Jump to content

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத பிரச்சாரங்கள் - நீதிமன்றில் சுமந்திரன் தெரிவிப்பு

Recommended Posts

(எம்.எப்.எம்.பஸீர்)

இலங்கையில் தற்போது முஸ்லிம்களுக்கு எதிராகவே இனவாத பிரசாரங்கள் இடம்பெறுவதாகவும் அது குறித்து சமூக வலைத்தளத்தில் தெரிவித்த கருத்தினை அடிப்படையாகக் கொண்டு சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டு ( ஐ.சி.சி.பி.ஆர்.)சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ரம்ஸி ராஸிக் தொடர்ந்தும் இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு எதிராக குரல் கொடுத்த ஒருவர் என்று ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் இன்று கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் வெளிப்படுத்தினார்.

sumanthiran.jpg

பிரபல சமூக வலைத்தள எழுத்தாளராக கருதப்படும் ரம்ஸி ராஸிக், சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்த வழக்கு இன்று  கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் மேற்படி விடயங்களை நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.

இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, சி.ஐ.டி. சார்பில் உப பொலிஸ் பரிசோதகர் துஷித்த குமார மன்றில் ஆஜராகி மேலதிக விசாரணை அறிக்கை ஒன்றினை மன்றில் சமர்ப்பித்தார்.

எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் ஆரம்பத்தில் மக்களின் மனநிலையை மாற்றவே முயற்சிப்பதாகவும், ரம்ஸி ராஸிக்கும் அவ்வாறான சில சொற்களைப் பயன்படுத்தி இனங்களுக்கு இடையே குரோதம் ஏற்படும் விதத்திலான சமூக வலைத்தள பதிவுகளை அனைவரும் பார்க்கும்படியாக (பப்லிக்) பதிவிட்டு வந்துள்ளார் என்றும் இதன்போது குற்றப் புலனாய்வுப் பிரிவு சார்பாக ஆஜரான உப பொலிஸ் பரிசோதகர் துசித குமார நீதவான் முன்னிலையில் தெரிவித்தார். 

' இதற்கு முன்னர் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ஆம் திகதி, 28 ஆம் திகதி மற்றும் 2019 ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி போன்ற தினங்களிலும் அவர் இதுபோன்ற பதிவுகளைப் பதிவிட்டுள்ளார் என்றும் அதற்கு சமூக வலைத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் பொது மக்களிடையே குழப்பத்தை தூண்டும் வகையில் இருந்துள்ளமையை தெளிவாகின்றது. அவர் தொடர்பில் உளவுத் துறை அறிக்கையைப் பெற்றுள்ளோம். அதனூடாக இந்த விடயங்கள் வெளிப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன. ' என்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவு சார்பாக உப பொலிஸ் பரிசோதகர் துசித குமார நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதன்போது சந்தேக நபரான ரம்ஸி ராஸிக் சார்பில் சட்டத்தரணி டிலன் டி சில்வாவுடன் ஆஜராகி பதிலளித்த ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன்,

' சந்தேக நபர் ஒரு பிரபலமான எழுத்தாளர். அவர் ஒரு முஸ்லிம். அவர் தொடர்ந்தும் இஸ்லாமிய அடிப்படைவாதம் மற்றும் இனவாதத்துக்கு எதிராக குரல் கொடுத்த அது குறித்து எழுதிவந்த ஒருவர் எனத் தெரிவித்து அதனை உறுதிப்படுத்துவதற்காக பல சமூக வலைத்தள பதிவுகளின் பிரதிகளையும் நீதிமன்றத்தில் முன்வைத்தார்.

' அவர் ஒரு போதும் இனவாதத்தை தூண்டவில்லை. நாட்டில் தற்போது முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத போக்கொன்றே உள்ளது. இரு ஊடகங்கள் பொதுக்களத்தில் இனவாதத்தை தூண்டுகின்றன. குறிப்பாக இந்த கொவிட் தொற்று நிலைமையை எடுத்து பாருங்கள். முதல் தொற்றாளர் அடையாளம் காணப்படும் போது அவர் வெறும் தொற்றாளர். 

முஸ்லிம் ஒருவர் தொற்றாளராக அடையாளம் காணும் போது அவரின் இனத்தை குறிப்பிட்டு பல்வேறு பிரச்சாரங்கள் இடம்பெறுகின்றன. குறிப்பாக நாட்டில் பிரதான ஊடகமொன்றின் சதுர என்ற நிகழ்ச்சித் தொகுப்பாளர் பொது வெளியில் (பப்லிக்) முஸ்லிம்களை இலக்கு வைத்து இனவாத பிரச்சாரங்கள் மேற்கொள்கிரார். அதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுவதில்லை. அவரை நெருங்கக் கூட எவரும் முற்படுவதில்லை. இங்கு முஸ்லிகளுக்கு எதிராகவே இனவாதம் தூண்டப்படுகின்றது என்று ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் சுட்டிக் காட்டினார்.

இதன்போது நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக யார் இனவாதத்தை தூண்டுகிறார் என நீதிவான் லங்கா ஜயரத்ன கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், அரசுதான் என பதிலளித்தார்.

