Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

கவிஞர் முத்துலிங்கம்!


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

 

 

 

 

படம் : மீனவ நண்பன் 
இசை : M.S.விஸ்வநாதன் 
பாடியவர் : K.J.யேசுதாஸ், வாணி ஜெயராம் 
வரிகள் : முத்துலிங்கம்

தங்கத்தில் முகமெடுத்து,
சந்தனத்தில் உடலெடுத்து
மங்கை என்று வந்திருக்கும் மலரோ
நீ மாலை நேர பொன் மஞ்சள் நிலவோ
தங்கத்தில் முகமெடுத்து
சந்தனத்தில் உடலெடுத்து
காமன் போல வந்திருக்கும் வடிவோ
அந்த தேவ லோக மன்னவனும் நீயோ

வண்ண ரதம் போலவே
தென்றல் நடை காட்டவா
புள்ளி மான் போலவே
துள்ளி நான் ஓடவா
வண்ண ரதமாகினால்
அதில் சிலை நானன்றோ
புள்ளி மான் தேடும்
கலை மானும் நானல்லவோ
அசைந்து தவழ்ந்து அருகில் நெருங்கு
அமுதாகவே
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
தங்கத்தில் முகமெடுத்து
சந்தனத்தில் உடலெடுத்து
மங்கை என்று வந்திருக்கும் மலரோ
நீ மாலை நேர பொன் மஞ்சள் நிலவோ

முல்லை மலர் செண்டுகள் கொண்டு கொடி ஆடுது
தென்றல் சதிராடினால் அந்த இடை தாங்குமா?
இந்த இடை தாங்கவே கைகள் இருக்கின்றது
கொஞ்சி உறவாட மலர் மஞ்சம் அழைக்கின்றது
மலர்ந்து கனிந்து சிரித்து குலுங்கும் கனியாகவோ

எந்தன் மனக்கோயிலில் தெய்வம் உனை காண்கிறேன்
உந்தன் நிழல் போலவே வரும் வரம் கேட்கின்றேன்
இந்த மனராஜியம் என்றும் உனக்காகவே
சொந்த மகராணி நீ என்று நான் சொல்லுவேன்
நினைக்க இனிக்க கொடுத்து மகிழ்ந்த முத்தாரமே

தங்கத்தில் முகமெடுத்து,
சந்தனத்தில் உடலெடுத்து
மங்கை என்று வந்திருக்கும் மலரோ
நீ மாலை நேர பொன் மஞ்சள் நிலவோ

 

 

 

அன்புக்கு நான் அடிமை!
தமிழ்ப் பண்புக்கு நான் அடிமை!
நல்ல கொள்கைக்கு நான் அடிமை!
தொண்டர் கூட்டத்தில் நான் அடிமை!

அன்புக்கு நான் அடிமை...

இன்பங்கள் இங்கே பொங்கி வழியும் முகங்கள் நான் பார்க்கிறேன்!
இதயம் எல்லாம் பாலைவனம்போல் இருக்கும் நிலை பார்க்கிறேன்!
அன்பு பணிவு அடக்கம் எங்கே?
தேடிப்பார்த்தேன் தென்படவில்லை!

அன்புக்கு நான் அடிமை...

குடிக்கும் நீரை விலைகள் பேசி கொடுக்கும் கூட்டம் அங்கே!
இருக்கும் காசை தண்ணீர் போலே இறைக்கும் கூட்டம் இங்கே!
ஆடை பாதி ஆளும் பாதி அறிவும் பாதி ஆனது இங்கே!

அன்புக்கு நான் அடிமை...

உள்ளத்தில் ஒன்றும் உதட்டில் ஒன்றும் உறவு கொண்டீர்களே!
கடமை கண்ணியம் கட்டுப்பாட்டை மறந்து போனீர்களே!
நாகரீகம் என்பது எல்லாம் போதையான பாதையல்ல!

அன்புக்கு நான் அடிமை...

 

 

 

தாயகத்தின் சுதந்திரமே
எங்கள் கொள்கை!
தன்மானம் ஒன்றேதான்
எங்கள் செல்வம்!

ஒற்றுமையால் பகைவர்களை
ஓட வைப்போம்!
உழைப்பாலே நம் நாட்டை
உயர்த்தி வைப்போம்!

