Sign in to follow this  
ampanai

வெளியில் உள்ள கொரோனா வைரசை எவை கொல்லுகின்றன - அமெரிக்க தேசியநல பாதுகாப்பு

Recommended Posts

குறிப்பு : தகவல் ஆங்கிலத்தில் உள்ளது. தமிழில் இது தொடர்பான மொழியாக்கம் கிடைத்ததும் இணைக்கப்படலாம். 

HIGHER TEMPS CUT VIRUS LIFE: William Bryan on how virus survives

 

  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

அறிந்தவை, ஆய்வு மூலம் உறுதிசெய்யப்பட்டிருப்பது, ஆறுதலாகவும் 

வெப்ப வலய நாடுகளில் பரவுவதற்கான ஏதுவான சூழல் குறைவு. ஆனால், குறிப்பிட்ட நேரத்திற்குள் நோய்  உள்ளவரோடு நேரடி தொடர்பில் அல்லது னாய் உள்ளவர் expose பண்ணுப்பட்ட சூழலோடு தொடர்பில் வந்தால் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இன்னொமொரு  காரணி, சூரியன் இபோது solar minimum எனும் பருவகாலத்தில் உள்ளது, சூரியனில் உள்ள வழமையான கொந்தளிப்புகள் இல்லை. அதனால், சூரிய ஒளி, வெப்பம் மற்றும் uv rays இன் வழமையான வீரியத்திலும் குறைவாக உள்ளது. solar மினிமம் 2020 ஆனி மாதம் வரைக்கும் நீடிக்கும் எனும் ஓர் கருதுகோள் உள்ளது.  பொறுத்திருந்து பார்ப்போம். 

மேற்சொல்லப்பட்ட ஆய்வுகளின் முடிவின் படி,  தொடுகையை தவிர்ப்பது இப்போதுள்ள வழி.

தடுப்பு மருந்தும் இப்போதைக்கு வர வாய்ப்புகள் குறைவு. ஏனெனில், இதன் mutations மற்ற வரைசிலும் கூடாவாகவும், விரைவாகவும் உள்ளது. 

Share this post


Link to post
Share on other sites

சூரிய ஒளி கொரோனா வைரசை விரைந்து அழிக்கிறது - அமெரிக்க விஞ்ஞானிகள்

சூரிய ஒளி கொரோனா வைரசை விரைந்து அழிப்பதாக, அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த, உள்நாட்டுப் பதுகாப்புத் துறை அறிவியல் ஆலோசகர் வில்லியம் பிரையன் (William Bryan), பரப்புகளில் படிந்துள்ள வைரஸ்களையும், காற்றில் உள்ள வைரஸ்களையும் சூரிய ஒளி அழித்துவிடும் திறன் பெற்றது என்று குறிப்பிட்டார். சூரிய ஒளியின் புறஊதாக் கதிர்கள், வைரஸ்களின் மரபணுப் பொருள்களை சேதப்படுத்தி, அவை பல்கிப் பெருகும் திறனை முடக்கிவிடும்.

எனவே வெப்பம் மற்றும் ஈரப்பதம் அல்லது இரண்டுமே அதிகரிப்பது வைரசுக்கு உகந்தது அல்ல என்றும் வில்லியம் பிரையன் தெரிவித்தார். தேசிய உயிரிபாதுகாப்பு ஆய்வு மையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் அடிப்படையில் இந்த முடிவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த ஆய்வறிக்கை இன்னும் வெளியிடப்பட்டு, வேறு பிற விஞ்ஞானிகளால் இன்னும் வெளிமதிப்பீடு செய்யப்படவில்லை. சூரிய ஒளி, வெப்பம், ஈரப்பதம் ஆகியவை கொரோனா வைரஸ் அழிப்பை விரைவுபடுத்தும் என்றாலும், வரும் கோடை காலத்தில் வைரஸ் முற்றாக அழிந்துவிடும் என நினைத்து தற்காப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கைவிட்டு விடக் கூடாது என்று அமெரிக்க அரசு எச்சரித்துள்ளது.
 

