Jump to content

நிவேதாவின் சமையல்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்முறை. இறைச்சி சாப்பிடாதபடியால் கண்ணால் தான் பார்க்கலாம். இந்த ஆயுதம் ஒரு கராஜ் சேலில் என்னண்டே தெரியாமல் வேண்டி பிறகு பாவிக்காததால்  டொனேஷன் பொக்ஸில் கொண்டுபோய் போட்டுவிட்டேன். இப்பதான் அது என்னென்று தெரியுது. கூகிள் பண்ணிப்பார்த்தேன். Aluminum Meat tenderizer என்று போட்டிருக்கு . பலரும் சொன்னமாதிரி சிவப்பு இறைச்சி எமது உடம்புக்கு ஆகாது . அத்துடன் நான் முன்பு பதிவிட்டதன்படி கடல் உணவுதான் நல்லது. மிருக பாவமும் குறைய. மாடு எமது குடும்பம் மாதிரி. சாப்பிடுவதை நினைத்தே பார்க்கக்கூடாது என்பது எனது கருத்து. 

Link to comment
Share on other sites

  • Replies 753
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nilmini said:

நல்ல செய்முறை. இறைச்சி சாப்பிடாதபடியால் கண்ணால் தான் பார்க்கலாம். இந்த ஆயுதம் ஒரு கராஜ் சேலில் என்னண்டே தெரியாமல் வேண்டி பிறகு பாவிக்காததால்  டொனேஷன் பொக்ஸில் கொண்டுபோய் போட்டுவிட்டேன். இப்பதான் அது என்னென்று தெரியுது. கூகிள் பண்ணிப்பார்த்தேன். Aluminum Meat tenderizer என்று போட்டிருக்கு . பலரும் சொன்னமாதிரி சிவப்பு இறைச்சி எமது உடம்புக்கு ஆகாது . அத்துடன் நான் முன்பு பதிவிட்டதன்படி கடல் உணவுதான் நல்லது. மிருக பாவமும் குறைய. மாடு எமது குடும்பம் மாதிரி. சாப்பிடுவதை நினைத்தே பார்க்கக்கூடாது என்பது எனது கருத்து. 

மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள் கூட வீட்டில் சமைக்க மாட்டார்கள்.... வெளியில் சாப்பிட்டுக் கொள்வார்கள். பிள்ளைகள் விரும்பினால், மக்டொனால்ட்.... அதுவே ஜங் உணவு எண்டு அரசே சொல்லுது...

நான் ஆட்டிறைச்சி இரண்டு மாதத்துக்கு ஒரு முறைதான். கடலுணவுகளை விரும்புவேன்... மாட்டிறைச்சி விரும்புவதில்லை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, nilmini said:

அத்துடன் நான் முன்பு பதிவிட்டதன்படி கடல் உணவுதான் நல்லது. மிருக பாவமும் குறைய. மாடு எமது குடும்பம் மாதிரி. சாப்பிடுவதை நினைத்தே பார்க்கக்கூடாது என்பது எனது கருத்து. 

ஏற்கனவே கோவில் திரிகள் தீபற்றி எரிகின்றன.

நீங்க வேற மாடு தின்பது மனித பாவம் என்கிறீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

18 minutes ago, Nathamuni said:

மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள் கூட வீட்டில் சமைக்க மாட்டார்கள்.... வெளியில் சாப்பிட்டுக் கொள்வார்கள். பிள்ளைகள் விரும்பினால், மக்டொனால்ட்.... அதுவே ஜங் உணவு எண்டு அரசே சொல்லுது...

நான் ஆட்டிறைச்சி இரண்டு மாதத்துக்கு ஒரு முறைதான். கடலுணவுகளை விரும்புவேன்... மாட்டிறைச்சி விரும்புவதில்லை...

