Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

செயற்கை சுவாசக்கருவி மூலம் மூச்சு உள்ளே சென்று வெளியே வருகின்றது.

ஒவ்வொரு மூச்சுமே ஒரு போராட்டம்.

சுயநினைவு திரும்புமா? தெரியாது.

ஆனால்,

திரும்பவேண்டும்.

பின்பு...?

கண்கள் விழிக்கவேண்டும். சாதுவாக அல்ல, அவை நன்றாய் அகல விழிக்கவேண்டும். ஆட்கள், பொருட்கள் தெளிவாய், துல்லியமாக தெரியவேண்டும். 

மேலும்?

காதுகள் கேட்கவேண்டும். இரண்டு காதுகளும் கேட்கவேண்டும். மனித குரல்கள், குருவியின் ஓசை, கோயில் மணியோசை, வாகன இரைச்சல் அனைத்துமே காதுகளில் ஒலிக்கவேண்டும்.

இவை மட்டும் போதுமா?

இல்லையே. 

படுத்த படுக்கையாக சரிந்த ஆள் மீள எழவேண்டும். எழுந்து நடமாடவேண்டும். நாளாந்த வாழ்க்கை வழமைக்கு திரும்பவேண்டும். சிரித்து கதைத்து பேசவேண்டும். ஒன்றாக அமர்ந்து படம் பார்க்கவேண்டும். நடக்க செல்லவேண்டும். முன்புபோல் இன்னும் பலநூறு காரியங்கள் சேர்ந்தே செய்யவேண்டும்.

இதற்கு என்ன செய்யலாம்?

கோயிலிற்கு சென்று ஒரு அர்ச்சனை செய்யலாமா?

இல்லை, கோயில் திறந்து இருக்குமா என்பதே நிச்சயம் இல்லை. 

ஆட்களுக்கு சொல்லி கூட்டு பிரார்த்தனை செய்யலாமா?

ஜெபிக்க சொல்லலாமா?

வேறு ஏதாவது...

என்ன செய்யலாம்?

அவசரமாக ஏதாவது செய்தாக வேண்டும்.

முயற்சி  பயன் அளிக்குமோ தெரியாது. ஆனால், எங்கள் மனம் அமைதி அடைவதற்கு எதையாவது செய்து பார்க்க வேண்டும். எமது அன்புக்குரியவர் பிழைக்கவேண்டும்.

நேற்றுவரை உலகம் நன்றாகவே சுழன்றது.

இன்று ஏன்? இப்படி?

நோய், துன்பம், பிணி, இறப்பு, சாக்காடு இயல்பு நிலை. அது ஏன் எமக்கு வரும் என்பதை உணரமுடியாமல் போனது?

மற்றவர்களுக்கு அவை நடக்கும்போது அதன் தாக்கம் உணரப்படமுடியவில்லை. எமக்கு ஒன்றும் நடக்காது என்பதையே நம்பி இவ்வளவு காலமும் ஓடியது.

என்றாலும் கடைசியில்.. 

எமக்கு விரித்த வலையின் விரிப்பினுள் எதிர்பாராத தருணத்தில் கால்கள் முடங்கிவிட்டன?

இனி என்ன செய்வது?

மனம் சுதாகரித்தது.

பரிவு, பரபரிவு நரம்புத்தொகுதி புத்துணர்ச்சி பெற்றதோ? நீளவளைய மையவிழையத்தில் ஏதேனும் அதிசயம் நடந்ததோ? மூளையில் எந்தப்பகுதியில் என்ன நடந்தது? தெரியவில்லை.

இப்போது..

உலகம் தேவலோகமாக தெரிகின்றது.

நேற்றைய நரக வாழ்க்கை இன்று சொர்க்கமாகி விட்டது.

எவ்வளவு காசு இருந்து என்ன. பட்டங்கள் பெற்று என்ன. சுற்றங்கள் அமைந்து என்ன. அவை கிடைத்து என்ன.. கிடைக்காவிட்டாலும் என்ன..

