Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

அடுத்த வீட்டு அம்பிகா மாமி-பா.உதயன்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்


 

அடுத்த வீட்டு 
அம்பிகா மாமி 
ஆருக்கும் ஒன்றும் குடா 
கசவார மாமி இவோ
கையை விட்டு 
காசை எடா 

வட்டி போட்ட குட்டிகளை 
பாங்கில போட்டு பிட்டு 
கடைசி மட்டும் 
கடைக்கு போக 
காய் பிஞ்சு வேண்ட மாட்டா 

கையில ஒட்டின சோத்தை கூட 
காக்கைக்கும் போட மாட்டா 
அறம் செய்ய விரும்பு என்று 
அந்த ஔவையார் போல் நடிப்பு வேற 
பக்தி என்றும் முக்தி என்றும் 
பல கதைகள் விடுவா மாமி 

படிப்பது தேவாரம் 
இடிப்பது கோவில் 
கதை மட்டும் அளக்க 
கந்தசாமியார் கோவிலில்  
காலையும் மாலையும் 
காணலாம் மாமியை 

உறுட்டிப் பிரட்டி
கதை விடுவா
உண்மையை மட்டும்
ஒளித்திடுவா

அடுத்தவரை அப்ரிஸியேட் 
பண்ணுகிற பழக்கமில்லை 
ஆனா உதவு மட்டும் 
கேட்டுப் பிட்டு மறந்திடுவா 

ஊருக்குள்ள இவோவை விட 
அழகு ராணி இல்லைப் போல 
மனதுக்குள்ள ஒரு நினைப்பு 
மகாராணி தான் தான் போல 

அடுத்த வீட்டு கதை என்றால் 
அலுவா தின்னும் ருசி இவோக்கு 
விடுத்து விடுத்து கேட்டுப் போட்டு 
அந்த ஊர் முழுக்க பறை அடிப்பா 

கடைசி வரை காசை விடா 
கசவார மாமி இவோ
கோவக்காற மாமி இவோ 
கொஞ்சம் ஏதேன் கதைச்சு பிட்டா 
கோவணமும் மிச்சமில்லை 
சண்டித்தன மாமி இவோ 
சனங்கள் எல்லாம் 
பயம் இவோக்கு 
பாவம் இவோ மனுஷன்காறன் 
பயந்த சுபாபக்காரன் 

மாமி ஒரு பார்வை பார்த்தால் 
மனுசன் ஓடி ஒளித்திடுவேர்
ஒரு கிழமை வெளியவரேர் 
ஒதுங்கி போய் இருந்திடுவார் 

மாமி கொஞ்சம் கேழு மாமி
நல்ல மனுசர் சொல்லுறத 
காசு பணம் கூட வரா 
கடைசியில போகும் போது 
கசவார மாமிக்கு ஐயோ இது 
தெரியாம போச்சுதய்யா.

பா.உதயன் ✍️
 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

உறுட்டிப் பிரட்டி
கதை விடுவா
உண்மையை மட்டும்
ஒளித்திடுவா

அடுத்தவரை அப்ரிஸியேட் 
பண்ணுகிற பழக்கமில்லை 
ஆனா உதவு மட்டும் 
கேட்டுப் பிட்டு மறந்திடுவா 

ஊருக்குள்ள இவோவை விட 
அழகு ராணி இல்லைப் போல 
மனதுக்குள்ள ஒரு நினைப்பு 
மகாராணி தான் தான் போல .......!

 

நல்லாயிருக்கு கவிதை உதயகுமார்......! முழுக்கவிதையும் தமிழில், அந்த "அப்ரிஸியேட் " டும் தமிழில் இருந்தால் நல்லாயிருக்கும்.....!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 25/4/2020 at 11:48, suvy said:

நல்லாயிருக்கு கவிதை உதயகுமார்......! முழுக்கவிதையும் தமிழில், அந்த "அப்ரிஸியேட் " டும் தமிழில் இருந்தால் நல்லாயிருக்கும்.....!

நன்றி உங்கள் கருத்துக்கு சுவி.திருத்திக் கொள்ளுகிறேன்.

Link to post
Share on other sites
 • 1 month later...
On 25/4/2020 at 15:01, uthayakumar said:

அடுத்த வீட்டு 
அம்பிகா மாமி 
ஆருக்கும் ஒன்றும் குடா 
கசவார மாமி இவோ
கையை விட்டு 
காசை எடா 

இந்த அம்பிகா மாமி சுமந்திரன் கொண்டுவந்த மாமி  இல்லையே?

