Jump to content

தேவை ஒரு கண்ணாடி

Recommended Posts

நான் வடிவோ வடிவில்லையோ என்று உண்மையிலேயே எனக்குத் தெரியவில்லை. நேற்றிரவு நான் எனது படமொன்றை Facebook இல் போட்டுவிட்டுப் படுத்து விட்டேன். இன்று காலையில் எழுந்து பார்த்த போது அந்தப் படத்துக்கு முந்நூறுக்கு மேல் லைக்ஸ். நூறுக்கு மேல் கொமென்ற்ஸ். உள் பெட்டியில் ஊருப்பட்ட செய்திகள்.

'வடிவு, நீங்கள் நல்ல வடிவு'

'உங்களோடை கதைக்கோணும். போன் நம்பரைத் தாங்கோ'

'உங்களுக்கு ஒண்டு சொன்னால் கோவிப்பிங்களோ? நீங்கள் நல்ல வடிவு'

'உங்கடை வடிவாம்பிகை என்ற பெயரைப் போலயே நீங்கள் வடிவா இருக்கிறிங்கள்'

'மடம், பிளீஸ் போன் நம்பர் தாங்கோ'

'அக்கா, ஐ லவ் யூ"

இப்படித்தான் அந்தச் செய்திகள் என்னை மயக்கும் எண்ணத்தில் எழுதப் பட்டிருந்தன. நான் Teenage இல் இருந்திருந்தால் அப்படியே பாசியில் வழுக்கி விழுவது போல வழுக்கி விழுந்து பிடரியை உடைத்திருப்பேன். நல்ல வேளையாக அதை எப்போதோ கடந்திருந்தேன். சிலர் நல்ல அழகான கவிதைகள் கூட எழுதியிருந்தார்கள். இன்னும் சிலர் நான் முதலே வாசித்த வேறு யாருடையதோ கவிதைகளை  தங்களது கவிதைகள் போல எழுதியிருந்தார்கள். எல்லாம் என் வடிவையும் அதனால் அவர்களுக்கு என் மேல் எழுந்த காதலையும் வைத்துத்தான்.  அதுதான் எனக்குக் குழப்பமாக இருந்தது.

வீட்டில் சண்டை வருகிற பொழுதெல்லாம் வடிவில்லாத என்னை தனது தலையில் கட்டி விட்டதற்காகவும் எனக்கு `வடிவாம்பிகை´ என்ற பெயர் வைத்ததற்காகவும் எனது கணவர், ஊரிலிருக்கும் எனது அம்மாவைத் தாறுமாறாகத் திட்டித் தீர்ப்பார்.  'உன்ரை மூஞ்சைக்கும் முகரக்கட்டைக்கும் இந்தப் பெயரொன்றுதான் குறை"  என்றும் சொல்லிக் கத்துவார். உண்மையில் எனக்கு வடிவாம்பிகை என்று பெயர் வைத்தது அம்மா இல்லை. அம்மாச்சிதான் நான் பிறந்த உடனேயே எனது வடிவைப் பார்த்து விட்டு `வடிவாம்பிகை´ என்ற பெயர் வைத்தாவாம். நான் இதைக் கனதரம் எனது கணவருக்குச் சொல்லி விட்டேன். ஆனாலும் மறந்து போனது மாதிரித் திரும்பத் திரும்ப அம்மாவைத் திட்டிக் கொட்டிக் கொண்டிருப்பார்.  நான் நினைப்பூட்டினால் 'காகத்துக்கும் தன்ரை குஞ்சைப் பார்த்தால் வடிவாத்தான் தெரியும்' என்று சொல்லி, கெக்கட்டம் விட்டுச் சிரிப்பார்.  அது மட்டுமே? வேறு பெண்களிடம் அவர் அசடு வழிகிற பொழுதெல்லாம் நான் கேட்டால் 'நீ வடிவா இருந்தால் நான் ஏன் வேறையாரையும் பார்க்கப் போறன்?' என்பார்.

நான் ஓடிப்போய் நான் வடிவோ அல்லது இவர் சொல்லுறது  மாதிரி உண்மையிலேயே வடிவில்லையோ என்று கண்ணாடியில் பார்த்தேன். அந்த நேரம் பார்த்துத்தான் அந்த அழைப்பு வந்தது.

