Jump to content

ஆபத்தான நிலையில் வடகொரிய ஜனாதிபதி- உன்னிப்பாக அவதானிக்கின்றது அமெரிக்கா


Recommended Posts

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் அன் சத்திர சிகிச்சையொன்றின் பின்னர் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றார் என அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.

சத்திரசிகிச்சையின் பின்னர் கிம் ஜொங் அன் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றார்,அமெரிக்கா வடகொரியாவின் புலனாய்வு தகவல்களை உன்னிப்பாக அவதானித்து வருகின்றது சிஎன்என் தெரிவித்துள்ளது.

kim_jonh_1.jpg

ஏப்பிரல் 15 ம் திகதி இடம்பெற்ற தனது குடும்பத்தின் முக்கிய நிகழ்வொன்றில் கிம் கலந்துகொள்ளவில்லை,இதன் காரணமாக அவரது உடல்நிலை குறித்து சந்தேகம் எழுந்தது என சிஎன்என் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/80409

Link to comment
Share on other sites

North Korean leader Kim not believed to be critically ill: Chinese party source

 
 

BEIJING (Reuters) - North Korean leader Kim Jong Un is not believed to be critically ill, an official with the Chinese Communist Party’s International Liaison Department told Reuters on Tuesday, following media reports about the state of Kim’s health.

The official declined to be identified given the sensitivity of the matter. The International Liaison Department is the main Chinese body dealing with neighbouring North Korea.

Reporting by Beijing newsroom; Editing by Shri Navaratnam

Link to comment
Share on other sites

கிம் ஜாங்-உன்: வட கொரியா தலைவர் உடல்நலம் குறித்து வரும் தகவல்கள் உண்மை அல்ல - தென் கொரிய அதிகாரிகள்

வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் உடல் நலம் குறித்து வரும் தகவல்கள் உண்மை அல்ல என தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வட கொரிய தலைவருக்கு அண்மையில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இதனை அடுத்து அவர் உடல் நலம் மிகவும் மோசமானதாகவும், அபாய கட்டத்தில் அவர் இருக்கிறார் என்றும், மூளைச் சாவு அடைந்துவிட்டார் என்றும் தகவல்கள் பரவின.

ஆனால், 36 வயதான கிம் ஜாங்-உன் மிக மோசமான நிலையில் இருக்கிறார் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. அப்படியான எந்த அறிகுறிகளும் வட கொரியாவில் நிலவவில்லை என தென் கொரிய அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான வதந்திகள் பரவுவது இது முதல் முறை அல்ல.

https://www.bbc.com/tamil/global-52366740

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வழக்கமான cnn ன் கனவு நாளையே ஒரு ஏவுகணையை ஜப்பானுக்கு மேலால் சீறி  பாய விடுவார் ஜப்பானும் அணில் ஏற  விட்ட டாக் போல கத்திக்கொண்டு  கிடக்கும்  ஒருவேளை cnn கனவு அதிஷ்ட்டம் ஆகினால்  இவரின் சகோதரிதான் இவரிடத்தில் என்கிறார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா பயத்திலை ஆள் வெளியிலை தலைகாட்டாமல் இருக்கிறாரோ ஆருக்குத்தெரியும்? 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

கொரோனா பயத்திலை ஆள் வெளியிலை தலைகாட்டாமல் இருக்கிறாரோ ஆருக்குத்தெரியும்? 😁

இயற்கை தன்னை தானே மனித மனங்களில் மூலமும் தகவமைத்து கொள்ளும்..(பூமி பாரம் உட்பட ) உவர் வெறும் வெற்று வாய் சவடால் மட்டுமே விட்டு கொண்டு திரிவதால் பொறுத்து பார்த்து .. கோரோனோவாக வடிவம் பெற்றது.. அதனால் இவரை இயற்கை விரைவில் திரும்ப ..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிம் ஜாங்-உன்: வட கொரியா தலைவர் உடல்நலம் குறித்து வரும் தகவல்கள் உண்மை அல்ல - தென் கொரிய அதிகாரிகள்

லாரா பெக்கர் பிபிசி செய்தியாளர், தென் கொரியா
Kim Jong-un illness rumoursReuters

வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் உடல் நலம் குறித்து வரும் தகவல்கள் உண்மை அல்ல என தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வட கொரிய தலைவருக்கு அண்மையில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இதனை அடுத்து அவர் உடல் நலம் மிகவும் மோசமானதாகவும், அபாய கட்டத்தில் அவர் இருக்கிறார் என்றும், மூளைச் சாவு அடைந்துவிட்டார் என்றும் தகவல்கள் பரவின.

