Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

மனிதாபிமான உதவிகளும் மதுபானக் கடைகளும் !


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

மனிதாபிமான உதவிகளும் மதுபானக் கடைகளும் !
=========================================
இலங்கையில் அண்மையில் COVID-19 தொற்றினைத் தடுக்கக் கொண்டுவரப்பட  ஊரடங்கு உத்தரவை அடுத்து, நாட்டின் பல பகுதிகளிலும் பல குடும்பங்களுக்கு வருமானம் அற்ற நிலை ஏற்பட்டது நாங்கள் அனைவரும் அறிந்ததே.

அதையடுத்து அவர்களுக்கு உதவ புலம் பெயர் தமிழ் அமைப்புகள் பலவும் முன் வந்ததும், அவர்கள் நாட்டின் பல பகுதிகளுக்கும் பொருட்களை அனுப்பி வைத்ததும் நாம் அறிந்ததே! அதே நேரம் இலங்கை அரசே வருமானம் குறைந்த, வருமானம் இழந்த குடும்பங்களுக்கு பணக் கொடுப்பனவுகளை மேற்கொண்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது. மறுபுறம் இலங்கையில் உள்ள சில மத அமைப்புக்களும் சமூக அமைப்புக்களும் தமது பங்குக்கு உணவுப் பொதிகளை வழங்கி வருகின்றன.

இவ்வாறு அரசும் புலம்பெயர் சமூகமும் உள்நாட்டு அமைப்புகளும் மக்கள் பசி தீர்க்க கடந்த இரண்டு வாரங்களாக பாடுபட்ட நிலையில் அரசாங்கம் ஏப்ரல் 20 அன்று ஊரடங்கைத் தளர்த்தியது. நீண்ட நாட்களின் பின்னர் கூண்டைவிட்டு வெளியே வந்த பறவைகளான இலங்கையின் குடிமக்கள் (மிக)நீண்ட வரிசையை மிகவும் ஒழுக்கமாக சமூக இடைவெளியைப் பேணியபடி நின்றனர். 

அது அத்தியாவசிய உணவுக்கான வரிசையல்ல.  அது விட்டதைப் பிடிக்கும் நோக்கிலும் இனி (வெளியே) விடாவிட்டால் என்ன செய்வது என்ற பயத்திலும் ஒரு மாதத்திற்கு தேவையான உற்சாக பானத்தை போதுமான அளவு வாங்கிச் சேமித்துவிட வேண்டும் என்று உறுதி கொண்ட வரிசையாக இருந்தது.  . 

நோய்த் தொற்றைத் தடுக்க இத்தனை நாட்கள் ஊரடங்கு உத்தரவு இருந்த நிலையில் இந்த ஒருநாளில் அவசரமாக மதுபானக் கடைகளைத் திறக்கவேண்டிய அவசியம், அவசரம் என்ன வந்தது என்ற கேள்வியும் எனக்கு வராமல் இல்லை.ஆனால் மக்களுக்கு அரசு செலவு செய்த பணத்தை (உதவித் தொகை) அரசு மீளப் பெற்றுக்கொள்ள இதைவிட மிக விரைவான வழிமுறை வேறொன்றும் இல்லைத்தானே? 

அது தவிர, மதுபான சாலை அனுமதிப்பத்திரம் வைத்திருக்கும் ஏழைப் பராளுமன்ற உறுப்பினர்களும் அவர்களில் தங்கி வாழ்வோரும் வருமானம் இல்லாது பட்டினி கிடக்க வேண்டியும் ஏற்படலாம் அல்லவா?

அரசு சாராயக் கடைகளைத் திறந்ததும் சாராயம் விற்றதும் எமக்குத் தேவையில்லாத விடயம், அது நாட்டின் தேசிய வருமானம் சம்பந்தப்பட்டது. அரசின் வருமானத்தைக் கெடுத்தவன் என்ற கெட்டபெயர் எனக்கெதற்கு? நான் கதைக்க வந்தது நம்நாட்டுக் குடிமக்களைப் பற்றியும் புலம்பெயர் தேச புரவலர்களைப் பற்றியும்தானே? அதைப்பற்றி மட்டும் பேசுவோம். 

