Jump to content

இர்பான் கான்:  மிகச்சிறந்த நடிகரின் மறைவு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இர்பான் கான்:  மிகச்சிறந்த நடிகரின் மறைவு!

95145670_2832235583565869_85389664899762

தேர்ந்த கதாப்பாத்திரங்கள் மூலம் எப்போதும் உலக மக்களின் மனதில் நீங்காத இடம்பிடித்திருந்த இர்பான் கான் மரணமடைந்தார் என்ற செய்தி பலரை சோகக் கடலில் மூழ்கியிருக்க செய்திருக்கிறது. தன்னுடைய அசாத்திய நடிப்பின் மூலம் உலகம் முழுவதும் கவனம் பெற்று பல ஹாலிவுட் படங்களில் நடித்த இர்பான் கான் இன்று காலை(29.04.2020) மரணமடைந்தார்.

1967ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பிறந்த இர்பான் கான் இளம் பிராயத்திலே தன் தந்தையை இழந்தார். கிரிக்கெட், நாடகத்துறை என்று பல துறைகளில் ஆர்வம் கொண்டிருந்த இர்பான் கடைசியாக தஞ்சமடைந்தது சினிமாத்துறையில். தான் ஏற்றுகொண்ட கதாபாத்திரத்திற்கு மிகையாக ஒரு துளி நடிப்பைக்கூட இர்பானிடமிருந்து எதிர்பார்த்திடமுடியாது. துல்லியமான நடிப்பு, முறையான கதாபத்திர தேர்வு, சக நடிகர்களை நேசிக்கும் நல்ல மனிதர் என்று அவருடைய வளர்ச்சி வெகு சில நாட்களிலே பாலிவுட் சினிமாக்களில் உச்சத்தை தொட்டது.

94488143_847833212397204_525296127608619

தொடக்க காலகட்டத்தில் பல நேர்மறை கதாப்பாத்திரங்களில்  நடித்துவந்த இர்பான் நாளடைவில் மெல்ல மெல்ல எதிர்மறை கதாபாத்திரங்களுக்கு பேர்போனவராக உருமாறினார். தன்னுடைய மிரட்டும் கண்கள் மூலம் கதைக்குத் தேவையான நடிப்பை எந்தவித அலட்டல்களும் இல்லாமல் மிகச் சிறப்பாக வெளிப்படுத்த தெரிந்த இர்பானுக்கு பல உலக சினிமாக்களில் இருந்து வாய்ப்புகள் வந்தவண்ண இருந்தன. சலாம் பாம்பே, ஹாசில், மக்பூல், பான் சிங் தோமர், லன்ச் பாக்ஸ், ஹைதர், பிக்கூ என இந்திய சினிமாவின் பல முக்கிய திரைப்படங்களில் தன்னுடைய நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார். அதுமட்டுமில்லாமல் ஸ்லம்டாக் மில்லினியர், தி அமேஸிங் ஸ்பைடர் மேன், லைஃப் ஆஃப் பை, ஜூராஸிக் வேல்டு, இன்ஃபெர்னோ போன்ற ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.

94729827_2726879600771393_15997617631196

இந்நிலையில்தான் இர்பான் கானுக்கு கடந்த 2018ஆம் ஆண்டு  எண்டோகிரைன் புற்றுநோய் பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டது.  இந்த வினோதமான புற்றுநோய் ரத்தத்தில் உள்ள ஹார்மோன்களை பாதித்து கொஞ்ச கொஞ்சமாக ரத்த செல்களைப் அழிக்கும். 53 வயதான இர்பான் கான் கடந்த இரண்டு வருடங்களாக இந்த புற்றுநோய் காரணமாக அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் நேற்று திடீரென்று மும்பை கோகிலா பென் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரின் மறைவையொட்டி பல திரைப் பிரபலங்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இர்பான் கானின் மறைவு இந்திய சினிமாவில் ஒரு சிறந்த நடிகருக்கான வெற்றிடத்தை உருவாகியுள்ளதை யாராலும் மறுக்க முடியாது