அப்பாடா சாமி. எல்லாமே போதும். போதும். போதும். போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து

நிம்மதியாக படுத்து எழும்ப வேண்டும். வயிறு பசியார உண்ண உணவு வேண்டும். 

வேறு என்ன? 

வியாதி ஒன்றும் வேண்டாம். 

சுவாசப்பைகள் நன்கு தொழிற்படட்டும். இதயம் தொடங்கி தோல், தசை, கைகள், கால்கள், சிறிது பெரிதென என வியாபித்துள்ள உடல் உறுப்புக்கள் எல்லாம் சீராக செயற்படட்டும். புலன்கள், மூளை எல்லாம் நேர்த்தியாக இயங்கட்டும். 

ஆளை தனிமைப்படுத்தி வெண்டிலேட்டரில் வதக்கி எடுக்கும் நிலமை வரவே வரக்கூடாது.

இன்றைய நாள் நல்ல நாள்.

இன்றைய பொழுது நல்ல பொழுது.

இருப்பதை மறந்துவிட்டு இல்லாததை தேடி ஓடும் வாழ்க்கை நிலை மாறி,

நம்மிடம் நமக்கு வாய்த்த அரிய பொக்கிசங்களை இனம் கண்டும்,

அவற்றின் நன்மைகளை எண்ணிப்பார்த்தும்,

மகிழ்கின்ற..

உணர்கின்ற..

வாழ்கின்ற..

தருணம்

இது!

:100_pray::100_pray::100_pray:

 • Like 8
 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

 

உலகம் தேவலோகமாக தெரிகின்றது.

நேற்றைய நரக வாழ்க்கை இன்று சொர்க்கமாகி விட்டது.

எவ்வளவு காசு இருந்து என்ன. பட்டங்கள் பெற்று என்ன. சுற்றங்கள் அமைந்து என்ன. அவை கிடைத்து என்ன.. கிடைக்காவிட்டாலும் என்ன..

அப்பாடா சாமி. எல்லாமே போதும். போதும். போதும். போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து

நிம்மதியாக படுத்து எழும்ப வேண்டும். வயிறு பசியார உண்ண உணவு வேண்டும். 

வேறு என்ன? 

வியாதி ஒன்றும் வேண்டாம். 

சுவாசப்பைகள் நன்கு தொழிற்படட்டும். இதயம் தொடங்கி தோல், தசை, கைகள், கால்கள், சிறிது பெரிதென என வியாபித்துள்ள உடல் உறுப்புக்கள் எல்லாம் சீராக செயற்படட்டும். புலன்கள், மூளை எல்லாம் நேர்த்தியாக இயங்கட்டும். 

ஆளை தனிமைப்படுத்தி வெண்டிலேட்டரில் வதக்கி எடுக்கும் நிலமை வரவே வரக்கூடாது.

இன்றைய நாள் நல்ல நாள்.

இன்றைய பொழுது நல்ல பொழுது.

இருப்பதை மறந்துவிட்டு இல்லாததை தேடி ஓடும் வாழ்க்கை நிலை மாறி,

நம்மிடம் நமக்கு வாய்த்த அரிய பொக்கிசங்களை இனம் கண்டும்,

அவற்றின் நன்மைகளை எண்ணிப்பார்த்தும்,

மகிழ்கின்ற..

உணர்கின்ற..

வாழ்கின்ற..

தருணம்

இது!

:100_pray::100_pray::100_pray:

பட்டறிவு இனி கண்ணைத்திறக்குமா?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இருப்பதை மறந்துவிட்டு இல்லாததை தேடி ஓடும் வாழ்க்கை நிலை மாறி,

நம்மிடம் நமக்கு வாய்த்த அரிய பொக்கிசங்களை இனம் கண்டும்,

அவற்றின் நன்மைகளை எண்ணிப்பார்த்தும், மகிழ்கின்ற..உணர்கின்ற..

