Jump to content

நிவேதாவின் சமையல்

Recommended Posts

நீண்ட நாட்களாக என் சமையலை போடவேண்டும் என எண்ணியும் இப்போதான் அதற்கு நேரம் வாய்த்திருக்கு.

முதல்ல இனிப்பாத் தொடங்குவம்

                                                                                                                          கொக்கிஸ்

Image may contain: food

தேவையான பொருட்கள் :

பச்சை அரிசி ( long Grein Rice) - 1 Kg
சீனி - 100 - 200 g
தேங்காய்ப் பால் - 1 முழுத்தேங்காய் / 100 g தே .பால் பவுடர்
ஏலக்காய் / கறுவா - அளவானது
உப்பு - அரை மேசைக் கரண்டி
எண்ணெய் - பொரிக்க அளவானது
நிறம் - சிவப்பு /பச்சை/ மஞ்சள்  
அச்சு

செய்முறை :

அரிசியை ஒரு மணிநேரம் ஊறவைத்து நீரை வடியவிட்டு செய்தித் தாளிலோ அல்லது வேறு தாள்களிலோ பரவி நீரை வடியவிடவேண்டும். பின்னர் மிக்சியில் போட்டு அரைத்து, அரைத்ததை அரிதட்டால் அரித்து ஒரு பாத்திரத்தில் போடவேண்டும்.

அரிதட்டு இல்லாதவர் மிக நன்றாக குருணல் இன்றி அரைத்து எடுக்கவேண்டும். பின்னர் தேங்காய் துருவிப் பிழிந்து எடுத்த பால், சீனி இரண்டையும் ஒன்றாய்ப் போட்டு சீனி கரைந்தபின் அரிசிமா, ஏலக்காய்த் தூள் அல்லது கறுவாத்தூள் சிறிதளவு போட்டு கட்டிக் கூழ்ப் பதத்துக்குக் கரைக்க வேண்டும்.  

பின்னர் நீங்கள் பொரிப்பதற்குப் பயன்படுத்தும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, தேவையான எண்ணெய் ஊற்றி அச்சையும் பாத்திரத்தினுள் வைத்துவிடவேண்டும். எண்ணெய் கொதித்ததும் அடுப்பைக் கொஞ்சம் குறைத்துவிட்டு அச்சை எண்ணெயிலிருந்து எடுத்து மாவில் முழுதும் மூழ்காவண்ணம் வைக்க மா அச்சில் ஒட்டும். உடனே அதை எண்ணெயுள் வைக்கப் பெரிய ஆரம்பிக்கும். உடனே அச்சை எண்ணெயில் அசைக்க அச்சிலிருந்து மா களரும். சிறிது நேரத்தில் அதைப்பிரட்டி வெந்ததும் வெளியே எடுக்கவும்.

 பழக்கமற்ற அச்சு முதலில் களர  மறுக்கும் . இரண்டொரு தரம் செய்தபின் தட்டியவுடன் அச்சைவிட்டுக் களரும்.

Image may contain: plant

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்
 • Like 9
 • Thanks 2
Link to comment
Share on other sites

 • Replies 753
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

 • கருத்துக்கள உறவுகள்

ஆகா ஆகா
மிச்சம் மீதியும் தொடரட்டும்.

Link to comment
Share on other sites

ஒவ்வொரு நாளைக்கு ஒன்றுதான் அண்ணா.😀

படம்தான் சிறிதாக மாட்டேன் என்கிறது. தெரிந்தால் யாரும் வழி சொல்லுங்கள்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நல்லா மினக்கட்டு இருக்கிறீங்கள் ....... கொக்கிஸ் நன்றாக வந்திருக்கு சகோதரி.....அடுத்த பதார்த்தத்துக்காக ஆவலுடன்......!   👍

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

உந்த அச்சை ஒருக்காய் கடனாய் தருவியளோ???

Link to comment
Share on other sites

கொக்கிஸ் நல்லா வந்திருக்கு. செய்து 20 வருடங்களாகுது. அச்சும் இல்லை 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

முன்பு ஒருமுறை, இதை செய்து சாப்பிட்ட  போது....
எனக்கு... வயித்தாலை, அடிச்சு...
அஞ்சு நாள்... ஆஸ்பத்திரியில் இருந்து, 
தப்பி வந்ததை.... நினைக்க,  பயங்கரமாய்.... இருந்தது 

***

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நல்லாயிருக்கு கொக்கிஸ், ஊரில் சாப்பிட்டதை விட சிங்கள அன்ரியிடம் சாப்பிட்டது நல்ல சுவை

1 hour ago, MEERA said:

உந்த அச்சை ஒருக்காய் கடனாய் தருவியளோ???