அத்துடன், எனது சேவைப் பெறுநர் கைது செய்யப்பட்டுள்ள தோற்றுவித்துள்ள பதிவு, இனங்களுக்கு இடையே குரோதத்தை ஏற்படுத்தும் விதமான பதிவொன்று அல்ல. குறித்த பதிவு முஸ்லிம்கள் வன்முறைகளை நோக்கி செல்லக் கூடாது என்பதையே வேண்டுவதாக உள்ளது. சொற்களையன்றி முழுமையான கருத்தையே பார்க்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள ரம்ஸி ராஸிக் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஒருவர் என்பதோடு ஏனைய அவரது ஆரோக்கிய நிலைமையையும் கருத்திற் கொண்டு பிணை வழங்கப்பட வேண்டும்.' என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் நீதிமன்றைக் கோரினார்.

அனைத்து விடயங்களையும் கருத்திற்கொண்ட நீதவான், கைதுசெய்யப்பட்டுள்ள ரம்ஸி ராஸிக் வேண்டுமென்றே குற்றம் புரிந்துள்ளாரா என்பதைத் தேடி ஆராய்ந்து, அவரது முகநூல் கணக்கையும் முழுமையாக ஆராய்ந்து , ஒரு விரிவான பகுப்பாய்வு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு உத்தரவிட்டார்.

அத்துடன் நீதிவான் நீதிமன்றத்தில் சந்தேக நபர்களுக்கு பிணை வழங்க முடியாத ஐ.சி.சி.பி.ஆர், கணினிக் குற்றங்கள் போன்ற சட்டங்களில் கீழ் சந்தேக நபர்களை முன்னிலைப் படுத்துவதற்கு முன்னர் அவர்கள் வேண்டுமென்றே குற்றம் புரிந்துள்ளார்களா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்றும், ஒரு சொல்லை மட்டும் பிடித்துக்கொண்டு கைது செய்து ஆஜர் செய்வது என்பது பொருத்தமற்றது எனவும் நீதவான் சுட்டிக்காட்டினார்.

 எனினும் தற்போதைய சூழலில், குறித்த சந்தேக நபர், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணைக்கப்பாட்டு சட்டத்தின் கீழ் ஆஜர்படுத்த முடியாதென்று கூறுவதாக இருந்தால், அவற்றை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான எழுத்து மூல ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் முன்வைக்குமாறு ரம்ஸி ராஸிக் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகளுக்கு நீதிவான் அறிவித்தார். அவ்வாறு இல்லையெனின், இந்த சட்டத்தின் கீழ் இந்த நீதிமன்றத்தில் பிணை பெற்றுக்கொள்ள முடியாதென்றும், மேல் நீதிமன்றத்திற்கு பிணை மனுவொன்றை முன்வைக்குமாறும் அறிவித்துள்ளார்.

ரம்ஸி ராஸிக்கின் மருத்துவ அறிக்கையை சிறைச்சாலைக்கு அனுப்பவும், அது தொடர்பான விடயங்களை மேற்கொள்வதற்கும் நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், சந்தேக நபரான ரம்ஸி ராஸிக் மே மாதம் 14 ஆம் திகதி தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/81084

Link to comment
Share on other sites

32 minutes ago, ampanai said:

இதன்போது சந்தேக நபரான ரம்ஸி ராஸிக் சார்பில் சட்டத்தரணி டிலன் டி சில்வாவுடன் ஆஜராகி பதிலளித்த ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன்,'

சந்தேக நபரான ரம்ஸி ராஸிக்.. சட்டத்தரணி டிலன் டி சில்வா ... பதிலளித்த ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன்

யாரப்பா நாட்டில் இனங்களுக்கு இடையே பிரச்சனை எனக்கூறுவது 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

சந்தேக நபரான ரம்ஸி ராஸிக்.. சட்டத்தரணி டிலன் டி சில்வா ... பதிலளித்த ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன்

யாரப்பா நாட்டில் இனங்களுக்கு இடையே பிரச்சனை எனக்கூறுவது 😃

😄

அது தானே ஒன்றுக்குள் ஒன்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார் காசு கொடுத்தாலும் நாங்க அங்க நிற்பம். கூவுவம்.

நமக்கு மக்கள் மண் மொழி என்ற எந்த மண்ணாங்கட்டியும் தேவையில்லை. 

நாங்க தேவை என்றால்.. இலங்கையில் இனச்சுத்திகரிப்பு செய்தது தமிழர்கள்.. இப்போ இன அழிப்புச் செய்வதும் அவர்களே என்றும் சொல்லுவம். அவ்வளவுக்கு நாங்கள் நல்லவர்கள். எங்களை எவரும் வாங்கலாம். ஆனால் நல்ல விலை கொடுக்க வேண்டும். விலைக்கு ஏற்ப எமது கூவல் அமையும். 

Link to comment
Share on other sites

15 minutes ago, விளங்க நினைப்பவன் said:

😄

அது தானே ஒன்றுக்குள் ஒன்று.

ஆம்,  தகுதிக்காரங்கள், காசுக்கரங்கள் - ஒன்றுக்குள் ஒன்று. 

வறுமைபட்டவன், தமிழ் அரசியல் கைதிகள் எல்லாம் இவர்கள்  கண்ணில் தெரிவதில்லை. 

