post
Share on other sites
6 hours ago, Eppothum Thamizhan said:

அட நாங்கள் என்னவோ ரதி எண்டால்  கொடி இடையாள் !  அன்ன நடை !! என்றெல்லாம் எல்லவோ கற்பனை பண்ணி வச்சிருக்கிறம்??

எனக்கும் ஏமாற்றம்தான். 😂😂

Share this post

Link to post
Share on other sites
21 hours ago, Eppothum Thamizhan said:

அட நாங்கள் என்னவோ ரதி எண்டால்  கொடி இடையாள் !  அன்ன நடை !! என்றெல்லாம் எல்லவோ கற்பனை பண்ணி வச்சிருக்கிறம்??

கொடியிடையா😉 அப்படின்னா 🤔

Share this post

Link to post
Share on other sites
On 21/4/2020 at 20:06, ரதி said:

கொடியிடையா😉 அப்படின்னா 🤔

இந்த வீடியோவில் ஆடும் அழகிகளையும் பார்த்துப் பாடலையும் கேளுங்கள் புரியும்.

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.