Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Recommended Posts

 • Replies 198
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

யூ மீன் ஓமணக்குட்டி? 🤪

பையா தமிழ்பொக்கிசம் காணொளிகளை இங்கு இணைக்க முதலே பலரும் ஆதரவு தந்தனர்.இவர் இந்தியாவை புகழும் போது அரச ஊதுகுழலாகவே தெரியும்.                   ஆனாலும் பல்வேறு நாட்டு நடப்புகள் இணைய சங்கதிகள் உலகில் எ

 • கருத்துக்கள உறவுகள்

இப்ப கொஞ்ச நாளாக இவரது தமிழ் பொக்கிசம் நிகழ்ச்சியைப் பார்க்கிறேன்.ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் தலையை சுற்றும் விதமான நிகழ்வுகளை ஆதாரத்தோடு போட்டுடைக்கிறார்.
        இங்கே வேறு யாராவது இந்த நிகழ்ச்சியை பார்க்கிறீர்களா?
உண்மை பொய் நன்மை தீமை பற்றி யாருக்கேனும் ஏதாவது பட்டால் எழுதுங்கள்.

     இல்லை இல்லை உண்மையைத் தான் சொல்கிறார்.இது நம்பகமான காணொளி தான் என்றால் தொடர்ந்தும் இணைக்கலாம்.

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

நான் தொடர்ந்து பார்த்துவருகின்றேன்.  தரவுகளை அடிப்படையாக வைத்துதானே சொல்கின்றார். இதில் பொய்யுரைக்கவேண்டிய அவசியம் எதுவும் இல்லை . வலிந்த பண உதவிகளும் நன்கொடைகளும் பன்நாட்டு கார்பரேட்  நிறுவனங்களிடம் இருந்து  ஏழை நாடுகளுக்கோ இல்லை கல்விநிறுவனங்கள்  ஊடகங்களுக்கு கொடுக்கப்படுகின்றது என்றால் அதன் பின்னணியில் சூழ்சிகள் வஞ்சகங்கள் இருப்பது வழமையானது. 

Quote

Coronavirus: Africa will not be testing ground for vaccine, says WHO

The head of the World Health Organization (WHO) has condemned as "racist" the comments by two French doctors who suggested a vaccine for the coronavirus could be tested in Africa.

https://www.bbc.com/news/world-africa-52192184

ஏழை நாடுகளில் மருந்துகளை பரிசோதிக்கும் போக்கு எப்போதும் மேற்குநாடுகளிடம் இருந்தே வருகின்றது.  இந்தியா ஆபிரிக்கா இப்போது எதிர்வினையாற்ற  முற்படுகின்றார்கள். பன்னாட்டு மருந்துக் கம்பனிகள் மொன்சான்ரோ போன்ற நிறுவனங்கள் பில்கேட்ஸ் போன்றவர்களின் மறுபக்கங்களை பற்றி தமிழர்கள் சிந்திப்பதற்கு இவ்வாறான காணெளிகள் தொடக்கமாக இருக்கும்.  அதனால் தொடரந்து இணையுங்கள். 

 • Like 1
 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

உலகின் முன்னணி பத்திரிகைகள், டிவி செய்திகளை இணையத்தில் படித்து அப்படியே தமிழில் தருவதால், செய்திகளில் தவறு இருக்க வாய்பில்லை.

ஆனாலும், சங்கிகளுக்கு ஆதரவாக, வாழைப்பழத்தில் ஊசி அடிப்பது போல, தமிழ்தேசியத்தினை, ஆதரிப்பது போல, மறைமுக தாக்குதல் நடாத்தப்போய்.... சீமான் தம்பிகளிடம் வாங்கிக் கட்டி... 

இவரது பூர்வீகம் கிளறப்பட, இவர் பூர்வீகம் திருவனந்தபுரம்...மொழி மலையாளம். தமிழ் இவரது இரண்டாவது மொழி என்று தெரிய வந்ததும், சமாதானமாகி... நாம உண்டு, நம்ம சானல் உண்டு என்று அடங்கி விட்டார்....

பெரும் தொகை subscribers கொண்ட சானல்களை சங்கிகளும், திமுகவும் காசு கொடுத்து மடக்கி, தம் அரசியல் எதிரிகளை மட்டம் தட்ட பயன் படுத்தும் முனைவில் சிக்கி, முதலுக்கே மோசம் என்ற நிலையில் சுதாகரித்துக் கொண்டார்.

Edited by Nathamuni
 • Thanks 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பில் கேட்சின் உண்மை முகம்

பில் கேட்சின் தனி ஒருவன்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சண்டமாருதன் said:

நான் தொடர்ந்து பார்த்துவருகின்றேன்.  தரவுகளை அடிப்படையாக வைத்துதானே சொல்கின்றார். இதில் பொய்யுரைக்கவேண்டிய அவசியம் எதுவும் இல்லை . வலிந்த பண உதவிகளும் நன்கொடைகளும் பன்நாட்டு கார்பரேட்  நிறுவனங்களிடம் இருந்து  ஏழை நாடுகளுக்கோ இல்லை கல்விநிறுவனங்கள்  ஊடகங்களுக்கு கொடுக்கப்படுகின்றது என்றால் அதன் பின்னணியில் சூழ்சிகள் வஞ்சகங்கள் இருப்பது வழமையானது. 

1 hour ago, Nathamuni said:

உலகின் முன்னணி பத்திரிகைகள், டிவி செய்திகளை இணையத்தில் படித்து அப்படியே தமிழில் தருவதால், செய்திகளில் தவறு இருக்க வாய்பில்லை.

ஆனாலும், சங்கிகளுக்கு ஆதரவாக, வாழைப்பழத்தில் ஊசி அடிப்பது போல, தமிழ்தேசியத்தினை, ஆதரிப்பது போல, மறைமுக தாக்குதல் நடாத்தப்போய்.... சீமான் தம்பிகளிடம் வாங்கிக் கட்டி... 

