Jump to content

கொரோனா வைரஸ் முடக்கத்தின் போது நீங்கள் அதிகம் சாப்பிடுகிறீர்களா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா வைரஸ் முடக்கத்தின் போது நீங்கள் அதிகம் சாப்பிடுகிறீர்களா?

விபேக் வெனிமா பிபிசி
மன அழுத்தம்Getty Images

"மன அழுத்தம் மற்றும் சலிப்பின் காரணமாக நாம் அதிகம் சாப்பிடுவோம். செய்வதற்கு வேறொன்றும் இல்லை", என்கிறார் இங்கிலாந்தின் ஷெஃப்ஃபீல்ட் நகரில் இருக்கும் 19 வயதான க்ளோ டைலர் வித்தம். 

ஊரடங்கின் பேரில் வீட்டுக்குள்ளே இருப்பதால் நம்மில் பலர், அதிகம் நோகாமல் கிடைக்கும் உணவை சாப்பிடுகிறோம்.

அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு செல்லும்போது புதிதாக சமைக்கப்பட்ட உணவை வாங்குவதற்கு பதில், டைலர் வித்தம் வீட்டில் இருக்கும் மீத உணவை மீண்டும் சமைக்கிறார். அதற்கான செய்முறையை அவர் டிக்டாக் மூலம் கண்டறிகிறார்.

எனக்கு நீரழிவு நோய் இருக்கின்றபோதும் சாக்லெட் மற்றும் பிஸ்கெட் போன்றவை சாப்பிடுவது எனக்கு எளிதாக உள்ளது. எனது மனநிலையை அது சரி செய்கிறது என்கிறார் 43 வயதான ஆண்டி லோய்ட். அவருடைய இந்த எண்ணத்தினால் அவர் எடை கூடி விட்டபோதிலும் அதை அவர் இப்போது கண்டுகொள்ளவில்லை.

இந்த நேரத்தில் நான் எப்படி தோற்றமளிக்கிறேன் என்பதைக் காட்டிலும் எப்படி இந்த சூழ்நிலையை எதிர்கொள்கிறேன் என்பதே எனக்கு முக்கியம். எல்லாம் சரியான பிறகு மீண்டும் உடற்பயிற்சியில் செய்யத்தொடங்கலாம் என்கிறார் ஆண்டி.

ஆண்டி லோய்ட்ANDY LLOYD

பள்ளியில் பகுதிநேர ஆசிரியராக பணிபுரியும் 24 வயதான எமி ஹாட்ஜ்சன், தற்போது வீட்டில் பணி எதுவும் இல்லாமல் இருக்கிறார். நான் இப்போதெல்லாம் அடிக்கடி ஃப்ரிட்ஜ் அல்லது உணவு வைத்திருக்கும் இடத்தில் சென்று சாப்பிட என்ன இருக்கிறது என்று பார்க்கிறேன். என்ன செய்வதென்று தெரியாமல் அப்படி செய்கிறேன். ஒரு வாரத்தில் 1.88 கிலோ வரை எடை கூடிவிட்டேன். எப்படி என எனக்கே தெரியவில்லை என்கிறார் அவர்.

எமி ஹாட்ஜ்சன்AMY HODGSON

கடந்த வருடம் 33 கிலோ குறைத்தார் எமி. மறுபடியும் அவர் எடை ஏற விரும்பவில்லை. ஆனால் காலை 10 மணியளவில் அதிகம் திண்பண்டங்களை சாப்பிடுவதை அவர் தற்போது உடற்பயிற்சி செய்யும்போதுதான் அவரே உணர்கிறார். 

இப்போது அவர் குடும்பத்திற்கு உணவு சமைக்கிறார். இவ்வாறு சமைப்பது உங்களுக்கு ஒரு நம்பிக்கை அளிக்கிறது. 4.30 மணி ஆகும்போது அவர்களுக்கு தேநீர் தர வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது, என்கிறார் எமி.

நாம் உண்மையில் அதிகம் சாப்பிடுகிறோமா?

கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், முடக்கத்தின்போது மக்களின் வாழ்க்கை முறை எப்படி இருக்கிறது என ஆராயத்தொடங்கியுள்ளனர்.

இந்த சூழலை விடுமுறை நாட்களோடுதான் ஒப்பிடுகிறேன். அந்த நேரத்தில் நாம் விளைவுகளைப் பற்றி எதுவும் சிந்திக்காமல் சில செயல்களை செய்துவிட்டு இது விடுமுறை நாள் எனக் கூறுவோம் என்கிறார் நார்விச் மருத்துவ கல்லூரியின் பேராசிரியர் ஆனி-மேரி மினிஹென். அவர் சாப்பிடும் முறைக்கும் சத்துக்களுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

 

"இப்போது நம் உலகத்தில் ஏதேதோ நடந்து கொண்டிருக்கிறது. இப்போது என்னுடைய நடைமுறையை பற்றி நான் கவலைக்கொள்ளப்போவதில்லை. என எண்ணலாம். மக்கள் தவறான நடைமுறையை பின்பற்ற அனைத்து விதமான சாக்கும் சொல்வார்கள். குறிப்பாக கோவிட்-19 இந்த முடக்கத்தில் அதற்கு அதிக வாய்ப்பு உண்டு" என்கிறார் பேராசிரியர் ஆனி. 

மன அழுத்தத்தில் சாப்பிடுவதுGetty Images

இந்த ஆராய்ச்சிக்கான முடிவுக்கு அவ்வளவு சீக்கிரமாக வந்துவிட முடியாது என்றாலும் மக்கள் சில ஆரோக்கியமற்ற வழிமுறைகளை பின்பற்றுவது, தவறான உணவை அதிகமாக சாப்பிடுவது, மற்றும் குடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது குறித்த ஆதாரங்களை வைத்துள்ளார் பேராசிரியர் ஆனி-மேரி.

அதிகமாக சாப்பிடுவது எப்படி தவறானதோ அதுபோல கம்மியாக சாப்பிடுவதும் தவறானது என குறிப்பிட்டுள்ளார் ஆனி மேரி. குறிப்பாக வயனாதவர்கள் சத்துக்குறைவாக இருப்பது மிகப்பெரிய பிரச்சனை ஆகும்.

இந்த நடவடிக்கைகளுக்கு சில மனரீதியான காரணங்களும் உள்ளன. உடல் அழுத்தத்தில் உள்ள போது கார்டிசொல் என்ற ஒரு வேதிப்பொருள் வெளியாகும். இது சர்க்கரை மற்றும் கொழுப்பு நிறைந்த பொருட்களை அதிகம் சாப்பிட தூண்டும்.

இதிலிருந்து எவ்வாறு தப்பிக்கலாம்?

வழக்கமான உணவு முறை என்பது மிகவும் முக்கியம். நாளுக்கு மூன்று முறை சாப்பிடுவதை வழக்கமாக கொள்ள வேண்டும் என்று உணவியல் ஆலோசகர் க்ளேர் தாண்டன் - வுட் கூறியுள்ளார்.

இரண்டு முறை திண்பண்டங்கள் சாப்பிடலாம். ஆனால் அதன் பிறகு கொஞ்சமாக சாப்பாடு சாப்பிட வேண்டும். 

நொறுக்குத்தீனி திண்பதுதான் உண்மையான பிரச்சனை என்றால் ஒரு பாத்திரத்தில் போட்டு வைத்து கொள்ளலாம். மதிய உணவுக்கு முன்பு அனைத்தையும் சாப்பிட்டுவிட்டாலும் சரிதான். மீதம் எதுவும் இருக்காது.

நம்முடைய புது சாப்பிடும் வழக்கம் எதுவாக இருந்தாலும் நம்மைப்பற்றி நாம் தவறாக நினைக்கக்கூடாது என அவர் விளக்கினார்.

மன அழுத்தத்தில் சாப்பிடுவதுGetty Images

தவறான சிந்தனைகள் வருவதை தவிர்க்க வேண்டும், ஏனென்றால் நாம் கடுமையான சூழலில் இருக்கிறோம். சிறிது வித்தியாசமாக சாப்பிடுகிறோம். இதைப்பற்றி தவறாக நினைக்கக் கூடாது என்கிறார் க்ளேர்.