 

https://uyirmmai.com/செய்திகள்/சினிமா/இர்பான்-கான்-மிகச்சிறந்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி . நல்ல நடிப்பாற்றலும் , நற்குணமும் கொண்ட ஒரு நடிகர். அவரது நேர்காணல் வீடியோக்களை பார்த்தபோது அவர் தத்துவத்தில் மிக ஆர்வம் கொண்டிருந்தார் என்று தெரிகிறது. அவரது தாயார் ராஜஸ்தான் அரச வம்சாவளி என்று அறிந்தேன். 19 வயதில் தந்தையை இழந்திருந்தாலும் பண வசதிக்கு குறைவிருக்கவில்லை. சினிமாவை தாயார் விரும்பாத போதும் அவருக்கிருந்த சினிமா நாட்டத்தினால் ஒரு நடிகன் ஆனார். தனது சொந்த முனேற்றத்துக்கு அரச பரம்பரை பெயர் தடையாகி விட்டாலும் என்று நினைத்து Sahabzade  என்ற அவரின் பெயரின் முதற்பகுதியை அகற்றிவிட்டு Irrfan Khan என்று தன்னை அறிமுகப்படுத்தியவர். அவரது ஆன்மா சாந்தி அடைவதாக.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள்......!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அற்புதமான நடிகனுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

நம்பவே முடியாதவொரு இழப்பு ... ஆத்மா சாந்தியடையட்டும் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இர்ஃபான் கான்: கோடானு கோடி மக்கள் மனங்களில் நீங்கா இடம்பிடித்த நடிகர்!

spacer.png

குமுதினி பதி

இர்ஃபான் கான் 29 ஏப்ரல் 2020 அன்று நம்மைவிட்டு மறைந்தார். ஆனால், அவர் மிகச்சிறந்த பாரம்பரியத்தையும் பல திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை பாத்திரங்கள் நிறைந்த பொக்கிஷத்தையும் நமக்கு விட்டுச் சென்றுள்ளார். வரும் ஆண்டுகளில் பல இளம் கலைஞர்களுக்கு அவை வழிகாட்டும்.

இந்தியத் திரைப்படத்துறையில் அறிவுஜீவித் திறனும் மிகுந்த அறிவாற்றலும் கொண்ட நவீன கலை உணர்வுகளுடன் கூடிய புதியதொரு தலைமுறை மீண்டும் உருவாகி வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. இவர்களே நம் நாட்டில் அதிலும் பாலிவுட்டில், புதிய கலாச்சார மாண்புகளை வளர்த்து வருகின்றனர். இர்ஃபான் கான் அவர்களுள் ஒருவர்.

 

இர்ஃபான் மசாலா படங்களில் வரும் சராசரி கதாநாயகன் போன்றவர் அல்லர். ஒரு குறுகிய ரசிகர்கள் வட்டத்தை மட்டுமேகொண்ட கலைப்படங்கள் என்ற தனி உலகைச் சேர்ந்தவரும் அல்லர். நசிருதீன் ஷா மற்றும் ஓம் பூரி ஆகியவர்களைப் போல கலைப் பண்புகளையும் பிரதிபலித்து வணிகரீதியாகவும் வெற்றி காணும் பரந்த ரசிகர்களைக் கொண்ட இடைநிலை சினிமாவால் உருவானவர்.

பல கதாநாயகர்களைப் போல இவரும் ஒருவர் என்று அவரைக் கூற முடியாது. இர்ஃபானை வித்தியாசமானவராகக் காட்டியது என்ன? அவரது மரணத்தின் இழப்பால் கோடிக்கணக்கானவர்கள் வருந்துவது ஏன்? மிகப்பரந்த அளவில் ரசிகர்கள் மத்தியில் அவர் பிரபலமானது ஏன்?

 

