Jump to content

நிவேதாவின் சமையல்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On ‎07‎-‎07‎-‎2020 at 22:20, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இது விபி & சன்ஸ்சில் விக்கிது ரதி. வறுக்கத் தேவை இல்லை. அப்படியே போட்டு வைக்கலாம். பெரிய விலை யும் இல்லை. எம்மவர் கடைகளில் இதை மாவாக  நான் காணவில்லை. நான் மாறி வரகு என்று கூறிவிட்டேன். வரகு என்பது குரக்கன். இது கம்பு மா. பார்க்க ஒரு சாம்பலும் பழுப்பும் கலந்ததுபோல் இருக்கும்.

No photo description available.

வீடியோவை வடிவாக கேட்கவேணும். முட்டைபோட்ட வெந்தையக் குழம்பு என்று சொல்லியிருக்கிறன்.  😃

நன்றி அண்ணா

நான் இந்த மா பாவிக்கிறானான் ...ஆனால் ஒரு நாளும் புட்டு அவித்ததில்லை ...வறுக்காமல் அவிக்கலாம் என்று சொல்கிறீர்கள் ...இனி மேல் புட்டு அவித்து பார்க்க வேண்டும் ...நன்றி  

17 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மரவள்ளிக்கிழங்கு வடை - Cassava Vadai

Image may contain: food

மரவள்ளிக்கிழங்கு வடை கேள்விப்பட்டு இருக்கிறேன் ...ஒரு நாளும் சாப்பிட்டதில்லை ...ம.கிழங்கை துருவிப் பூட்டு செய்யேலாதோ ?

Link to comment
Share on other sites

  • Replies 753
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரதி said:

நான் இந்த மா பாவிக்கிறானான் ...ஆனால் ஒரு நாளும் புட்டு அவித்ததில்லை ...வறுக்காமல் அவிக்கலாம் என்று சொல்கிறீர்கள் ...இனி மேல் புட்டு அவித்து பார்க்க வேண்டும் ...நன்றி  

மரவள்ளிக்கிழங்கு வடை கேள்விப்பட்டு இருக்கிறேன் ...ஒரு நாளும் சாப்பிட்டதில்லை ...ம.கிழங்கை துருவிப் பூட்டு செய்யேலாதோ ?

அட உங்களை காணவில்லையென காணவில்லை திரியில் தேடினேன், கண்டதில் மிக்க மகிழ்ச்சி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ரதி said:

ம.கிழங்கை துருவிப் பூட்டு செய்யேலாதோ ?

செய்யலாமே ...

...செய்து பாருங்கோ... நல்லா வந்தால்... எங்களுக்கும் சொல்லுங்கோ.... நல்லா வரவில்லை எண்டால்... இரண்டு திட்டு திட்டி போட்டு, பின்னுக்குள்ள போட்டுட்டு, மூச்சுக்  காட்டாமல், பேசாமல் இருங்கோ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

நான் இந்த மா பாவிக்கிறானான் ...ஆனால் ஒரு நாளும் புட்டு அவித்ததில்லை ...வறுக்காமல் அவிக்கலாம் என்று சொல்கிறீர்கள் ...இனி மேல் புட்டு அவித்து பார்க்க வேண்டும் ...நன்றி  

மரவள்ளிக்கிழங்கு வடை கேள்விப்பட்டு இருக்கிறேன் ...ஒரு நாளும் சாப்பிட்டதில்லை ...ம.கிழங்கை துருவிப் பூட்டு செய்யேலாதோ ?

தங்கச்சி!  சிறிமா காலத்திலை மரவள்ளிக்கிழங்கு மாவிலை புட்டு அவிச்சனாங்கள்.....☺️
ஆபிரிக்காவிலை கூடுதலாய் மரவள்ளிக்கிழங்கு மாவிலைதானே மெயின் சாப்பாடு.....எங்களுக்கு அரிசி மாதிரி 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

தங்கச்சி!  சிறிமா காலத்திலை மரவள்ளிக்கிழங்கு மாவிலை புட்டு அவிச்சனாங்கள்.....☺️
ஆபிரிக்காவிலை கூடுதலாய் மரவள்ளிக்கிழங்கு மாவிலைதானே மெயின் சாப்பாடு.....எங்களுக்கு அரிசி மாதிரி 😎

கேக்கிறன் என்டு கோவிக்க குடாது.அந்த சிறிமா எப்படி இருக்கும்.😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

செய்யலாமே ...

