Jump to content

லண்டனில் பிள்ளைகளைக் கொன்றவர் வடமராட்சிக் கிழக்கைச் சேர்ந்தவர்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

லண்டலில் குடும்ப பிரச்சினை காரணமாக சொந்த பிள்ளைகள் இருவரை கொலை செய்துவிட்டு இலங்கை தமிழர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வடமராட்சிக் கிழக்கு மாமுனையை சொந்த இடமாகக் கொண்டா நிதி என அறியப்படும் நிதின்குமார் என்பவர் பிரித்தானியா இல்ஃபோர்ட் பகுதியில் வசித்து வந்தவர்.

இவர் தமது பிள்ளைகள் இருவரையும் கூரான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு, தாமும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

ஞாயிறன்று மாலை சுமார் உள்ளூர் நேரப்படி 4.30 மணியளவில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. தகவல் அறிந்து பொலிசார் சுமார் 5.30 மணியளவில் சம்பவப்பகுதிக்கு சென்றுள்ளனர்.

Ilford பகுதியில் உள்ள குடியிருப்பில் இருந்து அலறல் சத்தத்துடன் வெளியேறிய நிதின்குமாரின் மனைவி,

எனது பிள்ளைகள், யாராவது வந்து காப்பாற்றுங்கள் என சாலையில் உதவி கோரியது அக்கம்பக்கத்தினரை பொலிசாரை நாட தூண்டியுள்ளது.

நிதின்குமார் தமது குடியிருப்பின் அருகாமையில் அமைந்துள்ள 54 வயதான சண்முகதேவதுரை என்பவரது கடையிலேயே பணியாற்றி வந்துள்ளார்.

நிதின்குமார் தொடர்பில் சண்முகதேவதுரை தெரிவிக்கையில், நிதி ஒரு அற்புதமான மனிதர், விசுவாசமான தொழிலாளி.

அவர் காலை 9 மணிக்கு கடையைத் திறந்தார், மிகவும் சாதாரணமாகவே வேலை செய்தார், அவர் குடியிருப்புக்கு புறப்படுவதற்கு சற்று முன்பு எனக்கு தேநீர் தயாரித்து தந்தார்.

ஊரடங்கு நாட்களில் வேலைக்கு செல்வது தமது மனைவிக்கு பிடிக்கவில்லை என்று நிதி கூறி வந்ததாகவும் சண்முகதேவதுரை குறிப்பிட்டுள்ளார்.

குடும்ப பிரச்னை காரணமாகவே நிதின்குமார், இந்த கோர முடிவை எடுத்திருக்கலாம் என தேவதுரை தெரிவித்துள்ளார்.

3 வயது மகன் மற்றும் ஒரு வயது பெண் குழந்தை தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கலக்கமடைந்த தாயார் தெருவுக்கு வந்து உதவி கோரியதை நேரில் பார்த்தவர்கள் பொலிசாரிடம் விளக்கமளித்துள்ளதாக கூறப்படுகிறது.

நிதின்குமாரின் மகள் சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததாக கூறப்படுகிறது. அவரது சகோதரர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்ததாக தெரியவந்துள்ளது.

நிதின்குமாரின் குடியிருப்பில் இருந்து அலறல் சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்களில் பலர் தெரிவித்துள்ளனர்.

தற்போது தற்கொலைக்கு முயன்ற நிதின்குமார், ஆபத்து கட்டத்தை தாண்டியுள்ளதாகவும், குணமடைந்து வருவதாகவும் மருத்துவமனை தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

https://www.tamilwin.com/uk/01/244632?ref=rightsidebar

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தியின் தலைப்பு சொல்ல வருவது என்ன?

இந்த தலைப்பின் கீழ் என்ன செய்தியை வாசகர்கள் எதிர்பார்க்க முடியும்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Maruthankerny said:

இந்த செய்தியின் தலைப்பு சொல்ல வருவது என்ன?

இந்த தலைப்பின் கீழ் என்ன செய்தியை வாசகர்கள் எதிர்பார்க்க முடியும்? 