Link to comment
Share on other sites

இங்கு சுமந்திரன் பங்கு பற்றியது சரியோ , பிழையோ என விவாதிக்கவில்லை। அனல் இந்த பிரமுகர் ஒரு மனித உரிமை செயட்படடாலரும் சிங்கள இனவாதம் , இஸ்லாமிய தீவிரவாதம் போன்றவற்றிட்கு எதிராக கருத்துக்களை எழுதும் கருத்தாளர்। எனவே முஸ்லீம் , சிங்கள பெயர்களை பார்த்தவுடன் ஒரு முடிவுக்கு வருவது எவ்வளவு தூரத்துக்கு சரியென்பது புரியவில்லை। 

Link to comment
Share on other sites

9 hours ago, ampanai said:

முஸ்லிம் ஒருவர் தொற்றாளராக அடையாளம் காணும் போது அவரின் இனத்தை குறிப்பிட்டு பல்வேறு பிரச்சாரங்கள் இடம்பெறுகின்றன. குறிப்பாக நாட்டில் பிரதான ஊடகமொன்றின் சதுர என்ற நிகழ்ச்சித் தொகுப்பாளர் பொது வெளியில் (பப்லிக்) முஸ்லிம்களை இலக்கு வைத்து இனவாத பிரச்சாரங்கள் மேற்கொள்கிரார். அதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுவதில்லை. அவரை நெருங்கக் கூட எவரும் முற்படுவதில்லை. இங்கு முஸ்லிகளுக்கு எதிராகவே இனவாதம் தூண்டப்படுகின்றது என்று ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் சுட்டிக் காட்டினார்.

ஏதோ ஒன்றை புதிதாக கூறுகிறாரா இவர் ? இல்லவே இல்லை.

ஒரு தராக்கி, ஒரு லசந்த இல்லை ஒரு எகனாகொட போன்றவர்கள் கொல்லப்பட்டதை / காணாமல் ஆக்கப்படதை எதிர்த்து இந்த படித்த வசதியான மனிதர்கள் அன்று போராடி இருந்தால் இன்று இந்த போராடும் நிலைமையை தவிர்த்திருக்கலாம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழருக்கு எதிராக அரசாங்கம், புத்த பிக்குகள், சிங்கள அரசியல்வாதிகள் எத்தனை இனவாதக் கருத்துக்களை  அள்ளி வீசியிருப்பாரகள். அப்பவெல்லாம் மௌனம் காத்த சுமந்திரன், இப்போ மட்டும் மனிதாபிமானம் கதைப்பதின் ரகசியம் என்ன? ஐயா! எங்களிடம் அவ்வளவு பணம் இல்லை உங்களுக்கு தர.ஆனால் எங்கள் பொன்னான வாக்கை போட்டு உங்கள் கடைக்கண் பார்வை எங்கள் மேல் பட்டு, எங்கள் மக்களின் விடுதலைக்கு பாடுபடுவீர்கள் என்று காத்திருக்கிறோம். நீங்களோ யார்யாருக்கோ  எல்லாம் வாதாடுகிறீர்கள். எம்மை மட்டும் புறந்தள்ளுவதன் நோக்கம் என்ன? அறிய தருவீர்களா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகின் எந்த நாடுகளிலும் இஸ்லாமிய அரசியல்வாதிகள், சிந்தனையாளர்கள், மக்கள் பிரமுகர்கள், சமயத் தலைவர்கள் எவராயினும் சிக்கலில் மாட்டும்போது அவர்களுக்கு வேண்டிய உதவிகளை வழங்கி காப்பாற்றுவதற்கு உலக இஸ்லாமிய அமைப்புகள் பின்னிற்பதில்லை. சவுதி உட்பட பல மத்திய கிழக்கு செல்வந்த நாடுகளின் பின்புலத்தில் இயங்கும் இந்த அமைப்புகள் சட்டதரணிகள் நீதிபதிகள் உள்ளூர் அரசியல்வாதிகள் என அனைவரையும் விலைக்கு வாங்கும் பணப்பலம் கொண்டவை. இங்கு நிச்சயம் சும்முக்கும் பணம் அள்ளி வீசப்பட்டிருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மந்திரன் இப்ப பார்லிமந்து போவதற்கு...முசுலீமூ வாக்கையும் நம்புது..

Link to comment
Share on other sites

21 hours ago, alvayan said:

மந்திரன் இப்ப பார்லிமந்து போவதற்கு...முசுலீமூ வாக்கையும் நம்புது..

100 % உத்தரவாதம்। அது மட்டும் நடக்காது। தமிழன் முஸ்லிமுக்கு வாக்களிப்பனே ஒழிய , முஸ்லீம் தமிழனுக்கு ஒரு நாளும் வாக்களிக்க மாடடான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, alvayan said:

மந்திரன் இப்ப பார்லிமந்து போவதற்கு...முசுலீமூ வாக்கையும் நம்புது..

பின் கதவு எப்பவும் திறந்திருக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரபல சமூக வலைத்தள எழுத்தாளராக கருதப்படும் ரம்ஸி ராஸிக், 

On 1/5/2020 at 02:47, ampanai said:

பிரபல சமூக வலைத்தள எழுத்தாளராக கருதப்படும்

சமுகவளைத்தளம்தானே என்று சும்மா கண்டதையும் நாங்கள் எழுதக்கூடாது போல இருக்கு குறிப்பாக கோத்தா ,மகிந்தா போன்றவர்களை தரக்குறைவாக....