ஆனால், 36 வயதான கிம் ஜாங்-உன் மிக மோசமான நிலையில் இருக்கிறார் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. அப்படியான எந்த அறிகுறிகளும் வட கொரியாவில் நிலவவில்லை என தென் கொரிய அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான வதந்திகள் பரவுவது இது முதல் முறை அல்ல.

எப்போது இந்த வதந்தி பரவியது?

கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி கிம் ஜாங்-உன்னின் தாத்தாவும் வட கொரியாவின் நிறுவனத் தலைவருமான கிம் இல் சங்க்கின் பிறந்த தின கொண்டாட்டம் நடந்தது. இதில் கிம் ஜாங்-உன் கலந்து கொள்ளவில்லை.

இதுவரை இந்த பிறந்த தின கொண்டாட்டத்தில் கிம் கலந்து கொள்ளாமல் இருந்ததில்லை. இது பலருக்குச் சந்தேகத்தை எழுப்பியது.

ஏப்ரல் 11 மற்றும் 12 ஆகிய தினங்களில் நடந்த இருவேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார். அதன்பின் பொது இடங்களில் கிம் தோன்றவில்லை.

North KoreaEPA

கடந்த வாரம் ஏவுகணை சோதனையை வட கொரியா நடத்தியது. அதில் அவர் கலந்து கொண்டதாக தெரியவில்லை. அப்படியான தகவல்களையும் வட கொரிய அரசு ஊடகம் வெளியிடவில்லை.

வட கொரியாவில் இதழியல் பணியை மேற்கொள்வது மிகவும் கடினமான ஒன்று. ஏராளமான நெருக்கடிகள் அங்கு உள்ளன.

கொரோனாவை அடுத்து வட கொரியாவில் கட்டுப்பாடுகளும் அதிகரித்துள்ளது.

ஏன் இந்த வதந்தி?

இப்படியான சூழலில் வட கொரியாவிலிருந்து வெளியேறிய சிலர் நடத்தும் இணையதளத்தில்தான் கிம் ஜாங்-உன் உடல்நிலை கவலைக்கிடம் என்ற செய்தி வெளியானது.

கிம் ஜாங்-உன் இதய நோயால் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் அவதியுறுவதாகவும், அடிக்கடி பாக்து மலைக்கு சென்றபின் இந்த நோய் அதிகரித்ததாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் என்.கே டெய்லி நாளிதழுக்குத் தெரிவித்துள்ளார். 

Kim Jong-unReuters

இதனை அடுத்து பல்வேறு ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டன. அமெரிக்க ஊடகங்களில் இது தலைப்பு செய்தியானது.

'வெறும் வதந்தி மட்டுமே'

தென் கொரிய அரசாங்கமும், சீன உளவுத்துறை அதிகாரிகளும் கிம் உடல்நிலை குறித்து வரும் அனைத்து தகவல்களையும் மறுத்துள்ளனர்.

ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் பேசிய அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்பு இதுபோல நடந்துள்ளதா?

2014ஆம் ஆண்டு ஏறத்தாழ 40 நாட்கள் அவர் பொது நிகழ்ச்சிகளில் எங்கும் தோன்றாமல் இருந்தார். ஆட்சிக் கவிழ்ப்பால் அவர் வெளியேற்றப்பட்டார் என்ற வதந்திகளும் அப்போது உலவின.

பின் அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தொடங்கினார்.

உடல் நலக் கோளாறு காரணமாக அவர் 40 நாட்கள் ஓய்வில் இருந்தார் என கூறிய வட கொரிய அரசு ஊடகம், அவருக்கு முடக்குவாதம் என்று அப்போது பரவிய வதந்தி தொடர்பாக கருத்து கூற மறுத்துவிட்டது.

இப்போது கிம் ஜோங் உன்… அடுத்து யார்?

சரி, கிம்முக்கு அடுத்து யார் வட கொரியாவின் தலைவர் ஆகலாம்?