இவரது பூர்வீகம் கிளறப்பட, இவர் பூர்வீகம் திருவனந்தபுரம்...மொழி மலையாளம். தமிழ் இவரது இரண்டாவது மொழி என்று தெரிய வந்ததும், சமாதானமாகி... நாம உண்டு, நம்ம சானல் உண்டு என்று அடங்கி விட்டார்....

பெரும் தொகை subscribers கொண்ட சானல்களை சங்கிகளும், திமுகவும் காசு கொடுத்து மடக்கி, தம் அரசியல் எதிரிகளை மட்டம் தட்ட பயன் படுத்தும் முனைவில் சிக்கி, முதலுக்கே மோசம் என்ற நிலையில் சுதாகரித்துக் கொண்டார்.

உங்கள் கருத்துக்களுக்கு மிகவும் நன்றி சண்டமாருதன்,நாதமுனி.
இவரின் ஏமாற்று முழுவதும் ஆபிரிக்காவும் ஆசியாவும் போலவே இருக்கிறது.
பில் கேட் மேல் மிகவும் மரியாதை வைத்திருந்தேன்.

Link to post
Share on other sites

அமெரிக்காவில் கோட்டல் ஒன்றில் இருந்து பலரை சுட்டதை ஒருவர் தான் சுட்டது என நானும் நம்பினேன்.பின்னர் சில ஊடகங்கள் தமது சந்தேகத்தை வெளியிட்டன. அதனை இவர் ஆதரங்களை திரட்டி  இன்னும் சிலரும் உடந்தையாக இருந்திருக்கிறார்கள் என்பதை வெளியிட்ட காணொளி பிரமிக்க  வைத்தது.

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

             கொரோனா எனும் வெய்யிலில் குளிர் காயபோகும் இந்தியா

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

                                கிம் இரு(ற)ந்தால் யாருக்கு லாபம்.

கொரிய எல்லை காப்பதற்காக 5 பில்லியன் டெலர் கேட்டு தென்கொரியாவை மிரட்டும் அமெரிக்கா.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

                                     சோழனை சோதிக்கும் ரஞ்சித்.

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

                                            சீனாவின் 6 வருட ரகசியம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

                              வுஹான் சோதனை எலி பாகிஸ்தான்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நானும் இவ‌ரின் காணொளிக‌ள் பார்த்து இருக்கிறேன் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா / இவ‌ர் சொல்லுவ‌து எல்லாம் ந‌டைமுறைக்கு வ‌ரும் என்று ந‌ம்ப‌ வேண்டாம் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா 😉

On 23/4/2020 at 04:22, Nathamuni said:

உலகின் முன்னணி பத்திரிகைகள், டிவி செய்திகளை இணையத்தில் படித்து அப்படியே தமிழில் தருவதால், செய்திகளில் தவறு இருக்க வாய்பில்லை.

ஆனாலும், சங்கிகளுக்கு ஆதரவாக, வாழைப்பழத்தில் ஊசி அடிப்பது போல, தமிழ்தேசியத்தினை, ஆதரிப்பது போல, மறைமுக தாக்குதல் நடாத்தப்போய்.... சீமான் தம்பிகளிடம் வாங்கிக் கட்டி... 

இவரது பூர்வீகம் கிளறப்பட, இவர் பூர்வீகம் திருவனந்தபுரம்...மொழி மலையாளம். தமிழ் இவரது இரண்டாவது மொழி என்று தெரிய வந்ததும், சமாதானமாகி... நாம உண்டு, நம்ம சானல் உண்டு என்று அடங்கி விட்டார்....

பெரும் தொகை subscribers கொண்ட சானல்களை சங்கிகளும், திமுகவும் காசு கொடுத்து மடக்கி, தம் அரசியல் எதிரிகளை மட்டம் தட்ட பயன் படுத்தும் முனைவில் சிக்கி, முதலுக்கே மோசம் என்ற நிலையில் சுதாகரித்துக் கொண்டார்.

ச‌ரியான‌ ப‌திவு நாதாமுனி ஜ‌யா /

நாத முனி யாழ்பாண தமிழர்களின் பூர்வீகம் மலபார் அதாவது மலையாள பூர்வீகம் என்று எமக்கு புவியியல் கற்பித்த ஆசிரியர் க. குணராசா( செங்கை ஆழியான்)  கற்பித்த ஞாபகம்.அதற்கான பல ஆதாரங்களை அவர் கற்பித்திருந்தார்.   யாழ்ப்பாண பேச்சு நடை தமிழ் நாட்டை ஒத்திருக்காது மலையாளத்தை ஒத்திருப்பதைக் காணலாம்.  அதில் எவ்வளவு உண்மை உள்ளது எனக்கு தெரியாது. பரீட்சை முடிய வழமை போல் எல்லாம் மறந்து போச்சு. யாரேனும் வரலாற்று பதிவுகளுடன் தர முடியுமா? முக்கியமாக கிருபன் இந்த விடயங்களை அறிந்திருப்பார் என்று நினைக்கிறேன். 

Edited by tulpen
 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

இது உண்மை பல வருடம் மலையாளிளுடன் பழகிய அனுபவத்தில் கண்டது

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, tulpen said:

என்னய்யா புதுக் கதையாக இருக்கு.
மலையாளம் பிறந்தே இன்னும் 500 வருடம் முடியலை என்கிறார்கள்?
உங்கள் கதையைப் பார்த்தால் தமிழ் மலையாளத்தில் இருந்து பிறந்தது போலல்லவா இருக்கிறது.