Link to comment
Share on other sites

On 30/4/2020 at 19:00, ampanai said:

ஒரு தராக்கி, ஒரு லசந்த இல்லை ஒரு எகனாகொட போன்றவர்கள் கொல்லப்பட்டதை / காணாமல் ஆக்கப்படதை எதிர்த்து இந்த படித்த வசதியான மனிதர்கள் அன்று போராடி இருந்தால் இன்று இந்த போராடும் நிலைமையை தவிர்த்திருக்கலாம்.  

நீங்கள் பொதுவாக, நன்கு ஆராய்ந்து அறிவுபூர்வமாக எழுதுபவர், இந்த கருத்து அப்படி அமையவில்லை. “இந்த படித்த வசதியான மனிதர்கள்”  தராக்கி, லசந்த, எகனாகொட.  ஆகியோரின் கொலைகளை இலங்கை, அமெரிக்க நீதிமன்றங்களுக்கும், ஐ.நா.வுக்கும் கொண்டு சென்றதால் தான் அதுபற்றி நீங்களும் நானும் இன்று அறிந்திருக்கிறோம். சுமேந்திரன் லசந்தவின் சண்டேலீடர் பத்திரிகை சார்பாக, கணப்பொழுதில் கிடைத்த வேண்டுகோளை ஏற்று கோத்தபாயாவை குறுக்குவிசாரணை செய்த ஒரேஒரு துணிச்சலான சட்டத்தரணி என்று இலங்கை வரலாற்றில் இடம்பெற்றுள்ளார்.  கோத்தபாயாவை விசாரணை செய்யப்பயந்து, விசாரணை ஆரம்பமான அன்று. கூண்டோடு அனைத்து சிங்கள  சட்டத்தரணிகளும் லசந்நவின். பத்திரிகை.ஆசிரியர்களை கைவிட, அவர்கள் சுமேந்திரனை அணுகினார்கள். இது வரலாறு. 

Link to comment
Share on other sites

15 hours ago, Vankalayan said:

தமிழன் முஸ்லிமுக்கு வாக்களிப்பனே ஒழிய , முஸ்லீம் தமிழனுக்கு ஒரு நாளும் வாக்களிக்க மாடடான் 

இப்படி தான் அடாவடி மினிஸ்ட்டர் பாராளுமன்றம் சென்றார், அதே போல் 2010 தேர்தலில் 3 ஆசனங்களையும் பெற்றார்கள். வழக்கமாக 1 ஆசனம் தான் வன்னியில் கிடைக்கும்.

Link to comment
Share on other sites

2 hours ago, கற்பகதரு said:

சுமேந்திரன் லசந்தவின் சண்டேலீடர் பத்திரிகை சார்பாக, கணப்பொழுதில் கிடைத்த வேண்டுகோளை ஏற்று கோத்தபாயாவை குறுக்குவிசாரணை செய்த ஒரேஒரு துணிச்சலான சட்டத்தரணி என்று இலங்கை வரலாற்றில் இடம்பெற்றுள்ளார்.  கோத்தபாயாவை விசாரணை செய்யப்பயந்து, விசாரணை ஆரம்பமான அன்று. கூண்டோடு அனைத்து சிங்கள  சட்டத்தரணிகளும் லசந்நவின். பத்திரிகை.ஆசிரியர்களை கைவிட, அவர்கள் சுமேந்திரனை அணுகினார்கள். இது வரலாறு. 

ஆம், இந்த தகவலை நான் அறிந்து வைத்திருக்கவில்லை. சுமந்திரன் அவர்களின் துணிவிற்கு பாராட்டுக்கள்

இருந்தாலும், சுமந்திரன் அதிகமாக சமுதாயத்தில் வசதி படைத்தவர்களை மட்டுமே காக்கும் ஒரு சட்டத்தரணியாக பொதுவாக தெரிகிறார் என்பதே எனது ஆதங்கம்.   

Link to comment
Share on other sites

1 hour ago, ampanai said:

ஆம், இந்த தகவலை நான் அறிந்து வைத்திருக்கவில்லை. சுமந்திரன் அவர்களின் துணிவிற்கு பாராட்டுக்கள்

இருந்தாலும், சுமந்திரன் அதிகமாக சமுதாயத்தில் வசதி படைத்தவர்களை மட்டுமே காக்கும் ஒரு சட்டத்தரணியாக பொதுவாக தெரிகிறார் என்பதே எனது ஆதங்கம்.   

சுமேந்திரன் அதிக ஊதியம் பெறும் சட்டத்தரணி என்பது உண்மை. அவர் தனது வழக்குகளுக்கு தேவையான ஆய்வுகளுக்கு பலருக்கும் ஊதியம் கொடுக்க வேண்டி இருப்பதும் இதற்கு ஒரு காரணம். ஊடவியளாளர்கள், மருத்துவ, உயிரியல் ஆய்வாளர்கள், பாதுகாப்புத்துறை ஆய்வாளர்கள் ஆகியோரின் சேவைகளை அவர் பெறவேண்டி இருப்பதால் இப்படியாக ஊதியம் கொடுக்க வேண்டி இருக்கிறது. 