😎

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இப்படி பல மாமிக்கள் இருக்கிறார்கள். இப்பவும் .😀
 appreciate (பாராட்டு )

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 16/6/2020 at 10:14, Gowin said:

இந்த அம்பிகா மாமி சுமந்திரன் கொண்டுவந்த மாமி  இல்லையே?

 

இவோ அதிகார மாமி அவோ அரசியல் மாமி ஏதோ ஒரு வகையில் அதிகார மாமிக்கள் தான் Gowin.

13 hours ago, நிலாமதி said:

இப்படி பல மாமிக்கள் இருக்கிறார்கள். இப்பவும் .😀
 appreciate (பாராட்டு )

நன்றி நிலாமதி அக்கா.

 • Like 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • Lesson 12 l Syllabe er l French with Pirakalathan l ASCES......!   📚
  • நல்ல கதை.... இலண்டணில அஸ்கிரியரோடை பியர் அடிச்ச கோஸ்டிகள் இருக்கினம்....😁
  • அடக்குமுறை இனப்பாகுபாடு காட்டுவதில்லை. அதற்கெதிரான போராட்டமும் இனப்பாகுபாகுபாட்டை கடந்து மேலெழும்போது வெற்றிபெறும்.
  • உன்னை நான் பார்த்தது வெண்ணிலா மேடையில்’, ’ராதா காதல் வராதா?’, ‘அவள் ஒரு நவரச நாடகம்’, ‘பொட்டுவைத்த முகமோ’, ‘தேன்சிந்துதே வானம்’, ‘நந்தா நீ என் நிலா’;  - ஏகப்பட்ட வெரைட்டி... எழுபதுகளில் எஸ்.பி.பி. பாடல்கள் உன்னை நான் பார்த்தது வெண்ணிலா மேடையில்’, ’ராதா காதல் வராதா?’, ‘அவள் ஒரு நவரச நாடகம்’, ‘பொட்டுவைத்த முகமோ’, ‘தேன்சிந்துதே வானம்’, ‘நந்தா நீ என் நிலா’;  - ஏகப்பட்ட வெரைட்டி... எழுபதுகளில் எஸ்.பி.பி. பாடல்கள்  ஓவியம்: இளங்கோ   எஸ்.பி.பி... தமிழ் சினிமாவின் இன்னொரு மூன்றெழுத்து மந்திரம். இந்தப் பெயரை உச்சரிக்காத உதடுகளே இல்லை. இவரின் குரலின் கேட்காத செவிகளே இருக்கமுடியாது. சிலர் பேசினால் நன்றாக இருக்கும். சிலர் பாடினால்தான் நன்றாக இருக்கும். ஆனால், எஸ்.பி.பி.யின் குரல், குலோப்ஜாமூன் குரல். ஜீராவின் ஊறிய ஜாமூனைப் போல், அப்படியொரு இனிமையான குரல். பேசினாலும் அப்படித்தான். பாடினாலும் அவ்விதம்தான்! அன்றைக்கெல்லாம் கோயில் விழாக்களென்றால் பாட்டுக்கச்சேரி நிச்சயமாக இடம்பெறும். உள்ளூர் கச்சேரிக்காரர்கள், சினிமாப் பாடல்களை அப்படியே பாடுவார்கள். ஒவ்வொரு பாடகரின் குரலுக்குத் தகுந்தபடி பாடுவதற்கு, இரண்டு மூன்று பாடகர்கள் இருப்பார்கள். எஸ்.பி.பி.யின் பாடலைப் பாடுபவர் எழுந்து மைக் பிடித்தாலே அப்படியொரு கைதட்டலும் விசிலும் பாடுவதற்கு முன்பே அதிரவைக்கும்.     ‘உன்னை நான் பார்த்தது வெண்ணிலா மேடையில்’ என்ற பாடல்தான் அன்றைக்கு பெல்பாட்ட இளைஞர்களின் மவுத்டோன் பாடல். எப்போதும் பாடிக்கொண்டிருப்பார்கள். அந்தப் பாட்டில் ‘பபபபபப்பாபா... பபபபபபபா’ என்றெல்லாம் எஸ்.பி.பி. ஹம்மிங்கில் விளையாடிவிட்டு பாடலைத் தொடருவார். கிறுகிறுத்துப் போனார்கள் ரசிகர்கள். ஜெமினி கணேசனுக்கு ‘இயற்கை என்னும் இளைய கன்னி’ என்று பாடியதுதான் முதல் பாடல். ஆனால் அதற்குள் வந்துவிட்டது எம்ஜிஆருக்காக பாடிய ‘ஆயிரம் நிலவே வா’. அன்றைக்கு டாப் மோஸ்ட் இசையமைப்பாளர்களான கே.வி.