Kim Yo-jongGetty Images

இப்போது வரை இதற்கான பதில் இல்லை.

கிம் ஜாங்-உன்னின் சகோதரி கிம் யோ ஜோங் தேர்ந்தெடுக்கப்படலாம். அவர் கிம் பரம்பரையை சேர்ந்தவர். கிம் கலந்து கொள்ளும் முக்கிய கூட்டங்களில் எல்லாம் இப்போது அவரும் காட்சியளிக்கிறார்.
 

https://www.bbc.com/tamil/global-52366740

Link to comment
Share on other sites

வல்லரசுகளை மிரட்டிய தலைவர் குறித்து மெளனம் சாதிக்கும் தேசிய ஊடகங்கள்

 

 

    by : Yuganthini

KIM-JONG-UN-720x450.jpg

வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன்’இன் உடல் நிலை தொடர்பாக சர்வதேச ரீதியாக பல்வேறு ஊகங்கள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், குறித்த விடயம் தொடர்பில் வடகொரிய ஊடகங்கள் மெளனம் சாதிப்பது பெரும் சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

வட கொரியாவின் தேசிய பாதுகாப்பை சிரம் மேல் ஏற்று அமெரிக்கா உள்ளிட்ட ஆதிக்க நாடுகள் பலவற்றின் தற்துணிவை சோதனைக்கு உட்படுத்தியவர் அந்நாட்டு அதிபர் கிம் ஜொங் உன்.

உலகின் பல நாடுகளின் எதிர்ப்புகள், அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள், ஐக்கிய நாடுகள் சபையின் எச்சரிக்கைகள் என எதனையும் பொருட்படுத்தாது, பல ஏவுகணை சோதனைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்த கிம் ஜொங் உன்’இன் உடல் நிலை தொடர்பான தகவல்கள் கடந்த சில நாட்களாக சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கிம் ஜொங் உன் மோசமான உடல்நிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இருதயம் தொடர்பான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

எனினும் வடகொரிய தேசிய ஊடகங்கள் இது தொடர்பான எவ்வித செய்திகளையும் வெளியிடவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

மாறாக கிம் ஜொங் உன்’இன் வழக்கமான புகைப்படங்கள் மற்றும் தேசிய நடைமுறைகள் தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவுறுத்தல்கள் என்பன திகதியிடப்படாமல் அந்நாட்டு ஊடகங்களில் ஒளி, ஒலிபரப்பப்பட்டு வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை அமெரிக்காவை தளமாக கொண்டு இயங்கும் புலனாய்வு ஊடக தகவல்களின் அடிப்படையில் கிம் ஜோங் உன்’இன் உடல்நிலை மோசமாக இருப்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ள அதேவேளை குறித்த தகவல்கள் நெருக்கமான மூலங்களின் அடிப்படையில் பெறப்பட்டவை என மீள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கிம் ஜொங் உன் குறித்து வட கொரிய ஊடகங்கள் சாதிக்கும் மெளனங்கள் பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

http://athavannews.com/வல்லரசுகளை-மிரட்டிய-தலைவ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடகொரியாவில் கிம் ஜாங் சகோதரி ஆட்சிக்கு வந்தால் முந்தைய ஆட்சியை விட கொடூரமாக இருக்கு

வடகொரியாவில் கிம் ஜாங் சகோதரி ஆட்சிக்கு வந்தால் முந்தைய ஆட்சியை விட கொடூரமாக இருக்கும்

 

வடகொரியாவில் கிம் ஜாங் சகோதரி ஆட்சிக்கு வந்தால் முந்தைய ஆட்சியை விட கொடூரமாக இருக்கும் என ஆய்வாளர்கள் கணித்து உள்ளனர்.
 
 
வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.  கிம் ஜாங் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை என்றால் அவரது சகோதரி கிம் யோ ஜாங் ஆட்சிக்கு வர வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
கிம் யோ ஆட்சி என்பது 8 ஆண்டு கால கிம் ஜாங் ஆட்சியை விடவும் மிக கொடூரமாக இருக்கும் என ஆய்வாளர்  நடாஷா லிண்ட்ஸ்டேட்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
வடகொரிய தலைவர் கிம் ஜாங் தம்மை எதிர்ப்பவர்கள் மீது எந்த இரக்கமும் காட்டுவதில்லை, அது தமது உறவினர்களாக இருந்தாலும் கடுமையாகவே நடந்து கொள்வார்.ஆனால் கிம் ஜாங் ஆட்சியை விடவும் அவரது சகோதரி கிம் யோ ஆட்சி மிகவும் கொடூரமாக இருக்கும் என நிபுணர்கள் கணிக்கின்றனர்.
 
