Jump to content

சென்னையில் கரோனாவால் உயிரிழந்த மருத்துவர் உடலைப் புதைக்க எதிர்ப்பு..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சென்னையில் கரோனாவால் உயிரிழந்த மருத்துவர் உடலைப் புதைக்க எதிர்ப்பு; ஆம்புலன்ஸை உடைத்து ஊழியர்கள் மீது  தாக்கு: 20 பேர் கைது

 

550467.jpg

சென்னையில் மனிதாபிமானமற்ற செயலாக கரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர் உடலைப் புதைக்க எதிர்ப்புத் தெரிவித்து அவரது உடலைக் கொண்டுவந்த மருத்துவப் பணியாளர்களைத் தாக்கி, ஆம்புலன்ஸை உடைத்த சம்பவம் நடந்துள்ளது.

சென்னையில் பணியில் இருந்த மருத்துவர் ஒருவர் கரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். நேற்றிரவு ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடலைப் புதைக்க அண்ணாநகர் எல்லைக்கு உட்பட்ட காந்திநகர் வேலங்காடு சுடுகாட்டுக்குக் கொண்டு வந்தனஃப்ர். அப்பகுதி அருகே உள்ள அன்னை சத்யா நகரைச் சேர்ந்த சிலர், மருத்துவர் உடலை இங்கே கொண்டு வரக்கூடாது, திருப்பி எடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறித் தகராறில் ஈடுபட்டனர்.

உடன் வந்த பணியாளர்கள் எடுத்துச் சொல்லியும் கேட்காமல் கற்களாலும், கட்டைகளாலும் ஆம்புலன்ஸைத் தாக்கினர். இதனால் ஆம்புலன்ஸின் முன்பக்கக் கண்ணாடி உடைந்தது. ஆம்புலன்ஸை ஓட்டி வந்த ஓட்டுநர் ஆனந்துக்கும் (30) அவருடன் வந்த மற்றொரு பணியாளர் தாமோதரனுக்கும் (28) மண்டை உடைந்தது.

ரத்தம் சொட்டச் சொட்ட அவர்களிடம் தப்பித்து பிரேதத்துடன் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைக்குத் திரும்பிச் சென்றனர். பின்னர் கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவர் தலையிலும் தையல் போடப்பட்டு கட்டுப் போடப்பட்டது. இருவரும் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.

சம்பவம் குறித்துத் தகவலறிந்த போலீஸாரும், மாநகராட்சி அதிகாரிகளும் தலையிட்டு அதே ஆம்புலன்ஸ் வாகனத்தில் பிரேதத்தை இரவு 1 மணியளவில் வேலங்காடு கல்லறைக்குக் கொண்டு வந்து அடக்கம் செய்தனர்.

மேலும் அப்போதும் போலீஸாருடனும், அதிகாரிகளுடனும் தகராறு செய்து, பணி செய்ய விடாமல் தடுத்த 20 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும் 10க்கும் மேற்பட்டோரைத் தேடி வருகின்றனர்.

1587368003110.jpg

கைது செய்யப்பட்டவர்கள் மீது ஐபிசி பிரிவு 188 (ஊரடங்கை மீறுதல்), பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் ஐபிசி 269 (தொற்றுநோய் தடுப்பு சட்டம்), 145 (சட்டவிரோதமாக கூடுதல்), 341 (இயங்கவிடாமல் தடுத்து சிறைப் பிடித்தல்), 294 (பி) (அவதூறாகப் பேசுதல்), 353 (ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தல்), 506 (1) கொலை மிரட்டல் மற்றும் பொதுச் சொத்தை சேதப்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரோனா குறித்த சமூகப் பரவல் மீது அக்கறையில்லாமல், அரசின் எச்சரிக்கையை மதிக்காமல் ஒரு பக்கம் மக்கள் சாலைகளில் திரிகின்றனர். இன்னொரு பக்கம் இறந்தவர்களின் உடலைப் பாதுகாப்புடன் புதைக்க முயன்றால், தடுக்கின்றனர். இச்சம்பவங்கள் தமிழகம் முழுவதும் நடக்கின்றன. நேற்று ஈரோடு நம்பியூரிலும் மரணமடைந்த 17 வயதுச் சிறுவனின் உடலைப் புதைக்கவிடாமல் தகராறு செய்துள்ளனர்.

