Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

வீட்டு தோட்டம்

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

கறிவேற்பிலை நல்லா செழிப்பா வளர்ந்திருக்கு. இலண்டணில வளருதில்லைஎன்று புலம்புவார்கள். சிலர் ஊரிலிருந்து மண் கொண்டு வந்து வளர்பதாக சொல்வார்கள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

கறிவேற்பிலை நல்லா செழிப்பா வளர்ந்திருக்கு. இலண்டணில வளருதில்லைஎன்று புலம்புவார்கள். சிலர் ஊரிலிருந்து மண் கொண்டு வந்து வளர்பதாக சொல்வார்கள்.

எண்டாலும் வெய்யில் நாட்டிலை வளர்ர மாதிரி வராது. 
மணம் குணம் எல்லாம் அங்கத்தையான் மாதிரி வரும் எண்டுறியள்? 😎

Link to comment
Share on other sites

19 hours ago, ஈழப்பிரியன் said:

இடமில்லை என்று சொல்லிப் போட்டு இவ்வளவு பயிர்கள் வைத்திருக்கிறீர்கள்.
எல்லா பயிர்களும் செழிப்பாக இருக்கிறது.கவனமாக பாருங்கள்.இந்த தோட்டம் என்று தொடங்கினால் நீண்ட நாள் விடுமுறையில் எங்கும் போக முடியாது.திரும்பி வர எல்லாம் எரிந்துவிடும்.
மிளகாயைப் பார்க்க செம்மண் தோட்டங்களில் பார்த்த மாதிரி இருக்கிறது.

தோட்டம் மனதுக்கு சந்தோசத்தை தருவதால் ஒவ்வொருவருடமும் எப்படியாவது செய்துவிடுவேன். Winter நேரத்தில் ஒரு சிலது மிஞ்சும் அல்லது எல்லாவற்றயும் கொஞ்ச Pots இல் போடு வீட்டுக்குள் வைத்து ஒரு மாதிரி காப்பாற்றி அடுத்தமுறைக்கு நடுவது என்று போகிறது. சில நல்ல நண்பர்கள் இருப்பதால் ஒரு மாத லீவில் போனாலும் தண்ணீர் ஊற்றி நாயையும் பார்க்க முடிகிறது. இரண்டு  Cayenne pepper மிளகாய் கண்டுகள் இருந்தாலே போதும். நிறய காய்க்கும். கருவேப்பிலை அம்மா 11 வாரங்களுக்கு முன் நட்டது (pots இல் தான்). இன்னும் நன்றாக வளருது.spacer.png

Edited by nilmini
 • Like 1
Link to comment
Share on other sites

19 hours ago, தமிழ் சிறி said:

வாவ்.... அழகிய வீட்டுத் தோட்டம், நில்மினி. 😍
நீங்கள்... சர்வ வல்லமை பொருந்திய, கெட்டிக்காரி. :)