ஊர் பெயரை இழுத்து போட்டபடியால்த்தான் இங்கு இணைக்கவில்லை திண்ணையில் பலரும் இந்த சேதியை தேடியபடியால் இணைத்தது இவர்கள் போட்ட முதல் செய்தியே பிழை பின்பு இப்படியான தலையங்கத்துடன் திருத்தி போட்டுள்ளார்கள் தலையங்கம் மாற்றக்கூடாது எனும் விதி யாழில் உண்டு வேறை வழி இல்லை .

இல்லை சில பிளாக் லிஸ்டில் உள்ள தளம்கள்  செய்தியை சரியாக போடுகின்றன பட்டறிவாக்கும் .வின்  நிர்வாகம் மாறிய பின் கொப்பி  பேஸ்ட் இணையம் தாங்கள்  இல்லை என்று காட்டுவதுக்கு  இப்படி தலையங்கத்தை மாறி போட்டு விளையாடுகின்றனர் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவரது மனைவியின் அண்ணன், கொரோனாவால் பலியாகி உள்ளார்.

அவரால் துக்கம் அனுசரிக்க கூட போக முடியவில்லை. 

இந்த நிலையில் கணவர் வேலைக்கு போவது அவருக்கும், தனக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பானது இல்லை என்று மனைவி கணவனுடன் முரண் பட்டுள்ளார்.

சம்பவ தினத்தில் கணவர் வேலைக்கு போய், இடை நேரத்தில் வந்த போது, மோதலாகி உள்ளது. 

அண்ணா கொரோனாவால் இறந்த பயத்தில், மனைவி வேலைக்கு போகவேண்டாம் என்று தடுத்திருக்கிறார்.

பிள்ளைகள் பாலுணவு, நாப்பி (டயபர்), குடும்ப செலவுகள், காரணமாகவே அவர் வேலைக்கு போக வேண்டிய நிலையில் இருந்திருக்கிறார்.

இந்த மோதலின் விளைவாக, நானும் எண்ட, பிள்ளைகளும், உன்னோட இருக்கிறதுக்கு செத்து துளையலாம் என்று சொல்லி இந்த முடிவுக்கு வந்து இருக்கிறார். 

அவர் தப்பி விட்டார்.

இது அவலமான ஒரு நிகழ்வு. இதுக்கும், அவரது ஊருக்கும் ஒரு தொடர்பும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

இந்த செய்தியின் தலைப்பு சொல்ல வருவது என்ன?

இந்த தலைப்பின் கீழ் என்ன செய்தியை வாசகர்கள் எதிர்பார்க்க முடியும்? 

இது ஐ.பி.சி..தமிழ்வின் விளையாட்டு..அங்கு ஒரு செய்தி 10..தடவையாவது தலைப்பு மாற்றி போடப்பட்டிருக்கும்...வியாபார விபச்சாரம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

அவரது மனைவியின் அண்ணன், கொரோனாவால் பலியாகி உள்ளார்.

அவரால் துக்கம் அனுசரிக்க கூட போக முடியவில்லை. 

இந்த நிலையில் கணவர் வேலைக்கு போவது அவருக்கும், தனக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பானது இல்லை என்று மனைவி கணவனுடன் முரண் பட்டுள்ளார்.

சம்பவ தினத்தில் கணவர் வேலைக்கு போய், இடை நேரத்தில் வந்த போது, மோதலாகி உள்ளது. 

அண்ணா கொரோனாவால் இறந்த பயத்தில், மனைவி வேலைக்கு போகவேண்டாம் என்று தடுத்திருக்கிறார்.

பிள்ளைகள் பாலுணவு, நாப்பி (டயபர்), குடும்ப செலவுகள், காரணமாகவே அவர் வேலைக்கு போக வேண்டிய நிலையில் இருந்திருக்கிறார்.

இந்த மோதலின் விளைவாக, நானும் எண்ட, பிள்ளைகளும், உன்னோட இருக்கிறதுக்கு செத்து துளையலாம் என்று சொல்லி இந்த முடிவுக்கு வந்து இருக்கிறார். 

அவர் தப்பி விட்டார்.

இது அவலமான ஒரு நிகழ்வு. இதுக்கும், அவரது ஊருக்கும் ஒரு தொடர்பும் இல்லை.

