Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

சென்னையில் கரோனாவால் உயிரிழந்த மருத்துவர் உடலைப் புதைக்க எதிர்ப்பு..


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

சென்னையில் கரோனாவால் உயிரிழந்த மருத்துவர் உடலைப் புதைக்க எதிர்ப்பு; ஆம்புலன்ஸை உடைத்து ஊழியர்கள் மீது  தாக்கு: 20 பேர் கைது

 

550467.jpg

சென்னையில் மனிதாபிமானமற்ற செயலாக கரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர் உடலைப் புதைக்க எதிர்ப்புத் தெரிவித்து அவரது உடலைக் கொண்டுவந்த மருத்துவப் பணியாளர்களைத் தாக்கி, ஆம்புலன்ஸை உடைத்த சம்பவம் நடந்துள்ளது.

சென்னையில் பணியில் இருந்த மருத்துவர் ஒருவர் கரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். நேற்றிரவு ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடலைப் புதைக்க அண்ணாநகர் எல்லைக்கு உட்பட்ட காந்திநகர் வேலங்காடு சுடுகாட்டுக்குக் கொண்டு வந்தனஃப்ர். அப்பகுதி அருகே உள்ள அன்னை சத்யா நகரைச் சேர்ந்த சிலர், மருத்துவர் உடலை இங்கே கொண்டு வரக்கூடாது, திருப்பி எடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறித் தகராறில் ஈடுபட்டனர்.

உடன் வந்த பணியாளர்கள் எடுத்துச் சொல்லியும் கேட்காமல் கற்களாலும், கட்டைகளாலும் ஆம்புலன்ஸைத் தாக்கினர். இதனால் ஆம்புலன்ஸின் முன்பக்கக் கண்ணாடி உடைந்தது. ஆம்புலன்ஸை ஓட்டி வந்த ஓட்டுநர் ஆனந்துக்கும் (30) அவருடன் வந்த மற்றொரு பணியாளர் தாமோதரனுக்கும் (28) மண்டை உடைந்தது.

ரத்தம் சொட்டச் சொட்ட அவர்களிடம் தப்பித்து பிரேதத்துடன் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைக்குத் திரும்பிச் சென்றனர். பின்னர் கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவர் தலையிலும் தையல் போடப்பட்டு கட்டுப் போடப்பட்டது. இருவரும் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.

சம்பவம் குறித்துத் தகவலறிந்த போலீஸாரும், மாநகராட்சி அதிகாரிகளும் தலையிட்டு அதே ஆம்புலன்ஸ் வாகனத்தில் பிரேதத்தை இரவு 1 மணியளவில் வேலங்காடு கல்லறைக்குக் கொண்டு வந்து அடக்கம் செய்தனர்.

மேலும் அப்போதும் போலீஸாருடனும், அதிகாரிகளுடனும் தகராறு செய்து, பணி செய்ய விடாமல் தடுத்த 20 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும் 10க்கும் மேற்பட்டோரைத் தேடி வருகின்றனர்.

1587368003110.jpg

கைது செய்யப்பட்டவர்கள் மீது ஐபிசி பிரிவு 188 (ஊரடங்கை மீறுதல்), பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் ஐபிசி 269 (தொற்றுநோய் தடுப்பு சட்டம்), 145 (சட்டவிரோதமாக கூடுதல்), 341 (இயங்கவிடாமல் தடுத்து சிறைப் பிடித்தல்), 294 (பி) (அவதூறாகப் பேசுதல்), 353 (ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தல்), 506 (1) கொலை மிரட்டல் மற்றும் பொதுச் சொத்தை சேதப்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரோனா குறித்த சமூகப் பரவல் மீது அக்கறையில்லாமல், அரசின் எச்சரிக்கையை மதிக்காமல் ஒரு பக்கம் மக்கள் சாலைகளில் திரிகின்றனர். இன்னொரு பக்கம் இறந்தவர்களின் உடலைப் பாதுகாப்புடன் புதைக்க முயன்றால், தடுக்கின்றனர். இச்சம்பவங்கள் தமிழகம் முழுவதும் நடக்கின்றன. நேற்று ஈரோடு நம்பியூரிலும் மரணமடைந்த 17 வயதுச் சிறுவனின் உடலைப் புதைக்கவிடாமல் தகராறு செய்துள்ளனர்.