இதற்கு முக்கிய காரணம் அவர் மக்களிடமிருந்து ஒதுங்கியுள்ள ஒரு மேட்டுக்குடி குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் அல்லர். அவர் சாதாரண மக்களின் மத்தியில் ஒருவராய் இருந்து உருவானவர். எனவே அவர்களுடைய கலை நயங்களை இயல்பாகவே வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தவர். இர்ஃபான் தொடக்கத்தில் சாஹேப்சாதே இர்ஃபான் அலி கானாகத்தான் பிறந்து வளர்ந்தார். ராஜஸ்தான் மாநிலத்தில் டோன்க் ஜில்லாவில் ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அது எத்தகைய பத்தாம் பசலிக் குடும்பம் என்றால் திரைப்படம் பார்ப்பதற்குகூட அனுமதி இல்லை. அத்தகைய குடும்பத்திலிருந்து வந்த ஓர் இளைஞன் முப்பது ஆண்டுகளுக்குப் பின் திரைப்பட உலகில் தன் முத்திரை பதிப்பார் என ஒருவரும் எதிர்பார்த்திருக்க முடியாது. தான் சிறுவனாக இருந்தபோது கதைகள் என்றால் தனக்கு பெரும் மோகம் என ஒரு பேட்டியில் இர்ஃபான் கூறியிருந்தார். அவர் வீட்டுக்குப் பின்னால் ஒதுக்குப்புறமாக இருந்த ஓர் அறையில் அவரும் அவர் நண்பர்கள் சிலரும் கூடி தங்களுக்குள்ளேயே நடித்துக்காட்டுவதும் கதைசொல்லிக் கொள்வதும் வழக்கமாம். சில நேரங்களில் அவர்கள் ஜெய்ப்பூர் - அஜ்மேர் வானொலியிலும் பிபிசி வானொலியிலும் வரும் கதைகளைக் கேட்பார்களாம். இர்ஃபானுக்கு அப்போது 14 வயது.

 

ஷியாம் பெனகலின் ஜுனூன் படத்தைப் பார்த்த பிறகு அதில் நடித்த நடிகர் ராஜேஷ் விவேக் எப்படி மந்திர சக்தி கொண்டவரைப் போல நடித்தார் என இர்ஃபான் ஆச்சரியப்பட்டதுண்டாம். புனேவிலுள்ள திரைப்படக் கல்லூரிக்கு நிகரான டெல்லியிலுள்ள தேசிய நாடகப் பயிற்சிப்பள்ளியிலிருந்துதான் (National School of Drama/NSD) அத்தகைய நடிகர்கள் தயாராகி வருகின்றனர் என அவர் நண்பர் யூசுப் குரானா அவருக்குத் தெரிவித்தார். என்எஸ்டியில் சேர வேண்டும் என அவருக்கு ஒரு கனவு பிறந்தது. அதை நனவாக்குவதில் வெற்றியும் கண்டார். இர்ஃபானின் திரைப்படத் துறைப் பயணம் அங்கிருந்து தொடங்கியது.

"வித்தியாசமாக ஏதோ செய்ய வேண்டும் என இர்ஃபானுக்கு ஒரு வேட்கை இருந்தது. என்எஸ்டியில் தேர்ச்சி பெற்று நீங்கள் வெளிவரும்போது நசிருதீன் ஷா, ஓம் ஷிவ்புரி மற்றும் ஓம் பூரி போன்ற ஜாம்பவான்கள் உங்கள் முன் உள்ளனர். அவர்கள் முன் மிகச் சிறியவர்களாக நீங்கள் உணருவீர்கள். அவர்கள் மட்டத்துக்கு எவ்வாறு உயருவது என நீங்கள் பிரமிப்பீர்கள். ஆனால் மீரா நாயரின் சலாம் பாம்பே படத்தில் நடிப்பதற்கு 1988இல் இர்ஃபானுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னர், இர்ஃபான் ஒரு கணமும் தேங்கவில்லை" என என்எஸ்டியில் அவருக்கு மூத்தவரும் அவருடைய நெருங்கிய நண்பரும் திரைப்படப் படைப்பாளியான சுதர்ஷன் ஜூயால் தெரிவித்தார்.

spacer.png

இர்ஃபான், நசிருதீன் ஷாவிடமிருந்து பெரும் உத்வேகத்தைப் பெற்றார். ஆனால் திரைப்படத் துறையில் ஒரு வாழ்க்கைத்தொழிலை வளர்த்தெடுப்பது பெரும் போராட்டமாக இருந்தது. அவருக்குக் கிடைத்த அடுத்த முக்கியமான படம் திக்மான்ஷு துலியாவின் திரைப்படம் ஹாசில். அதில் எதிர்மறையான பாத்திரத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகர் என்பதற்கான ஃபிலிம்ஃபேர் விருது இர்ஃபானுக்கு கிடைத்தது. 2001இல் பிரிட்டிஷ் திரைப்படத் தயாரிப்பாளர் ஆசிப் கபாடியா இயக்கிய தி வாரியர் படத்தில் நடிக்க இர்ஃபானுக்கு ஒரு புதிய வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படத்தில் இர்ஃபான் போராளி லாஃப்கார்டியா பாத்திரத்தில் நடித்தார். இந்தப் பட ஷூட்டிங் ராஜஸ்தானில் நடைபெற்றது. இந்தப் படத்தில் நடிப்பதற்கு முன்பு இர்ஃபான் சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்தார். நல்ல பட வாய்ப்பு எதுவும் கிடைக்காததால் இது அவருக்கு மிகவும் சலிப்பைத் தந்தது. பணம் சம்பாதிப்பது பற்றி இர்ஃபானுக்கு பெரும் அக்கறை இருக்கவில்லை. பெரும் சவாலாக விளங்கக்கூடிய சில பாத்திரங்களில் அவர் நடிக்க விரும்பினார். அவற்றில் நடிப்பதன் மூலம் தன் திறனைத் தானே கண்டறிய விரும்பினார். ஆனால், இந்திய திரைப்படத் துறையின் அடிப்படை ஆட்ட விதிகள் தனக்குப் பொருந்தவில்லை என விரைவிலேயே உணர்ந்தார்.