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, colomban said:

இது உண்மை பல வருடம் மலையாளிளுடன் பழகிய அனுபவத்தில் கண்டது

யூ மீன் ஓமணக்குட்டி? 🤪

 • Haha 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, tulpen said:

நாத முனி யாழ்பாண தமிழர்களின் பூர்வீகம் மலபார் அதாவது மலையாள பூர்வீகம் என்று எமக்கு புவியியல் கற்பித்த ஆசிரியர் க. குணராசா( செங்கை ஆழியான்)  கற்பித்த ஞாபகம்.அதற்கான பல ஆதாரங்களை அவர் கற்பித்திருந்தார்.   யாழ்ப்பாண பேச்சு நடை தமிழ் நாட்டை ஒத்திருக்காது மலையாளத்தை ஒத்திருப்பதைக் காணலாம்.  அதில் எவ்வளவு உண்மை உள்ளது எனக்கு தெரியாது. பரீட்சை முடிய வழமை போல் எல்லாம் மறந்து போச்சு. யாரேனும் வரலாற்று பதிவுகளுடன் தர முடியுமா? முக்கியமாக கிருபன் இந்த விடயங்களை அறிந்திருப்பார் என்று நினைக்கிறேன். 

37 minutes ago, ஈழப்பிரியன் said:

என்னய்யா புதுக் கதையாக இருக்கு.
மலையாளம் பிறந்தே இன்னும் 500 வருடம் முடியலை என்கிறார்கள்?
உங்கள் கதையைப் பார்த்தால் தமிழ் மலையாளத்தில் இருந்து பிறந்தது போலல்லவா இருக்கிறது.

சில விடயங்களில் நாம் ஆழ்ந்த அக்கறை கொள்வதில்லை.... அதனாலேயே இந்த புரிதல் குழப்பம்...

தமிழகத்தின் தென்பகுதி கன்னியாகுமரி பகுதிக்கும் யாழ்பாணத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு.

சங்கிலி மன்னனின் பூர்வீகத் தொடர்புகள் கன்னியாகுமரி பகுதியில் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

கன்னியாகுமரி, கேரளத்தின் எல்லை. பல மலையாள கிராமங்களும் (தமிழ்நாட்டினுள்) உள்ளன.

தமிழகத்தில் சென்னைப் பகுதியில் உள்ள ஈழ தமிழர்கள், உச்சரிப்பு குறித்த கேள்வி எழும் சில வேளைகளில் கன்னியாகுமரி பக்கம், தென்காசிகாரர்கள் என்று சொல்வார்கள்.

பாரிஸ் நகரில் வாழும் சிவா சின்னப்பொடி என்பார், ஈழவர் எனும் ஒரு இனக்குழு கேரளாவில் உள்ளது. அவரகளது உணவு வழக்கம் யாழில் உள்ளது போன்றே, என்று தான் நேரில் பார்த்ததை எழுதினார்.

ஆயினும் மலபார் (மலை எனும் தமிழ் சொல்லும், பார் எனும் அரபிச் சொல்லும் இணைந்தது; மலைப்பாங்கான பகுதியில் பரந்து வாழ்ந்த பரவர்கள்) என்னும் சொல், யாழ்பாணத்துடன் சேர்ந்தது போர்த்துக்கேயர் காலத்தில் தொடங்கி, ஒல்லாந்தர் காலத்தில் வியாபித்து, பிரிட்டிஸ் காலத்தில் குறைந்தது.

தொடரும்...

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்.
இது "இங்கிருந்தே வந்தான்" அறிமுகம்.

யாழ்ப்பாணத்தில், மலையாளத்திலிருந்து குடியேறியவர்களும் இருக்கிறார்கள். ஆனால், யாழ்ப்பாணத் திலுள்ள எல்லாத் தமிழரும் மலையாளிகளல்ல. ஆதித் தமிழர்களே பெரும் பான்மை.

மலையாளம் என்பது ஒரு இடப்பெயரே தவிர, இனப் பெயர் அல்ல. சேர, சோழ, பாண்டியரில், சேரர்களே மலையாளிகள். வன்னியர், கொங்கு நாட்டார், குடகு நாட்டார் என்பது போல.

கவனிக்க: தமிழ் நாட்டை இரண்டாகப் பிரித்தால் ஒரு பகுதி வேற்று இனமாக மாறும் அபாயம் உண்டு.

இலங்கையில், யாழ்ப்பாணத்தார், மட்டக்களப்பார் என்பது தனியினமா? ஒரு காலத்தில், அப்படி எண்ணியவர்களுமுண்டு. சிலாபம், நீர்கொழும்புத் தமிழர்கள் சிங்களவர்களாக மாற்றப்பட்டது போல்தான் இதுவும்.

சேரர்களை "மலையாளிகளாக" மாற்றியது, பிரித்தாளும் சூழ்ச்சியைக்கையாளும் வந்தேறிகளே.

சேரன் செங்குட்டுவன் இருந்து சிலப்பதிகாரம் படைத்த இடம் எப்படி தமிழில்லாமல் போகும். வந்தேறிகளே மலையாளம் தனிமொழி என்பதில் தீவிரமாயிருப்பவர்கள். 

மலையாளிகளில் இரு வகையுண்டு: ஒன்று பூர்வீகத் தமிழர், மற்றது வந்தேறிகள். இலங்கைச் சிங்களவர்களும் இவ்வாறே. கன்னட, ஆந்திரர்களும் இவ்வாறே. 

இலங்கை முஸ்லிம்களும் இவ்வாறே. தாங்கள் எல்லோரும் ஒரு இனம் என்று மதத்தை வைத்து பிரிப்பார்கள். எல்லாம் ஆழும் சூழ்ச்சியே.

உதாரணத் துக்கு: ஜேசுதாஸ் பூர்வீகத் தமிழர், மற்ற நடிகர் கூட்டம் வந்தேறிகள். எப்படிக் கண்டுபிடிப்பது என்று உங்களுக்குப் புரியும்.