"உண்மையிலேயே கிருமித் தொற்று பரவாமல் இருக்க வேண்டுமானால், அரசு கூறியுள்ள ஊரடங்கை முறையாகக் கடைப்பிடித்து அவசியமான நேரத்தில் மட்டுமே வெளியில் வர வேண்டும். அந்த நேரத்திலும் சமுதாய விலகலைக் கடைப்பிடிப்பதுதான் சரி. அதைவிடுத்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது தெளிவின்மையைக் காட்டுகிறது" என்று காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தமிழ் இந்து

 

கொரோனாவால் இறந்த டாக்டர்.. அடக்கம் செய்ய விடாமல் தாக்கிய மக்கள்.. நடந்தது என்ன? உடனிருந்தவர் பேட்டி

 

 

சென்னை: நேற்று கொரோனா காரணமாக பலியான மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய கீழ்பாக்கம் பகுதி மக்கள் அனுமதிக்காத சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட மருத்துவர் நேற்று சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் பலியான சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர் நரம்பியல் நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது. கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்த இவர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் கொரோனா பாதிப்போடு அனுமதிக்கப்பட்டார். தனியார் மருத்துவமனை ஒன்றில் இவர் நிர்வாக இயக்குநராக இருந்தவர். அப்போலோவில் தீவிரமாக இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பலியானார்.
 
உடல் அடக்கம்:

அப்போலோ மருத்துவமனையில் இருந்து நேற்று இரவு இவரின் உடலை மயானத்தில் தகனம் செய்ய எடுத்து சென்றுள்ளனர். நேற்று இரவு இவரின் உடலை தகனம் செய்ய கீழ்பாக்கம் பகுதிக்கு எடுத்து சென்றனர். மாநகராட்சி அனுமதியுடன் கீழ்பாக்கம் பகுதியில் உடலை தகனம் செய்ய கொண்டு சென்றுள்ளனர். இந்த செய்தி அறிந்து மக்கள் வேகமாக கீழ்ப்பாக்கத்தில் உடல் தகனம் செய்யப்பட வேண்டிய இடத்திற்கு வந்துள்ளனர். அங்கு வந்த கீழ்பாக்கம் பொதுமக்கள் இவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

 ஆம்புலன்ஸ் வாகனம்:

அதோடு அந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை மிக மோசமாக தாக்கி உடைத்து உள்ளனர். ஆம்புலன்ஸ் ஓட்டுனரை கற்களை கொண்டு தாக்கியுள்ளனர். இதையடுத்து அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள், மருத்துவரின் உடலோடு வேகமாக அங்கிருந்து தப்பித்து சென்றனர். மருத்துவரின் மனைவி மற்றும் குழந்தைகளும் ஆம்புலன்சில் இருந்துள்ளனர். அவர்களும் இந்த தாக்குதலில் மோசமாக காயம் அடைந்துள்ளனர்.

கீழ்பாக்கம் சென்றது:

அதன்பின் அங்கிருந்து உடலை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு மருத்துவரின் உறவினர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களை விட்டுவிட்டு, அவர்களுக்கு முதலுதவி அளிக்க கூறியுள்ளனர். அங்கிருந்து ஒரு மருத்துவர் இரண்டு உதவியாளர் மட்டும் அந்த மருத்துவரின் உடலை ஆம்புலன்ஸ் ஒன்றில் எடுத்துக் கொண்டு வேளங்காடு மயானத்துக்கு எடுத்து சென்றனர்.