யாரோ Facebook மெசஞ்சரின் ஊடாகத்தான் அழைக்கிறார்கள் என்பதைச் சத்தத்தின் மூலம் உணர்ந்து கொண்டேன். சாதாரணமாக நான் மெசஞ்சர் அழைப்பென்றால் பேசாமல் விட்டு விடுவேன். ஆனாலும்  ஓடி வந்து யாரென்று பார்த்தேன்.

நம்பவே முடியவில்லை. டொக்டர் சுதர்சனின் அழைப்பு அது. டொக்டர் சுதர்சனை உங்களுக்கும் எப்பிடியும் தெரிஞ்சிருக்கும். சரியான நல்ல மனுசன். முள்ளிவாய்க்கால் பிரச்சனை நடக்கிற போது சுவிசிலிருந்து  அங்கேயே போய் நின்று பாதிக்கப்பட்ட சனங்களுக்கு மருத்துவ சிகிச்சை செய்தவர். யாருக்குத்தான் அப்படியொரு துணிச்சலும், சேவை மனப்பான்மையும்  வரும். அதுவும் அந்தப் போர் நேரம், உயிரைப் பணயம் வைத்து அங்கேயே நின்று...

எனக்கு பயங்கர ஆச்சரியமாக இருந்தது. அவர் ஏன் எனக்குப் போன் பண்ணுகிறார்?

இரண்டு கிழமைகளுக்கு முன்னர்தான் என்னோடு Facebook இல் நட்பானவர். அவரின் நட்புக்கான அழைப்பு வந்த உடனேயே கொஞ்சமும் யோசிக்காமால் நான் accept பண்ணி விட்டேன். இப்படியான ஒரு ஆளோடு நட்பாயிருப்பது எவ்வளவு பெரிய விசயம். பெருமையும் கூட.  அவரது சேவையைப் பாராட்டி அவருக்கு விருது கூடக் கொடுத்திருக்கிறார்கள்.

 நான் தயக்கமில்லாமல் தொலைபேசியை எடுத்து வணக்கம் என்றேன்.

அங்கிருந்தும் வணக்கம் வந்தது

நீங்கள் டொக்டர் சுதர்சன் தானே?“

ஓமோம், அவரேதான்

உங்கடை சேவையளைப் பற்றியெல்லாம் அறிஞ்சிருக்கிறன். உண்மையிலேயே நீங்கள் பெரிய ஆள். உங்கடை நல்ல மனசை எப்பிடிப் பாராட்டிறதென்றே எனக்குத் தெரியேல்லை

அவர் பதிலுக்குச் சிரித்தார்.

எனக்கு உங்களோடை கதைக்கக் கிடைச்சது பெரிய சந்தோசமா இருக்கு. அது சரி, ஏன் என்னைத் தேடி போன் பண்ணினனீங்கள்?“

நான் அங்கை உங்களிட்டை வரோணும். உங்களிட்டைத் தங்கோணும்

ஏன் இங்கையும் ஆருக்கும் ஏதும் உதவி செய்யப் போறிங்களோ?“

ம்.. ம்.. அங்கை வந்திருந்துதான் ஆருக்காவது உதவி வேணுமோ எண்டு பார்க்கோணும்

எனக்கு உடனடியாக ஒன்றுமே விளங்கவில்லை. யாருக்காவது உதவி தேவைப்படும் பட்சத்தில் அதற்காக வரும் ஒருவர் தங்குவதற்கு இடம் தேடுவது உண்டு. இது இங்கு வந்து தங்குவதற்காக யாருக்காவது உதவி செய்யத் தேடுவது... குழம்பினேன்.

எனது குழப்பம் அவருக்குப் புரிந்திருக்க வேண்டும்.

இப்போது தெளிவாகச் சொன்னார்உங்களோடு தங்க வேண்டும்

எனக்கு எதுவோ புரிந்தது.

ஓ... அது சாத்தியப்படாது. என்ரை வீட்டிலை தங்கிறதுக்கான எந்தச் சாத்தியங்களும் இல்லை

ஏன்.. ஏன்?“ அதிர்ச்சியோடு கேட்டார்.

