Jump to content

ஆலய வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் கைது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். அத்தியடி பிள்ளையார் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் அத்தியடி பிள்ளயார் ஆலயத்தில் இன்று சதுர்த்தியை முன்னிட்டு பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. 
 
அது தொடர்பில் அறிந்து கொண்ட பொலிஸார், ஆலயத்துக்கு விரைந்து பூஜை வழிபாட்டில் ஈடுபட்டிருந்த 17 பேரை கைது செய்து யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று கடுமையாக எச்சரித்த பின்னர் , பொலிஸ் பிணையில் அவர்களை விடுத்துள்ளனர். 
 
 
 

ஆண்டவா இது தொரியமல் போய்விட்டதே, கோவில் முன் பக்கத்து  வீடுகள் எல்லாம் சொந்தக்காரர் யாரைப் பிடித்தார்களோ? எல்லாம் வயது போனவர்கள் 🙄🙄 

Link to comment
Share on other sites

இதிலொரு பேராசியரும் உள்ளடக்கம் என ஜேவிபி நியூஸ் இணையத்தளத்தில் இருந்தது। பேராசிரியர் போகும்போது மற்றவர்கள் எம்மாத்திரம்। 

Link to comment
Share on other sites

ஆலய வழிபாட்டை அத்தியாவசிய தேவையாக்கி அதில் சமூக இடைவெளியை பேண வைப்பதே சிறந்த தீர்வு. 

Example

http://www.sundaytimes.lk/200426/uploads/89.jpg

 

http://www.sundaytimes.lk/200426/uploads/5W7A3117.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆலயங்கள் என்றில்லை. மக்கள் எங்கெல்லாம் தங்களுக்கு சந்தர்ப்பங்கள் கிடைக்கிறதோ அங்கெல்லாம் ஊரடங்கை மீறுகிறார்கள். கொறோனாத் தொற்றின் பயம் குறைந்துவிட்டது போல ஒரு உணர்வு. 🤥

சில நாட்களுக்கு முன்னர் எனது உறவினருடன் தொலைபேசியில் கதைத்துக் கொண்டிருக்கும் போது அவர் எனது உரையாடலை இடைநிறுத்தி தனது சகோதரனுக்குக்  கூறுகிறார் "" ........ (பெயரைக் கூறி) பீல்ட் பைக் சத்தம் கேக்கிறது உள்ளுக்கு வா"" ☹️

நான் கேட்டேன் "நீங்களும் கேபியூ நேரம் வெளியில போறனீங்களோ" என்று. 🤥

அதற்கு அவர் கூறினார் " இஞ்ச எல்லாரும்தான் வெளியில போறவை. கொஞ்சம் கவனமாயிருந்தால் சரி"" 🤔

ஒருத்தருக்கும் கொறோனாவுக்குப் பயமில்ல. ஆமிக்காறன்ர அடிக்குத்தான் பயம். ☹️

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, உடையார் said:

யாழ். அத்தியடி பிள்ளையார் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

முதலில் ஆண்டவனைக் கைது செய்திருந்தால் பிரச்சினை வந்திருக்கது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Vankalayan said:

இதிலொரு பேராசியரும் உள்ளடக்கம் என ஜேவிபி நியூஸ் இணையத்தளத்தில் இருந்தது। பேராசிரியர் போகும்போது மற்றவர்கள் எம்மாத்திரம்। 

முன்னால் பேராசிரியர்😃 நல்லா வயது போயிட்டுது; இவரைபோல் இன்னும் சில பெரியவர்கள்

யாழில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் கைது!

யாழ்.அத்தியடி பிள்ளையார் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் அத்தியடி பிள்ளயார் ஆலயத்தில் நேற்று சதுர்த்தியை முன்னிட்டு பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.

அது தொடர்பக்க அறிந்து கொண்ட பொலிசார் ஆலயத்திற்கு விரைந்து பூஜை வழிபாட்டில் ஈடுபட்டிருந்த 17 பேரை கைது செய்து யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று கடுமையாக எச்சரித்த பின்னர், பொலிஸ் பிணையில் விடுத்துள்ளனர்

 

http://athavannews.com/யாழில்-வழிபாட்டில்-ஈடுபட/

Link to comment
Share on other sites

இவ்வாறான மடைத்தனமான வேலைகளைச் செய்வோர்கள் எங்கும் இருப்பார்கள். நிலமை  சரியாகும் வரை இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து மக்களை பாதுகாப்பதையே அரசாங்கம் செய்ய வேண்டும். 

இந்த வேளையிலும் வழிபாடு நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் ஒரு விடயத்தை எண்ணிப் பார்கக வேண்டும். உலகில் வாழும் உயிரினங்களில் கடவுளைப் படைத்து பாதுகாத்து அதை வழிபடுவோர் மனிதர்கள் மட்டுமே. அதனால் மனித இனம் அழிந்தால் கடவுளை காப்பாறுவது முடியாமல் போய்விடும். எனவே அவர்களது கடவுளை காப்பாற்றவெனினும்   இவ்வாறான மடைத்தனங்களை தவிர்க்க வேண்டும். 

Link to comment
Share on other sites

33 minutes ago, உடையார் said:

முன்னால் பேராசிரியர்😃 நல்லா வயது போயிட்டுது; இவரைபோல் இன்னும் சில பெரியவர்கள்

முன்பு அரசன் ஆண்ட காலங்களில் வயது போய்விட்டால் அரசனும் காட்டுக்குப் போய்விடுவான். இன்று ஆக்கிரமிப்பாளன் ஆட்சி, கூடவே கொரோனா ஆக்கிரமிப்பாளனின் ஆட்சியும்.... வயதுபோனவர்கள் எங்கு போவார்கள்? காட்டுக்கும் போக முடியாது, வீட்டிலும் தொணதொணப்பு என்னதான் செய்ய முடியும்.😩  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.