கொண்டு சென்றனர்:

பின் வேளங்காடு மயானத்தில் இரவோடு இரவாக உறவினர்கள் இல்லாமல், மருத்துவர் உடலை புதைத்து உள்ளனர். இந்த கோர சம்பவம் குறித்து விளக்கிய பலியான மருத்துவரின் நண்பர் மருத்துவர் பாக்கியராஜ் முக்கிய விஷயங்களை பகிர்ந்துள்ளார். அவர் தனது வீடியோவில் , என்னுடைய நண்பர் கொரோனா காரணமாக பலியானார். அப்போலோ கிரீம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் பலியானார்.

புதைக்க முடியவில்லை:

அவரின் உடலை அனுமதியோடு அடக்கம் செய்ய சென்றோம். ஆனால் மக்கள் அதற்கு அனுமதிக்கவில்லை. எங்குமே அவரின் உடலை அடக்கம் செய்ய முடியவில்லை. இதை நான் கண்ணீரோடு சொல்கிறேன். அவர் ஒரு சிறந்த மருத்துவர். ஆனால் அவருக்கு மக்கள் மரியாதை செய்யவில்லை. மக்களுக்கு உதவி செய்ய பணியாற்றிய மருத்துவருக்கு இதுதான் நிலை. அடியாட்கள் போல வந்து கல்லையும், கட்டையும் வைத்து மிக கொடூரமாக தாக்கினார்கள். மருத்துவரின் உடலை போட்டுவிட்டு ஓடிவந்தோம்.

உருக்கமாக கண்ணீர்:

அந்த அளவிற்கு மோசமான நிலை ஏற்பட்டது. கடைசியில் வேறு இரண்டு மருத்துவர்கள் அவரின் உடலை மீட்டு வந்து அடக்கம் செய்தனர். "இதுதான் மருத்துவர்களுக்கு நீங்கள் செய்யும் மரியாதையா? இதுதான் நீங்கள் எங்களுக்கு கொடுக்கும் நன்றிக்கடனா? அவரின் ஆத்மா சாந்தி அடையுமா சொல்லுங்கள்?.. எங்களை எல்லாம் கல்லை வைத்து ஏன் அடிக்கிறீர்கள்..? இனி யாருக்கும் இப்படி ஒரு நிலை வர கூடாது" என்று டாக்டர் பாக்யராஜ் உருக்கமாக கூறியுள்ளார்.


 
Edited by ராசவன்னியன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் கேவலமான... வேலையை செய்துள்ளார்கள்.
எப்போதுதான்... மனிதன், திருந்தப் போகிறானோ.... 😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

94225270_2528360997414338_2473357647269593088_o.jpg?_nc_cat=107&_nc_sid=8bfeb9&_nc_ohc=rUSuIVRSgCwAX-Afwlz&_nc_ht=scontent-frt3-1.xx&oh=6abd5d9439d1a5ec5fbc9ac1c8340dfe&oe=5EC5B4F7

 

94016662_2528315744085530_6079575436403146752_o.jpg?_nc_cat=108&_nc_sid=8bfeb9&_nc_ohc=VYcsDzytdi0AX9NPfr0&_nc_ht=scontent-frt3-1.xx&oh=b75eb1250fe6176608ea2fc39e515696&oe=5EC273D9

உங்களுக்கு இருக்குற வலி தானே... அந்த டாக்டர் குடும்பத்துக்கும் இருக்கும்.

 

93545727_2528307210753050_1163849825553219584_o.jpg?_nc_cat=110&_nc_sid=8bfeb9&_nc_ohc=_bIaRAnAaqkAX82lKaS&_nc_ht=scontent-frx5-1.xx&oh=b1138379bb9c898db494e214749545c0&oe=5EC377EF

 

93638487_2528173237433114_3811977130980409344_o.jpg?_nc_cat=111&_nc_sid=8bfeb9&_nc_ohc=4FJVkaB1n8UAX-VBEJ2&_nc_ht=scontent-frx5-1.xx&oh=7dff927bb7947b48c757966e36b0a76a&oe=5EC568F0

Edited by தமிழ் சிறி
  • Like 1
Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.