சேரநாடு என்பது மலைச்”சாரல்” நாடகும். “சார” நாடு என்பதே “சேர” நாடாக மருவியது.

சாரல் என்பதே சேரல் என்றாகிய வினைச்சொல், இடப்பெயராக சேரலம், சேரலர் என்றாகிப் பின் திரிப்பவர்களால் திரிபடைந்து கேரளாவாகியது.  பின்னர், கேரளத்திலிருக்கும் காய் “கேரா”வாகியது.

மாறாக, “கேரா”விலிருந்து கேரளாவாகவில்லை, அப்படியானால் “கேரா” என்றால் என்ன?

சரி விடயத்துக்கு வருவோம்.

மலபார் என்பதன் பொருள்:

உழுவார் : உழவர் என்பது உழுபவர்கள்.

சுடுபவர்கள் : சுடுவார் பொடி நீறும் நல்ல துண்டப் பிறை…. - தேவாரம்

எழுவார் - எழுவான்கரையிலிருப்பவர்கள், படுவார் – படுவான்கரையிலிருப்பவர்கள்

எழுவார் – எழுச்சியுடையவர்கள்.

படுவார் – xyz எனப்படுவார் -  xyz எனப்படுபவர்கள்.

இன்னும் ஒரு தொகை உதாரணங்கள் சொல்லலாம், சரி விடயத்துக்கு வருவோம்.

உழு என்னும் வினைச்சொல் “வார்” என்னும் விகுதி சேர்த்து “உழுவார்” என்னும் பெயர்ச் சொல்லாகிறது.

வினைச்சொல்லிலிருந்தே பெயர்ச்சொல் உருவாகிறது.

உண்மையில்: உழு + ஆர் = "உழுவார்" ஆகியது, இங்கு "ஆர்" என்பதே விகுதி.

ஆர் என்பது “அ”ப்படியான அவ”ர்”கள்.

மலைச் சாரலில் வாழ்ந்தவர்கள் மலைவார் => மலவார்

“வார்” என்பது வேற்று மொழியாளர்களால் “பார்” ஆக மாறி “மலபார்” ஆனது.

வேற்று மொழியாளர்களால் யாழ்ப்பாணம் Jaffna ஆகவும், மட்டக்களப்பு Batticaloa ஆகவும் மாறியது போல.

 • Like 1
 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

என்னய்யா புதுக் கதையாக இருக்கு.
மலையாளம் பிறந்தே இன்னும் 500 வருடம் முடியலை என்கிறார்கள்?
உங்கள் கதையைப் பார்த்தால் தமிழ் மலையாளத்தில் இருந்து பிறந்தது போலல்லவா இருக்கிறது.

பல மல்லுகளுடன் ஞான் பறைஞ்சதில், எல்லா மல்லுகளும் ஒருமிச்சி சொல்லும்  திருவாசகம்,

"மலையாளத்திலிருந்து பிறந்ததுதான் தமிழ்.." 🤣

பட்சே ஞான் கண்டிட்டில்லா..! 😎

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ராசவன்னியன் said:

பல மல்லுகளுடன் ஞான் பறைஞ்சதில், எல்லா மல்லுகளும் ஒருமிச்சி சொல்லும்  திருவாசகம்,

"மலையாளத்திலிருந்து பிறந்ததுதான் தமிழ்.." 🤣

பட்சே ஞான் கண்டிட்டில்லா..! 😎

வந்தேறிகளே மலையாளம் தனிமொழி என்பதில் தீவிரமாயிருப்பவர்கள். இவர்களே தமிழர்களுக்கெதிராயிருப்பவர்கள். Wikipedia வில் எழுதுபவர்களும் இவர்களே. வந்தேறிகள்தான் உயர் பதவியிலிருப்பார்கள்,  வந்தேறிகள் தங்களது இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள பூர்வீகத் தாருக்கு இனத்துவேச மூளைச்சலவை செய்வார்கள்.

மலையாளம் என்றால் என் ன என்று கேளுங்கள் ஐயா.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இதில் முக்கியமானவர்கள் நம்பூதிரிகள்..

வடக்கிலிருந்து சமஸ்கிருதத்தை காவிவந்து சேர மன்னர்களிடம் நாங்கள் "இறை தூதர்கள், டெரெக்ட் ஏஜென்ட்கள்" என மயக்கி, பாமர மக்களை ஏமாற்றி அவர்கள் பேசிய பச்சைத் தமிழில், சமஸ்கிருதம் விசம் கலந்து "மல்லு" தேவபாசை(???)யை உருவாக்கியவர்கள். 🙄

இவர்களின் ஆக்கிரமிப்பால், நான் பள்ளியில் படித்த தமிழிலும் ஸ், ஷ், ஜ் எழுத்துக்கள் உண்டு. தமிழ்நாட்டு தமிழர்களின் தினசரி வழக்கிலும் இவ்வெழுத்துக்கள் ஊடுருவிவிட்டன.

இவ்விடயத்தில் ஈழத்தமிழை பார்த்து நான் பொறாமைபடுவதும் உண்டு. 😡

Edited by ராசவன்னியன்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

போர்த்துக்கேயர் கோழிக்கோடு வந்திறங்கியபோது அங்கே ஆண்டு கொண்டிருந்தவர்கள் சமூரியர்கள். இவர்கள் சேரமன்னன் வழிவந்த, இப்போது தம்மை நாயர்கள் என்று கூறிக்கொள்வோர். 

***

(தனியாக ஆய்வு செய்யப்பட வேண்டிய இந்த நாயர்கள் தான், தமிழகத்தினை ஆண்ட தெலுங்கு விஜயநகர நாயக்கர்கள் என்பதாகவும் ஒரு குழப்பம் உண்டு. இந்த நாயக்கர்கள் இலங்கையின் தென்னிலங்கை ராசதானிகள் (கோட்டை, சீதாவாக்கை, கண்டி ) உடனான அரச குடும்ப சம்பந்தங்கள் மூலம், இலங்கை தீவினுள் புகுந்து கொண்டனர். இன்றும் விக்கிரமநாயக்க, திசாநாயக்க, ஏக்கநாயக்க, பண்டாரநாயக்க, ராமநாயக்க என்று பலர் அரசியலில் உள்ளனர். 