"உண்மையிலேயே கிருமித் தொற்று பரவாமல் இருக்க வேண்டுமானால், அரசு கூறியுள்ள ஊரடங்கை முறையாகக் கடைப்பிடித்து அவசியமான நேரத்தில் மட்டுமே வெளியில் வர வேண்டும். அந்த நேரத்திலும் சமுதாய விலகலைக் கடைப்பிடிப்பதுதான் சரி. அதைவிடுத்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது தெளிவின்மையைக் காட்டுகிறது" என்று காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தமிழ் இந்து

 

கொரோனாவால் இறந்த டாக்டர்.. அடக்கம் செய்ய விடாமல் தாக்கிய மக்கள்.. நடந்தது என்ன? உடனிருந்தவர் பேட்டி

 

 

சென்னை: நேற்று கொரோனா காரணமாக பலியான மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய கீழ்பாக்கம் பகுதி மக்கள் அனுமதிக்காத சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட மருத்துவர் நேற்று சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் பலியான சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர் நரம்பியல் நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது. கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்த இவர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் கொரோனா பாதிப்போடு அனுமதிக்கப்பட்டார். தனியார் மருத்துவமனை ஒன்றில் இவர் நிர்வாக இயக்குநராக இருந்தவர். அப்போலோவில் தீவிரமாக இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பலியானார்.
 
உடல் அடக்கம்:

அப்போலோ மருத்துவமனையில் இருந்து நேற்று இரவு இவரின் உடலை மயானத்தில் தகனம் செய்ய எடுத்து சென்றுள்ளனர். நேற்று இரவு இவரின் உடலை தகனம் செய்ய கீழ்பாக்கம் பகுதிக்கு எடுத்து சென்றனர். மாநகராட்சி அனுமதியுடன் கீழ்பாக்கம் பகுதியில் உடலை தகனம் செய்ய கொண்டு சென்றுள்ளனர். இந்த செய்தி அறிந்து மக்கள் வேகமாக கீழ்ப்பாக்கத்தில் உடல் தகனம் செய்யப்பட வேண்டிய இடத்திற்கு வந்துள்ளனர். அங்கு வந்த கீழ்பாக்கம் பொதுமக்கள் இவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

 ஆம்புலன்ஸ் வாகனம்:

அதோடு அந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை மிக மோசமாக தாக்கி உடைத்து உள்ளனர். ஆம்புலன்ஸ் ஓட்டுனரை கற்களை கொண்டு தாக்கியுள்ளனர். இதையடுத்து அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள், மருத்துவரின் உடலோடு வேகமாக அங்கிருந்து தப்பித்து சென்றனர். மருத்துவரின் மனைவி மற்றும் குழந்தைகளும் ஆம்புலன்சில் இருந்துள்ளனர். அவர்களும் இந்த தாக்குதலில் மோசமாக காயம் அடைந்துள்ளனர்.

கீழ்பாக்கம் சென்றது:

அதன்பின் அங்கிருந்து உடலை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு மருத்துவரின் உறவினர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களை விட்டுவிட்டு, அவர்களுக்கு முதலுதவி அளிக்க கூறியுள்ளனர். அங்கிருந்து ஒரு மருத்துவர் இரண்டு உதவியாளர் மட்டும் அந்த மருத்துவரின் உடலை ஆம்புலன்ஸ் ஒன்றில் எடுத்துக் கொண்டு வேளங்காடு மயானத்துக்கு எடுத்து சென்றனர்.

கொண்டு சென்றனர்:

பின் வேளங்காடு மயானத்தில் இரவோடு இரவாக உறவினர்கள் இல்லாமல், மருத்துவர் உடலை புதைத்து உள்ளனர். இந்த கோர சம்பவம் குறித்து விளக்கிய பலியான மருத்துவரின் நண்பர் மருத்துவர் பாக்கியராஜ் முக்கிய விஷயங்களை பகிர்ந்துள்ளார். அவர் தனது வீடியோவில் , என்னுடைய நண்பர் கொரோனா காரணமாக பலியானார். அப்போலோ கிரீம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் பலியானார்.

புதைக்க முடியவில்லை:

அவரின் உடலை அனுமதியோடு அடக்கம் செய்ய சென்றோம். ஆனால் மக்கள் அதற்கு அனுமதிக்கவில்லை. எங்குமே அவரின் உடலை அடக்கம் செய்ய முடியவில்லை. இதை நான் கண்ணீரோடு சொல்கிறேன். அவர் ஒரு சிறந்த மருத்துவர். ஆனால் அவருக்கு மக்கள் மரியாதை செய்யவில்லை. மக்களுக்கு உதவி செய்ய பணியாற்றிய மருத்துவருக்கு இதுதான் நிலை. அடியாட்கள் போல வந்து கல்லையும், கட்டையும் வைத்து மிக கொடூரமாக தாக்கினார்கள். மருத்துவரின் உடலை போட்டுவிட்டு ஓடிவந்தோம்.