தாயகத்தின் சுதந்திரமே
எங்கள் கொள்கை...

கோட்டையிலே நமது கொடி
பறந்திட வேண்டும்!
கொள்கை வீரர் தியாகங்களை
ஏற்றிட வேண்டும்!

புரட்சியிலே சரித்திரத்தை
மாற்றிட வேண்டும்!
பொதுவுடைமைச் சமுதாயம்
மலர்ந்திட வேண்டும்!

கண்கவரும் கலைகள் எல்லாம் வளர்ந்தது இங்கே!
களங்கமுள்ள பகைவராலே
தாழ்ந்தது இங்கே!

நீதியோடு நேர்மை காக்கும்
மறவர்கள் எங்கே?
நிமிர்ந்தெழுந்தால் தடைகள் எல்லாம் உடைந்திடும் இங்கே!

வீரமுண்டு வெற்றியுண்டு
விளையாடும் களம்
இங்கே உண்டு!
வா வா என் தோழா!

பூனைகள் இனம் போலே
பதுங்குதல் இழிவாகும்!
புலியினம் நீ எனில்
பொருதிட வாராய்!

வீரமுண்டு வெற்றியுண்டு
விளையாடும் களம்
இங்கே உண்டு!
வா வா என் தோழா!

தென்பாங்குத் தென்றல்
பண்பாடும் நாட்டில்
தீராத புயல் வந்ததேனோ?

நீர் வாழும் மீன்கள்
நிலம் வீழல் போலே
நெஞ்சங்கள் துடித்தேங்கலாமோ?

வா வா என் தோழா!

வீரமுண்டு வெற்றியுண்டு
விளையாடும் களம்
இங்கே உண்டு!
வா வா என் தோழா!

தாயகத்தின் சுதந்திரமே
எங்கள் கொள்கை!
தன்மானம் ஒன்றேதான்
எங்கள் செல்வம்!

 

 

 

 

 

 

 

 

 