கேட்க மிகவும் சந்தோசமாக இருக்கிறது. இறைச்சியில் நிறைய விடயம் அநியாயத்துக்குரியது.அந்த மிருகங்களை வளர்க்கும் முறை கேவலம். அத்துடன் அதுகள் பயந்து, கவலைப்பட்டு, சித்திரவதைபட்டு  இறந்த சதையை சாப்பிடக்கூடாது என்றுதான் நான் சாப்பிடுவதில்லை. வீட்டில் இளைய மகன் மட்டும் தான்  கோழி, பன்றி சாப்பிடுவார். இந்த இறைச்சி மிருகங்கள் என்ன முறையில் எவ்வளவு சுதந்திரமாக வளர்க்கப்பட்டவை என்று அறிந்த இறைச்சியை தான் உண்ணும்படி சொல்லியிருக்கிறோம். அத்துடன் இறைச்சியை மிகவும் குறைத்து நிறைய மரக்கறிகளுடன் சேர்த்து சாப்பிடுவார். நாம் ஆறறிவு படைத்த மனிதர்கள். இந்த வாயில்லா ஜீவனுக்களுக்கு கொஞ்சமாவது நியாயமாக நடக்க வேண்டும் என்பது எனது கருத்து. Slaughter house இல் வேலை பார்ப்பவர்கள்  எல்லோருமே மரக்கறிக்காரர் என்று எத்தனை பேருக்கு தெரியுமோ தெரியவில்லை. ஒருமுறை போய் பார்த்தால் சாகும் மட்டும் இறைச்சி சாப்பிட  முடியாது. நான் பார்க்கவில்லை. கேள்விப்பட்டுதான் விட்டனான். அத்துடன் எமது இருபக்க  குடும்பத்தினரும் அநேகமானவர்கள் மரக்கறி தான். எனவே பரம்பரை பழக்கமாகவும் இருக்கக்கூடும் 

11 minutes ago, ஈழப்பிரியன் said:

ஏற்கனவே கோவில் திரிகள் தீபற்றி எரிகின்றன.

நீங்க வேற மாடு தின்பது மனித பாவம் என்கிறீர்கள்?

என்ன பற்றி எரியுதோ, எனக்கு என்னமோ இந்த மிருகங்களின் சுதந்திரத்தில் ஆர்வம் அதிகம். இப்ப கடல் உணவே சாப்பிட பிடிக்கவில்லை.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nilmini said:

கேட்க மிகவும் சந்தோசமாக இருக்கிறது. இறைச்சியில் நிறைய விடயம் அநியாயத்துக்குரியது.அந்த மிருகங்களை வளர்க்கும் முறை கேவலம். அத்துடன் அதுகள் பயந்து, கவலைப்பட்டு, சித்திரவதைபட்டு  இறந்த சதையை சாப்பிடக்கூடாது என்றுதான் நான் சாப்பிடுவதில்லை. வீட்டில் இளைய மகன் மட்டும் தான்  கோழி, பன்றி சாப்பிடுவார். இந்த இறைச்சி மிருகங்கள் என்ன முறையில் எவ்வளவு சுதந்திரமாக வளர்க்கப்பட்டவை என்று அறிந்த இறைச்சியை தான் உண்ணும்படி சொல்லியிருக்கிறோம். அத்துடன் இறைச்சியை மிகவும் குறைத்து நிறைய மரக்கறிகளுடன் சேர்த்து சாப்பிடுவார். நாம் ஆறறிவு படைத்த மனிதர்கள். இந்த வாயில்லா ஜீவனுக்களுக்கு கொஞ்சமாவது நியாயமாக நடக்க வேண்டும் என்பது எனது கருத்து. Slaughter house இல் வேலை பார்ப்பவர்கள்  எல்லோருமே மரக்கறிக்காரர் என்று எத்தனை பேருக்கு தெரியுமோ தெரியவில்லை. ஒருமுறை போய் பார்த்தால் சாகும் மட்டும் இறைச்சி சாப்பிட  முடியாது. நான் பார்க்கவில்லை. கேள்விப்பட்டுதான் விட்டனான். அத்துடன் எமது இருபக்க  குடும்பத்தினரும் அநேகமானவர்கள் மரக்கறி தான். எனவே பரம்பரை பழக்கமாகவும் இருக்கக்கூடும் 

என்ன பற்றி எரியுதோ, எனக்கு என்னமோ இந்த மிருகங்களின் சுதந்திரத்தில் ஆர்வம் அதிகம். இப்ப கடல் உணவே சாப்பிட பிடிக்கவில்லை.  

மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள் கூட வீட்டில் சமைக்க மாட்டார்கள்.... வெளியில் சாப்பிட்டுக் கொள்வார்கள். பிள்ளைகள் விரும்பினால், மக்டொனால்ட்.... அதுவே ஜங் உணவு எண்டு அரசே சொல்லுது...

மக்டொனால்ட்ஸ்  என்று போய்   வெறும் சீஸ் போட்ட burger யே வாங்கிக்கொடுத்தோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் Firefox தான் பயன்படுத்துவது கூகிள் குரோமிலும் முயன்றேன். அதேபோல் தான் வருது. நன்றி அண்ணா.

யாழ் களம் Html tag-கை ஏற்க மறுக்கிறது..! 😮

இணைய பாதுகாப்பு சம்பந்தமாக அப்படி இருக்குமென எண்ணுகிறேன். மோகன் சாமிகள்தான் இதற்கு உதவ வேண்டும்.

Link to comment
Share on other sites

On 23/4/2020 at 22:17, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எனக்குப் பிடித்த பெயரும் சுமே தான்

Image may contain: food

எனக்கு இத்தனை தான்வருகிறது

திரையின் அளவுகளைப் பொறுத்து காண்பிக்கும் Editor வித்தியாசப்படும். 

5 hours ago, ராசவன்னியன் said:

யாழ் களம் Html tag-கை ஏற்க மறுக்கிறது..! 😮

இணைய பாதுகாப்பு சம்பந்தமாக அப்படி இருக்குமென எண்ணுகிறேன். மோகன் சாமிகள்தான் இதற்கு உதவ வேண்டும்.

ஆம் இணையப்பாதுகாப்பு காரணமாக அட்மின் தவிர வேறு யாரும் html இணைக்க முடியாது.

20 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் Firefox தான் பயன்படுத்துவது கூகிள் குரோமிலும் முயன்றேன். அதேபோல் தான் வருது. நன்றி அண்ணா.

இரண்டு உலாவியும்  பிரச்சனையில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நிழலி said:

என்ன மசாலாவுக்குள் போட்டு பிரட்டி எடுக்கின்றீர்கள்? மிளகாய்த் தூள் மட்டுமா அல்லது கரம் மசாலாவா?

உப்பும் மிளகாய்த் தூளும் மட்டும். நீங்கள் விரும்பினால் உங்கள் சுவைக்கு மசாலா போட்டு ஒன்றைச் செய்து ரயல் பார்க்கலாம்.

10 hours ago, Nathamuni said:

கரம் மசாலாவா? இது ஜேர்மன் உணவு என்கிறாவே....  KFC க்கு அமேரிக்க நாட்டு தூள் பாவிப்பது போல இது ஜேர்மன் நாட்டு தூள் ஆக இருக்கும் எண்டு நினைக்கிறேன்.

அக்கா....ஆயுதம் வேறு வாங்கி வைத்து அடிக்கிறீர்கள்... ஒரு எச்சரிக்கை செய்யாமல் போனால், நான் என்ன தம்பி, நீங்கள் என்ன அக்கா...

சிவப்பு இறைச்சி உண்ணும் போது....கொலஸ்டரோல் குறித்த கவனம் தேவை... வெள்ளைகள்  உடல்வாகு வேறு. நமது வேறு... மாரடைப்பு நம்மவர்களை அதிகமாக தாக்குவதன் காரணம்... அளவுக்கு அதிகமாக சிவப்பு இறைச்சி உண்பதுதான்... ஊரில், தீபாவளி போன்ற பண்டிகை காலங்களிலும், வருஷத்தில் ஓர் இருமுறைகள் மட்டுமே உண்டோம்....

இங்கு அப்படி இல்லை என்பதால்... கவனமாக இருப்போம்....🤔

இறைச்சி விட்டாச்சோ. நாங்களும் 36 ஆண்டுகளா இங்குதானே வாழ்கிறோம். அதென்ன வெள்ளைக்கு மட்டும் ??? 