அச்சு வீட்டில் அப்படியே புத்தம் புதிதாக இருக்கு,  USD 100/-  paypal க்கு அனுப்பிவிடுங்கள்,  இரண்டு கிழமையில் வீட்டு வாசலுக்கு அனுப்பிவிடுகின்றேன்😃

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nilmini said:

கொக்கிஸ் நல்லா வந்திருக்கு. செய்து 20 வருடங்களாகுது. அச்சும் இல்லை 

எது... ஆ...

பார்க்க 20 வருசத்துக்கு முன்னம் செய்த கொக்கிஸ் மாதிரிதான் இருக்குதோ?

அக்கா இப்ப தான் செய்து போட்டிருக்கிறா.... 😉

 • Haha 1
Link to comment
Share on other sites

51 minutes ago, Nathamuni said:

எது... ஆ...

பார்க்க 20 வருசத்துக்கு முன்னம் செய்த கொக்கிஸ் மாதிரிதான் இருக்குதோ?

அக்கா இப்ப தான் செய்து போட்டிருக்கிறா.... 😉

சுமே அக்கா இப்பதான் பொரிச்சிருக்கிறா. நான்தான் கடையசியாக 20 வருடங்களுக்கு முன்பு நியூசிலாந்தில் செய்தேன். அச்சை அங்கேயே விட்டுட்டு வந்திட்டேன் .

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, nilmini said:

சுமே அக்கா இப்பதான் பொரிச்சிருக்கிறா. நான்தான் கடையசியாக 20 வருடங்களுக்கு முன்பு நியூசிலாந்தில் செய்தேன். அச்சை அங்கேயே விட்டுட்டு வந்திட்டேன் .

சரி... ஒரு கந்தர்மட போட்டி...

இன்னும் ஒரு வாரத்துக்குள், நியூஸிலாந்து போய், அந்த அச்சினை எடுத்துக்கொண்டு வந்தீர்கள் எண்டால், போற வாற விமான பயண செலவை, நானும், தமிழ்சிறியர் மற்றும் சுவியர் ஏற்றுக் கொள்கிறோம்...

 • Haha 1
Link to comment
Share on other sites

17 minutes ago, Nathamuni said:

சரி... ஒரு கந்தர்மட போட்டி...

இன்னும் ஒரு வாரத்துக்குள், நியூஸிலாந்து போய், அந்த அச்சினை எடுத்துக்கொண்டு வந்தீர்கள் எண்டால், போற வாற விமான பயண செலவை, நானும், தமிழ்சிறியர் மற்றும் சுவியர் ஏற்றுக் கொள்கிறோம்...

இது என்ன கந்தர்மட போட்டியா? இப்ப USA இருக்குற நிலைமைக்கு ஒரு நாட்டுக்கும் போகமுடியாது . கலைப்பார்கள். 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நீண்ட நாட்களாக என் சமையலை போடவேண்டும் என எண்ணியும் இப்போதான் அதற்கு நேரம் வாய்த்திருக்கு.

முதல்ல இனிப்பாத் தொடங்குவம்

                                                                                                                          கொக்கிஸ்

Image may contain: food

தேவையான பொருட்கள் :

பச்சை அரிசி ( long Grein Rice) - 1 Kg
சீனி - 100 - 200 g
தேங்காய்ப் பால் - 1 முழுத்தேங்காய் / 100 g தே .பால் பவுடர்
ஏலக்காய் / கறுவா - அளவானது
உப்பு - அரை மேசைக் கரண்டி
எண்ணெய் - பொரிக்க அளவானது
நிறம் - சிவப்பு /பச்சை/ மஞ்சள்  
அச்சு

செய்முறை :

அரிசியை ஒரு மணிநேரம் ஊறவைத்து நீரை வடியவிட்டு செய்தித் தாளிலோ அல்லது வேறு தாள்களிலோ பரவி நீரை வடியவிடவேண்டும். பின்னர் மிக்சியில் போட்டு அரைத்து, அரைத்ததை அரிதட்டால் அரித்து ஒரு பாத்திரத்தில் போடவேண்டும்.