மகாதேவனும் எம்.எஸ்.வி.யும் பாடவைத்தார்கள். ‘அவள் ஒரு நவரசநாடகம்’ என்றும் ‘பாடும்போது நான் தென்றல் காற்று’ என்றும் ‘வெற்றிமீது வெற்றி வந்து என்னைச் சேரும்’ என்றும் எம்ஜிஆருக்குப் பாடியது தனி ஸ்டைலாக இருந்தது. ‘நீ எனக்காகப் பாடுற மாதிரி பாடாதே. நீ எப்படிப் பாடுவியோ, அப்படியே பாடு. நான் பாத்துக்கறேன்’ என்று சிவாஜி சொல்ல, ‘பொட்டு வைத்த முகமோ’ என்று பாடினார். ‘நான் அவனில்லை’ படத்தில் ஜெமினிக்கு ‘ராதா காதல் வராதா’ என்ற பாடல் அப்போது அட்டகாசமாக புதுரத்தம் பாய்ந்த பாடலாக அமைந்தது. ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ படத்தில், கமலுக்கு ‘கல்யாணம் கச்சேரி கொண்டாட்டம் எல்லாமே’ என்ற பாடல், மைக் பாடலாக அமைந்தது. இதேபோல், ‘பட்டிக்காட்டு ராஜா’ படத்தில் கமலுக்கு ‘உன்னை நான் பார்த்தது வெண்ணிலா மேடையில்’ என்ற பாடலும் மைக் பாடலாக ஹிட்டடித்தது. விஜயகுமாருக்கு ‘சம்சாரம் என்பது வீணை’ என்ற பாடலும் ‘நந்தா நீ என் நிலா’ என்ற பாடலும் ஏகப்பட்ட சங்கதிகளுடன் அன்றைக்கு எல்லோராலும் முணுமுணுக்கப்பட்ட பாடலாக அமைந்தது. எம்ஜிஆருக்கு ‘அவள் ஒரு நவரசநாடகம்’ தனித்துத் தெரிந்தது. சிவகுமாருக்கு ‘தேன் சிந்துதே வானம்’ முதலான பாடல்கள் அதுவொரு குரலாக த்வனியாக இருந்தன. ’பாடும்போது நான் தென்றல்காற்று’ பாடலில் எம்ஜிஆருக்கு அப்படியொரு ஸ்டைலுடன் பாடியிருந்தார். ’எங்கள்வீட்டு தங்கத்தேரில் எந்த மாதம் திருவிழா’ என்ற பாடலும் அப்படித்தான். ‘அவள் ஒரு தொடர்கதை’யில் ‘கடவுள் அமைத்து வைத்த மேடை’, அப்போது கைதட்டல் பெறுவதற்காகவும் ரசிகர்களைக் கவர்வதற்காகவும் மேடைகளில் பாடப்பட்டது. ‘மன்மத லீலை’யில் ‘ஹலோ மைடியர் ராங்நம்பர்’ என்ற பாடலைக் கேட்டால் கமல் பாடுவது போலவே இருக்கும். ‘நிழல் நிஜமாகிறது’ படத்தில், இரண்டு பாடல்கள்தான். இரண்டுமே எஸ்.பி.பி.யின் தேன் குரலில் வந்தன. ‘கம்பன் ஏமாந்தான்’ பாடலும் ‘இலக்கணம் மாறுமோ’ பாடலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. ஜி.கே.வெங்கடேஷ் இசையில், ‘தொடுவதென்ன தென்றலோ’ பாடலைக் கேட்டுப் பாருங்கள். இளையராஜாவின் இசையில் ‘தாலாட்டு பிள்ளை உண்டு தாலாட்டு’ பாடலும் நம்மை தாலாட்டும். இப்படி எழுபதுகளில், கருப்பு வெள்ளை காலத்தில் ஏராளமான பாடல்களை, அன்றைக்கு உள்ள நடிகர்களுக்குத் தக்கபடி பாடினார். ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தில் கமலுக்கான எல்லாப் பாடல்களும் எஸ்.பி.பி.தான். ‘எங்கேயும் எப்போதும்’, ‘பாரதி கண்ணம்மா’, இனிமை நிறைந்த உலகமிருக்கு’ என்ற பாடல்களெல்லாம் கமல் பாடுகிறாரா எஸ்.பி.பி. பாடுகிறாரா என்று நம்மை குழப்பும். அதில், ரஜினிக்கு, ‘நம்ம ஊரு சிங்காரி சிங்கப்பூரு வந்தாளாம்’ பாடலும் ‘பொல்லாதவன்’ படத்தில், ‘நான் பொல்லாதவன்’ பாடலும் ‘பில்லா’ படத்தின் ‘மை நேம் இஸ் பில்லா’ பாடலும் ரஜினியே பாடுவது போல் பாடி அசத்தியிருப்பார். ‘பட்டினப்பிரவேசம்’ படத்தில் சிவசந்திரனுக்கு ‘வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா’ என்ற பாடலில் எஸ்.