10 hours ago, குமாரசாமி said:

விடுங்க....விடுங்க...
ஏதோ ஆசைக்கு ஜேர்மன் பெயரிலை செய்யிறா......ஏன் குழப்புவான் 😁

Schnitzel யேர்மன் காரரின் பிரபல்யமான உணவு. சோறு மட்டும் சாப்பிடுறவைக்கு தெரியாது . அவர்கள் உப்பும் மிளகு தூளும் தூவுவார்கள். நான் தூளும் உப்பும் தூவுவது. 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

பார்க்க நல்லாத் தான் இருக்கு.ஆனால் எண்ணெய் தான் தடையாக இருக்கு.பக்கத்தில உருளைக்கிழங்கு பொரியல் வேற.அது தின்ன தின்ன நல்லா இருக்கும்.கடைசியில் ஆளை முடித்துவிடும்.

அந்த இறைச்சிக்கு அடிக்கிற பொல்லை வெளியே போகும் போது கான்பாக்கில் போட்டுக் கொண்டு போங்கோ.முக்கியமா காரில் போகும் போது.

அதுசரி இந்தியாவில பாட்டுக்காரர் போட்ட மாதிரி எல்லா விரலிலும் மோதிரமா கிடக்கு.
எனக்கு இறைச்சியை பாக்கிறதா?மோதிரத்தை எண்ணுறதா என்று ஒரே அந்தரமா போச்சு.

உருளைக்கிழங்கு இல்லாமல் தனியாவும் உண்ணலாம் அண்ணா. எண்ணெயில் பொரித்தாலும் பெரிதாக எண்ணை  இழுக்காது.
ஆக நாலே நாலு மோதிரங்கள் தான். அதை கழட்டுறதே இல்லை.😃

8 hours ago, உடையார் said:

😁😃 - சமையலை மட்டும் பாருங்கள் ஈழப்பிரியன்

ஊரை விட்டு வெளிக்கிட்டபின் கோழி இறைச்சி மட்டும்தான், சிவப்பு இறைச்சி பிள்ளைகளும் சாப்படுவதில்லை

ஆட்டிறைச்சி மட்டும் மாதம் ஒருதடவை. பன்றி இறைச்சியில் கொழுப்பு அதிகம் இருந்தாலும் பெரிதாக உடலில் சேராது என்று கூறுவார்கள்.😀

8 hours ago, nilmini said:

நல்ல செய்முறை. இறைச்சி சாப்பிடாதபடியால் கண்ணால் தான் பார்க்கலாம். இந்த ஆயுதம் ஒரு கராஜ் சேலில் என்னண்டே தெரியாமல் வேண்டி பிறகு பாவிக்காததால்  டொனேஷன் பொக்ஸில் கொண்டுபோய் போட்டுவிட்டேன். இப்பதான் அது என்னென்று தெரியுது. கூகிள் பண்ணிப்பார்த்தேன். Aluminum Meat tenderizer என்று போட்டிருக்கு . பலரும் சொன்னமாதிரி சிவப்பு இறைச்சி எமது உடம்புக்கு ஆகாது . அத்துடன் நான் முன்பு பதிவிட்டதன்படி கடல் உணவுதான் நல்லது. மிருக பாவமும் குறைய. மாடு எமது குடும்பம் மாதிரி. சாப்பிடுவதை நினைத்தே பார்க்கக்கூடாது என்பது எனது கருத்து. 

நாமும் மாடு உண்பதில்லை. ஆனால் ஆடு என்றால் எனக்குப் பயித்தியம். யேர்மன் மக்கள் அதிகம் மாடும் பன்றியும் தான் உண்பது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ராசவன்னியன் said:

யாழ் களம் Html tag-கை ஏற்க மறுக்கிறது..! 😮

இணைய பாதுகாப்பு சம்பந்தமாக அப்படி இருக்குமென எண்ணுகிறேன். மோகன் சாமிகள்தான் இதற்கு உதவ வேண்டும்.

உங்களை சிரமப்படுத்தியதற்கு மன்னியுங்கள் அண்ணா. இப்ப போடும்போது எல்லாவற்றையும் சரிபார்த்துத்தான் போடுகிறேன். அதனால் ஓகே.

4 hours ago, மோகன் said:

திரையின் அளவுகளைப் பொறுத்து காண்பிக்கும் Editor வித்தியாசப்படும். 