மலிவான சட்டத்தரணிகளும் இருக்கிறார்கள். இவர்கள் பொதுவாக, விண்ணப்பங்களை பதிவு செய்தல், வழக்குமன்றம் போய் நீதிபதியிடம் தமது பிரதிநிதியின் வேண்டுகோளை முன்வைத்தல் போன்றவற்றுடன் பணிகளை மட்டுப்படுத்தி கொள்கிறார்கள். வசதி குறைந்தவர்களுக்கு இவ்வாறான சட்டத்தரணிகள் கட்டுப்படியாகிறது. 

On 30/4/2020 at 19:40, satan said:

தமிழருக்கு எதிராக அரசாங்கம், புத்த பிக்குகள், சிங்கள அரசியல்வாதிகள் எத்தனை இனவாதக் கருத்துக்களை  அள்ளி வீசியிருப்பாரகள். அப்பவெல்லாம் மௌனம் காத்த சுமந்திரன், இப்போ மட்டும் மனிதாபிமானம் கதைப்பதின் ரகசியம் என்ன? ஐயா! எங்களிடம் அவ்வளவு பணம் இல்லை உங்களுக்கு தர.ஆனால் எங்கள் பொன்னான வாக்கை போட்டு உங்கள் கடைக்கண் பார்வை எங்கள் மேல் பட்டு, எங்கள் மக்களின் விடுதலைக்கு பாடுபடுவீர்கள் என்று காத்திருக்கிறோம். நீங்களோ யார்யாருக்கோ  எல்லாம் வாதாடுகிறீர்கள். எம்மை மட்டும் புறந்தள்ளுவதன் நோக்கம் என்ன? அறிய தருவீர்களா? 

அரசியல்வாதிகள் வாக்குகளை அதிகளவில் பெற்றுத்தரத்தக்க வழக்குகளை இலவசமாக முன்வந்து செய்யும் சாத்தியம் உள்ளது. சுமேந்திரனிடம் தமிழ்மக்கள் பலர் இதனை எதிர்பார்ப்பதாக தெரிகிறது. ஆனால் அவரோ வாக்குகளை இழந்து போகச்செய்யும் வழக்குகளை எடுத்து செய்வதை நாம் இப்போது காணக்கூடியதாக உள்ளது. இதிலிருந்து பின்வருவனவற்றை எதிர்வுகூறலாம்:

1. சுமேந்திரன் அரசியலில் இருந்து விலகி, முழுநேர சட்டத்தரணியாக செயற்பட முடிவு செய்து விட்டார்.

2.  தமிழ்மக்களின் அரசியல் சார்பான வழக்குகள் எவையும் வெற்றிபெறத்தக்கவை அல்ல.

3.  இலங்கையில் தமிழ் தேசிய அரசியல் அஸ்தமனமாகிவிட்டதாக சுமேந்திரன் கருதுகிறார்.

Link to comment
Share on other sites

39 minutes ago, கற்பகதரு said:

சுமேந்திரன் அதிக ஊதியம் பெறும் சட்டத்தரணி என்பது உண்மை. அவர் தனது வழக்குகளுக்கு தேவையான ஆய்வுகளுக்கு பலருக்கும் ஊதியம் கொடுக்க வேண்டி இருப்பதும் இதற்கு ஒரு காரணம். ஊடவியளாளர்கள், மருத்துவ, உயிரியல் ஆய்வாளர்கள், பாதுகாப்புத்துறை ஆய்வாளர்கள் ஆகியோரின் சேவைகளை அவர் பெறவேண்டி இருப்பதால் இப்படியாக ஊதியம் கொடுக்க வேண்டி இருக்கிறது. 

மலிவான சட்டத்தரணிகளும் இருக்கிறார்கள். இவர்கள் பொதுவாக, விண்ணப்பங்களை பதிவு செய்தல், வழக்குமன்றம் போய் நீதிபதியிடம் தமது பிரதிநிதியின் வேண்டுகோளை முன்வைத்தல் போன்றவற்றுடன் பணிகளை மட்டுப்படுத்தி கொள்கிறார்கள். வசதி குறைந்தவர்களுக்கு இவ்வாறான சட்டத்தரணிகள் கட்டுப்படியாகிறது. 

அவர் ஒரு திறமையான சட்டத்தரணியாக இருந்து உழைப்பதில் தவறில்லை, அதை மட்டுமே செய்வதில் தவறில்லை.

ஆனால், ஒரு இனத்தின் அரசியல் கட்சியிலும் இருந்துகொண்டு, தனது தொழிலையும் முன்னெடுத்து செல்வதும் தான் தவறு. காரணம், அவர் மக்களுக்காக உழைப்பதை முதன்மையாக கொண்டிருக்கவில்லை.

எனவே, கட்சியை விட்டுவிட்டு   சட்டத்தரணியாக  செய்லபடல்வேண்டும். இல்லை, இப்படி வாதாடுவதை விட்டுவிட்டு மக்களின் தேவைகளுக்கு முழுநேரமாக உழைக்கவேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  தமிழ்மக்களின் அரசியல் சார்பான வழக்குகள் எவையும் வெற்றிபெறத்தக்கவை அல்ல.

3.  இலங்கையில் தமிழ் தேசிய அரசியல் அஸ்தமனமாகிவிட்டதாக சுமேந்திரன் கருதுகிறார்.