வாழ்கின்ற..தருணம்

 

  கொடிய நோயால்  இன்று நாம் காணும்  பட்டறிவு  . இவை உங்களுக்கும் எங்களுக்கும்  நல்  வரமாக கிடைத்திருக்கிறது . கடவுளுக்கு நன்றி சொல்லி மென்மேலும் உற்றார் உறவுகளை காக்க வேண்டுவோம்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆம் ....நடந்தவைகளை மறந்து விடுவோம்.

நடக்கப் போகின்றவைகளை யார் அறிவார்.

இந்த நிமிடத்தில் வாழ்வோம்.....!

அதுதான் தற்சமயம் எமக்கு கிடைக்கும் வெகுமதி.....!

நியாயத்தைக் கதைப்பது எனக்கும் பிடித்திருக்கு......!    😁

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

இன்றைய நாள் நல்ல நாள்.

இன்றைய பொழுது நல்ல பொழுது.

இருப்பதை மறந்துவிட்டு இல்லாததை தேடி ஓடும் வாழ்க்கை நிலை மாறி,

நம்மிடம் நமக்கு வாய்த்த அரிய பொக்கிசங்களை இனம் கண்டும்,

அவற்றின் நன்மைகளை எண்ணிப்பார்த்தும்,

இது தான் மனிதம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பட்டறிவு நிச்சயம் கண்ணை திறக்கவேண்டும் உடையார் 👍

எங்கள் அறிவு மற்றவர்களுக்கு பயன்படவும், மற்றவர்கள் அறிவு எங்களுக்கு பயன்படவும் இந்த மனிதசமூகம் இக்கட்டான இந்தக்காலகட்டம் மூலம் நல்ல பல விடயங்களை கற்று முன்னேறட்டும் நிலாமதி 👍.

இந்த நிமிடத்தில் வாழ்வது இலகுவானது இல்லை. அது வரம். எங்கள்  குரங்கு மனம் அதற்கு இடம் கொடாது. அவரவர் மனவலிமையின் உதவியில் இந்த நிமிடத்தில் வாழ முயற்சிப்போம் சுவை 👍.

மனித  மனம் மனிதனுக்கு அழகு, அழிவு, அறிவு அனைத்தையும் கொடுக்கின்றது ஈழப்பிரியன்👍
 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 21/4/2020 at 20:18, நியாயத்தை கதைப்போம் said:

வியாதி ஒன்றும் வேண்டாம். 

சுவாசப்பைகள் நன்கு தொழிற்படட்டும். இதயம் தொடங்கி தோல், தசை, கைகள், கால்கள், சிறிது பெரிதென என வியாபித்துள்ள உடல் உறுப்புக்கள் எல்லாம் சீராக செயற்படட்டும். புலன்கள், மூளை எல்லாம் நேர்த்தியாக இயங்கட்டும். 

ஆளை தனிமைப்படுத்தி வெண்டிலேட்டரில் வதக்கி எடுக்கும் நிலமை வரவே வரக்கூடாது.

ஆம், நோயற்ற வாழ்வே நிறையற்ற செல்வம் என்பது மூதாதையர் எமக்கு சொல்லிச்சென்ற செய்தி..  

எனது உயரதிகாரி சொல்லுவார்,

படுத்தால் நித்திராதேவி அணைக்கவேண்டும்; 
எழுந்தால் முதல் செல்லுமிடம் மலசலகூடமாகட்டும்;
அதுக்கு வேலை செய் மிகுதி நேரத்தில்  🙂 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ampanai said:

ஆம், நோயற்ற வாழ்வே நிறையற்ற செல்வம் என்பது மூதாதையர் எமக்கு சொல்லிச்சென்ற செய்தி..  