நடந்த... சம்பவம், மிக வேதனையானது.
யாரில்.. பிழை சொல்வது என்று தெரியவில்லை.

பிள்ளைகளை... கொலை செய்ததன் மூலம்,  அவரும் பெரும் சிக்கலில் மாட்டுப் பட்டு,
அவரின் மனைவியையும்.. இருந்த சோகத்தை விட, 
இன்னும் பெரிய... ஆறாத சோகத்தில் ஆழ்த்தி  விட்டார். 

நன்றாக வாழ்ந்திருக்க வேண்டிய.. இளம் குடும்பத்தில், பெரிய துயரம். 

கொரோனாவால் ஏற்பட்ட  உயிரிழப்பும்... பொருளாதார நெருக்கடியும்,
அந்தக் குடும்பத்தை.. சின்னா பின்னமாக்கி விட்டது. 😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப உள்ள இணையத்தளங்களுக்கு கவர்ச்சியான செய்தி வேண்டும் அதனால் தான் இப்படி

தன் பிள்ளையென்றாலும் கொல்வதற்கு அனுமதி பெற்றோருக்கு இல்லை ஆழ்ந்த அனுதாபங்கள் சின்னஞ் சிறு பிஞ்சுகள் கருகிவிட்டன

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் துக்கமான‌ செய்தி. 

ஒன்றுமறியா பாலகர்கள் பலியாகியுள்ளார்கள். இலண்டனில் இப்படி மேல‌வீடும் கீழ கடையுமாக நிறைய தமிழர்கள் வாழ்கின்றார்கள். அன்றாடம் தமிழ் கடைகளில் வேலை செய்து தினக்கூலி வாங்குபவர்கள். வருடம் முழுவதும் வேலை செய்வார்கள். கடுமையாக உழைத்தும் கையில் ஒன்றும் இருக்காது.
மன அழுத்தமும் பண கஸ்டமுமே இப்படியான முடிவை எடுக்க வைக்கின்றன.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இப்ப உள்ள இணையத்தளங்களுக்கு கவர்ச்சியான செய்தி வேண்டும் அதனால் தான் இப்படி

தன் பிள்ளையென்றாலும் கொல்வதற்கு அனுமதி பெற்றோருக்கு இல்லை ஆழ்ந்த அனுதாபங்கள் சின்னஞ் சிறு பிஞ்சுகள் கருகிவிட்டன

எப்படிபட்ட மன அழுத்தத்தில் இருந்தாரோ, அல்லது தன்னிலை மறந்திருத்தாரோ, மனைவி சொன்னால் மட்டுமே தெரியும் உண்மை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/4/2020 at 15:59, உடையார் said:

எப்படிபட்ட மன அழுத்தத்தில் இருந்தாரோ, அல்லது தன்னிலை மறந்திருத்தாரோ, மனைவி சொன்னால் மட்டுமே தெரியும் உண்மை

அவாவின்ற அண்ணன் கொரானாவில் இறந்ததால் இவரையும் வேலைக்கு போகவேண்டாம் என்று சொன்னதாகவும் அதனால் பிரச்சினை ஆரம்பமானதாகவும் சொல்கிறார்களே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/4/2020 at 08:58, colomban said:

மிகவும் துக்கமான‌ செய்தி. 

ஒன்றுமறியா பாலகர்கள் பலியாகியுள்ளார்கள். இலண்டனில் இப்படி மேல‌வீடும் கீழ கடையுமாக நிறைய தமிழர்கள் வாழ்கின்றார்கள். அன்றாடம் தமிழ் கடைகளில் வேலை செய்து தினக்கூலி வாங்குபவர்கள். வருடம் முழுவதும் வேலை செய்வார்கள். கடுமையாக உழைத்தும் கையில் ஒன்றும் இருக்காது.
மன அழுத்தமும் பண கஸ்டமுமே இப்படியான முடிவை எடுக்க வைக்கின்றன.   

உங்கள் எழுத்து நடை பழக்கப்பட்ட ஒன்றாய் உள்ளது சம்பந்தப்பட்டவர்  சமீபத்தில் தான் இங்கிலாந்து வந்தவர் அயலவர்களை பொறுத்தவரை சம்பவம் நடக்கும் வரை எந்தப்பிரச்சனையும் அற்ற ஒரு நல்லமனிதர் .