இதுதான் அவருடைய சுயரூபம்...விளங்கினால் சரி

Link to comment
Share on other sites

ரஞ்சன் ராமநாயக்கா பிணை விவகாரம்-
ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் எனக்குத் தொலைபேசியில் கூறிய விடயம்-
--- ------- --------- ----------- -------------------------- -------- ---
ஊரடங்குச் சட்டம் எந்தச் சட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது என்று கேள்வி எழுப்பி, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வாதிட்டதால், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கா பிணையில் விடுதலை செய்யப்பட்டதாகச் சில தமிழ் நாளேடுகளில் செய்திகள் பிரசுரமாகியிருந்தன.

ஆனால் நுகேகொட நீதிமன்றத்தில் நடந்த வழக்கு ரஞ்சன் ராமநாயக்காவுக்குப் பிணை வழங்குவதற்கான விசாரணை மாத்திரமே தவிர ஊரடங்குச் சட்டம் தவறானது என்ற அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டு பிணை வழங்கப்படவில்லை என நான் எனது முகநூல் பதிவில் எழுதியிருந்தேன்.

இந்த நிலையில், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகன 29-04-2020 அன்று நுகேகொட நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் ஒன்றைச் சமர்ப்பித்திருந்தார். ஊரடங்குச் சட்டம் சட்டவிரோதமானதென சட்டத்தரணி சுமந்திரன் வாதிட்டதாலேயே ரஞ்சன் ராமநாயக்காவுக்குப் பிணை வழங்கப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்ததாகவும், இதனால் ஊரடங்குச் சட்டம் சட்டரீதியானது என்று வலியுறுத்தியே நகர்த்தல் பத்திரத்தைச் சமர்ப்பித்திருந்தாகவும் அஜித் ரோகன மன்றில் கூறியிருந்தார்.

இது தொடர்பான விசாரணை 29 ஆம் திகதியன்றே இடம்பெற்றது. ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தபோது ரஞ்சன் ராமநாயக்கா பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தார் என்ற குற்றச்சாட்டில் கைதாகித் தடுத்து வைக்கப்பட்டிருந்த விவகாரத்தில், ரஞ்சன் ராமநாயக்காவுக்குப் பிணை வழங்குவது தொடர்பாக வாதிட்டுப் பிணை வழங்கப்பட்டதே தவிர, ஊரடங்குச் சட்டம் குறித்த உத்தரவுகள் எதுவுமே இந்த நீதிமன்றத்தில் பிறப்பிக்கப்படவில்லை என்று அப்போது நீதிபதி, தான் ஏற்கனவே பிறப்பித்திருந்த கட்டயை மீளவும் வாசித்து மேற்கோள்காட்டிக் கூறியிருந்தார்.

ஆனால், எனது முகநூல் பதிவு தொடர்பாக குறிப்பிட்ட ஒரு பத்திரிகை ஒன்றின் ஆசிரியர் விமர்சனங்களைச் செய்துள்ளார். இதனால் சட்டத்தரணி சுமந்திரனிடம் நான் இன்று காலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டேன்.

எனக்கு விளக்கமளித்த சட்டத்தரணி சுமந்திரன்--

----உங்கள் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தமை போன்று ஊரடங்குச் சட்டம் தவறானது என்ற அடிப்படையில் ரஞ்சன் ராமநாயக்காவுக்குப் பிணை வழங்கப்பட்டதாக வெளியான நாளேடுகள், இணையச் செய்திகள் எதனையும் அஜித் ரோகன நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை. ஆனால் ஏதோ பெரிய பத்திரிகைக் கட்டுகளைத் தூக்கி வந்து தனது மேசையில் அஜித் ரோகன வைத்திருந்தார்.

----அத்துடன் சமர்ப்பித்த நகல் பத்திரத்தை அஜித் ரோகன வாபஸ் பெற்றார். எனவே இந்த இரு விடயங்களும் உங்கள் பதிவில் இல்லை.

இவ்வாறு சட்டத்தரணி சுமத்திரன் என்னிடம் சுட்டிக்காட்டினார்.

ஆகவே சட்டத்தரணி சுமந்திரனோடு உரையாடிதன்படி இந்த இரண்டு விடயங்களையும் எனது பதிவில் தற்போது இணைத்துள்ளேன்.

இந்த விடயம் தொடர்பாக நான் எழுதிய இரண்டு பதிவுகளில், முதல் பதிவைத் தான் வாசிக்கவில்லை எனவும் இரண்டாவது பதிவையே வாசித்ததாகவும் சுமந்திரன் என்னிடம் மேலும் கூறினார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கற்பகதரு said:

 தமிழ்மக்களின் அரசியல் சார்பான வழக்குகள் எவையும் வெற்றிபெறத்தக்கவை அல்ல.