...செய்து பாருங்கோ... நல்லா வந்தால்... எங்களுக்கும் சொல்லுங்கோ.... நல்லா வரவில்லை எண்டால்... இரண்டு திட்டு திட்டி போட்டு, பின்னுக்குள்ள போட்டுட்டு, மூச்சுக்  காட்டாமல், பேசாமல் இருங்கோ...

செய்து பார்க்க தான் இருக்கு ...நல்ல  வருகுதோ /இல்லையோ வந்து சொல்லுவன் 

2 hours ago, குமாரசாமி said:

தங்கச்சி!  சிறிமா காலத்திலை மரவள்ளிக்கிழங்கு மாவிலை புட்டு அவிச்சனாங்கள்.....☺️
ஆபிரிக்காவிலை கூடுதலாய் மரவள்ளிக்கிழங்கு மாவிலைதானே மெயின் சாப்பாடு.....எங்களுக்கு அரிசி மாதிரி 😎

அந்த புட்டு செய்முறையை இணைக்கலாமே?...கேரளாவிலும் முக்கிய சாப்பாடு மரவள்ளி தான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/7/2020 at 21:29, நியாயத்தை கதைப்போம் said:

மரவள்ளி கிழங்கு வடை பற்றி முன்பு அறியவில்லை. வீடியோ செய்முறை நல்ல முயற்சி. பாராட்டுக்கள். இன்னும் கொஞ்சம் Healthy ஆன வகையில் இதை செய்யலாமா? கோதுமை மாவுக்கு மாற்றீடாக வேறு எந்த மாவை பாவிக்கலாம்? பொரிப்பதற்கு பதிலாய் வெதுப்பி எடுக்கலாமே. 

அரிசி மா போட்டு வேறு விதமாக முயன்று பார்க்கலாம் என்று தான் நானும் எண்ணினேன். பார்ப்போம்.

11 hours ago, உடையார் said:

நன்றி சுமே பகிர்வுக்கு. இப்பவும் நாவுறுது, தெல்லிப்பழை பெரியம்மா வீட்டைபோன இதுதான் சுட்டு தருவா. அவ செத்தல் மிளாகாய்தான் போடுகின்றவா. அவ சுட்டு தந்த மாதிரி நான் செய்து கூட சுவே வரவில்லை, 

அநேகமானோர் உண்டிருக்க மாட்டார்கள் என்று நினைத்தேன். அன்று இருந்த சுவை இப்ப இருக்காது எமக்கு உடையார்.

8 hours ago, ரதி said:

நான் இந்த மா பாவிக்கிறானான் ...ஆனால் ஒரு நாளும் புட்டு அவித்ததில்லை ...வறுக்காமல் அவிக்கலாம் என்று சொல்கிறீர்கள் ...இனி மேல் புட்டு அவித்து பார்க்க வேண்டும் ...நன்றி  

மரவள்ளிக்கிழங்கு வடை கேள்விப்பட்டு இருக்கிறேன் ...ஒரு நாளும் சாப்பிட்டதில்லை ...ம.கிழங்கை துருவிப் பூட்டு செய்யேலாதோ ?

நான் பச்சையாக செய்து பார்த்ததில்லை. என் கணவரும் நேற்றுச் சொன்னார் தன தாய் பஹ்கிச்சையாக அரைத்துச் செய்வதாக. அதையும் ஒருக்கா செய்து பார்த்துச் சொல்லுறன் ரதி.