34 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அவாவின்ற அண்ணன் கொரானாவில் இறந்ததால் இவரையும் வேலைக்கு போகவேண்டாம் என்று சொன்னதாகவும் அதனால் பிரச்சினை ஆரம்பமானதாகவும் சொல்கிறார்களே 

அப்படித்தான் சொல்கிறார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சேமிப்பற்ற வாழ்க்கை முறையும்.. குடும்பச் சுமை குறித்து கணவனின் உணர்வை புரிந்து கொள்ள முடியாத மனைவியும்.. தேவையற்ற வாக்குவாதங்களும்.. அவசரப்புத்தியில்.. கோபத்தில் எடுக்கும் முடிவுகளும்.. 

ஒரு குடும்பத்தை எப்படி நாசமாக்குகிறது என்பற்கு இது நல்ல உதாரணம்.

இப்போ... இந்தக் குடும்பத்தில் இரண்டு பிள்ளைகளின் இழப்பு மட்டுமல்ல.. குறித்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் காவலின் கீழ் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

குடும்பச் சுமை குறித்து கணவனும் மனைவியும் உருப்படியா தமக்குள் கலந்துரையாடி இருந்தால்.. அதுவும் இரண்டு பிள்ளை ஒன்று சேர்ந்திருந்து பெற்றவைக்கு.. அந்தப் பொறுப்புணர்வு வரவில்லையே... இந்த நிலையை முற்றாக தவிர்த்திருக்கலாம். 

சும்மா வெளிநாடு என்று கல்யாணம் கட்டி அனுப்பி விடுவது போதாது. திருமண வாழ்வின் பளுக்கள் தொடர்பில்.. சரியான சமூக அறிவூட்டல் அவசியம். இவை இன்றி அமையும் எம்மவர் திருமணங்களால்.. இப்படியான நிகழ்வுகள் பல.. பல வடிவங்களில் நிகழ்கின்றன. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் நடந்து முடிந்த பின் .

Good morning, We all know that a stressful and very sad happened in Ilford 2 days ago, almost a whole family destroyed due to this pandemic stress. Anyhow, it's time we need to reach as much as the needy people. I have created a post in Tamil to share with any social platforms, and it's enclosed here. Please share as much as possible, to reach the vulnerable and needy peoples. Thanks. 
------------------------
Tamils Help Line - தமிழர்களுக்கான உதவிச் சேவை. 

இந்த நெருக்கடிகாலத்தில்(CORONA) எழும் எந்த விதமான சவால்களுக்கும் உங்களுக்கு உடன் உதவி செய்வதற்கென்றே இந்த தகுதி வாய்ந்த குழு(Tamil Charity) இயங்குகிறது. தமிழிலேயே பேசி உங்களுக்கு இலவசமாகவே உதவுவார்கள். இந்தக் குழுவில் வைத்தியர்கள்(GP), சட்டத்தரணிகள்(Solicitors), நிதியியல் ஆலோசகர்கள்(Financial Advisers), கணக்காளர்கள்(Accountants), மனநல மருத்துவர்கள்(Psychiatrists), சமூக சேவையாளர்கள்(Social Workers) என பலதரப்பட்ட சேவையாளர்கள் உங்களுக்கு உதவக் காத்துள்ளார்கள். இந்தத் தகவலை உங்கள் உறவுகளுடனும் பகிருங்கள். நீங்களும் பயன்பெற்று உங்கள் உறவுகளையும் காத்திடுங்கள்.

தொடர்புகள்:
தொலைபேசி: 0203 500 1573, 07525 050 010
இணையம்: www.tamilshelpline.org
மின்னஞ்சல்: coronatamilhelp@gmail.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழம் பஞ்சாங்கம் என்பார்கள் , ஆயினும் " ஆள்வதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே " ..பெண்கள் தங்கள் சக்தி எத்தகையது என்பதை உணர்ந்து கொள்ள  வேண்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சாமானியன் said:

பழம் பஞ்சாங்கம் என்பார்கள் , ஆயினும் " ஆள்வதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே " ..பெண்கள் தங்கள் சக்தி எத்தகையது என்பதை உணர்ந்து கொள்ள  வேண்டும் 