இந்தக்கோணத்திலிருந்து பார்த்தால் தி வாரியர் படத்தில் அவருடைய பாத்திரம் அவருக்கு பெரும் சவாலாக முன்வந்தது. சிறந்த பிரிட்டிஷ் படம் என அந்தப் படத்துக்கு அலெக்சாண்டர் கோர்டா விருது கிடைத்தது. அது அகாடமி விருதுக்கும்கூட முன்மொழியப்பட்டது. ஆனால் அந்நிய மொழிப் படமாக இருந்ததால் அதற்கு விருது கொடுக்கப்பட முடியவில்லை.

 

2003இல், விஷால் பரத்வாஜ் இயக்கத்தில் வெளியான மக்பூல் மூலம் இர்ஃபான் மீண்டும் பிரபலமானார். இந்தக் கதை மும்பை நிழலுலக தாதா ஜஹாங்கீர் பற்றியது. ஜஹாங்கீர் துணைவி நிம்மி ஜஹாங்கீர், தன் கணவரின் முக்கிய தளபதியான மக்பூல் மீது மையல் கொள்கிறாள். நிம்மியின் தூண்டுதல் பேரில் மக்பூல் ஜஹாங்கீரைக் கொல்கிறான். இந்தக்கதை ஷேக்ஸ்பியர் நாடகம் மேக்பெத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்தப் படத்தில் இர்ஃபானின் கண்களும் உடல்வாகுமே பெரும்பாலும் பேசின. படத்தயாரிப்பாளர்கள் இர்ஃபானை எப்போதுமே ஒரு வில்லனாக, ஓர் எதிர்மறை கதாநாயகனாக சித்திரிக்க தலைப்பட்டனர். ஆனால் இர்ஃபான் கான், பின்னர் மீரா நாயர் இயக்கிய நேம்சேக் படத்தில் ஒரு தலைசிறந்த குணச்சித்திரப் பாத்திரத்தில் நடித்ததன் மூலம் இந்தப் போக்கிலிருந்து தப்பினார்.

பான் சிங் தோமரின் வாழ்க்கையைப் பற்றி ஒரு படமெடுக்கவேண்டுமென திக்மாங்ஷு துலியா முடிவு செய்தபோது மற்றொரு மகத்தான வாய்ப்பு இர்ஃபானுக்குக் கிடைத்தது. பான் சிங் தோமர் நிஜ வாழ்க்கையில் ஒரு ராணுவ வீரரும் தடகள வீரருமாவார். ஆனால், ஒரு துண்டு நிலம் குறித்த குடும்பத் தகராறு காரணமாக ஒரு கொள்ளையனாக மாறினார். இந்தப் படம் வாயிலாக திக்மாங்ஷு இர்ஃபானை தீவிர நடிப்பு பாதைக்குக் கொண்டுவந்து சேர்த்தார். தனக்கும் சரி இர்ஃபானுக்கும் சரி இந்தப் படம் மிகப்பெரும் சவாலாக அமைந்தது என திக்மாங்ஷு கூறுகிறார். இந்தத் திரைப்படத்துக்காக ஏராளமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பான் சிங் தோமரின் குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்தனர். மில்கா சிங் உட்பட பல தடகள வீரர்களோடு உரையாடினர். சம்பல் பள்ளத்தாக்கில் கொள்ளையர்களோடு தங்கி உரையாடினர். திரைப்பட ஷூட்டிங் நடைபெற்ற போது கொள்ளையர்களின் வசிப்பிடமாக இருந்த அந்த வனாந்திரப்பகுதியின் வெம்மையையும் புழுதிப்படலத்தையும் அவர்கள் சகித்துக்கொள்ள வேண்டியிருந்தது.