நவீன புதிய ஆயுதங்கள் மீது அதிக மோகம் கொண்ட கிம் யோ, வடகொரியாவின் அடுத்த தலைவராக தம்மை தயார் படுத்தியும் வந்துள்ளதாக கூறப்படுகிறது.பெண் என்பதால் வடகொரிய ஆளும் வர்க்கம், கிம் யோவை புறக்கணிக்காது என்றும், கிம் குடும்பத்தாரை அங்குள்ள மக்கல் கடவுளுக்கு நிகராகவே பார்க்கிறார்கள் எனவும் நடாஷா குறிப்பிடுகிறார்.
 
கிம் யோ ஆட்சி பொறுப்புக்கு வந்தால், தற்போது கிம் ஜாங் எவ்வாறு பார்க்கப்படுகிறாரோ அதேப்போன்ற நிலையில் கிம் யோ உயர்த்தப்படுவார். அது மட்டுமின்றி, தமது சகோதரர் கிம் ஜாங் உலக நாடுகளை எதிர்கொண்டதை விட கிம் யோ கொஞ்சம் கடுமையாகவே நடத்த வாய்ப்பிருப்பதாக நடாஷா தெரிவிக்கிறார்.
 
கம்ப்யூட்டர் அறிவியல் பட்டதாரியான கிம் யோ, சமீப காலமாக தமது சகோதரருக்கு உதவியாக அரசு அலுவல்களிலும் ஈடுபட்டு வருகிறார்.தமது 9-வது வயதில் இருந்தே சுவிட்சர்லாந்தில் கல்வி பயின்ற கிம் யோ, பல்கலைக்கழக படிப்பை வடகொரியாவுக்கு திரும்பிய பின்னர் முடித்தார்.
 
கிம் யோ தொடர்பில் தெரிந்து வைத்திருக்கும் கிம் ஜாங்கின் மனைவி ரி சோல் ஜூ, கண்டிப்பாக ஆட்சியை கைப்பற்றும் நடவடிக்கையில் இறங்கமாட்டார் என்றே கூறப்படுகிறது.
 
வடகொரியாவின் இதுவரையான ஆயுத குவிப்புகளுக்கு காரணம் கிம் யோ என நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.மட்டுமின்றி கிம் யோ உண்மையில் அவரது தந்தை, தாத்தாவை விடவும் கொடூர புத்தி கொண்டவர் எனவும், அது கிம் ஜாங் தெரிந்து வைத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிம் ஜான்-உன் எங்கே? வட கொரிய நகரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயில் அவருடையதா?

கண்காணிப்புக்குழுவின் செயற்கைக்கோள் படத்தில் ரயில் இருப்பதை காண முடிகிறது.PLANET LABS-38 NORTH / REUTERS வட கொரிய கண்காணிப்புக்குழுவின் செயற்கைக்கோள் படத்தில் ரயில் இருப்பதை காண முடிகிறது.

வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னின் உடல்நலம் குறித்தும், அவர் எங்கிருக்கிறார் என்பது குறித்தும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. 

இந்நிலையில் கிம் ஜாங்- உன்னிற்கு சொந்தமானது என்று கருதப்படும் ரயில் ஒன்று அந்நாட்டின் உல்லாச நகரம் என்று கூறப்படும் வான்சன் நகரத்தில் நிறுத்தப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளதாக ராய்டர்ஸ் முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

வாஷிங்டனில் இருந்து இயங்கும் வட கொரிய கண்காணிப்பு திட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு இதுதொடர்பான செயற்கைக்கோள் படங்கள் கிடைத்துள்ளன.