https://www.polimernews.com/dnews/107640/சூரிய-ஒளி-கொரோனா-வைரசைவிரைந்து-அழிக்கிறது--அமெரிக்க-விஞ்ஞானிகள்

Share this post


Link to post
Share on other sites

கோடையில் கொரோனா தொற்று குறையும்: அமெரிக்கா நம்பிக்கை

சூரிய ஒளி, வெப்பம் மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றால் கொரோனா வைரஸ் விரைவாக பலவீனமடைகிறது. இது கோடை காலங்களில் தொற்றுநோய் குறைவாக தொற்றுநோயாக மாறக்கூடும் என்பதற்கான அறிகுறி என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இயக்குநரகத்தின் தலைவரான வில்லியன் பிரைன் கூறியதாவது: கொரோனா வைரஸ், உட்புறத்திலும் வறண்ட நிலையிலும் தப்பி பிழைக்கிறது. வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் அதிகரிக்கும் போது குறிப்பாக சூரிய ஒளி அதன் மேல்படும்போது கொரோனா வைரஸ் தனது ஆற்றலை இழக்கிறது. நேரடியாக சூரிய ஒளி, படும்போது கொரோனா விரைவில் இறந்து போகிறது. துருப்பிடிக்காத எஃகு போன்ற அசாதாரண மேற்பரப்பில், கொரோனா வைரஸ் இருண்ட, குறைந்த ஈரப்பதம் கொண்ட சூழலில் அதன் பாதி வலிமையை இழக்க 18 மணி நேரம் ஆகிறது. அதிக ஈரப்பதம் கொண்ட சூழலில், கொரோனா வைரஸ் பாதி ஆயுள் ஆறு மணி நேரமாகக் குறைந்தது. மேலும் வைரஸ் அதிக ஈரப்பதம் மற்றும் சூரிய ஒளிக்கு ஆளானபோது, அரை ஆயுள் இரண்டு நிமிடங்களாக குறைந்தது.

இதே போன்று காற்றில் இடைநிறுத்தப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றின் விளைவை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இருமல் அல்லது தும்மல் மூலம் பெரும்பாலும் தொற்று பரப்பப்படுகிறது. ஒரு இருண்ட அறையில், வைரஸ் அதன் வலிமையை ஒரு மணி நேரம் நீடித்தது. ஆனால் சூரிய ஒளியில் வெளிப்படும் போது, அது 90 வினாடிகளில் பாதி வலிமையை இழந்தது. மேலும் பிளீச்சை விட ஐசோபுரோபைல் ஆல்கஹால் மிகவும் பயனுள்ள கிருமிநாசினி என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்த கண்டுபிடிப்பு கொரோனா வைரஸ் இன்ஃப்ளூயன்ஸா போன்ற பிற சுவாச நோய்களை போன்று வெப்பமான காலநிலையில் குறைவான பாதிப்பை ஏற்படுத்துமென்பது நம்பிக்கையளிப்பதாக உள்ளது. ஆனாலும் சிங்கப்பூர் போன்ற வெப்பமான வானிலை நிலவும் இடங்களில் கொரோனா தொற்றால் மரணம் ஏற்பட்டுள்ளது. இது கொரோனா பரவலில் சுற்றுச்சூழல் காரணிகளின் தாக்கம் குறித்து பரந்த கேள்விகளை எழுப்புகிறது.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2527088

Share this post


Link to post
Share on other sites
On 24/4/2020 at 16:57, ampanai said:

சூரிய ஒளி கொரோனா வைரசை விரைந்து அழிக்கிறது - அமெரிக்க விஞ்ஞானிகள்

 

கூடியளவு சாத்தியாமாக இருக்கக்கூடிய முடிவு. 
ஆறுதலாளிக்கும் தகவல். 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this