ஆம் இணையப்பாதுகாப்பு காரணமாக அட்மின் தவிர வேறு யாரும் html இணைக்க முடியாது.

இரண்டு உலாவியும்  பிரச்சனையில்லை.

நன்றி மோகன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உப்பும் மிளகாய்த் தூளும் மட்டும். நீங்கள் விரும்பினால் உங்கள் சுவைக்கு மசாலா போட்டு ஒன்றைச் செய்து ரயல் பார்க்கலாம்.

இறைச்சி விட்டாச்சோ. நாங்களும் 36 ஆண்டுகளா இங்குதானே வாழ்கிறோம். அதென்ன வெள்ளைக்கு மட்டும் ??? 

Schnitzel யேர்மன் காரரின் பிரபல்யமான உணவு. சோறு மட்டும் சாப்பிடுறவைக்கு தெரியாது . அவர்கள் உப்பும் மிளகு தூளும் தூவுவார்கள். நான் தூளும் உப்பும் தூவுவது. 😃

வாரத்திற்கு 80 கிலோ சினிற்சல் இறைச்சி வெட்டி தட்டி,15லீட்டர் சிங்கோனார் சோஸ் காய்ச்சிற என்னை சோத்துப்பண்டாரம் எண்டு சொல்லாமல் சொல்லுறியள்......!அய்யே...அய்யே :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

வாரத்திற்கு 80 கிலோ சினிற்சல் இறைச்சி வெட்டி தட்டி,15லீட்டர் சிங்கோனார் சோஸ் காய்ச்சிற என்னை சோத்துப்பண்டாரம் எண்டு சொல்லாமல் சொல்லுறியள்......!அய்யே...அய்யே :cool:

அப்ப நீங்களும் உங்கள் செய்முறையைப் போடலாமே குமாரசாமி. 20 ஆண்டுகளுக்கு முன்னர்வரை எமது பாக்ரியில் கன்டீனில் சினிற்சல் ஓடர் செய்து உண்பது. அது ஒரு கனாக் காலம்.

4 minutes ago, குமாரசாமி said:

வாரத்திற்கு 80 கிலோ சினிற்சல் இறைச்சி வெட்டி தட்டி,15லீட்டர் சிங்கோனார் சோஸ் காய்ச்சிற என்னை சோத்துப்பண்டாரம் எண்டு சொல்லாமல் சொல்லுறியள்......!அய்யே...அய்யே :cool:

காய்ச்சினால் என்ன செய்தால் என்ன உண்ணவும் தெரிய எல்லா வேணும் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்ற வருடம் எனது நண்பரின் பிறந்தநாள் விழா ஒன்று.....எனது மனைவி அவர்களுக்காக 200 க்கு மேல் வடைகள் செய்து தந்தா....நான் அவற்றை கொண்டுபோய் அவர்களிடம் குடுத்து விட்டு வந்துவிட்டேன். பின் நாங்கள் அங்கு செல்ல கிளம்பும்போது பார்த்தால் மனிசியின் விரலில் இருந்த இரண்டு மோதிரங்கள் காணவில்லை.உடனே அவர்களுக்கு போனில் விடயத்தை சொல்லி வடை கொடுப்பதை நிறுத்துங்கள். யாராவது குழந்தைகள் விழுங்கி விடுவினம் கவனம் என்று சொல்ல, அங்கு வடை பரிமாறப் பட்டுக் கொண்டிருக்கு.நாங்களும் வந்து சேர்ந்த விட்டோம்.....!

                       பின் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களிடம் வடைக்குள் ஒரு சாமான் உள்ளது கொண்டுவந்து தருபவர்களுக்கு ஒரு பரிசு உள்ளது என்று சொல்ல எல்லோரும் மிக கவனமாக சாப்பிடுகின்றனர்.....(எனக்கு என்ர கவலை, அட எழுதியவள் பக்கத்தில இருக்க எழுத்து மோதிரம் துலைஞ்சு போட்டுது என்று).பின்பு அந்த மோதிரங்கள் இரண்டும் அந்த வீட்டினரிடமே வடை சாப்பிடும்போது கிடைத்தது. இப்பவெல்லாம் பிட்டுக்கு மா குழைக்கிறதெண்டாலும் மோதிரங்களை கழட்டி விட்டுத்தான் குழைக்கிறாள்.....!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டுப்பெண்களின் உடலும், விரல்களும் மெலிவதென்றால் கணவர் சரியாக, சந்தோசமாக மனைவியை கவனித்துக் கொள்ளவில்லை என்று அர்த்தம், சுவி ஐயா..! 😮🤩