எனது உயரதிகாரி சொல்லுவார்,

படுத்தால் நித்திராதேவி அணைக்கவேண்டும்; 
எழுந்தால் முதல் செல்லுமிடம் மலசலகூடமாகட்டும்;
அதுக்கு வேலை செய் மிகுதி நேரத்தில்  🙂 

நன்றாகத் தெரியுமா, படுத்தால் நித்திராதேவி அணைக்க வேண்டும் என்றுதான் சொன்னாரா....அவருக்கு என்ன வயதிருக்கும்......!   🤔

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, suvy said:

நன்றாகத் தெரியுமா, படுத்தால் நித்திராதேவி அணைக்க வேண்டும் என்றுதான் சொன்னாரா....அவருக்கு என்ன வயதிருக்கும்......!   🤔

61 வயது. திருமணம் ஆகாதவர். மட்டக்களப்பை பூர்வீகமாக கொண்டவர்.

 1. கட்டிலுக்கு போனால் நித்திரை லபக்கென்று வரவேண்டும் 
 2. எழும்பியதும் நம்பர் 2 சடக்கென்று போகவேண்டும் 
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கட்டிலுக்கு போனால் நித்திரை உடனடியாக வருவது, காலை எழுந்ததும் இலகுவாக க*கா போவது நல்ல விசயம் அம்பனை 👍.

கட்டிலுக்கு போய்விட்டு நித்திரை இல்லாமல் மாறி மாறி புரண்டு உருளுவதும் இடையிடையே போனை சுரண்டிக்கொண்டு இருப்பதும், இவ்வாறே காலையில் க*கா போகாமல் முக்கிக்கொண்டு இருப்பதுவும் நல்ல அறிகுறிகள் இல்லை.

நாங்கள் சிறிதுகாலமாய் கொரோனா கொரோனா என்று அலறி அடித்து ஓடுகின்றோம். இந்த வாட்ஸப், வைபர், பேஸ்புக் எல்லாமே கூட அலறி அடித்துக்கொண்டு ஓடவேண்டிய கிருமிகளே. எங்கள் உடலையும், உளத்தையும் சின்னாபின்னமாக்கி வாழ்க்கையையே நாசமாக்கக்கூடிய வலிமை இவற்றுக்கு உள்ளது.

எல்லாம் அளவாக கட்டுப்பாட்டுடன் பாவித்தால் பிரச்சனை இல்லை. ஆனால், அளவுடன் நிற்பாட்டும் அளவுக்கு எங்கள் ஒவ்வொருவருக்கும் மனக்கட்டுப்பாடு உள்ளதா? கொலஸ்ரோல், சுகர் போல இவற்றின் அளவு எல்லை மீறிகடந்து பல வில்லங்கங்களில் மாட்டி நிற்கின்றோம்.

நல்ல நிலையில் திடகாத்திரமாய் வழுவழு என்று உடம்பை காப்பதுவும், உளம் ஆற்றல்கள் மிகுந்ததாக விளங்கும் வகையிலும் வைத்து பேணுவது பெரும் எமக்கு போராட்டமே.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

 

On 22/4/2020 at 05:48, நியாயத்தை கதைப்போம் said:

வியாதி ஒன்றும் வேண்டாம். 

சுவாசப்பைகள் நன்கு தொழிற்படட்டும். இதயம் தொடங்கி தோல், தசை, கைகள், கால்கள், சிறிது பெரிதென என வியாபித்துள்ள உடல் உறுப்புக்கள் எல்லாம் சீராக செயற்படட்டும். புலன்கள், மூளை எல்லாம் நேர்த்தியாக இயங்கட்டும். 

வியாதி இல்லா உடல் எனது சித்தியின் இரு பிள்ளைகள் தலசீமியா என்கிற நோய்ய்கு ஆளாகிவிட்டார்கள் 

தினம் தினம் தாய் தந்தையர் இறந்து வாழ்கிறார்கள்  மாதம் தோறும் இரத்தம் ஏற்றல் நோய்கள் வரா உடல் வேண்டும் காசு பணம் இல்லாவிட்டாலும் 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சுகதேகத்துடன் கழிகின்ற ஒவ்வொரு நாட்களிற்கும் நாம் எமது உடலிற்கு நன்றி உடையவர்களாய் விளங்குவோம் ராஜா 👍.