மிகச் சரியான கூற்று. 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி அந்த பெண்ணை மட்டும் குற்றம் சாட்ட முடிகிறது?... பிழை இருவர் மீதும் தான் ...ஒரு பெண்ணை திருமணம் செய்து வாழ முடியா விட்டால் அல்லது அதற்குரிய தகுதி இல்லை என்றால் தனியே இருந்திருக்கலாம் ....அநியாயமாய் அந்த இரு குழந்தைகளையும் சாகடித்து விட்டார் .
தடைக்கு மேலே வீடு...மனைவி இந்த காலத்தில் குழந்தைகளை கூட்டிக் கொண்டு எங்கும் போக முடியாது ...வீட்டிலேயே அடைபட்டு கிடக்க  வேண்டும் ..இருவரும் சிறு குழந்தைகள் கணவர் வந்த பிறகு தான் அவ குளிக்கவே போயிருக்கா ...வெளியில் வேலைக்கு போய் வரும் அவருக்கே இவ்வளவு மனா அழுத்தம் என்றால் வீட்டில் குழந்தைகளோடு அடைபட்டு கிடந்த அந்த பெண்ணின் நிலை ...உண்மையில் அவ தான் கத்தி எடுத்து புருசனை வெட்டி இருக்க வேண்டும் 😠

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

...வெளியில் வேலைக்கு போய் வரும் அவருக்கே இவ்வளவு மனா அழுத்தம் என்றால் வீட்டில் குழந்தைகளோடு அடைபட்டு கிடந்த அந்த பெண்ணின் நிலை ...உண்மையில் அவ தான் கத்தி எடுத்து புருசனை வெட்டி இருக்க வேண்டும் 😠

உண்மைதான் அம்மணி..

வீட்டு வன்முறைகள், அதுவும் குறிப்பாக பெண்களுக்கு எதிராக ஏன் நடக்கின்றன..? ஒரு மாசம் எங்கும் போகாமல் வீடுக்குள்ளேயே ஆண்களை இருந்து பார்க்கச் சொல்லுங்கள்..அப்பொழுது புரியும் மன அழுத்தங்கள்..!

கண்ட இடங்களில் பகலெல்லாம் சுத்தி திரிந்துவிட்டு மாலையில் விட்டுக்குள் அடைந்து சமைச்சு வச்ச சாப்பாட்டை தின்னு தூங்கும் ஆண்களிடம் 'நான் ஆம்பிளை என் விருப்பப்படிதான் நீ நடக்க வேணும்' என்ற சராசரி ஆணாதிக்க சிந்தனை எல்லோரிடமும் ஊறிப்போயுள்ளது. ஆணும் பெண்ணும் சமம்தான் என்ற மனநிலை எப்போது வருமோ?

இந்த சிந்தனையில் மாற்றம் வராமல் எந்த சமூகத்தில் எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரதி said:

எப்படி அந்த பெண்ணை மட்டும் குற்றம் சாட்ட முடிகிறது?... பிழை இருவர் மீதும் தான் ...ஒரு பெண்ணை திருமணம் செய்து வாழ முடியா விட்டால் அல்லது அதற்குரிய தகுதி இல்லை என்றால் தனியே இருந்திருக்கலாம் ....அநியாயமாய் அந்த இரு குழந்தைகளையும் சாகடித்து விட்டார் .
தடைக்கு மேலே வீடு...மனைவி இந்த காலத்தில் குழந்தைகளை கூட்டிக் கொண்டு எங்கும் போக முடியாது ...வீட்டிலேயே அடைபட்டு கிடக்க  வேண்டும் ..இருவரும் சிறு குழந்தைகள் கணவர் வந்த பிறகு தான் அவ குளிக்கவே போயிருக்கா ...வெளியில் வேலைக்கு போய் வரும் அவருக்கே இவ்வளவு மனா அழுத்தம் என்றால் வீட்டில் குழந்தைகளோடு அடைபட்டு கிடந்த அந்த பெண்ணின் நிலை ...உண்மையில் அவ தான் கத்தி எடுத்து புருசனை வெட்டி இருக்க வேண்டும் 😠