மகிந்தா, மலே, பறங்கி இன கலப்பு கிறித்தவர்கள். ஜூலியஸ் ரிச்சர்ட் ஜெயவர்த்தனே, சாலமன் வில்சன் ரிச்சர்ட் டயஸ் பண்டாரநாயக்க போலவே அரசியலுக்காக பௌத்தராக மாறியவர்கள்.)

***

இவர்கள் மிளகு, ஏலக்காய் போன்ற வாசனை பொருட்கள் வியாபாரம் மூலம் பெரும் செல்வம் சேர்த்து வைத்து இருந்தார்கள். இவர்களது வியாபார முகவர்கள் ஆக மத்திய கிழக்கின் அரபிகள் இருந்தனர். போர்த்துக்கேயர் வந்தபோது துறைமுக சுங்க அதிகாரியாக இருந்தவர் ஒரு இஸ்லாமியர்.

அவர்கள் தமது வியாபாரத்தினை ஐரோப்பியர்களிடம் இழக்க தயாராக இருக்கவில்லை. உண்மையில் சிலுவை யுத்தத்தினால், துருக்கிய  ஒட்டோமான் பேரரசின் ஆதிக்கத்தினால், மத்திய தரை கடல் பகுதி இஸ்லாமியருக்கு மட்டுமே ஆனதாக இருந்தது. இதன் காரணமாக அரபிகள் மிளகு வர்த்தகத்தில் ஏக போக உரிமை கொண்டிருந்தனர். மிளகு வாங்க ஐரோப்பிய அரசர்கள், பணக்காரர்கள் தங்கத்தினை கொடுக்கும் அளவுக்கு மிளகின் விலை இருந்தது. மன்னர்கள் மிளகினை வரிக்கு பதிலாக வாங்கிக் கொண்டனர். இதனால் இது Pepper Tax என்று ஐரோப்பிய வரலாறில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

இந்த அறாவிலையே, இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் ஆகிய தங்கள் மீது சிலுவை யுத்தத்தினை நடத்தும் பொருளாதாரத்தினை கொடுப்பதாக உணர்ந்த பின்னரே, மத்திய தரைக்கடலின் மறு முனையில் இருந்த ஸ்பானியர்களையும், போர்த்துகேயர்களையும் இந்திய துணைக்கண்டத்துக்கான புதிய பாதையினை தேட வைத்தது.

ஆகவே போர்த்துக்கேயர் மூர்க்கமாக எதிர்க்கப்பட்டனர். 

திரும்பி சென்ற போர்த்துக்கேயர், பெரும் பலத்துடன் வந்து, கோழிக்கோட்டுக்கு கீழே கொச்சின் பகுதியினை பிடித்துக் கொண்டனர்.

அங்கே இருந்த மக்களை வைத்து தமது வியாபாரத்தினை பெருக்க முயன்றாலும், அவர்கள் சமூரியர்களால் தொடர்ந்து எதிர்க்கப்பட்டதாலும், இவர்களுடன் தொடர்பு கொண்டிருந்த மக்களை போர்த்துக்கேயர் ஆதிக்கத்துக்கு வெளியே இருந்த மக்கள் புறக்கணித்ததால், போர்த்துகேயர்களுக்கு வியாபாரம் விருத்தியாகவில்லை. அவர்கள்  பார்த்துக் கொண்டிருக்கவே, சீனர்கள் கப்பலில் வந்து, சமூரியர்கள் இடம் மிளகு வாங்கி சென்றனர்.

அரபிகள் தொடர்ந்து சமூரிகளுடன், கொச்சினுக்கு மேலே கோழிக்கோட்டில் வியாபார தொடர்பினை பேணினர்.

(இதனை தடுக்கவே 1510ல் கோவாவினை போர்த்துக்கேயர் பிடித்துக் கொண்டனர். நாளடைவில் இந்த அரபிகள் ஆதிக்கம் முறியடிக்கப்பட்டது வேறு கதை)

ஆகவே போர்த்துக்கேயர் வேறு இடம் பார்க்க தொடங்கினார்கள். 1505 அளவில் இலங்கை தீவு பக்கம் ஒதுங்கினர்.

அவர்கள் பிடித்த முதல் இடம் வடக்கே உள்ள மக்கள் வாழாத தீவுக்கூட்டம். முக்கியமாக நெடுந்தீவு.

இங்கிருந்தே அவர்கள் தமது வியாபாரத்தினை பெருக்கிக்கொண்டனர். தமிழகத்துக்கும், யாழ்ப்பாணத்துக்கும் இடையே, சீனாவின் கப்பல் பாதையினை மடக்கிக் கொண்டனர். 

சீனாவுக்கு தாமே பொருட்களை வழங்கும் நோக்கில், சீனாவுக்கு பக்கத்தில் மக்குவா என்ற இடத்தினை (லீசுக்கு எடுத்து, பின்னர்) பிடித்துக் கொண்டனர். ஜப்பான், மலாக்கா, தாய்லாந்து என கீழை தேயம் முழுக்க வியாபாரம் வளர்ந்தது.

பாக்கு நீரிணையில் முத்துக் குளிக்க, கப்பல் ஓட்டிகளாக, படை வீரர்களாக, தமது முன்னைய மலபார் தொடர்புகளை அழைத்து வந்து குடி அமர்த்தினர். ஆனாலும் அப்பகுதி வர்த்தக மொழியாக தமிழ் இருந்தபடியால், தமிழ் நிலைத்தது.