Edited by Knowthyself
 • Thanks 1
Link to post
Share on other sites
 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • தாடி மோடி இன்று உரை நிகழ்த்தினார். மேலே முன்னர் என்று வந்திருக்கிறது.... பின்னர் என்று வாசிக்கவும்.
  • வாரணமாயிரம் வாரண மாயிரம் சூழவ லம்செய்து, நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர், பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும், தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான். (2) 1 நாளைவ துவைம ணமென்று நாளிட்டு, பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ், கோளரி மாதவன் கோவிந்த னென்பான்,ஓர் காளைபு குதக்க னாக்கண்டேன் தோழீநான். 2 இந்திர னுள்ளிட்ட தேவர்கு ழாமெல்லாம், வந்திருந் தென்னைம கட்பேசி மந்திரித்து, மந்திரக் கோடியு டுத்திம ணமாலை, அந்தரி சூட்டக்க னாக்கண்டேன் தோழீநான். 3 நாற்றிசைத் தீர்த்தங்கொ ணர்ந்துந னிநல்கி, பார்ப்பனச் சிட்டர்கள் பல்லாரெ டுத்தேத்தி, பூப்புனை கண்ணிப்பு னிதனோ டென்றன்னை, காப்புநாண் கட்டக்க னாக்கண்டேன் தோழீநான். 4 கதிரொளி தீபம் கலசமு டனேந்தி, சதிரிள மங்கையர் தாம்வந்தெ திர்கொள்ள, மதுரையார் மன்ன னடிநிலை தொட்டு,எங்கும் அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழீநான். 5 மத்தளம் கொட்டவ ரிசங்கம் நின்றூத, முத்துடைத் தாம நிரைதாழ்ந்த பந்தற்கீழ் மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து,என்னைக் கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான். 6 வாய்நல் லார்நல்ல மறையோதி மந்திரத்தால், பாசிலை நாணல் படுத்துப் பரிதிவைத்து, காய்சின மாகளி றன்னானென் கைப்பற்றி, தீவலம் செய்யக்க னாக்கண்டேன் தோழீநான். 7 இம்மைக்கு மேழேழ் பிறவிக்கும் பற்றாவான், நம்மையு டையவன் நாராய ணன்நம்பி, செம்மை யுடைய திருக்கையால் தாள்பற்றி, அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீநான். 8 வரிசிலை வாள்முகத் தென்னைமார் தாம்வந்திட்டு எரிமுகம் பாரித்தென் னைமுன்னே நிறுத்தி, அரிமுக னச்சுதன் கைம்மேலென் கைவைத்து, பொரிமுகந் தட்டக் கனாக்கண்டேன் தோழீநான். 9 குங்கும மப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து, மங்கல வீதி வலம்செய்து மணநீர், அங்கவ னோடு முடஞ்சென்றங் கானைமேல், மஞ்சன மாட்டக்க னாக்கண்டேன் தோழீநான். 10 ஆயனுக் காகத்தான் கண்ட கனாவினை, வேயர் புகழ்வில்லி புத்தூர்க்கோன் கோதைசொல், தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர், வாயுநன் மக்களைப் பெற்று மகிழ்வரே. (2) 11  
  • இலங்கையில் இந்த சிங்கள கிரந்தம் இன்னும் விடவில்லை. பெரும்பாலும், தமிழ் மக்கள் சண்டை பிடிக்காமல் போயிருந்தால், அப்படி நடந்திருக்கலாம்.
  • "இந்தி தெரியாதா? லோன் இல்லை": வங்கி மேலாளர் பணியிடமாற்றம்! பாலசுப்பிரமணியன் அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை மேலாளர் விஷால் நாராயணன் காம்ளேவை பணியிட மாற்றம் செய்து திருச்சி மண்டல அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற தலைமை அரசு மருத்துவர் பாலசுப்பிரமணியன். இவருக்கு யுத்தப்பள்ளம், ஜெயங்கொண்டம் ஆகிய பகுதிகளில் பல்வேறு இடங்களில் சொந்த நிலம், வீடு ஆகியவை உள்ளன. இதையடுத்து ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனது இடத்தில் வணிக வளாகம் கட்ட முடிவு செய்து கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு லோன் கேட்டு சென்றுள்ளார். வங்கியில் தற்போது மகாராஷ்டிராவைச் சேர்ந்த விஷால் நாராயணன் காம்ளே என்பவர் கிளை மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரிடம் சென்று பாலசுப்பிரமணியன் தனது இடம் சம்பந்தமான ஆவணங்கள், வரவு செலவு கணக்குகள் மற்றும் வருமான வரி செலுத்தும் படிவம் ஆகியவற்றை காண்பித்து கடன் கேட்டுள்ளார். அப்போது பேசிய வங்கி மேலாளர், “Do u know Hindi?” என ஆங்கிலத்தில் கேட்டுள்ளார், அதற்கு மருத்துவர் “I don’t know Hindi, but I know Tamil and English” என ஆங்கிலத்தில் பதில் அளித்துள்ளார். “I am from Maharashtra, I know Hindi. Language problem” என தெரிவித்துள்ளார் மேலாளர். மருத்துவர் மீண்டும் தனது ஆவணத்தை காண்பித்து, "நான் உங்கள் கிளையில் தான் கணக்கு வைத்துள்ளேன். என்னிடம் எல்லா ஆவணங்களும் உள்ளது" என தெரிவித்த போதும் வங்கி மேலாளர் மீண்டும் மீண்டும் மொழி பற்றியே பேசி, கடன் சம்பந்தமாக எந்த ஆவணத்தையும் பார்க்காமல், "கடன் கொடுக்க இயலாது" என தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து ஓய்வு பெற்ற மருத்துவர் வங்கி மேலாளருக்கு மான நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனிடையே திமுக மாவட்ட செயலாளர் சிவசங்கர் தலைமையில் வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்தியை திணிக்கும் வங்கியின் மேலாளரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். "வங்கி மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனவும் "அவரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும்" எனவும் வலியுறுத்தினர். இந்நிலையில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை மேலாளர் விஷால் நாராயணன் காம்ளேவை திருச்சி மண்டல அலுவலகம் விசாரணைக்கு அழைத்தது. அங்கும் தனக்கு இந்தி மட்டுமே தெரியும் என்றதால் அவரை பணியிடமாற்றம் செய்து திருச்சி மண்டல அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார். புதிய தலைமுறை    
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.