உருக்கமாக கண்ணீர்:

அந்த அளவிற்கு மோசமான நிலை ஏற்பட்டது. கடைசியில் வேறு இரண்டு மருத்துவர்கள் அவரின் உடலை மீட்டு வந்து அடக்கம் செய்தனர். "இதுதான் மருத்துவர்களுக்கு நீங்கள் செய்யும் மரியாதையா? இதுதான் நீங்கள் எங்களுக்கு கொடுக்கும் நன்றிக்கடனா? அவரின் ஆத்மா சாந்தி அடையுமா சொல்லுங்கள்?.. எங்களை எல்லாம் கல்லை வைத்து ஏன் அடிக்கிறீர்கள்..? இனி யாருக்கும் இப்படி ஒரு நிலை வர கூடாது" என்று டாக்டர் பாக்யராஜ் உருக்கமாக கூறியுள்ளார்.


 
Edited by ராசவன்னியன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மிகவும் கேவலமான... வேலையை செய்துள்ளார்கள்.
எப்போதுதான்... மனிதன், திருந்தப் போகிறானோ.... 😢

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

94225270_2528360997414338_2473357647269593088_o.jpg?_nc_cat=107&_nc_sid=8bfeb9&_nc_ohc=rUSuIVRSgCwAX-Afwlz&_nc_ht=scontent-frt3-1.xx&oh=6abd5d9439d1a5ec5fbc9ac1c8340dfe&oe=5EC5B4F7

 

94016662_2528315744085530_6079575436403146752_o.jpg?_nc_cat=108&_nc_sid=8bfeb9&_nc_ohc=VYcsDzytdi0AX9NPfr0&_nc_ht=scontent-frt3-1.xx&oh=b75eb1250fe6176608ea2fc39e515696&oe=5EC273D9

உங்களுக்கு இருக்குற வலி தானே... அந்த டாக்டர் குடும்பத்துக்கும் இருக்கும்.

 

93545727_2528307210753050_1163849825553219584_o.jpg?_nc_cat=110&_nc_sid=8bfeb9&_nc_ohc=_bIaRAnAaqkAX82lKaS&_nc_ht=scontent-frx5-1.xx&oh=b1138379bb9c898db494e214749545c0&oe=5EC377EF

 

93638487_2528173237433114_3811977130980409344_o.jpg?_nc_cat=111&_nc_sid=8bfeb9&_nc_ohc=4FJVkaB1n8UAX-VBEJ2&_nc_ht=scontent-frx5-1.xx&oh=7dff927bb7947b48c757966e36b0a76a&oe=5EC568F0