பி.பி.யும் கொஞ்சுவார். வயலினும் குழையும். சங்கர் கணேஷின் இசையில் ‘நீயா’ படத்தில், ‘ஒரே ஜீவன்’ பாடலும் ‘நான் கட்டில் மீது கண்டேன்’ பாடலும் சொக்கவைக்கும். யாருக்குப் பாட வேண்டும் என்பதையும் எந்தச் சூழலுக்கான பாடல் என்பதையும் எந்தவிதமான பாவங்களைக் கொண்ட பாடல் என்பதையும் முழுவதுமாக அறிந்து உணர்ந்து அநாயசமாகப் பாடிவிட்டுச் சென்றுவிடுவார் எஸ்.பி.பி. பிறகு அந்தப் பாடலுக்கான காட்சிக்கு நடிகர்கள் அவர் பாடியதற்குத் தக்கபடி நடிக்கவேண்டியிருந்தது. அப்படித்தான்... தேங்காய் சீனிவாசனும் ஜெய்கணேஷும் பாடுகிற பாட்டு. ‘எனக்கொரு காதலி இருக்கின்றாள்’ என்ற பாட்டு. எம்.எஸ்.வி.யும் எஸ்.பி.பி.யும் இணைந்து பாடியிருப்பார்கள். ‘இலக்கணம் மாறுமோ’ பாடலை எஸ்.பி.பி. பாடிய விதத்தைக் கேட்டு சிலிர்த்துக் கண்ணீர் விட்டார் மெல்லிசை மன்னர். அதேபோல், இந்தப் பாடலை பாடி முடித்ததும் எஸ்.பி.பி.யை அப்படியே கட்டியணைத்துக்கொண்டார் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். அப்படி பாலுவை கட்டியணைத்துக்கொள்ள நிலவுலகில் மெல்லிசை மன்னர் காத்துக்கொண்டிருக்கிறாரோ? ‘வான் நிலா நிலா அல்ல என் பாலுவே நிலா’ என்று கவியரசர் அங்கே மாற்றி எழுதித்தருவாரோ? ‘ஒரேநாள் உனைநான் நிலாவில் பார்த்தது’ என்று பாடியதைக் கேட்டு மகிழ்ந்த ரசிகக்கூட்டம் இனி நிலாவைப் பார்க்கும்போதெல்லாம் பாடும்நிலாவை, பாடும் நிலா பாலுவை நினைத்து நெகிழ்ந்துகொண்டே இருக்கப் போகிறோம். கவிஞர்கள் நிலாவை பெண்களுக்கு உவமையாகத்தான் பாடிக்கொண்டிருந்தார்கள். இந்த உலகில், நிலாவை ஆணுக்கு உவமையாக, அடைமொழியாக மாற்றிக்கொண்ட ஒரே பாட்டுடைத்தலைவன்... பாடும் நிலா பாலுவாகத்தான் இருக்கமுடியும்! https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/583513-s-p-balasubramaniam-5.html
  • குரோய்டன் பொலிஸ் நிலையத்தில் ஒரு பொலிஸ் அதிகாரி சுட்டுக் கொலை! தெற்கு லண்டனில் உள்ள குரோய்டன் பொலிஸ் நிலையத்தில், ஒரு பொலிஸ் அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டார். விண்ட்மில் லேனில் உள்ள பொலிஸ் மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவரால் அந்த அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 02:15 பி.எஸ்.டி.யில் சம்பவத்திற்குப் பிறகு வந்த துணை மருத்துவர்களால் அந்த அதிகாரி சம்பவ இடத்தில் சிகிச்சை பெற்றார். பின்னர் அவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். சம்பவ இடத்திலேயே 23வயது இளைஞரை அதிகாரிகள் தடுத்து வைத்தனர். அவரும் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளார். இந்த சம்பவத்தின் போது பொலிஸ் துப்பாக்கிகள் எதுவும் வெளியே கொண்டுச் செல்லப்படவில்லை என மெட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   http://athavannews.com/குரோய்டன்-பொலிஸ்-நிலையத்/  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.