எங்களில் பலருக்கு குடும்பம் என்றால் என்ன  என்கின்ற எண்ணக்கருவை (Concept) அறவே மறந்து போய்விட்டனர்.. ஒருவர் மட்டும் குடும்பத்திற்காக உழைப்பதோ அல்லது தியாகம் செய்வதோ அல்லது விட்டுக் கொடுத்தலோ போதாது. இருவரும் தங்கள் பொறுப்புக்களை ஏற்றுக் கொள்வதே சிறந்த தீர்வாக அமையும் 🙂

ஆதலால் ஒரு பக்கத்தை மட்டும் குற்றம் சொல்லக் கூடாது. 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த பெண்ணில் மட்டும் என் இந்த காழ்ப்புணர்வு என்று பலரும் பதிவிட்டிருக்கின்றனர் . அந்த ஆண்மகன் செய்தது செய்திருக்கக் கூடாத,   முற்று முழுதான பிழை என்பதில் எந்த மாற்றுக கருத்தும் இல்லை . அதன் மீது  தான் எந்த அடுத்த கருத்தும் வர முடியும். நான் நினைத்தேன்,  அந்த அடிப்படை கருதுகோளின் மீது தான் எவரொருவரும் கருத்து தொடர்வார் என .
அது போக  ஒரு ஆண்மகன் எப்போதும் தனது பெண்துணையை சார்ந்து தான் இருக்கிறான் என்பது இருபாலாருக்குமே சரிவர தெரிவதில்லை . பெண்ணின் தன்னிலை முனைப்பிற்கு சவால் வரக்கூடிய சந்தர்ப்பங்கள்,    ஆணினுடையதை ஒப்பிடும் போது மிக மிக குறைவு . தன சந்ததியை விருத்தி செய்வதில் இருக்கக் கூடிய     முனைப்பு இருவருக்கும் பொதுவானது . ஆயினும் அடிப்படையில் வேட்டையாடி வென்று சந்ததியை பெருக்கும் இயல்பு ஆண் இனத்தில் கூர்ப்பின் இயல்பில் மேற்பட்டு இருப்பதனாலும்    அது சவாலுக்கு உட்படுத்தப் படும் போது  தன்னிலை பிறழ்வதும் சில வேளைகளில் தவிர்க்க முடியாமல் போகின்றது . இங்கே தான் பெண்ணின் சாமர்த்தியம்  இருக்கின்றது . சந்ததி பெருக்குவது என்ற அடிப்படை தத்துவத்தை வெற்றிகரமாக கொண்டு செல்வதானால் அவள் அதை உணர்ந்து கொள்ளல் வேண்டும், ஆணுக்கும் தன்னிலை உணர்தல் கடப்பாடு இருத்தல் போல .

என்னைப் பொறுத்த வரை பெண்கள் தான் சக்தி;   அவர்கள் அதனை உணர்ந்தால் வெற்றி ..     

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ராசவன்னியன் said:

கண்ட இடங்களில் பகலெல்லாம் சுத்தி திரிந்துவிட்டு மாலையில் விட்டுக்குள் அடைந்து சமைச்சு வச்ச சாப்பாட்டை தின்னு தூங்கும் ஆண்களிடம் 'நான் ஆம்பிளை என் விருப்பப்படிதான் நீ நடக்க வேணும்' என்ற சராசரி ஆணாதிக்க சிந்தனை எல்லோரிடமும் ஊறிப்போயுள்ளது. ஆணும் பெண்ணும் சமம்தான் என்ற மனநிலை எப்போது வருமோ?

இந்த சிந்தனையில் மாற்றம் வராமல் எந்த சமூகத்தில் எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது.