இந்த சம்பவத்தையடுத்து சமூக வலைத்தளங்களில் பலரும் கொஞ்சம்கூட மனசாட்சியில்லாமல்  செய்வது இந்தக் குடிமக்களையும் அண்மையில் இலங்கைவாழ் தமிழர்களுக்கு ஓடோடி வந்து உதவிய புலம்பெயர் தமிழர்களையும்தான். 

வெளிநாட்டில் உள்ளவர்கள் நமது மக்கள் ஒருவரும் பட்டினி கிடந்து செத்துவிடக் கூடாது என்றுதானே பணம் அனுப்பி உதவினார்கள்? வாங்கியவர்களில் சிலர் அதைப் பாதி விலைக்கு விற்றுக் குடித்தால் கொடுத்தவர்கள் என்ன செய்வார்கள் என்று வெளிநாட்டு வள்ளல்களை ஆதரிப்போர் சொல்கிறார்கள். 

அரசே காசும் உணவும் கொடுக்கும்போது இவர்களும் பொருட்களை வாரி இறைத்ததால்தானே வாங்கியவர்கள் அவற்றைப் பாதி விலைக்கு விற்று அந்தக் காசில் மதுபானம் வாங்குகிறார்கள் என்று மறுசாரார் திட்டுகிறார்கள். குற்றம் செய்தவரைவிட செய்யத் தூண்டியவர்தனே குற்றவாளிகள் என்பது அவர்கள் வாதம்.

இன்னும் சிலரோ, இந்த வெளிநாட்டு உதவிகளை ஒவ்வொரு பிரதேச செயலாளர்கள் மூலமும் கொடுத்திருக்கலாம்தானே என்றும் வாதிக்கிறார்கள். சில பிரதேசச் செயலாளர்கள் சரியாக  வேலை செய்வதில்லை என்று மறுசாரார் குற்றம் சாட்டுகிறார்கள். மொத்தத்தில் வழமைபோல எமது பாரம்பரியம் தவறாமல் ஆளையாள் குற்றம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். 

புலம்பெயர் தமிழரே, உங்கள் உதவிகளுக்கு நன்றி. ஆனால் தயவுசெய்து அதை ஒருங்கிணைத்து எல்லோருக்கும் கிடைக்கும்படி செய்யுங்கள் என்று பொதுநல விரும்பிகள் கூறினால் வெளிநாட்டு தமிழர்களுக்கு கோபம் வருகிறது. 

ஏறச் சொன்னால் எருதுக்கு கோபம், இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம் என்றதாக நிலைமை மாறிப் போச்சு.

இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் எமது குடிமக்கள் ஊரடங்கு உத்தரவை மதித்து தத்தமது வீடுகளை அமைதியாகக் குடித்துக் கொண்டிருப்பார்கள். நான் மட்டும் எதற்காக இதைப்பற்றிப் பேசிக்கொண்டு........!?

பி.கு.: பண உதவி, பொருள் உதவி பெற்ற எல்லாருமே அதை மதுபானம் வாங்கப் பயன்படுத்தினார்கள் என்று நான் சொல்லவில்லை. ஏனெனில் உண்மையும் அதுதான். 
இரண்டாவது படத்தை பாருங்கள். உங்களில் யாராவது அந்த யானை மதுபானம் வாங்கத்தான் வந்தது என்றோ, வெளிநாட்டுத் தமிழரின் நிவாரணம் பெற்றது என்றோ உங்களால் குற்றம் சாட்ட முடியுமா?

 

 

Link to post
Share on other sites
On 24/4/2020 at 19:24, கிருபன் said:

வெளிநாட்டு உதவிகளை ஒவ்வொரு பிரதேச செயலாளர்கள் மூலமும் கொடுத்திருக்கலாம்தானே என்றும் வாதிக்கிறார்கள். சில பிரதேசச் செயலாளர்கள் சரியாக  வேலை செய்வதில்லை என்று மறுசாரார் குற்றம் சாட்டுகிறார்கள். மொத்தத்தில் வழமைபோல எமது பாரம்பரியம் தவறாமல் ஆளையாள் குற்றம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். 