இந்த மாவில் நீங்கள் என்ன ரதி செய்கிறீர்கள் ??? எங்களுக்கும் கூறலாமே ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒடியல் மா பிட்டு - Odiyal Piddu

Image may contain: food

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஒடியல் மா பிட்டு - Odiyal Piddu

Image may contain: food

மேடம்! நீங்கள் செய்தது புளுக்கொடியல் மா புட்டு.ஒடியல் மா வேறை. புளுக்கொடியல் மா வேறை.ஆரை பேப்பட்டம் கட்ட பாக்கிறியள்?😁 
எண்டாலும் மா 50/50 கலவை நல்ல விசயம். வீட்டிலை நானும் செய்து பாக்கத்தான் இருக்கு😎 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, சுவைப்பிரியன் said:

கேக்கிறன் என்டு கோவிக்க குடாது.அந்த சிறிமா எப்படி இருக்கும்.😆

டேய் தம்பி உந்த கடியனை ஒருக்கால் அவிட்டு விடடா.....செக்கன்ட் ஷோ முடிஞ்சு பொடியள் வாற சத்தம் கேக்குது....😎😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

மேடம்! நீங்கள் செய்தது புளுக்கொடியல் மா புட்டு.ஒடியல் மா வேறை. புளுக்கொடியல் மா வேறை.ஆரை பேப்பட்டம் கட்ட பாக்கிறியள்?😁 
எண்டாலும் மா 50/50 கலவை நல்ல விசயம். வீட்டிலை நானும் செய்து பாக்கத்தான் இருக்கு😎 

நான் சொல்ல வந்த தை சொல்லவிட்டீர்கள், இனி வேலையில்லை, நடையை கட்டுவம். 🚶‍♂️

புழுக்கொடியல் மாவிற்கு தேங்காய் பூ சீனி போட்டு குழைத்து விடிய ஒரு உருட்டை சாப்பிட்டு பாருங்கள் பிளேன்ரியுடன், அந்த மாதிரி இருக்கும் சுவை

8 hours ago, சுவைப்பிரியன் said:

கேக்கிறன் என்டு கோவிக்க குடாது.அந்த சிறிமா எப்படி இருக்கும்.😆

நல்ல கேள்வி😂, வாய்விட்டு சிரித்துவிட்டேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

டேய் தம்பி உந்த கடியனை ஒருக்கால் அவிட்டு விடடா.....செக்கன்ட் ஷோ முடிஞ்சு பொடியள் வாற சத்தம் கேக்குது....😎😁

ம்ம் ஒரு நாளைக்கு வடிவேலர்,ஒரு நாளைக்கு பப்பி வேற தாத்தா.‌...😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

மேடம்! நீங்கள் செய்தது புளுக்கொடியல் மா புட்டு.ஒடியல் மா வேறை. புளுக்கொடியல் மா வேறை.ஆரை பேப்பட்டம் கட்ட பாக்கிறியள்?😁 
எண்டாலும் மா 50/50 கலவை நல்ல விசயம். வீட்டிலை நானும் செய்து பாக்கத்தான் இருக்கு😎 

ஒண்டையாவது நல்ல விஷயம் எண்டு ஒத்துக்கொண்டீர்களே 😃

5 hours ago, உடையார் said:

புழுக்கொடியல் மாவிற்கு தேங்காய் பூ சீனி போட்டு குழைத்து விடிய ஒரு உருட்டை சாப்பிட்டு பாருங்கள் பிளேன்ரியுடன், அந்த மாதிரி இருக்கும் சுவை

மனிசன் அடிக்கடி கேட்பார். வீட்டில் மற்றவர்களுக்குப் பிடிக்காததால் எப்பவாவது செய்து குடுப்பன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆடிக்கூழ் - Quick and Easy Adik kool

Image may contain: food

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வந்திட்டம் ஏதாவது சொல்ல வேண்டுமே.ஆ வந்திட்டுது.என்ன என்டால் சுமே அந்தக் கரன்டிகள் மற்றப்பக்கம் வைத்திருக்கலாம்.😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஆடிக்கூழ் - Quick and Easy Adik kool

Image may contain: food

லைக் போட்டாச்சு..கொமன்ஸ் இப்போ வருகிறது..அந்த கரண்டிக்குள்ள என்ன இருக்கிறது.. ஏதாவது டெக்கரேசனா..??😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அரிசி மா போட்டு வேறு விதமாக முயன்று பார்க்கலாம் என்று தான் நானும் எண்ணினேன். பார்ப்போம்.