ஏப்ரல் 21 மற்றும் ஏப்ரல் 23 ஆகிய தேதிகளில் "தலைவர்களுக்கான ரயில் நிலையத்தில்" அந்த ரயில் நிறுத்தப்பட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ரயில் நிலையம், கிம் குடும்பத்தினர் மட்டுமே பயன்படுத்தும் ரயில் நிலையம் என்றும் அந்த கண்காணிப்பு திட்டக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கிம்Getty Images

அந்த ரயில் கிம் ஜாங்-உன்னின் ரயிலாக இருக்கலாம் என்றாலும் அதனை தனிப்பட்ட விதத்தில் உறுதி செய்ய முடியவில்லை என்று ராய்டர்ஸ் கூறியுள்ளது. கிம் ஜாங்-உன், வான்சன் நகரத்தில்தான் இருந்தாரா என்பதையும் உறுதிபடுத்த முடியவில்லை என்று அந்த செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது

இந்நிலையில் ரயில் வான்சனில் நிற்பதால், வட கொரியத் தலைவர் அங்குதான் இருப்பார் என்பதற்கு அது ஆதாரமாக அமையாது என்றும் இதைவைத்து அவரது உடல்நலம் குறித்து எந்த முடிவுக்கும் வர முடியாது எனவும் கண்காணிப்புக் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

எனினும், வட கொரியாவின் கிழக்கு கடற்கரையில் உள்ள உல்லாச நகரமாக வான்சனில் தலைவர் கிம் இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏன் இந்த சர்ச்சை?

கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி கிம் ஜாங்-உன்னின் தாத்தாவும் வட கொரியாவின் நிறுவனத் தலைவருமான கிம் இல் சங்க்கின் பிறந்த தின கொண்டாட்டம் நடந்தது. இதில் கிம் ஜாங்-உன் கலந்து கொள்ளவில்லை.

இதுவரை இந்த பிறந்த தின கொண்டாட்டத்தில் கிம் கலந்து கொள்ளாமல் இருந்ததில்லை. இது பலருக்குச் சந்தேகத்தை எழுப்பியது.

ஏப்ரல் 11 மற்றும் 12 ஆகிய தினங்களில் நடந்த இருவேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார். அதன்பின் பொது இடங்களில் கிம் தோன்றவில்லை

கிம் ஜாங்-உன் உடல்நிலை: 'அபாய கட்டம், மூளைச்சாவு' - உண்மையல்ல என்கிறது தென்கொரியா

இந்நிலையில், கிம் ஜான்-உன்னிற்கு மருத்துவ ஆலோசனை வழங்க சீனா, வட கொரியாவிற்கு ஒரு குழுவை அனுப்பியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

ஏப்ரல் 15ஆம் தேதி எடுக்கப்பட்ட புகைப்படத்தில் ரயில் இல்லைReuters ஏப்ரல் 15ஆம் தேதி எடுக்கப்பட்ட புகைப்படத்தில் ரயில் இல்லை

கிம் ஜான் உன்னிற்கு பிறகு யார் அந்த நாட்டின் தலைவராக இருப்பார் என்று தெளிவாக தெரியவில்லை என்பதால், சர்வதேச அளவில் இது கவனத்தை பெற்றுள்ளது.

ஆனால், வட கொரியதலைவர் குறித்து வெளியாகும் அறிக்கைகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அந்த அறிக்கைகைள் தவறானதாக இருக்கலாம் என்றும் அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். 

36 வயதான கிம் ஜாங்-உன் மிக மோசமான நிலையில் இருக்கிறார் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. அப்படியான எந்த அறிகுறிகளும் வட கொரியாவில் நிலவவில்லை என தென் கொரிய அதிபர் அலுவலகம் தெரிவித்திருந்தது.

 

https://www.bbc.com/tamil/global-52429851

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Oorkuruvi said:

Members of both parties criticize Trump's 'confidence' in Kim Jong Un

கிம் ஜான் உன்.... கொரோனாவால்.. செத்தாரா?

கடந்த வருடம்.... சிங்கப்பூரில்  நடந்த அமெரிக்க சந்திப்பில், 
மெல்லக்  கொல்லும் விசம்  வைக்கப்பட்டதா? எனும் கோணத்தில்.... 
இனி... ஆய்வுக் கட்டுரைகள், எக்கச் சக்கமாக வரும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, sitting

முகத்தில்,  சுருக்கம் இல்லாத... "பணிஸ்" மாதிரி முகம்.
யார் கண் பட்டதோ... தெரியவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருத்துவரின் கைநடுக்கத்தால் கிம் ஜாங் உன்-னின் அறுவை சிகிச்சை தோல்வி?