 

போராட்ட காலம். புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு பொருளாதாரத் தடையை சிறீலங்கா அரசாங்கம் அறிவித்தது. உணவு, மருத்துவம் முதல் அனைத்துப் பொருட்களும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் எடுத்துச் செல்ல முற்று முழுவதுமான தடை. வன்னியில் உள்ள மக்களுக்கு தங்கள் நிழல் அரசாங்கத்தின் ஊடாக அவர்களது தேவைகளை விடுதலைப் புலிகள்தான் நிறைவேற்றிக் கொண்டிருந்தார்கள்.

மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய தமிழர் புனர்வாழ்வுக் கழகம், தமிழ் பொருண்மிய மேம்பாட்டுக் கழகம் என்ற அமைப்புகள் ஊடாக பொருளாதாரத் தடையை சமாளித்து மக்களின் அன்றாட வாழ்க்கை சிதைவடையாமல் விடுதலைப் புலிகள் பார்த்துக் கொண்டார்கள். இங்கே நான் குறிப்பிட்ட இரண்டு கழகங்களுக்கும் வெளி, உள்நாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவிகள் மிகக் குறைவாகவே இருந்தன. ஆனால் இந்த இரண்டு கழகங்களையும் புலம் பெயர் தமிழர்கள் தங்கள் இரண்டு தோள்களில் தாங்கி நின்றார்கள். வன்னி மக்களின் தேவைக்கு அதிகமான நிதிகளை புலம் பெயர் நாட்டில் இருந்து தமிழர்கள் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

மேலதிகமான நிதி கிடைத்ததனால் காந்தி நிலையம், குருகுலம், இனிய வாழ்வு இல்லம், வெற்றிமனை, பெண்கள் அபிவிருத்தி புனர்வாழ்வு, முன்பள்ளி, தொழில்சார் பயிற்சி நிலையம், சத்துணவு நிலையங்கள், வெண்புறா என்று பல அமைப்புகள் அங்கே உருவாகி மிக நேர்த்தியாக நிர்வகிக்கப் பட்டன. அதிலும் யாரிடமும் கையேந்தும் நிலை இல்லாமல் அவரவர்கள் சுயமாக வாழ வழி செய்து கொடுப்பதே அங்கே பிரதானமாகக் கருதப்பட்டது. தங்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ள மக்களின் தேவைகளைக் கவனிப்பது தங்களது அரசின் கடமை என்று விடுதலைப் புலிகள் நடந்து கொண்டார்கள்.

இன்று இவை எதுவும் சிறிலங்காவில் இல்லை. பொருளாதாரத் தடை என்ற பேச்சுக்கே இடமில்லை. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி இருக்கிறார். பிரதமர் இருக்கிறார், அவரது அமைச்சுக்கள் இருக்கின்றன. தமிழ் மக்கள் தங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்து அனுப்புகிறார்கள். மாகாணசபை, அதற்கான ஆளுனர், மாநகரசபை, மேஜர், நகரசபை, நகரபிதா கிராமசேவகர்கள் என எல்லாமே இருக்கின்றன. இங்கே மக்களுக்கான பிரச்சனைகள் என்று வரும் போது அதை கவனிக்க வேண்டியது அரசாங்கமே

இன்றைய கொரோனாக் காலகட்டத்தில் அன்றாடம் தொழில் புரிந்து அந்த வருமானத்தில் வாழ்பவர்கள் வீட்டில் இருத்தப் பட்டால், அவர்களது தேவைகளைக் கவனிக்க வேண்டியது ஒரு அரசாங்கத்தின் கடமை. நான் வசிக்கும் யேர்மனியில், கொரோனாக் காலத்தில் வேலைக்குப் போக முடியாதவர்களுக்கு யேர்மனிய அரசாங்கம்,  அவர்கள் இதுவரை பெற்ற சம்பளத்தில் 60 வீதமான பணத்தைத் தருகிறது. அது போதுமானதாக இல்லை என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டதால் இப்பொழுது சம்பளத்தின் 80 வீதமான தொகையைத் தருகிறோம் என நிதியமைச்சு அறிவித்திருக்கிறது

இலங்கை அரசாங்கமும் உலக நாடுகளிடம் நிதி கேட்கிறது. வரும் நிதிகளைத் தங்கள் பகுதிகளுக்குத் தர வைப்பதும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கடமை. தேர்தல் வரும் போது வந்து வார்த்தைகளை அள்ளி வீசும் பாராளுமன்ற உறுப்பினர்களை அவர்களது கடமைகளைச் செய்ய வேண்டும்.அல்லது பொதுமக்கள் அவர்களைக் கேட்க வேண்டும்.