இவர்கள் மிளகாய் உட்பட பல வகையான பயிர் செய்கைகளை நடாத்தி ஏற்றுமதி செய்தனர். முக்கியமாக யாழ்ப்பாணத்தில் பூசணிக்காய், தமிழகத்தில் பறங்கியர்களான போர்த்துக்கேயர் கொண்டு வந்து வியாபாரம் செய்ததால் பரங்கிக்காய் என்று அழைக்கப்படுகின்றது. 

ஒல்லாந்தர் காலத்தில் அறிமுகமாகிய புகையிலை யாழ் குடாநாட்டின் பொருளாதார வளத்தின் முக்கிய இடம் பிடித்த ஒன்று. இந்தவருடம் முதல் சிங்கள அரசினால் இப்பயிர் தடை செய்யப்படுகின்றது. 

இந்த பயிர் செய்கையில், அனுபவமிக்க மலபார் கொண்டு வந்து இறக்கப்பட்டனர். அவர்களுக்கு காணிகள் வழக்கப்பட்டன. அவர்கள் தமிழ் பேசிய காரணத்தினால் நாளடைவில் தமிழர்கள் ஆகினர். தமிழ் மொழியின் கிளை மொழியே மலையாளம் ஆகியதால், அதுவும் அப்போது தான் தோன்றி பேச்சு வழக்கில் வந்த படியால், இந்த மலபார்களுக்கு தமிழ் மொழிக்கு திரும்புவது பெரிய பிரச்சனையாக இருந்திருக்க முடியாது.

தீவுப்பகுதியில் ஊர்காவத்துறை பகுதியில் பாலக்காடு என்ற சிறு கிராமம் உள்ளது. இதே பெயரில் கேரளத்தில் ஒரு பிரபல்யமான சிறு நகரம் உண்டு.

பிரிட்டிஷ் காலம் முடிந்த பின்னும் 1958 காலப்பகுதியில் கூட, யாழ்ப்பாண, மலையாள புகையிலை வியாபாரிகள் சங்கம் என்ற அமைப்பு இருந்து, சிங்கள அரசின் சில வேலைகளினால் செயலற்று போனது என வாசித்திருக்கிறேன்.

போர்த்துக்கேயர் காலத்தில் தென் இலங்கையிலும் கணிசமான மலபார் குடி அமர்ந்தார்கள். தம்மை நம்பி, தம்முடன் கொச்சினில் இருந்த மக்களை, இங்கே அழைத்து வந்து நல்ல முறையில் வைத்திருந்தார்கள்.

இறுதி யுத்த கால சிங்கள ராணுவ தளபதி சரத் பொன்சேகா, இந்த மலபார் வம்சாவளி என்பார்கள். 

*****

என்னை வருடும் ஒரே ஒரு விடயம், ஐரோப்பியர்களும், தமிழகத்தினை சேர்ந்த பலரும் சொல்லும் ஒரு விடயம். ஐரோப்பியர்கள் இந்தியா வந்தார்கள்.  (இதில் சீமான் தெளிவாக இருக்கின்றார்)

இந்திய துணைக்கண்டம் என்ற சொல்லை, இந்தியா என்று குறிக்கின்றனர்.

கொலம்பஸ் தான் சென்றடைந்தது இந்தியா என்று கருதி வைத்த பெயர் பின்னர் மேற்கு இந்தியா (வெஸ்ட் இண்டீஸ்) ஆகியது. அங்கே பார்த்த மக்களை செவ்விந்தியர்கள் என்றார்.

ஆனால் சேரர், சோழ, பாண்டியர்கள் ஆண்ட தென்னிந்திய முனை தவிர்ந்த இந்திய துணைக்கண்டம் ஒரு சேர ஆளப்பட்டது மௌரிய வம்ச (அசோக சக்கரவர்த்தியின்) கிமு 350 ஆண்டு காலப்பகுதி மட்டுமே.

ஆகவே மூவேந்தர் ஆண்ட தென் பகுதி ஒரு போதுமே இந்தியாவின் ஒரு பகுதியாக ஆளப்பட்டதில்லை.

மொத்த துணைக்கண்டத்தினையும்  இந்தியாவாக ஆண்டவர்கள் கிழக்கு இந்திய கம்பெனி தான்.

பிரிட்டிஷ் இந்தியா ஆகியது 1857ல்  சிப்பாய் கலகத்தினை தொடர்ந்து.

கிழக்கு இந்திய கம்பெனி தான் அடிப்படையில் ஒரு வியாபார நிறுவனம் என்பதனை மறந்து, பிரிட்டிஷ் பாராளுமன்றம் மற்றும் அரச குடும்பத்துக்கு இணையாக தாமும் ஒரு பெரும் சாம்ராஜ்யத்தினை நடத்துவதாக பீலா விடப்போக, தருணம் பார்த்துக் காத்திருந்த பிரிட்டிஷ் அரசு, சிப்பாய் கலகத்தினை பாவித்து, கிழக்கு இந்திய கம்பெனியை களைத்து, அதன் கீழிருந்த நாடுகள் அனைத்தையும் பிரிட்டிஷ் முடிக்குரிய காலனியாக அறிவித்ததனை தொடர்ந்தே பிரிட்டிஷ் இந்தியா பிறந்தது.

இந்தியா சட்ட ரீதியாக பிறந்தது 1947ல். 

ஆகவே போர்த்துக்கேயர் இந்தியா வரவில்லை. இந்திய துணைக்கண்டத்துக்கே வந்தார்கள்.

அண்மையில் இஸ்ரேல் போயிருந்த மோடி, 2000 ஆண்டுகளுக்கு முன்னர், யூதர்கள் மிளகு வாங்க இந்தியா வந்தார்கள் என்றார்.