 

இர்ஃபானின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டு திரும்பிய பின்னர் இந்தக் கட்டுரையாசிரியருடன் உரையாடும்போது திக்மாங்ஷு கூறினார்: “நானும் இர்ஃபானும் தினந்தோறும் சந்திப்போம். நாங்கள் சேர்ந்தே வாழ்ந்தோம். இன்று நான் என் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை இழந்தது போல உணருகிறேன். இர்ஃபானின் சிறப்புத் தன்மை என்னவென்றால் அவர் ஏதோ ஒரு பாத்திரத்தில் நடிப்பது மட்டுமல்ல, ஒரு கதாபாத்திரத்தையே படைப்பார். அவர் திரைக்கதைக்கு மேலாக எழுவார். சொல்லப்போனால், ஒரு சாதாரணத் திரைக்கதைக்கும்கூட புத்துயிரூட்டுவார். இந்த ஆற்றலைப் பல நடிகர்களிடம் காண முடியாது.”

பான் சிங் தோமர் படத்துக்காக இர்ஃபானுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் ஃபிலிம்ஃபேர் விமர்சகர்கள் விருதும் கிடைத்தன. வேறு சில படங்களும் சிறந்த நடிப்புக்காக இர்ஃபானுக்கு புகழ் சேர்த்தன. அவை ஏக் டாக்டர் கி மோத் (1990), தி லஞ்ச் பாக்ஸ் (2013), ஹைதர் (2014), குண்டே (2014), பிக்கு (2015), தல்வார் (2015) மற்றும் கரீப் கரீப் சிங்கிள் (2017) ஆகியன. 2017இல், இந்தியாவிலும் சீனத்திலும் மிகவும் பிரபலமடைந்த சிறந்த நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருது உட்பட பல விருதுகளை இர்ஃபானுக்குத் தேடித்தந்த படம் இந்தி மீடியம். இர்ஃபான் இயல்பாக நடித்தது ஹாலிவுட் இயக்குநர்களின் கண்களிலும்பட்டது. அவர் நடித்த ஆங்கிலப் படங்களில் முக்கியமானவை ஸ்லம் டாக் மில்லியனர் (2008), அமேஜிங் ஸ்பைடர்மேன் (2012), லைப் ஆப் பை (2012), ஜுராசிக் வேர்ல்டு (2015), இன்ஃபெர்னோ (2016) மற்றும் பஸ்ஸில் (2018) ஆகியன. ஸ்டீவன் ஸ்பீல்பெர்கிடமிருந்து வந்த ஒரு வாய்ப்பு உட்பட இதர பல ஹாலிவுட் வாய்ப்புகளை அவர் நிராகரித்தார். காரணம், வேறு சில படங்களுக்கு அவர் ஏற்கனவே ஒப்புக்கொண்டிருந்தது அல்லது அவருக்கு கொடுக்கப்பட்ட பாத்திரம் அவருக்குப் பிடிக்காமல் போனது.

பாரத் ஏக் கோஜ், சாணக்யா, சந்திரகாந்தா, பநேகி அப்னி பாத், கெஹகஷான், ஸ்பர்ஷ் மற்றும் தார் ஆகிய பிரபல தொலைகாட்சி தொடர்களிலும்கூட இர்ஃபான் நடித்திருந்தார். தூர்தர்ஷன் டெலிநாடகமான லால் கஹாஸ் பர் நீலே கோடே நாடகத்தில் அவர் லெனின் பாத்திரத்தில் நடித்தார். ஆனால் வாழ்க்கைத் தேவைக்காக தனக்குப் பிடிக்காத பல பாத்திரங்களிலும்கூட நடித்ததாக அவர் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.