அநேகமானோர் உண்டிருக்க மாட்டார்கள் என்று நினைத்தேன். அன்று இருந்த சுவை இப்ப இருக்காது எமக்கு உடையார்.

நான் பச்சையாக செய்து பார்த்ததில்லை. என் கணவரும் நேற்றுச் சொன்னார் தன தாய் பஹ்கிச்சையாக அரைத்துச் செய்வதாக. அதையும் ஒருக்கா செய்து பார்த்துச் சொல்லுறன் ரதி.

இந்த மாவில் நீங்கள் என்ன ரதி செய்கிறீர்கள் ??? எங்களுக்கும் கூறலாமே ??

ரொட்டி ,சப்பாத்தி  செய்வது ...தோசைக்கும் ,இட்லிக்கும் போடுவேன் ...ராகி மாவில் கேப்பங்களி செய்து பார்த்தேன் கொஞ்சம் சாப்பிட கடினமாய் இருந்தது ...திரும்பவும் செய்து பார்க்கோணும்  தவிர வறுத்த கொள்ளை அரைத்து போட்டு அரிசி மாவோடு சேர்த்து புட்டு அவித்து இருக்கிறேன்..ரொட்டி...போன்றவற்றிக்கும் போட்டு இருக்கிறேன் ....ஆணால் உடம்பு மட்டும் குறையவில்லை😢 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஆடிக்கூழ் - Quick and Easy Adik kool

Image may contain: food

எங்கையக்கா... அந்த மா உருண்டைகள்...

ம்.ம்ம்ம் ... பிழைதான்... :grin: 
 
இருந்தாலும் அந்த மாதிரி இருக்குது. இன்று 2 பனங்கட்டி குட்டான் £3 வாங்கிக் கொண்டு வந்தனான். ஒரு பயறு பாக்கெட்டும், தேங்காயும்.

உங்கட ரெசிபில செய்து பார்க்க தான் இருக்கு.

11 minutes ago, ரதி said:

ரொட்டி ,சப்பாத்தி  செய்வது ...தோசைக்கும் ,இட்லிக்கும் போடுவேன் ...ராகி மாவில் கேப்பங்களி செய்து பார்த்தேன் கொஞ்சம் சாப்பிட கடினமாய் இருந்தது ...திரும்பவும் செய்து பார்க்கோணும்  தவிர வறுத்த கொள்ளை அரைத்து போட்டு அரிசி மாவோடு சேர்த்து புட்டு அவித்து இருக்கிறேன்..ரொட்டி...போன்றவற்றிக்கும் போட்டு இருக்கிறேன் ....ஆணால் உடம்பு மட்டும் குறையவில்லை😢 

ஆ... எப்படி குறையும்?

இவ்வளவையும் செய்து தனியா இருந்து முழுசிக் கொண்டு அடைந்தால், எப்படி குறையும் எண்டு கேக்கிறேன்? 😜

சாப்பாடினை இரண்டு கிழமைக்கு நிறுத்துங்கோ... குறையும்... 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/7/2020 at 15:37, குமாரசாமி said:

தங்கச்சி!  சிறிமா காலத்திலை மரவள்ளிக்கிழங்கு மாவிலை புட்டு அவிச்சனாங்கள்.....☺️
ஆபிரிக்காவிலை கூடுதலாய் மரவள்ளிக்கிழங்கு மாவிலைதானே மெயின் சாப்பாடு.....எங்களுக்கு அரிசி மாதிரி 😎

கண பேருக்கு விளங்கிறதில்லை....

உந்த மரவள்ளி, தக்காளி, உருளைக்கிழங்கு, பீன்ஸ், லீக்ஸ், கோதுமை, மிளகாய், பீட்ரூட் போன்ற 130 வகை தாவரங்களையும் கொண்டு வந்து சேர்த்தது போர்த்துக்கேயர் எண்டு.

வெள்ளைக்காரனிடம் வாழைப்பழம் எங்க இருந்து வருகுது எண்டால் கரிபியன் எண்டுவார்கள்.... அட கோதாரி விழுவானே, கரிபியன் இப்ப கொழும்பசுக்கு பின்னம் தானே வந்தது.