உடல் எமக்கு கிடைத்த விலைமதிப்பற்ற செல்வம், பெரும் பொக்கிசம். அதை பாதுகாக்கவேண்டியது எமது பொறுப்பு, கடமை. 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி இன்று   பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி இன்று வெளியிடப்படவுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதுதொடர்பாக தெரிவிக்கையில்,2019ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி இன்று வெளியிடப்படவிருப்பதாக தெரிவித்தார். 41 ஆயிரத்து 500 மாணவர்கள் இம்முறை கழங்களுக்கான அனுமதியைப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதற்கமைவாக மருத்துவ பீடத்திற்கு 270 பேர் பொறியியல் பீடத்திற்கு 405 பேர் என்ற ரீதியில் அதிக எண்ணிக்கையான மாணவர்கள் இம்முறை பல்கலைக்கழகத்திற்கு அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க மேலும் தெரிவித்தார். http://tamil.adaderana.lk/news.php?nid=135688
  • நாடாளுமன்றத்திற்குள் நுழைவார் என்ற செய்திகளுக்கு மௌனம் காக்கும் பசில்         by : Jeyachandran Vithushan http://athavannews.com/wp-content/uploads/2020/10/Basil.jpg எதிர்காலத்தில் நாடாளுமன்றத்திற்குள் நுழைவார் என்ற செய்திகளுக்கு பதிலளிக்க முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மறுத்துவிட்டார். அரசியலமைப்பின் 20 வது திருத்தம் பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கான பாதையை உருவாக்க பயன்படுத்தப்படவுள்ளது என்ற ஊகங்கள் காணப்பட்டன. இருப்பினும் இந்த விடயம் தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு பசில் ராஜபக்ஷ கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். தன்னை நாடாளுமன்றத்திற்கு அழைத்துவர பயன்படுத்தப்படுகிறது என கூறி 20 ஆவது திருத்தத்தின் முக்கியத்துவத்தை பறிக்கக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது இரட்டை குடியுரிமையை கொண்ட பசில் ராஜபக்ஷ தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்படுவார் என்றும் தற்போது தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் அதற்காக இராஜினாமா செய்வார் என்றும் செய்திகள் வெளியாகியிருந்தன. அரசியலமைப்பின் 20 வது திருத்தத்தில் சேர்க்கப்பட்ட இரட்டை குடியுரிமை கொண்ட ஒருவர் நாடாளுமன்றம் நுழைய முடியும் என்ற விதி கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்குள் நுழைய அனுமதிக்கவே 20 ஆவது திருத்தம் தயாரிக்கப்பட்டது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்திருந்தார். அத்தோடு எதிர்காலத்தில் அமெரிக்கா மற்றும் சசீனாவின் குடிமக்கள் பலரும் நாடாளுமன்றத்திற்கு நியமிக்கப்படுவார்கள் என்று அவர் குறிப்பிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. http://athavannews.com/நாடாளுமன்றத்திற்குள்-நு/