அரிதட்டு இல்லாதவர் மிக நன்றாக குருணல் இன்றி அரைத்து எடுக்கவேண்டும். பின்னர் தேங்காய் துருவிப் பிழிந்து எடுத்த பால், சீனி இரண்டையும் ஒன்றாய்ப் போட்டு சீனி கரைந்தபின் அரிசிமா, ஏலக்காய்த் தூள் அல்லது கறுவாத்தூள் சிறிதளவு போட்டு கட்டிக் கூழ்ப் பதத்துக்குக் கரைக்க வேண்டும்.  

பின்னர் நீங்கள் பொரிப்பதற்குப் பயன்படுத்தும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, தேவையான எண்ணெய் ஊற்றி அச்சையும் பாத்திரத்தினுள் வைத்துவிடவேண்டும். எண்ணெய் கொதித்ததும் அடுப்பைக் கொஞ்சம் குறைத்துவிட்டு அச்சை எண்ணெயிலிருந்து எடுத்து மாவில் முழுதும் மூழ்காவண்ணம் வைக்க மா அச்சில் ஒட்டும். உடனே அதை எண்ணெயுள் வைக்கப் பெரிய ஆரம்பிக்கும். உடனே அச்சை எண்ணெயில் அசைக்க அச்சிலிருந்து மா களரும். சிறிது நேரத்தில் அதைப்பிரட்டி வெந்ததும் வெளியே எடுக்கவும்.

 பழக்கமற்ற அச்சு முதலில் களர  மறுக்கும் . இரண்டொரு தரம் செய்தபின் தட்டியவுடன் அச்சைவிட்டுக் களரும்.

அதெல்லாம் சரி.... நிவேதா ஆரக்கா? மகளிண்ட பேரா இருக்குமோ எண்டு யோசிச்சன்...
 
1 minute ago, nilmini said:

இது என்ன கந்தர்மட போட்டியா? இப்ப USA இருக்குற நிலைமைக்கு ஒரு நாட்டுக்கும் போகமுடியாது . கலைப்பார்கள். 

அதுதானே போட்டியின் விசயமே... துணிந்து வெளிக்கிட்டு போய் எடுத்து வந்தால்... பயணச்செலவு தருவோம்.... 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நீங்கள் போட்ட படம் பல அளவுகளில்..!

ஏம்மா, இப்படி அச்சு முறுக்கை செய்து தொட்டியில் உரமா போட்டுவிட்டீர்கள்..? வீட்டில் யாரும் சாப்பிடவில்லையா..? 😋

6 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஒவ்வொரு நாளைக்கு ஒன்றுதான் அண்ணா.😀

ஒரு நாளைக்கு ஒரு முறுக்குதானா..? 🙄

அதுக்கு மேலே சாப்பிட முடியாதா..? அவ்வளவு சுவையாகவா இருக்கு..? 🤣

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

படம்தான் சிறிதாக மாட்டேன் என்கிறது. தெரிந்தால் யாரும் வழி சொல்லுங்கள்.

நீங்கள் இணக்கும் படத்தின் மீது சுட்டியால்(Mouse) இரண்டுமுறை தொடர்ந்து 'க்ளிக்' செய்தால்(Double click) கீழ்க்கண்ட பெட்டி(Pop up) வரும். அதில் நீங்கள் மாற்ற விரும்பும் அளவை(Pixels) குறிப்பிட்டு முடிவில் அப்டேட்(Update) செய்தால் குறிப்பிட்ட அளவிற்கு படம் மாறி தெரியும்.

சரி.. சரி.. ரொம்பவும் முழிக்காமல், ஆலோசனை சொன்னதற்கு 10 K பவுண்ட்ஸ் அனுப்பவும். ஒங்க லண்டனுக்கு வந்து சுத்தி பார்த்ததில் ரொம்ப செலவாயிடிச்சி..! :(:)

test.jpg

Edited by ராசவன்னியன்
 • Haha 1
Link to comment
Share on other sites

20 hours ago, suvy said:

நல்லா மினக்கட்டு இருக்கிறீங்கள் ....... கொக்கிஸ் நன்றாக வந்திருக்கு சகோதரி.....அடுத்த பதார்த்தத்துக்காக ஆவலுடன்......!   👍

வீட்டில நின்மதியா இருக்க விடாயள் போல 🤣 

18 hours ago, MEERA said:

உந்த அச்சை ஒருக்காய் கடனாய் தருவியளோ???