நாட்டில் ஏதாவது ஒரு பிரச்சினை வந்தால், உடனடியாகப் புலம் பெயர் தமிழர்களிடம் நிதி கேட்கும் இன்றுள்ள நிலை மாறவேண்டும். லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஒரு தமிழ் வானொலிஇது ஒரு வரலாற்றுக் கடமை. தமிழர்களே உதவுங்கள்என்கிறது. இங்கே எங்கே ஒரு வரலாறு எழுதப் படுகிறது என்று தெரியவில்லைஒரு பொது நலனுக்காக அனுப்பப்படும் பணம் சரியான முறையில் பயன்படுத்தப் படல் வேண்டும். எதற்கெடுத்தாலும் புலம் பெயர் தமிழ் மக்கள் பணம் அனுப்பிக் கொண்டிருந்தால் ஒரு வலிமையான சமுதாயம் உருவாகமல் போகும் வாய்ப்பு ஏற்பட்டு விடும்

 

 • Like 1
 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தானம் கொடுத்த மாட்டின் பல்லை பிடித்து பார்க்காதே என்று ஒரு பழமொழி இருக்கின்றது.

உதவி செய்வதோடு தமது எல்லைகளை அறிந்து நின்று கொண்டால் அவரவர்க்கு நல்லது.

உதவிசெய்கின்றோம் எனும் உரிமையில் அடுத்தவன் வீட்டு படுக்கை அறைவரை செல்வது அநியாயம்.

உதவிசெய்கின்றோம் என்று கூறிக்கொண்டு அடுத்தவன் சுதந்திரத்தை பறிப்பது மனிதாபிமானம் இல்லை. 

முதலில் இலங்கையில் இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு மண்டைக்குள் ஒன்றும் இல்லை அவர்களுக்கு வாழத்தெரியாது ஒன்றுமே தெரியாது முட்டாள்கள் எனும் நிலையில் நினைப்பில் இலவச அறிவுரைகள், அழுத்தங்களை கொடுப்பது நிறுத்தப்படவேண்டும்.

இங்கு வெளிநாடுகளில் செய்யாததை அங்கு அவர்கள் செய்யவில்லை. தமக்கு ஒரு நியாயம் மற்றவனுக்கு ஒரு நியாயம் எனும் போக்கும் தவறானது.

ஒரு காலத்தில் தாங்களும் ஊரில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து எப்படி இருந்தார்கள் என்பதை வெளிநாட்டில் வாழ்ந்துகொண்டு ஓடர் போடுபவர்கள் நினைத்துப்பார்க்க வேண்டும்.

அங்குள்ளவர்களை மட்டம் தட்டுவது, ஓரம் கட்டுவது, ஒன்றும் தெரியாத மடையர்கள் எனும் கணக்கில் ஊடகங்களில் பொறுப்பு இல்லாமல் செய்திகள் பிரசுரிப்பது எல்லாம் தவறானது.

இப்படியான போக்கு அங்குள்ள மக்களின் மனதில் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கலாம். கஸ்டப்படுபவனை தோளில் தட்டிக்கொடுக்கவேண்டும். தலையில் குட்டி கெடுக்கக்கூடாது.

நீங்கள் அங்கு இருந்து உதவி பெறும்போது உங்களுக்கு உதவி செய்பவர்கள் எப்படி வாழவேண்டும் என்று வகுப்பு எடுத்தால் உங்களுக்கு எப்படி உரைக்கும் என்பதை ஒருகணம் தயவுசெய்து சிந்தித்து பாருங்கள். 

வெளிநாட்டில் இருந்து காசு கொடுப்பவர்கள் அங்குள்ள மக்களை எப்படி தங்கள் விருப்பு வெறுப்பின் பிரகாரம் ஆட்களை இருத்தி எழுப்புகின்றார்கள் என்பது பற்றியும் கொஞ்சம் ஆராய்ச்சி செய்து கட்டுரை எழுதுங்கள். 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

தானம் கொடுத்த மாட்டின் பல்லை பிடித்து பார்க்காதே என்று ஒரு பழமொழி இருக்கின்றது.