சியோல்: மர்ம தேசமான வட கொரியாவின் சர்வாதிகாரி கிம் ஜாங் உன், இதய பாதிப்பால் மரணப் படுக்கையில் இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்த போது மருத்துவரின் கை நடுங்கியதால் தான், அவரது உடல்நிலை மோசமடைந்ததாக ஜப்பான் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஏப்ரல் 15-ம் தேதி வட கொரியாவின் முக்கிய நிகழ்வான அந்நாட்டின் நிறுவனர் கிம் இரண்டாம் சங் பிறந்த நாள் கொண்டாட்டத்தில், கிம் ஜாங் உன் பங்கேற்கவில்லை. அப்போது இருந்து அவரது உடல்நிலை குறித்து சர்ச்சை எழுந்தது. 36 வயதாகும் அதிபர் கிம், கடைசியாக ஏப்., 11ம் தேதி நடந்த கட்சி கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். அதன் பிறகு எந்த பொது நிகழ்ச்சிகளிலும் அவரை காணவில்லை.


இந்நிலையில் ஜப்பானைச் சேர்ந்த வார இதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், 'கிராமப்புறம் ஒன்றிற்கு சென்ற போது கிம் நெஞ்சு வலி வந்து மார்பை பிடித்துக்கொண்டு கீழே விழுந்தார். அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு இதய அறுவை சிகிச்சையின் போது சாதாரண ஸ்டன்ட் பொருத்தும் செயல்முறையில், மருத்துவரின் கை நடுங்கியதால் உடல்நிலை மோசமடைந்தது. தற்போது அவர் கோமா நிலையில் இருக்கலாம்' என கூறப்பட்டுள்ளது. கிம்மின் அறுவை சிகிச்சை தோல்வியடைந்த பின் வியாழனன்று சீனாவிலிருந்து ஒரு மருத்துவ குழு வடகொரியா புறப்பட்டுள்ளது. ஆனால், அவரை காப்பாற்ற தாமதமாகவிட்டதாக பீஜிங்கில் உள்ள மூத்த கம்யூனிஸ்ட் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

கடந்த 2011-ம் ஆண்டு அவரது தந்தை இரண்டாம் கிம் ஜாங் உன் மாரடைப்பால் இறந்த பின், ஆட்சிக்கு வந்தவர் கிம். கூடுதல் எடை, புகைப் பழக்கம், இதய பிரச்னைகள் போன்றவற்றால் கிம்மின் உடல் நலம் பற்றிய சர்ச்சை சில ஆண்டுகளுக்கு முன்பே கிளம்பியது குறிப்பிடத்தக்கது.

 

https://www.dinamalar.com/news_detail.asp?id=2528394

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அய்யா இறந்தால் அய்யாவின் சகோதரி ஆட்சிக்கு வருவார் என்று சொல்லப்படுகின்றது. பார்ப்போம் என்ன நடக்கின்றது என.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

94688131_883722495433253_8113246063126642688_o.jpg?_nc_cat=101&_nc_sid=8bfeb9&_nc_ohc=9lZ-LwifPl0AX-8E0B3&_nc_ht=scontent-frt3-2.xx&oh=fa15f12ee11bc752cd54f2283a0c5067&oe=5ED04F03

நம்ம  கிட்டேயா...  அது நடவாது. :grin:  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

da86db0efec947ac97cb59bf1c7ac859_18-720x450.jpg

வடகொரிய தலைவரின் மரணம்- நேரில் தோன்றி முற்றுப்புள்ளி வைத்தார் கிம்!

வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன், இருபது நாட்களுக்கு பிறகு பொதுவெளியில் தோன்றி தன்மீதான தொடர் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

வடகொரியாவில் நடைபெற்ற அரசு மற்றும் சில முக்கிய நிகழ்ச்சிகளில் கிம் ஜோங் உன், பங்கேற்காததைத் தொடர்ந்து, அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி பல்வேறு வதந்திகள் பரவின.

கிம் ஜோங் உன், மூளைச்சாவு அடைந்து விட்டதாகவும், இருதய சிகிச்சையின் பின் சுயநினைவு அற்ற நிலையில் உயிருக்கு போராடி வருவதாகவும் பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வந்தன. ஆனால் இதனை தென்கொரியா மறுத்தது.

