Sign in to follow this  
ampanai

போற போக்கை பார்த்தல் பெட்ரொல் வாங்க காசு தருவார்கள்

Recommended Posts

உலக சந்தையில் பூட்டினும் சவூதியின் பின் சல்மானும் அமெரிக்காவின் மசகு எண்ணெய் ஏகாதிபத்தியத்திற்கு நெத்தியடி. இன்றுடன் முடிந்த அடுத்த மாதத்திற்கான கேள்வி விலை பூச்சியத்திற்கு கீழே

உலகத்தில் மசகு எண்ணெயை சேமித்து வைக்க இடமில்லை. அதனால், உங்களுக்கு சேமிக்க இடம் இருந்தால் எண்ணெய் இலவசம்

 

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 'போற போக்கைப்பார்த்தா பெற்றோல் வாங்கினா காசு தருவாங்களோ! ளோ! US oil prices plunged 78%, falling to to $4.04 per barrel Monday. That's the lowest level since NYMEX opened oil futures trading in 1983.' எனக் கூறும் சாத்தியமுள்ள உரை

https://www.cnbc.com/video/2020/04/20/watch-goldmans-jeffrey-currie-explain-whats-next-for-oil-after-a-futures-contract-went-negative.html

 

 

U.S. Oil Price Collapses To Lowest Level Since 1999 [Infographic]

 

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உரை

Share this post


Link to post
Share on other sites

மத்திய கிழக்கில் அமெரிக்காவின் செல்வாக்கை குறைக்கும் நோக்கத்துடன் சவூதியும் உருசியாவும் செயல்படுவதாக அமெரிக்க நாடு கூறுகின்றது. 

பீப்பாய் 100 அமெரிக்க டாலர்களாக இருந்த பொழுது அமெரிக்க தனது பொருளாதார பலத்தை முன்நகர்த்த ப்ராக்கிங் என்ற தொழில்நுட்பத்தை உருவாக்கியது. அதன் மூலம் தன்னிறைவு அடைந்தது.

இந்த பூச்சிய விலையில், இல்லை குறைந்த விலையில் சவூதி தப்பிப்பிழைக்கும் இணைகிறார்கள். 

ஆனால், பல அமெரிக்க நிறுவனங்கள் வங்குரோத்தாகும். 

உருசியாவின் ரூபிள் எண்ணெய் விலையுடன் நேரடியாக தொடர்பு கொண்டதால், ரூபிள் பெறுமதி குறையும். ஆனால், பின்னர் கூடும்பொழுது அது பூட்டினை பலப்படுத்தும். 

அமெரிக்காவின் ட்ரம்ப் ஒரு சிக்கலான நிலைக்குள் உள்ளார். 

விமானங்களை பறக்க வைக்க வேண்டுமா? வாகனங்களை ஓட வைக்க வேண்டுமா? 
இல்லை, மருத்துவ அதிகாரிகளை கேட்டு வர்த்தகத்தை பூட்டி வைத்திருக்க வேண்டுமா ? 
இல்லை, இன்றய நிலையில் இந்த எண்ணெய் நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்க வேண்டுமா ?  

Share this post


Link to post
Share on other sites

கோவிட்டாரின் வருகைக்கு முன்னராக உலகம் நூறு மில்லியன்கள் பீப்பாய்களை நாளுக்கு பூமித்தாயின் மடியில் இருந்து எடுத்தது. 

கோவிட்டாரின் வருகையால், உலகம் முடங்கியது. உற்பத்தி 25-30 மில்லியன்களால் குறைந்தது.  

இப்பொழுது அமெரிக்கா தனது உற்பத்தியையும் குறைத்து மற்றையவர்களையும் குறைக்க கேட்க்கின்றது.இங்கே தான் அரசியல் மற்றும் கழுத்தறுப்பு திட்டங்களும் தீட்டப்படுகின்றன.  

சவூதி தான் கழுத்தறுத்த ஊடகவியலாளர் பிரச்சனையை கை விட கேட்க்கின்றதாம். 

பூட்டின், யாருக்கும் தெரியாது அந்த சூப்பர் மானின் நகர்வுகள். 

 

Share this post


Link to post
Share on other sites

ச்சா.....பெற்றோல் விலை நாயாய் பேயாய் குறைஞ்சிட்டுது. இந்த குப்பை மலிவிலை பெற்றோல் அடிச்சுக்கொண்டு 800கிலோமீற்றர் தூரத்திலை இருக்கிற என்ரை மச்சாள் வீட்டுக்கு போய் ஒரு தேத்தண்ணி குடிச்சிட்டு வருவமெண்டால் நாசமறுத்த கொறோனா குறுக்காலை நிக்குது. k6.gif

Share this post


Link to post
Share on other sites

அமெரிக்கா வரலாற்றில் முதன்முறையாக கச்சா எண்ணெய் விலை கடும் சரிவு

நியூயார்க்: கொரோனா வைரஸ் பாதிப்பால் அமெரிக்கா கச்சா எண்ணெய் விலையானது வரலாறு காணாத வீழ்ச்சியாக 0 டாலருக்கும் கீழே குறைந்துள்ளது.

கொரோனாவின் கொடூர தாக்கத்தால் உலக நாடுகள் நிலைகுலைந்துள்ளன. அமெரிக்காவிலும் பரவியுள்ள கொரோனா வைரசால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு கச்சா எண்ணெய் விலை கடும் சரிவை கண்டுள்ளது.

நேற்று அமெரிக்க பங்குச்சந்தை ( திங்கள்) தொடங்கியது முதலே கச்சா எண்ணெயின் விலை பெரும் வீழ்ச்சி அடைந்தது. அமெரிக்காவின் டபிள்யு.டி.ஐ., எனப்படும் வெஸ்ட் டெக்ஸாஸ் இண்டர்மீடியட் (WTI) கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு (-39.14 டாலர்) என 0 டாலருக்கும் கீழே குறைந்தது. அதே போன்று (Brent) பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை கடும் சரிவை சந்தித்து வந்தன.

வரலாற்றில் முதன் முறை

இதன் மூலம் அமெரிக்காவின் எண்ணெய் வர்த்தக வரலாற்றில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை ஒரு டாலருக்கும் கீழ் சென்றது வரலாற்றில் இது தான் முதன்முறை என கூறப்படுகிறது. அமெரிக்க சந்தையில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத வீழச்சிக்கு கொரோனா பாதிப்பு தான் என கூறப்படுகின்றன.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2524985

Share this post


Link to post
Share on other sites

 

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this