எனக்குக் குடும்பம் இருக்குது. கணவர் இருக்கிறார்

அதிலையென்ன? அவர் நாள் முழுக்க வீட்டிலையோ  இருக்கப் போறார். வேலைக்கும் போவார்தானே

இல்லை, அது ஒரு போதும் சாத்தியப்படாது

ஏன் அப்பிடிச் சொல்லுறிங்கள். நினைச்சால் எதையும் சாத்தியப்படுத்தலாம்

நான் ஆகாயத்துக்கு மேலால் உயரமாகத் தூக்கி வைத்திருந்த டொக்டர் சுதர்சனை வெடுக்கெனக் கீழே போட்டு விட்டேன்.  இந்தப் பூனையுமா? மனசு ஒருவித ஏமாற்றத்தில் வெட்கித்துக் கூசியது.

உங்களுக்கு எத்தினை வயசு?“ கேட்டேன்

நான் அப்படிக் கேட்டதும், வளைகிறேன் என நினைத்தாரோ? மிகுந்த உற்சாகமாக தனது வயதைச்  சொன்னார்.

என்ரை மகனுக்கு உங்களை விட இரண்டு வயசு கூட. அது தெரியுமோ உங்களுக்கு?“

அப்ப Facebookஇலை நீங்கள் போட்டிருக்கிற படத்திலை சரியான இளமையா இருக்கிறீங்கள்? வடிவாயும் இருக்கிறீங்கள்

அந்தப் போட்டோவைப் பார்த்திட்டோ இப்ப போன் பண்ணினனீங்கள்?“

அதுவும் தான்… உங்கடை மற்றப் படங்களையும் பார்த்தனான்இழுத்தார்.

போட்டோவை மட்டும் பார்த்திட்டு நான் வடிவு, இளமையெண்டெல்லாம் எப்பிடி நினைச்சனிங்கள்? நான் நேற்றுப் போட்டது பத்து வருசத்துக்கு முந்தி எடுத்த போட்டோ. மற்றது அதிலை பார்த்தால், நல்லா லைற் விழுந்து என்னை நல்ல வெள்ளை மாதிரிக் காட்டுது. ஆனால் நான் அந்தளவு வெள்ளையில்லை

இப்போது அவரது கதைகளின் சுரம் குறைந்து கொண்டு போனது. ஆனாலும் நம்ப முடியாதவராய் சில கேள்விகள் கேட்டார்.

நான் உங்கடை அம்மான்ரை வயசை ஒத்திருப்பன். சில வேளையிலை அதையும் விட அதிகமாகவும் இருப்பன் என்றேன்.

அவர் தடுமாறுவது வார்த்தைகளில் தெரிந்தது.

நீங்கள் இன்னும் கலியாணம் கட்டேல்லையோ?“ கேட்டேன்.

கட்டீட்டன்

குழந்தையள்..?“

இரண்டு பேர். இரண்டும் பொம்பிளைப் பிள்ளையள்

அப்ப ஏன் எனக்கு போன் பண்ணினனிங்கள்?“

நீங்கள் வடிவு...இழுத்தார்

உங்கடை பெஞ்சாதி Facebookஇலை இருக்கிறாவோ?“

ஓம் ஐடி சொன்னார்.

பார்த்தேன் . Facebook இல், புகைப்படத்தில் அந்த மனைவி மிக அழகாகச் சிரித்துக் கொண்டிருந்தார். மனைவியை அணைத்த படி டொக்டர் இருந்தார். கூடவே தேவதைகள் போல் இரு பெண் குழந்தைகள்.

'ஐயோ இப்பிடி வடிவா இருக்கிறாவே! அவவையும் பிள்ளையளையும் அங்கை தனிய விட்டிட்டு சுவிசிலையிருந்து இங்கை அமெரிக்காவுக்கு இவ்வளவு தூரம் வரப் போறிங்களோ? அதுவும் ஆரெண்டே தெரியாத என்னட்டை…

ஹி.. ஹி.. ஹி..