விதானைகள் எடுத்த வறுமைக்கோட்டில் வாழ்கிறவர்  குடும்பங்களில் லிஸ்டில் வெளிநாட்டில் உள்ளவர்களின் குடும்பமும் உள்ளது கேட்டால் தம்பி அரசாங்கத்து உதவி எடுக்க என்று போட்ட லிஸ்ட் நீங்கள்  வேணுமெண்டால் அதை வெட்டி விட்டு மற்றவையளுக்கு உங்க உதவிகளை குடுங்க என்று பதில் வருது . 

அப்ப  உண்மையிலே கஷ்ட்டப்பட்ட  குடும்பங்கள் தொடர்ந்து வறுமையில் வாழனும் என்பது விதியா ?

பல இடங்களில் சமுர்த்தி எடுப்பவர்களை கேட்டால் வெட்க்க  கேடு அவர்களை எல்லாம் உதவி செய்யும்  வெளிநாட்டுக்காரன் கண்டுபிடித்துவிடுவான் எனும் பயத்தில் காசை  மட்டும் அனுப்புங்கோ மற்றபடி வாயை  பொத்திக்கொண்டு கிடவுங்கோ எனும் தொனியில் வரும் கூப்பாடுகளை முதலில் நிப்பாட்டுங்கோ அங்கும் நாங்கள் அனுப்பும் ஒவ்வொரு பென்னியும் உண்மையான கஸ்ட்டப்பட்டவருக்குத்தான் போகுதா என்று பார்ப்பதை தவறு என்று சொல்லமுடியாது .

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டில் உறவினர்கள் வாழலாம் வாஸ்தவம்தான். ஆனால் வெளிநாட்டில் வாழும் உறவினர்கள் எல்லாம் ஊரில் உள்ள உறவுகளுக்கு காசு அனுப்புகின்றார்கள் என்பது உண்மை இல்லை. வெளிநாட்டில் வசதியாக வாழ்ந்துகொண்டு ஊரில் வாழும் தாய், சகோதரங்களை கவனிக்காமல் உள்ள நல்லவர்களும் உள்ளார்கள்.

ஒருவகையில் பார்த்தால் வெளிநாட்டில் உறவினர் வாழ்கின்றார் என்றுசொல்லி ஊரில் உள்ள ஒருவரின் கொடுப்பனவுகளை வெட்டுவது நியாயம் இல்லை. 

சமுர்த்தி காசு கிடைக்கலாம். சரி. ஆனால், எவ்வளவு கொடுக்கின்றார்கள். மாதம் ஒரு பத்தாயிரம் கிடைக்குமா? ஐயாயிரம் கொடுக்கப்பட்டது என்றே செய்திகளில் பார்த்தேன்.

ஊரில் வாழ்பவர்கள் ஒழுங்காக சாப்பிட்டு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய ஒரு நான்கு பேர் அமைந்த குடும்பத்துக்கு மாதம் எவ்வளவு காசு போதுமானது என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்?

சமுர்த்தி பணத்தை வைத்து மாதத்தில் உள்ள எத்தனை நாட்களை சமாளிக்கமுடியும்.

நானும் முன்பின் தெரியாதவர்களுக்கு காசு அனுப்புவதுண்டு. எப்படி செலவளிக்கின்றார்கள் என்று கேட்பதில்லை. அது எனக்கு நியாயமாகப்படவில்லை பெருமாள் 👍

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

வெளிநாட்டில் இருந்து காசு கொடுப்பவர்கள் அங்குள்ள மக்களை எப்படி தங்கள் விருப்பு வெறுப்பின் பிரகாரம் ஆட்களை இருத்தி எழுப்புகின்றார்கள் என்பது பற்றியும் கொஞ்சம் ஆராய்ச்சி செய்து கட்டுரை எழுதுங்கள். 

நீங்களும் அதை எழுதலாம்😀

புலம்பெயர்ந்த தமிழர் அரசியல் கட்சிகளுக்கு வார்த்துக்கொடுத்து தமது agenda வை முன்னெடுப்பதுபோல சாதாரண மக்களுக்கு வாரி வழங்குவதில்லை. உதவிகள் பெரும்பாலும் சொந்தங்களாலும், நண்பர்களாலும் செய்யப்படுகின்றன. 