 

spacer.png

2018 மார்ச் மாதம் நியூரோ எண்டோகிரைன் டியூமர் என்ற அரியதோர் நோயால் அவர் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது அவருக்குப் பேரிடியாக வந்தது. “நான் ஒரு வேகமான ரயிலில் பயணித்துக்கொண்டிருந்தேன். எனக்கு கனவுகள் இருந்தன. திட்டங்கள் இருந்தன. அபிலாஷைகள் இருந்தன. லட்சியங்கள் இருந்தன. நான் அவற்றில் முழுவதுமாக மூழ்கியிருந்தேன். அப்போது எவரோ என் தோளில் தட்டினார். நான் திரும்பிப் பார்த்தேன். அது டிடிஆர். ‘நீங்கள் இறங்கவேண்டிய இடம் வந்துவிட்டது. தயவுசெய்து இறங்குங்கள்’ என்று அவர் கூறினார். நான் குழம்பிப்போனேன். இல்லை, இல்லை, நான் இறங்கவேண்டிய இடம் வரவில்லை. இல்லை, இதுதான் அது. சில நேரங்களில் இப்படித்தான் நிகழ்கிறது.”

இர்ஃபான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு லண்டனில் சிகிச்சை பெற்றார். 2019இல் நன்கு குணமடைந்து இந்தியா திரும்பினார். இந்தி மீடியம் திரைப்படத்தின் தொடர்ச்சியான இங்கிலீஷ் மீடியம் படத்தில் நடித்தார். இந்தப் படம் மார்ச் 23 அன்று வெளியானது. ஆனால் முதல் நாளுக்குப் பிறகு முழு அடைப்பால் காட்சிகள் நடைபெறவில்லை.

 

இர்ஃபானின் துணைவியாரும் பிரபல திரைக்கதை ஆசிரியருமான சுதப்பா சிக்தர் இர்ஃபானின் தொழில் வாழ்க்கையில் பெரும் பங்காற்றினார் என இர்ஃபானின் நண்பர் சுதர்ஷன் நினைவுகூர்கிறார். அவர் இர்ஃபானின் விவகாரங்களை நிர்வகிப்பார். மிகவும் கடினமான நிலைமைகளில் பொறுமை காப்பார். இர்ஃபானின் இறுதிப்போராட்டத்தின்போது சுதப்பா இர்ஃபானின் அருகிலேயே இருந்தார். அவரைவிட்டு ஒருகணமும் பிரியவில்லை.

இர்ஃபான் பஞ்சாபின் புரட்சிகரக் கவிஞர் பாஷ் அவர்களைப்பற்றி ஒரு படமெடுக்க திட்டமிட்டிருந்தார். இதர பல திட்டங்களும் அவர் மனத்தில் இருந்தன. அவரது சொந்த வாழ்க்கையில்கூட இர்ஃபான் மிகவும் மாறுபட்ட மனிதராகத் திகழ்ந்தார். அவரது வண்டி ஓட்டுநரை மணப்பேன் என்று அவர் மைத்துனி முடிவு செய்தபோது இர்ஃபானே திருமணத்துக்கு ஏற்பாடு செய்து நாஷிக்கிலிருந்த அவரது பண்ணைவீட்டை அவர்களுக்கு அன்பளிப்பாக அளித்தார். அவர் அனைவரின்பாலும் கவனம் செலுத்தினார். குறிப்பாக வாழ்க்கையில் போராடிக்கொண்டிருக்கும் மக்களின்பால் அக்கறை செலுத்தினார். இர்ஃபான் தலைசிறந்த நடிகர் மட்டுமல்லர்; எதிர்காலத் தயாரிப்பாளர் மட்டுமல்லர்; அவர் ஒரு குழந்தையைப்போல துறுதுறுப்பான உணர்வுடன் இருந்தார், எப்போதுமே உயிரோட்டமாகவும் சமுதாயத்தில் என்ன நடக்கிறது என்பது பற்றி கவனத்துடனும் இருந்தார். எல்லாவற்றுக்கும் மேலாக அவர் மிகவும் நேர்மையான ஒரு மனிதராக இருந்தார்.

இர்ஃபான் கானின் நினைவுக்கு அஞ்சலி!

[இந்த அஞ்சலி இந்தி நியூஸ் கிளிக் இணையதளத்தில் வெளியானது. தமிழில் பா.சிவராமன்]

 

https://minnambalam.com/public/2020/05/03/9/irfhan-an-unforgettable-actor-in-the-hearts-of-millions

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்திய‌ அள‌வில் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
    • சாந்தனின் இறுதி ஊர்வலத்தில் தமிழ் தேசியம் இன்னமும் உயிருடன் இருப்பது போலவே உணர முடிந்ததே?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.