நன்றி சிறி. அப்பா தோட்டம் செய்வதில் மிகவும் ஆர்வமாக இருந்தார். மாத்தளையில் தான் அவரது Dream house ஐ கட்டி வீட்டை சுற்றிவர அழகான தோட்டம் அமைத்திருந்தார். நான்தான் அவருக்கு assistant . அப்ப பழகியதுதான். அப்பா மாத்தளை வீட்டில் தோட்டம் செய்யும் படத்தை இத்துடன் இணைக்கிறேன் (1974) . பல நேரங்களில் மாத்தளையை விட்டு நாங்கள் கொழும்பு போயிருக்கக்கூடாதோ என்று யோசிப்பேன். முன் தோட்டத்தில் Fountain குளம் கட்டி அல்லி பூக்கள், மீன்கள் எல்லாம் இருந்தன. Grapes பந்தல், Apple , தோடை , மா , கொய்யா  என்று இல்லாத பழங்களே இல்லை. மரக்கறி எல்லாம் season இக்கு தகுந்தமாதிரி போடுவார். மாத்தளை இந்து மகா வித்தியாலய அதிபராக இருந்ததால் நிறய மாணவர்கள் வீட்டுக்கு வந்து உதவி செய்வார்கள். அப்பா மலையக மக்கள் கல்வி, நலன் மீது மிகவும் அர்வம் கொண்டிருந்தார். அந்தப்படத்தையும் இணைக்கிறேன்) . ரோஸ் செடிகள் எல்லா நிறமும் வளர்த்து கடைசியில் யாரோ பச்சை ரோஸும் இருக்கென்று சொல்லி அதயும் கொண்டுவந்து சேர்த்துவிட்டார். அண்மையில் எனது அமெரிக்க நண்பர்கள் Green rose என்று கதைக்கும்போது நான் பெருமையாக நாங்கள் 1970 களிலேயே Green rose வைத்திருந்தோம் என்று சொன்னேன். அப்பாவுக்கு அவ்வளவு ஒரு ஆர்வம் . எல்லாம் கனவு மாதிரி இப்ப இருக்கு. அப்பாவை பற்றி நிறய விடயங்கள் பகிர இருக்கு. நீர் அறியாதவற்றை அறிவதோடு எனது மற்ற யாழ் கள உறுப்பினர்களும் வாசிப்பார்களே என்றுதான் இந்த பதிவில் அப்பாவை பற்றி சிறிது எழுதினேன். அப்பாவிடம் மிகப்பெரிய ஆளுமை இருந்தது. இன்னும் எழுதுகிறேன். மூன்றவது படத்தில் அமுதன் அண்ணாமலை இருக்கிறார் (அப்பாவின் மாணவன்)

spacer.png(

spacer.png

Inaugural-ceremony-for-the-world-vision-

Edited by nilmini
 • Like 1
Link to comment
Share on other sites

5 hours ago, Nathamuni said:

கறிவேற்பிலை நல்லா செழிப்பா வளர்ந்திருக்கு. இலண்டணில வளருதில்லைஎன்று புலம்புவார்கள். சிலர் ஊரிலிருந்து மண் கொண்டு வந்து வளர்பதாக சொல்வார்கள்.

ஆரம்பத்தில் வளர்த்தெடுப்பது கஸ்டம்தான். தங்கை Long island இல் இருக்கும்போது நானும் தம்பியும் ஒரு 50 கண்டாவது கொண்டுபோய் நட்டிருப்போம் (10 வருடங்களாக) ஒன்றும் தப்பவில்லை. இப்பொ Tennessee  இக்கு மாறின பின் ஒரு வருடத்தில் 3 பெரிய கண்கள் வளர்ந்து விட்டன. இடத்துக்கிடம் மாறுபடும். இது 11 வருட கண்டு. நிறய குட்டிகள் போடு நிக்குது. இங்கு இருப்பவர்கள் மாற்று பார்சல் இல் எல்லாம் 100 கன்றுகளுக்கு மேல் அனுப்பி உள்ளேன். இந்த இலைகள் நல்ல வாசம் கூட என்றும்  சொல்கிறார்கள். Tomato plant feed  மற்றும் compost போட்டால் நல்லா வளரும். குளிர் காலங்களில் வீட்டுக்குள் வைக்க வேண்டும் 

52 minutes ago, குமாரசாமி said:

எண்டாலும் வெய்யில் நாட்டிலை வளர்ர மாதிரி வராது. 
மணம் குணம் எல்லாம் அங்கத்தையான் மாதிரி வரும் எண்டுறியள்? 😎

ஒவ்வொரு சாதியை பொறுத்தது என்று நினைக்கிறன். இந்தியன் கடையில் வாங்கும் சில கருவேப்பிலை ஒரு மணமுமே இருக்காது. அம்மா மாமி எல்லோரும் இந்த கருவேப்பிலை ஊர் சாதி போல நல்ல வாசம் என்று சொன்னார்கள். அதனால்தான் எல்லோருக்கும் நான் தான் கண்டு சப்ளை 