Edited by தமிழ் சிறி
 • Like 1
Link to comment
Share on other sites

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • சீனாவின் கடன் பொறியும் குளோபல் கேட்வே திட்டமும்   http://www.samakalam.com/wp-content/uploads/2021/10/Nixon-150x150.png–சீனாவின் கடன் பொறிக்குள் இருந்து இலங்கையை மீட்க அமெரிக்க- இந்திய அரசுகளுக்கு முடியுமா இல்லையா என்பதைவிட, இலங்கை எந்தத் திட்டத்தையும் தனக்குச் சாதகமாக்கி ஈழத்தமிழர் விவகாரத்தைச் சர்வதேச அரங்கில் இருந்து முற்காக நீக்கம் செய்வதற்கான சந்தர்ப்பங்களே அதிகரித்து வருகின்றன–   -அ.நிக்ஸன்- இலங்கை போன்ற குறைந்த வளர்ச்சியுடைய நாடுகள் சீனாவின் கடன் பொறிக்குள் சிக்குண்டு இருப்பதாக மேற்கத்தைய ஊடகங்கள் விமர்சித்து வரும் நிலையில், அந்தக் கடன் பொறியில் இருந்து இந்த நாடுகளை மீட்கும் நோக்கில், குளோபல் கேட்வே (Global Gateway)  எனப்படும் உட்கட்டமைப்புத் திட்டம் ஒன்றை ஐரோப்பிய ஒன்றியம் புதிதாக ஆரம்பித்துள்ளது. 2027 ஆம் ஆண்டிற்குள் 300 பில்லியன் யூரோக்கள் ($341 பில்லியன்) பொது மற்றும் தனியார் நிதிகளில் வெளிநாடுகளில் EU உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதியளிக்கிறது. இத் திட்டம் சீனாவின் பட்டுப்பாதைத் திட்டத்திற்கு (China’s Belt and Road Initiative-BRI) போட்டியாகவே இருக்குமென்பதில் மாற்றுக் கருத்தில்லை. குளோபல் கேட்வே திட்டம் தொடர்பான  ஐரோப்பிய ஊடகங்களின் விமர்சனத் தொனியும் சீனாவின் பட்டுப்பாதைத் திட்டத்திற்கு மாற்றானதாகவே தெரிகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் அமெரிக்காவும் பிரித்தானியாவும் அங்கம் வகிக்கவில்லை. ஆனாலும் குளேபல் கேட்வே என்ற உட்கட்டுமானத் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் இந்தோ- பசுபிக் மற்றும் தென் சீனக் கடல் பாதுகாப்பு விவகாரங்களில் இலங்கை, மியன்மார் போன்ற சிறிய குறை வளர்ச்சியுள்ள நாடுகளைத் தங்கள் பக்கம் ஈக்க முடியுமென அமெரிக்க போன்ற மேற்கத்தைய நாடுகள் நம்புகின்றன. சீனாவின் ஆக்கிரமிப்பில் இருந்து தாய்வானைப் பாதுகாக்கவும் நிதியுதவி செய்யலாமென்ற எதிர்ப்பார்ப்பும் உண்டு. ஏனெனில் குளோபல் கேட்வே எனப்படும் இத் திட்டத்திற்கான ஆவணத்தில் சீனாவின் பெயர் குறிப்படப்படவில்லை. ஆகவே இத் திட்;டத்திற்குப் பின்னால் உள்ள அரசியல் கணக்கீடு, சீனாவின் பட்டுப்பாதைத் திட்டத்திற்கு எதிரானதே என்ற முடிவுக்கு வரலாம். ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஜேர்மன் தூதுவர் மைக்கேல் கிளாஸ், இந்தத் திட்டம்  EU ஐ மிகவும் பயனுள்ள புவிசார் அரசியல் வீரராக மாற்றும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்கிறார். அத்துடன் இத்திட்டம் சீனாவின் பட்டுப்பாதைத் திட்டத்திற்கு மாற்றீடானது என்ற தொனியிலும் அவர் விபரிக்கிறார். கொவிட்-19 தொற்றுநோய், உலகப் பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இலங்கை, மியன்மார் போன்ற குறைந்த வளர்ச்சியுடைய நாடுகளின் பொருளாதாரம் மீளெழும்ப முடியாத நிலைமைக்குள் வந்துள்ளது. இதனால் குளோபல் கேட்வே என்ற திட்டம் பயனளிக்கும் என்று கூறினாலும், இதன் பின்னணியில் புவிசார் அரசியல் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. ஐரோப்பாவின் பொருளாதார வெற்றியின் பெரும் பகுதி ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளைக் கொள்ளையடித்ததன் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டதாகக் குற்றம் சுமத்தியுள்ள சீனாவின் குளோபல் ரைம்ஸ் என்ற ஆங்கில ஊடகம், கொவிட் 19 நோய்த் தாக்கத்தின் பின்னர் இலங்கை போன்ற நாடுகளுக்கான நிதியுதவிகளை ஐரோப்பிய