தமிழ் மக்களின் அரசியல் சார்பான ஆசைகள், எதிர்பார்ப்புகள் நிஞாயமற்றவை. அவர்கள் அதற்கு தகுதி அற்றவர்கள்  என்று கருதுகிறீர்களா? அப்படியானால் என்ன காரணம்? தமிழருக்கு ஒரு அரசியல் தலைமை எதற்கு? அல்லது இந்த வழக்குகளை வாதாடும் திறமை சுமந்திரனுக்கு இல்லை என்று கூறுகிறீர்களா?  எதற்கு இவ்வளவு காலமும் இதோ விடிவு, அதோ விடிவு என்று ஏன் காலத்தை வீணடித்து மக்களை ஏமாற்றி வாக்குச் சேர்த்து பாராளுமன்றம் போனார்கள்? தங்கள் வசதிக்காகவா? தன் தொழிலில் உண்மையுள்ளவன், எதிலும் உண்மையுள்ளவனாகவே இருப்பான் என்பது எனது கருத்து. ஏனெனில் அதுவே அவனது வாழ்வு. அதை பிரட்டுபவன் எதையும் பிரட்டிப் பேசுவான். 

Link to comment
Share on other sites

5 hours ago, கற்பகதரு said:

அரசியல்வாதிகள் வாக்குகளை அதிகளவில் பெற்றுத்தரத்தக்க வழக்குகளை இலவசமாக முன்வந்து செய்யும் சாத்தியம் உள்ளது. சுமேந்திரனிடம் தமிழ்மக்கள் பலர் இதனை எதிர்பார்ப்பதாக தெரிகிறது. ஆனால் அவரோ வாக்குகளை இழந்து போகச்செய்யும் வழக்குகளை எடுத்து செய்வதை நாம் இப்போது காணக்கூடியதாக உள்ளது. இதிலிருந்து பின்வருவனவற்றை எதிர்வுகூறலாம்:

1. சுமேந்திரன் அரசியலில் இருந்து விலகி, முழுநேர சட்டத்தரணியாக செயற்பட முடிவு செய்து விட்டார்.

2.  தமிழ்மக்களின் அரசியல் சார்பான வழக்குகள் எவையும் வெற்றிபெறத்தக்கவை அல்ல.

3.  இலங்கையில் தமிழ் தேசிய அரசியல் அஸ்தமனமாகிவிட்டதாக சுமேந்திரன் கருதுகிறார்.

12 minutes ago, satan said:

தமிழ் மக்களின் அரசியல் சார்பான ஆசைகள், எதிர்பார்ப்புகள் நிஞாயமற்றவை. அவர்கள் அதற்கு தகுதி அற்றவர்கள்  என்று கருதுகிறீர்களா? அப்படியானால் என்ன காரணம்? 

தமிழ் மக்களின் அரசியல் சார்பான ஆசைகள், எதிர்பார்ப்புகள் நியாயமானவை. தமிழ் மக்கள் தமது அரசியல் சார்பான ஆசைகள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை பெற தகுதியானவர்கள். இதனை சுமேந்துரனும் ஏற்றுக்கொண்டுள்ளார் என்றே நான் நினைக்கிறேன். ஆனால், இந்த அரசியல் சார்பான ஆசைகளும், எதிர்பார்ப்புகளும் நிதர்சனமாகும் சாத்தியம் குறைந்தவை. 30 வருடகால போரின் முடிவு அதை தெளிவாக்கி இருக்கிறது.  

12 minutes ago, satan said:

தமிழருக்கு ஒரு அரசியல் தலைமை எதற்கு?

சாத்தியம் குறைந்த ஆசைகள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை கொண்டிருப்பதற்கு தமிழ் மக்களுக்கு நிச்சயமாக உரிமை உள்ளது. அவ்வாறான ஆசைகள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் தலைமை இவ்வாறான ஆசைகள், எதிர்பார்ப்புகள் இருப்பதை உலகறிய செய்யலாம்.

12 minutes ago, satan said:

இந்த வழக்குகளை வாதாடும் திறமை சுமந்திரனுக்கு இல்லை என்று கூறுகிறீர்களா? 

இவ்வாறான   அரசியல்  வழக்குகளை வெற்றிபெற வைக்க சுமேந்திரனால் முடியாது என்று நான் நிச்சயமாக நினைக்கிறேன். அவரும் அவ்வாறு நினைப்பதாகவே கருதுகிறேன்,

12 minutes ago, satan said:

எதற்கு இவ்வளவு காலமும் இதோ விடிவு, அதோ விடிவு என்று ஏன் காலத்தை வீணடித்து மக்களை ஏமாற்றி வாக்குச் சேர்த்து பாராளுமன்றம் போனார்கள்? தங்கள் வசதிக்காகவா?

தந்தை செல்வா காலத்தில் மக்களை சாத்வீக போராட்டத்தில் ஒன்றுபடுத்தி பாராளுமன்றம் போனார்கள். வசதியாகவும் வாழ்ந்தார்கள். அது தோற்று ஆயுதப்போராட்டம் ஆரம்பமானது. அன்றைய அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றி விட்டார்கள் என்று கருதி ஆயுததாரிகள் அரசியல்வாதிகள் சிலருக்கு மரணதண்டனை வழங்கினார்கள். ஆயுதப்போராட்டத்துக்கு பெருமளவு பணமும் பொருளும் மக்களிடம் இருந்து திரட்டப்பட்டது. பெருமளவு பிள்ளைகள் போராட்டத்துக்கு போனார்கள். எல்லாம் அழிந்து போராட்டம் தோற்றுப்போனது. அதன்பின் சுமேந்திரன் போன்ற சிலர் அரசியலுக்கு வந்து அரசியல் சட்டத்தை மாற்றி தமிழ்மக்களின் ஆசைகள், எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முயன்றார்கள். ஈஸ்ரர் குண்டுத்தாக்குதலும் கொரோனாவும் அந்த முயற்சிக்கு நிரந்தர தோல்வியை ஏற்படுத்திவிட்டன. யாரும் யாரையும் ஏமாற்றவில்லை, எல்லோரும் முயற்சி செய்தார்கள். வசதி உள்ளவர்கள் வசதியாக வாழ்ந்தார்கள், ஆனால் முயற்சி செய்தார்கள். முயற்சிகள் வெற்றி பெறவில்லை. வேறு முயற்சிகளுக்கான பாதை யாருக்கும் தெரியாது.