ஆனால் நீங்கள் சொல்வது சரி. மீன்கள் வித்தியாசமான மணம்  ருசி இருப்பது கடல் நீரின் உப்புத்தன்மை (Salinity ) வெப்பம் மற்றும் கனியப்பொருட்கள். அதே மாதிரிதான் தாவரங்களுக்கும். ஆனால் இந்த கருவேப்பிலை நல்ல வாசமாகத்தான் இருக்கு. வல்லாரை இரண்டு சாதி, பொன்னாங்காணி, மிளகாய் எல்லாமே ஊரில் வாங்குவது போலத்தான் இருக்குது 

இங்கு Florida gulf பகுதியில் பிடிக்கும் மீன்களும் யாழ்ப்பாண மீன்கள் மாதிரியே இருக்கு. ஒருமுறை மகன் நண்பர்களுடன் சென்று விளைமீன் பிடித்து வந்தார். அம்மா சொன்னா யாழ்பாணத்து மீனிலும் பார்க்க நன்றாக இருந்தது என்று 

Edited by nilmini
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அழகாக இருக்கின்றது உங்கள் தோட்டம், ஈழப்பிரியன் சொன்ன மாதிரி, கொஞ்சமென்று பார்த்தால் தேவையான எல்லாமிருக்கு

Link to comment
Share on other sites

1 hour ago, ஈழப்பிரியன் said:

04DF0BD1-B733-4FD3-91D6-63198A9BA1B8.jpg

94-DC16-B0-F8-D0-4-CE0-AD7-D-55-D59-B041

இந்த படத்தை தரவேற்றியபோது உங்களுது படம் எனக்கு ஞாபகம் வந்தது அண்ணா. ஒரே போஸ் என்று அப்பவே நினைத்தேன். 🤣

2 hours ago, உடையார் said:

அழகாக இருக்கின்றது உங்கள் தோட்டம், ஈழப்பிரியன் சொன்ன மாதிரி, கொஞ்சமென்று பார்த்தால் தேவையான எல்லாமிருக்கு

நன்றி உடையார். பொன்னாங்காணி , கருவேப்பிலை, வல்லாரை, பச்சை மிளகாய் தான் எனக்கு விருப்பமான செடிகள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nilmini said:

நன்றி சிறி. அப்பா தோட்டம் செய்வதில் மிகவும் ஆர்வமாக இருந்தார். மாத்தளையில் தான் அவரது Dream house ஐ கட்டி வீட்டை சுற்றிவர அழகான தோட்டம் அமைத்திருந்தார். நான்தான் அவருக்கு assistant . அப்ப பழகியதுதான். அப்பா மாத்தளை வீட்டில் தோட்டம் செய்யும் படத்தை இத்துடன் இணைக்கிறேன் (1974) . பல நேரங்களில் மாத்தளையை விட்டு நாங்கள் கொழும்பு போயிருக்கக்கூடாதோ என்று யோசிப்பேன். முன் தோட்டத்தில் Fountain குளம் கட்டி அல்லி பூக்கள், மீன்கள் எல்லாம் இருந்தன. Grapes பந்தல், Apple , தோடை , மா , கொய்யா  என்று இல்லாத பழங்களே இல்லை. மரக்கறி எல்லாம் season இக்கு தகுந்தமாதிரி போடுவார். மாத்தளை இந்து மகா வித்தியாலய அதிபராக இருந்ததால் நிறய மாணவர்கள் வீட்டுக்கு வந்து உதவி செய்வார்கள். அப்பா மலையக மக்கள் கல்வி, நலன் மீது மிகவும் அர்வம் கொண்டிருந்தார். அந்தப்படத்தையும் இணைக்கிறேன்) . ரோஸ் செடிகள் எல்லா நிறமும் வளர்த்து கடைசியில் யாரோ பச்சை ரோஸும் இருக்கென்று சொல்லி அதயும் கொண்டுவந்து சேர்த்துவிட்டார். அண்மையில் எனது அமெரிக்க நண்பர்கள் Green rose என்று கதைக்கும்போது நான் பெருமையாக நாங்கள் 1970 களிலேயே Green rose வைத்திருந்தோம் என்று சொன்னேன். அப்பாவுக்கு அவ்வளவு ஒரு ஆர்வம் . எல்லாம் கனவு மாதிரி இப்ப இருக்கு. அப்பாவை பற்றி நிறய விடயங்கள் பகிர இருக்கு. நீர் அறியாதவற்றை அறிவதோடு எனது மற்ற யாழ் கள உறுப்பினர்களும் வாசிப்பார்களே என்றுதான் இந்த பதிவில் அப்பாவை பற்றி சிறிது எழுதினேன். அப்பாவிடம் மிகப்பெரிய ஆளுமை இருந்தது. இன்னும் எழுதுகிறேன். மூன்றவது படத்தில் அமுதன் அண்ணாமலை இருக்கிறார் (அப்பாவின் மாணவன்)