இந்தநிலையில், வட கொரிய அரசு ஊடகங்கள் இன்று (சனிக்கிழமை) அதிகாலை அவரது உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு மத்தியில் செய்தி வெளியிட்டு பரபரப்பை தணித்துள்ளது.

கொரிய மத்திய செய்தி நிறுவனம் (கே.சி.என்.ஏ) வெளியிட்டுள்ள செய்தியில், பியோங்யாங்கின் தலைநகருக்கு அருகிலுள்ள சன்ச்சியோனில் ஒரு உரத் தொழிற்சாலை திறப்பு விழாவில் கிம் கலந்து கொண்டதாக கூறியுள்ளது.

அத்துடன், பெரும் எதிர்பார்ப்புக்குரிய அவரது சகோதரி கிம் யோ ஜோங் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த நடைபெற்ற இந்த விழாவில் கிம் ஒரு நாடாவை வெட்டியதாகவும், நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அவரை உற்சாகப்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளது.

நாடா வெட்டும் விழாவில் உதவியாளர்களுடன் சிரித்துக்கொண்டே பேசுவதும், ஆலை சுற்றிப்பார்க்கும் புகைப்படங்களில் கிம் காணப்பட்டார்.

அதிகாரப்பூர்வ ரோடாங் சின்முன் செய்தித்தாளின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட புகைப்படங்களின் நம்பகத்தன்மையை சரிபார்க்க முடியவில்லை என கூறப்படுகின்றது.

http://athavannews.com/20-நாட்கள்-வதந்திகளுக்கு-ப/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிம் ஜாங் உன்: மீண்டும் வந்தார் வட கொரியா தலைவர் - அரசு ஊடகம் சொல்வது என்ன?

மீண்டும் வந்தார் கிம் ஜாங் உன் - வட கொரியா அரசு ஊடகம் சொல்வது என்ன?படத்தின் காப்புரிமைREUTERS

வட கொரியா அரசு ஊடகம் தரும் தகவலின் படி, கடந்த இருபது நாட்களில் முதல் முறையாக பொது வெளியில் தோன்றி இருக்கிறார் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்.

உர தொழிற்சாலை ஒன்றினை கிம் ஜோங் உன் தொடங்கி வைத்தார் என்கிறது வட கொரியா அரசு ஊடகமான கே.சி.என்.ஏ.

கிம் ஜோங் உன் வந்த போது விண்ணை பிளக்கும் அளவில் உற்சாகம் ததும்பியது என்கிறது கே.சி.என்.ஏ.

கடந்த இருபது நாட்களாக கிம் ஜாங் உன் பொதுவெளியில் தோன்றாமல் இருந்தார். இதன் காரணமாக அவர் உடல்நிலை குறித்து பல சந்தேகங்கள் எழுந்தன. இப்படியான சூழலில் அவர் பொதுவெளியில் தோன்றினார் என்று செய்தி அளிக்கிறது கே.சி.என்.ஏ..

கே.சி.என்.ஏ கூறும் செய்தியை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.

மீண்டும் வந்தார் கிம் ஜாங் உன் - வட கொரியா அரசு ஊடகம் சொல்வது என்ன?படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகோப்புப் படம்

கே.சி.என்.ஏ பின்னர் வெளியிட்ட புகைப்படத்தில் கிம் ஒரு தொழிற்சாலையினை தொடங்கி வைக்கும் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிடம் கேள்வி எழுப்பிய போது, இது தொடர்பாக எந்த கருத்தையும் இதுவரை கூற விரும்பவில்லை என்றார்.

கே.சி.என்.ஏ கூறுவது என்ன?

வட கொரியா மூத்த அதிகாரிகள் மற்றும் அவர் தங்கையான கிம் யோ ஜாங் ஆகியோருடன் இந்த நிகழ்வில் கிம் கலந்து கொண்டார் என்கிறது கே.சி.என்.ஏ.