1 hour ago, நியாயத்தை கதைப்போம் said:

நானும் முன்பின் தெரியாதவர்களுக்கு காசு அனுப்புவதுண்டு. எப்படி செலவளிக்கின்றார்கள் என்று கேட்பதில்லை. அது எனக்கு நியாயமாகப்படவில்லை பெருமாள் 👍

ஜெயமோகனின் கதையில் இருந்து...

 

“பணம் மாம்மன் என்ற தெய்வம், அது சாத்தானின் படைவீரர்களில் ஒன்று. வியர்வை சிந்தி அதை ஈட்டவேண்டும். அல்லது ரத்தமும் கண்ணீரும் சிந்தி ஈட்டவேண்டும். வியர்வையும் ரத்தமும் கண்ணீரும் நாம் அல்லாவுக்கு அளிக்கும் விலை, அதற்கு பதிலாக அவர் நமக்கு செல்வத்தை அளிக்கிறார்.அவ்வாறு ஈட்டப்பட்ட செல்வத்தை அல்லா காப்பாற்றுவார். அல்லாவுக்கான விலையை அளிக்காமல் வரும் செல்வம் சாத்தானுடையது. அவனிடமிருந்து நாம் தப்பமுடியாது. ஆகவேதான் நான் எவருக்குமே சும்மா பணத்தை கொடுப்பதில்லை. கல்வியோ மருத்துவமோ கொடுப்பேன். திருமணம் செய்துவைப்பேன். பணம் கொடுப்பதில்லை. பணம் கொடுப்பது ஒருவனை சாத்தானிடம் தள்ளிவிடுவது.”

 

https://www.jeyamohan.in/130497#.XqXfMy_TVR4

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

மண்டைக்குள் ஒன்றும் இல்லை அவர்களுக்கு வாழத்தெரியாது ஒன்றுமே தெரியாது முட்டாள்கள் எனும் நிலையில் நினைப்பில் இலவச அறிவுரைகள், அழுத்தங்களை கொடுப்பது நிறுத்தப்படவேண்டும்.

இங்கு வெளிநாடுகளில் செய்யாததை அங்கு அவர்கள் செய்யவில்லை. தமக்கு ஒரு நியாயம் மற்றவனுக்கு ஒரு நியாயம் எனும் போக்கும் தவறானது.

 

6 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

அங்குள்ளவர்களை மட்டம் தட்டுவது, ஓரம் கட்டுவது, ஒன்றும் தெரியாத மடையர்கள் எனும் கணக்கில் ஊடகங்களில் பொறுப்பு இல்லாமல் செய்திகள் பிரசுரிப்பது எல்லாம் தவறானது.

இப்படியான போக்கு அங்குள்ள மக்களின் மனதில் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கலாம். கஸ்டப்படுபவனை தோளில் தட்டிக்கொடுக்கவேண்டும். தலையில் குட்டி கெடுக்கக்கூடாது.

நீங்கள் அங்கு இருந்து உதவி பெறும்போது உங்களுக்கு உதவி செய்பவர்கள் எப்படி வாழவேண்டும் என்று வகுப்பு எடுத்தால் உங்களுக்கு எப்படி உரைக்கும் என்பதை ஒருகணம் தயவுசெய்து சிந்தித்து பாருங்கள். 

👍  மிகச் சரியான கருத்து.

3 hours ago, கிருபன் said:

புலம்பெயர்ந்த தமிழர் அரசியல் கட்சிகளுக்கு வார்த்துக்கொடுத்து தமது agenda வை முன்னெடுப்பதுபோல சாதாரண மக்களுக்கு வாரி வழங்குவதில்லை. உதவிகள் பெரும்பாலும் சொந்தங்களாலும், நண்பர்களாலும் செய்யப்படுகின்றன. 