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ராசவன்னியன் said:

வீட்டுப்பெண்களின் உடலும், விரல்களும் மெலிவதென்றால் கணவர் சரியாக, சந்தோசமாக மனைவியை கவனித்துக் கொள்ளவில்லை என்று அர்த்தம், சுவி ஐயா..! 😮🤩

காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதும் பொய், கண்ணால் காண்பதுவே மெய்....சில விடயங்களில்....!

நான் என்னவோ தனுஷ் மாதிரி......! 

சுய பாதுகாப்பை கருத்துவதாலும், இன்றைய கால கட்டத்தில் வீட்டிற்கு வெளியே வாசம் செய்ய முடியாததாலும் சில கேள்விகள் தவிர்க்கப் படுகிறது.....!  😪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, suvy said:

சென்ற வருடம் எனது நண்பரின் பிறந்தநாள் விழா ஒன்று.....எனது மனைவி அவர்களுக்காக 200 க்கு மேல் வடைகள் செய்து தந்தா....நான் அவற்றை கொண்டுபோய் அவர்களிடம் குடுத்து விட்டு வந்துவிட்டேன். பின் நாங்கள் அங்கு செல்ல கிளம்பும்போது பார்த்தால் மனிசியின் விரலில் இருந்த இரண்டு மோதிரங்கள் காணவில்லை.உடனே அவர்களுக்கு போனில் விடயத்தை சொல்லி வடை கொடுப்பதை நிறுத்துங்கள். யாராவது குழந்தைகள் விழுங்கி விடுவினம் கவனம் என்று சொல்ல, அங்கு வடை பரிமாறப் பட்டுக் கொண்டிருக்கு.நாங்களும் வந்து சேர்ந்த விட்டோம்.....!

                       பின் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களிடம் வடைக்குள் ஒரு சாமான் உள்ளது கொண்டுவந்து தருபவர்களுக்கு ஒரு பரிசு உள்ளது என்று சொல்ல எல்லோரும் மிக கவனமாக சாப்பிடுகின்றனர்.....(எனக்கு என்ர கவலை, அட எழுதியவள் பக்கத்தில இருக்க எழுத்து மோதிரம் துலைஞ்சு போட்டுது என்று).பின்பு அந்த மோதிரங்கள் இரண்டும் அந்த வீட்டினரிடமே வடை சாப்பிடும்போது கிடைத்தது. இப்பவெல்லாம் பிட்டுக்கு மா குழைக்கிறதெண்டாலும் மோதிரங்களை கழட்டி விட்டுத்தான் குழைக்கிறாள்.....!  😁

உங்கள் மனைவிக்கு நீங்கள் சமையலில் உதவுவது இல்லை என்பதைத்தான் இது காட்டுது அண்ணா 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Chicken Fried Rice 1

Image may contain: food

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோதிரங்கள் போட்டு இருந்தால் எப்படித் தான் கையை கழுவினாலும் கிருமிகள் போகாது...கொரோனா பரவுகின்ற காலத்தில் இப்படியான  நகைகளை போட்டு கொண்டு பொது இடங்களுக்கு போக வேண்டாம் என்று சொல்லினம் 

ஆனாலும் சுமோவுக்கு தைரியம் அதிகம் ...சனங்கள் எல்லாரும் வேற வருத்தம் வந்து ஆஸ்பத்திரிக்கு போகக் கூடாது என்று சாப்பாட்டில் கவனமாய் இருக்கிறார்கள் ...இவை  பன்டியை  பொறித்து சாப்பிடினம் 
 
Link to comment
Share on other sites

31 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

Chicken Fried Rice 1

Image may contain: food

பொதுவாக சமையல் குறிப்புகள், அது பற்றிய வீடியோக்கள் என்றால் சமையலுக்கு தேவையான பொருட்களில் இருந்து அதில் கலக்கப்படும் மசாலா தூள் செய்வது வரைக்கும் விளக்கமாக செய்முறைக் குறிப்புகள் இருக்கும். சமையலே தெரியாத ஒருவருக்கு கூட அதை பின்பற்றி ஓரளவுக்கு சுவையாக செய்யக் கூடியதாக அமைந்தால் தான் அது பலருக்கும் உதவியாக இருக்கும்.