இது குறித்து ஒரு மேடையில் பேசிய சீமான், ஐயா மோடி சொன்னது பாதி உண்மை, பாதி தவறு என்றார். அதாவது அவர்கள் வந்தது இந்தியாவுக்கு அல்ல, தமிழரிடம், சேரத்தமிழர்களிடம் என்றார்.

இந்த புரிதல் வேறு அரசியல் வாதிகளிடம் இல்லாமல் போனதன் காரணம் அவர்கள் தமிழர்கள் அல்ல அல்லது எடப்பாடி, பண்ணீர் போல அக்கறை இல்லாதவர்கள்.

Edited by Nathamuni
 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ராசவன்னியன் said:

பல மல்லுகளுடன் ஞான் பறைஞ்சதில், எல்லா மல்லுகளும் ஒருமிச்சி சொல்லும்  திருவாசகம்,

"மலையாளத்திலிருந்து பிறந்ததுதான் தமிழ்.." 🤣

பட்சே ஞான் கண்டிட்டில்லா..! 😎

10 minutes ago, Inkirunthae Vanthaan said:

வந்தேறிகளே மலையாளம் தனிமொழி என்பதில் தீவிரமாயிருப்பவர்கள். இவர்களே தமிழர்களுக்கெதிராயிருப்பவர்கள். Wikipedia வில் எழுதுபவர்களும் இவர்களே. வந்தேறிகள்தான் உயர் பதவியிலிருப்பார்கள்,  வந்தேறிகள் தங்களது இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள பூர்வீகத் தாருக்கு இனத்துவேச மூளைச்சலவை செய்வார்கள்.

மலையாளம் என்றால் என் ன என்று கேளுங்கள் ஐயா.

இலங்கைக்கும் மலையாளிகளுக்குமான தொடர்பு 
பாண்டிய சேர பல்லவர்களால் வந்தது  அது பல ஆயிரம் ஆண்டு முந்தியது 
மலையாளம் தெலுங்கு கன்னடத்துக்கு முந்தைய கால பகுதியில் 
கிட்டதட்ட ஒரே கால பகுதியில் ஆந்திராவின் மேற்பகுதியில் சம்ஸ்கிருதமும் 
நடு+ கீழ் பகுதியில் கிரந்தமும் தமிழை உள்வாங்கியே உருவானது இரண்டு மொழிகளினதும் 
எழுத்துக்களை உற்றுப்பார்த்தால் தமிழ்வடிவமும் உச்சரிப்பும் இருக்கும் 
பின்னாளில் கிரந்தம் பல்லவர்களின் வீழிச்சியால் கொஞ்சம் கொஞ்சமாக அழிய தொடங்கியது 
அதுபோல சம்ஸ்கிருதமும் விஜய பேரரசுக்கும்  மொகலாய + மராட்டிய  படையெடுப்புகளுக்கும் இடையில் மாட்டி அழிந்துபோனது. விஜயநகர பேர் அரசின் காலத்தில்தான் கிரந்தம் சமஸ்கிருதம் கலந்து தெலுங்கு மொழியும் தமிழ் கிரந்தம் கலந்து கன்னடம் எஞ்சிய பல்லவ சிற்றரரசுகளின் மக்களுக்குள் உருவானது.
பல்லவரின் படையெடுப்போடுதான் வங்கத்தில் இருந்து வந்த பாளி மொழி பேசிவந்த (சிங்களவர்கள்) 
எழுதத்துருவை தெலுங்கு + கன்னடம் கலந்து கண்டதோடு பாளி மொழியை இழந்து பாலி +தெலுங்கு + தமிழ் கலந்து சிங்களம் பேச தொடங்கினார்கள். 

சேரர்கள் தமிழர்கள்தானே செங்குட்டுவன் காலத்தில் கிரந்தமே இருக்கவில்லை 
மலையாளம் 800 ஆம் ஆண்டளவில் சோழ பேரரசின் எழுச்சி காலத்தில் சோழர்களிடம் 
வீழ்ச்சி கண்ட பல்லவ  சேர மன்னரும் மக்களும் தமிழ்நாட்டின் தென் மேற்கு ப்பகுதிக்கு சோழர்கள் வலிமையடையாத  பகுதிக்கு நகர்ந்து வாழ்ந்து வந்த போது கிரந்தமும் தமிழும் கலந்து பேச தொடங்கியபோதுதான்  பின்னாளில் அது மருவி மலையாளம் எனும் ஒரு புது மொழி உருவானது  
மலையாள எழுத்து உரு முதலில் வட்எழுத்து என்று தமிழை வட்டமாக எழுத்துவதில்தான் உருவானது 
மலையாளத்தின் மிக மிக பழமைவந்த இலக்கியமே தமிழின் வளையாபதியை  வட்டெழுத்தில் கி.பி 830 எழுதியதுதான். தற்போதைய இலக்கண மலையாளம் 13ஆம் நூற்றாண்டில்தான் உருவானது.

இலங்கைக்கும் மலையாளிகளுக்குமான தொடர்பு .......
பாண்டிய அரசுகளும் சேர அரசுகளும் சோழர்களிடம் வீழ்ச்சி அடைய தொடங்கிய போது 
இலங்கையில் எஞ்சியிருந்த பல்லவ அரசுகள்  தமிழ்+ சிங்களம்  பாண்டிய சேர அரசுக்களுக்கு துணையாக 
சோழர்களை எதிர்த்து போராட வந்து வந்து போவதுண்டு  அந்த கால பகுதியில் சோழர்களிடம் வீழ்ச்சி கண்ட சில  சேர சிற்றசர்கள் மக்கள் கூட்டம் இலங்கையில் இருந்து வந்த தமிழ் சிங்கள படைகளுடன் உயிர்தப்பி   இலங்கைக்கு  வருவதுண்டு. 