உண்மை.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கூலித்தொழில் செய்பவர்கள், உடலால் தொழில் செய்பவர்கள் வீடுதிரும்பியதும் உடல் நோ நீங்குவதற்கு, உடல் அடித்துப்போட்டது போல் உள்ளபோது உடலை ஆற வைப்பதற்கு, நோவை மறந்து தூக்கம் செய்வதற்கு சாராயம் பருகுவதாக கூறக்கேட்டு உள்ளேன். இவர்கள் குடியை அளவுடன் நிறுத்தும் மனக்கட்டுப்பாடு இல்லாமல் போவது போகாதது எமக்கு தெரியாது. அதற்காக பொறுப்பு இல்லாமல் மதுபானக்கடையில் காசை கொட்டுகின்றார்கள், மதுபானம் வாங்குவதற்கு வரிசையில் நிற்கின்றார்கள் என்று சந்தி சிரிக்க நாற்சந்தியில் எழுதி ஒட்டத்தேவையில்லை . 

இரத்த உறவுகள், சகோதரங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து காசு அனுப்புகின்றார்கள், சரி. அதற்காக அவர்கள் குடிக்கின்றார்கள் நாங்கள் குளிருக்குள் கஸ்டப்பட்டு வேலை செய்து அனுப்பும் காசை கரி ஆக்குகின்றார்கள் என்று முறைப்பாடு செய்து செய்தித்தாளில் தலையங்கமாக போடவேண்டுமா? அவர்களுடன் தொடர்புகொண்டு சம்மந்தப்பட்டவர்களுக்கு அறிவுரை கூறுவது தவறு இல்லை.  

காதும் காதும் வைத்தாற்போல் செய்யவேண்டிய வேலையை பறை அடித்து ஊரைக்கூட்டி மதுபான கடைகளுக்கு செல்லும் எல்லாரையும் அவமானம் செய்தாற்போல் ஊடகங்களில் பொறுப்பு இல்லாமல் செய்திகளை கிறுக்கி தள்ளுவது அசிங்கமானது.

உங்களுக்கு நீங்கள் வெளிநாடுகளில் முதுகுமுறிய வேலை செய்து அனுப்பும் காசை அங்குள்ள உறவுகள் தகுந்த முறையில் பயன்படுத்தவேண்டும் என்று விரும்பினால் வெறும் காசு என்று கொடுக்காமல் ஒரு சிறிய முதலீடுபோல் கொடுங்கள் அல்லது அவர்களை வேலை செய்யச்சொல்லி அதற்கு கூலியாக கொடுங்கள். அதற்கு பிறகு நீங்கள் கொடுக்கும் வேதனத்தை அவர்கள் எப்படியும் செலவு செய்வது  அவர்களின் தனிப்பட்ட விடயம்.