உங்கள் சமையல் குறிப்புகளில் அப்படி எதுவும் இல்லையே ஏன்?

இதில் கூட தேவையான உணவுப் பொருட்களில் இருந்து கோழி பொரிப்பதற்கான குறிப்புகள் வரை எந்த குறிப்பும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அக்கோய்....

youtube சானல் ஆரம்பித்து செய்கிறீர்கள்.

அதனை ஒரு முறையாக செய்தால், வருமானமும் வருமே. (2000 subscribers வந்தபிறகு... இப்பவே 3). பார்க்க கூடிய ஆர்வமும் வரக்கூடியவாறு செய்யுங்கள்.

முக்கியமாக, வீடியோ பிடிக்கும் போது வாய்ஸ் பத்தி கவலைப்படாதீர்கள். வீடியோ குறித்து மட்டுமே கவனமெடுங்கள்.

பின்னர் உங்கள் போனில் வீடியோக்கு அமைய வாய்ஸ் பதிவு பண்ணி, எடிட்டிங் செய்து பிறகு youtube ல் ஏத்தி விடுங்கள். இலவச எடிட்டிங் சாப்ட்வேர் இணையத்தில் கிடைக்கிறது.

யாரு கேமரா பிடிக்கிறது? அத்தாரே? லைட்டிங் காணாது என்று சொல்லிவிடுங்கோ....

மினக்கெட்டு செய்யுறதை... புரொபெஷனல் ஆக செய்யுங்கள்.

நிழலி சொல்வதை கவனித்து, முதலில் என்ன செய்யப்போகிறோம்... தேவையான பொருட்கள், நிறை, எண்ணிக்கை, பாவிக்கும் எண்ணெய் என்று சொல்லி, எவ்வளவு நேரம் ஒவொரு ஐட்டமும் சமைக்கப்படவேண்டும் என்று விபரம் சொல்லி, திட்டமிட்டே செய்யுங்கள். 

இப்ப விளங்குது.... அந்த ஆயுதம் எல்லாம் வாங்கி... செய்து காட்டியது வீடியோவுக்காக தான் என்று...

தேவையான ஆலோசனைகளுக்கு நம்ம புரட்சியாரிடம் கேளுங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உங்கள் மனைவிக்கு நீங்கள் சமையலில் உதவுவது இல்லை என்பதைத்தான் இது காட்டுது அண்ணா 😁

ஒரு உறையில் இரண்டு கத்தி எப்படி இருக்கக் கூடாதோ அப்படியே ஒரு குசினிக்குள் இரண்டு செஃவ் வும் ஆகாது சகோதரி.....!  🔪

ஆனாலும் தேங்காய் திருவுதல் , இடியப்பம் பிழிதல் சமயங்களில் மீன் இறைச்சி வெட்டி வைத்தல் எழுதப்படாத விதி எனக்கு.....!   😪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமயல் சாதம் எல்லாமே ரெம்பப் பிரமாதம்.வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

On 23/4/2020 at 08:47, ராசவன்னியன் said:

ஏம்மா, இப்படி அச்சு முறுக்கை செய்து தொட்டியில் உரமா போட்டுவிட்டீர்கள்..? வீட்டில் யாரும் சாப்பிடவில்லையா..? 😋

இது உரக் கொக்கீஸ் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Nathamuni said:

அக்கோய்....

youtube சானல் ஆரம்பித்து செய்கிறீர்கள்.

அதனை ஒரு முறையாக செய்தால், வருமானமும் வருமே. (2000 subscribers வந்தபிறகு... இப்பவே 3). பார்க்க கூடிய ஆர்வமும் வரக்கூடியவாறு செய்யுங்கள்.