கடனாய்த் தர ஏலாது.ஒரு 100 பவுன்ஸ் தந்திட்டு எடுத்துக்கொண்டு போங்கோ. திருப்பித் தந்தால் பணம் திருப்பிக் கிடைக்கும். துலைச்சுப் போட்டன் எண்டு சொன்னால் நான் கோவிக்கமாட்ட்டான்.   😃

18 hours ago, nilmini said:

கொக்கிஸ் நல்லா வந்திருக்கு. செய்து 20 வருடங்களாகுது. அச்சும் இல்லை 

உத்து ருசி என்றாலும் மினைக்கெட்ட வேலை.சும்மாதான் இருக்கிறியள் செய்துதாங்கோ என்று பிள்ளைகள் கேட்டதால செய்தது.😀

Link to comment
Share on other sites

16 hours ago, Nathamuni said:

அதெல்லாம் சரி.... நிவேதா ஆரக்கா? மகளிண்ட பேரா இருக்குமோ எண்டு யோசிச்சன்...
 
நல்லா யோசிப்பியள் 😎

17 hours ago, Nathamuni said:

எது... ஆ...

பார்க்க 20 வருசத்துக்கு முன்னம் செய்த கொக்கிஸ் மாதிரிதான் இருக்குதோ?

அக்கா இப்ப தான் செய்து போட்டிருக்கிறா.... 😉

நீங்கள் முடிஞ்சு விட ஏலாது 😃

17 hours ago, உடையார் said:

நல்லாயிருக்கு கொக்கிஸ், ஊரில் சாப்பிட்டதை விட சிங்கள அன்ரியிடம் சாப்பிட்டது நல்ல சுவை

அச்சு வீட்டில் அப்படியே புத்தம் புதிதாக இருக்கு,  USD 100/-  paypal க்கு அனுப்பிவிடுங்கள்,  இரண்டு கிழமையில் வீட்டு வாசலுக்கு அனுப்பிவிடுகின்றேன்😃

ஊரில் கனக்க உண்டிருப்பீர்கள். சிங்கள அன்ரி அளவாத் தந்தியிருப்பா. ருசிச்சிருக்கும்.

15 hours ago, ராசவன்னியன் said:

நீங்கள் போட்ட படம் பல அளவுகளில்..!

ஏம்மா, இப்படி அச்சு முறுக்கை செய்து தொட்டியில் உரமா போட்டுவிட்டீர்கள்..? வீட்டில் யாரும் சாப்பிடவில்லையா..? 😋

ஒரு நாளைக்கு ஒரு முறுக்குதானா..? 🙄

அதுக்கு மேலே சாப்பிட முடியாதா..? அவ்வளவு சுவையாகவா இருக்கு..? 🤣

😂 ஒரு நாளைக்கு ஒரு ரெசிப்பி என்றேன். உங்கள் ஊரிலுமிதை செய்வார்கள் தானே அண்ணா ?

15 hours ago, ராசவன்னியன் said:

சரி.. சரி.. ரொம்பவும் முழிக்காமல், ஆலோசனை சொன்னதற்கு 10 K பவுண்ட்ஸ் அனுப்பவும். ஒங்க லண்டனுக்கு வந்து சுத்தி பார்த்ததில் ரொம்ப செலவாயிடிச்சி..! :(:)

நான் கேட்டது இலவச ஆலோசனை. லண்டன் வந்து சந்திக்காமல் ஓடியதுக்கு நீங்கள் தான் காசு தரணுமாக்கும். 😀நன்றி அண்ணா

Link to comment
Share on other sites

தொட்டியில் வைத்தது காக்கா குருவி சாப்பிட

18 hours ago, தமிழ் சிறி said:

முன்பு ஒருமுறை, இதை செய்து சாப்பிட்ட  போது....
எனக்கு... வயித்தாலை, அடிச்சு...
அஞ்சு நாள்... ஆஸ்பத்திரியில் இருந்து, 
தப்பி வந்ததை.... நினைக்க,  பயங்கரமாய்.... இருந்தது 