மீண்டும் வந்தார் கிம் ஜாங் உன் - வட கொரியா அரசு ஊடகம் சொல்வது என்ன?படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகோப்புப் படம்

தொழிற்சாலையில் உற்பத்தி அமைப்பில் தமக்கு முழு திருப்தி என்று கூறிய கிம், வட கொரியாவின் ரசாயன தொழிலுக்கும், உணவு உற்பத்திக்கும் முக்கியமான பங்களிப்பை இந்த நிறுவனம் அளிப்பதாக கூறினார் என்கிறது கே.சி.என்.ஏ.

கிம் உடல்நிலை குறித்து சந்தேகம் வர காரணம் என்ன?

கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி கிம் ஜாங்-உன்னின் தாத்தாவும் வட கொரியாவின் நிறுவனத் தலைவருமான கிம் இல் சங்க்கின் பிறந்த தின கொண்டாட்டம் நடந்தது. இதில் கிம் ஜாங்-உன் கலந்து கொள்ளவில்லை.

இதுவரை இந்த பிறந்த தின கொண்டாட்டத்தில் கிம் கலந்து கொள்ளாமல் இருந்ததில்லை. இது பலருக்குச் சந்தேகத்தை எழுப்பியது.

மீண்டும் வந்தார் கிம் ஜாங் உன் - வட கொரியா அரசு ஊடகம் சொல்வது என்ன?படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகோப்புப் படம்

ஏப்ரல் 11 மற்றும் 12 ஆகிய தினங்களில் நடந்த இருவேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார். அதன்பின் பொது இடங்களில் கிம் தோன்றவில்லை.

கடந்த வாரம் ஏவுகணை சோதனையை வட கொரியா நடத்தியது. அதில் அவர் கலந்து கொண்டதாக தெரியவில்லை. அப்படியான தகவல்களையும் வட கொரிய அரசு ஊடகம் வெளியிடவில்லை.

இப்படியான சூழலில் வட கொரியாவிலிருந்து வெளியேறிய சிலர் நடத்தும் இணையதளத்தில்தான் கிம் ஜாங்-உன் உடல்நிலை கவலைக்கிடம் என்ற செய்தி வெளியானது.

கிம் ஜாங்-உன் இதய நோயால் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் அவதியுறுவதாகவும், அடிக்கடி பாக்து மலைக்கு சென்றபின் இந்த நோய் அதிகரித்ததாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் என்.கே டெய்லி நாளிதழுக்குத் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து பல்வேறு ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டன. அமெரிக்க ஊடகங்களில் இது தலைப்பு செய்தியானது.

ஆனால், தென் கொரிய அரசாங்கமும், சீன உளவுத்துறை அதிகாரிகளும் கிம் உடல்நிலை குறித்து வரும் அனைத்து தகவல்களையும் மறுத்தனர்.

https://www.bbc.com/tamil/global-52511722

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தி அவர்களின் தற்கொலை முடிவிற்கு அவரது தனிப்பட்ட மற்றும் குடும்ப விவகாரமே காரணம் என்ற ஒரு தகவல் வெளி வந்திருக்கின்றது. இந்த விவகாரம் வெளியில் வரவே கூடாது என்று நினைத்திருந்திக்கின்றார் போல....😌   https://minnambalam.com/political-news/mdmk-ganesh-murthy-last-days-secret-report-to-the-chief-minister/  
    • 'அதிர்ஷ்ட லாபச் சீட்டு' என்ற தலைப்பில் இந்த வாரம் இங்கே களத்தில் ஒரு சுய ஆக்கம் எழுதியிருந்தேன். அமெரிக்காவில் இருக்கும் லொட்டோக்களைப் பற்றியே எழுதியிருந்தாலும், உலகம் முழுவதற்கும் இது பொருந்தும் என்று நினைக்கின்றேன். அதில் இருந்து ஒரு பகுதி: 'இங்கு தினமும் மாலை நேரங்களில் இந்த சீட்டுகளில் விற்கும் கடைகளின் வாசல்களில் அன்றாடம் தொழில் முடித்து வருவோர்கள் பலர் சீட்டுகளை வாங்கி சுரண்டிக் கொண்டிருப்பார்கள். முடிவில் அவர்களின் முகங்களில் ஒரு வேதனை தெரியும். அதிஷ்ட லாபச் சீட்டு விற்பனையால் வரும் வருமானத்தில் இருந்து அரசாங்கம் பல நற்பணிகளை செய்கின்றது என்போர் இந்த வேதனையை பார்க்கவேண்டும்.'................😌  
    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.