தமிழனின் வாழைப்பழத்தினையும், மாம்பழத்தினையும் பிரேசிலுக்கும் பின்னர் கரிபியன் பகுதிக்கும் கொண்டு போய் சேர்த்தவன் போர்த்துகேயன் எண்டால்... முழுசுவான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பகிரவுக்கு, சென்னமாதிரி செய்துவீட்டீர்கள்,  ஆடிக்கூழ் என்றால் கலர் அப்படிதான் இருக்கனும் - அதுதான் சுமே👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, சுவைப்பிரியன் said:

வந்திட்டம் ஏதாவது சொல்ல வேண்டுமே.ஆ வந்திட்டுது.என்ன என்டால் சுமே அந்தக் கரன்டிகள் மற்றப்பக்கம் வைத்திருக்கலாம்.😆

வச்சுப் பார்த்தன் இதுதான் வடிவாக இருந்தது. அதுதான்......😃

11 hours ago, யாயினி said:

ம் .... சும்மா அழகுக்குத்தான்.😃 எனக்கு இந்தக் கரண்டி சரிவராது. பிள்ளைகள்தான் விரும்பிப் பயன்படுத்துவது. 

10 hours ago, Nathamuni said:

எங்கையக்கா... அந்த மா உருண்டைகள்...

ம்.ம்ம்ம் ... பிழைதான்... :grin: 
 
இருந்தாலும் அந்த மாதிரி இருக்குது. இன்று 2 பனங்கட்டி குட்டான் £3 வாங்கிக் கொண்டு வந்தனான். ஒரு பயறு பாக்கெட்டும், தேங்காயும்.

உங்கட ரெசிபில செய்து பார்க்க தான் இருக்கு.

ஆடிக் கூழுக்கு உருண்டை செய்வது இல்லை. ஆனால் பிற்காலத்தில் உளுத்தங்கஞ்சிக்குப் போடும் உருண்டையை இதற்கும் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ரதி said:

ரொட்டி ,சப்பாத்தி  செய்வது ...தோசைக்கும் ,இட்லிக்கும் போடுவேன் ...ராகி மாவில் கேப்பங்களி செய்து பார்த்தேன் கொஞ்சம் சாப்பிட கடினமாய் இருந்தது ...திரும்பவும் செய்து பார்க்கோணும்  தவிர வறுத்த கொள்ளை அரைத்து போட்டு அரிசி மாவோடு சேர்த்து புட்டு அவித்து இருக்கிறேன்..ரொட்டி...போன்றவற்றிக்கும் போட்டு இருக்கிறேன் ....ஆணால் உடம்பு மட்டும் குறையவில்லை😢 
 
நான் முழுக் கம்பு அரிசியை வேறு சிறு தானியங்களுடன் சேர்த்து கஞ்சிபோல் காய்ச்சிக் குடிப்பேன். இந்திய முறையில் ராகிக் கூழ் காய்ச்சினால் குடிக்க முடியாது. நான் ஒரு செய்முறை போடுறன் பாத்துச் செய்து பாருங்கோ. குடிக்க நல்லா இருக்கும்.

ஒவ்வொரு நாளும் ஒரு மணிநேரம் வேகமாக நடந்தால் கட்டாயம் மெலியலாம்.

5 hours ago, உடையார் said:

நன்றி பகிரவுக்கு, சென்னமாதிரி செய்துவீட்டீர்கள்,  ஆடிக்கூழ் என்றால் கலர் அப்படிதான் இருக்கனும் - அதுதான் சுமே👍

நன்றி நன்றி சான்றிதழ் தந்தத்துக்கு 😎

10 hours ago, Nathamuni said:

கண பேருக்கு விளங்கிறதில்லை....

உந்த மரவள்ளி, தக்காளி, உருளைக்கிழங்கு, பீன்ஸ், லீக்ஸ், கோதுமை, மிளகாய், பீட்ரூட் போன்ற 130 வகை தாவரங்களையும் கொண்டு வந்து சேர்த்தது போர்த்துக்கேயர் எண்டு.