நில்மினி.... உங்களது அப்பா,  எல்லோருக்கும் உதவி செய்யும் மனப்பான்மை உள்ளவர்  என்று வீட்டில் கதைப்பார்கள். நீங்கள் சிங்களப்  பகுதியில் வாழ்ந்ததால், அவரை நேரில் சந்தித்த நினைவு இல்லை.
சிலவேளை.. எனது சிறிய வயதில், கண்டு இருக்கலாம்.

உங்களது பெரியப்பாமாரை (நடராஜா மாமா, கெங்கநாதன் மாமா) ஆகியோரை நன்கு தெரியும்.
கிழமைக்கு ஒரு முறையாவது காண்பேன். வயது வித்தியாசம் பார்க்காமல்... சிநேகிதர் மாதிரி,
பகிடி விட்டு கதைப்பார்கள். அவர்கள் வேலை செய்த இடங்களில்.... பல தடவை சென்று,
அவர்களின் உதவியை பெற்று இருக்கின்றேன். :)

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

04DF0BD1-B733-4FD3-91D6-63198A9BA1B8.jpg

94-DC16-B0-F8-D0-4-CE0-AD7-D-55-D59-B041

இரண்டு படத்தையும்... ஒப்பிட்டு பார்க்கும் போது, நன்றாக உள்ளது. :)
அமெரிக்காவிலும்,   மாத்தளையிலும்.... ஒரே மாதிரியான மண்வெட்டிதான் பாவிக்கிறார்கள். :grin:

இங்கே.... கீழே உள்ள பொருளால்தான்(Spaten) மண்ணை, பதப் படுத்துவார்கள். 

Spaten Test | selbst.de

Edited by தமிழ் சிறி
 • Haha 1
Link to comment
Share on other sites

On 17/6/2020 at 22:50, தமிழ் சிறி said:

நில்மினி.... உங்களது அப்பா,  எல்லோருக்கும் உதவி செய்யும் மனப்பான்மை உள்ளவர்  என்று வீட்டில் கதைப்பார்கள். நீங்கள் சிங்களப்  பகுதியில் வாழ்ந்ததால், அவரை நேரில் சந்தித்த நினைவு இல்லை.
சிலவேளை.. எனது சிறிய வயதில், கண்டு இருக்கலாம்.

உங்களது பெரியப்பாமாரை (நடராஜா மாமா, கெங்கநாதன் மாமா) ஆகியோரை நன்கு தெரியும்.
கிழமைக்கு ஒரு முறையாவது காண்பேன். வயது வித்தியாசம் பார்க்காமல்... சிநேகிதர் மாதிரி,
பகிடி விட்டு கதைப்பார்கள். அவர்கள் வேலை செய்த இடங்களில்.... பல தடவை சென்று,
அவர்களின் உதவியை பெற்று இருக்கின்றேன். :)

உண்மைதான் சிறி. நாங்கள் யாழ்ப்பாணத்தில் இருக்காததால் குறிப்பாக அப்பாவின் உறவினரோடு பழக சந்தர்ப்பம் இருக்கவில்லை .நடராஜா, கெங்கநாதன் இருவரும் சித்தப்பா மார். அப்பத்தான் எல்லோருக்கும் மூப்பு. மூன்று பேருமே எல்லோருடனும் நல்லா பழகுவார்கள். 