Link to comment
Share on other sites

21 hours ago, putthan said:

பிரபல சமூக வலைத்தள எழுத்தாளராக கருதப்படும் ரம்ஸி ராஸிக், 

சமுகவளைத்தளம்தானே என்று சும்மா கண்டதையும் நாங்கள் எழுதக்கூடாது போல இருக்கு குறிப்பாக கோத்தா ,மகிந்தா போன்றவர்களை தரக்குறைவாக....

உண்மை । எல்லாம் கவனிக்கப்படுகின்றன। உண்மை செய்தி என்றாலும் விசாரித்து எழுதவும்। விசேடமாக அரசைப்பற்றி।

8 hours ago, Dash said:

இப்படி தான் அடாவடி மினிஸ்ட்டர் பாராளுமன்றம் சென்றார், அதே போல் 2010 தேர்தலில் 3 ஆசனங்களையும் பெற்றார்கள். வழக்கமாக 1 ஆசனம் தான் வன்னியில் கிடைக்கும்.

இப்போதும் ரிசார்ட் பணத்தை அள்ளி வீச அவனுக்கும் , வேறு முஸ்லிமுக்கும் வாக்களிக்க தமிழன் தயாராகவே இருக்கிறான் வன்னியில்। இல்லாவிடடாள் எப்படி அத்தனை முஸ்லிம்கள் வரமுடியும்। 

Link to comment
Share on other sites

4 hours ago, alvayan said:

  தமிழ்மக்களின் அரசியல் சார்பான வழக்குகள் எவையும் வெற்றிபெறத்தக்கவை அல்ல.

3.  இலங்கையில் தமிழ் தேசிய அரசியல் அஸ்தமனமாகிவிட்டதாக சுமேந்திரன் கருதுகிறார்.

இதுதான் அவருடைய சுயரூபம்...விளங்கினால் சரி

இது சுயரூபம் இல்லை। இதுதான் உண்மை।

இங்குள்ள மக்களுக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் இவரை தெரிவு செய்வதும் , நிராகரிப்பதும்। எல்லாம் மக்களின் கைகளில்தான் இருக்கிறது।

இவருடைய குணசத்தியங்களை மக்களும் அறிந்திருப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்।கள உறவுகளுக்கு இவளவு தெரிந்திருக்கும்போது , அங்குள்ள படித்த மக்களுக்கு தெரியாதிருக்க வாய்ப்பில்லை।

எனவே, தெரிவு  செய்துவிட்டு குய்யோ முய்யோ என்று சத்தமிடுவதில் பலன் இல்லை।  

Link to comment
Share on other sites

2 hours ago, satan said:

தமிழ் மக்களின் அரசியல் சார்பான ஆசைகள், எதிர்பார்ப்புகள் நிஞாயமற்றவை. அவர்கள் அதற்கு தகுதி அற்றவர்கள்  என்று கருதுகிறீர்களா? அப்படியானால் என்ன காரணம்? தமிழருக்கு ஒரு அரசியல் தலைமை எதற்கு? அல்லது இந்த வழக்குகளை வாதாடும் திறமை சுமந்திரனுக்கு இல்லை என்று கூறுகிறீர்களா?  எதற்கு இவ்வளவு காலமும் இதோ விடிவு, அதோ விடிவு என்று ஏன் காலத்தை வீணடித்து மக்களை ஏமாற்றி வாக்குச் சேர்த்து பாராளுமன்றம் போனார்கள்? தங்கள் வசதிக்காகவா? தன் தொழிலில் உண்மையுள்ளவன், எதிலும் உண்மையுள்ளவனாகவே இருப்பான் என்பது எனது கருத்து. ஏனெனில் அதுவே அவனது வாழ்வு. அதை பிரட்டுபவன் எதையும் பிரட்டிப் பேசுவான். 

சடடதரணியின் தொழிலே உண்மையை பொய்யென்றும் , பொய்யை உண்மை என்றும் நிரூபிப்பதும்தான்। இங்கு நேர்மை எல்லாம் எதிர்பார்க்கக்கூடாது। மக்களுக்கு தலைமை பிடிக்கவிடடாள் நிராகரித்துவிட வேண்டியதுதான்।

படித்த மக்கள் உள்ள ஒரு தொகுதியில் நின்று வெல்வது என்பது இலகுவான காரியம் இல்லை। இதட்குத்தான் மக்களுக்கு ஐந்து வருடத்துக்கு ஒரு தடவை சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது। சரியான தெரிவோ , பிழையான தெரிவோ அதன் பலனை மக்கள் அனுபவித்தே ஆக வேண்டும்। வருகிறது நல்ல ஒரு சந்தர்ப்பம்। 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.