நாடுகள் குறைத்திருந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. மேற்கு மற்றும் ஐரோப்பாவில் கடந்த இரு ஆண்டுகளாக நிதி நெருக்கடி ஏற்பட்டிருந்தவொரு சூழலில், இலங்கை போன்ற நாடுகளுக்குச் சீனா உதவியளித்ததாகவும் குளோபல் ரைம்ஸ் பகிரங்கப்படுத்தியுள்ளது. சீனாவின் பட்டுப்பாதைத் திட்டம் ஐரோப்பிய ஒன்றியத்தின் குளோபல் கேட்வே என்ற உட்கட்டுமானத் திட்டத்தில் இருந்து வேறுபட்டதெனவும், குறைந்த வளர்ச்சியுடைய நாடுகளின் பொருளாதார ஒத்துழைப்பில், சீனா பெரும் வெற்றியை அடைய முடிந்தமைக்குக் காரணம் எந்தவொரு அரசியல் பின்னணியும் இல்லாமையே என்றும் குளோபல் ரைம்ஸ் சீனாவை நியாயப்படுத்துகின்றது. http://www.samakalam.com/wp-content/uploads/2021/12/chinas-debt-tarp.jpg ஆனால் சீனாவின் பட்டுப்பாதைத் திட்டத்திற்கு அரசியல் பின்னணி இருப்பதாலேயே ஐரோப்பிய ஒன்றியம் குளோபல் கேட்வே திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்த நேரிட்டது என்ற தொனியில் ஜேர்மன் தூதுவர் மைக்கேல் கிளாஸ் கருத்து வெளியிட்டிருக்கிறார். குளோபல் கேட்வே திட்டத்தைச் செயல்படுத்தும் போது ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் போன்ற மதிப்புகள் வலியுறுத்தப்படும் என்றும் தூதுவர் மைக்கேல் கிளாஸ் வலியுறுத்துகிறார். ஆகவே இத் திட்டத்தை ஊக்குவிக்கும் நோக்கிலேயே சீனாவின் கடன் பொறிக்குள் குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகள் என்று அமெரிக்க ஊடகங்கள் குற்றம் சுமத்துவதற்கான காரணங்கள் என்று கூறலாம். குறிப்பாக சீனாவின் கடன் பொறிக்குள் சிக்குண்டதால், சிறிய நாடான உகண்டா தனது ஒரேயொரு விமான நிலையத்தைச் சீனாவிடம் இழந்தது என்ற செய்தி கடந்தவாரம் சர்வதேச ஊடகங்களில் முக்கியம் பெற்றிருந்தது. இதன் பின்னணிலேயே சீனாவின் கடன் பொறிக்குள் உகண்டா என்ற செய்திகளுக்குச் சீனத் தூதரகம் மறுப்பு வெளியிட்டிருந்தது. சீனக் கடன் பொறி என்பது மேற்குல நாடுகளின் மிகைப்படுத்தப்படட கற்பிதம் என சீனத் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது. இலங்கையைப் பொறுத்தவரை சீன அபிவிருத்தி வங்கியிடம் இருந்து தொடர்ச்சியாக நிதியுதவிகளைப் பெறுவதற்கான ஒப்பந்தங்களைக் கைச்சாத்திட்டுள்ளது. இது குறித்து அமைச்சர் ரமேஸ் பத்திரன செய்தியாளர்களிடம் கூறியுமுள்ளார். ஆகவே மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தற்போதைய அவசரமான நோக்கம், இலங்கை சீனாவிடம் இருந்து அதிகளவு நிதியுதவி பெறுவதைத் தடுக்க வேண்டும் என்பதே. http://www.samakalam.com/wp-content/uploads/2021/12/17onmoney1-superJumbo-e1638704640835.jpg இதற்காகவே குளோபல் கேட்வே திட்டத்தின் மூலம் இலங்கைக்குக் கூடுதல் நிதியுதவி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஜீ-7 மாநாட்டிலும் இலங்கை போன்ற நாடுகளுக்கு இந்தியா மூலமாகக் கூடுதல் உதவியளிக்கத் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. இந்தியாவுக்குச் சென்றிருந்த நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, புதுடில்லியில் இந்திய உதவித் திட்டங்கள் பற்றியே அதிகளிவில் கவனம் செலத்தியிருந்ததார். ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் போன்ற மதிப்புகள் மேற்படுத்தப்படும் என்பது குளேபல் கேட்வே திடடத்தின் பிரதான நோக்கங்களில் ஒன்று என்ற அடிப்படையில், அந்த நிதியுதவிகள் மூலம் உள்நாட்டு இனப் பிரச்சினைகளும் முடிவுக்கு வர வேண்டும் என்ற தொனி இலங்கைக்கு அமெரிக்காவினால்  உணர்த்தப்பட்டிருக்கின்றது. ஆனால் இலங்கை இனப்  பிரச்சினையை வெறுமனே மனித உரிமைப் பிரச்சினையாக மாத்திரமே அமெரிக்க- இந்திய அரசுகளினால் தற்போது அவதானிக்கப்படுகின்றன. இலங்கை. மியன்மார் போன்ற வளர்ச்சி குறைநத் நாடுகளில் இருக்கும் ஏனைய தேசிய இனங்களின் அரசியல் விடுதலைப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமென குளோபல் கேட்வே திட்ட ஆவணத்தின் பிரதான நோக்கங்களில் ஒன்றாகக் குறிப்பிடப்படவில்லை. மாறக இத்திட்டத்தின் மூலம் நிதியைப் பெறும் நாடுகள், தங்கள் மக்களின் மனித உரிமை மற்றும் ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்க வேண்டுமென்ற  விதப்புரைகள் மாத்திரமே குறிப்பிடப்பட்டுள்ளன இதனாலேயே இலங்கையும் ஓரளவுக்குத் திருப்திகரமாக அமெரிக்க- இந்திய அரசுகளின் ஈழத்தமிழர் தொடர்பான நகர்வுகளுக்கு இணக்கம் தெரிவித்திருக்கிறது. சீனாவைக் கட்டுப்படுத்த அறிமுகப்படுத்தப்பட்டுள்ள குளோபல் கேட்வே திட்டத்தை இலங்கையினால் புறக்கணிக்க முடியாது. அதேவேளை சீனாவின் பட்டுப்பாதைத் திட்டத்தில் இருந்தும் விடுபடமுடியாது. ஆனால் இந்தோ- பசுபிக் பாதுகாப்பு என்ற விடயத்தில் இலங்கை அமெரிக்க- இந்திய நலன் அடிப்படையில் செயற்படும் என்ற உத்தரவாதம் வழங்கப்பட்டிருக்கிறது. இலங்கை சீனாவிடம் நிதியுதவி பெறுவதில் அமெரிக்க- இந்திய அரசுகளுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரச்சினையில்லை. ஆனால் கடன்பொறிக்குள் விழுந்து இலங்கையின் முக்கியமான படைத் தளங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்களை சீனாவிடம் இழக்கும் ஆபத்தான நிலை வந்துவிடக்கூடாது என்பதிலேயே அமெரிக்க- இந்திய அரசுகள் கவனம் செலுத்துகின்றன. இலங்கையின் இறைமை பழைமைவாய்ந்தது, தனித்துவமானது என்ற பேச்சை அமெரிக்காவின் முன்னாள் இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்மியோ கடந்த ஆண்டு கொழும்பில் நின்றபோது கூறியிருந்தமைகூட இதன் பின்னணியில்தான். http://www.samakalam.com/wp-content/uploads/2021/12/global-gateway.jpg அப்படிப் பார்த்தால், ஈழத்தமிழர்கள் எதிர்பார்க்கும் அரசியல் விடுதலை இல்லை என்பது இங்கே தெளிவாகின்றது. ஜெனீவாவில் இலங்கைக்குக் கொடுக்கப்பட்ட காலம் அவகாசம் முடிவடைந்த நிலையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள அமர்வில் புதிய தீர்மானம் ஒன்றை அமெரிக்க- இந்திய அரசுகள் ஜேர்மன் மூலமாகக் கொண்டுவர முயற்சிக்கின்றன. இதனை அறிந்தே இலங்கை கடந்த செப்ரெம்பர் மாதத்தில் இருந்து காய்களை நகர்த்த ஆரம்பித்துள்ளது. இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு, ஒன்று- ஜெனீவா தீர்மானங்கள் முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை என்ற குற்ற உணர்வு. இரண்டாவது- சில சமயங்களில் இன அழிப்புப் பற்றிய பேச்சுக்கள், அல்லது சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைப்பது என்ற கதைகள் வெறுமனே ஒப்பாசாரத்துக்கேணும் முன்னெடுக்கப்பட்டால், அதனால் எழக்கூடிய பக்கவிளைவுகள் இலங்கை அரசு என்ற கட்டமைப்புக்கு ஆபத்தானதாக இருக்கும் என்ற அச்சம். ஆகவே இந்த இரு காரணங்களின் அடிப்படையில் இலங்கை தற்போது அமெரிக்க- இந்திய அரசுகள் முன்னெடுக்கும் திட்டத்திற்கு இணங்கியிருக்கின்றது. அதற்குச் சாதகமாக இலங்கை அரசியல் யாப்புச் சட்டத்தில் உள்ள 13ஐ நடைமுறைப்படுத்த ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளது. சிங்கள மக்களுக்கு நோகாமல், 13 ஐ முன்னெடுப்பதன் மூலம் அமெரிக்க- இந்திய அரசுகளைத் திருப்திப்படுத்தலாம் எனவும் இலங்கை நம்புகின்றது. அத்துடன் காரியம் சித்தியடைந்தவுடன் 13 ஐ எப்படி அகற்றிவிடலாமென்ற திட்டங்களும் இலங்கையிடம் இல்லாமலில்லை. (இது அனைத்துச் சிங்கள அரசியல் தலைவர்களுக்கும் பொருந்தும்) போர் இல்லாதொழிக்கப்பட்ட 