வெள்ளைக்காரனிடம் வாழைப்பழம் எங்க இருந்து வருகுது எண்டால் கரிபியன் எண்டுவார்கள்.... அட கோதாரி விழுவானே, கரிபியன் இப்ப கொழும்பசுக்கு பின்னம் தானே வந்தது.

தமிழனின் வாழைப்பழத்தினையும், மாம்பழத்தினையும் பிரேசிலுக்கும் பின்னர் கரிபியன் பகுதிக்கும் கொண்டு போய் சேர்த்தவன் போர்த்துகேயன் எண்டால்... முழுசுவான். 

அந்தப் பகுதியும் வளமான பகுதிதான். ஏன் அங்கும் எம் நாட்டுப் பயிர்கள் போன்றவை இருந்திருக்கலாம் தானே ?????? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அந்தப் பகுதியும் வளமான பகுதிதான். ஏன் அங்கும் எம் நாட்டுப் பயிர்கள் போன்றவை இருந்திருக்கலாம் தானே ?????? 

ஆளே இல்லாத ஒரு பிரதேசத்தினை கண்டு பிடித்து , பிரேசில் எண்டு பெயரை வைத்து, காட்டை வெட்டி வளமான மண் ஆக்கினது போர்த்துக்கேயர். அந்த மண்ணில் எதைப் போட்டால் வளரும் என்ற புரிதல் வர, உலகம் முமுவதும் சுத்தி வந்ததால் வந்த அறிவு.

நம்மூரில் தென்அமேரிக்க புகையிலை வரும் என்று கணித்தது போலவே, நமது வாழை, மா அங்கே வளரும் என கணித்தார்கள்.

பலாப்பழம் போகவில்லை, ஆனாலும் தாய்லாந்து போனது, நமது சொதியுடன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ரதி said:

ரொட்டி ,சப்பாத்தி  செய்வது ...தோசைக்கும் ,இட்லிக்கும் போடுவேன் ...ராகி மாவில் கேப்பங்களி செய்து பார்த்தேன் கொஞ்சம் சாப்பிட கடினமாய் இருந்தது ...திரும்பவும் செய்து பார்க்கோணும்  தவிர வறுத்த கொள்ளை அரைத்து போட்டு அரிசி மாவோடு சேர்த்து புட்டு அவித்து இருக்கிறேன்..ரொட்டி...போன்றவற்றிக்கும் போட்டு இருக்கிறேன் ....ஆணால் உடம்பு மட்டும் குறையவில்லை😢 

இந்த வீடியோக்களை நேரம் இருக்கும்போது பாருங்கள் ரதி. குடல் ஆரோக்கியத்தை கூட்டினால்தான் தேவையான நல்ல ஊட்டச்சத்துக்கள் உடலினால் உறிஞ்சப்படும். குடல் ஈரல் என்பவை நன்றாக இயங்க Detoxifying  முறைகளை கையாளவும். உங்கள் தைரொய்ட் அளவை பரிசோதித்து பாருங்கள் 

https://www.youtube.com/watch?v=nVC3pc84lrM

https://www.youtube.com/watch?v=adC-hk4K0d4 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/7/2020 at 15:42, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அரிசி மா போட்டு வேறு விதமாக முயன்று பார்க்கலாம் என்று தான் நானும் எண்ணினேன். பார்ப்போம்.

அநேகமானோர் உண்டிருக்க மாட்டார்கள் என்று நினைத்தேன். அன்று இருந்த சுவை இப்ப இருக்காது எமக்கு உடையார்.

நான் பச்சையாக செய்து பார்த்ததில்லை. என் கணவரும் நேற்றுச் சொன்னார் தன தாய் பஹ்கிச்சையாக அரைத்துச் செய்வதாக. அதையும் ஒருக்கா செய்து பார்த்துச் சொல்லுறன் ரதி.

இந்த மாவில் நீங்கள் என்ன ரதி செய்கிறீர்கள் ??? எங்களுக்கும் கூறலாமே ??

Oats மாவில் (steel cut) நல்ல புட்டு வைக்கலாம் சுமேரியர். வறுத்த கோதுமை மாவில் அவித்த புட்டு மாதிரி வரும். கலோரிகளும் எவ்வளோவோ குறைவு 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.