இந்த இலங்கையில் இருந்து அப்ப அப்ப பாண்டியர்களுக்கும் சேரர்களுக்கும் துணையாக வரும் 
இலங்கை அரசுகளை இலங்கைக்கு சென்றே அடிக்க வேண்டும் எனும் எண்ணம்  முதன் முதலில் ஆதித்ய  சோழனுக்கே  உருவான போதும்  வடக்கே இருந்து வந்த படையெடுப்புகளை எதிர்த்து போராடும் பொறுப்பை  
அவனது தந்தை சுந்தர சோழர் அவனிடம் ஒப்படைத்து இருந்தார் ஆதலால் ஆதித்ய சோழனால் இலங்கைக்கு அப்போது ஒரு பாரிய  படையெடுப்பை செய்ய முடியாது போனாலும் ஒரு படையை அனுப்பி இருந்தான்  
அது அப்போது பலமாக இருந்த சிங்கள மன்னன் மகிந்தனின் மகனான சேனாதியிடம் தோல்விகண்டு திரும்பியது  என்ற செய்தி சுந்தர சோழருக்கு வந்த போதுதான் ........ சுந்தர சோழர் முதன் முதலில் அந்த தோல்வியை தாங்க  முடியாது இலங்கைக்கு படையெடுக்கவேண்டும் என்று எண்ணம் கொண்டார்  

(இதை நான் தொடருவத்துக்கு காரணம் ...... கைவிரல் நீடிய இடமெல்லாம் புலிக்கொடி  ஏற்றிக்கொண்டு வந்த சோழ பேர் அரசு அழிய இதுதான் பிள்ளையார் சுழி போட்டது என்பதால்) 

இலங்கைக்கு படையெட்டுப்பது எனும் திட்டத்தை சுந்தர சோழர் அரச சபையில் வைத்தபோது  
ஆதித்திய சோழன் வடமுனையில் ஓர் பாரிய படையெடுப்பை எதிர்த்து போராடிக்கொண்டு இருந்தான்  
ஆதலால் யார் இலங்கைக்கு படையெடுப்பது? என்று கேள்வி வந்தபோது
சுந்தர சோழரின் இளைய மகளான குந்தவைதான் அப்போது வெறும் பதின்ம வயதிலேயே இருந்த  தனது தம்பியான அருண்மொழி சோழனை அனுப்ப தந்தைக்கு ஆலோசனையாக மட்டும் அல்ல கொஞ்சம் கட்டளையாகவும்  கூறி இருந்தாள்  .......  அதன்படியே அருண்மொழி சோழன் இலங்கைக்கு படையெடுத்து வந்தான்  இது வரைக்கும்  எமக்கு (இலங்கைக்கு)  வைகைநதி பக்கம் வீரபாண்டியனுக்கும்    இவர்களுடன்  திருமண  தொடர்பில் கொங்கு நாட்டு   சேரர்களுக்கும்தான் தொடர்பு இருந்தது. பாண்டிய அரசனான பரந்தாக வீர நாராயணன்  சேர நாட்டு இளவரசியான வானவ மகாதேவி யை திருமணம் முடித்து இருந்தான்.

வைகைநதி அருகே ஆதித்ய சோழன் வீர பாண்டியனை சாகடித்து பாண்டி நாட்டை கைப்பற்றிய பின்பு  
பின்னாளில் பரந்தாமன் என்று இன்னொரு சோழ மன்னன்தான் சேர அரசான வானவ மாதேவியின் வாரிசுகளை  வெற்றிகொண்டான். 

சுந்தர சோழரின் செல்ல மகளான குந்தவையின் சொல் கேட்டுதான் 
இப்போ சுந்தர சோழர் நடந்துகொள்கிறார்  ஒரு பொம்பிளையா எங்களுக்கு கட்டளை 
போடுவது என்று பின்னாளில் சுந்தர சோழர் வயது வந்து இருந்த போது சோழ பேர் அரசுக்கு பக்க  துணையாக  இருந்து பல போர்களை வெல்ல துணை போய்க்கொண்டு இருந்தசிற்றரசர்   பழுவேட்டையர் 
மற்ற சில சிற்றரசர்களுடன் கூடி சோழ அரசை கைப்பற்ற உள் கலக்கம் செய்தார்கள்  
ஒருபக்கம் விஜய பேரசின் படையெடுப்பு உள்ளுக்குள் இவர்கள் கலகம் என்று அப்போது சோழ அரசு கொஞ்சம் தள்ளாட  தொடங்கினாலும் ..........
கி பி 900- 1000 ஆண்டளவில் நம்ம ராஜா    ராஜ ராஜ ராஜேந்திர சோழன் கொங்கு நாடு ஈழம் தொடங்கி கலிங்கம் முதல் கடாரம் வரை புலிக்கொடி  ஏற்றினான்.  இதுக்கு பின்பு பண்டாரவன்னியன் வரை இலங்கையை ஆண்டது எல்லாம்  சோழ  அரசர்களும்   விஜய நகர  நாயக்கர்களும்தான். 

எமக்கும் மலையாளிகளுக்கு மான தொடர்பு என்பது ஆயிரம் வருடம் முன்னையது ஆனால் 
எம்மில் பல ஆயிர கணக்கானவர்கள் மலையாளிகளாக சேர நாட்டிடை சேர்ந்தவர்களாக இருக்கலாம் 
நாம் பின்னாளில் தமிழர்க்ளாக ஆகி இருக்கலாம். நாம் மலையாளிகள் என்பதனால் எமக்கு சோழர் காலத்திலும் படகு போக்குவரத்துகள் பண்ட மாற்றங்கள் தொடர்ந்து இருக்கலாம். 

மதங்கள் 
மன்னர்கள் 
கால பகுதியை வைத்து நாம் எமது தமிழ்மொழியின் இலக்கியங்களோடு நடை போட தொடங்கினால் மட்டுமே  உண்மைகளை கண்டறிய முடியும் 

 • Like 2
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.