Link to comment
Share on other sites

 • 4 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

என் மாடி தோட்டத்தால் எனக்கு கிடைத்த பயன்கள்

On 18/6/2020 at 06:37, nilmini said:

நன்றி சிறி. அப்பா தோட்டம் செய்வதில் மிகவும் ஆர்வமாக இருந்தார். மாத்தளையில் தான் அவரது Dream house ஐ கட்டி வீட்டை சுற்றிவர அழகான தோட்டம் அமைத்திருந்தார். நான்தான் அவருக்கு assistant . அப்ப பழகியதுதான். அப்பா மாத்தளை வீட்டில் தோட்டம் செய்யும் படத்தை இத்துடன் இணைக்கிறேன் (1974) . பல நேரங்களில் மாத்தளையை விட்டு நாங்கள் கொழும்பு போயிருக்கக்கூடாதோ என்று யோசிப்பேன். முன் தோட்டத்தில் Fountain குளம் கட்டி அல்லி பூக்கள், மீன்கள் எல்லாம் இருந்தன. Grapes பந்தல், Apple , தோடை , மா , கொய்யா  என்று இல்லாத பழங்களே இல்லை. மரக்கறி எல்லாம் season இக்கு தகுந்தமாதிரி போடுவார். மாத்தளை இந்து மகா வித்தியாலய அதிபராக இருந்ததால் நிறய மாணவர்கள் வீட்டுக்கு வந்து உதவி செய்வார்கள். அப்பா மலையக மக்கள் கல்வி, நலன் மீது மிகவும் அர்வம் கொண்டிருந்தார். அந்தப்படத்தையும் இணைக்கிறேன்) . ரோஸ் செடிகள் எல்லா நிறமும் வளர்த்து கடைசியில் யாரோ பச்சை ரோஸும் இருக்கென்று சொல்லி அதயும் கொண்டுவந்து சேர்த்துவிட்டார். அண்மையில் எனது அமெரிக்க நண்பர்கள் Green rose என்று கதைக்கும்போது நான் பெருமையாக நாங்கள் 1970 களிலேயே Green rose வைத்திருந்தோம் என்று சொன்னேன். அப்பாவுக்கு அவ்வளவு ஒரு ஆர்வம் . எல்லாம் கனவு மாதிரி இப்ப இருக்கு. அப்பாவை பற்றி நிறய விடயங்கள் பகிர இருக்கு. நீர் அறியாதவற்றை அறிவதோடு எனது மற்ற யாழ் கள உறுப்பினர்களும் வாசிப்பார்களே என்றுதான் இந்த பதிவில் அப்பாவை பற்றி சிறிது எழுதினேன். அப்பாவிடம் மிகப்பெரிய ஆளுமை இருந்தது. இன்னும் எழுதுகிறேன். மூன்றவது படத்தில் அமுதன் அண்ணாமலை இருக்கிறார் (அப்பாவின் மாணவன்)

spacer.png(

spacer.png

Inaugural-ceremony-for-the-world-vision-

இன்றுதான் பார்த்தேன், நன்றி பகிர்வுக்கு, பழைய படங்களை பார்க்கும் போது அந்த காலத்திற்க்கோ போய் வந்த மாதிரி ஒரு உணர்வு இருக்கும் 

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • 3 weeks later...

சிறிய இடத்தில் அழகாக அமைக்கப்பட்ட ஒரு தோட்டம்...வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

பெண்களுக்கான தற்சார்பு பொருளாதார அறிமுக பயிற்சி நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை சிவகாசி

Link to comment
Share on other sites

வீட்டுத்தோட்டங்கள் எல்லாவற்றையும பார்க்க சந்தோசமாக இருக்கிறது.

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.