முக்கியமாக, வீடியோ பிடிக்கும் போது வாய்ஸ் பத்தி கவலைப்படாதீர்கள். வீடியோ குறித்து மட்டுமே கவனமெடுங்கள்.

பின்னர் உங்கள் போனில் வீடியோக்கு அமைய வாய்ஸ் பதிவு பண்ணி, எடிட்டிங் செய்து பிறகு youtube ல் ஏத்தி விடுங்கள். இலவச எடிட்டிங் சாப்ட்வேர் இணையத்தில் கிடைக்கிறது.

யாரு கேமரா பிடிக்கிறது? அத்தாரே? லைட்டிங் காணாது என்று சொல்லிவிடுங்கோ....

மினக்கெட்டு செய்யுறதை... புரொபெஷனல் ஆக செய்யுங்கள்.

நிழலி சொல்வதை கவனித்து, முதலில் என்ன செய்யப்போகிறோம்... தேவையான பொருட்கள், நிறை, எண்ணிக்கை, பாவிக்கும் எண்ணெய் என்று சொல்லி, எவ்வளவு நேரம் ஒவொரு ஐட்டமும் சமைக்கப்படவேண்டும் என்று விபரம் சொல்லி, திட்டமிட்டே செய்யுங்கள். 

இப்ப விளங்குது.... அந்த ஆயுதம் எல்லாம் வாங்கி... செய்து காட்டியது வீடியோவுக்காக தான் என்று...

தேவையான ஆலோசனைகளுக்கு நம்ம புரட்சியாரிடம் கேளுங்கள். 

சன் டீவில ஒரு சிங்கம் சமைக்கிறது பார்த்தியளோ செம சமையல் ஐயாட சமையல போடும்போதெல்லாம் பார்த்து ரசிப்பேன் 

இன்னும் பல சமையல் கறி, சோறுகளை பார்ப்போம் நிவேதா அக்காவின் கைவண்ணத்தில்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ரதி said:

மோதிரங்கள் போட்டு இருந்தால் எப்படித் தான் கையை கழுவினாலும் கிருமிகள் போகாது...கொரோனா பரவுகின்ற காலத்தில் இப்படியான  நகைகளை போட்டு கொண்டு பொது இடங்களுக்கு போக வேண்டாம் என்று சொல்லினம் 

ஆனாலும் சுமோவுக்கு தைரியம் அதிகம் ...சனங்கள் எல்லாரும் வேற வருத்தம் வந்து ஆஸ்பத்திரிக்கு போகக் கூடாது என்று சாப்பாட்டில் கவனமாய் இருக்கிறார்கள் ...இவை  பன்டியை  பொறித்து சாப்பிடினம் 
 
வெள்ளைக்காரர் மரக்கறியோ சாப்பிடீனம்.  விதிப்படி எதுவும் நடக்கும் என நம்புறது என் வழக்கம். 😀

22 hours ago, நிழலி said:

பொதுவாக சமையல் குறிப்புகள், அது பற்றிய வீடியோக்கள் என்றால் சமையலுக்கு தேவையான பொருட்களில் இருந்து அதில் கலக்கப்படும் மசாலா தூள் செய்வது வரைக்கும் விளக்கமாக செய்முறைக் குறிப்புகள் இருக்கும். சமையலே தெரியாத ஒருவருக்கு கூட அதை பின்பற்றி ஓரளவுக்கு சுவையாக செய்யக் கூடியதாக அமைந்தால் தான் அது பலருக்கும் உதவியாக இருக்கும்.

உங்கள் சமையல் குறிப்புகளில் அப்படி எதுவும் இல்லையே ஏன்?

இதில் கூட தேவையான உணவுப் பொருட்களில் இருந்து கோழி பொரிப்பதற்கான குறிப்புகள் வரை எந்த குறிப்பும் இல்லை.

நான் நினைத்தேன் எல்லாருக்கும் சமையல் தெரியும் தானே என்று. சில உணவுகள் எமது அனுபவத்தின்மூலம் பொருட்களைக் கூட்டியும் குறைத்தும் போடுவது. இனிமேல்  குறிப்புகளையும் போடுறன்.

ஒரு நாள் திறந்து விட்டீர்கள் என்றால் முன்னர் போட்டவைக்குப் போடலாம். 😃

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.