அதன் பிறகு 'நான் வடிவோ இல்லையோ?' என்ற கேள்வியோ,  ஆயிரத்தெட்டுத்தரம் கண்ணாடியைப் பார்க்கும் எண்ணமோ எனக்குள் வரவில்லை.   `இப்படியானவர்களின் மனசைப் பார்ப்பதற்குக் கண்ணாடி ஒன்றிருந்தால் நல்லாயிருக்கும்´ என்ற எண்ணம்தான் வந்து கொண்டேயிருக்கிறது.

குழலி

30.04.2020

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குழலி கதை நல்லாயிருக்கு, Facebook மூலம் அழிந்தவர்கள் பல, நான் இதை பாவித்தே பலவருடங்கள், இது உங்கள் உண்மை சம்பவா. யாழ் மாட்டுதான் பார்ப்பது கூட . 

24 minutes ago, குழலி - Kuzhali said:

'ஐயோ இப்பிடி வடிவா இருக்கிறாவே! அவவையும் பிள்ளையளையும் அங்கை தனிய விட்டிட்டு சுவிசிலையிருந்து இங்கை அமெரிக்காவுக்கு இவ்வளவு தூரம் வரப் போறிங்களோ? அதுவும் ஆரெண்டே தெரியாத என்னட்டை…

அக்கரைக்கு இக்கரை பச்சை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதிய உறுப்பினர் பெயரில் இருக்கிறீர்கள்.  கை தேர்ந்த எழுத்தாளிணி போல

கதையும் படிப்பினையும்  நன்றாய் இருக்கிறது ./ பாராட்டுக்கள் மேலும் உங்கள் ஆக்கங்கள் வர வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுருக்கமாக இனிமையாக எழுதப்பட்ட சம்பவம் /  கதை குழலி. வாழ்த்துக்கள்.
நீங்கள் குறிப்பிட்ட அதே வைத்தியர் ஒருவர், எனக்கு தெரிந்த பெண் நண்பியுடன் முகப்புத்தகத்தின் ஊடாக  இப்படித்தான் கதைத்து , நண்பராகி, யுத்த அனுபவங்களை பற்றி கதைக்க ஹோட்டல் அறைக்கு கூப்பிட்டு, தனது சபலபுத்தியை வெளியே காட்டி இருக்கிறார். இவாவும் நறுக்காக நாலு வார்த்தைகள் நாக்கை பிடுங்குகிற மாதிரி கேட்டு விட்டு வந்துவிட்டாராம்.
இந்த பெண் நண்பி சொல்லும் எல்லாவற்றையும் நானும் முழுதாக நம்புவதில்லை. 
அதுக்கும் பல காரணங்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல எழுத்தாற்றல் இருக்கிறது உங்களிடம்....."பாசியில் வழுக்கி விழுந்து பிடரி உடையிறது " நல்லாயிருக்கு....தொடர்ந்து எழுதுங்கள்.....!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/4/2020 at 10:31, Sasi_varnam said:

புலம்பெயர் இலக்கியவாதிப் பெண்நண்பிபோல ....முள்ளிவாய்க்கால் டாக்டர்  ம்ம்ம்ம்ம்.....சபலம் சகலரையும் ஆட்டிப்படைக்கும் ஆனால் இலக்கியவாதி முள்ளிவாய்க்கால் டாக்டரை  தெரிவு செய்தது ஏன் என்றுதான் புரியவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல எழுத்தாற்றல் உங்களிடம் இருக்குது ...முந்தி என்ன பெயரில் வந்தனீங்கள் 😄...அநேகமானவர்கள் இப்படித் தான் இருக்கிறார்கள் ..சில ஆண்கள் நேரே கேட்பார்கள்... எதுக்கு பின்னாலும் ஒளிந்து கொள்ள மாட்டார்கள் ,நல்ல வேசம் போட மாட்டார்கள் ...அவர்களையாவது கொஞ்சம் மன்னிக்கலாம்...ஆனால் உதில வார டொக்டர் மாதிரி எதுக்கு பின்னால் ஒளிந்து,நல்லவர்கள் மாதிரி நடிப்பவர்களை நம்பவே கூடாது...தொடர்ந்தும் உங்கள் அனுபவங்களை எழுதுங்கள் 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குழலியின் எழுத்தில் நல்ல எழுத்தாற்றல் தெரிகிறது. 
ஒருமுறை எனது முகப்புத்தகத்தில் மெசஞ்சரில் வணக்கம் என்றொரு செய்தி வந்தது யார் என்று பார்த்தேன். இது நடைபெறுவதற்கு முன் அண்மையில் என்னுடன் நட்பில் இணைந்தவர். அவரது பெயர் தாயக உணர்வுடனும்  பிறருக்கு உதவும் பண்புடனும் இருந்ததால் இணைத்துக்கொண்டேன். எனவே ஏதோ உதவி தேவைப்படுகிறதாக்கும் என நினைத்து வணக்கம் என்றேன். உங்களுடன் இப்ப கதைக்க முடியுமா என்று கேட்டார். பரவாயில்லை சொல்லுங்கோ என்றேன். நான் வன்னியில் இருந்து பேசுகிறேன் என்று ஆரம்பித்தார். இதற்கிடையில் எனது வீட்டில் குழந்தைகள் ஆரவாரம் செய்ய என்ன வீட்டில சத்தமாயிருக்கு என்றார். நானும் என் பேரக்குழந்தைகள் என்றேன். உடனே இணைப்பு கட் ஆகி விட்டது. இப்படி எத்தனை மனிதர்கள் உலகத்திலே. தொடர்ந்து எழுதுங்கள் குழலி பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

On 30/4/2020 at 02:11, நிலாமதி said:

புதிய உறுப்பினர் பெயரில் இருக்கிறீர்கள்.  கை தேர்ந்த எழுத்தாளிணி போல

கதையும் படிப்பினையும்  நன்றாய் இருக்கிறது ./ பாராட்டுக்கள் மேலும் உங்கள் ஆக்கங்கள் வர வேண்டும்

மிக்கநன்றி நிலாமதி🥰

Link to comment
Share on other sites

On 30/4/2020 at 02:05, உடையார் said:

குழலி கதை நல்லாயிருக்கு, Facebook மூலம் அழிந்தவர்கள் பல, நான் இதை பாவித்தே பலவருடங்கள், இது உங்கள் உண்மை சம்பவா. யாழ் மாட்டுதான் பார்ப்பது கூட . 

அக்கரைக்கு இக்கரை பச்சை

நன்றி உடையார்.

அழிய வேண்டுமென்று நினைத்தால் ஏராளம் வழிகள் உண்டு. Facebook தான் வேண்டுமென்றில்லை.

Facebook ஆலும் பயன்கள் நிறைய உண்டு. 

நாம் அவதானத்துடன் செயற்பட்டால் சரி.

On 30/4/2020 at 10:55, suvy said:

நல்ல எழுத்தாற்றல் இருக்கிறது உங்களிடம்....."பாசியில் வழுக்கி விழுந்து பிடரி உடையிறது " நல்லாயிருக்கு....தொடர்ந்து எழுதுங்கள்.....!   👍

மிக்க நன்றி சுவி

Link to comment
Share on other sites

On 2/5/2020 at 06:50, putthan said:

புலம்பெயர் இலக்கியவாதிப் பெண்நண்பிபோல ....முள்ளிவாய்க்கால் டாக்டர்  ம்ம்ம்ம்ம்.....சபலம் சகலரையும் ஆட்டிப்படைக்கும் ஆனால் இலக்கியவாதி முள்ளிவாய்க்கால் டாக்டரை  தெரிவு செய்தது ஏன் என்றுதான் புரியவில்லை

நன்றி புத்தன் 

Link to comment
Share on other sites

On 2/5/2020 at 11:05, ரதி said:

நல்ல எழுத்தாற்றல் உங்களிடம் இருக்குது ...முந்தி என்ன பெயரில் வந்தனீங்கள் 😄...அநேகமானவர்கள் இப்படித் தான் இருக்கிறார்கள் ..சில ஆண்கள் நேரே கேட்பார்கள்... எதுக்கு பின்னாலும் ஒளிந்து கொள்ள மாட்டார்கள் ,நல்ல வேசம் போட மாட்டார்கள் ...அவர்களையாவது கொஞ்சம் மன்னிக்கலாம்...ஆனால் உதில வார டொக்டர் மாதிரி எதுக்கு பின்னால் ஒளிந்து,நல்லவர்கள் மாதிரி நடிப்பவர்களை நம்பவே கூடாது...தொடர்ந்தும் உங்கள் அனுபவங்களை எழுதுங்கள் 
 