  • மோடி 13 ஆவது திருத்தத்தையும், பொம்பியோ பாதுகாப்பு ஒப்பந்தத்தையும் வைத்துக் காய் நகர்த்துகிறார்கள். இலங்கை அடம்பிடித்தால், விரைவில் கிடப்பில் போட்டிருக்கும் போர்க்குற்ற விசாரணைகளை தூசு தட்டி ஐ. நா வில் படம் காட்டக் கூடும். ஆனால், இலங்கையினைப் பாதுகாக்க சீனா, கியூபா, ஈரான் என்று பல நண்பர்கள் இப்போது பாதுகாப்புக் கவுன்ஸிலில் இருக்கிறார்கள். இதையெல்லாம் கணித்துத்தான் இலங்கை சாதுரியமாக பொம்பேயுக்கும், மோடிக்கும் தண்ணி காட்டுகிறது.  ஒருவேளை அழுத்தம் கூடினால், ஒரேயடியாகக் காலில் வீழ்ந்துவிடும். அதற்குப்பிறகு போர்க்குற்ற விசாரணைகளும் இல்லை, 13 ஆம் திருத்தமும் இல்லை. எமது வாழ்வும் மாறப்போவதில்லை.
  • கொலைகளை யார் நியாயப்படுத்துகிறார்கள்? ஓர் இலக்கை அடைவாதத்திற்கு, கொலைகள் மட்டுமே தெரிவாகவும், கொள்கையாகவும் இருந்தது இல்லை என்பதே  நான் சொல்வது. அப்படி இருந்து இருந்தால், ஓர் எச்சரிக்கையா அல்லது அறிவித்தலுமின்றி, கொலைசெய்யப்பட்டவர்கள் தட்டுத்தடுமாறி சுதாகரிப்பதற்குள் கொலை செய்வதே நடைபெற்று இருக்கும், கொலையே ஓர் தெரிவாகவும் கொள்கையாகவும் இருக்கும் பொது. புலிகள் எவரின் மீதோ அப்படி நடந்து இருந்தால், சுட்டிக் காட்டவும். துரையப்பாவை பிரபாகரன் சுட்ட போது, தமிழ் புதிய புலிகள்  என்ற அமைப்பே இருந்தது. ஆயினும், அது செய்யப்பட்ட முறை தவறு. துரையப்பாக்கு எச்சரிக்காய்கள் விடுக்க பட்டு இருக்க வேண்டும்.   அனால், தர்மலிங்கம், ஆலால சுந்தரம் போன்றவர்களை, அமைப்பு அடிப்படையில் நாராக ஊன்றி விட்டு இருந்த போதும், டெலோ தனது RAW எசமானாரின் விசுவாசத்துக்காக சகோதர படு கொலை செய்தது, ஓர் அறிவித்தாலும் இன்றி. அதே   ஆலால சுந்தரம், புலிகளால் காலில் மட்டுமே சுடப்பட்டார், பல எச்சரிக்கைகளின்  பின்பு. இங்கே சுட்டது சரியா அல்லது பிழையா என்பது கேள்வி அல்ல. அதே போல, புலி உறுப்பினரின் சகோதரம் ஒருவர் சிறு திருட்டுகள் தொடர்ச்சியாக செய்த பொது, அந்த புலி உறுப்பினரே, ஓர் எச்சரிக்கையும் இன்றி, மிகவும் உக்கிரமாக அடித்து தண்டனை வழங்குமாறு பணிக்கப்பட்டார். அந்த புலி உறுப்பினர், அவரின் தம்பியை வீட்டிலேயே பூட்டி வைத்து விட்டு,  ஓலம் கேட்கும் வரையிலும் அடித்தார். தம்பி 10-11 மாதமாக எழும்ப முடியவில்லை. இதுவே ஓர் உதாரணம், புலிகள் இலக்கை அடைவதற்கு கொலை முதல் தெரிவு அல்ல. ஜனநாய நாடுகளிலும், இதுவே law fully administering death என்ற சட்டக் கோட்பாடு  இந்த அடிப்படையில் செய்யப்படுகிறது. அடிப்படையாக, ஓர் இலக்கை அடைவதற்கு, அதை நடைமுறைப்படுத்தும் தெரிவுகளை (கொலையோ அல்லது வேறு எதுவோ) மேற்கொள்வதற்கு விதிகள் விதிக்கப்பட்டு, அவை பின்பற்றப்பட வேண்டும்.          நான் முன்பே சொல்லி இருக்கிறேன், புலிகள் அவர்களை அறியாமலேயே நியாயாதிக்கத்தையும் (legitimacy), இயற்கை நீதியையும் (natural justice) பல படிகளில், மிகவும் சீரியஸ் ஆக எடுத்து கொண்டார்கள்.  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.