சிலருக்கு வேறு சில பிரச்சனைகள் வருகிறது.

காரா லிசெட்டுக்கு சாப்பிடும் பழக்கத்தில் குறைபாடு உள்ளது. இந்த முடக்கத்தின்போது அவர் சிகிச்சை மேற்கொள்ளும் மையம் மூடப்பட்டிருக்கிறது. 

எனவே அவர் குறைவாக சாப்பிடத் தொடங்கிவிட்டார். அதாவது அவரின் குறைபாடு திரும்ப வர தொடங்கிவிட்டது.

காரா லிசெட்CARA LISETTE

இந்த உலகில் நடப்பதை நான் கட்டுப்படுத்த முடியாது ஆனால் நான் சாப்பிடுவதை கட்டுப்படுத்த முடியும் என எண்ணினேன் என்றார். காரா அவருடைய குறைபாடு உள்ள மற்ற நபர்களிடம் பேசி வீட்டிலிருந்தபடியே மீண்டும் பழைய நிலைக்கு திரும்பினார்.

தங்கள் கட்டுப்பாட்டுக்குள் தாங்கள் இல்லை என நினைப்பது சாப்பிடும் பழக்கத்தில் குறைபாடு இருப்பவர்களுக்கு மிகப் பெரிய பிரச்சனையாகும் என்கிறார் மனநல மருத்துவர் பெர்னி ரிட்.

நம்மை சுற்றியுள்ள சூழலில் நம் கட்டுப்பாடு இல்லையென்று நாம் நினைக்கிறோம் என்கிறார் ரிட். இந்த சூழலில் சாப்பிடும் பழக்கத்தில் குறைபாடு இருப்பவர்கள் தாங்கள் சாப்பிடுவதில் இன்னும் கட்டுப்பாட்டுடன் இருப்பார்கள். இது ஒரு கற்பனையான கட்டுபாடு என்றார் அவர்.

குடும்பத்துடன் சாப்பிடுவதுGetty Images

முடக்கத்தின்போது இந்த குறைபாடு இருப்பவர்கள் அதிகமாவதை ரிட் கண்டறிகிறார். யாரும் அவர்கள் குடும்பத்தினரிடமிருந்து தங்கள் குறைபாட்டை மறைக்க இயலாது. பெற்றோர்கள் அதிகம் உடற்பயிற்சி செய்வதிலிருந்து குழந்தைகளும் குழந்தைகள் அதிகம் சாப்பிடாமல் இருப்பதிலிருந்து பெற்றோர்களும் இதை கண்டறியலாம் என்கிறார் ரிட்.

இந்த சூழலில் வரும் மன வருத்தம் காரணமாகதான் நோய் அறிகுறி மீண்டும் வருவதாக ஒருவர் ரிட்டிடம் கூறியுள்ளார்.

முடக்கத்தின் பலன்கள்

முடக்கத்தின் போது அனைத்தும் தவறாகவே நடக்கிறதா என்றால் இல்லை. க்ளேர் தாண்டன் - வுட் இப்போது அவர் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக பொழுதைக் களிக்கிறார்.

இந்த முடக்கத்தின் ஒரு பெரிய பலன் என்னவென்றால் அனைவரும் குடும்பமாக உட்கார்ந்து சாப்பிடுகின்றனர் என்கிறார் ரிட்.
 

https://www.bbc.com/tamil/science-52425770

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரெடிமேட் உணவுகள் இப்போது இல்லை அவை கூடின கலோரியை கொண்டு இருப்பவை அவசர டின் சாப்பாடுகளும் இல்லை ஆனால் கூட உணவு எடுப்பது போன்ற பிரமை ஆனால் நிறை இரண்டுகிலோக்கு மேல் காணாமல் போயிருக்கு இனி வரும் ஏழு நாட்களும் மழை யும்  மப்பும் கார்டன் பக்கம் போவது குறைந்தால் நிறை கூடுமோ தெரியலை .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.