***

உங்கள் மனைவி மருந்து ஏதும் மாவுடன் கலந்துவிட்டாரோ???? அரிசிமாவு தேங்காய்ப்  பாலும் நோயாளியைக் கூட ஒன்றும் செய்யாதே.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தமிழ் சிறி said:

முன்பு ஒருமுறை, இதை செய்து சாப்பிட்ட  போது....
எனக்கு... வயித்தாலை, அடிச்சு...
அஞ்சு நாள்... ஆஸ்பத்திரியில் இருந்து, 
தப்பி வந்ததை.... நினைக்க,  பயங்கரமாய்.... இருந்தது 

***

அப்ப அண்ணனுக்கு ஒரு பார்சல் அனுப்ப ரெடியாகுங்க அக்கா

நன்றாகத்தான் இருக்கிறது அக்கா

Link to comment
Share on other sites

Sauce

1 minute ago, தனிக்காட்டு ராஜா said:

அப்ப அண்ணனுக்கு ஒரு பார்சல் அனுப்ப ரெடியாகுங்க அக்கா

நன்றாகத்தான் இருக்கிறது அக்கா

ஆஸ்பத்திரி வரை போனவர் இனிமேல் வாயில வைப்பார் எண்டு நினைக்கிறியளே  🤣

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அரிசியை ஒரு மணிநேரம் ஊறவைத்து நீரை வடியவிட்டு செய்தித் தாளிலோ அல்லது வேறு தாள்களிலோ பரவி நீரை வடியவிடவேண்டும்

சுமேரியர், இன்னுமா செய்தித்தாள்களை சமையலுக்கு பயன்படுத்துகிறீர்கள். மிக மிக தவறான விடயம்.

என் வயதுக்கு எண்ணைப் பணியாரம் எல்லாம் சரிவராது. வேறு நல்ல சமையல் குறிப்புகளைப் போடும் போது பார்ககலாம்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஆஸ்பத்திரி வரை போனவர் இனிமேல் வாயில வைப்பார் எண்டு நினைக்கிறியளே  🤣

அதுவும் சரிதான் 🤣

Link to comment
Share on other sites

1 minute ago, Kavi arunasalam said:

சுமேரியர், இன்னுமா செய்தித்தாள்களை சமையலுக்கு பயன்படுத்துகிறீர்கள். மிக மிக தவறான விடயம்.

என் வயதுக்கு எண்ணைப் பணியாரம் எல்லாம் சரிவராது. வேறு நல்ல சமையல் குறிப்புகளைப் போடும் போது பார்ககலாம்.

செய்தித் தாளின் மேல் Kitchen ரிசு விரித்துத்தான் போடுவது. அநேகமாக எல்லோரும் அப்படித்தான் செய்வர் என்று எண்ணிப் போடவில்லை அண்ணா.

Link to comment
Share on other sites

நிவேதாவின் Sauce சோஸ் செய்முறை

Image may contain: food

ராராஜவன்னியன் அண்ணா நீங்கள் கூறியதுபோலப் படத்தை எடிட் செய்ய எந்த option உம் காட்டுதில்லை

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்
 • Like 1
 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நிவேதாவின் Sauce சோஸ் செய்முறை

Image may contain: food

ராராஜவன்னியன் அண்ணா நீங்கள் கூறியதுபோலப் படத்தை எடிட் செய்ய எந்த option உம் காட்டுதில்லை