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில், ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்கு எப்படியான தீர்வு முன்வைக்கப்பட வேண்டுமென்பதைவிட. இலங்கை அரசைத் திருப்திப்படுத்திச் சீனாவின் பட்டுப்பாதைத் திட்டத்தை எப்படி முறியடிக்கலாம் என்பதே அமெரிக்க- இந்திய அரசுகளின் பிரதான இலக்காக இருந்து. அதற்காக 2012 இல் இருந்து ஜெனீவா என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி இலங்கையில் ஆட்சி மாற்றங்களைச் செய்தும் பயனளிக்கவில்லை. இந்த நிலையில், சீனாவின் கடன்பொறிக்குள் சிக்கியிருக்கும் நாடுகளை மீட்பதற்கு குளோபல் கேட்வே உட்கட்டுமானத் திட்டம் இலகுவாக வெற்றியளிக்குமா என்ற சந்தேகங்களே விஞ்சியுள்ளன. சீனாவின் கடன் பொறிக்குள் இருந்து இலங்கையை மீட்க அமெரிக்க- இந்திய அரசுகளுக்கு முடியுமா இல்லையா என்பதைவிட, இலங்கை எந்தத் திட்டத்தையும் தனக்குச் சாதகமாக்கி ஈழத்தமிழர் விவகாரத்தைச் சர்வதேச அரங்கில் இருந்து முற்காக நீக்கம் செய்வதற்கான சந்தர்ப்பங்களே அதிகரித்து வருகின்றன. ஏனெனில், இன்றுவரை அமெரிக்க- இந்திய அரசுகளுக்கு இலங்கை செல்லப்பிள்ளையாக இருப்பதே அதற்குப் பிரதான காரணம். https://www.samakalam.com/சீனாவின்-கடன்-பொறியும்-க/?fbclid=IwAR2YC5aYpEOS2q5Hr55R-H7xCoQz7462n7s3Qf7VXIigUDJADW4AFtKrdFY
  • மறதியாளர்களாகவும், மன்னிப்பவர்களாகவும் இருப்பதை தவிர தமிழர்களுக்கு வேறு வழியில்லையே!   Nadarajah Kuruparan யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் எடுக்கப்பட்ட இந்தப்படத்தில் முன்னிலையில் இருப்பவர்கள் ஜாதிக ஹெல உறுமயவின் முன்னாள் முக்கியஸ்த்தரும், முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினரும், 43ஆவது படையணியின் இணைப்பாளருமான, பாட்டளி சம்பிக்க ரணவக்க. (Patalee champika ranawaka.) இவர் கடுமையான இனவாதக் கருத்துகளின் முன்னைநாள் சொந்தக்காரராகவும் இருந்தவர். நல்லாட்சி அரசாங்கத்தில் 50 வீத ஞானோதயத்தைப் பெற்றவர். மற்றையவர் சிறிலால் லக்திலக (Shiral Lakthilaka) 90களில் சாள்ஸ் அபயசேகர தலைவராக இருந்த போது, நிதிக்கும் சமத்தவத்திற்கும் இயக்கத்தில் (movement for justice and equality) மனித உரிமைச் செயற்பாடுகளிலும், சட்டம் சார்ந்த விடயங்களிலும் பணியாற்றியவர். அக்காலப்பகுதியில் நாமும் பணியாற்றிய இதே அமைப்பே சரிநிகர் மற்றும் யுக்த்திய பத்திரிகைகளை வெளியிட்டு இருந்தது.. 2000 ஆண்டுகளின் பின் அரசியலில் புகுந்த சட்டத்தரணி சிறிலால் லக்திலக ஐக்கியதேசியக் கட்சியின் மேல்மாகாணசபை உறுப்பினராக இருந்து அதில் இருந்து வெளியேறி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் ஆலோசகராக பணியாற்றி, இப்போ சம்பிக்க ரணவக்கவின் அருக்கில் இருக்கிறார். இனி விடயத்திற்கு வருவோம் – ”கடந்த காலத்தில் நடந்த இரத்தம் சிந்திய நிகழ்வுகளை மறக்க முடியாவிட்டாலும், அவற்றை மறந்து அவற்றிற்கு மன்னிப்புக் கொடுத்து தற்போது உள்ள பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்க முடியும் என்பதை நாங்கள் சிந்திக்க வேண்டும்” என பாட்டலி சம்பிக்க ரணவக்க கோரிக்கை விடுத்துள்ளார். அதுமட்டும் அல்ல ”புலம்பெயர்ந்தவர்கள் எம்முடன் மீண்டும் இணைந்து கைகோர்க்க வேண்டும். கடந்த காலத்தில் நடந்த இரத்தம் சிந்திய வரலாற்றை மறக்க முடியா விட்டாலும் அவற்றை மன்னிக்க வேண்டும்” எனகேட்டுள்ளார். ”சிங்கள மக்கள் பெருவாரியான வாக்குகளை தற்போதைய ஜனாதிபதிக்கு வழங்கியிருந்தார்கள். ஆனாலும் தற்போது அதே சிங்கள மக்கள் அவரை வெறுக்கின்றார்கள். 