மிக்க நன்றி ரதி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை நல்ல கதை குழலி....
இதே மாதிரி  எனக்குத் தெரிந்த ஒராளுக்கும் இப்பிடி நடந்திருக்கு. முகமறியா முகநூல் கொஞ்சம் வில்லங்கம் போலதான் கிடக்கு.
அது சரி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

கதை நல்ல கதை குழலி....
இதே மாதிரி  எனக்குத் தெரிந்த ஒராளுக்கும் இப்பிடி நடந்திருக்கு. முகமறியா முகநூல் கொஞ்சம் வில்லங்கம் போலதான் கிடக்கு.
அது சரி 

அது சரி நீங்கள் யார் என்று தானே கேட்க வந்தனீங்கள்😄

பி/கு ; உங்களைத் தான் திண்ணையில் திறந்து விட்டு இருக்கினம் எல்ல பிறகு என்னத்திற்கு அந்த படத்தையும் ,அந்த வசனத்தையும் காவிக் கொண்டு திரியிரியல் 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

அது சரி நீங்கள் யார் என்று தானே கேட்க வந்தனீங்கள்😄

பி/கு ; உங்களைத் தான் திண்ணையில் திறந்து விட்டு இருக்கினம் எல்ல பிறகு என்னத்திற்கு அந்த படத்தையும் ,அந்த வசனத்தையும் காவிக் கொண்டு திரியிரியல் 
 
எழுதின கதையை பாக்க ஆராள் எண்டு எனக்கு தெரியுது...😁

அந்த வசனம் நான் கடந்து வந்த கற்களும் முட்களும் நிறைந்த கரடுமுரடான பாதையின் அடையாளம்.😎
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல சம்பவம் எனது பேக் ஐடி கொஞ்சநாட்களில் முகநூலில் பிரபலமாக இருந்தது எனக்கு வந்த குறுந்தகவல்கள் , அழைப்புக்கள் அத்தனை என்னையும் மிரள செய்தன தற்போது அதிகம் எழுதுவதில்லை எழுதினால் கிழக்கில் கூட்டமைப்பை துரத்த மட்டும் எழுதுவேன் .

எனது சொந்த ஐடியில் இருக்கும் போது ஒரு பெண் எனது படங்களுக்கும் லைக்கு கொமான்ஸ் இடுவார் ஆனால் அவர் யார் எங்கே இருக்கிறார் என்ன செய்கிறார்  என கேட்டு குடைந்த ஒருவரும் நினைவில் வந்து போகிறார் அவரும் சுவிஸ்தான் பிரபலமானவர் பின்னர் அந்த பெண்ணை நான் அன்பிரண்ட் செய்து விட்டேன் 

ஒரு பெண் ஐடி வைத்துப்பாருங்கள் குமரன் முதல் கிழவன் வரைக்கும் கரைந்து ஒழுகுவதை 

நல்ல  கதை பாராட்டுக்கள் 

12 minutes ago, குமாரசாமி said:

எழுதின கதையை பாக்க ஆராள் எண்டு எனக்கு தெரியுது...😁

ஆராள் அது சாமியார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஆராள் அது சாமியார்

வேண்டாம் விபரீத விளையாட்டு...... ஆள் ஆரெண்டு சொன்னனெண்டால் நீங்கள் மயங்கி விழுந்து போவியள் 🥴

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

எழுதின கதையை பாக்க ஆராள் எண்டு எனக்கு தெரியுது...😁

அந்த வசனம் நான் கடந்து வந்த கற்களும் முட்களும் நிறைந்த கரடுமுரடான பாதையின் அடையாளம்.😎
 
எனக்கும் அந்த அக்காவாய் இருக்குமோ என்று ஒரு சந்தேகம் இருந்தது:unsure:

நீங்கள் கடந்து வந்த பாதை எல்லோருக்கும் தெரியும் ...தயவு செய்து எனக்காய் நீக்குங்கோ...அரைவாசி இடத்தை பிடிக்குது  😴

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாளுக்குள் 300 லைக்குகள் விழுந்தால் படம் அழகாகத்தானே இருந்திருக்கவேண்டும். இந்தக் காலத்தில் யார்தான் பரிதாபப்பட்டு லைக்குகள் போடுகின்றார்கள்😁

முகநூல் படத்தின் இணைப்பைத் தந்தால் நாங்களும் பார்த்து வடிவாம்பிகையா இல்லையா என்று சொல்லுவோமே😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

எனக்கும் அந்த அக்காவாய் இருக்குமோ என்று ஒரு சந்தேகம் இருந்தது:unsure:

நீங்கள் கடந்து வந்த பாதை எல்லோருக்கும் தெரியும் ...தயவு செய்து எனக்காய் நீக்குங்கோ...அரைவாசி இடத்தை பிடிக்குது  😴

போகப்போக தெரியும் தானே....😁

சரி நீங்கள் சொன்னதுக்காக படத்தை மட்டும் எடுக்கிறன்.😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

போகப்போக தெரியும் தானே....😁

சரி நீங்கள் சொன்னதுக்காக படத்தை மட்டும் எடுக்கிறன்.😎

மிக்க நன்றி அண்ணா 

Link to comment
Share on other sites

On 30/4/2020 at 02:31, Sasi_varnam said:

சுருக்கமாக இனிமையாக எழுதப்பட்ட சம்பவம் /  கதை குழலி. வாழ்த்துக்கள்.
நீங்கள் குறிப்பிட்ட அதே வைத்தியர் ஒருவர், எனக்கு தெரிந்த பெண் நண்பியுடன் முகப்புத்தகத்தின் ஊடாக  இப்படித்தான் கதைத்து , நண்பராகி, யுத்த அனுபவங்களை பற்றி கதைக்க ஹோட்டல் அறைக்கு கூப்பிட்டு, தனது சபலபுத்தியை வெளியே காட்டி இருக்கிறார். இவாவும் நறுக்காக நாலு வார்த்தைகள் நாக்கை பிடுங்குகிற மாதிரி கேட்டு விட்டு வந்துவிட்டாராம்.
இந்த பெண் நண்பி சொல்லும் எல்லாவற்றையும் நானும் முழுதாக நம்புவதில்லை. 
அதுக்கும் பல காரணங்கள்...

மிக்க நன்றி சசிவர்மன்.
உங்கள் பாராட்டில் மிக மகிழ்ந்தேன்.

நீங்கள் குறிப்பிட்ட அந்தப் பெண் போன்ற பெண்களின் பலவீனந்தான் இப்படியானவர்களுக்கு வசதியாக அமைந்து விடுகின்றது.

யுத்த அனுபவங்களைப் பற்றிக் கதைக்க ஹோட்டல் தேவையா? இப்போதுதானே எத்தனையோ வசதிகள் உள்ளன. அம்மா, அப்பா, சகோதரம், உறவு, நட்பு... என்ற வட்டத்துக்குள் உள்ளவர்களை நேரில் பார்த்து பேச முயன்றால் ஏற்றுக் கொள்ளலாம். சும்மா ஒருவர் அதுவும் Facebookஇல் அறிமுகமான ஒருவர் "ஹோட்டலுக்கு வா"  என்றதும் போக வேண்டுமா?
 
அந்தளவிலாது அந்த வைத்தியரின் உள் நோக்கத்தைப் புரிந்து அவர் தப்பித்துக் கொண்டது நல்லதே
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண் என்றால் பேயும் இரங்கும் என்று சும்மாவா சொன்னார்கள்.

அது சரி பிள்ளை என்ன அமெரிக்காவோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/5/2020 at 17:28, குமாரசாமி said:

வேண்டாம் விபரீத விளையாட்டு...... ஆள் ஆரெண்டு சொன்னனெண்டால் நீங்கள் மயங்கி விழுந்து போவியள் 🥴

சொல்லுங்கள் எனக்கு ஒன்றும் மயக்கம் வராது கண்டியளோ 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.