நீங்கள் எந்தக் காலத்தில் இருக்கிறீர்கள் , உதெல்லாம் பெண்கள் வாக்குரிமை  பெற்ற காலத்திலேயே மாறி விட்டது ஐயா ..இப்பவெல்லாம்  பின்லாந்து போன்ற நாடுகளுக்கு ( பெண்ணின தலைவர்கள் இருக்கும் நாடுகள் ) அவனவன் குடிபெயர்வதற்கு முண்டியடித்துக் கொண்டு இருக்கிறான் ..    😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சாமானியன் said:

அந்த பெண்ணில் மட்டும் என் இந்த காழ்ப்புணர்வு என்று பலரும் பதிவிட்டிருக்கின்றனர் . அந்த ஆண்மகன் செய்தது செய்திருக்கக் கூடாத,   முற்று முழுதான பிழை என்பதில் எந்த மாற்றுக கருத்தும் இல்லை . அதன் மீது  தான் எந்த அடுத்த கருத்தும் வர முடியும். நான் நினைத்தேன்,  அந்த அடிப்படை கருதுகோளின் மீது தான் எவரொருவரும் கருத்து தொடர்வார் என .
அது போக  ஒரு ஆண்மகன் எப்போதும் தனது பெண்துணையை சார்ந்து தான் இருக்கிறான் என்பது இருபாலாருக்குமே சரிவர தெரிவதில்லை . பெண்ணின் தன்னிலை முனைப்பிற்கு சவால் வரக்கூடிய சந்தர்ப்பங்கள்,    ஆணினுடையதை ஒப்பிடும் போது மிக மிக குறைவு . தன சந்ததியை விருத்தி செய்வதில் இருக்கக் கூடிய     முனைப்பு இருவருக்கும் பொதுவானது . ஆயினும் அடிப்படையில் வேட்டையாடி வென்று சந்ததியை பெருக்கும் இயல்பு ஆண் இனத்தில் கூர்ப்பின் இயல்பில் மேற்பட்டு இருப்பதனாலும்    அது சவாலுக்கு உட்படுத்தப் படும் போது  தன்னிலை பிறழ்வதும் சில வேளைகளில் தவிர்க்க முடியாமல் போகின்றது . இங்கே தான் பெண்ணின் சாமர்த்தியம்  இருக்கின்றது . சந்ததி பெருக்குவது என்ற அடிப்படை தத்துவத்தை வெற்றிகரமாக கொண்டு செல்வதானால் அவள் அதை உணர்ந்து கொள்ளல் வேண்டும், ஆணுக்கும் தன்னிலை உணர்தல் கடப்பாடு இருத்தல் போல .

என்னைப் பொறுத்த வரை பெண்கள் தான் சக்தி;   அவர்கள் அதனை உணர்ந்தால் வெற்றி ..     

இந்த ரகசியத்தை  உணர்ந்த  பெண்ணை மணந்தவன் கொடுத்து வைத்தவன். 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் முழுவதுமே ஊரடங்கு நிலையினால் உருவான தனிமை படுத்தலையும் வீட்டினுள் முடங்கலையும் ஏற்றுக்கொள்ளமுடியாமல் மன அழுத்ததில் தவிக்கிறது,

கொரோனாவால் செத்தாலும் பரவாயில்லை முடக்க நிலை வேண்டாம் என்று உலகின் பல பகுதிகளில் மக்கள் அரசுக்கெதிராக குரல் எழுப்ப ஆரம்பித்துவிட்டனர்.

அவர்கள் அத்தனைபேரும் ஒருவரையொருவர் குத்தில் கொல்கிறார்களா, அல்லது சுட்டு கொல்கிறார்களா?

மன அழுத்ததில் கொடூர காரியங்களை செய்கிறவர்களுக்கு இனம் மதம் மொழி நாடு வட்டாரம் வடமராட்சி என்பதெல்லாம் இல்லை.

முற்றிலும் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இதுபோன்ற செயலை செய்பவர்களும் அதெல்லாம் பார்ப்பதும் இல்லை.

நாம் மட்டும் ஏன் தமிழ்   மனைவி கணவன் ,எங்கடையாக்கள் உங்கடயாக்கள் இப்பிடி இருக்கினம் என்ற கோணத்தில் போகிறோம்?

மன ழுத்தங்களினால் பல சந்தர்ப்பங்களில்,கொலையை தவிர்ந்த  அல்லது கொலைக்கு சமமான  லூசு தனமான வேலைகள் நாம் எல்லோருமே பார்க்கிறோம், சட்டத்தின் பிடியில் சிக்காதவரை  நாம் எல்லோருமே அடுத்தவருக்கு புத்தி சொல்ல தகுதி வாய்ந்த யோக்கியர்களே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.