2023 ஆம் ஆண்டு இடம் பெறும் ஜனாதிபதித் தேர்தலில் நேர்மையான துஷ்பிரயோகத்திற்கு எதிராக செயற்படுகின்ற ஒருவர் களமிறக்கப்படுவார்.” ”எங்களைப் பொறுத்தவரை நாங்கள் சொல்வதை தான் செய்வோம் செய்வதைச் சொல்வோம் எங்களுடன் நீங்களும் கைகோர்க்க வேண்டும். 43 படையணியை நீங்கள் படையணியாக கருதக்கூடாது எதிர்காலத்தில் அரசியலில் வியூகங்களை வகுக்க உருவாக்கப்பட்ட அமைப்பே இதுவாகும்.1943 நமக்கு கிடைத்த இலவசக் கல்வி அடிப்படையாக கொண்டு 43 படையணி இயக்கம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. ஆகவே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல எம்முடன் அனைவரும் கைகோர்க்க வேண்டும்” என்றார். என் அறிவுக்கு எட்டியவகையில், ஜேவிபியின் 71 சேகுவரா புரட்சி நடந்த போது, ஏற்பட்ட நெருக்குதல்களில் தமிழ் மக்கள் கைகோர்க்க வேண்டும் என்றீர்கள். 1987ன் பின்னான ஜே.வி.பியின் இரண்டாவது கிளர்ச்சியின் போது தெற்கில் ஆறுகளிலும், குளங்களிலும், சடலங்கள் மிதந்தபோது, வீதிகளில் அனாதரவாக சிங்கள இளைஞர்கள் சுடப்பட்ட போது, ஆயிரக்கணக்காணவர்கள் காணாமல் போனபோது, தெற்கின் முற்போக்கு சக்த்திகளும், இடதுசாரிகளும், அன்னையர் முன்னணியும் வடக்கு நோக்கி வந்து தமிழ் மக்கள் கைகோர்க்க வேண்டும் என்றீர்கள். தெற்கில் நீங்களே தெரிவுசெய்யும் ஆட்சியாளர்கள், கொடுங்கோல் ஆட்சியை நடத்தும் போதெல்லாம், ஆட்சி மாற்றத்திற்கு தமிழர்கள் கைகோர்க்க வேண்டும் என்றீர்கள். இப்படி சந்திர்க்கா முதல், ரணில் மைத்திரி வரை ஒவ்வொரு ஆட்சி மாற்றங்களின் திறவுகோலாக தமிழர்களே அல்லது சிறுபான்மையினரே தங்கள் கைகளை உங்கள் கைகளுடன் கோர்த்தார்கள். நீங்கள் பங்காளியாக இருந்த நல்லாட்சி அரசாங்கத்தை தமிழர்கள் மலையாக நம்பினார்கள். நீங்கள் முறித்து விழாமல், தமிழத்தேசியக் கூட்டமைப்பு உங்களுக்கு மிண்டு கொடுத்தது. ஆனால் பத்தோடு பதினொன்றாக நீங்களும் அவர்களின் நம்பிக்கைகளை மூழ்கடித்தீர்கள். இப்போது நீங்களே உங்கள் மக்களே பெருவாரியாக வாக்குகளை அள்ளி கொடுத்து, 69லட்சம் வாக்குகளால் தேர்வுசெய்த ஆட்சியாளரின் ஆட்சியை சகிக்க முடியாத நிலை ஏற்படும் போது, அதனை மாற்றவேண்டும் அதற்கு தமிழர்களும் கைகோர்க்க வேண்டும் என்கிறீர்கள். 1956, 1977, 1983, என அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக தொடரும் இரத்தம் சிந்தல்களை தமிழர்கள் மறக்காவிடினும் மன்னித்து ஒவ்வொரு தடவையும் ஆற்றைக்கடக்க கைகோர்க்கிறார்கள். ஆனால் ஆற்றைக் கடந்தவுடன் நீங்கள் யார் என மீண்டும் மீண்டும் கேட்டிர்கள், கேட்கிறீர்கள். 2008 – 2009 முள்ளிவாய்க்கால் மனிதப் பேரவலத்தின் பின்பும், அவற்றை மறக்காவிட்டாலும் மன்னித்து, ஆட்சிமாற்றத்திற்காய், நல்லாட்சிக்காய், தமிழர்கள் வாக்களித்தார்கள். குறைந்தபட்சம் அரசியல் கைதிகளையாவது விடுவித்தீர்களா? இப்போ மிண்டும் உங்கள் நெருக்குதல்களில் இருந்து மீள தமிழர்கள் கைகோர்க்க வேண்டும் என யாழில் கோரிக்கை விடுத்துள்ளீர்கள். ஆக தமிழர்கள் எப்போதுமே மறதிக்காரர்களாகவும், மன்னிப்பவர்களாகவும் இருப்பது போல், 2023 ஜனாதிபதி தேர்தலிலும், இருக்க வேண்டும், கைகளை கோர்க்க வேண்டும் என வேண்டியுள்ளீர்கள். கவலைப்படாதீர்கள் தற்போதைய தமிழ்த் தலைவர்கள் தம்மக்கள் பற்றி சிந்திக்கும்வரை, அவர்களின் அரசியல் தொடரும் வரை, மறதியாளர்களாகவும், மன்னிப்பை வழங்கும் இரட்சகர்களாகவுமே இருப்பதை தவிர தமிழர்களுக்கு வேறு வழியில்லை.         
  • இல்லை நாங்கள் எல்லோரும் மக்கள்.🤣 ஐசே உமக்கு சர்வதேச சட்டங்கள் லோக்கள் தெரியுமா? 😎  
  • 1) எதிர்காலத்தில் "தமிழ் மக்களை இனி கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்" என்று சுமந்திரன் சொல்லாதவரைக்கும் okeyதான் 😂
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.