'வேற்று கிரக வாசிகள்- விவரிக்க முடியாத நிகழ்வுகளின் காணொளிகளை வெளியிட்ட அமெரிக்கா
-
Tell a friend
-
Topics
-
0
By உடையார்
தொடங்கப்பட்டது
-
-
Posts
-
By உடையார் · பதியப்பட்டது
4245ஏக்கர் அரசகாடுகள் விடுவிக்கப்படவுள்ளதாக வனவளத்திணைக்களம் தெரிவிப்பு 23 Views வவுனியா பிரதேசத்திற்குட்பட்ட 4245 ஏக்கர் அரசகாடுகள் விடுவிக்கப் படவுள்ளதாக வனவளத் திணைக்களம் தெரிவித்துள்ளது. வவுனியா பிரதேசசெயலகத்தின் அபிவிருத்திக்குழு கூட்டம் இன்று இடம்பெற்றது. இதன்போது வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட 4245 ஏக்கர் ஏனைய அரசகாடுகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக வனவளத் திணைக்களம் சார்பாக முன்னிலையாகிருந்த உத்தியோகத்தர்கள் தெரிவித்திருந்ததுடன் இது தொடர்பாக மாவட்ட அரசஅதிபருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தனர். எனினும் குறித்தவிடயம் தொடர்பாக பிரதேச செயலகத்திற்கோ அல்லது கிராம சேவையாளர்களிற்கோ அறிவிக்கப்படவில்லை. இதன்போது கருத்து தெரிவித்த ஒருங்கிணைப்பு குழு தலைவர் கு. திலீபன்,“ நாங்கள் மக்களுடன் சந்திப்பை மேற்கொள்பவர்கள். அவர்களிற்கு பதில் சொல்லவேண்டும். எனவே அரச அதிபருக்கு தெரியப்படுத்துவதற்கு முன்னதாக எங்களுக்கும் அது தொடர்பாக தெரியப்படுத்தி ஒரு பிரதியை அனுப்ப வேண்டும்“ என்றனர் https://www.ilakku.org/?p=43572 -
ஆழ்ந்த இரங்கல்கள், அன்னாரின் ஆத்மா சாந்தியடையவதாக
-
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 கஸ்தூரி மனம் வீசும் மாண்பாளரே...|
-
அம்மா! உங்கள் கையால் செம்பு தண்ணீர் குடித்தால் கூட சுவையாகத்தான் இருக்கும். சாப்பாடுகள் என்றாலும் சரி சிற்றுண்டி ஆனாலும் சரி எல்லாமே சொர்க்க உணவுகளாய் இருக்கும். சுவை கூட சொல்லி வர்ணிக்க முடியதம்மா.சும்மா ஒரு சட்டியில் நாலு வெங்காயதையும் பச்சைமிளகாயையும் போட்டு சொதி வைத்தால் கூட அது அமிர்தமாக இருந்ததே அம்மா. அந்த சுவை ஏன் என் மனைவி சமைக்கும் போது வரவில்லை? எத்தனை உணவுகளை எந்தெந்த விதமாக எல்லாம் சமைத்தீர்கள். அந்த பக்குவம் உங்கள் பேரப்பிள்ளைகளிடம் வரவே வராதம்மா. காலம் மாறி விட்டது என்கிறார்கள். நாமும் மாறுகின்றோம் என்கிறார்கள். கண்ட கண்ட உணவுகளை உண்கிறார்கள். கடைசியில் கைக்குள் பிடிக்குது காலுக்குள் பிடிக்குது என்கிறார்கள்.நெஞ்சுக்குள் இழுக்குது என்கிறார்கள் அம்மா. சென்ற கிழமை சின்னம்மாவுக்கு ரெலிபோன் எடுத்தேன் அம்மா. சுக நலம் விசாரித்தேன். அவ என்னை எதுவும் விசாரிக்க வில்லை. மாறாக பணம் வேண்டும் என்றார். ஏன் என நான் கேட்டேன். தனது பேரப்பிள்ளைக்கு வீடு கட்டவாம். இப்போது இருக்கும் வீடு யாருக்கு என நான் கேட்க அது தனக்கு மட்டும் என்றார். அது மட்டுமில்லாமல் எனது பெயரில் இருக்கும் காணிகளை தனது பெயருக்கு மாற்றி தரும் படியும் கட்டளையிட்டார். அம்மா நீங்கள் இருக்கும் மட்டும் வாய் மூடி இருந்தவர்கள் எல்லாம் வாய் திறக்க ஆரம்பித்து விட்டார்கள். அம்மா! உங்கள் காலத்தில் இருந்த சகோதர பாசம் குடும்ப பாசங்கள் இன்றில்லை.சில நேரம் கடமைக்கு பழகுவது போல் இருக்கின்றார்கள். சகோதரங்கள் குடும்பங்களுக்குள் கூட எரிச்சல் பொறாமைகள் கூடி விட்டதம்மா.சந்ததிகள் குடும்பங்களுக்குள்ளேயே ஏற்றத்தாழ்வுகள் பார்கின்றார்கள். பணத்தை வைத்து சரிசமம் பார்க்கின்றார்கள் அம்மா. நான் கார் வாங்கினால்....நான் வீடு வாங்கினால் அதை விட இன்னும் பெரிய கோணத்தில் தாங்கள் வாங்க வேண்டும் என அல்லல் படுகின்றார்கள்.எதை கொண்டு வந்தார்கள் எதை கொண்டு போகப்போகின்றார்கள் அம்மா? அம்மா என்ரை புறணி இன்னும் வரும்.
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.