பெரிய தொகை இல்லாமல் சிறிய சிறிய தொகையாக அனுப்பலாம். இவ்வாறே அவர்களின் தேவைக்கு ஏற்றபடிஅளவு அறிந்து பணத்தை அனுப்பலாம். இன்னும் எத்தனையோ வழிகள் உள்ளன. 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • நேற்று இந்தக் காணொளியை பார்க்க நேர்ந்தது.. இவர் கூறும் கூற்றில் மெய், பொய் தெரியாது, பார்வையளர்களின் முடிவுக்கு விட்டுவிடலாம்..! 🤔  காலத்திற்குள் செய்யாத உதவியும், எல்லாம் முடிந்த பின் மக்களின் மனநிலைக்கு ஏற்ப புகழ்ந்து தள்ளுவதும் குப்பைக்கு சமம் என்ற உண்ர்வே மேலிட்டது.    
  • 1) திருமணம் சுபமுகூர்த்தத்தில் நிறைவேறியது.  காதல் கரிநாள் ஆனது  ..... 2) உறவுகள் பறிபோனது.  காதல் வந்தது.  .... 3) நொடி மூச்சு நிலையில்லை.  காதல் நிலையானது.  ... 4) கண்ணால் காதல் வந்தது.  இதயம் நொறுங்கிப்போனது.  ... 5) நித்திரையில் சிரித்தேன்.  திட்டி எழுப்பினார் அம்மா  @ கவிப்புயல் இனியவன் 
  • பூமியில் விதைக்கப்பட்ட விதை கூட எதிர்ப்பைச் சமாளித்து முளைத்துக் காட்டுகிறது! . ஒவ்வொரு நாளும் காட்டில் சிங்கத்தால் கொல்லப்படுகின்ற நிலையில் உயிர் வாழும் மான் கூட பிரச்சனைகளை சமாளிக்கின்றது ! பெரிய மீன்களால் ஆகாரத்திற்காக விழுங்கப்படும் நிலையிலிருக்கும் சிறிய மீன்களும் கடலில் புலம்பாமல் வாழ்கின்றன ! மனிதர்களால் எப்பொழுது வேண்டுமானாலும் வெட்டப்படுகின்ற வாழ்க்கையை அனுபவிக்கின்ற மரங்களும் நிமிர்ந்து நிற்கின்றன ! ஒவ்வொரு நாளும் ஆகாரத்திற்காக பல மைல்கள் தூரம் பறந்தாக வேண்டிய பறவைகளும் மனம் சலிப்படையாமல் முயற்சி செய்கின்றன ! சிறியதான உடலையும், பல கஷ்டங்களையும் சமாளிக்க வேண்டிய கட்டாயத்திலிருக்கும் எறும்புகள் கூட துவண்டு போகாமல் வாழ்ந்து காட்டுகின்றன ! தண்ணீரே இல்லாத பாலைவனத்தில் உயிர் தரிக்க வேண்டிய நிலையிலிருக்கும் ஒட்டகங்களும், எங்கும் ஓடிப்போகாமல் அதில் வாழ்ந்து காட்டுகின்றன ! ஒரு நாள் மட்டுமே வாழ்க்கை என்ற நிலையிலிருக்கும் பலவகை பூச்சிகளும், அந்த ஒரு நாளில் உருப்படியாக வாழ்கின்றன ! இப்படி பலகோடி உயிரினங்கள் உலகில் வாழ முடியுமென்றால் உன்னால் வாழ முடியாதோ? அதை ஏன் புலம்பிக்கொண்டு வாழ்கின்றாய் ! அதை ஏன் நொந்துபோய் வாழ்கின்றாய் ! அதை ஏன் வெறுத்துக்கொண்டு வாழ்கின்றாய் ! அதை ஏன் அழுதுகொண்டு வாழ்கின்றாய் ! வாழ்க்கையைக் கவனிக்கவே நேரம் இல்லாமல், எதையோ தேடி ஓடிக்கொண்டே இருந்துவிட்டு, ஒருநாள் புஸ் என்று போய்விடுவது சாதனை இல்லை, வேதனை. . சந்தோஷமாகத்தான் வாழ்ந்து பாரேன் ! இது உன் வாழ்க்கை... அதை ஆனந்தமாக வாழ். . . https://www.facebook.com/நல்லதே-நினைப்போம்-நல்லதே-நடக்கட்டும்-1639711246245226/photos/சிந்தனைசெய்-மனமேநன்றி-தே-சௌந்தர்ராஜன்அவன்-சொன்னான்-இவன்-சொன்னான்-என்று-எதையும்-ந/1752318084984541 திருவாசகத்தில் ஒரு வாசகம் -39    
  • பழைய காலத்தில் தான் பாம்பை முடிந்தால் அடித்து கடி வாங்கியவருடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டிய தேவை இருந்தது. இப்போது polyvalent antivenom என்று நாகம், புடையன், கண்டங்கருவளை என பல பாம்புகளின் விஷத்தை முறிக்கும் மருந்து ஒன்றாகவே பாவனையில் இருக்கிறது.  இந்த மருந்துகளை பாம்புக் கடி வாங்கிய நாய்களுக்கு ஏற்றிய அனுபவம் இருக்கிறது. 
  • 04) குறட்கூ கவிதைகள் ............ புதுக்கவிதையின் பரிணாமத்தில் புதுவகை இக் குறட்கூ. குறள் போல் கூவுவதால் குறட்கூ. திருவள்ளுவரின் குறள் இரண்டு அடிகளில் ஏழு சீர்களில் கருத்துக்களை எடுத்துரைக்கிறது.   குறட்கூ இரண்டு அடிகளில் மொத்தம் நான்கே சீர்களில் (முதலடியில் இரண்டு சீர்கள் இரண்டாம் அடியில் இரண்டு சீர்கள்) கருத்துக்களை எடுத்துரைக்கிறது.  கவிஞர் தனிகைச்செல்வனின் தமிழின் முதல் குறட்கூ வகைக் கவிதைகளைத் தொடர்ந்து, முனைவர் ம. ரமேஷ் என்பவர் எழுதினார்.  ....  கவிப்புயல் இனியவன் 
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.