நீங்கள் இப்படி  எல்லாம் செய்து பயமுறுத்தினால், ஒரு ஒப்சனும் வராதே.😎

Link to comment
Share on other sites

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • முன்போ பின்போ டீல் இல்லாமல் எதற்கும் ஒப்புதல் அளிக்க கூடாது. குறிப்பாக சிங்கள கட்சிகள் ஏமாற்று பேர்வழிகள். கடந்த காலத்தில் இருந்தாவது கற்க வேண்டும்.
  • 1. இந்த சந்திப்பை வாக்களிக்க முன் செய்து. பின்னர் இதை காரணம் காட்டி வாக்களிக்காமல் விட்டு இருக்கலாம். 2. வாக்களித்த பின். இப்போ செய்வது போல, தொடர்ந்தும் வெளியில் இருந்து ஆதரவு. முன் மொழிவுகளை கையளிப்பு. ஆனால் சமரசமில்லாமல் அதிகார பகிர்வு, ஜெனிவா விடயத்தை கையாளலாம். இதில் 1ம் தெரிவை விட சில சமயம் 2ம் தெரிவு பலனளிக்குமோ?
  • அதாவது காசு மட்டும்தாங்கோ அதிகாரம் எல்லாம் கேட்காதேங்கோ. இந்தியாவிடம் பெற்றோலை யாசகம் பெற்று விட்டு, சீன கப்பலை வர விடும் அதே அணுகுமுறை.  ஒரு சந்திப்பின் பின் இப்படியான வெளிப்படை அறிக்கை விடுவது வரவேற்க வேண்டியது. சும், சாணக்கியன் போல் படத்தை மட்டும் போட்டு, என்னை மதுரையில கேட்டாக, மாயவரத்தில கேட்டாக என சீன் காட்டாமல்.
  • தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதை விட ஜெனிவாக் கூட்டமே ஜனாதிபதிக்கு முக்கியம்! விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டு 14 August 2022, 9:58 am தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதை விட நடைபெறவுள்ள ஜெனிவாக் கூட்டமே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு முக்கியமானது என்பதை நாங்கள் அவரது அழைப்பில் இருந்து அறிந்து கொண்டோம் என பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் 2022 ஆகஸ்ட் 10 ஆம் திகதி மாலை 4.30 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் எமது கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் திரு. எஸ்.செல்வேந்திரா அவர்களுடன் நான் அவரைச் சந்தித்தேன். அந்த தருணத்தில் கௌரவ பிரதமரும் உடனிருந்தார். மாகாண ஆளுநர்களுக்கு அதிக பொறுப்பதிகாரத்தை வழங்கும் பாராளுமன்ற ஆளுகைக் குழுவை உள்ளடக்கிய தனது ஆட்சித் திட்டத்தை ஜனாதிபதி எமக்கு விரிவாக விளக்கினார். அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் தேசிய நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் அந்தந்த மாகாண ஆளுநர்களின் தலைமையில் பணி செய்ய வேண்டும் என்பது அவரது யோசனை. மேற்படி திட்ட யோசனைக்கு ஆஸ்திரியா நாட்டை உதாரணமாகக் குறிப்பிட்டார். (இந்த இடத்தில் அவரது உதாரணம் பொருத்தமற்றது. ஏனெனில் ஆஸ்திரியா ஒரு கூட்டாட்சி நாடு). மேலும், மத்திய அரசாங்க அமைச்சுக்களால் மாகாணங்களில் காணிகளை அபகரிப்பது தொடர்பில் கலந்துரையாடிய ஜனாதிபதி, அமைச்சுக்களால் அபகரிக்கப்பட்ட வன நிலங்கள் எதுவும் இருக்கக் கூடாது என்றும், ஒவ்வொரு மாகாண அமைச்சுக்களும் சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்ற கருத்தை ஏற்றுக் கொண்டார். தேவைப்பட்டால் அதிகபட்சம் 2 ஏக்கர் நிலத்தை மாத்திரம் அரசு கையகப்படுத்தலாம் என்றும் கூறினார். அதற்கு நான், “அந்தந்த மாகாண அரசாங்கத்தின் சம்மதத்தினையும், அனுமதியினையும் பெறாமல் , மாகாணங்களில் மத்திய அரசாங்கத்தால் எந்தவொரு காணியும் சுவீகரிக்கப்படக் கூடாது என்பதை வலியுறுத்த வேண்டும்” என்றேன். இதற்கு ஜனாதிபதி அவர்களிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. தேசியப் பாடசாலைகள் குறித்து அவர் கூறுகையில், நாட்டிற்கு 1,000 தேசியப் பாடசாலைகள் தேவையில்லை, 50 தேசியப் பாடசாலைகள் போதும். எனக்கூறினார். இதன் போது நான், “எந்தவொரு மாகாண பாடசாலைகளையும் மத்திய அரசால் கையகப்படுத்த முடியாது எனவும், இது தொடர்பில் எமது கூட்டணி ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதையும்” சுட்டிக் காட்டினேன். அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதற்காக யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர்களை தனது அரசின் வலைக்குள் விழ வைத்து அதனை ஜெனிவாவிற்கு காட்டி தப்பித்துக் கொள்வதற்கான நாடகம் போன்றே எமக்கு தோன்றினாலும் நான் அதனை விமர்சிக்கவில்லை. ஏனெனில் ஐக்கிய நாடுகள் சபையின் 46/1 என்ற கட்டளைச்சட்டத்தின் அடிப்படையில் ஜெனிவாவின் எடுக்கப்பட்ட தீர்மானங்களை அரசு ஏற்கனவே நிராகரித்திருந்தமையினால் ஆகும்.  வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் மக்கள் மூலம் எவ்வாறு நாட்டிற்கு நிதி உதவி செய்ய முடியும் என்பது குறித்த ஆவணத்தை குறிப்புக்களுடன் முன்வைக்குமாறு என்னிடம் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்கள். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முற்றாகப் புறக்கணித்து முழு நாட்டினதும் மத்திய நிர்வாக அதிகாரத்தை வலுப்படுத்துவதே அவரது மறைமுக நோக்கம் என்பதை அவருடன் கலந்துரையாடிய போது எம்மால் அறிந்து கொள்ள முடிந்தது. “தற்போதைய சூழலில் தமிழ்த் தேசியக் கட்சித் தலைவர்கள் அனைவராலும் முன்வைக்கப்படும்  கோரிக்கைகளும், இந்நாட்டிலுள்ள தமிழ் மக்கள் அனைவரும் எதிர்பார்க்கும் விடயம் அரசியல் கைதிகளின் விடுதலை. இனை செயற்படுத்தஅரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காணாமல் போனவர்களை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், தமிழர்களின் காணிகளை அபகரிக்கும் பல்வேறு அரச திணைக்களங்களின் அதிகார செயற்பாடுகளை உடன் நிறுத்துவதுடன், இராணுவத்தின் உதவியுடன் தமிழர் தாயக நிலங்களில் பௌத்த விகாரைகளை கட்ட முயலும் நபர்களை தடுத்து நிறுத்த வேண்டும். இவையே தற்போது எமக்கு தேவையானவை என்பதை நான் மிகவும் வலியுறுத்திக் கூறினேன். தமிழர்கள் தமது மாகாணங்களில் அரசியல் தலைமைத்துவத்தையும், ஆட்சியையும் பெற்றுக் கொள்வதற்கு திருப்திகரமான அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் வரை தற்காலிக நடவடிக்கையாக அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் எனவும் எமது தரப்பினால் சுட்டிக்காட்டப்பட்டது. தமிழ் மக்களுக்கான சரியான அரசியல் பகிர்வு ஏற்படுத்தப்படும் வரை மேற்கொள்ளப்படும்  13வது திருத்த அமுலாக்க செயற்பாடுகளில் நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்து அரசாங்கத்திற்கு ஆதரவளிப்போம் என கௌரவ ஜனாதிபதியிடம் தெரிவித்தோம். இது நாங்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பது என்ற பொருள் அல்ல. எம்மால் விடுக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்ததுடன், எம்மை அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுமாறு அழைப்பு விடுத்திருந்தார். தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதை விட நடைபெறவுள்ள ஜெனிவாக் கூட்டமே அவருக்கு முக்கியமானது என்பதை நாங்கள் அவரது அழைப்பில் இருந்து அறிந்து கொண்டோம். இறுதியாக ஜனாதிபதிஎம்மிடம் கேட்டிருந்த முன்மொழிவு ஆவணத்தை கையளிப்பதாக உறுதியளித்து எம்மை அழைத்தற்கு நன்றி தெரிவித்து விட பெற்றோம்.- என்றுள்ளது. https://samugammedia.com/the-geneva-meeting-is-more-important-to-the-president-than-solving-the-problems-of-tamils-wigneswaran-pointed-out/#   டிஸ்கி தேர்தல் மூலம் தெரிவாகும் மாகாண அரசை ஒதுக்கி, மத்திய அரசின் நியமன ஆளுனர் தலைமையில் ஒரு கண்துடைப்பு அதிகார பகிர்வை சிவி யிடம் விற்க நரி முயன்றுள்ளது.   நரி பதில் எப்படி சொல்லும். பிறகு அடாத்தாக குடியேற்றம் செய்வது தடைப்படுமா இல்லையா?
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.